யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
இனிய பொழுது பகுதியில் உள்ள கருத்துக்களை சென்று வாசிக்க முடியாமல் இருக்கிறது. ஆனால் மற்றைய பகுதிகளில் கருத்துக்கள் வாசிக்கக் கூடியதாகா இருக்கிறது.
-
- 4 replies
- 1.5k views
-
-
யாழ் களத்தின் நிர்வாகிகள் யார் யார்? ஏதாவது பிரச்சனை என்றால் யாரோடு பேச வேண்டும்? எப்படி தொடர்பு கொள்வது? திரை மறைவில் விளையாட நான் விரும்பவில்லை? பதில் தேவை?
-
- 19 replies
- 3.1k views
-
-
கோமாளி தமிழ் சொல்லா???? மரியாதையாக ஒருவரை அழைக்கும் சொல்லா??? விபரமானவர்கள் விளக்கம் தரவும்.
-
- 18 replies
- 4.5k views
-
-
ஐ நா மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக கேட்கப்பட்ட கேள்விகளும் கேள்வி கேட்ட நாடுகளும் கனடா: 1. இலங்கை மனித நேய பணியாளர்களை எப்படி பாதுகாக்கின்றது? (அக்சன் பெய்ம் மூதூர் படுகொலை, மறைமுக கேள்வி) 2. ஏன் மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் நிறுவ அனுமதி தரப்படவில்லை? 3. சிறார்களை படையில் சேர்க்கும் பிள்ளையான் குழுவுடன் அரசு சேர்ந்து இருக்கிறது? சிறார்களை படையில் சேர்வதை இலங்கை எப்படி தடுக்கபொகிறது? 4.கிழக்கில் ஆயுத குழுக்களின் ஆயுதங்கள் எப்பொது களையபட போகின்றன? டென்மார்க் 1. ஏன் மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் நிறுவ அனுமதி தரப்படவில்லை? 2. ஏன் ஊடக சுதந்திரம் இலங்கையில் மோசமாக காணப்படுகின்றது? யேர்மனி 1. இலங்கை ஏன் சமா…
-
- 0 replies
- 913 views
-
-
ஈழத்து ஆங்கில கவிதைகள் ஈழத்து தமிழ் எழுத்தாளர்/ புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்கள் யாரும் ஆங்கிலத்தில் கவிதைகளை எழுதி புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்களா? அல்லது ஈழத்து எழுத்தாளர்களது கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறனவா? தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி
-
- 5 replies
- 2.5k views
-
-
அன்பின் இனையவன் அண்ணா எதற்காக எனது கருத்துக்கள் நீக்கப்பட்டது சொன்னால் நல்லம் திருத்தி எழுத உதவியாஇருக்கும்.... ஹிஸ்புல்லா மிரட்டினார் என்ற தலைப்பிற்கு எழுதியது....
-
- 11 replies
- 2.4k views
-
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், யாழ் இணையத்தில யாழ் முரசம் எண்டுற பகுதியில கருத்துக்களில் மாற்றம் எண்டுற பகுதியில மாற்றங்கள் செய்யப்படுகின்ற கருத்துக்கள் பற்றி அறிவிக்கப்படுகிது. இதுமாதிரி உறவோசை பகுதியில மாற்றப்படவேண்டிய கருத்துக்கள் எண்டு... நாங்கள் தவறாக நினைக்கின்ற கருத்துக்களை - அது யார் எழுதி இருந்தாலும் குவோட் மூலம் சுட்டிக்காட்டுறதுக்கு ஒரு பகுதி ஆரம்பிக்கிறது பற்றி என்ன நினைக்கிறீங்கள்? அதாவது தெருவில நிக்கிற நாங்களே எங்கட பிரச்சனைகளை புரிந்துணர்வுடன் தீர்த்துக்கொள்ளது பற்றி? உதாரணமா.. நான் ஒண்டு பிழையாக எழுதினால்.. மற்றைய கள உறவுகள் யாராவது அதை - அந்தக் கருத்தை குவோட் போட்டு சுட்டிக்காட்டும்போது நான் எனது கருத்தை மீள் பரிசீலனை செய்து திர…
-
- 26 replies
