நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
804 topics in this forum
-
சங்க காலத் தமிழ்ச் சமூகம் - இராஜ்கௌதமனுக்கு மறுப்பு . இராஜ்கௌதமன் அவர்களின் சங்ககாலத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வுகள் ஆழமாகவும், நுட்பமாகவும், தனித்தன்மையோடும் இருக்கின்றன. தமிழ் அறிவு மரபு பற்றிய அக்கறை கொண்டு இயங்கிவரும் தமிழர்கள் தனது கருத்துகளோடு வினை புரியவேண்டும் என்கிற அவருடைய நூலின் முன்னுரையில் தரப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இணங்கி அவர் சங்ககாலம் பற்றியும், அக்கால வேந்தர்களின் காலம் குறித்தும் கூறியுள்ள சில கருத்துக்களுக்கு வினை ஆற்றியுள்ளேன். “பதிற்றுப் பத்து - ஐங்குறுநூறு, சில அவதானிப்புகள்” என்கிற தனது நூலில் திரு.இராஜ்கௌதமன் கீழ்க்கண்ட 9 விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். தரை மற்றும் கடல்வழி வணிகம், வேளாண் மற்றும் தொழில்சார்ந்த பொறியியல், அரசாட்சி, நி…
-
- 0 replies
- 2k views
-
-
மைதிலி தயாபரனின் மூங்கிலாகும் முட்புதர் நாவல் இன்று வெளியிடப்பட்டது. வவுனியா கோயில்குளம் அருளகத்தில் நிகழ்வு நடைபெற்றது. நாவல் வெளியீட்டின் பின்னர், கோயில்குளம் சிறுவர் இல்லத்தின் சிறுவர்களிற்கு பாடசாலை புத்தகப் பைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் வவுனியா நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி, மன்னார் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் சு.நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், சிரேஸ்ட சட்டத்தரணி தயாபரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/story/16/மூங்கிலாகும்-முட்புதர்-நாவல்-வெளியீடு.html
-
- 0 replies
- 555 views
-
-
மெல்பனில் நடந்த “நிழல்வெளி” நூல் வெளியீடும் தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச்சந்திப்பும்!… தெய்வீகன். அகரன்November 27, 2018 இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களின் ஊடாக பேசிய அரசியல், அறம் ஆகியவை குறித்து தமிழகத்தின் படைப்பாளுமை தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் அவர்கள் எழுதிய நிழல் வெளி நூல் அறிமுக நிகழ்வும் அவருடனான சந்திப்பும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 25 ஆம் திகதி ஞாயிறன்று மெல்பனில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த படைப்பாளியும் அரங்கச்செயற்பாட்டாளருமான தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் தனது குட…
-
- 1 reply
- 828 views
-
-
போகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ – அனோஜன் பாலகிருஷ்ணன் November 14, 2018 கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் தொகுப்பை வாசித்து முடித்தபின் உடனடியாக எனக்குத் தோன்றியது பதற்றம் சுரக்கும் புதிர் நிறைந்த துயர்தான். சிக்காகிய நூல் பந்திலிருந்து நூலை விடுவிப்பது போல இந்தத் துயர் கழன்று கழன்று மேலும் சிக்காகியது. போகன் சிருஷ்டிக்கும் உலகம் மிதந்தலையும் துயருக்குள் புறக்கணிப்பின் விளிம்பில் சுரக்கும் தாழ்வு மனப்பான்மையாலும் அன்பின் நேர்மறை சிடுக்குகளுக்குள் சிக்குண்டு அவஸ்தைப்படுபவர்களின் பதற்றம் கொண்ட அகவுலகத்தாலும் நிரம்பியுள்ளது. ஒருவகையில் அம்மானுடர்கள் அவ்விருத்தலை தத்தளிப்புடன் சிறுதயக்கத்துக்குப் பின் ஏற்கவும் செய்கிறார்கள். ‘பாஸிங் ஷோ’ கதையில் இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
