Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுவிஸில் அகதிகளாக இடம் பெயர்ந்தவர்களில் இலங்கையர்கள் முதலிடம்! சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம் அகதி அந்தஸ்து கோரியவர்களுள் இலங்கையர்களின் எண்ணிக்கையே அதிகம் என ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்த சுமார் 27,000க்கும் அதிகமானோரில் மூன்றில் ஒரு பங்கினர் இலங்கையர்களே என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழையப் பயன்படுத்தப்பட்ட பால்கன் தரை மார்க்கத்தை கடந்த வருடம் சுவிட்சர்லாந்து அரசு மூடிவிட்டது. இதனால், உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்…

  2. அறிவுத்திறனை அதிகரிக்கும் முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு (Ayurveda Moringa Energy ) ஆயுள்வேத ஊக்கசக்தி மென்பானம் ஒன்றை ஆயுஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஈழத்தமிழரான சுதாகர் பரமேஸ்வரன் அவர்களை நிறைவேற்று பணிப்பாளராக கொண்ட இந்நிறுவனத்தின் புதிய உற்பத்தியை அறிமுகம் செய்யும் ஊடகவியலாளர் மகாநாடு கடந்த சனிக்கிழமை மாலை சூரிச் இபிஸ் மண்டபத்தில் நடைபெற்றது. ஏற்றம் என்ற மூலிகை தேனீரை தயாரித்து சுவிஸ் மக்களிடம் அறிமுகமான இந்நிறுவனத்தின் புதிய உற்பத்தியாக முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுள்வேத முருங்கை ஊக்கசக்தி மென்பானம் விரைவில் சந்தைக்கு வர உள்ளதாக சுதாகர் பரமேஸ்வரன் தெரிவித்தார். தமது முன்னைய தயாரிப்பான ஏற்றம் மூலிகை தேனீரை விநியோகம் …

    • 1 reply
    • 890 views
  3. சுவிஸில் இலங்கை தமிழ் இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு: இருவர் கைது சுவிஸில் வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாட் ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 18ஆம் திகதி குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர சேவை மையத்திற்கு கிடைத்த அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், சம்பவ இடத்திலேயே இருவரையும் கைது செய்துள்ளனர். 40 மற்றும் 54 வயதான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

  4. சுவிஸில் இலங்கைத் தமிழ் இளைஞன் மாயம்! புதன், 22 செப்டம்பர் 2010 18:33 இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் ( வயது 21) சுவிற்சலாந்தில் கடத்தப்பட்டுள்ளார். Bern மாநகரத்தில் உள்ள Verchingen பிரதேசத்தில் hamlet Lindental பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நண்பர்களுடன் வசித்து வந்த இவர் நேற்று அதிகாலை 7.00 மணியளவில் காணாமல் போய் இருக்கின்றார். இலங்கையர் இருவர் பழைய சில்வர் கார் ஒன்றில் அவரை ஏற்றிச் சென்றிருக்கின்றார்கள் என்று Bern மாநகரப் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடத்தல்காரர்களில் ஒருவர் 185 சென்ரி மீற்றர்கள் உயரம் உடையவர் என்றும் 38 வயது க்காரர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மற்றவர் 180 சென்ரி மீற்றர்கள் உயரம் உடையவர் என்றும் 35 வயதுக்காரர் என்றும் அவர…

  5. சுவிஸில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுவிட்ஸர்லாந்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த நினைவேந்தல் நிகழ்வு இன்று சுவிட்ஸர்லாந்து, பேர்ண் பாராளுமன்ற முன்றலில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பெருந்திரளான சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் தாயக தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட நாளை தமிழின அழிப்பு நாளாக இன்றைய தினம் அனுஷ்டக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.ta…

