நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
தீபச்செல்வனின் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ கவிதை நூலுக்கு இன்று சென்னையில் அறிமுகக்கூட்டம்.! ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற கவிதை நூலுக்கான அறிமுகக்கூட்டம் இன்று (5/12)மாலையில் சென்னையில் இடம்பெறுகின்றது. கவிஞர் வெயில் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், ஊடகவியலாளர் செந்தில் கரிகாலன், கவிஞர்பச்சோந்தி, சந்துரு மாயவன், கவிஞர் மனுஷி ஆயோர் கவிதை நூல் குறித்து உரையாற்றுகின்றனர். சென்னை வேளச்சேரியில் அமைந்திருக்கும் யாவரும் பதிப்பகத்தின் பி பார் புக்ஸ் புத்தகக் கடையில் நடைபெறும் இந்த கவிதை நூல் அறிமுகக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://vanakkamlondon.com/literature/2020/12/93314/
-
- 0 replies
- 661 views
-
-
01 பத்து மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய கவிதைகள் நூலாக்கப்படவுள்ளதாக தெரிவித்து அதற்கு முன்னுரை தரவேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் தீபச்செல்வன். அப்போது நான் கிளிநொச்சியிலிருந்தேன். கிளிநொச்சியை நெருங்கியதாக யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. எனினும் கிளிநொச்சியின் சில பகுதிகளில் மின்சாரம் இருந்தது. ஒரு இடத்தில் இணைய வசதியும் கிடைத்தது. என்றபோதும் யுத்தத்தின் தீவிரம் எதையும் நிதானிக்க முடியாத அளவிற்கு நிச்சயமின்மையை உருவாக்கிகொண்டிருந்தது. அதைவிட எப்போதும் அச்சமூட்டிக் கொண்டேயிருக்கும் அபாய நிலை சடுதியாக மாறும் அல்லது வீழ்ச்சியடையும் சூழல். தீபச்செல்வனுக்கு ஒப்புக்கொண்டபடி அவருடைய கவிதைகளுக்கான முன்னுரையினை அனுப்ப முடியவில்லை. யுத்தம் திடீரென வேகமெடுத…
-
- 3 replies
- 4.5k views
-
-
ஈழத்தைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ள "பயங்கரவாதி" நாவல் இன்னும் புத்தக வடிவில் எனக்குக் கிடைக்கவில்லை, ஆனாலும் அமேசான் கிண்டல் தளத்தில் வாங்கிப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஈழ மண்ணிலிருந்து இப்படி ஒரு படைப்பை, உள்ளிருந்த படைப்பாக எழுதுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல, அது கத்தி முனையில் நடப்பதற்குச் சமமானது. இருந்தும், தான் கொண்ட கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல் 2005 - 2009 வரையான 4 ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியான முறையில் கதையாகச் சொல்லியுள்ளார். தீபச்செல்வன் ஒரு சிறந்த கவிஞர் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த யதார்த்த எழுத்தாளர் என்பதை அவரின் "நடுகல்" நாவல் படித்தவர்கள் புரிந்துகொ…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஈழத்து எழுத்தாளரும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளருமான தீபச்செல்வன் அவர்களின் “பயங்கரவாதி” நாவல் அறிமுக விழா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 10.01.2024 (புதன்கிழமை) அன்று நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் திரு.கு.துவாரகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர். சி.ரகுராம் அவர்களும், சிறப்பு அதிதியாக அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். நூலின் சிறப்புப் பிரதியினை பிரதம அதிதி, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் அவர்கள் வெளியிட்டு வைக்…
