நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
தனிமையை விட தனிமையுணர்வு வாழ்வை நரமாக்கிவிடும் கூட்டுக் குடும்பமாக அம்மா அப்பா பாட்டன் பாட்டி என வாழ்ந்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. இப்பொழுதோ பேசுவதற்கும் துயர்களைப் பகிர்வதற்கும், இன்பங்களைக் கூடிக் கொண்டாடுவதற்கும் முடியவில்லை. கோபிப்பதற்கும் திட்டுவதற்கும் கூட ஆளில்லாது துன்பப்படும் பலரை இப்பொழுது காணக் கூடியதாக உள்ளது. நவீன வாழ்வில் வசதிகளுக்குக் குறைவில்லை. எல்லாமே வீட்டிற்குள் கிட்டும். ஆனால் பேசுவதற்கு ஆள்தான் கிட்டாது. கணவன் மனைவி ஓரிரு பிள்ளைகள். ஓவ்வொருவருக்கும் அவரவரது பாடுகள். கணனி அல்லது தொலைகாட்சிப் பெட்டி முன் உட்காருவதுதான் நாள் முழவதும் வேலை. உலகையை உள்ளங்கையில் அடக்கும் தொலைபேசிகளும் இப்பொழுது வந்துவிட்டன. உள் அறையில் உலகத்தைச் சுற்றி …
-
- 2 replies
- 1k views
-
-
நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ். இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இ…
-
- 5 replies
- 2.1k views
-
-
கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்: அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும் கூட உடல்பருமனுக்குக் காரணங்களாகும். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்: இஞ்சியைத் தோல் சீவி அரைத்து…
-
- 0 replies
- 497 views
-
-
போதை பழக்கத்தை விட ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மது, சிகரெட்டை நிறுத்திவிடலாம்! பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன் நான் நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்துவது, சிகரெட் பிடிப்பது, கண்டதையும் ஓட்டல்களில்சாப்பிடுவது, ரெüடித்தனமாகப் பேசுவது, செயல்களில் ஈடுபடுவது என்றெல்லாம் பழகிவிட்டேன். ஆனால் அவை தவறு என்பதை தற்சமயம் உணர்ந்து திருந்தி வாழ முயற்சி செய்கிறேன். ஆனால் முடியவில்லை. நான் திருந்தி வாழ ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?கோவிந்தராஜ், வில்லிவாக்கம்.தீய நண்பர்களின் சேர்க்கை தோஷத்தினால் உடம்புக்கும், உள்ளத்துக்கும், பொருளுக்கும் கெடுதியையும் அழிவையும் உண்டு பண்ணும் தீய பழக்கங்கள் சிலகாலம் தொடர்ந்து பழக்கப்பட்டதாக ஆகிவிட்டால் அவற்றை எப்படியும் ஒழிக்க …
-
- 0 replies
- 3.6k views
-
-
பீட்ரூட்டை சமைத்தோ அன்றி பச்சையாகவோ உண்டுவந்தால் மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும். ஏனைய கீரைவகைகளைப்போல, பீட்ரூட் கீரையையும் உண்ணலாம். அல்சர் என்று சொல்லப்பம் வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாவற்றையும் இந்தக் கீரை குணமாக்கவல்லது. மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுகநிவழகள, பீட்ரூட் சாறறுடன தண்நீர் சேர்த்து, இரவுவேளை தூங்கத்திற்க்கு முன்னர் பருகிவிட்டு சென்றால் பலன் பல கிடைக்கும். தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் அருந்தி வந்தால் புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்கும் சக்தியும் இதுக்கு இருக்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். http://www.seithy.co...&language=tamil
-
- 5 replies
- 2.7k views
-
-
மஞ்சள் காமாலை தடுப்பது எப்படி? சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சை செய்து எடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்... மஞ்சள் காமாலை. இது எப்படி ஒருவரிடம் தொற்றுகிறது? கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் இந்த நோய் ஏற்பட காரணம். இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும். சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் ஒருவரது உடலுக்குள் நுழைந்து விடுகிறது. இரத்தம் செலுத்தும்போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது. நோய்த் தொற்று ஏற…