நவீன இந்திய நாவல்கள்- எனது பார்வை - அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2018 இல், இடம்பெற்ற நாவல் இலக்கிய அரங்கில் சமர்ப்பித்த கட்டுரை - நீலகண்டப்பறவையைத்தேடி - வங்காளம் ஹோமரின் இலியட் மற்றும் ஓடிசியையும் சேர்த்து பார்த்ததை விட பத்து மடங்கு பெரியது மகாபாரதம். காவியங்கள் தோன்றி காலங்கள் சரியாக கணக்கிட முடியாத போதிலும் புராதன இலக்கிய பாரம்பரியத்தின் உரிமையாளர்களைக் கொண்டது அக்காலப் பாரதம், இக்காலத் தென்னாசியா. மிருகங்களை பாத்திரமாக்கிய ஐதீகக் கதைகள் இங்கேயே தோன்றின. அதன் தொடர்ச்சியாகவே உலகெங்கிலும் மிருகங்களைக் கொண்ட ஈசாப் நீதிக்கதைகளில் தொடங்கி மிக்கி மவுஸ் எனும் வால்ட் டிஸ்னியின் கதைகள் உருவாகின. மகாபாரதத்தில் தருமருடன் இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
அலெக்ஸ் ஹேலி இளம் வயதில் கடலோர காவற்படையில் பணிபுரிந்தார். அதன் பின் பத்திரிகை துறைக்கு வந்தார். எழுத்தாளராக மாறினார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பசிபிக் கடலில் பயணம் செய்யும் ஒரு சரக்கு கப்பலில் அமெரிக்க கடற்கரைப் பாதுகாப்புப் படை சார்பாக சேர்ந்தார். அங்கே இருக்கும் நூலகத்தின் மூலம் ஏற்படும் வாசிப்பு அனுபவம் அவருக்கு எழுத்தார்வத்தைத் தூண்டியது. லண்டனில் ஒரு மியூசியத்திற்கு செல்ல நேர்ந்தது. அங்கே ஒரு பழங்கால எகிப்திய சிலையை கண்டார். அதில் உள்ள எழுத்துக்களை வைத்து அதன் வரலாற்றை ஒரு பிரெஞ்சு அறிஞர் கணிப்பதையும் கண்டார். அப்போதே அவருக்கு தனது முன்னோர்கள் மூலம் வழிவழியாக கடத்தப்பட்டு வரும் சில வார்த்தைகளையும், விசித்திரமான ஒலிகளையும் கொண்டு தமது மூத…
-
- 1 reply
- 1.2k views
-
-
முக்கிய குறிப்பு: நான் நூல் விமர்சகனோ அல்லது திறனாய்வாளனோ அல்ல. உப்பு நாய்கள் மீதான என் பார்வையை மட்டும் கீழே தருகின்றேன். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அண்மைக் காலங்களில் ஒரு நாவலை இந்தளவுக்கு மனம் அதிரவும், சற்று அருவருப்பு உணர்வு மேலிடவும், ஆத்திரம், இரக்கம், கோபம், அதிர்ச்சி போன்ற கலவையான உணர்வு பெருக்கு எழவும் வாசித்திருக்கவில்லை. வாசிக்க கூடாத நாவலாகவும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நாவலாகவும் இருக்க கூடிய நாவல்களில் ஒன்றாக உப்பு நாய்கள் அமைந்திருக்கின்றது எனக்கு. சென்னையின் பணச் செழிப்பு மிக்க பகுதிகளிலும், செழிப்பும் வறுமையும் பக்கம் பக்கம…
-
- 9 replies
- 2.4k views
-
-
