யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
அன்பார்ந்த யாழ் கள உறுப்பினர்களே... வாசகர்களே.... உங்களை வணங்குகிறேன். மாப்பிளை அவர்களால் ஏற்படுத்தப்பட்ட "தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?" எனவே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் பட்சத்தில்..." எனும் தலைப்பிலான வாதத்தை 957 பார்வையாளர்கள் இதுவரையில் பார்வையிட்ட போதும் வெறும் 21 உறுப்பினர்களே தங்கள் கருத்துக்ககளை அந்த இடத்திலே முன்வைத்துள்ளனர். ஏன் மிகுதி உறுப்பினர்கள் இதுவரை தங்கள் பதில்களை பதியவில்லை. காரணம் ?
-
- 18 replies
- 2.8k views
-
-
யாழ்களத்தில்அண்மைக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்்திற்கு தாம் ஆதரவு சேர்க்கிறோம் அல்லது மக்களை விழிப்படையச் செய்கிறோம் என்னும் பெயரில் போராட்டத்தை நடத்திச் செல்ல உதவிசெய்து வரும் மக்கள் மத்தியில் விசமப் பிரச்சாரங்களும் அம்மக்களின் மனங்களை விரக்தியில் தள்ளிவிடும் கருத்துக்களும் பதியப்பட்டு வருகின்றன. சில தலைப்புக்்களில் நேரடியாக யாழ் களத்தின் மீதான நேரடியான கேள்விகளுக்்குமே யாழ்கள நிர்வாகம் மெளனத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இதன் அர்த்தம் யாழ்கள நிர்வாகத்தவர்கள் யாழ்களத்தில் தம் கவனத்தைச் செலுத்தாது இருப்பதா அன்றி அதன் மூலம் விளம்பரத்தை எதிர்பார்த்்தா? இதற்காவது பதில் தருவார்களா? தேசியப் போராட்டத்திற்கு உதவி செய்வது என்பது ஒவ்வொருவரதும் கடமையாகும்.கடமை மட…
-
- 6 replies
- 1.5k views
-
-
யாழ்களத்தை ஒரு கருத்துக்களம் என்று சொல்கிறோம். இங்கு நாங்கள் ஏதாவது ஒரு விடயத்தை உருப்படியாக அலசியிருக்கிறோமா? அவை எவை? இணைப்பைத் தாருங்கள். உண்மையில் இங்கு நாங்கள் என்ன செய்கிறோம்? மற்ற ஊடகங்கள் எல்லாம் சரியில்லை என்று சொல்கிறோமே நாங்கள் எப்படி (நாங்கள் யாரும் முழுநேர ஊடகவியலாளர் இல்லை என்றபோதும்)? தாயகத்தில் கொலைக்களத்தில் காத்திருக்கும் மக்களைப்பற்றி நாங்கள் உண்மையில் வருந்துகிறோமா? அதைப்பற்றி இங்கு என்ன செய்தோம், செய்கிறோம்? நாங்கள் இதுவரை செய்த செயற்பாடுகளின் பலன் என்ன (அப்படி உண்டானால்)? எமது எதிர்கால இலக்கு என்ன (உதாரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் என்னத்தை செய்து முடிக்க விரும்புகிறோம்)? தயவு செய்து பதில் சொல்லுங்கள்! மேலுள்ள வற்றை அப்படியே…
-
- 13 replies
- 2.8k views
-
-
-