  6. சுவிஸில் உள்ள உணவகத்தில் இலங்கைத் தமிழர்கள் மோதல்! இருவர் காயம், பதினொரு பேர் கைது சனி, 23 அக்டோபர் 2010 05:08 சுவிற்சலாந்தின் பேர்ண் நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இலங்கைத் தமிழர்கள் ஒரு தொகையினரிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் அவர்களில் இருவர் காயம் அடைந்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அங்கிருந்து இலங்கைத் தமிழர்கள் பதினொரு பேரை பேர்ண் நகரப் பொலிஸார் கைது செய்துகொண்டு போனார்கள். கடந்த வியாழக்கிழமை மாலை மோதல் இடம்பெற்றிருக்கின்றது. இதில் உணவகத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. ஆரம்ப மோதலின்போதே உணவக உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். பொலிஸார் வந்து பார்த்தபோது தமிழர் ஒருவர் காயப்பட்டு இருந்தார். பொல…

  7. சுவிஸில் எரித்திரிய பிரஜைகளுக்கு இடையில் மோதல் Share Share சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் எரித்திரியா நாட்டு பிரஜைகளுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் பன்னிரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் 3 எ…

  8. சுவிஸில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞன் பிரான்ஸில் மீட்பு! சனி, 16 அக்டோபர் 2010 09:44 சுவிற்சலாந்தின் பேர்ண் மாநகரத்தில் உள்ள Verchingen பிரதேசத்தில் hamlet Lindental பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நண்பர்களுடன் வசித்து வந்தபோது கடந்த மாதம் 21 ஆம் திகதி காலையில் கடத்தப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். பெண் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒன்றின் பின்னணியில் இலங்கைத் தமிழர்கள் இருவர் இவரைத் துப்பாக்கி முனையில் காரில் ஏற்றி, கயிற்றால் கட்டி, பிரான்ஸுக்கு கொண்டு கடத்திக் கொண்டு வந்திருக்கின்றார்கள். இவரைக் கண்டுபிடிக்க சுவிற்சலாந்து, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அந்த அந்த நாட்டுப் பொலிஸார் தீவிர புலனாய்வு வி…

    • 3 replies
    • 823 views
  9. சுவிஸில் கடந்த வருடம் 600 தமிழர்கள் தஞ்சம் கோரினர் 27.02.2008 / நிருபர் குளக்கோட்டன் சுவிஸில் கடந்த வருடம் மட்டும் 600ற்கும் மேற்பட்ட தமிழர்கள் தஞ்சம் கோரியிருப்பதாக, சுவிஸ் இன்போ என்ற முன்னணி இணையத்தளம் தெரிவித்துள்ளது. அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்புபவர்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டுமென, சுவிஸின் நிருவாக நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த இரண்டு வருடங்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும், வடக்கு ? கிழக்கை சேர்ந்த தமிழர்கள் சிறீலங்காவின் தலைநகர் கொழும்பு போன்ற தென் பகுதியில் அமைதியாக வழ முடியும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே தமிழர்களின் அகதி தஞ்ச கோரிக்…

  10. சுவிஸில் கடும் மோதல்! யாழ். தமிழ் இளைஞன் கைது சுவிட்சர்லாந்தில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் Bremgarten பகுதியில் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வன்முறையாக மாறியது. இரு குழுக்களும் கடுமையாக மோதிக் கொண்டதுடன் கத்தி் குத்து வரை சென்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில், டவுன் ஹோல் சதுக்கத்துக்கு பக்கத்தில் மோதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்ட இருவரை, அயலவர்கள் மீட்டு மருத்துவமனைக்க…

  11. சுவிஸ் தமிழர் எழுச்சி போராட்டங்கள் குறித்த தகவல்களுடனான தமிழர் நட்புறவுச் சங்கத்தின் வானோலி பேட்டி மற்றும் தகவல்களை கேட்பதற்கு: http://www.zshare.net/audio/549822856e1c269a/ அல்லது http://www.radio.ajeevan.com/