மகாவம்சத்தில்.. தமிழர் நிலை. துட்டகைமுனு சிறுவனாக இருந்த பொழுது, அவன் தந்தை காக்கவண்ண தீசன் பிக்குகள் உண்ட உணவின் மீதியை எடுத்து... உருண்டையாக்கி, அவனிடம் தமிழர்களுடன் சண்டை செய்யாதே என்று சத்தியம் கேட்கின்றான். அந்த உணவை தட்டிவிட்டு... ஓடிச்சென்று படுக்கையில், ஒடுங்கிப் படுத்துக்கொள்கிறான். அப்போதுஅங்கு வந்த விகாரமகாதேவி "ஏன் மகனே கைகால்களை நீட்டிக்கொண்டு வசதியாக படுக்கலாமே" என்கிறாள். அதற்கு அவன் "மகாவலிக்கு அப்பால் தமிழர்களும் மறுபுறம் கட்டுக்கடங்காத சமுத்திரமும் இருக்கும் போது எப்படி வசதியாகப்படுப்பது" என்கிறான். இந்த காட்சியை பிற்கால வரலாற்றாசிரியர்கள் திரிபுபடுத்தி "வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும்" என்று திரிபு படுத்தி தமிழர்களின் செறிவை…
-
- 0 replies
- 427 views
-
-
சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வரும் ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதிக்கு சிறந்த எழுத்தாளருக்கான மகுடம் விருதை இந்தியாவின் நியூஸ் 18 தொலைக்காட்சி வழங்கியுள்ளது. சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வருபவர் ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி. சிதிலமாக்கப்பட்ட ஒரு இனத்தின் மனிதத்தைப் பேசும் கதைகளைக் கொண்டது மாயக்குதிரை சிறுகதை மூலம் கவனிக்க வைத்துள்ளார். எழுத்தாளர் தமிழ்நதி. போர் சிதைத்த வாழ்க்கை, புகலிடத்தின் விரக்தி என ஒவ்வொரு கதையும் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியைப் பதிவு செய்திருப்பதாகவும் மகுடன் விருதுக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வலிமையான தனது எழுத்தின் மூலம் மனிதம் பேசியிருக்கிறார் தமிழ்நதி. ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்…
-
- 0 replies
- 806 views
-
-
வாசிப்பெனும் பாய்மரக்கப்பலில்.. 1. ஜீ.முருகனின் கதைகளை (’ஜீ.முருகன் சிறுகதைகள்') அண்மையில் வாசித்து முடித்திருந்தேன். இத்தொகுப்பில் 50 கதைகள் இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன் ஜீ.முருகனின் ‘மரம்’ குறுநாவலைத் தற்செயலாகக் கண்டெடுத்து வாசித்ததுபோது வியப்பேற்பட்டது போலவே இப்போது முழுத்தொகுப்பாய் அவரின் கதைகளை வாசிக்கும்போதும் வசீகரிக்கின்றது. பெருந்தொகுப்புக்களின் முக்கிய சிக்கலென்பது வாசிப்பில் நம்மை ஏதோ ஒருவகையில் அலுப்படையச் செய்துவிடும். ஆகவேதான் எனக்குப் பிடித்த படைப்பாளிகளாயினும், அவர்களின் பெருந்தொகுப்புக்களை வாங்கிவிடவோ வாசிக்கவோ தயங்கிக்கொண்டிருப்பேன். ஆனால் ஜீ.முருகனின் இந்தத் தொகுப்பு அலுப்பே வராமல் என்னை வாசிக்கச் செய்திருந்தது. நமது சூழலில் …
-
- 0 replies
- 556 views
-
-
“தியாகமும் வீரமும் மலையென குவிந்தது தோல்வி அதளபாதாளத்திற்கு சென்றது” ஏன் கேட்டுப்பாருங்கள்..... தமிழாய்வு மைய வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் பூகோளவாதம் புதியதேசியவாதம் என்ற நூல் அண்மையில் அவுஸ்திரேலியா வில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அவ் அறிமுக விழாவின் போது நூலாசிரியர் அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் ஆற்றிய ஏற்புரை.நன்றிவெளியீடு தமிழாய்வு மையம் லண்டன்.
