நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
முன்பெல்லாம் புற்றுநோய் தாக்கியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்றைக்குப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை புற்றீசல்போல் பெருகிக்கொண்டே வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் 1.4 கோடிப் பேருக்குப் புற்றுநோய் வருவதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் புதிய புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும், உலக அளவில் பாதிக்கப்படும் புற்றுநோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் இருப்பதாகவும் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி முகமை அபாயச் சங்கு ஊதியிருக்கிறது. இப்படிப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங…
-
- 0 replies
- 1k views
-
-
அறுபதிலும் வாழ்க்கையை ஆள.. வாழ..! உங்களுக்கு சொந்தமான இடத்திலேயே வாழுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு சுதந்திரமும், தனியுரிமையும் இருக்கும். வங்கிகளின் நீண்டகால் வைப்பு நிதிகளையும், சொத்துக்களையும் உங்கள் பெயரிலேயே, உங்களுடனேயே வைத்து கொள்ளவும். உங்கள் குழந்தைகளின் வாக்குறுதிகளை நம்பி இருக்க வேண்டாம், ஏனெனில் உங்களுக்கு வயதேற அவர்களின் முன்னுரிமைகள் காலத்திற்கேற்றவாறு மாறும். காலத்தை வென்று வாழும் உங்களின் உண்மையான நண்பர்களை அடையாளம் கண்டு தொடருங்கள். எதையும் மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து வாழ வேண்டாம். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள், அவர்களின் வாழ்க்கையை வாழ விடுங்கள். உங்கள் வயதை ஒரு பாதுகாப்பான காரணமாகக் காட்டி, சிறப்பையோ,…
-
- 13 replies
- 1.4k views
-
-
ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி தலைமுடியை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இப்போதெல்லாம் இளவயதில் வழுக்கை, வெள்ளை முடி என பல பிரச்னைகள் வருகின்றது. தலைமுடி சீராக வளர எண்ணெய் தேய்ப்பது மிக அவசியமான ஒன்றாகும், மேலும் மசாஜ் செய்வதும் தலையின் இரத்த ஓட்டத்தை சீராக்கும். தலைமுடியை பொதுவாக இவ்வாறு பிரிக்கலாம் - வறண்ட - எண்ணெய் பதமுள்ள - இயல்பான உங்கள் தலைமுடிக்கு ஏற்றவாறு ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் பராமரிப்பு பொருட்களை தெரிவு செய்வது அவசியம். இதனை தெரிவு செய்வதில் குழப்பம் இருந்தால் சரும மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். வாரத்திற்கு இருமுறையாவது ஷாம்பு போட்டு குளிப்பது அவசியம், ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்திய பிறகு அடிக்கடி மாற்றுவது தேவையில்லாத பக்க வி…
-
- 0 replies
- 813 views
-
-
பிறந்ததிலிருந்தே உடம்பில் கவனம் எடுத்த பழக்கமில்லை. அதிலும் கடந்த சில வருடங்களாக சாப்பாட்டில் கவனமில்லை. உடலும் வயிறும் வீஙகத்தொடங்கின. மக்கள் சொல்வார்கள் அப்பா உடம்பைக்கவனியுங்கள் என. அதிலும் எவராவது என் வயதுக்காரர் மோசம் போய்விட்டால் தாங்கவே முடியாது ஆனாலும் 7 நாளும் வேலை அத்துடன் பொது வேலைகள்.................. வேலை அலுப்பு மற்றும் அதிக நேரவேலை இதனால் தூக்கம் குறைவு அதனால் எப்பொழுதும் ஒருவித சோர்வு கண்களுக்குள்.... எங்கு இருந்தாலும் தூக்கம் வரும் கார் ஓடிக்கொண்டிருக்கும் போதும்.... அத்துடன் குறட்டை........ அப்பா உடற்பயிற்சி அல்லது நீச்சலுக்காவது செல்லுங்கள் அல்லது குளிசை வாங்கிப்போடுங்கள்.... இல்லை மாட்டேன் எனக்கு எதுவித வருத்…
-
- 44 replies
- 9.4k views
-
-
கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். அதுபோல் ஒரு வகை தான் கொண்டைக்கடலை. இது பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவுப் பொருள். பொதுவாக இதனை வைத்து பூரி மற்றும் சப்பாத்திக்கு சன்னா செய்து சாப்பிடுவோம். ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. கொண்டைக்கடலை சுண்டல் கடலையை 6 8 மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாய் எண்ணெயில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய்…
-
- 13 replies
- 13.8k views
-
-
அடுத்த 20 ஆண்டுகளில் புற்று நோய்க்கு ஆளாபவர்கள் எண்ணிக்கை 70% அதிகரிக்கும் என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகப் புற்று நோய் தினமான இன்று உலகச் சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுக்கையில், 1 கோடியே 40 லட்சம் புதிய புற்று நோயாளிகள் உருவாகியுள்ளதாகவும், சுமார் 80 லட்சம் பேர் புற்று நோய்க்கு பலியாகியுள்ளனர் என்றும் இதில் 60% ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. 2012-ஆம் ஆண்டு மனித இறப்பு விகிதத்தில் புற்று நோயே அதிக பங்களிப்பு செய்துள்ளது. இந்திய புற்றுநோய் அறிக்கை (2009-2011) படி, 2012 ஆம் ஆண்டு 10,57, 204 புற்று நோயாளிகள் என்பது 2013-இல் 10,867,83 ஆகவும் 2014-ஆம் ஆண்டு இது மேலும் அதிகரித்து 11,172,69 …