    • 0 replies
    • 806 views
  12. சுவிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் விடுதலை [Friday, 2011-04-22 06:38:27] சுவிட்சர்லாந்து பொலிஸாரால் கடந்த ஜனவரி 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட சுவிஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களான குலம் என்று அழைக்கப்படும் செல்லையா குலசேகரம், அப்துல்லா என்று அழைக்கப்படும் செல்லையா ஜெயபாலன் உட்பட கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் சுவிஸ் செயற்பாட்டாளர்களாக இருந்த 10 பேர் சுவிஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் தற்போதைய விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் பொறுப்பாளரான ரகுபதி என்று அழைக்கப்படும் விஜயரத்தினம் சிவநேசன் உட்பட ஏனையோர் விசாரணையின் பின்னர் ஏற்கனவே விடுதலை செ…

  13. சுவிஸில் தமிழரை சுட்டுக்கொன்ற சக தமிழர் சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர். வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான …

  14. சுவிஸில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு 'அக்கினிப் பறவைகள்' என்ற சுவிட்சலாந்தில் செயற்படும் தமிழ் இளைஞர் அமைப்பினர் தமிழீழ அடையாள அட்டையை வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். 06.05.2018 அன்று சுவிஸ் நாட்டின் பேரண் மாநிலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு தொடர்பான விபரங்களை 'அக்கினிப் பறவைகள்' அமைப்பினர் வெளியிட்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியிருந்தார்கள். இது தொடர்பாக அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்: 01.01.2007 அன்று தமிழீழ நிர்வாகக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் …

  15. சுவிஸில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை..!! கடந்த வெள்ளிக்கிழமை சுவிஸ்லாந்தில் 22 வயது தமிழ் இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் சென்ட் கோல் (St-Gall) மாநிலத்தில் வசித்துவரும் 22 வயது சுவிஸ் பிரஜையான தமிழ் இளைஞனே இவ்வாறு மக்கள் நடமாட்டம் அதி…

    • 4 replies
    • 940 views
  16. சுவிஸில் தொடருந்தில் வீழ்ந்து யாழ். மாதகல் இளைஞன் பலி! AdminOctober 3, 2021 சுவிட்சர்லாந்து நாட்டில் தொடருந்தில் வீழ்ந்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புலம் பெயர் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . கடந்த வெள்ளிக்கிழமை தேவைநிமிர்த்தம் வெளியில் சென்ற குறித்த மாணவன் தொடருந்தில் வீழ்ந்து உயிரிழந்திருந்ததாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தொடருந்து பாதையை கடந்த சமயம் விபத்து இடம் பெற்றதா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் அந் நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட தற்போது Meilen மாநிலத்தில் வசித்து வரும் சற்குணராஜா பவீந…

  17. சுவிஸில் 22 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவையின் 21வது பொதுப்பரீட்சை இன்று நடைபெற்றது. சுவிஸில் நாடுதழுவிய அளவில் நடந்த இந்த பொதுப்பரீட்சை இன்று 58 தேர்வு மையங்களில் நடைபெற்றுள்ளது. இந்த தமிழ்மொழிப் பரீட்சையில், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் 5,297 பேர் தோன்றியுள்ளனர். இந்த தேர்வு நிலையங்களில் மேற்பார்வையாளர்களாக தமிழ் பள்ளிகளின் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன், தமிழ் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை நிறைவு செய்து உதவி ஆசிரியர்களாகக் கடமையாற்றிவரும் 83 இளம்தலைமுறையினரும் இணைந்துள்ளனர். இந்த தேர்வில் அதிகளவில் தமிழ் பிள்ளைகள் பரீட்சைக்குத் தோன்றியிருப்பதும், இளம் தலைமுறையினர் தேர்வு பணிகளில் பங்க…

