நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அண்மையில் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்க முடியும் என்பதற்கான சில சான்றுகள் உள்ளதாக தேசிய உடல்நல ஆராய்ச்சி மையம் (The National Institutes of Health) தெரிவித்துள்ளது. தற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. உண்மையிலேய…
-
- 0 replies
- 1.9k views
-
-
டெங்கி காய்ச்சல் டாக்டர் ஜி.ஜான்சன் இன்று சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் என்றாலே அது டெங்கி காய்ச்சலாக ( dengue fever ) இருக்குமோ என்ற பீதி எல்லாருக்கும் உள்ளது. இதனால் ஒருவேளை மரணம் உண்டாகுமோ என்ற பயமே இதற்குக் காரணம். ப்ளேவிவைரஸ் ( flavivirus ) என்ற பெயர் கொண்ட வைரஸ் கிருமியால் டெங்கி காய்ச்சல் ஏற்படுகிறது.இது கொசுக் கடியால் பரவிகிறது. இந்த கொசு வகையின் பெயர் ஏ .எஜிப்டி ( A .aegypti ) என்பது. நான்கு வகையான டெங்கி வைரஸ்கள் உள்ளன. DENV -1,DENV -2, DENV -3, DENV -4 என்பவை அந்த நான்கு வகைகள். இந்த கொசு வகையின் பெயர் ஏ ஏஜிப்டி ( A. Aegypti ) என்பது. இந்த கொசு வகை ஆசிய நாடுகள், தென் அமெரிக்கா , ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளில் அதிகம் பெருகி வருகின்றன…
-
- 0 replies
- 446 views
-
-
இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் உலகத்தில், தினமும் புதுப்புது வியாதிகளால் அவஸ்தைப்படுகிறோம். மேலும் அந்த வியாதிகளுக்கு, பல மருந்துகளும் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும், இந்த மருந்துகளால் பல விதமான பக்கவிளைவுகள், உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. அப்படி ஒரு முக்கிய பக்கவிளைவு தான் உடல் எடை அதிகரித்தல். சரி, மருந்துகள் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா? என்று ஆச்சரியத்துடன் கேட்கலாம். சுருக்கமாக பதில் சொல்ல வேண்டுமானால் - ஆம், மருந்துகளால் உடல் எடை அதிகரிக்கும். ஆனால் சில குறிப்பிட்ட மருந்துகளுக்கு மட்டுமே உடல் எடையானது அதிகமாகும். தீராத ஒற்றை தலைவலி, மன அழுத்தம் அல்லது வேறு வலிக்கு மருந்து சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது அந்த மருந்துகளே. …
-
- 0 replies
- 416 views
-
-
தற்போது கொய்யாபழம் சீசன் தொடங்கிவிட்டது, சென்னைக்கு அறுத்தால் செக்க செவேல் என்கிற கலரில் பளிச்சென்று நம்மை ஈர்க்கும், பெங்களூர் கொய்யாவின் வரத்தும் தொடங்கி விட்டது. விலை மலிவாக கிடைக்கும் கொய்யாவில் ஆப்பிளில் உள்ள சத்துக்களை விட மிக அதிகமான சத்துக்கள் உள்ளனவாம். இது மருத்துவர்கள் கூறும் தகவல்! நன்றாக பழுத்த கொய்யாபழத்துடன், மிளகு, எலுமிச்சம் பழச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ளபித்தம் நீங்கி, சோர்வும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுமாம். கொய்யாவுடன் சப்போட்டா பழம், தேன் கலந்து சாப்பிட்டால், நன்றாக ஜீரணம் ஆவதோடு மலசிக்களும் தீரும், வயிற்றுப் புண்ணும் குணமாகுமாம். அதோடு, வயிற்றுப்போக்கு, மூட்டு வலி, அரிப்பு, மூல நோய், தொண்டைப்புண் போன்ற நோய்களும் குணமாகுமாம். …
-
- 0 replies
- 655 views
-
-
