வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
கனடாவில் இலங்கை தமிழ் பெண் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்! கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்க்கம் பகுதியில் வசிக்கும் 46 வயதான தமிழினி குகேந்திரன் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த 15ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் Brimley Road, Highglen Avenue பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதியாக அவர் அவதானிக்கப்பட்டுள்ளார். காணாமல் போன பெண் 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், 140 பவுண்ட் நிறையுடைவர் மற்றும் கறுப்பு நிற தலை முடியை கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் காணாமல் போயுள்ள குறித்த பெண் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட…
-
- 0 replies
- 896 views
-
-
புதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர் புதிய அமெரிக்க – கனேடிய உடன்படிக்கையின் மூலமாக அமெரிக்கா சிறந்த அனுகூலங்களை பெற்றுள்ளதாக கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்ரிஃவன் ஹாப்பர் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நியூயோக்கில் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். இருந்த போதும், இந்த ஒப்பந்தத்தின் ஊடாக கனடா ஒருவிதத்தில் காயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். “இந்த ஒப்பந்தம் மூலமாக அமெரிக்கா நன்மையான பக்கத்தை பெற்றுள்ளதை கனேடியர்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். அமெரிக்கா சில நன்மைகளை பெற்றுள்ள அதேவேளை எதனையும் இழக்கவில்லை என்பது தௌிவாக…
-
- 0 replies
- 519 views
-
-
ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்! இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் வட. மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்ஸர்லாந்தின் முக்கிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இதுதொடர்பிலான தகவல்களை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இவ்வாறு அரசியல் புகலிடம் கோருவதற்கான கடிதத்தை வட. மாகாண சபை உறுப்பினர் ஒருவர் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆவா குழுவினால் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்தே இவர்கள் சுவிட்ஸர்லாந்தில் இவ்வாறு அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவ்வாறு…
-
- 0 replies
- 596 views
-
-
இலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை! இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதம் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கும் முன்பிரேரணை ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ளது. குறித்த பிரேரணையில் இதுவரை 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதோடு, மேலதிக கையொப்பங்களை பெறும் நடவடிக்கையில் அந்நாட்டு புலம்பெயர் தமிழ் இளையோர் குழுவொன்று செயற்பட்டு வருகின்றது. பிரித்தானியா ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிலிப்பை குறித்த குழுவினர் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தனர். தமிழின அழிப்பிற்கு காரணமாக அமைந்த இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆயுதங்கள் விற்பனை செய்வதால், அவர்களின் கை மேலும் பலம்பெரும் என குறி…
-
- 0 replies
- 450 views
-
-
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட அதன் செயற்பாட்டாளர்கள் மூவர் பிரித்தானிய காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை உயர்தானிகர் ஒருவர் வழங்கிய தவறான தகவலின் அடிப்படையிலேயே பிரித்தானிய காவற்துறை இவர்களை கைது செய்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பிரித்தானியாவுக்கு வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்று இரவு 8 மணிக்கு ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றினார். இதனை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று…
-
- 12 replies
- 1.7k views
-
-
சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்! கடந்த செப்டம்பர் மாதம் 14ம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 8 அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த கையோடு அரசியல் கைதிகள் சம்பந்தமான பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. தற்போது மேலும் இரண்டு கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். இதோடு உண்ணாவிரதத்தில் ஈடுபடும் கைதிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அந்த பத்து பேரும் மருத்துவ சிகிச்சையை மறுத்துள்ளதனால் அவர்கள் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் இதுவரை தலையிடவில்லை. தம்மை விடுதலை செய்யுமாறும் அல்லது புனர்வாழ்விற்கு அனுப்புமாறும் தான் உண்ணாவிரத்த்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் கேட்கின்…
-
- 0 replies
- 787 views
-
-
கனடாவுக்குள் நுழையும் அகதிகள்…! கனடா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு! கடல் வளம், கனி வளம், நீர் வளம், நில வளம் எனத் தொடரும் பெரும் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு! குடித்தொகை வெறும் 37 மில்லியன்கள்தான்! ஆயினும் அல்லலுறும் மக்கள், துன்பத்தால் துடிக்கும் மக்கள், உள்நாட்டுப் போரினால் அவதியுறும் மக்கள் கனடாவுக்குள் நுழைந்து தஞ்சம் கோரும் போது அண்மைக் காலங்களாக விரும்பத்தகாதவர்களாக நோக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இனத்தால், மதத்தால், நிறத்தால் வெள்ளையினத்தவர்களாக அல்லாத வேளைகளில் இதன் உக்கிரம் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. இந்த நாட்டுக்கு அகதிகளாக வந்த தமிழர்களாகிய நாங்களும் இவ்வாறு மற்றவர்களை வெறுக்கும் மனோநிலை கொண்டவர்களாக மாறி வருகின்றோம…
-
- 3 replies
- 1.4k views
-
-
பிரித்தானிய குடியேற்றவாசிகளுக்கு ஏற்படவுள்ள புதிய பிரச்சினை பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் குடியேற்றவாசிகள் பிரித்தானிய குடியுரிமையைப் பெறுவதற்கு ‘British Value Test ‘ எனப்படும் புதிய பரீட்சை ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டி வருமெனவும் உயர்ந்த ஆங்கில அறிவைக் கொண்டிருக்கவேண்டுமெனவும் பிரித்தானிய உள்துறை அமைச்சர் சஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார். தற்போது அமுலில் உள்ள Life in the UK எனப்படும் பரீட்சை பிரித்தானியாவின் வரலாறு மரபு மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளைக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்த பரீட்சை குடியுரிமை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்தார். வரலாறு பற்றி குடியேற்றவாசிகள் அறிந்து கொள்வது நல்லது தான் ஆனாலும் எங்கள் சமூகத்தை ஒன்ற…
-
- 2 replies
- 1.3k views
-
-
நாப்டா ஒப்பந்தத்தில் சீர்திருத்தம் – அமெரிக்கா, கனடா உடன்பாடு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக கடந்த 1994ம் ஆண்டு ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (நாப்டா) அமல்படுத்தப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தார். மிக மோசமான ஒப்பந்தங்களில் இதுவும் என்று என கூறிய அவர், தற்போதையை சூழலில் நாப்டா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தில் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யாவிட்டால் நாப்டா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்தார். இத…
-
- 0 replies
- 572 views
-
-
கிழக்கு லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்.. கணவனைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிழக்கு லண்டன் நியூஹாமைச் சேர்ந்த 73 வயதான பாக்கியம் ராமதன் என்பவர் மீது லண்டன் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிழக்கு லண்டன் நியூஹாம் பேர்கர் வீதியில் (Burges Road ) உள்ள வீடொன்றில் 75 வயதான கனகசபை ராமதன் என்பவர் தலையில் கடும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். . கடந்த வெள்ளிக்கிழமை (21.09.18) பிற்பகல் 14: 20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றதனை அடுத்து கைது செய்யப்பட்ட, பாக்கியம் ராமதன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…
-
- 15 replies
- 2.4k views
-
-
மாவீரர்கள் சாட்சியாக நடந்த திருமணம்! நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள்!! (காணொளி) புலம் பெயர் நாடுகளில் எமது உறவுகள் வாழ்ந்தாலும் இன்றும் எமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் மறக்கவில்லை என்பதற்கு முன்னுதாரணமாக சுவிஸ்சர்லாந்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. தமிழ் மொழிக்காகவும் மறைந்த மாவீரர்களை நினைவு கூரும் வகையிலும் ஒரு திருமணம் நடந்துள்ளது. சுவிஸ் வாழ் தமிழ் இளைஞன் சுவஸ்சர்லாந்து ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் தொடர்பு கொண்டு தமிழ் முறைப்படி திருமணம் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரது இவ் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஆலய நிர்வாகமும் அதற்கேற்ற முன் ஆயத்தங்களையும் மேற் கொண்டுள்ளது. அதற்கமைய குறித்த இளைஞனின் திருமணம் மறைந…
