நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3018 topics in this forum
-
விந்தணுக்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று அஞ்சப்படுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. மனித உடலின் செயல்பாடுகளுக்கு அடிப்படை உணவே. உணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். அமெரிக்காவில் …
-
- 0 replies
- 543 views
-
-
புதிய ஆய்வு: உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா? உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. விளம்பரம் ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. துல்லியம…
-
- 4 replies
- 543 views
- 1 follower
-
-
பழுப்பு அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. நெல்லின் வெளிப்புற தோலை நீக்கியப் பிறகு மிதமான பழுப்பு நிறத்தில் இருக்கும். இது தானியத்தின் சுவையுடன் வாயில் மெல்லக் கூடிய தன்மை கொண்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும். ஆனால் இதை சமைப்பதற்கு சாதாரண அரிசியை விட, சிறிது அதிக நேரம் அதிகமாகும். கைக்குத்தல் அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் (Phytonutrients) மிகுதியாக உள்ளது. இப்போது இந்த கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டால், என…
-
- 0 replies
- 541 views
-
-
நுண்ணுயிரியல் ஆய்வின் நெடுமான் Microbiologist Dr. SP. தியாகராஜன் | Prof. S. P. Thyagarajan
-
- 2 replies
- 540 views
-
-
இதயத்தின் ஆரோக்கியத்துக்கு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்யக்கூடாது என்று நாமே மருத்துவராகி அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்வோம். அதே சமயம் கல்லீரல் நம் உடலில் என்ன வேலைகளைச் செய்கிறது என்பதுகூட நம்மில் பலருக்குத் தெரியாது. சமூகத்தில் மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு இருக்கும் அளவுக்குக்கூட கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் கிடையாது. கல்லீரல் pixabay ``இதயத்தில் ஏதேனும் பாதிப்பு என்றால் அறிகுறிகள் வெளியே தெரிந்துவிடும். இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தில் 10 சதவிகிதம் தடைபட்டால்கூட நெஞ்சு வலி ஏற்பட்டுவிடும். ஆனால் கல்லீரலில் மிகுதியான பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்" என்கிறார் கல்லீரல் மாற…
-
- 1 reply
- 540 views
-
-
சூரிய நமஸ்காரம் செய்யும் அற்புதங்கள்! மின்னம்பலம் சத்குரு காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைக் கேட்டு நாமும் சூரியனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வோம். ஆனால் இதுவல்ல சூரிய நமஸ்காரம். தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம். இதை ஏன் செய்ய வேண்டும், இதை செய்வதனால் என்ன பயன் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை... யோகா என்ற வார்த்தைக்கு "உங்களை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்" என்று அர்த்தம். யோகா என்ற வார்த்தை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தை. அது எந்த ஒரு குறிப்பிட்ட பயிற்சியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் எதைச் செய்தாலும் அது யோகாவாக இருக்கலாம். உங்கள் வளர்ச்சிக…
-
- 0 replies
- 538 views
-
-
உடலில் செரிமானம் சீராக நடைபெறுவதில் குடல்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. உங்கள் குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், செரிமானம் மீண்டலம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். மேலும் உடலிலேலே குடலில் அதிக கழிவுகள் சேர்வதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் இதன் வழியாகத் தான் உடலின் அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகிறது. கழிவுகள் வெளியேற்றப்பட்டால் தான் உடலால் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்ச முடியும். எனவே அத்தகைய குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். குடலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்று கேட்கிறீர்களா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. டிப்ஸ் #1 …