-
- 0 replies
- 550 views
-
-
வாசனைத் திரவியங்களில் அரசி என்று இதைச் சொல்வார்கள். டீயில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனி! உணவின் ருசியை அதிகமாக்கும். செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டும். ஏலக்காயை நசுக்கி, சும்மாவே வாயில் போட்டு மெல்வது சிலருக்குப் பழக்கம். நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல. ஏலக்காய்க்கும் மூக்கடைப்பு சிகிச்சைக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆமாம்! ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய…
-
- 2 replies
- 523 views
-
-
கால் ஆணி. பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப் பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அள விற்கு பிரச்சனையை ஏற்படுத்து ம் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உரு வாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழு த்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தரு கிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்ப டாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப் பு உண்டு. கால் ஆணி ஏற்படக் காரணம்: பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள். கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ம் கால் ஆணி வர வாய்ப்புள்ளது. காலுக்குப் பொருந்…
-
- 0 replies
- 6.8k views
-
-
வேப்பிலையின் மருத்துவ பயன்கள் ! வேம்பின் இலை, காய் கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது.. வேப்பந்தழையின் இலை கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது. வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை போல கொடுத்து வர அம்மை நோய் தணியும். வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி,…
-
- 4 replies
- 14.9k views
-
-
தினமும் காலையில் வெந்நீரை குடிப்பதால் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் கிடைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக மிதமான நீரை அதிகம் பருகினால் அது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மிதமான நீரை விட வெந்நீரை தினமும் பருகும் போது அது உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகிறது. இளமையை தக்க வைக்கும் உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். முகப்பருக்களை விரட்டும் வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொண்டை பிரச்சனைகள் தீரும். டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்கள…
-
- 0 replies
- 558 views
-
-
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம் கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். கண் இமைகளில் வலி.. என்ன வியாதி? அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உ…
-
- 0 replies
- 726 views
-
-
உஷ்ண பிரச்சனைகளை போக்கும் கற்றாழை ! உஷ்ண வாயு தொடர்பான பிணிகளை மிகவும் துரிதமாகவும், பூரணமாகவும் இது குணப்படுத்தும் கற்றாழை எங்கும் காணக் கிடைக்க கூடியது கற்றாழை. கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள சோறு போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும். வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே த…
-
- 0 replies
- 1.4k views
-
-
Jump media player Media player help Out of media player. Press enter to return or tab to continue. நோய்க் காரணி மரபணுக்களை பிரித்தெடுக்க புதிய வழி கண்டுபிடிப்பு 29 ஜனவரி 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:21 ஜிஎம்டி நோய்கள் வரக் காரணமாகவுள்ள மரபணுக்களை தனியாக வெட்டிப் பிரிக்க புதிய வழி கண்டுபிடித்துள்ளதாகவும், அந்த மரபணுக்களை திருத்த மருந்து தேடுவதாகவும் பிரிட்டிஷ் மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ரா ஸென்க்கா கூறுகிறது. http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150129_genetics
-
- 1 reply
- 459 views
-
-