-
- 0 replies
- 500 views
-
-
ஆண்களுக்கு, நுரையீரல், வயிறு, கல்லீரல், உணவுக்குழாய், ப்ராஸ்டேட் புற்றுநோயாலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு மற்றும் கர்ப்பப்பைப் புற்றுநோயாலும் அதிக அளவில் உயிர் இழப்பு நேரிடுகிறது. புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்து வதால் ஏற்படும் புற்றுநோயால் 42 சதவிகித ஆண்களுக்கும், 18 சதவிகித பெண்களுக்கும் உயிர் இழப்பு ஏற்படுகிறது. இப்போது எல்லாம் சினிமா பார்க்க தியேட்டருக்குப் போனால், முதல் காட்சியே குலை நடுங்கவைக்கிறது. புகையிலையின் அபாயத்தைப் பொளேரென விளக்கும் வகையில் சிலருடைய புற்றுநோய்ப் பாதிப்புத் துயரங்கள் விளம்பரப் படமாகத் திரையில் விரிகிறது. அதிர்ச்சியில் உறைகிறது நெஞ்சம். புற்றுநோய் குறித்து உங்களை மேலும் அச்சப்படுத்துவதற்காக அல்ல இந்தக் கட்டுரை. ப…
-
- 3 replies
- 3k views
-
-
பால் கலக்காத தேநீர், அதாவது பிளாக் டீ, அருந்துபவர்களுக்கு டைப்- 2 வகை நீரிழிவு நோய் வர சாத்தியங்கள் குறைவு என்கிறது புதிய ஆய்வு ஒன்று. டெய்லி டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள ஆய்வுச் செய்திகளின் படி 50 நாடுகளில் மக்கள் அதிகம் பால் கலக்காத பிளாக் டீயை அருந்துகின்றனர். இந்த நாடுகளில் சர்க்கரை நோய் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை பிற நாட்டைக் காட்டிலும் குறைவாக்வே உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் தேநீர் அதிகம் எடுத்துக் கொள்வது உடல் பருமனுக்கு எதிராகவும் வேலை செய்வதாக ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த புதிய கண்டுபிடிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும். கிரீன் டீயை பிளாக் டீயாக மாற்றும் புளிக்கவைக்கும் நடைமுறையினால் இயற…
-
- 0 replies
- 581 views
-
-
ஒட்டு குடல் (Appendix) என்றால் என்ன? - கேள்விகளும் பதிலும் [Monday, 2013-02-04 09:27:25] Appendix அதாவது ஒட்டு குடல் / குடல் வால் என்பது ஒரு வியாதி அல்ல. மக்களிடையே அவ்வாறு ஒரு வார்த்தை வழக்கமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது, சமயங்களில் மருத்துவரும் கூட அவ்வாறே உச்சரிப்பதுண்டு - காரணம் மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக. அப்படியென்றால் சரியான உச்சரிப்பு முறை? " ஒட்டுக்குடல் வீக்கம்" என்பது மிகச்சரியானது. எங்கு அமைந்துள்ளது? அடிவயிற்றின் வலப்புறத்தில் (Right Lower Abdomen) உள்ளது. உணவுப்பாதையில் சிறுகுடலும் பெருங்குடலும் சேரும் இடத்தில அமைந்துள்ளது இந்த appendix எனப்படும் இருந்தும் பயனில்லா (Vestigial organ) உறுப்பு. இதன் அமைப்பு பார்பதற்கு ஒரு குடலை போலவே இருந்தாலு…
-
- 1 reply
- 18.3k views
-
-
ஆண்டுதோறும் குளிர்காலங்களில் பீதியைக் கிளப்பி வரும் நோரோ வைரஸ் உள்ளிட்ட நுண் கிருமிகளை புற ஊதாக் கதிர்கள் உதவியுடன் கொல்வதற்காக புதிய ரோபோ ஒன்று கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று பரிட்சார்த்த முயற்சியாக வன்குவர் பொது மருத்துவமனையில் இந்த ரோபோ சோதனை செய்யப்பட்டது. 1.65 மீற்றர்கள் உயரமுள்ள புற ஊதாக் கதிரியக்க பல்புகள் பொருத்தப்பட்ட இந்த ரோபோவிற்கு வன்குவர் பொது மருத்துவமனை ஊழியர்கள் Trudi எனப் பெயரிட்டுள்ளனர் இந்த ரோபோவை இயக்கத் தொடங்கியவுடன் 15 வினாடிகளுக்குள் அந்த அறையில் உள்ள பாக்டீரியா , வைரஸ் அனைத்தையும் தன தலையில் பொருத்தப்பட்டுள்ள புற ஊதாக் கதிர்களைக் கொண்டு கொன்று விடுகிறதாம் Trudi. http://ekuruvi.com/Virus%20killing%20robot%20being%20tested …
