யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
94 topics in this forum
-
அண்மையில் ஊரில் நடந்த திருமணம் ஒன்றிற்கு பரிசாக பணம் அனுப்பியிருந்தேன். பெண்ணின் தகப்பனார் பெயருக்கே பணத்தை அனுப்பி அவருடன் தொலைபேசியில் சொன்னேன். பணம் அனுப்பி இருக்கிறேன். மணமக்களுக்கு திருமண பரிசாக கொடுங்கள் என்றேன். பக்கத்தில் நின்ற எனது மனைவி மறக்காமல் கொடுங்கள் என்றார். அவருக்கு அது கேட்க கூடாது என்று உடனேயே தொலைபேசியில் இருந்து விடை பெற்றுக் கொண்டேன். மனைவியிடம் அவ்வாறு சொல்லக் கூடாது சொல்ல காரணம் என்ன என்று கேட்டபோது அவர் பிள்ளைகளுக்கு பணத்தை கொடுப்பதில்லையாம். பிள்ளைகளின் சம்பளத்தில் பெரும் பகுதியைக் கூட அவரே வாங்கிக் கொள்கிறாராம் என்றார். எனக்கு தெரிந்து அவர் கமத்தை தோட்டத்தை நம்பி மட்டுமே வாழ்பவர். எந்தவகையான கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்.. மிகுந்த நாட்டுப்பற்றாள…
-
-
- 7 replies
- 441 views
-
-
இவ்வளவு பெரிய நாயா? திடுக்கிட்டுப் போனேன். அது ரொம்ப சாது, சொன்னார்கள் உறவினர்கள், நண்பர்கள், பெரியவர்கள். எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. உது தற்செயலாய் மிதிச்சாலே ஆபத்து அல்லவா? சாச்சாய், அப்பிடி நடக்கவே நடக்காது அரசியல் வல்லுநர்கள் ராஜதந்திரிகள் பாடம் எடுத்தனர். அதற்கு ஒரு மணம் இருந்தது. அது எங்கு போனாலும் அதன் மணம் முன் தோன்றியது பிறகு அதன் பின்தொடர்ந்தது... ஒரு நாள் அதன் எசமான் சூக்காட்டியதும் பாய்ந்து விறாண்டியது கடித்துக் குதறியது மற்றும் பல சொல்ல முடியாத அவலங்களையும் அரங்கேற்றியது. அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது... இப்போதெல்லாம் அது உலா வரும்போது, ஊரடங்குது, கதவடைக்குது, மூச்சும் அடைக்குது. இது நடந்து 38 வருசமாச்சு ஆனா அந்த மணம் இருக்கே இப்பவும் ம…
-
-
- 7 replies
- 522 views
- 1 follower
-
-
அவளைத் தொடுவானேன்...? சிறு வயதில் இருந்தே இசை நாடகம் பாடல்களில் ஈடுபாடு அதிகம் எனக்கு. சாதாரண தரப் பரீட்சையில் சங்கீதத்தில் செய்முறை அதாவது பாடி 60 க்கு 58 புள்ளி எடுத்து அதி சித்தி (D) எடுத்திருந்தேன். அத்துடன் நகைச்சுவை என்னோடு கூடப் பிறந்தது. இதனால் என்னை சுற்றி எப்பொழுதும் ரசிகர்கள் மற்றும் கலைஞர்கள் கூட்டமும் நான் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாகவும் இருக்கும். அந்த நேரத்தில் தான் தென் பகுதியில் படித்து கொண்டு இருந்தவள் எங்கள் ஊருக்கு வந்தாள். அவள் நடக்கும் போது காலடிகளில் இரத்தம் பொக்களிப்பது தெரியும் அந்த அளவுக்கு அவள் வெள்ளையாக இருந்தாள் அத்துடன் தென் பகுதியில் படித்ததால் அவள் தமிழ் இன்னொரு வகை தேனாக இனிக்கும். கேட்க கேட்க கேட்க தோன்றும். அவள் என்னிடம் பாடச்…