-
- 7 replies
- 1.6k views
-
-
நேற்று ஒரு விபத்தாக இந்த நிகழ்வினைப் பார்த்து அதிர்ந்து போனேன். இங்கே எல்லோரும் வளர்ந்தவர்கள் ஆகையால் இது குறித்து பகிர நினைத்தேன். பொதுவாக ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் பிடிப்பது முக அழகு முதலிடத்தினையும், ஆடை அணிந்த நிலையில் தெரியும் உடல் அழகு (figure) இரண்டாவது இடத்தினையும் பிடிக்கிறது. முன்னர் ITV TV யில், Blind date எனும் நிகழ்வினை Shiela Black என்னும் தொகுப்பாளர் நிகழ்த்துவார். ஆண் ஆயின் 3 பெண்களுடனும், பெண்ணாயின் 3 ஆண்களுடனும் முகம் பாராது கேள்விகள் கேட்டு ஒருவரை தெரிவு செய்வார். ஒரு மாதம் டிவி காரர் செலவில் ஊர் சுத்திய பின்னர் தனக்கு சரியானவர் தான் என்றால் சேர்ந்து போவார். இல்லாவிடில் பிரிந்து போவர். இந்த naked attraction நிகழ்வில் நிர்வாண…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஈழத் தமிழர்களுக்காக ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்! அலையென திரண்ட மக்கள் இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் பிற்பகல் 2.00 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது, ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும். ஐ.நா அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்த…
-
- 0 replies
- 844 views
-
-
“18.05.2009” என்ற திரைப்படம் திரையிடப்படவுள்ளது “18.05.2009” என்ற திரைப்படம் கனடாவில் திரையிடப்படவுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு குறித்த திரைப்படம் கனடாவில் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கனடாவில் வசிக்கும் தமிழ் உணர்வாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது குறித்த திரைப்படத்தின் இயக்குநர் கணேசன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினை மையப்படுத்தி குறித்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 1k views
-
-
நான் வேலை செய்வது ஒரு தபாற் கந்தோரில். இரண்டு கவுண்டர்களில் எனது திறந்தது. பொதிகளை வாங்குவதற்கு இலகுவாக ஒன்றை மூடியும் மற்றையதைத் திறந்தும் அமைத்திருக்கின்றனர். வெய்யில் காலத்தில் குளிரூட்டியின் குளிர்மையில் நன்றாக இருப்பது குளிர் காலத்தில் நடுங்கவைக்கும். ஆனாலும் வீட்டுக்கு அண்மையில் இருப்பதாலும் முதலாளி என்று சொல்லப்படும் சிங் இனத்தவர் எப்போதாவது வருவதாலும் நானும் இன்னுமொரு தமிழ் அக்காவும் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்து, ஆட்கள் வராவிட்டால் போனில் முகநூலை மேய்ந்து, பொன் கதைத்து நின்மதியாக வேலை செய்வோம். வாகனத் தரிப்பிட வசதியுடன் பத்து நிமிடத்தில் காரில் போனால் வேலை. வேலை முடிய ஒரு பதினைந்து நிமிடத்தில் வீடு. ஆனாலும் ஒரு குறை. பூட்டிய அறையுள் இருக்கும் அக்கா விதவ…
-
- 83 replies
- 9.8k views
-
-
-
- 4 replies
- 1.5k views
-
-
மலைக்க வைத்த ஜேர்மன் தமிழர்கள்!! ஜேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா நேற்றுச் சிறப்புற நடைபெற்றது. அதில் 3000 க்கும் மேற்பட்ட தமிழர்களும் மற்றும் பிறநாட்டவர்களும் கலந்து கொண்டனர். தெருவில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான குதிரையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் என்பன அணிவகுத்து நடைபெற்றன. வீதியெங்கும் தாயகத்தை நினைவுபடுத்தும் வகையில் கடைகள் அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் பெரும் உற்சாகத்துடன் நிகழ்வுகளைக் கண்டு களித்ததுடன் தமிழர்களுடைய பல வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள தெருவில் திருவிழா நடைபெற்றது. https://newuthayan.com/story/20/மலைக்க-வைத்த…
-
- 7 replies
- 1.8k views
-
-
CHINESE AND SOUTH AND NORTH EAST SRI LANKA சீனர்களும் தெற்க்கு மற்றும் வடகிழக்கு இலங்கையும். * [இலங்கைக்கு வருகைதரும் சீனர்கள் எங்கள் சிங்கள சகோதரர்களுடன் மரியாதையாக நடக்க வேண்டுமென இலங்கைக்கான சீன தூதரிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.] .* சென்னை வருவதற்க்காக நான் கட்டுநாயக்க விமான நிலயத்துக்கு வந்தபோது சில சீன சுற்றிலாபயணிகளை சந்தித்தேன். அவர்கள் பயண விதிகளை மீறி சிங்கள பயணிகள் வரிசையில் இடையில் புகுந்தபோது சிங்களப் பயணிகள் கோப்பட்டபோதும் ஏனென்று கேட்க்க அஞ்சினார்கள். இதை ஜீரணிப்பது எனக்கு கஸ்ட்டமாக இருந்தது. "THIS IS THEIR'S COUNTRY" என நான் சீன பயணிகளைக் கடிந்துகொண்டேன். . சில காலங்களாகவே சீன பயணிகள் சிலர் இலங்கை தங…