யாழில் நான் இணைக்கின்ற ஜரோப்பிய அவலம் நாடகதொடரால் புதியதொரு சர்ச்சை உருவாகியுள்ளது சர்ச்சை எனக்கொன்றும் புதியதல்ல ஆனால் இது வேறுவிதமான சர்ச்சை எனது இரண்டாவது அங்கத்தில் ஒரு நாற்பது வயது காரர் ஆடம்பரமாக மண்டபம் எடுத்து பிறந்தநாள் கொண்டாடுவது போல எழுதியிருந்தேன். யெர்மனியில் அந்த நாடகத்தை யாழினுடாக கேட்டஒருவர் அதில் குரல் குடுத்திருந்த ஒரு குழந்தையின் வீட்டிற்கு தொலை பேசி எடுத்து அந்த வீட்டு காரரை மிரட்டியுள்ளார்.காரணம் அவர் நாற்பதாவது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியிரந்தாராம். பிறந்தநாள் கொண்டாடுவது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் நாற்பதிலும் கொண்டாடலாம்.எண்பதிலும் கேக்கை வெட்டி கட்டுப்பல்லால் கடித்து சாப்பிடுவது அவரவர் சுதந்திரம் ஆனால் எங்கள் குழந்தைகள் உரில…
-
- 50 replies
- 5.9k views
-
-
அரட்டைப் பகுதி நல்ல முடிவு. சிலர் அதிக பதிவுகளை பதித்து சாதனை செய்வதாக நினைத்து எல்லா இடத்திலும் குப்பைக்ளைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள
-
- 12 replies
- 2.1k views
-
-
மோகன் அண்ணா அவர்களே இருவரும் ஒரே பதிவைத்தான் ஒட்டியுள்ளோம் நான் அவரை விட 1 நிமிடம் முன்னாடி ஒட்டியுள்ளேன் ஆனலும் எனது பதிவை ரீசைக்கிள்பின் இல் போடப் பட்டுள்ளது, இதற்காண காரனத்தை அறியலாம.........?
-
- 2 replies
- 1.4k views
-
-
கூடிய எழுத்துள்ள சொற்களை எழுதும்போது அது உடைந்துதெரிகிறது உதாரணம்: அறிமுகப்படுத்தப்பட்டிருக்க
-
- 7 replies
- 1.7k views
-
-
யாழ் கள தமிழ் அறிஞர்களிற்கு வணக்கம்! தங்களிடம் ஒழுங்கான தமிழில் எழுதுவதற்கு சில உதவிக்குறிப்புக்களை நான் எதிர் பார்த்து நிற்கின்றேன். எனது சந்தேகங்களை கேள்விகளாக, கேள்வி இலக்கத்துடன் போடுகின்றேன். உங்களுக்கு நல்ல பதில் தெரிந்தால் அதை அறியத்தந்தால் போகிற வழிக்கு உங்களுக்குப் புண்ணியமாகப் போகும். கேள்வி 01: நான் எழுதும் போது தான், கொண்டு, என்று ஆகிய சொற்பதங்களை அடிக்கடி பாவிக்கவேண்டியுள்ளது. இச்சொற்களை தவிர்த்து எழுதும் போது நான் சொல்ல வரும் கருத்தை, சொல்ல விரும்பும் வகையில் என்னால் சொல்ல முடியாமல் போகிறது. தான், கொண்டு, என்று ஆகிய சொற்பதங்களிற்கு மாற்றீடாக வேறு என்ன சொற்களை நீங்கள் பாவிக்கிறீர்கள்?
-
- 24 replies
- 4.2k views
-
-
என் கள நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது உதவி என்னவென்றால், சிங்கள தேசத்தின் வரலாற்று நூல்களான மகாவம்ஷ, தீபவம்ஷ என்ற இரு நூல்களின் தமிழ் ஆய்வு கட்டுரையை இணையதில் படித்து ரசித்தேன், அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன், அதை எந்தப் பகுதியில் போடுவதெண்று தெரியவில்லை, நீன்ட நாள் உறுப்பினர்கள் என்ற வகையில் உங்கள் உதவியை எதிர் பாக்கிண்றேன்
-
- 4 replies
- 1.4k views
-
-
அதாவது உலகம் பூராக பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு விடுதலையுணர்வு ஏற்படுத்தவேணுமென்றால் என்ன முறையை கையாளவேண்டும்?