-
- 0 replies
- 627 views
-
-
ராஜசுந்தரராஜனின் 'நாடோடித்தடம்' இளங்கோ-டிசே கடந்த நான்கு நாட்களாக ராஜசுந்தரராஜனின் 'நாடோடித்தடத்தை' வாசித்துக்கொண்டிருந்தேன். இவ்வாசிப்பிற்கிடையில் வேறு ஒரு படைப்பை வாசித்து தலையில் முட்டி, எதையாவது அதுகுறித்து எழுதித்தொலைத்துவிடுவேனோ என்ற பதற்றத்தை விலத்தி, தன் தடத்தில் சுவாரசியமாகத் தொடர்ந்து கொண்டு சென்றதற்கு ராஜசுந்தரராஜனுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும்.நமது முன்னோடிகளிடம், ஒரு நல்ல படைப்பை எப்படி எழுதுவது என்பது கற்றுக்கொள்வதற்கு மட்டுமின்றி, ஒரு மோசமான படைப்பை எவ்வாறு எழுதாமல் தவிர்ப்பது என்பதற்கும் அவர்களிடமே செல்லவேண்டியிருக்கின்றது. அவ்வாறு சமகாலத்தில் எழுதுபவர்களுக்கு பரவலாக வாசிக்கும் ஒரு அரியபழக்கம் இருக்குமாயின்,, எத்தனையோ ஆக்கங்களை வாசித்து நாமும் …
-
- 0 replies
- 570 views
-
-
மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி பேட்டிவாசிப்பிலிருந்து தான் சிறந்ததாகக் கருதும் படைப்புகளை மொழிபெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் அபூர்வமான மொழிபெயர்ப்பாளர்களுள் ஜி.குப்புசாமியும் ஒருவர். ஒரு படைப்பை மொழிபெயர்க்க வேண்டுமென்றால் அந்தப் படைப்பாளியின் எல்லா படைப்புகளையும் வாசித்திருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பவர். அதனாலேயே, இவரின் மொழிபெயர்ப்புகள் வாசகர்களின் நம்பிக்கைக்குரிய தேர்வாக இருந்துகொண்டிருக்கிறது. அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று முழு நேர மொழிபெயர்ப்பாளராக ஆகியிருக்கும் வேளையில் அவருடன் உரையாடியதிலிருந்து... கிட்டதட்ட 30 வருட அரசுப் பணி. இப்போது என்ன தோன்றுகிறது? ஒவ்வொருநாளும் கரடுமுரடான சாலைகளில் ஓட்டை பஸ்களில் குலுங்கிக் குலுங்கி 130 கி.மீ.…
-
- 0 replies
- 596 views
-
-
'தனிமனித அவலத்தின் நினைவுகள் கூட்டு மனநிலையில் வடுவாக மாறுகின்றன.' பா.அகிலனின் 'அம்மை' கவிதை நூலை முன்வைத்து… தேவகாந்தன் மறைந்த கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்மூலம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பா.அகிலனது கவிதைகளுடனான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்தே 'பதுங்கு குழி நாட்கள்' தொகுப்புக்குள்ளான என் பிரவேசம் இருந்தது. அவரது அடுத்த கவிதைத் தொகுப்பு 'சரமகவிகள்' வெளிவந்தபோது, மேலும் அவரது கவிதைகளை அறிவதற்கான தரவுகளுடன் நான் இருந்திருந்தேன். 'அம்மை' தொகுப்பு வெளிவந்தபொழுது அவருடன் நேரடி அறிமுகமே உண்டாகியிருந்தது. கவிதைகளின் அகத்துள்ளும் அகலத்துள்ளும் சென்று தேட இது இன்னும் வாய்ப்பாக அமைந்தது. 'அம்மை' தொகுப்பை புரட்டியதுமே என் மனத…
-
- 0 replies
- 991 views
-
-
இந்த உலகம் எப்பொழுதுமே அப்படியே இருப்பதில்லை, அது காலம் காலமாக மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டேஇருக்கின்றது. இந்த மாற்றத்திற்கு மூலப்பொருளாக உழைப்பும் உழைப்பு சுரண்டலும் இருந்துகொண்டே இருக்கின்றது. அது சுற்றுப்புறச்சூழலில் மட்டும் அல்ல சமூகம் மற்றும் தனிமனித உறவுகளுக்குள்ளும் மிகப்பெரிய மாற்றத்தைஏற்படுத்தியுள்ளது. தந்தை என்ற உறவே தனி சொத்துடமை என்னும் உழைப்பு சுரண்டலின் வித்தாக அமைந்தது. அப்படி சீனாவின் கிராமம் ஒன்றி காலம் முழுவதும் உழைத்து உழைத்துக் களைத்து போன அந்தப் பெண்ணை குத்தகைபணம் கொடுக்கவில்லை என்று காரணம் காட்டிக் களவாடி சென்றான் அந்தக் கிழட்டு பண்ணையார். மற்றவர்களிடம்இருந்து தான் சுரண்டிய சொத்தை யாருக்க கொடுப்பது எனத் தெரியாமல் இரந்த அவனுக்கு இந்த இளம் பெண் பிள்…