    • 0 replies
    • 454 views
  18. சுவிஸில் நடைபெற்ற ஓவியப் போட்டி: ஈழத்தமிழ்ச் சிறுமியின் தமிழின அடக்குமுறையை பிரதிபலிக்கும் ஓவியம் முதலிடம்.! சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கி ஒன்று நடத்திய ஓவியப் போட்டியில் ஈழத்தமிழினம் சந்தித்து வரும் அடக்குமுறையை பிரதிபலிக்கும் வகையில் ஈழத் தமிழ்ச் சிறுமியால் வரையப்பட்ட ஓவியம் முதலிடம் பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கி ஒன்று அதன் 19ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஓவியப் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது. இசையினை தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்ற தலைப்பில் கடந்த 19ஆம் திகதி நடத்தப்பட்ட இவ் ஓவியப் போட்டியில் ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர். இவ்வாறு போட்டியில் பங்கேற்றிருந்த ஆயிரம்…

  19. சுவிஸில் பயங்கரம்; ஈழத்தமிழ் அகதி பொலிஸாரினால் சுட்டுக்கொலை! சுவிற்சர்லாந்து நாட்டில் ஈழத் தமிழ் அகதி ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற அகதியொருவரையே பாதுகாப்பு கருதி பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, டிசினோ மாகாணத்தில் உள்ள Brissago நகரில் சுவிஸ் பொலிஸார் இரண்டு அகதிகளை அழைத்துக் கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு சென்றுள்ளனர். அதன்போது வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து சடுதியாக பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது பாய்ந்து தாக்…

  20. சுவிஸில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற இலங்கைத் தமிழர் இலங்கையர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இலங்கை தமிழ் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. இதில் பலரும் பார்த்திருக்க தனது மனைவியை கணவன் குத்திக் கொன்றார். சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ், கான்டன் ரப்பர்ஸ்வில் பகுதியிலுள்ள ‘பெர்னர்ஸ் எஸ்வெர்க்’ என்ற சிற்றுண்டிச்சாலையில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இந்தக் கொலை நிகழ்ந்தது. அந்நாட்டுப் பொலிஸாரின் தகவலின் படி, கொலையுண்டவர் 47 வயது பெண் ஆவார். இவரை 57 வயதான அவரின் கணவர் கத்தியால் குத்திக் கொன்றார். தகவலறிந்து பொலிஸார் அங்கு சென…

  21. வன்னியில் மருந்து, உணவு இல்லாமல் மரணத்தின் வாசலில் நிற்கும் எம் உறவுகளுக்காக குரல் கொடுத்திட சுவிஸில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலை அலையாக அணி திரண்டு வந்து மனித சங்கிலியில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் உரிமையுடன் அழைக்கின்றார்கள். http://lankasriads.com/events/Swiss/Zurich_manithasankili/

  22. சுவிஸில் வாகன விபத்து – 12 இலங்கையர்கள் காயம் சுவிஸில் வாகன விபத்து – 12 இலங்கையர்கள் காயம் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நேற்று இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை ஏற்சிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியது. இதில் 15 பேர் காயமடைந்தனர் எனவும் அதில் 12 பேர் இலங்கையைச் ச…

  23. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 60 தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையினரின் ஒருங்கிணைப்பில் மாவீரர் நாள் நடைபெறும் பிறிபேர்க் போறும் மண்டபத்தில் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு மத்தியில் தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 60 எழுச்சியாகவும், எளிமையாகவும் கொண்டாடப்பட்டதுடன் வாழ்த்துப்பாவுடன், வாழ்த்துக்களாக இளையோர்களின் இன உணர்வு மிக்க எழுச்சி நடனம், சிறுவர்களின் பேச்சுக்கள் இ…

  24. Started by trinco,

    சுவிற்சர்லாந்து லுசேர்ன் பாராளுமன்றத்தேர்தலில் ஈழத்தமிழரான லதன் வெற்றி ரி.என்.ஜே Sunday, 01 April 2007 18:05 இன்று நடைபெற்ற லுசேர்ன் மாநில பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட ஈழத்தமிழரான லதன் சுந்தரலிங்கம் வெற்றிபெற்றுள்ளார். SP கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு லதன் 4257 வாக்குகள் பெற்று இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். செய்தி சுவிஸ் முரசம் http://www.swissmurasam.ch/

    • 6 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.