-
- 1 reply
- 537 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அ…
-
- 0 replies
- 537 views
- 1 follower
-
-
தண்டுவட மரப்பு நோய்க்கு புதிய மருந்து: மூளை தாக்குதலைத் தடுக்கும் மல்டிபிள் ஸ்க்லீரோசிஸ் எனப்படும் தண்டுவட மரப்பு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒரு புதிய மருந்தை மைல்கல் வளர்ச்சி என்று மருத்துவர்களும், தொண்டு நிறுவனங்களும் வர்ணித்துள்ளன. மூளையின் சில பகுதிகளை நோய் எதிர்ப்பு அமைப்பு தாக்கி, ஒரு விரோத ஆக்கிரமைப்பை எதிர்கொள்வது போல மூளையை குழப்பிவிடுகிறது. இதனால், மல்டிபிள் ஸ்க்லீரோசிஸ் ஏற்படுகிறது. இதன் காரணமாக, மூளையிலிருந்து வரும் சமிக்கைஞகள் உடலின் மற்ற பாகங்களைச் சென்றடைய விடாமல் தடுக்கிறது. நடப்பதற்கு சிரமப்படுவது இதன் முக்கிய அறிகுறியாகக் கூறப்படுகிறது. புதிய மருந்தான ஓக்ரீலிஸ்மப், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நரம்பு வழியாக செலுத்தப்படுகி…
-
- 0 replies
- 537 views
-
-
டைட்டானிக் கப்பலையே 'மூழ்கடித்த' இடது, வலது குழப்பம் உங்களுக்கும் இருக்கிறதா? கட்டுரை தகவல் எழுதியவர்,கெல்லி ஓக்ஸ் பதவி,பிபிசி ஃபியூச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இது குழந்தைத்தனமான தவறு போலத் தோன்றலாம். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அதிகளவிலான பெரியவர்களுக்கும் இடதுபுறத்தையும் வலதுபுறத்தையும் குழப்பிக் கொள்கிறார்கள். அதனால் இது குறித்துப் புரிந்து கொள்வதற்காக விஞ்ஞானிகள் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர். வலதுக்கும் இடதுக்குமான வேறுபாடு பிரிட்டிஷ் மூளை அறுவை சிகிச்சை நிபுணரான ஹென்றி மார்ஷ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது நோய…
-
- 0 replies
- 537 views
- 1 follower
-
-
நோய் வந்தவுடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை கொண்டே குணப்படுத்தலாம். இவை மாத்திரைகளை போல் உடனடி பலன் தரவிட்டாலும் நாளடைவில் நோய்களை குணமாக்கும் வல்லமை படைத்தது. அதுபோல் ஒரு மூலிகை தான் தூதுவளை. இதனை தூதுளம், தூதுளை என்றும் அழைப்பர். இந்த மூலிகை செடி ஊதாநிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்களையும்(சுண்டைக் காய்) கொண்டது. இந்த மூலிகையின் வேர் முதல் பழம் வரை எல்லா பாகமும் அதிக பயன்களை கொண்டது. தூதுவளையின் மகத்துவங்கள் * தூதுவளை இலையைப் பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால், காதுவலி மற்றும் காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும். * இந்த இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ அல்லது குழம்பாக…
-
- 0 replies
- 536 views
-
-
அதிக நேரம் "டிவி' பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்: ஆய்வில் தகவல் வாரத்தில் 35 மணி நேரத்திற்கு அதிகமாக, "டிவி' பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் அதிக நேரம், "டிவி' பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அசோசம் சமூக மேம்பாட்டு அமைப்பு ஆய்வு நடத்தியது. சென்னை, மும்பை, டில்லி, பாட்னா, சண்டிகார் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த ஆறு முதல் 17 வயது வரையிலான 3,000 பிள்ளைகளிடமும், 3,000 பெற்றோரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தைகள் வாரத்திற்கு 35 மணி நேரத்திற்கு அதிகமாக, "டிவி' பார்ப்பதால், அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பெரும் மாற்ற…
-
- 1 reply
- 536 views
-
-
உளுந்து (Black Gram) இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும். இந்திய உணவில் இரண்டு வகை உண்டு. ... 1. தென்னிந்திய உணவு வகை, 2. வட இந்திய உணவு வகை. தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது. இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவ…
-
- 1 reply
- 536 views
-
-
அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் 11 உணவுகள் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும் நமக்கு போதுமான ஊட்டச்சத்து அளிக்கிறதா? இல்லை. நாம் சாப்பிடும் உணவில் 20-30% உணவு தான் ஊட்டச்சத்து தரக்கூடிய உணவு, மீதி அனைத்தும் நமக்கு தெரியாமல் நமது உடலை அழித்து கொண்டிருக்கும் உணவு வகைகள். சுவை நன்றாக இருப்பதால், நாம் சில வகை உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம். ஆனால், அவ் வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறது. ஊட்டச்சத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, நாம் எல்லா வகையான உணவுகளையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக, சில வகையான சிறந்த உணவுகள் நமது எடை குறைப்பிற்கு உதவும், வேறு சில நமது அறிவுத்திறனை ஊக்குவிக்கும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் உணவுகள். இதற்கு மாறாக…
-
- 0 replies
- 536 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுசீலா சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வின்படி, கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடின உழைப்பு, ஓட்டம் அல்லது அதிகப்படியான உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். குஜராத்தில் நவராத்திரியின் போது மாரடைப்பால் மக்கள் இறந்ததாக சமீபத்தில் செய்தி வந்துள்ள நிலையில், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் இந்த அறிக்கை வந்துள்ளது. 12ம் வகுப்பு படிக்கும் மாணவி இறந்த செய்தி நவராத்திரி நேரத்திலேயே தெரிய வந்தது. அது தொடர்பான வீடியோக்களும் வைரலானது. …
-
- 1 reply
- 536 views
- 1 follower
-
-
சளி, இருமல் மருந்துகளில் ஒளிந்திருக்கும் ஆபத்து - எச்சரிக்கும் மருத்துவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பையில் இருமல் மருந்து எடுத்துக் கொண்ட இரண்டரை வயது குழந்தை சுமார் 20 நிமிடங்களுக்கு மூர்ச்சையாகிவிட்டது. அது மருத்துவ தம்பதியின் குழந்தை என்பதால் உடனடி சிகிச்சை கிடைத்து மீண்டது. இது இந்தியாவில் குழந்தைகளுக்கு சளி, இருமல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தெற்கு மும்பையைச் சேர்ந்த மருத்துவ தம்பதியின் இரண்டரை வயது குழந்தைக்கு இருமல் அதிகமாக இருக்கவே, தாயார் இருமல் மர…
-
- 0 replies
- 535 views
- 1 follower
-
-
மலர்களின் மகரந்தங்களை கொண்டு தேனீக்களால் சேகரிக்கப்பட்டு, மனிதர்களால் தேனீக்களிடம் இருந்து பறிக்கப்படும் அருமருந்தே தேன். அதனை அருமருந்து என்று சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நிறைய மருத்துவ குணங்களை உள்ளடக்கிய பழுப்பு நிற திரவமே தேன் ஆகும். தேனை பரவலாக வயிற்றின் நண்பன் என்று கூட சொல்வார்கள். இதற்கு காரணம் வயிறு, பித்தப்பை சம்மந்தமான நோய்களுக்கெல்லாம் மருந்தாக விளங்குவதே ஆகும். தேனில் நோய் தீர்க்கும் பண்புகள் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்து உள்ளதால், தேன் சரும பாதுகாப்பு மற்றும் பல மருத்துவ பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. கீழே தேனின் பல்வேறு நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் தேனை அதிகம் பயன்படுத்துங்கள். மாய்ஸ்…
-
- 0 replies
- 535 views
-
-
தக்காளிப் பழங்களின் பிரகாசமான சிவப்பு நிறத்திற்கு காரணமான முக்கிய இரசாயனக் கூறானது ஆண்களில் இனவிருத்தி ஆற்றலை ஊக்குவிப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். லைகோபீன் என்ற மேற்படி இரசாயனப்பொருள் ஆண்களின் இனவிருத்தி ஆற்றலை 70சதவீதத்தால் அதிகரிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஒஹியோ மாநிலத்திலுள்ள கிளேவலானட் மீள்விருத்தி மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு வருட காலமாக உலகெங்கும் மேற்கொள்ளப்பட்ட 12 ஆய்வுகளின் பிரகாரம் மேற்படி லைகோபீன் இரசாயனத்தை தினசரி அதிகளவில் வழங்குவதன் மூலம் ஆண்களின் இனவிருத்தி ஆற்றலைத் தூண்டி குழந்தைப் பேற்றை ஊக்குவிக்க முடியும் என கண்டறிந்துள்ளதாக இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மேற்படி நிலையத்தின் பணிப்பாளர் அசோக் அக…
-
- 2 replies
- 535 views
-
-
-
- 3 replies
- 534 views
-
-