-
- 0 replies
- 806 views
-
-
படித்தோம் சொல்கின்றோம்: நீடித்த போரின் வலி சுமந்த மக்களின் கதைகளைப்பேசும் "வன்னியாச்சி"! வன்னிபெருநிலப்பரப்பின் ஓலங்களை படைப்பிலக்கியத்தில் ஒலிக்கச்செய்த தாமரைச்செல்வி! முருகபூபதி நீடித்த போரினால் வலிசுமந்த மக்களின் கதைகளைச்சொல்லும் தாமரைச்செல்வியின் " வன்னியாச்சி" பெரும் கதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 37 கதைகளையும், ஜீவநதியில் இம்மாதம் வெளியான அவனும் அவளும் என்ற சிறுகதையையும் சேர்த்து மொத்தம் 38 கதைகளையும் படித்து முடித்த தருணத்தில், தமிழ் ஊடகங்களில் " அரசின் மகா வலி - தமிழருக்கு மன வலி " என்ற தலைப்பிலும் தொனியிலும் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மக்கள் வலிசுமந்த மேனியராகவே கடந்த மூன்றரை தசாப்த காலமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை, தனது கதைகளின் ஊடாக பத…
-
- 0 replies
- 556 views
-
-
ஈழ அகதியின் துயர வரலாறு . என்னை பொறுத்தவரை ஒவ்வொரு ஈழத்தமிழனும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு உண்மைப்பதிவு .தமிழகத்தில வாழும் அகதிகள் பற்றிய கதை .
-
- 1 reply
- 1.3k views
-
-
புதிதாக ஒரு கதைக்களனைத் தேர்ந்தெடுக்கும்போதே, ஒரு நாவல் பாதி வெற்றியடைந்து விடுகிறது. சொல்ல வந்ததை சரியாகச் சொல்லி விட்டால் முழு வெற்றியையும் பெற்று விடுகிறது. பல எழுத்தாளர்கள் புதியதொரு கதைக்களனைத் தேர்ந்தெடுத்துவிட்டு, சொல்லும் முறையில் கோட்டை விட்டு விடுவார்கள். ஆனால், கதைக்களன், சொல்லும் முறை இரண்டிலும் கோட்டை கட்டியிருக்கிறார் குணா.கவியழகன். appal oru nilamகிளிநொச்சியை சிங்களர்களிடமிருந்து மீட்க, புலிகள் மேற்கொண்ட வேவு நடவடிக்கைகள்தான் கதையின் களம். இதைச் சுற்றி விடுதலைப் புலிகளின் அன்றாட வாழ்க்கை, பயிற்சி முறைகள், இயக்க செயல்பாட்டு முறைகள், போர்க்குணம், போரினால் அலைக்கழிந்த எளிய மனிதர்களின் வாழ்க்கை ஆகியவற்றை மிக நெருக்கமாக நம்முன் காட்சிப்படுத்துகிறார் குணா.கவ…
-
- 0 replies
- 671 views
-
-
அம்மாவின் ரகசியம் வாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம். சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் த…
-
- 15 replies
- 5k views
-
-
தமிழர் சமூக வாழ்வு (கி.பி 250 முதல் கி.பி 600 வரை) - எனும் நூலை முன்வைத்து... தமிழகத்தின் கி.பி.250 முதல் கி.பி.600 வரையிலான நூற்றாண்டுகளை களப்பிரர்களின் காலம் என்றும், இருண்ட காலம் என்றும் பெருவாரியான 'செல்வாக்கு மிகுந்த' வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவ பண்டாரத்தார், ஔவை துரைசாமிப்பிள்ளை என பலரும் அவர்களை கொடியவர்கள் என்றும் சூறையாடியவர்கள் என்றும் சாடி உள்ளனர். கே.கே. பிள்ளை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்ட தனது 'தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்' எனும் நூலில் "தமிழகத்தில் இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள், கலியரசர்கள்" என கொட்டித் தீர்க்கிறார். போதுமான, நம்பகமான …