-
-
- 28 replies
- 1.2k views
-
-
இன்னொரு சக்கரவர்த்தி --------------------------------------- அற்புதமான ஆடை என்று கொடுக்க அதை உடுத்து ஆடம்பரமாக நிமிர்ந்து நடந்து வந்தார் ஒரு சக்கரவர்த்தி என்னே ஆடை இது எப்படி மின்னுது இது இதுவல்லவோ அழகு எங்கள் ராசா என்ன கம்பீரம் என்று கூட்டம் குரல் எழுப்பியது இன்னும் பெருமைப்பட்ட சக்கரவர்த்தி இன்னும் இன்னும் கைகளை நீட்டி கம்பீரமாக நடந்தார் சின்னப் பயல் ஒருவன் திடீரென 'ஐயே................ ராசா அம்மணமாக வருகிறாரே.....' என்று கத்திச் சொல்லி அவன் கண்களையும் மூடினான் சக்கரவர்த்தி வெட்கத்தில் பொத்திக் கொண்டு ஓட கூட்டமும் ஆடை நெய்தவரும் உயிர் தப்ப ஓடி…
-
-
- 6 replies
- 586 views
-
-
இன்றைய அதிசயம் ------------------------------ பிள்ளையார் இயேசு பெருமான் புத்த பெருமான் இப்படி பல தெய்வங்களில் இருந்து நீர் பால் இரத்தம் கூட உலகில் அங்கங்கே வடிந்து கொண்டிருக்கின்றது இது அதிசயம் ஒரு துளி ஈரமும் வருடங்களாக காணாமல் வறண்டு வெடித்து ஒரு இடம் அங்கே ஒரு வெள்ளைக் கொக்கு ஓடின ஓணாணை பிடித்து அப்படியே முழுங்கியது இதுவும் அதிசயம் கடுங்குளிர் காலத்திலும் நெருப்பாக வெயில் எரிய அனல் காற்றும் சேர அந்த இடமே பற்றி எரிந்தது இது அவலமான அதிசயம் இ…
-
-
- 14 replies
- 892 views
- 1 follower
-
-
இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்? இதை அடிக்கடி சொல்லிக் கொள்வது வேறு யாருமல்ல.என்னைப் பெற்ற தாய் தான்.சில இடங்களில் எனக்கு முன்னாலேயே சொல்ல கொஞ்சம் சங்கடமாகவே இருக்கும். அப்பா பெரிய வாத்தியார்.அம்மா ஆசிரியை.ஒரே ஒரு அண்ணன்.எனக்கு இரண்டு வயது மூத்தவன்.அண்ணனுடன் இப்போதும் வா போ என்று தான் பேசுவேன்.என்னடா அண்ணனை ஒருமையில் பேசுகிறானே என்று எண்ணினால் அதற்கு விடை சொல்லத் தெரியவில்லை.இப்போதும் பிள்ளைகள் பேரப் பிள்ளைகளை ஒருமையில்த் தான் அழைப்பேன். கிராமப் புறங்களில் எந்த கொண்டாட்டமாக இருந்தாலென்ன துக்க வீடாக இருந்தாலென்ன இப்போது போல மண்டபத்துடன் குசலம் விசாரித்துவிட்டுப் போவதில்லை. கொண்டாட்டம் என்றால் 4-5 நாட்களுக்கு முத…
-
-
- 14 replies
- 543 views
- 2 followers
-
-
காலையில் எழுந்ததும் மைதிலி பர பர ப்பானாள். பிள்ளைகளை பள்ளிக்கு பஸ் வண்டியில் ஏற்றி விட்டு, அவசர அவசரமாக சமையலை முடித்து விட்டு அந்த தொடர் மாடிக் கட்டிடத்தின் நாலாம் மாடிக்கு செல்ல கையில் சொக்கலேருக்கள் அடங்கிய சிறு பையுடன் மின் தூக்கி முன் காத்திருந்தாள் . இரவு கணவரிடம் தனது இரண்டாவது அண்ணா இத்தாலியில் இருந்து வந்திருப்பதாகவும் (அண்ணாவின் மனைவி அண்ணி இவளது வகுப்பு த்தோழி ) அவரைப் பார்க்க செல்வதாகவும் கூறி இருந்தாள். மின் தூக்கி வரும் வரை காத்திருந்தாள் , மனமெல்லாம் பத்து வருடங்கள் பின்னாடி சென்றது. இரவிரவாக தலையணை நனைய உறக்கமற்று இருந்தவள், இன்று வாழ்க்கையின் ஒரு பெரும் திருப்பம் அந்த கட்டிட தொகுதியில் வாழும் அண்ணாவின் வகுப்பு தோழன் சென்ற வாரம் செய…