Oct 20, 2010 / பகுதி: மருத்துவம் / மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை. மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின…
-
- 0 replies
- 534 views
-
-
ப்ராக்கோலி நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்களிக்கிறது. ப்ரக்கோலியில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்க Sulfophane என்ற கலவை உள்ளது. இது, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். கால்சியம் மற்றும் வைட்டமின் கே அளவு ப்ரக்கோலியில் அதிகம் உள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) என்னும் நோய் வராமல் தடுக்க உதவும். ப்ராக்கோலி வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க உதவும். இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே, வைட்டமின் டியின் வளர்சிதையை சமநிலையில் வைக்க உதவுகிறது. ப்ராக்கோல…
-
- 0 replies
- 534 views
-
-
அடிக்கடி எச்சில் துப்புபவரா? * பான், குட்கா விபரீதம் உஷார் * “சே, காலைல ஒரு பாக்கெட் வாங்கிப் போடலே, நாக்கு நம…நமக் குதுப்பா; ஒரு வாய் போட்டுட்டேன்னு வச்சிக் கோ, உடம்பெல்லாம் ஜிவ் வுன்னு இருக்குது; வேலையும் செய்ய முடியுது…!’ * “இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட் வாங்கி, அப்பப்ப ஒரு சிட்டிகை போட் டுப்பேன்; மூளைக்கு நல்ல சுறுசுறுப்பா இருக்குப்பா…!’ * “பத்து வருஷமா போட்டுண்டு வர் றேன்; எனக்கு ஒண்ணும் இதுவரைக்கும் வரலே; சும்மா ஏதாவது டாக்டருங்க சொல்லிண்டு இருப்பாங்க…!’ இப்படி படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இப்போது தூங்கி எழுந்ததில் இருந்து புத்துணர்ச்சி கிடைக்க பான், குட்கா சமாச்சாரங்களை வாயில் அடக்கிக்கொண்டு, நாகரிகத்தை எல்லாம் காற்றில் பறக்க…
-
- 0 replies
- 534 views
-
-
லண்டன்: லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர், மார்பக புற்றுநோய் ஆராய்ச்சிக்காக ஆய்வகத்தில் செயற்கையாக மார்பகங்களை வளர்த்துள்ளனர். மனித மார்பகத்தை முப்பரிமாண முறையில் செயற்கை திசுக்களால் இவர்கள் வளர்த்துள்ளனர். இதன் மூலம் மார்பகத்தைத் தாக்கும் புற்று நோய் செல்கள் குறித்த ஆய்வை மேலும் துல்லியமாக்கி, அதைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய இது உதவும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும். இதுகுறித்து ஸ்டடி லீடர் கிறிஸ்டினா ஷீல் கூறுகையில், ‘இந்த தொழில்நுட்ப சாதனையானது பல ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கும். புற்று நோய் செல்கள் எப்படி மார்பகத்தை தாக்குகின்றன என்பதையும், அதைத் தடுப்பது எப்படி என்பதையும் கண்டுபிடிக்க இந்த…
-
- 0 replies
- 534 views
-
-
கடவுள் நமக்கு கொடுத்த வரப்பிரசாதங்களில் ஒன்று தான் கீரைகள். கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, அவற்றில் ஒரு வகை தான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது. * வயிற்றுப் புண், வாய்ப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம். * மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னையிலிருந்து விடுபடலாம். * மேலும் செரிமான பிரச்னை உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு சத்துக்கள் கிடைப…
-
- 0 replies
- 533 views
-
-
தானிய வகைகள் என்பது நம் அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது. நவதானியங்கள் என்பது சமையிலில் ருசிக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த தானிய வகையில் ஒன்று தான் கோதுமை. கோதுமை என்பது டிரிடிகம் இனத்தை சேர்ந்த தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் ஏத்தியோப்பிய விலை நிலங்களாகும். கோதுமை உலகில் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்றாகும். தொல்பொருள் ஆராய்ச்சிகள் முதன் முதலில் வளர் பிறை மற்றும் கழிமுக பகுதிகளிலும் பயிரிடப் பட்டதை தெரிவிக்கின்றன. தென் கிழக்கு துருக்கியில் கோதுமை பயிரிடப் பட்டதாக அண்மை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனைய எந்த பயிர்களை காட்டிலும் அதிக பரப்பளவில் உலகின் பெரு…
-
- 1 reply
- 532 views
-