-
- 0 replies
- 493 views
-
-
புகைப்பழக்கத்தின் விளைவுகளைப் பற்றி ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. புகைப்பழக்கத்திலிருந்து விடுபட்ட பின்னர், அது தொடர்பான அனுபவங்களை முன்வைத்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகங்களை ஆலன் கார், ஜாக்குலின் ரோஜர்ஸ் போன்றோர் எழுதியிருக்கிறார்கள். நேரடி அனுபவங்கள் என்பதால் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற புத்தகங்கள் இவை. தமிழில் இதுபோன்ற முயற்சிகள் அரிது. இந்நிலையில், ஷாஜஹான் எழுதியிருக்கும் ‘அவசியம்தானா ஆறாம் விரல்?’ புத்தகம் புகைப்பழக்கத்திலிருந்து வெளியேறத் துடிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல ஆண்டுகளாகப் புகைப்பழக்கத்தைத் தொடர்ந்துவந்த ஷாஜஹான் அதிலிருந்து விடுபட்ட அனுபவத்தை சுவாரஸ்யமாகப் பதிவுசெய்திருக்கிறார். இதுதொடர்பாக, ஃபேஸ்புக்கில் எழு…
-
- 0 replies
- 640 views
-
-
இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’ குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார்.குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார். பீட்டர் துரைராஜ் பீட்டர் துரைராஜ் இலங்கை எழுத்தாளர் குணா கவியழகன் தமிழுக்கு தந்து இருக்கும் புதிய நாவல் – கர்ப்ப நிலம். ” புலிகளோடு களத்தில் இருந்தவர் குணா கவியழகன் எனவே அவரது வருணனைகள் மிக யதார்த்தமாக இருக்கும் ” என்றார் எழுத்தாளர் முருகவேள். இதனை படித்து முடிக்கையில் இரா.முருகவேள் சொன்னதுதான் என் நினைவுக்கு வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
Mubarak Abdul Majeeth 23 hrs · முபாறக் அப்துல் மஜீத் எழுதிய இலங்கையின் முதல் பூர்வீகம் முஸ்லிம்களே என்ற நூலை காத்தான்குடியில் பின்வரும் முகவரியில் பெறலாம். யுனிகம் புக் ஷொப் பிரதான வீதி காத்தான்குடி. 0779114100
-
- 0 replies
- 633 views
-
-
‘நெகிழ வைக்கும் நட்பு’ - பிரமிளின் படைப்புகளை தொகுத்த வாசகர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் பிரமிளின் வெளிவராத எழுத்துகள் மற்றும் அவரது முழுபடைப்புக்களையும் பத்து ஆண்டுகளாக சேகரித்து அவரது நெருங்கிய நண்பர் கால சுப்ரமணியம் வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 505 views
-
-
- ஜெயபாலன் த - 28 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளான யூலை 12 1990இல் தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சிலவற்றை இடைமறித்து அதில் பயணித்த 69 முஸ்லீம்களைப் மட்டக்களப்பில் குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்தனர். ஏற்கனவே கீழ் நிலையில் இருந்த தமிழ் – முஸ்லீம் இனங்களுக்கு இடையேயான உறவை இப்படுகொலைகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளியது. இப்படுகொலைகள் இடம்பெற்று 28 ஆண்டுகளின் பின் இப்படுகொலையை ஆவணப்படுத்தும் ‘குருக்கள் மடத்துப் பையன்” என்ற நூலை சையது பஷீர் எழுதி உள்ளார். நிச்சாமம் வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் யூலை 14 சனிக்கிழமை தேசம் வெளியிட்டு வைக்க உள்ளது. கிழக்கு லண்டன்; ஈஸ்ற்ஹாமில் நடைபெற உள்ள இந்நிகழ்வுக்கு அரசியல் ஆய்வாள…
-
- 8 replies
- 918 views
- 1 follower
-