-
- 0 replies
- 455 views
-
-
'கூடார நிழல்' கவிதைத் தொகுப்பு உயிர்மை பதிப்பகத்தால் வெளிவந்துள்ளது. http://www.uyirmmai.com/
-
- 2 replies
- 843 views
-
-
ஈழ எழுத்தாளர் கவிஞர் தீபச்செல்வன் அவர்களின் சயனைட் நாவல் சென்னையில் வெளியீடு காண்கிறது. நாள் : சனவரி 03 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6 மணிக்கு. இடம்.: சென்னை, வடபழனி, பிரசாத் லாப்பில். வெளியீடு : Discovery Book Palace
-
- 0 replies
- 378 views
-
-
ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் எழுதிய முதல் கவிதை நூலான பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதைத் தொகுப்பு அனுஷா சிவலிங்கம் அவர்களால் சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு கடந்த வெள்ளியன்று (29 / 9 /2023) ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரங்கம் நிறைந்த மக்கள் மத்தியில் இடம்பெற்றது. சிங்கள படைப்பாளிகள் மற்றும் கலைஞர்கள் பலர் நூல் தொடர்பிலும் ஈழ மக்களது போராட்டம் தொடர்பிலும் பல முக்கிய உரைகளை நிகழ்த்தினர். ஈழத்தமிழர் போராட்டம், விடுதலைப் புலி போராளிகள் தொடர்பில் சிங்கள மக்கள் படைப்பாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்களை தீபச்செல்வனின் உரை அமைந்தது (உரையை இணைப்பில் பார்க்கலாம்). ஈழத்து இலக்கிய உலகில் வலிமை மிக்க கு…
-
- 1 reply
- 973 views
-
-
துன்பங்களைச் சொல்வதும் எழுதுவதும் அனுபவிப்பதைப் போலவே துயரமானது தான்! ‘எழுதித் தீராப்பக்கங்கள்’ தொகுப்பில் ஒவ்வொரு அனுபவக் கட்டுரையையும் அகதிகளின் உணர்வுகளாகச் செல்வம் அருளானந்தம் எழுதியிருக்கிறார். அவரது பார்வையும் சிந்தனையும் அவற்றிலே நகைச்சுவையைக் காண்பதுமாகத் துயரங்களை எழுதியவற்றைப் பாராட்டும் அதே நேரம், ஒவ்வொரு கட்டுரையின் தலையங்கமும் அதனோடு இணைந்த ஓவியங்களும் அவற்றை மலினப்படுத்தி விடுகின்றன என்பது இத்தொகுப்பின் பலவீனமாய் எனக்குத் தெரிகிறது. சட்டென்று எனக்கு ஞாபகம் வந்தது தமிழ்வாணன் காலத் தலைப்புகள் போலயிருக்கே என்பது தான். தலைப்புகள் ஓவியங்கள் கவர்ச்சியாக வாசகரை வாசிக்கத் தூண்டுவதற்கானவையாக இருக்கவேண்டுமென வைத்தாரா செல்வம் தெரியவில்லை.ஆனால், உள்ளே விட…
-
- 1 reply
- 617 views
-
-
எமது சூழலியல் எனும் பெரும் பரப்பை காரணகாரியங்கள் ஊடாக உற்று நோக்கும் போது காலநிலைமாற்றம்,விவசாயப்பயிர்செய்கை,சுற்றுலாத்துறை,நீர்,வளி மாசாக்கம்,மண்ணியல் என்பன பாரிய அளவில் கோடிடப்பட்டு பார்க்கப்பட வேண்டியவை. அந்தவகையில் உலகப்போக்கோடு ஒத்து மாறுதல் அடைகின்ற காலநிலைமாற்றம் எம்சூழலிலும் செல்வாக்கு செலுத்துகின்றமை தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது.அதனை நடைமுறையிலும் எம் சமூகம் கண்ணூடு கண்டுகொண்டிருக்கின்றது.இத்தகைய காலநிலை மாற்றத்திற்கு நாமும் பங்குதாரர்கள் என்பதில் மாற்றம் இல்லை.துமி எனும் பெரும் தேடல் செய்திப்பரப்பில் ஆராய்ந்திருக்கிறோம் வாசித்து பாருங்கள். வெளிவந்திருக்கிறது துமி மின்னிதழ் 15.0 இணையதளத்தில் சென்று பார்வையிட https://www.thumi.org …