-
- 0 replies
- 482 views
-
-
எனக்கு நெஞ்சிக்குள் சரியான சளியாக இருக்குது...வெளியால தடிமனாய் வருதுமில்லை.நெஞ்சை அரிச்சுக் கொண்டு இருக்குது...இரவு நித்திரை கொள்ளும் போது மூசிறன்...இதற்கு எதாவது தமிழ் வைத்தியம் இருக்கா?...தெரிந்தால் சொல்லவும்...நன்றி
-
- 28 replies
- 2.8k views
-
-
எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு வி…
-
- 4 replies
- 701 views
-
-
எனது நண்பர் ஒருவர், வயது 44, தொண்டையில் (டொன்சில் அருகில் ) சின்ன கட்டி வளருகிறது என்று வைத்தியரை பார்க்க போனார். அவரும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற பரிந்துரைத்தார். வெட்டி எடுத்த துண்டு வித்தியாசமாக இருக்கு என்று அதனை மேலதிக பரிசோதனைக்காக அனுபின்னர்கள் . இன்று நண்பரை கூப்பிட்டு, இது புற்று நோய் என்றும், ஆறு கிழமைகள் ரேடியோ theraphy சிகிச்சை தேவை எனவும், அது உடனடியாக ஆரம்பிக்க போகிறோம் என்றும் கூறி விட்டார்கள். இதைப்பற்றி யாராவது அறிந்திருந்தால் தயவு செய்து எழுதவும். இவ்வளவு நாளும் நல்ல உற்சாகமாக இருந்தவர் இன்று......... என்னவென்று எழுத முடியவில்லை. நாளை தனது 7 வயது மகளுக்கு சொல்ல போகிறார். அவர் சொல்லா விட்டாலும் சிகிச்சை காட்டி கொடுத்து வ…
-
- 4 replies
- 10.9k views
- 1 follower
-
-
பல ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனை முடிவுகளின் படி, ஒரு ஆரோக்கியமான மற்றும் வளர்ந்த மனித உடலுக்கு ஒரு நாளைக்கு ஒரு 1500 மி.கி அளவுக்கும் குறைவான உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிய வருகிறது. ஆனால், நம்மில் பலர் 3000 மி.கிராம் அளவுக்கும் மேல் உப்பை உட்கொள்வது தான் ஒரு அதிர்ச்சிகரமான தகவலாகும். இந்த பழக்கம் மாரடைப்பு, மூளைத்தாக்குதல் மற்றும் பலவிதமான இதய ரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களை வரவழைக்கின்றன. ஒரு டீஸ்பூன் உப்பில் ஏறக்குறைய 2000 மி.கி சோடியம் இருப்பதால், இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் ஏதாவது ஒரு உணவு வகையை சாப்பிட்டாலே போதும், அதில் இதைவிட அதிக அளவு உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதிலும் நீண்ட நாட்கள் உப்பு…
-
- 2 replies
- 741 views
-
-
உடல் தளர்ந்து, கண்கள் மூடியும், திறவாமலும் சோர்ந்திருந்ததன. அவரது முக்கிய பிரச்சனை ‘நித்திரை வருகுதில்லை’ என்பதுதான். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்த்மா போன்ற நோய்களும் அவருக்குத் தொல்லை கொடுக்கின்றன. “பகல் முழுதும் கதிரையில் இருந்து தூங்குவார். இரவும் எட்டு மணிக்கே படுத்திடுவார். ஆனால் எப்பவும் நித்திரை இல்லை எண்டுதான் சொல்லூர்” என்று அலட்சியமாகக் கூறினாள் கூட்டிக் கொண்டு வந்த மகள். இது அவருடைய பிரச்சனை மட்டுமல்ல. பெரும்பாலான வயதானவர்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சனைதான். பகலெல்லாம் தூங்கி விழுவது, நேர காலத்துடன் இரவு 7-8 மணிக்கே படுத்துத் தூங்குவதும், அதிகாலை 3-4 மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்து எழுந்து சிரமப்படுவதும் ப…
-
- 1 reply
- 502 views
-
-
கண்வலிக்கிழங்கு கண்வலிக்கிழங்கு. 1) மூலிகையின் பெயர் -: கண்வலிக்கிழங்கு. 2) தாவரப்பெயர் -: GLORIOSA SUPERBA. 3) தாவரக்குடும்பம் -: LLIACEAE. 4) வேறு பெயர்கள் -: கலப்பைக்கிழங்கு, செங்காந்தள்மலர்,வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு, காந்தள்மலர்ச்செடி, நாபிக்கொடி, போன்றவை. 5) வகை -: க்ளோரியோசா சிற்றினங்கள், சிங்களேரி என்பன. 6) மூலப்பொரிட்கள் -: கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine) 7) தாவர அமைப்பு -: இதற்கு வடிகால் வசதியுடைய மண்ஏற்றது. செம்மண், பொறை மண் ஏற்றது. மண்ணின் அமிலத்தன்மை 6.0 - 7.0 ஆக இருத்தல் நல்லது. கடினமான மண்உகந்தது அன்று. சிறி…