- 4.3k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நான் யாழ் இணையத்தில் சேர்ந்து சுமார் ஒரு வருடமும் நான்கு மாதங்களும்தான் ஆகின்றது. எனவே, எனக்கு யாழ் நிருவாகம்பற்றி அதிகம் தெரியாது.. உங்கள் யாருக்காவது கீழ்வரும் பதில்களுக்கு பதில் தெரிந்தால் அறியத்தாருங்கள். 1. யாழ் நிருவாகம் என்று கூறப்படுகின்றது. இந்த நிருவாகத்தில் யார் யார் அடங்கி இருக்கின்றார்கள்? 2. யாழ் நிருவாகம் என்பது எதைக் குறிக்கின்றது? 3. யாழ் நிருவாகம் சொல்லும் விதிகள் என்று கூறப்படுகின்றது. இந்தவிதிகளை உருவாக்குவது யார்? தனிநபரா? அல்லது ஒரு குழுவா? 4. யாழ் இணையத்தின் பெறுமதி தற்போது $100,000 ற்கு மேல் தேறும் என்று இளைஞன் அவர்கள் கண்டுபிடித்து சொல்லி இருக்கின்றார். அப்படியாயின் இதன் சொந்தக்காரன் யார்? அல்லது சொந்…
-
- 23 replies
- 3.6k views
-
-
வெற்றிகரமாக யாழை 9 வருடமாக இயக்கத் தெரிந்தவர்களுக்கு ஒவ்வொருவனும் அறிவுரை கூற வெளிக்கிட்டால், வாறவன் போறவன் எல்லாம் எனி புத்தி சொல்ல வெளிக்கிடுவான். எங்கே சான்ஸ் கிடைக்கும் என்று திரிகின்றார்கள். இப்படி வக்காலாத்து வாங்கியவருக்கு யாழ்களம் அடிச்சுதே ஆப்பு அதுதான் பெரும் துன்பம். ஆதாரம்்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=317919 முழுவிவாதம்்: http://www.yarl.com/forum3/index.php?showt...=25491&st=0
-
- 5 replies
- 1.5k views
-
-
வேறொரு விடயமாய் இணையத்தை மேய்ந்ததில், இணையத்தளங்களின் இன்றைய பெறுமதி பற்றி பார்க்க நேர்ந்தது. எனக்கு தெரிந்த ஓரளவு பிரபலமான, அதிக வாசகர்களைக் கொண்டுள்ள தமிழ் இணையத்தளங்களின் பெறுமதி சிலவற்றை கீழே இணைக்கிறேன். யாழ் இணையம்: # இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $114588.1 # Daily Pageview : 51745 # Daily Ads Revenue : $156.97 புதினம் (செய்தித் தளம்): # இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $94301.4 # Daily Pageview : 42392 # Daily Ads Revenue : $129.18 தமிழ்நாதம்: # இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $92534.8 # Daily Pageview : 41587 # Daily Ads Revenue : $126.76 தமிழ்மணம் (வலைப்பதிவுத் திரட்டி): # இன்றைய (இணையப்) பெறும…
-
- 12 replies
- 2.6k views
-
-
யாழ் கள உறவுகள், மற்றும் வாசகர்களிற்கு வணக்கம், யாழ் இணையம் அண்மையில் தனது பத்தாவது அகவையைக் கொண்டாடி இருந்தது. இது மகிழ்ச்சிக்குரிய விடயம். இதற்காக யாழ் இணையத்தின் உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமானவர்களிற்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும்.. அண்மையில் யாழ் இணையத்தின் முகப்பு மாற்றப்பட்டு.. தோற்றம், அமைப்பு மறுசீரமைக்கப்பட்டு பொழிவுடன் திகழ்கின்றது. அழகுடன் ஜொலிக்கின்றது. இதற்காக இரவு, பகலாக உழைத்தவர்களிற்கும் பாராட்டுக்களும், நன்றிகளும்.. ஆனால்.. யாழ் இணையத்தின் அடிப்படை விசயமான கருத்தாடல் தளத்தில் உள்ள பிரச்சனைகளும்... பிடிபாடுகளும், இழுபறிகளும்... முன்புபோலவே எதுவித மாற்றமும் இன்றி அப்படியே இர…
-
- 39 replies
- 6k views
-
-
-
அன்பின் உறவுகளே இங்குதான் எனது முதல்பதிவுனுாடாக உறவுகளுடன் எனது உறவை ஆரம்பித்தேன். இப்பொது விடை பெறுவதற்கும் இந்த பகுதியையே தேர்வு செய்கின்றேன். ***
-
- 37 replies
- 5.4k views
-
-
-
இக்களத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அய்யா பெரியாரின் கருத்துக்களை பதிக்கும் பகுதி எது என தெரிவித்தால் நல்லது. உதவுவீர்களா?