ஆரோக்கியம் தரும் மூலிகை தண்ணீர் மாற்றம் செய்த நேரம்:1/8/2015 2:44:08 PMStomach pest, flatulence separation problem, stomach, intestine borborygmi, such problems are solved in a liter of water and half a teaspoon basil, put the heater on filter 14:44:08 Thursday 2015-01-08 Stomach pest, flatulence separation problem, stomach, intestine borborygmi, such problems are solved in a liter of water and half a teaspoon basil, put the heater on filter 'I' collects over Rs.100 crore வயிற்றில் பூச்சி, வாய்வு பிரிதல் பிரச்சனை, வயிற்றுவலி, குடல் இறைச்சல், போன்ற பிரச்சனைகளுக்கு தீர ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சூடாக்கி வடிக்கட்டி குடித்தால் பி…
-
- 0 replies
- 1.3k views
-
-
உடலில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் தைரியமாக ஆரஞ்சு பழத்தையோ அல்லது சாறு குடிக்கலாம்.இதனால் உடலில் ஏற்பட்ட பிரச்சனை உடனே குறையும். உடலில் ஏற்படும் உஷ்ணம், வயிற்று வலி அல்லது வயிறு தொடர்பான பிரச்சினைகளை உடனே சீராக்கும் ஆற்றல் உடையது. ஆரஞ்சு சாறில் உள்ள விட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இளமை தோற்றம் உருவாகும். இதில் ஏ, பி, சி ஆகிய விட்டமின்களும், ஏழு வகையான தாதுக்களும் உள்ளதால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஆரஞ்சு பழத்தை குறுக்கே இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழுவினால் முகம் பளபளப்பாகும். தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும். மலச்சிக்கலை நீக்கும். நன்கு ஜீரணமாக…
-
- 0 replies
- 661 views
-
-
நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா? Free PDF Converter - Convert Doc to Pdf, Pdf to Doc. Get The Free Converter App Now! www.fromdoctopdf.com Ads by Google டாக்டர் எல். மகாதேவன் என் அப்பாவுக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது. ஞாபகமறதி நோயால் அவதிப்படுகிறார். டிமென்ஷியா, அல்சைமர் என்றெல்லாம் சொல்கிறார்கள். மருந்துகள் உட்கொண்டாலும்கூட, அவரது அன்றாட நடவடிக்கைகளை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரை நலம் பெற வைக்க முடியாதா? - சுப்பிரமணி, தஞ்சை ஞாபக மறதி என்பதை Dementia என்கிறார்கள். மூளையின் செயல்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும். நினைவாற்றல் பாதிக்கப்படுவதுடன் எண்ணம், சிந்தனை, மொழி, தீர்மானம் செய்யும் ஆற்றல் ஆகியவ…
-
- 0 replies
- 1k views
-
-
நம்பர் ஒன் விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்! வே.கிருஷ்ணவேணி ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்... என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. 'பாத்ரூம் சரியில்லை...', 'நேரமே இல்லை...', 'பாத்ரூமே இல்லை... ரோட்டுலயா போகமுடியும்?' என்பது போன்ற கேள்விகளைத் தங்கள் தரப்பு நியாயங்களாக எழுப்பி, தங்களை சமாதானப்படுத்திக்கொள்ளவும் இவர்கள் தவறுவதில்லை. இவர்களில் நீங்களும் ஒருவரா? "இத்தகைய போக்கு, மிகப்பெரிய ஆபத்தை நோக்கி உங்களை இழுத்துச் சென்றுவிடும்'' என்று உங்களை நோக்கி எச்சரிக்கை மணி அடிக்கிறார்... சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைமை மருத்துவப் பேராசிரியர் டாக்டர…
-
- 9 replies
- 1.3k views
-
-
வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்! பிரேமா யாராவது உங்களை 'அங்கிள்’ என்றோ 'ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனாலும் வயதாவதை ஒப்புக்கொள்ளாமல் மனசு மல்லுக்கட்டும். ''சான்ஸே இல்லை, அன்னைக்குப் பார்த்த மாதிரியே நதியா இன்னைக்கும் இருக்காங்க' என்று பெருமூச்சுவிடாத பெண்களோ, ''சரத்குமாருக்கு 60 வயசு ஆச்சாம். எப்படிய்யா உடம்பை மெயின்டெய்ன் பண்றாரு' என்று பொறாமையோடு புலம்பாத ஆண்களோ இருக்கிறார்களா என்ன? அவர்களுக்காக மூப்பைத் தள்ளிப் போட முத்தான டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துக் கல்லூரியின் இணைப் பேராசிரியரும் வாழ்வியல்கலை நிபுணருமான டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன். 1…
-
- 4 replies
- 5.8k views
-
-
சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் ! இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்…
-
- 0 replies
- 3.3k views
-
-
அதிகபடியான கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் ? மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. இதனால் தான் திருப்பதி, பழநி, மலைகோட்டை என மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம்.