-
- 0 replies
- 870 views
-
-
எலுமிச்சையின் நன்மைகள்!!! அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய நன்மைகள் உள்ளன என்று தெரியும். அதிலும் பெரும்பாலான மக்கள், எலுமிச்சை சாப்பிட்டால், உடல் எடை மட்டும் தான் குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் அந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளன. மேலும் இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் மற்றும் கூந்தலுக்கு நிறைய நன்மைகளைத் தருவதோடு, துணிகள் மற்றும் பாத்திரங்களில் இருக்கும் கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. எலுமிச்சை உடல் எடை மற்றும் முகப்பருக்களை குறைப்பதற்கு மிகவும் சிறந்த பழம் தான். ஆனால் இந்த நன்மைகளைத் தவிர, இந்த சிட்ரஸ் பழத்தில் வேறு என்ன நன்மைகள் உள்ளன, என்பதைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்களேன். எலுமிச்சையின் நன்மைகள்: * எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் …
-
- 0 replies
- 560 views
-
-
முதுமையை ஓட ஓட விரட்டும் ஓட்ஸ் ! உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர். சர்வ ரோக நிவாரணி ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவ…
-
- 0 replies
- 554 views
-
-
சென்ற வாரத்தில் புதன்கிழமை அன்று காலை எழுந்தவுடன் முடிதிருத்தி்க் கொள்ளும் பொருட்டு சலூனுக்கு சென்றேன். பல வருடங்களாக வழக்கமாக முடி திருத்தும் நண்பர் அவர்., காலை 7.00 மணி ஆதலால் கூட்டம் ஏதும் இல்லை. முடிதிருத்தும் பணி தொடங்கியது. சுமார் இருபது நிமிடத்தில் பணி முடியும் பொழுது, வழக்கமான செயலாக, கையை உயர்த்தச் சொல்லி அக்குள் பகுதியை சுத்தப்படுத்த தொடங்கினார். அப்போது அவர் கேட்ட கேள்வி. ”உங்ககிட்ட கேட்கவேண்டும் என நினைத்தேன், குளித்து விட்டு வந்தீர்களா?” என்றார். ”இல்லை, எழுந்தவுடன் வந்துவிட்டேன்., ஏன்?” என்றேன் ”பலபேருக்கு கையை உயர்த்தினாலே துர்நாற்றம் வீசும், ’கப்’அடிக்கும், வீச்சத்துடன், முடியில் முடிச்சு,முடிச்சாக அழுக்கு பிரிக்க முடியாதபடி ஒட்டி கிடக்…
-
- 23 replies
- 12k views
-
-
பலபேர் மலத்தைப் பற்றி நினைக்கவும், பேசவும் கூட கூச்சப்படுகிறார்கள். வெளிக்கு எப்படி போகுதுன்னு கேட்டால், ”ஓ! அதெல்லாம் நார்மல், தாரளமாப் போய்விடுவேன். காலையில் எழுந்தவுடன் போய்விடுவேன். முதல் வேலையே இதுதான் “ என்பர். உண்மை வேறாக இருக்கும். அதைப்பற்றி கொஞ்சம் அலசும் முயற்சிதான் இது.. 1.அதிகாலை எழுந்தவுடன் சில நிமிடங்களுக்குள் மலம் கழிய வேண்டும். அது ஓரிரு நிமிட வேலையாக முடிந்து விட வேண்டும். பெரும் முயற்சி இருக்கக் கூடாது 2.மலம் உடலிலிருந்து ஒரே கயிற்றுத்திரிபோல் கழன்று வந்துவிடவேண்டும். வெளியே தள்ளுவதற்கு அதிக முயற்சியோ, அழுத்தமோ இருக்கக் கூடாது. ஒரு பெரிய குழாயிலிருந்து சிறிய துண்டுக்குழாய் கழன்று வருவது போல வரவேண்டும். 3.மலத்தின் மேல் சளிபோன்ற ஒரு படலம் இருக்க…
-
- 7 replies
- 1.1k views
-
-
சென்னை, அறிஞர் அண்ணா மருத்துவமனையின் இயற்கை நல மருத்துவ பேராசிரியர் ஹிமேஷ்வரி: நல்ல உடம்பு, தெளிவான மனசு இரண்டும் இல்லாமல், ஒருத்தரால், தான் நினைச்சதை அடையவே முடியாது.உங்க உடம்புக்கு, என்ன நேரத்தில், என்ன செய்யணும்னு, "செல்'களுக்கு நல்லா தெரியும். கண்ணுல தூசி விழுந்தா, கண்ணை, "டேமேஜ்' பண்ணாம, அந்த தூசியை வெளியே தள்ள, உங்களுக்கு தெரியாது. ஆனா குறிப்பிட்ட செல்கள், கண்ணீர் மூலமா வெளியே கொண்டு வந்துடும். இப்படி பார்த்துப் பார்த்து, பல வேலைகளை செய்ற செல்களோட அறிவுத் திறன், செயல் திறன் மழுங்கிப் போகும் போது தான், நோய்கள் அதிரடியா நம்மை தாக்குது.நம்மகிட்டே, "நெகட்டிவ் மென்ட்டாலிட்டி' அதிகரிக்க அதிகரிக்க, நம் செல்களோட செயல்திறன் குறையத் தொடங்குது.168 விதமான, "நெகட்டிவ் மெ…