-
- 1 reply
- 1k views
-
-
இங்கு இணைக்கப்படும் செய்திகளுக்கு ஆதாரம் கேட்கின்ற நிர்வாகம் இங்கு ஒருவர் இணைக்கும் செய்திக்கு ஏன் ஆதாரம் கேட்க தயங்குகின்றது.? அந்த நபர் புத்திசாலித்தனமாக தன்னுடைய இணையத்தில் செய்திகளை இணைத்துவிட்டு அந்த இணைப்பை களத்தில் இணைக்கின்றார். அந்த செய்திகளுக்கு தன்னுடைய இணையத்தில் ஆதாரமாக எதையும் சொல்வதில்லை. களத்தில் பல செய்திகளுக்கு ஆதாரமில்லை என்று அகற்றிய நிர்வாகம் இதை எப்படி அனுமதிக்கின்றது. அந்த நபர் வேண்டப்பட்டவரா? ஆதாரமில்லாத செய்திகளை யாழில் இணைக்கும் அந்த புதிய நபர் பலே கில்லாடிதான். சிலவேளை மட்...............தினரோ?
-
- 11 replies
- 2.6k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், யாழில மற்றவர்களை நக்கல் அடிப்பது - நையாண்டி செய்வது எப்படி எண்டு எனக்கு கொஞ்சம் சொல்லித்தாங்கோ தெரிஞ்ச ஆக்கள். பெரிய, பெரிய மேதாவிகள், அறிவாளிகள், தேசியவாதிகள், தூய்மையானவர்கள், கெட்டிக்காரர்கள் எல்லாரும் இஞ்ச இருக்கிறீங்கள் எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்கோ... எனக்கும் கொஞ்சம் தெரியும். ஆனால் உங்களில சிலரிண்ட ரேஞ்சுக்கு அடிக்கிற அளவுக்கு எனக்கு அறிவு காணாது. நிறைய தமிழ் சினிமா படங்கள் பார்த்தால் நக்கல் அடிப்பதில எங்கட அறிவை பெருக்கிக்கொள்ளலாமோ? இல்லாட்டி நிறைய இங்கிலிஸ் படங்கள் பார்த்தால் உதவியாய் இருக்குமோ? தெரிஞ்ச ஆக்கள் கொஞ்சம் சொல்லுங்கோ. உங்கள் நக்கல்களிற்கு நன்றி!
-
- 20 replies
- 4k views
-
-
எனக்கும் அனுமதி தாங்கோவன் கருத்துக்களை இனைக்கவே ஏலாமல்கிடக்கிறது
-
- 3 replies
- 1.3k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=22936 இவ்வளவும் சொன்னனீங்கள்.. அவ்வாறு யாழ் உறவோசைப் பகுதியில் எழுதப்படுவன உடனே கடாசப்படும் என்பதையும் ஏன் சேர்க்கவில்லை....
-
- 1 reply
- 847 views
-
-
அண்ணாமார்களே என்னன்டா இந்த வீடியோ எப்படி களத்தில இனைக்கிறது இத ஒருக்கா தெரிஞ்ச ஆக்கள் சொல்லுவியளோ
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ்க் களம் அகவை 10 அய் முன்னிட்டு மோகன் அண்ணாவைக் கேளுங்கள் சிறப்புப் பேட்டி. உங்கள் கேள்விகள் யாழ்க் களம் சம்பந்தமாகவும் சுவாரசியமானவையாகவும் கடந்த பத்தாண்டுகளின் அனுபவமாகவும் இருக்கட்டும்.கேள்விகள் தொகுக்கப்பட்டு திரு.மோகன் அவர்களுடனான ஒரு பேட்டியாக வெளியிடப்படும். தனிப்பட்ட விடயங்களைத் தவிர்த்து புதியவர்களுக்கு யாழ்க் களத்தை அறிமுகம் செய்வதாகவும் ,யாழ்க் களம் நிகழ்த்திய முன் நோடிகரமான இணைய அறிமுகங்கள் பற்றியதாகவும் இருக்கட்டும், கிழே நான் கேட்க விரும்பும் 10 கேள்விகள் . 1)யாழ் களத்தைத் தொடங்க வேண்டும் என்கிற முனைப்பு உங்களிடம் எப்படி ஏற்பட்டது?அதற்கான தொழில் நுட்பம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது? 2)யாழ்க் களத்தை ஏன் தொடங்கினோம் என்று நீங்க…
-
- 21 replies
- 3.6k views
-
-
10 ம் ஆண்டில் யாழ் இணையம். முகப்பு புதிய வடிவில் மெருகுடன் திகழ்கிறது. வாழ்த்துக்கள்................
-
- 40 replies
- 5.1k views
-
-
-
கள விதிகளின்படி களத்தில் ஆங்கிலத்தில் தலைப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. களத்தில் ஆங்கிலத்தில் இணைக்கப்படும் விடயங்களுக்கு தமிழல் சிறிய விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்பது விதி. தேவையில்லாதவற்றுக்கு கத்தரி போடும் நீங்கள் ஏன் இதை கவனத்தில் கொள்ள தவறுகின்றீர்கள்
-
- 6 replies
- 1.8k views
-