மதுவும் கணைய அழற்சியும் டாக்டர் ஜி.ஜான்சன் கணையம் ( Pancreas ) என்பது இரைப் பையின் அருகிலுள்ள செரிமானத்திற்குரிய நீர் சுரக்கும் ஒரு சுரப்பி. இது நாக்கு போன்ற வடிவுடையது. இதன் தலைப் பகுதியை முன் சிறு குடல் சூழ்ந்திருக்கும். இதன் வால் பகுதி மண்ணீரலைத் தொட்டுக் கொண்டிருக்கும்.இது சுமார் 18 செ .மீ . நீளமும்,, சுமார் 100 கிராம் எடையும் உடையது. இதில் இன்சுலின் ( Insulin ) என்ற இயக்கு நீரும் ( hormone ) சிறு குடலில் கொழுப்புகளை செரிமானம் செய்யும் பயன்கள் கொண்ட கணைய நீரும் ( Pancreatic Enzyme ) சுரக்கின்றன. கணையம் நீரிழிவு வியாதியுடன் ( Diabetes ) நெருங்கிய தொடர்பு உள்ளது. நாம் உண்ணும் உணவில் உள்ள இனிப்பை செல்களுக்குள் செல்ல உதவுவது இன்சுலின். இதையே கணையம் உற்பத்தி செய்கி…
-
- 0 replies
- 802 views
-
-
நான் ரூம் வாடகைக்கு எடுத்து இருக்கும் வீட்டில் உள்ள அம்மம்மா வயதுடைய ஒருவருக்கு காலில் ஏதோ வெட்டி எலும்பு தெரியுமளவுக்கு காயம். ரத்தம் வந்ததும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது காயத்தை சுற்றிக்கட்டி விட்டு அடுத்தநாளுக்கு appointment கொடுத்து பின்னர் பெரிய தையல் போட்டுள்ளார்கள். இன்று நான் என்ன நடந்தது என்று அது பற்றி கேட்டு அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது எனக்கு தலை சுத்த தொடக்கி விட்டது. நின்று கொண்டு கேட்டுக்கொண்டிருந்த நான் பக்கத்தில் கதிரை எதுவும் இல்லாததால் அப்படியே நிலத்தில் இருந்து விட்டேன். இவ்வாறான சம்பவங்கள் பற்றி அடுத்தவர் சொல்ல கேட்கும் போது அல்லது நீண்ட நேர வீடியோவில் பார்க்கும் போது எனக்கு வழமையாகவே இவ்வாறு தலை சுத்துவதுண்டு. அதை அவருக்கும் சொன்னேன். ச…
-
- 53 replies
- 4.5k views
-
-
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். 5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும். 6. சின்ன அம்மை,…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஆந்திர தலைநகர் ஹைதராபாதில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து அளிக்கும் முகாம் நடைபெற்றது. இதில் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஹைதராபாத் ரயில்நிலையம் அருகில் உள்ள அரசு பொருள்காட்சி மைதானத்தில் சனிக்கிழமை நண்பகலில் தொடங்கிய மருந்து கொடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை தொடர்ந்தது. இந்த மருந்து அளிக்கும் பணியை ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது:- இந்த 2 நாள் முகாமில் மொத்தம் 40,000 பேர் மருந்து சாப்பிட்டுள்ளனர். இனி அடுத்த ஆண்டு ஜூன் 8,9 ஆகிய தேதிகளில்தான் இந்த மருந்து கொடுக்கப்படும். மீன் மருந்து சாப்பிட்டவர்களுக்கு, தனியாக நாட்டு மருந்தும் கொடுத்துள்ளோம். அதை அவர்கள் 15 நாள்கள் சாப்பிட…
-
- 8 replies
- 1.9k views
-
-
ஓட்ஸ்யில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. இதில் இயற்கை இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு மிகவும் நல்லது. இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்பை உறிஞ்சி வெளியேற்றுகிறது. மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒழுங்கு செய்வதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது. ஓட்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான …
-
- 24 replies
- 3.8k views
-
-