-
- 0 replies
- 512 views
- 1 follower
-
-
துயர் கவிந்த சரிதையில் அழுத்தி பதியும் நிழல் – அப்பால் ஒரு நிலம் -சி.ரமேஸ் குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு முதலான நாவல்களைக் கடந்து வெளிவந்த நாவலே அப்பால் ஒரு நிலம். ஈழத்தின் ஆனையிறவு, பரந்தன்,கிளிநொச்சியின் வன்னிக்களமுனை அப்பட்டமாக வெளிப்படுத்தும் இந்நாவல் வேவுகாரர்களின் வாழ்வை உணர்வின் தளத்தில் சித்திரிக்கிறது. செங்கையாழியானின் ‘சாம்பவி’ வேவு புலிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் ஈழத்து நாவல் என்றாலும் அதில் யதார்த்தம் இருக்கவில்லை. உணர்வின் கூர்மையை விட கதை சொல்லியின் கற்பனையே அதில் விஞ்சி நின்றது. குணா கவியழகனின் இந்நாவல் சம்பவங்களின் வாயிலாக மக்களின், போராளிகளின் அனுபவங்களை உணர்வுத் தளத்தில் சித்திரிக்கிறது. வேவுப் போராளி ஏனைய போராளி…
-
- 0 replies
- 449 views
-
-
-
- 0 replies
- 427 views
-
-
-
துயிலாத ஊழ்: சமகால ஈழச் சிறுகதைகள் தீட்டும் கோட்டுச் சித்திரம் – கார்த்திக் பாலசுப்ரமணியன் இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பில் தமிழகத்திலிருந்து வெளிவரும் படைப்புகளுக்கு நிகராக தமிழகத்துக்கு வெளியேயிருந்தும் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு அப்படைப்புகளின் மீது வாசக கவனமும் குவிய ஆரம்பித்துள்ளது. இதற்கு அச்சு நூல்களின் நவீனமயமாக்கம், இணையப் பரவலாக்கம், சமூக ஊடகங்கள் மற்றும் அமேசான் கிண்டில் வழி மின்நூல்களின் வருகை எனப் பல்வேறு காரணங்களைக் கூறவியலும். இவ்வாறு தமிழகத்துக்கு வெளியேயிருந்து வரும் படைப்புகளில் மற்ற நாடுகளிலிருந்து வெளிவரும் படைப்புகளை ஒப்ப…
-
- 0 replies
- 598 views
-
-
முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவே அவன் தீக்குளித்தற்கு காரணம் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம். மாநில அளவில் 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த ஒருவனால் வெறும் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு அல்ல. குடிகார அப்பா, குடும்பத்தை சுமக்கும் தாய், படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச்செல்லும் பிள்ளைகள். இது சினிமா கதையல்ல. முத்துக்குமாரின் செயல் போலவே அவன் வாழ்க்கையும் வியக்கத்தக்கது!
-
- 1 reply
- 2.6k views
-
-
தூய அடிபணிவின் மகிழ்ச்சியற்ற தருணங்கள்: மாஜிதாவின் ‘பர்தா’ ஜிஃப்ரி ஹாசன் July 1, 2023 முஸ்லிம் பெண்களின் ஆடை (குறிப்பாக பர்தா, அபாயா போன்ற ஆடைகள்) குறித்த பார்வைகள் முஸ்லிம் சூழலில் தூய அடிபணிவிற்கான மதப் புனித ஆடையாகவே கருதப்பட்டு வருகிறது. அதன் மீது எந்தவொரு மாற்றுப் பார்வையும் ஏற்புடையதல்ல எனும் கருத்துநிலை தீவிரமாக உறைந்துள்ள ஈழத் தமிழ் முஸ்லிம் சமூக அமைப்பிலிருந்து எழுந்த மாஜிதாவின் பர்தா ஒரு புதிய உடைப்பாகக் கவனத்தை ஈர்க்கும் படைப்பு முயற்சியாகத் தோன்றுகிறது. சென்ற வருடம் வெளியான தமிழ் நாவல்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அதிகப் பிரதிகள் விற்பனையான நாவல்களின் பட்டியலில் பர்தாவுக்கும் ஓர் இடம் உருவாகி இருக்கிறது. இது தமிழ்ச் சூழலில் இந்நாவலின் பேசுப…