-
- 12 replies
- 1.8k views
-
-
தமிழின அழிப்புக்கு நீதி கோரி – ஐநா நோக்கி ஈருருளிப்பயணம்!! தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் பிரிட்டனில் நேற்று ஆரம்பமானது. இந்தப் பயணம் பிரிட்டனில் அமைந்துள்ள நகரங்கள் ஊடாக நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்புர்க், யேர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டை ஊடறுத்து ஜெனீவாவைச் சென்றடையவுள்ளது. தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்ற தொணிப்பொருளுடன் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/15/தமிழின-அழிப்புக்கு-நீதி-கோ…
-
- 2 replies
- 1k views
-
-
கிழக்கு ஜெர்மனியாக இருந்து ஒன்றிணைந்த, ஜெர்மனியின் கெம்மிட்ஸ் என்னும் ஊரில், ஈராக்கிய அகதியும், சிரிய அகதியும் சேர்ந்து கத்தியால் சொருகி, ஜெர்மானியர் ஒருவரை கொலை செய்ததால், அகதிகள் மீதான அனுதாபம் ஒட்டுமொத்தமாக வெறுப்பாக மாறி உள்ளது. நாஜி ஸ்டைல் முழக்கங்களுடன் பெரும் ஊர்வலங்கள் அந்த நகரில் நடக்கின்றன.கொலை செய்ததாக கருதப்படும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருமளவில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். வரும் சனிக்கிழமை பெரும் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. தமது நகரத்தில் இருந்து அகதிகளை அப்புறப் படுத்துமாறு கோருகின்றனர் நகர வாசிகள். ஒரு சிலர் தவறுக்காக எல்லோரையும் தண்டிக்க முடியாது என்று ஒரு சிலர் சொன்னாலும், அவை எடுபடும் நிலையில் இல்லை. இது அரச தலைவர…
-
- 15 replies
- 1.8k views
-
-
பாடகர் செந்தூரன் அழகையாவின் உள்ளக்குமுறல்
-
- 12 replies
- 2.3k views
-
-
பரிஸில் 14 தமிழ்இளைஞர்கள் அதிரடிகைது! பயங்கர ஆயுதங்கள் மீட்பு!! பிரெஞ்சுகாவற்துறையினால் பரிஸ் நகரில் வைத்து வாள்கள் பெரும் கத்திகள் உட்பட்ட ஆயுதங்களுடன் 14 இலங்கையர்கள்அதிரடியாக நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிரெஞ்சு ஊடகங்கள் அனைத்திலும் இன்று இந்தசெய்தி முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. பரிஸ் நகரின் 19 வட்டாரபோர்த் து பந்தன் (porte de Pantin) பகுதியில் மேற்படி இலங்கை இளைஞர்கள் குழு வாள்கள்> பெரும்கத்திகள்>இரும்புகம்பிகள் கண்ணீர்புகை கருவிகள் ஆகியவற்றுடன் நேற்று பிற்பகல் வேளை நின்றனர். இது குறித்து காவற்துறையினருக்கு கிடைத்த தகவல்களையடுத்து அங்கு விரைந்த காவற்துறை அணி இவர்களை அனைவரையும் மாலை 15.45 மணியளவில்கைதுசெய்தனர். இவர்…
-
- 6 replies
- 1.3k views
-
-
வெளிநாடொன்றில் புகலிடக் கோரிக்கை மறுப்பு! இலங்கை தமிழ் இளைஞன் தற்கொலை அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதான நல்லதம்பி வசந்தகுமார் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் நான்கு பெண் பிள்ளைகளின் தந்தை ஆவார். புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட வசந்தகுமார், நவுரு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். எனினும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரிஸ்பேன் நகருக்கு வந்திருந்தாலும், அவருக்கு நிரந்தர வதிவிட வீசாவோ, புகலிடமோ கிடைக்கவில்லை. சில நாட்களுக்கு முன்னர், பிரிஸ்பே…
-
- 0 replies
- 786 views
-
-
அமெரிக்க நியூயார்க் நகரில் சுடச்சுட தோசைக்கடை நடத்தும் தமிழர்!
-
- 6 replies
- 1.1k views
-
-
முடிவுக்கு வந்த துப்புத் துலக்கலும் மருந்திடாத காயங்களும் வெளிநாட்டினைச் சேர்ந்த ஒன்பது பேர் 2000 தொடக்கம் 2006 ஆம் ஆண்டுவரை சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இக் கொலைகள் தொடர்பான துணிவான ஆய்வுகளை மேற்கொண்டு ”Ende der Aufklärung: Die offene Wunde NSU” ( தமிழில் சுமாராக இப்படிச் சொல்லலாம்: ‘முடிவுக்கு வந்த துப்புத் துலக்கலும் மருந்திடாத காயங்களும்’) என்ற நூலை வெளியிட்டிருக்கின்றார் ஜெர்மனிய ஊடகவியலாளர் துமிலன் செல்வகுமரன் அவர்கள். அவரது இந் நூலை முன்வைத்து இடம்பெற்ற வானொலி நேர்காணலில் புதிய சந்தேகங்களையும், புதிய தகவல்களையும் தருவதோடல்லாமல் தனது தேடலின் போது பெற்ற அனுபவங்களையும் குறிப்பிடுகின்றார். https://www.swr.de/swraktuell/baden-wuerttemberg/heilbronn/Journalis…
-
- 0 replies
- 772 views
-