யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
யாழ் இணையத்தில் இணைந்துள்ளேன். வணக்கம் நண்பர்களே!
-
- 30 replies
- 2.6k views
-
-
யாழில் இணைந்துகொண்டமை மகிழ்ச்சி. எம்மைபற்றிய அறிமுகம்: செங்கொடி வெளியீட்டு நடுவம் (SENGODI PRODUCTION CENTER) சார்பில் தமிழ் மொழி, தமிழர் பெருமை மற்றும் தமிழ்த் தேசிய கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகங்கள், ஆவணப்படம், குறும்படம் மற்றும் திரைப்படம் என்று படைப்புகளை தயாரித்து வழங்கி வருகிறோம். கலைப் படைப்புகள் மூலம் தமிழர் நலன் அரசியலை எல்லோர்க்கும் எல்லாத் தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும் எளிய பணியை செய்கிறது, எங்களின் செங்கொடி வெளியீட்டு நடுவம். நன்றி.
-
- 11 replies
- 863 views
-
-
யாழில் இணைந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
-
- 37 replies
- 2.8k views
-
-
எப்பிடி ஆக்கங்களை ஆரம்பிப்பது என்று யாரும் விளக்கம் தரமுடியுமா ? எனது சிறு நினைவு குறிப்பை இணைக்க முடியுமா யாழ் இந்துவின் பெருந்தன்மை கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்த காலங்கள் 1990 நடந்த சம்பவம் ஒன்று நினைவில். இந்தியன் இராணுவ கால கட்டத்தின் பின் கிரிகெட் 19 வயது அணி சிரமத்தின் மத்தியில் மீளமைக்கப்பட்டது. பல வீரர்கள் குடாவை விட்டு பிரிந்தோ பறந்தோ சென்ற காலங்கள். தயாளன் அண்ணை அவரகள் சிரமப்பட்டு ஒரு அணியை ஒழுங்கு செயதார். அணிக்கான உபகரணங்கள் தேடி எடுக்கப்பட்டன. பல மிகவும் பாவனைக்கு உபயோகமற்றதாக இருந்தது. அத்துடன் பல காணமல் களவு போய்விடது. இன்றுவரை நினைத்ததுண்டு அந்த கனமான துடுப்பாட்ட உபகரணங்கள் எந்த வகையில் அவர்களுக்கு உபயோகபட்டிருக்கும் ? இருந்த உபகரணங்களை வைத்து ப…
-
- 23 replies
- 1.6k views
-
-
-
யாழ் கள உறவுகளுக்கு சுபிதாவின் அன்பு வணக்கங்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நீண்ட கால இடைவெளியின் பின்பு உங்கள் அனைவருடனும் மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் .என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளுங்கள் .
-
- 58 replies
- 4.4k views
-
-
-
சிலகால வெளிகளுக்குப் பின் மீண்டும் யாழில் கள உறவுகள் அனைவரையும் சந்திப்பதில் மனமகிழ்ச்சி காரணம் பல உள களத்தினைக் கடந்து செல்ல ஆயினும் இது யாழ்க்களம் அல்லவா கண்டும் காணாது செல்ல அமைந்த களமா இது? விருப்பு வெறுப்புக்கு அப்பால் நட்பும் நயமான கருத்தும் தரும் களம் அல்லவா கடந்து போக முடியவில்லை தொடர்ந்தும் பயணிப்போம் அறியத்தராமல் சென்று உங்களை அவதிக்குள்ளாக்கியிருந்தால் மன்னிக்கவும்
-
- 20 replies
- 1.6k views
-
-
எல்லோருக்கும் முட்டாள்கள் தின நழ்வாழ்த்துகள் தவறாக எடுத்து கொள்ள கூடாது..
-
- 12 replies
- 1k views
-
-
-
வணக்கம்-/\- , என் இனிய யாழ் இணைய கருத்துக்கள ஜம்பவான்களே வணக்கம், நீண்ட நாளாய் இந்தப்பக்கம் வரமுடியல்லை, வேலை+நோய்= ஓய்வு, நீங்க எல்லோரும் நலமா? என்னை மறந்திட்டீங்களா? (ஆமா இவரு பெரிய VIP டேய் டேய்) எல்லோருக்கும் ஒரு கும்பிடு தொடர்ந்து இணைந்து இருப்போம்...