-
- 0 replies
- 338 views
-
-
தெணியான் எழுதிய ‘ஏதனம்’ எனும் நாவல் வெளியிட்டுவிழா கொற்றாவத்தை பூமகள் சனசமூகநிலைய பொது நோக்கு மண்டபத்தில் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மணிக்கு கொற்றை.பி.கிருஷ்ணானந்தன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரையை ந.ஆதவனும் வெளியீட்டுரையை க பரணீதரனும் நிகழ்த்தினர். க.தம்பிமுத்து, வதிரி.சி.ரவீந்திரன், க.நவம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். க. ஞானசீலன் நன்றியுறை வழங்கினார். http://thuliyam.com/?p=52258
-
- 0 replies
- 483 views
-
-
தெரிந்தும் தெரியாத தமிழ் - நுாலாய்வு: கிருஸ்ணா நூல் வாங்க: kindle திரு. வி.இ.குகநாதன் அவர்களது தெரிந்தும் தெரியாத தமிழ் என்ற நுாலை kindle மூலம் அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்நுாலைப் படித்த பின்பு அதனைப் பற்றி குறிப்புரை ஒன்றை எழுதினால் நன்றாக இருக்கும் என்ற நோக்கம் தோன்றவே இக் கட்டுரையை எழுத முனைந்துள்ளேன். ஒரு நுாலைப் படிக்கும் போதும் அதன் பக்கங்களைப் புரட்டும் போதும் முன் பின்னாகத் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ள முடியும். ஆனால் இந்த நுாலைக் கின்டிலில் (kindle) படிப்பதால் பக்கங்களைப் புரட்டினாலும் குழம்பி விடுமோ என்ற பயமும் இடையிடையே தோன்றவே செய்தது. ஆனாலும் ஒருவாறு முழுமையாகப் படித்து முடித்த பின்பே இக்கட்டுரையை எழுதுகின்றேன். …
-
- 0 replies
- 1k views
-
-
தெற்கிலிருந்து ஒரு சூரியன்! கருணாநிதி மூன்றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ராஜமாணிக்கம் மூலமாகத் தனது மனதுக்கு நெருக்கமான சிற்பி கணபதி ஸ்தபதியைத் தொடர்புகொள்கிறார். ‘‘ஸ்தபதியாரே, கன்னியாகுமரி கடல்ல வள்ளுவருக்கு ஒரு சிலை வைக்கணும். நாடு இங்கே முடியுதுங்கிறாங்கள்ல! இல்லை; இங்கே நம்ம தமிழ்நாட்டுலேர்ந்துதான் தொடங்குதுங்கிறதைச் சொல்ற மாதிரி அமையணும்! குமரியிலேர்ந்து வள்ளுவர் நேரா இமயத்தைப் பார்க்கிறார்!’’ கன்னியாகுமரி வள்ளுவர் சிலையைப் பார்க்கையில் அந்த உணர்வைப் பெற்றிருக்கிறேன். அங்கு கடலில் விவேகானந்தர் அமர்ந்து தியானித்த பாறை உ…
-
- 0 replies
- 753 views
-
-
இந்நூலின் ஒலிவடிவம் கீழ்க்கண்ட கொழுவியினுள் உள்ளது. சொடுக்கி கேட்கவும் http://pulikalinkuralradio.com/archives/label/audio-book
-
- 0 replies
- 967 views
-
-
தரவிறக்கம் https://noolaham.org/wiki/index.php/ஈழத்தமிழர்_இறைமை சில நூல்கள் அவசரத்துக்கு தேடினால் கிடைக்காது யாராவது இரவல் வாங்கி மறந்து விட்டு விடுவார்கள் அல்லது சேமிப்பு பகுதியில் எங்கு என்ன பெயரில் வைத்தோம் என்று தேட வேண்டி வந்திடும் இங்கு பதிவது இலகுவாக குறிப்புக்கள் எடுக்க உதவும் என எண்ணுகிறேன் நன்றி .