அதிகளவில் மாசடைந்த வாயுவை சுவாசிக்க நேரிடுகின்ற கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள் ஆட்டிஸம் நோயினால் (மன வளர்ச்சிக் குறைபாடு) பாதிக்கப்படும் அபாயம் பெருமளவில் உள்ளதாக அமெரிக்காவில் நடந்துள்ள ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்தப் பெண்களின் குழந்தைகளுக்கு, வாயு மாசடைதல் அளவு குறைவாகக் காணப்படும் சூழலில் வாழும் பெண்களின் குழந்தைகளைவிட ஆட்டிஸம் ஏற்பட இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தொடர்புடைய விடயங்கள் உடல்நலம், பருவநிலை மாற்றம் 1989-ம் ஆண்டிலிருந்து சுமார் ஒரு லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைகளின் புள்ளிவிபரங்களைக் கொண்டு அந்தந்தப் பகுதிகளில் வாயு மாசடைதல் பற்றிய தகவல்கள…
-
- 0 replies
- 439 views
-
-
அண்மையில் 3-5 வயதுக்கு உட்பட்ட 1076 சிறுவர்களின் உணவு பழக்கம், அவர்களின் குருதியில் இருக்கும் உயர் அடர்த்தி கொல்ஸ்திரோல் (HDL - cholesterol), குறைந்த அடர்த்தி உடைய கொல்ஸ்திரோல் (LDL - cholesterol) தொடர்புகளை ஆய்வு செய்யப்பட்டது. குருதியில் அதிக அளவில் குறைந்த அடர்த்தி உடைய கொல்ஸ்திரோல் (LDL - cholesterol) இருப்பது இதய வருத்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் காரணி ஆகும். அதிக கொழுப்புள்ள / உடல் நலனுக்கு உதவாத (அதிக சீனி, குறைந்த நார் சத்து) உணவுகள் கொடுக்கப்பட்ட சிறுவர்களின் குருதியில் அதிகரித்த LDL - cholesterol இருப்பது அறியப்பட்டது, இது பின்னாளில் இதய வருத்தங்கள் ஏற்பட காரணமாகலாம். அத்துடன் சிறுவர்களுக்கு தரமான அதிக மரக்கறி, பழ வகைகளை கொடுக்கும் பொது அவர்க…
-
- 0 replies
- 670 views
-
-
உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு உதவும் புதிய முறை - முயன்று பாருங்கள்! [Friday, 2013-06-14 12:51:55] தங்களது உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதில் சிலருக்கு அதீத ஆர்வம் இருக்கும். உடல் மெலிந்து காணப்படவேண்டும் என்பதற்காக எந்த வழிமுறைகளை வேண்டுமானாலும் பின்பற்றுவார்கள். அத்தகைய ஆர்வலர்களுக்கு மத்தியில் இப்போது ஒரு வித்தியாசமான உணவுமுறை வரவேற்பைப் பெற்றுள்ளது. வாரத்தின் ஏழு நாட்களில் முதல் ஐந்து நாட்களுக்கு எந்த மாதிரியான உணவு வகைகளையும் உண்ணலாம், ஆனால், கடைசி இரண்டு நாட்களும் 600 கலோரிக்கு மேற்பட்டு உண்ணக்கூடாது என்பதே அந்தப் புதிய முறையாகும். இங்கிலாந்து மக்களிடையே அதிகமாகக் காணப்படும் இந்த உணவுமுறை தற்போது அமெரிக்காவிலும் பரவத் தொடங்கியுள்ளது. ஃபாஸ்ட் டயட் அல்லது 5:2 எ…
-
- 5 replies
- 915 views
-
-
இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும். இந்திய உணவில் இரண்டு வகை உண்டு. தென்னிந்திய உணவு வகை, வட இந்திய உணவு வகை. தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது. இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேவைய…
-
- 17 replies
- 21.1k views
-
-
வெள்ளைச் சீனியில் நச்சுத் தன்மை! - எப்படித் தயார் செய்கிறார்கள்..? [saturday, 2013-03-23 09:38:35] இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம். இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம். 1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல…
-
- 2 replies
- 676 views
-
-
உலகம் முழுவதும் நீரிழிவு நோய் அதிக அளவில் உள்ளது. இதனால் மனிதர்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே இதைக் கட்டுப்படுத்த லணடன் கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு செயற்கை கணையம் தயாரித்து வெற்றியும் கண்டுள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிப்பின் காரணமாக நீரிழிவு ஏற்படுகிறது. இன்சுலின் மற்றும் குளுகான் என்கிற 2 சுரப்பிகள் சரிவர இயங்காததால்தான் இந்த நோய் உருவாகிறது. இவற்றை கணையம் உற்பத்தி செய்கிறது. இன்சுலின் பீட்டா செல்கள் மூலமும், குளுகான் ஆல்பா செல்கள் மூலமும் தயாராகிறது. கணையம் பாதித்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. எனவே, கேம்ப்ரிட்ஜ் பல்கலையின் ரோமன் ஹோவோர்கா தலைமையிலான நிபுணர் குழுவினர் கடந்த ஐந்தரை ஆண…