-
-
- 5 replies
- 463 views
- 1 follower
-
-
இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே கிறுக்கனாக்கி என்னைக் கிறுங்கச் செய்தவளே சறுக்கியே விழுந்தேனே சண்டாளி உன்நினைப்பில் பொறுக்கியாகி உன்மீது பித்தனாகிப் போனேண்டி! வண்டுகள் மொய்க்கின்ற வண்ண மலரடிநீ வான்மீது மிளிர்கின்ற விண்மீனின் ஒளியடிநீ பல்லவன் வடித்தநல் பருவமங்கைச் சிற்பம்நீ பாவையெந்தன் மனதிற்குள் பாட்டிசைக்கும் சுரங்கள்நீ! தோகை மயிலெனத் தோன்றுதடி உன்னுருவம் வாலைக் குமரியெந்தன் வழித்தடத்தில் நகருகின்றாய் சேலைக்கு அழகான சித்திரப் பெண்ணழகே தூயஎன் காதலாலே துடிக்கின்றேன் உன்னாலே! நெற்றிப் பிறையினிலே நீள்புருவம் கொண்டவளே வேல்விழியால் கணைதொடுத்து வித்தைகள் காட்டுகிறாய் கொவ்வை இதலழகி குண்டுமல்லிச் சிரிப்பழகி ஒள…
-
-
- 8 replies
- 519 views
- 1 follower
-
-
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம் இறை நம்பிக்கை என்பதே இளம் பிராயத்தில் இருந்து செய்யப்பட்ட மூளைச்சலவை என்பதும், அதனால் அதுவும் ஒரு குருட்டு நம்பிக்கை என்பதுமே பெரும்பான்மை இறை மறுப்பாளர்களின் கருத்தாக இருப்பினும் அவர்கள் அக்கருத்தை அத்துணை ஆணித்தரமாக சமூகத்தில் வெளிப்படுத்துவதில்லை. எந்த சமூகத்திலும் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடையவராய் இருப்பதும், அம்மக்கட் பணியே தம் பணி எனக் கொண்டதும் அதற்குக் காரணமாய் இருக்கலாம். ஆனால் இறை நம்பிக்கை எல்லை கடந்து மூடநம்பிக்கையாய் உருவெடுக்கும்போது இறை மறுப்பாளர் மட்டுமல்லாமல் இறை நம்பிக்கை கொண்டோரிலும் பகுத்தறிவாளர் தமது எதிர்க் குரலை ஆங்காங்கே பதிவு…
-
-
- 12 replies
- 950 views
- 1 follower
-
-
கிறிக்கட் போட்டிக்கு போக வெளிக்கிடுகிறேன் மோட்டார் சைக்கிள் கொஞ்சம் தாமதப்படுத்த நீங்கள் முந்திச்செல்லுங்கள் நான் பிறகு வருகிறேன் என நண்பர்களிடம் சொல்லிவிட அவர்கள் மைதானத்திற்கு செல்கிறார்கள். நானும் சைக்கிளை சரிபண்ணி எடுத்து அந்த ஊருக்கு செல்ல சைக்கிள் மீண்டும் பழுதடைகிறது என்னடா திரும்ப சைக்கிள் பழுதாகிறதே! என இறங்கி சைக்கிளை தள்ளி ஒரு திருகாணி இருந்தால் சரி பண்ணி விடலாம் என நினைக்க. ஒரு பெரிய பங்களா போல வீடு எதிரே இருக்க அங்கே ஒரு பெண்மணி ஒரு பிள்ளைக்கு சோறு ஊட்டிக்கொண்டு நிற்கிறார் அவவோ என்ன ஏதேனும் உதவிகள் வேண்டுமா? என எனைக்கேட்க ஓம் என நான் சொல்ல உள்ள வந்து நிறைய சாவிகள் இருக்கிறது எடுத்துப்போங்கள் என சொல்கிறார். நானும் உள்ளே சென்று சாவியை எடுக்கும் போது அங்கே ச…