-
- 2 replies
- 775 views
-
-
குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி,இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். அதன் முக்கிய அடையாளங்கள். 1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது. 2.கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்தமுடியாமல் மேலும் மேலும் குடிப்பது. 3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம்,தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது. 4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது. குடிநோய் எந்தளவுக்கு அபாயமானது...? மரணத்தை விளைவிக்கும் முக்கிய காரணங்களில் குடிநோயும் ஒன்று. நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களில் சேர்க்கப்படும் குடிதொடர்பா…
-
- 0 replies
- 1.4k views
-
-
லண்டன் :அன்பானவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம், ரத்தக் கொதிப்புகுறைவதோடு, நினைவாற்றல்அதிகரிக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் உள்ள, வியன்னா பல்கலைகழக விஞ்ஞானிகள் நமது உடலில்,பிட்யூட்டரி சுரப்பியால் உருவாக்கப்படும் ஹார்மோனான, ஆக்சிடாக்சினை பரிசோதித்து வந்தனர். அதில், நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், காதலன் அல்லது காதலி, என நம்மை நேசிக்கும்அன்பானவர்களை நாம் கட்டிப்பிடித் தால், "ஆக்சிடாக்சின்' வெளிப்பட்டு, ரத்தக் கொதிப்பு குறைகிறதுஎன்பதை கண்டறிந்துள்ளனர்.மேலும், இதன் மூலம், நினைவாற்றல் மேம்படுவதும் தெரியவந்துள்ளது.ஆனால், நமக்கு முன்பின்அறிமுகம் இல்லாதவர்கள், நம்மை நேசிக்காதவர்கள் ஆகியோரை,கட்டிப்பிடிக்கும்போது, இந்த ஹார்மோன் அதிகம் சுரக்காமல், …
-
- 4 replies
- 839 views
-
-
Instant Way To Lose Stomach Bulge A bulky tummy looks weird and that is highly true, anyone having bulge around stomach always want to get it out of body as early as possible. So if you too are finding ways to wash out this unwanted fat from your stomach area then here is the answer of you misery. Guys and Girls, if you have some money and you can spend some money for shaping up you stomach then here is the answer which will give you result in no time. Undoubtedly you need to spend some money over it but that’s too true you don’t need to wait for result and there is no long time exercise, wait and so on. Tuck Surgery, is the way by having this surgery you can hav…
-
- 1 reply
- 575 views
-
-
கேட்பதில் பிரச்சினை உள்ளவர்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் மூளையின் திறன்கள் வேகமாகக் குறைந்துவருகின்றன என்று அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ள ஒரு ஆய்வு கூறுகிறது. ஒருவருடை கேட்கும் திறன் குறையக் குறைய மூளையின் இணைப்புகளில் மாற்றங்கள் நிகழ்வதும், மற்றவர்களுடன் உரையாட முடியாமல் போவதால் சமூக ரீதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதும் மூளைத் திறனின் வீழ்ச்சிக்குக் காரணம் கருதப்படுகிறது. ஆகவே கேட்கும் கோளாறுகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிப்பதன் மூலமாகவும், கேட்பதில் உதவக்கூடிய கருவிகளை அணிந்துகொள்வதன் மூலமாகவும் மூளைத் திறன் பாதிப்பு ஏற்படுவதை ஒத்திப்போட முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எழுபது வயதைத் தாண்டியவர்கள் சுமார் இரண்டாயிரம் பேரிடம் …
-
- 0 replies
- 450 views
-