-
- 15 replies
- 2.4k views
-
-
நான் வழமையாக ஒவ்வொரு இரவும் வன்னிமைந்தன் எழுதிய கவிதையை வாசித்து விட்டுத்தான் தூங்கச் செல்வேன். அப்போ தான் புத்துணர்ச்சியுடன் எழும்பலாம். ஆனால் அண்மைக் காலமாக அவரைக் காணவில்லை. சில துரோகிகள் அவரைத் திட்டமிட்ட துரத்தி விட்டார்கள் என அறிந்தேன். வன்னி மைந்தன் உண்மையை விளக்குவாரா..
-
- 17 replies
- 2.4k views
-
-
வன்னி மைந்தனுக்கு ஆப்பு... யாழ்கள நிர்வாகிகளால் அடுத்தடுத்து என் மீது பழிவாங்கும் நிலைகளை ஆடுத்தடுத்து தொடர்கிறது. எந்தவித முன்னறிவித்தலும் இன்றி..எழுதப்புடும் ஆக்கங்கள் முடக்கப்படுகின்றன. தொடராக என் மீது அவர்கள் தமது பலப்பிரயோகத்தை மேற்க்கொண்ட வண்ணம் உள்ளனர். இது ஒரு ஊடக தர்மதை;தை மீறும் செயலாகும் வெளிப்படையாகவே வந்து தமது கருத்துக்களை அவர்களால் வைக்க முடியாது இவ்வாறான கண்மூடித்தனமான சம்பவங்களை மேற்கொள்வது.....ஏற்று கொள்ள முடியாததும்..கண்டிக்கதக்கதும
-
- 28 replies
- 4.4k views
-
-
யாழ்கள வாசகர்களாகிய நாம் யாழ் களத்தை மெருகூட்ட ஏகமனதாக பின்வரும் பரிந்துரைகளைகளை நிர்வாகத்திற்கு முன்வைக்கின்றோம். 1) "செய்திக்களம்" என்று புதிய ஒரு களம் ஆரம்பிக்கப்படல் வேண்டும். தற்போதுள்ள தகவற்களத்திலிருந்து "செய்திகள் தமிழீழம்", "செய்திகள் உலகம்" என்பவற்றிற்குப் பதிலாக இது செயற்படும். 2) பரிந்துரைகள் செய்திக்களத்திற்கு மட்டுமே: மற்றவை தற்போதுள்ளது போலவே இயங்கலாம். 3) செய்திக்களத்தில் ஒரு குறிப்பிட்ட அங்கத்துவ நிலை உள்ளவர் மட்டுமே செய்திகளைப்போட முடியும். உதாரணமாக இவர்களின் அங்கத்துவநிலையை S1 என்போம். அப்படி போடுபவர் அதில் எதை முக்கியம் என்றோ சர்ச்சைக்குரியது, விமர்சனத்திற்குரியது, சிந்திக்கப்பட வேண்டியது விவாதத்திற்குரியவை என்ற பகுதிகளை அடையாளப்ப…
-
- 40 replies
- 6.7k views
-
-
சும்மா பொழந்து கட்டுறீங்க.........! நல்லாதான் இருக்கு.... ஆனாலும் - நெருடலாம்! அதிஸ்டம் என்பதை -உலகத்தில - சிங்களதேசத்தை விட யாரும் இதுவரை பெற்றிருக்காங்களோ? - தெரியல... அதுதாங்க ..... எந்த ஒரு நாடும் - ஒரு அரசியல் -இராணுவ-எதிரியை தன் பக்கம் - கொண்டு இருக்கும்............ சீனாவுக்கு - தாய்வான்! பாகிஸ்தானுக்கு - இந்தியா-! பங்களாதேசத்துக்கு - இந்தியா... அமெரிக்காக்கு முதல் எதிரியா - ஈரான் ...... வடகொரியாக்கு அமெ+ தென் கொரியா! பக்கத்தில இருந்தாலும் - கனடாகூட - கொஞ்சம் எதிரிதான் அமெரிக்காக்கு.... பக்கத்தில படுத்திருக்கிற - யானை - மிண்டினால் - ஏறி உளக்கிடும்னு - பேசாம இருக்காங்கப்போ!! கூட இருக்கிறவன் ............ எதிரிக்கு நண்பனா இருந…
-
- 0 replies
- 808 views
-
-
மோகன் அண்ணா தெருநாய் என்று ஒரு சொறிபிடிச்ச குட்டை நாய் வருது கவனம் கடிச்சா நிலமை மோசம் :P
-
- 8 replies
- 1.9k views
-
-
வணக்கம் மோகன் அண்ணா. நான் ஒரு புதிய கள உறுப்பினன்.என்னுடைய பெயர் மறுத்தான். எனது பெயரை தமிழில் தெரியும் படி மாற்றி விடுவீர்களா? நன்றி.