-
- 12 replies
- 892 views
-
-
எல்லாருக்கும் ஒரு கும்பிடுங்கோ நான் பரியாரி யாழில் கால் வைக்கிறேன் கொஞ்ச நாளைக்குப் பாதையைக் காட்டுங்கோ பிறகு உங்களுக்கு ஏதும் பிரச்சனை எண்டால் பரிகாரம் செய்வேன்
-
- 23 replies
- 1.5k views
-
-
-
-
எல்லாருக்கும் வணக்கம் நானு அஞ்சலை வந்திருக்கேன்.. உங்களோட ஏரியாப்போல நிறைய வலைப்பூக்கள்ல உலாத்தித் திரிவேன் இங்கிட்டு ஒண்ணு இருக்கின்னு எப்பவோ தெரியும் ஆனாப்பாருங்களேன் இப்பத்தான் இந்தப்பக்கம் எட்டிப்பாக்கத் தோணிச்சு. இங்கின நிறைய ஆளுங்கள் எனக்கு ஏலவே வலைவெளில சினேகக்காரங்க...அவங்கல்லாம் கதைக்கறப்ப யாழ் யாழ்ன்னு பேசிவாங்கபோல சரி இங்கிட்டும் வந்து நாம பேசலாமின்னு வந்திட்டேங்க... என்னைய உங்களுக்குப் புடிச்சிருக்கா? புடிச்சிருந்தா உன்னையும் உள்ளாற கூப்பிடுறது..என்ன நான் சொல்றது...
-
- 40 replies
- 2.4k views
-
-
-
வணக்கம் நண்பர்களே, எனது பெயர் நிரோஷன். திருகோணமலையில் பிறந்து, இன்று ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறேன். சிறு வயதில் இருந்து எனக்கு அறிவியல் என்றாலே மிகவும் பிடிக்கும். இயற்கை அறிவியல், வானியல், சமூக அறிவியல், நடத்தை அறிவியல், எதிர்கால அறிவியல் மற்றும் தொழினுட்பம் போன்ற அனைத்திலுமே இன்று வரை எனது முழுமையான கவனமும், காந்தம் போல் இழுக்கப் படுகின்றது.
-
- 18 replies
- 1.6k views
-
-
-
வணக்கம், நான் இத்தளத்திற்கு புதியதாய் பிறந்த குழந்தை தான். ஆனாலும் நான் அறிந்த ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றும், தேடுவார்க்கு பலனாக அமையட்டும் என்பதற்காக இப்பதிவினைச் செய்கிறேன். ஆன்லைன் ஜாப் என்றாலே ஓடி ஒதுங்க வேண்டிய காலம் போய், சரியாக பணியினைச் செய்தால் உண்மையாக பணம் கிடைக்கும் என்று பலர் ஆதாரங்களோடு நம்மை உசுப்பேத்திக் கொண்டிருக்க, இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஏமாற்றும் கூட்டமும் அழைவதால், எளிதாக இவர்கள் வீசும் பகட்டான உத்ரவாத வலையில் சிக்கி ஏமாந்தவர்கள் பலர். அதற்காக உண்மையான ஆன்லைன் ஜாப் வழங்கும் தளங்களில் பணி செய்து பணம் பெற நாம் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? ஆம், உண்மையாக பணம் வழங்கம் ஆன்லைன் ஜாப் தளங்கள், ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்றல்ல...பல தளங்கள் இ…
-
- 5 replies
- 1.3k views
-
-
உங்கள் அனைவரிற்கும் அன்பு வணக்கங்கள், சசி_வர்ணம் இவன். தமிழ் ஆர்வம் கொண்டவன், தேசியம் பற்றிய சிந்தனை கொண்டவன், இசையை நேசிப்பவன், இணைய தளத்தில் சந்தித்து காதலித்து திருமணம் புறிந்தவன்.. ஆதலினால் 3 அழகிய குழந்தைகளுக்கு தகப்பன். சுமார் 5 ஆண்டுகளாக யாழ் களத்தில் உங்கள் அற்புத கருத்துகளையும் , சிலர் அதி மேதாவி திரிப்புகளையும் வாசித்து வருபவன். உங்கள் கருத்து வளையில் எதோ ஒரு வகையில் என்றோ இணைந்தவன். என்றென்றும் தமிழுடன்.. சசி_வர்ணம்
-
- 25 replies
- 2.1k views
-
-
வாழ்க தமிழ் தமிழோடு பழகி தமிழோடு விளையாட ஒரு சந்தர்ப்பம் தந்தமைக்கு நன்றி .. கறுப்பு தமிழன்
-
- 21 replies
- 1.4k views
-
-
வணக்கம் யாழ் உறுப்பினர்களே நான் தான் வழிகாட்டி. எம்மினத்தின் நிலையை எண்ணி நித்தம் கவலைப்பட்டு ஒன்றும் செய்யாது தினமும் செய்திகள் வாசிப்பது அரட்டை அடிப்பதுவுமா எம்வாழ்க்கை? என்ன செய்யலாம்?
-
- 44 replies
- 3.8k views
-
-
-
உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!! அனந்தி சசிதரன் வடமாகாணசபை உறுப்பினர்
-
- 108 replies
- 10.6k views
-
-