-
-
- 2 replies
- 238 views
-
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம் என் ஆடுகளை வேலியால் எட்டிப்பார்த்த என்னருமைத் தோழனே…. எட்டிப்பார்க்கும் அவசரத்தில் நீ பலதை உன்னிப்பாக கவனிக்கவில்லை. கவனித்தாயா? அந்த ஆடுகளுக்கு குறி சுடப்படவில்லை. இந்த பட்டியில் இதற்கு முன் நின்ற அத்தனை ஆடுகளும் பல குறிகளை தாங்கித்தான் நின்றன - அந்த தாடிக்கார மேய்பனின் புத்தகத்தை படித்த பின் தான், குறிகள் ஏதும் என் ஆடுகளுக்கு இடப்படவே இல்லை. பார்த்தாயா? ஈசான மூலையில் கறுப்பும் பழுப்புமாய் நின்ற குட்டி ஆடு உன் காமாலை கண்ணுக்கு தெரியவில்லையா? அதன் அம்மா அப்பாவை நாந்தான் சேர்த்துவைத்தேன். எங்கள் ஆட்டு மந்தையில் அது ஒரு வரலாறு. பல சம்பவங்களின் பின் நடந்தேறியது. அங்கேயும் பட்டியின் பழைய கதவுகளை நெட்டித்திறக்க எனக்கு உதவியது அந்த கெட்டிக்கார கிழவனி…
-
-
- 12 replies
- 647 views
- 1 follower
-
-
ஒரு காரின் கடைசி வாக்குமூலம் ---------------------------------------------------- 'இதோ உங்களின் பேபி................' என்று சொல்லியே புத்தம் புதிதாக என்னை வாங்கியவரிடம் கொடுத்தார்கள் வாங்கியவருடன் ஒரு பெரிய பேபியும், இரண்டு சின்ன பேபிகளும் வந்திருந்தனர் நல்லதொரு குடும்பம் என்று நானும் சந்தோசப்பட்டேன் சின்னப் பெண் ஒரு வருடத்திற்கு இருக்கைக்கு மேல் ஒரு இருக்கை போட்டு இருந்தார் பெரிய பையன் தெனாவெட்டாக பின்னுக்கு போய் மூன்றாவது வரிசையில் தனியே இருப்பான் சில மாத கவனிப்புகளின் பின் ஆரம்பித்தார்கள் அவர்களின் வேலைகளை அவர்கள் சாப்பிடுவதில் கொஞ்சம் கொட்டி அப்படியே விட்டார்கள் ஏதோ நானும் சாப்பிடுவது போல அது நாறி நான் மூச்செடுக்க முடியாமல் தவித்தேன் சீப்பு பவுடர் பேனை பென்சில் இன்ன…
-
-
- 11 replies
- 568 views
- 1 follower
-
-
ஒரு முட்டை ஆயிரம் டாலர் ------------------------------------------ இப்ப இங்கே பல கடைகளில் முட்டை இல்லை சில கடைகளில் இருக்கின்றது ஆனால் எண்ணி எண்ணித்தான் வாங்கலாம் பலத்த கட்டுப்பாடு தட்டுப்பாட்டால் விலையும் பல மடங்காகிவிட்டது கோழிகளுக்கு காய்ச்சல் வந்தது என்று சும்மா சுகமாக நின்றவைகளையும் அழித்துப் போட்டார்கள் இப்ப புதுதாகக் குஞ்சுகளும் வேண்டாம் என்று அங்கே குடும்பக் கட்டுப்பாடு திட்டமும் வந்துள்ளது இது என்ன கலிகாலம் அமெரிக்காவில் முட்டைப் பொரியல் கூடக் கிடையாதா...... ஊரில் வீட்டில் கோழிகள் இருந்தன அப்பா முதன் முதல் ஒரு கோழி வாங்கித் தந்தார் ஒரு விதமான மஞ்சள் கலரில் வெள்ளைப் புள்ளிகள் போட்ட கோழி அது அது வீட்டுக்கு வரும் போது அதன் வயது நாலு மாதங்கள் இருக்கும் ஒரு நாள் முழ…
-
-
- 8 replies
- 509 views
-
-
ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே! நண்பர் @பாலபத்ர ஓணாண்டி எனக்கு மிகவும் பிடித்த கருத்தாளர். அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். என்னை யாழில் வா தல, போ தல என உரிமையோடு ஒருமையில் எழுதும் ஒரே ஒருவர், நான் அப்படி ஒருமையில் விளிக்கும் ஒரே ஒருவர். அண்மையில் ஒரு கருத்தை சொல்லி விட்டு அதை நிறுவ முடியாமல் போய் விட, தன் credibility உடைந்து விட்டதென கூறி யாழில் கருத்து எழுதுவதை விட்டு விட்டார் (படங்கள் இணைக்கிறார்). இதெல்லாம் சப்பை மேட்டர், எல்லோருக்கும் நடந்ததுதான் என அவருக்கு நன்கு தெரியும். அத்தோடு என்னை போலவே குப்புற படுத்து கிடந்து இந்த பெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒரு தூசு கூட இல்லை என அடிக்கடி உணர்பவர் ஓணாண்டி. ஆகவே இந்த சப்ப மேட்டரை …
-
-
- 10 replies
- 642 views
- 1 follower
-
-
ஓயும் ஊசல் ------------------- என்னைக் கண்டவுடன் அது இப்ப எச்சரிக்கையாவதில்லை மெதுவாக தலையை உயர்த்தி நேராக என் கண்களை பார்க்கின்றது கனிவும் அமைதியும் அதன் கண்களில் காலம் கொடுத்து விட்டிருக்கின்றது தெருப்பூனை ஒன்றின் ஆயுளைத் தாண்டி இன்னும் அது தெருவில் வாழ்கின்றது மெதுவாக வந்து கொஞ்சமாக சாப்பிடுகின்றது 'நீ சாப்பிட்டாயா........... எல்லோரும் நலமா........' என்று உள்ளே மெதுவாக ஒரு தடவை எட்டிப் பார்க்கின்றது ஒரே எட்டில் முருங்கையில் ஏறி கூரைக்கு அது இப்போது பாய்ந்து போவதில்லை முருங்கையையும் கூரையையும் பார்த்து விட்டு நிலத்தில் நடந்து போகின்றது அது இப்ப எந்தப் பறவையையும் பிடிக்க பதுங்குவதும் இல்லை எங்கோ போய் ஓய்ந்து அன்றைய நாளை முடிக்கின்றது நாளை மீண்டும் வரும் அந்த…
-
-
- 9 replies
- 363 views
-
-
ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" & "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] "ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" "ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே ஈரத்தாவணியிலே இடுப்புக் காட்டி வதைப்பவளே பரந்த பண்பொழுகும் செம்பவள திருமேனியே! எந்தை பூவையே தேன்சிந்தும் வஞ்சியே தீந்தை விழியால் மயக்கும் சுந்தரியே சிந்தை சிவக்க மகிழ்கிறேன் உன்னழகில்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................... "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] "வாசிப்பு உங்கள் அறிவை வளர்க்கட்டும் வளர்க்கும் அறிவு பண்பு கொடுக்கட்டும் கொடுக்கும் பண்பு மனிதம் நேசிக்கட்டும் நேசிக்கும் மனிதர்கள் தர்மம் காக்கட்டும் காக்கும் தலைவர்கள் நீத…
-
- 0 replies
- 199 views
-
-