-
- 7 replies
- 1.7k views
-
-
சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என்னோடு சேர்ந்து சிந்திப்பீர்களா? வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து தான் வாழ்கிறீர்களா? அங்கே ஒருபகுதியில் கவிதை வடிவில் வடித்து விட்டிருக்கிறேன், ஆனால் உங்கள் சிந்தனை எப்படி இருக்கிறது என்று அறிய விரும்புகிறேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=17613 கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றிகண்டு விட முடியுமா? அறிவியலை அதீதமாக வளர்ப்பது தான் வாழ்வின் நோக்கமா? எந்த சமயத்தில் பிறக்கிறேனோ அது தான் என் சமயமா? சதாம் தூக்கிலிருந்து எல்லாப்பக்கமும் வன்முறை வெடித்து மனிதமே அழியபோகிறாதா... மனிதனின் சிந்தனையில் மாற்றம் தேவையா? அந்த மாற்றம் "வன்முறை" அற்றதாக வெறும் வார்த்தையளவில் இருந்தால் நிரந்தர சமாதனத்தை எட்ட முடியு…
-
- 5 replies
- 1.5k views
-
-
இப்போலாம் - ரொம்ப பாய்ச்சல்... ஊடகங்களின்மீது.... ஏனுங்க............... இடம் கிடைச்சால் -எகத்தாளம்- அப்பிடியா? வந்தாலும் வந்துது - சமாதானம் என்ற பெயரில ஒண்ணு - அதால தொடர்பாடல் துரிதகதில ஆச்சாம்..... கடுகதி நிலமைல - செய்திகள் வந்தா - கனக்க விமர்சனமோ? 4 வருடங்களுக்கு முன்பெல்லாம் - வானொலியும் ... வாரபத்திரிகையும் தானே- உங்க - தேடல் பசிக்கு தீனி போட்டுச்சு! அப்போ எல்லாம் - மௌனமாயிருந்தமோ இல்லியோ........... இப்போ மட்டும் என்னாச்சாம்? வேறவழி இருக்கல - என்னு சொல்லுவீங்களா? ஏன் இல்ல? இப்பவும் இருக்கே!! புதினம் - http://www.eelampage.com/?cm=14005 சங்கதி - http://sankathi.org/news/index.php?option=...=1&Itemi…
-
- 2 replies
- 1.1k views
-
-
குறிப்பாகத் தமிழீழம் செய்திகள் பிரிவில் ஏற்கனவே ஒருவரினால் இணைக்கப் பட்ட செய்திகள் மீண்டும் மீண்டும் வேறு உருப்பினர்களினால் இணைக்கப் படுகின்றன. இதேபோல ஒரே செய்தி இன்னுமொரு ஊடகங்களில் வரும் போது அதனை வேறு புதிய தலைப்பில் உருப்பினர்களினால் இணைக்கப் பட்டு வருகின்றன. அண்மைக்காலத்தில் அதிகளவில் இவ்வாறு இணைப்புக்கள் நடைபெறுகிறது. இணைக்கும் போது ஏற்கனவே யாழில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்து இணைத்தால் நல்லது. நேற்றும் இன்றும் இவ்வாறு இணைக்கப்பட்ட ஒரே மாதிரியான தலைப்புக்களில் சில. 1) http://www.yarl.com/forum3/index.php?showtopic=18479 http://www.yarl.com/forum3/index.php?showtopic=18487 http://www.yarl.com/forum3/index.php?showtopic=18500 2) http://www…
-
- 65 replies
- 7.5k views
-
-
செய்திகளை இணைக்க உதவி தேவை என்னால் சில இணையத்தளங்களிலிருந்து செய்திகளை எடுத்து யாழில் இணைக்க முடியவில்லை. உ+ம்- நான் புதினம் இணையத்தளத்திளிருந்து செய்தியை எடுத்து யாழில் இணைக்கும் முறை select - copy- paste ஆனால் இந்த முறையை சங்கதி இணையதளத்திலிருந்து செய்யும் பொழுது எழுத்துக்கள் எல்லாம் பெட்டி பெட்டியகவோ அல்லது வேறு வடிவிலோ வருகிறது இதற்கு என்ன காரணம். இதை எப்படி நிவர்த்தி செய்வது.தயவு செய்து யாராவது உதவி புரியுங்கள்.