-
- 0 replies
- 666 views
-
-
கனடா- ஒன்ராறியோ குடும்பம் ஒன்று ஒரு இரண்டாவது கல்லீரல் இரத்த தானம் செய்பவரை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. இந்த குடும்பம் ஒரு இதயத்தை நொருக்கும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. குழந்தைகளின் தந்தை சாத்தியமான நிலையில் இருக்கின்றார் ஆனால் அவரால் இரட்டையர்களில் ஒருவருக்கு தேவையான பகுதியை மட்டுமே வழங்க முடியும். மைக்கேல் வாக்னரின் 3-வயது தத்தெடுக்கப்பட்ட இரட்டையர்களான Binh, Phuoc ஆகிய இரு குழந்தைகளுக்கும் ஒர மரபணு குறைபாடு உள்ளது. இந்நோய் இவர்களது கல்லீரல் செயலிழக்கச் செய்யும். கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யாவிடில் இரு பெண்களும் இறந்து விடுவார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தனது இரண்டு பிள்ளைகளில் ஒருவருக்குத்தான் தனது கல்லீரல் பொருத்த முடியும் என்ற நிலையில்…
-
- 0 replies
- 411 views
-
-
மனித குலத்துக்கு இயற்கை தந்த சுத்தமான சுவையான பானம் தான் இளநீர். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. *இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். *ஜீரண சக்தியை அதிகரிக்கும், சிறுநீரகத்தை சுத்திகரிக்கும், விந்துவை அதிகரிக்கும், மேக நோய்களைக் குணப்படுத்தும், ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர்- உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது. *இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது, இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளு…
-
- 0 replies
- 553 views
-
-
தற்போது மாறிவரும் உணவு பழக்கம் நம்மை பல வித பிரச்சனைகளுக்கு அழைத்து செல்கிறது. இப்போது உள்ள காலகட்டத்தில் வீட்டில் சிறந்த உணவுகளை சமைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதற்கு மாறாக பலர் கண்ணை பறிக்கும் வண்ணங்களில் உள்ள உணவுப் பொருட்களான பிட்சா, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை உட்கொண்டு வருவதோடு, எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இதன் விளைவு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் விரைவில் வரக்கூடும். ஆகவே உடல் பருமன் அதிகம் இருந்தால், முடிந்த அளவில் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டிலேயே கலோரி குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சமைத்து…
-
- 1 reply
- 7k views
-
-
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம். தலைவலி : நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி த…
-
- 1 reply
- 1.7k views
-
-
தீபிகாவின் கதை அழகி என்ற வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தீபிகா படுகோனேவுக்கு கண்டிப்பாக பொருந்தும்... இந்த தைரியம் எத்தனை பிரபலங்களுக்கு வரும்!!!... இது போன்றவைகளே மேலும் மேலும் மக்களுக்கு தங்களின் பிரச்சினைகளை வெளியே சொல்ல உதவும்... தயவுசெய்து பகிரவும்... (Translated from Hindustan Times, Mumbai edition, January 15th. Reported by Kavita Awaasthi) ஹிந்தி படங்களில் காணப்படுவது போல தடைகளை தகர்க்கும் கதைதான், ஆனால் இது ஆபூர்வமான ஒன்று. உங்களுக்கு தெரியுமா?... கடந்த வருடம் தன்னை பாலிவுட்டின் முன்னணி நடிகையாக நிலை நிறுத்த போராடியபோது தீபிகா படுகோனே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் தன் மனம் திறந்து தன் வாழ்கையின் இந…
-
- 2 replies
- 737 views
-