கண் கண்ட தெய்வம் ---------------------------------- வரிசை நீண்டு உள் வாசலைத் தாண்டி வெளிவரை வந்திருந்தது. நான் வருவதற்கு கொஞ்சம் சுணங்கிவிட்டது. வேறு வழி இல்லை, இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது, வரிசையில் நின்று கடமையை முடித்து விட்டே போவோம் என்று வரிசையின் முடிவில் நின்றேன். வீட்டுக்கு போய் செய்வதற்கும் வேலைகள் என்றும் ஏதும் இல்லை. தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு அலைவரிசையில் முன்னரே பார்த்த, பிடித்த படம் ஏதாவது ஓடினால், அதை மீண்டும் பார்க்கலாம், அவ்வளவுதான். இப்பொழுது எல்லாம் புதிதாக எந்தப் படத்தையும் பார்ப்பதற்கு பொறுமை இல்லை. மனைவி இருந்திருந்தால் சிவராத்திரிக்கு எப்போதோ கோவிலுக்கு வந்திருப்பார். பின்னர் 'நீங்கள் இப்ப வரலாம்...........' என்று ஒரு செய்தியை கோவிலில் இருந்து …
-
-
- 34 replies
- 1.4k views
-
-
கர்ண பரம்பரையின் கனவு ----------------------------------------- பொழுது சாய்ந்து விட்டது போதும் விளையாடியது உள்ளே வா............. என்று இழுத்து வைத்துக் கொள்ளும் அம்மா ஏன் தான் இது எப்படி தான் இது ஒவ்வொரு நாளும் சாய்கின்றது என்று நான் விடாமல் நச்சரிக்க அதுவும் தூங்கத்தானே வேண்டும் விடிய எழும்பி வரும் வா........... என்றார் எங்கே அதன் வீடு என்றேன் அந்தப் பக்கம் என்று காலுக்கு கீழே சுட்டினார் அம்மா ஒரு நாள் நிலத்துக்கு கீழே தூங்கப் போன சூரியனை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன் …
-
-
- 4 replies
- 411 views
-
-
காதலர் தினக் கதை ------------------------------ என் நண்பன் சொன்ன அவனின் கதை இது ஆள் அப்படி ஒன்றும் கண்டவுடன் காதலிக்க தோன்றும் புற அழகு என்றில்லை ஆனால் அவனின் அகம் நல்ல அழகு என்று அவனே சொல்லிக் கொள்வான் சொந்த இடம் பீஜிங் சோகக் கதை நடந்ததும் அங்கே தான் அங்கே ஒரு பெண் நல்ல அழகு அவர் ஊரில் பலரும் அவர் பின்னால் திரிய அவரோ நம்மாளை எப்படியோ காதலிக்க ஆரம்பித்தார் கனவா நிஜமா என்று காற்றிலே மிதந்து கொண்டிருந்தான் நம்மாள் அடுத்து வந்த காதலர் தினத்தில் நம்மாள் ஒரு பூங்கொத்து கொடுத்தார் எங்கே வாங்கிய பூங்கொத்து என்ற கேள்விக்கு …
-
-
- 16 replies
- 645 views
- 2 followers
-
-
அதிகாலைப் பொழுது ஆழ்ந்துநான் உறங்கையிலே தூக்கத்தில் மனத்திரையில் எழுந்தது காட்சியொன்று! பசும்புல் நிறங்கொண்ட பச்சைச் சேலையுடன் பல்லவன் சிற்பமொன்று என்னருகில் நின்றதுபார்! ஆசையுடன் கையிரண்டில் அள்ளி நானெடுத்தேன் வஞ்சிக் குமரியவள் வளையல்க் கையிரண்டும் மாலையாய் எந்தோளில் விழுந்தது போலுணர்ந்தேன்! அல்லிப்பூ இதழின் அழகுக் கோலத்தால் ஆசையாய் முத்தமொன்று அவளிடம் கேட்டுவிட்டேன்! துள்ளிக் குதித்திறங்கித் தூக்கத்தைக் கலைத்துவிட்டாள் கையில் மிதக்கும் கனவேயது என்றுணர்ந்தேன்!