-
- 3 replies
- 1.2k views
-
-
இது என் நீண்ட நாள் யோசனை இதனை இன்று இங்கு வெளியிடுகின்றேன். மோகன் அண்ணா உங்கள் கருத்தை முக்கியமாக எதிர் பார்க்கின்றேன். இங்கு நிறைய உறவுகள் இருக்கின்றார்கள் அவர்கள் ஒவ்வொரு நாளும் இங்கு வர வாய்ப்பு கிடைப்பதில்லை வரும் போது மற்ற உறவுகளிடம் நலம் விசாரிப்பதுவென்றால் வேறு ஒரு தலைப்பில் தான் விசாரிக்கிறார்கள் அதனாலை ஏன் கள உறவுகளினர்க்கு என்ற தலைப்புக்கு கீழ் நலம் புதிய ஒரு பகுதியில் களவுறவுகளை ஒவ்வொரு நாளும் நலம் விசாரித்தால் நன்று என கருதுகின்றேன். ஆனால் அதில் தேசையற்ற விசயங்களை தவிர்த்து தனியாக நலம் மட்டு விசாரிக்கனும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மற்றவர்களுடைய கருத்தையும் எதிர் பார்க்கின்றேன். நன்றி
-
- 11 replies
- 1.9k views
-
-
நடிகர் சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா படப்பிடிப்பின் போது மரணம் அடைந்ததாக செய்்திகள் இங்கு வெளியாகியிருந்தன. இது உண்மையா/ பொய்யா என அறிய இங்கு பிரசுரித்திருந்தேன். ஆனால் அந்த செய்தியையே காணவில்லை? தலைப்பு நீக்கப்பட்டிருந்தால் ஏன் எனக்கு தனிமடல் மூலம் அறிவிக்கவில்லை? தயவுசெய்து எனக்கு உடன் இதுபற்றி அறியத்தரவும்.
-
- 15 replies
- 2.2k views
-
-
-
எரோட்டிக் ஸ்டவ் என்ற பெயரில் புதிய உறுப்பினர் ஒருவர் ஒரு வீடியோ கிளிப்பை யாழ் களத்தில் போட்டிருந்தார். இது தற்போது அகற்றப்பட்டு விட்டதாக உணர்கின்றேன். எரோட்டிக் ஸ்டவ் என்ற இந்த இந்த வீடியோ கிளிப்பை பார்க்க முயற்சித்த போது எனது கணனியிலிருந்து செகியூரிட்டி வார்னிங்க் வந்தது! யாழ் கள நண்பர்களே கவனம்! இந்த "ஓ யா" வுக்குள் ஓராயிரம் வைரஸ் கிருமிகள் இருக்கக் கூடும். கணணிகளிற்கே எயிட்ஸ் தொற்றும் கலியுக காலமடா இது!
-
- 11 replies
- 2k views
-