-
- 1 reply
- 1.7k views
-
-
கண் கடியுடன் கண்கள்; சிவந்து கண்களால் நீர் வடிதல் கவலை இல்லாமலும் கண்ணீர் வரும் கண்கடியுடன் கண்கள்; சிவந்து கண்களால் நீர் வடிதல் கண்ணைக் கசக்கிக் கொண்டுவந்த பையனைக் கூட்டிக் கொண்டு வந்த அம்மாவின் முகத்தில் சலிப்பு. பையனின் முகத்திலும் சோர்வு தட்டியிருந்தது. 'எவ்வளவு சொன்னாலும் கேக்கிறானே? எந்த நேரம் பார்த்தாலும் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கிறான். கண் வீங்கிப் போச்சு. போதாக்குறைக்கு மூக்கையும் குடையிறான். வெளியிலை கூட்டிக் கொண்டு போகவே வெக்கமாகக் கிடக்கு' உண்மைதான் அந்த அழகான பையனின் கண்மடல்கள் வீங்கிக் கிடந்தன. கண்களின் கீழே கருவளையம் தெரிந்தது. முகமும் கண்களும் செம்மை பூத்துக் கிடந்தன. மூக்கு வீங்கி அதன் துவாரங்கள் மேல்நோக்கிப் பார்த்தன. மூக்கை உள்ளங்கையா…
-
- 0 replies
- 2.1k views
-
-
விஞ்ஞான முடிவுகளுடன் முரண்படும் சமூகக் கடப்பாடுகள் அப்பாவாகப் போவது எப்போது? ஒரு மனிதன் தந்தையாவதற்கு ஏற்ற வயது என்ன? எனது பாட்டா அப்பாவாகும்போது வயது 18 வயது மட்டுமே. எனது அப்பா 23 வயதில் அப்பாவானார். அப்பாவாகும்போது எனக்கு 32 வயதாகிவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கு இன்னமும் அதிக காலம் தேவைப்படுகிறது. நல்ல கல்வி, போதிய வருவாயுள்ள வேலை, புதிய மணவாழ்வில் சற்றுக் காலம் தொல்லையின்றி உல்லாச வாழ்வு. இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு குழந்தை பெறுவதையிட்டு சிந்திக்கத் தொடங்குவதற்கு காலதாமதமாகி விடுகிறது இன்றைய இளைஞர்களுக்கு. வயது அதிகரிப்பும் அப்பாவாதலும் மேலும் முதிர்ந்த வயதில் அப்பாவாகும் பலர் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். வேலைப் பளு, இரண்டாவது தரம் மூன்றாவது தரம் என மணம்மு…
-
- 24 replies
- 2.4k views
-
-
அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும்அவசியம் சாப்பிட வேண்டும். எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்ச…
-
- 0 replies
- 500 views
-
-
பெண் பருவமடைய ஆரம்பித்ததிலிருந்து தொடங்கும் மாதாந்திர பிரச்னையான மாதவிலக்கு முழுமையாக நின்று விடுவதற்கு "மெனோபாஸ்" என்று பெயர். "மெனோபாஸ்" என்ற வார்த்தை பெண்களின் மகப்பேறு வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் இறுதியான அத்தியாயம். சுருங்க கூற வேண்டுமாயின் "கருப்பை" முற்றிலுமாக எடுத்துக் கொள்ளும் ஓய்வு நேரம் ஆகும். இந்நிகழ்ச்சி உள்ளுறுப்புகளில் நடந்தாலும், வெளிப்படையாக அறிந்து கொள்வது எப்படி? என்றால், வழக்கமாக வரும் மாதவிலக்கு, முற்றிலுமாக நின்று விடும் கட்டம் தான் "மெனோபாஸ்" என்று கூறப்படுவதாகும். பேருந்தில் பிரயாணம் பண்ணும்போது நிறைய நிறுத்தங்கள் வந்தாலும் சில இடங்களில் மட்டும்தான் `ஸ்டேஜ்' வருகிறது. அங்கு தான் சோதனை செய்யப்படும். அது போலவே பெண்களின் வாழ்க்கையிலும் ஒன…
-
- 20 replies
- 11.3k views
-
-
காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் – கே.எஸ்.சுப்பிரமணி வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு காய்கறிகளுள் மிகவும் உறைப்பானது இஞ்சி. இஞ்சியைத் தொட்டு நாக்கில் வைத்தால் மிகவும் காரமாய் இருக்கும். இரண்டாவது காரமான காய்கறி வெங்காயம். ஆனால், வெங்காயத்தை ரசித்துச் சாப்பிடலாம். அவ்வளவாக காரம் இதில் இல்லை. நோய்களைக் குணப்படுத்தும் விதத்தில் அணுகுண்டைப் போல் பேராற்றல் வாய்ந்த காய்கறியாக வெங்காயம் சிறந்து விளங்குகிறது. ஆண்டு முழுவதும் கிடைக்கும் வெங்காயம் இயற்கை கொடுத்துள்ள உணவு வகைகளுள் முதலிடத்தில் இருக்கிறது. உயர்தரமான புரதம், அதிக அளவில் கால்சியம், ரிபோபிளவின் போன்றவை இதில் அடங்கியுள்ளன. சிறு வெங்காயம், பெரிய வெங்காயம் என்று பல்வேறு இனங்கள் உள்ளன. அனைத்தையும் நீண்ட நாள…
-
- 1 reply
- 900 views
-
-
அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து! நாம் உண்ணும் உணவு வகைகளில் இன்று 1700க்கும் குறையாதவை செயற்கையான சுவைக்கூட்டுப் பொருள்களால் உருவானவை. பானங்களிலும் பிஸ்கட்டுகளிலும் 100க்கும் குறையாத இரசாயனங்களையே பயன்படுத்துகின்றனர். கேக் மிக்ஸ், சாக்லெட், பிஸ்கட், மார்ஜரின், திடீர் உணவுவகைகள், குலோப் ஜாமூன் மிக்ஸ் என அனைத்திலும் நம்முடைய சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய மோசமான இரசாயனங்கள் இருக்கின்றன உண்ணத் தயாராக இருப்பதாலும் கவர்ச்சிகரமான வண்ணங்களில் இருப்பதாலும், நாம் இவற்றைக் கணக்கில் கொள்வது இல்லை. எனவே நமது உடலுக்கு பாதுகாப்பானவையா என்று எவரும் அக்கறை கொள்வதில்லை. சுவைகூட்டுப் பொருள் என்பது தேவையில்லாத ஒன்றாகும். சுவை கூட்டுப் பொருளுக்கும் ஊட்டச் சத்துப் பொருளுக்…
-
- 0 replies
- 814 views
-
-
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:- *அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது *கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது *அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். *நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. *வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. *தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது…
-
- 0 replies
- 996 views
-
-
உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம். இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும். இ…
-
- 0 replies
- 597 views
-
-
வான் பயணதில் கால் வீக்கம் ஏன்? வெளிநாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு வருபவர்கள் பலரை இப்பொழுதெல்லாம் மருத்துவ ஆலோசனை மனையில் அடிக்கடி சந்திக்க நேர்கிறது. இவர்களில் சிலராவது கால் வீக்கத்துடன் வருவார்கள். 10- 12 மணிநேர தொடர்ச்சியான வான் (விமானப்) பயணத்தின் காரணமாகவே இவை பெரும்பாலும் ஏற்படுகிறது. சிலர் வந்த கையோடு 10 மணித்தியால யாழ் பிரயாணம் செய்வதால் இது மோசாக்கி கால்களைப் பொத்தையாக்கி விடுகிறது. வான் பயணத்தால் மட்டுமின்றி நீண்ட தூரப் பயணங்கள் யாவற்றாலும் இது ஏற்படலாம். இங்கிருக்கும் உள்ளுர்வாசிகளும் உலக உலா வருவதும் அதிகமாகிவிட்டது. இவர்களுக்கும் இதே பிரச்சனைதான். பெரும்பாலும் இது ஆபத்தான பிரச்சனை அல்ல. இருந்தபோதும் ஆழ்நாள குருதியுறைவினால் (Deep Vein thr…
-
- 4 replies
- 1.3k views
-
-
கிட்னி அறிந்ததும் அறியாததும்..! கிட்னி அறிந்ததும் அறியாததும்..! டாக்டர். சௌந்தரராஜன் "ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துக் கண்காணிப்பு செய்து வந்தவர். சி…
-
- 3 replies
- 2.2k views
-