-
- 3 replies
- 288 views
-
-
காற்றாடி - அத்தியாயம் ஒன்று ---------------------------------------------- மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையு…
-
-
- 50 replies
- 2.8k views
-
-
இந்த பாடலை கர்ணன் படத்தில் வரும் கண்டா வரச்சொலுங்க பாடல் மெட்டில் பாடவும். கண்டா வரச் சொல்லுங்க மாடி வீட்டில் பிறந்த புள்ள செல்வத்துக்கு பஞ்சமில்ல மாடி வீட்டில் பிறந்த புள்ள செல்வத்துக்கு பஞ்சமில்ல நாயக்கரு பெத்த புள்ள நல்லவழி சொன்ன புள்ள கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க ********* அரசாங்கம், பள்ளிகூடம் அத்தனையும் மனுவின் வசம் அரசாங்கம், பள்ளிகூடம் அத்தனையும் மனுவின் வசம் தடி கொண்டு அடிச்சான் பாரு தகர்ந்து போச்சு நூலின் பலம் கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க ********* ஊரெல்லாம் கோயிலப்பா போக வழி இல்லையப்பா ஊரெல்லாம் கோயிலப்பா போக வ…
-
-
- 16 replies
- 789 views
-
-
குறள்மொழி இன்பம் / "குறள் 1265" [நீங்குமென் மென்றோள் பசப்பு] "அரிவை என்னுடன் இன்பம் பொழியாமல் பிரிந்து போகும் அன்புக் காதலனே புரிதல் உனக்கு சொற்பமும் இல்லையோ?" "தெரிவை இவளின் வளையல் கழலுதே வரிகளாய் தோலில் பசப்பு வாட்டுதே கரிய உள்ளம் படைத்தவன் நீயோ?" "ஆதவனைக் கண்டு மலர் மலரும் நாதனைப் பார்த்தால் பெண் பூரிக்கும் இதனையும் நான் சொல்ல வேண்டுமோ?" "மதியைக் கண்டால் மனம் குளிரும் மங்கை எனக்கோ நீயே திங்கள் மனையாளனே காதல் ஒளி வீசாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 177 views
-
-
கூடுவேம் என்பது அவா / குறள்1310 ஊடல் காட்டுவது அழகின் வடிவமே ஆடல் கலையின் ஒரு முத்திரையே வாட விடாமல் அருகில் இருந்தே மடவரல் பெண்ணைத் தேற்றினால் என்ன? கூடல் இல்லா இன்பம் உண்டா பாடல் தராத இசை இருக்கா தேட வைத்து கண்ணீர் வரவழைக்காமல் மடந்தை நெஞ்சுடன் இணைந்தால் என்ன? தேடல் கொண்டு உள்ளம் அறிந்து உடல் வனப்பை பார்த்து மகிழ்ந்து அடக்கம் தூவும் நாணம் அகற்றி ஆடவள் மனதில் குடிகொண்டு வாழ்ந்தாலென்ன? கூடுவேம் என்பது அவாவின் வெளிப்பாடு நாடும் ஆசைக்கும் வடிகால் அதுவே கூடு போட்டு அதைச் சிறைவைக்காமல் கேடுவிளைக்கும் பொய்க் கோபம் அழிந்தாலென்ன? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 200 views
-
-
உலகில் அடக்குமுறைகளுக்கு எதிராக, சுரண்டல்களுக்கு எதிராக விடுதலை வேண்டி போராடும் மக்களுக்கு எந்த ஆதிக்கவாதிகளிடமிருந்து உண்மையான ஆதரவு கிடைப்பதில்லை. போராடும் மக்களிடமிருந்தே எதையாவது பறித்து எடுக்கலாம் என்ற சுயநலன்களே ஆதரவு என்று வரும் ஆதிக்கவாதிகளின் உள்நோக்கமாக இருக்கும். கைகள் விலங்குகளால் கட்டப்பட்டிருப்பவர்கள் மட்டுமே ஒருவருக்கு ஒருவர் இதயசுத்தியுடன் கூடிய ஆதரவைக் காட்டமுடியும். என்னுடையது போராட்டம், உன்னுடையது கோமாளித்தனம் என்று அவர்களில் ஒருவர் இன்னொருவரை ஏளனம் செய்தால், ஏளனம் செய்யும் அந்த ஒருவரின் போராட்டமே போலியாகி, அர்த்தம் இழந்து விடுகின்றதல்லவா. ***************************************** கைவிலங்குகள் ------------------------- என் மண்ணிற்காக என் விலங்கை உட…
-
-
- 8 replies
- 665 views
-