-
- 0 replies
- 637 views
-
-
Share0 ஈழத்தின் முதலாவது தமிழ் கவிதை இதழான தேன்மொழி இதழ் தொகுப்பு வெளியீட்டு விழா எதிர்வரும் (15) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கொக்குவில் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இந்த இதழ் வெளியீட்டு விழா அன்றைய தினம் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. கவிஞல் சோ.பத்மநாதன் தலைமையில் இடம்பெறும் இந்த இதழ் வெளியீட்டு விழாவில் வரவேற்புரையை ந.பிரபாகர் நிகழ்த்த, தி.கோபிநாத்தால் நூலை அறிமுகம் செய்து வெளியிட்டு வைப்பார். அத்துடன் சிறப்பு கௌரவ பிரதியை வரதராசன் தேன்மொழி பெற, கருத்துரைகளை எழுத்தாளர் தி.செல்வமனோகரன் வழங்குவர். ஏற்புரையையும் நன்றியுரையையும் க.பரணீதரன் நிகழ்த்தவுள்ளார். https://newuthayan.com/தேன்மொழி-இதழ்-தொகு…
-
- 0 replies
- 639 views
-
-
தேவகாந்தனின் 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்' இளங்கோ-டிசே 1.பதின்மத்தில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து பாடசாலையில் ஆங்கிலப்பாடங்களை எடுத்தபோது, வாசிப்பதற்கெனச் சில நாவல்கள் எங்கள் பாடத்திட்டத்தில் இருந்தன. ஒழுங்கான ஆங்கிலப் பரிட்சயமில்லாது அதை வாசிக்கும் கஷ்டம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் என்னைப் போன்ற 'புலம்பெயரி'களுக்கு அந்த நாவலின் சூழல், பாத்திர வார்ப்புக்கள் போன்றவை முற்றுமுழுதாக அந்நியமாக இருந்தன. அதனால் பல நாவல்களை 'சும்மா' எழுந்தமானமாய் விருப்பின்றியே வாசித்திருக்கின்றேன். அன்றையகாலத்தில் வாசித்த Great Gatsby, To Kill a Mockingbird, Lord of the Flies போன்றவை மட்டுமே கொஞ்சம் விதிவிலக்கு.எனக்குத் தெரிந்த நகரை, எனக்குப் பரிட்சயமான வாழ்வை, என்னைப் போன்ற மண்ண…
-
- 0 replies
- 552 views
-
-
தொட்டாற்சிணுங்கிகள் அபிலாஷ் சந்திரன் உங்கள் படைப்பை யாராவது கிண்டலடித்தால் தாங்கிக் கொள்வீர்களா? ஜென்ம விரோதியாக பாவிப்பீர்களா அல்லது புறக்கணித்து கூலாக கடந்து விடுவீர்களா? சமீபத்தில் நவீன கவிதை பற்றின நீயா நானாவில் இ.எம்.எஸ் கலைவாணனிடம் கோபிநாத் கேட்டார்: “உங்கள் புத்தகத்தை எடுத்துப் பார்க்கும் நான் இவை வெறும் காகிதங்கள் தானே, வேறு என்ன இருக்கிறது என கேட்டால் என்ன சொல்வீர்கள்?”. அதாவது கோபிநாத் அப்படி கருதி கேட்கவில்லை. ஒரு சாத்தியத்தை பரிசீலிக்கும் நோக்கில் கேட்டார். அதற்கு கலைவாணன் “எனக்கு வலிக்கும்” என தன் கரகர தழுதழுத்த குரலில் சொன்னார். இது ஒரு அணுகுமுறை. இன்னொரு அணுகுமுறை இருக்கிறது. ஒரு படைப்பு வாசகன் வசம் போனபின் அது அவனது பார்வை, புரிதல், கவனம், அக்கற…
-
- 0 replies
- 765 views
-
-
தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள் - ப்ரொமோட் 1 சாரு சொல்வதைப்போன்று புத்தகத்தை எழுதியவனே புத்தகத்தைக் கூவிக் கூவி விற்க வேண்டிய நிலைதான் தமிழ் சூழலில் இப்போதும் நிலவுகிறது. பத்துப் பைசாவுக்கு பிரயோஜனமில்லாத சினிமாவுக்காக ஐந்நூறு, ஆயிரமென்று செலவழிப்பவர்கள் ஒரு புத்தகத்துக்காக நூறு ரூபாய் கூட செலவழிக்க மாட்டார்கள். தமிழ் சமூதாயத்தில் மாத்திரமே காணக்கூடிய மிகக் கேவலமான நிலை இது. 'தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்' தொண்ணூற்றி நான்கு பக்கங்களே கொண்ட மிகச் சிறிய புத்தகம். விலை நூற்றி இருபது ரூபாய். ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் நூறு ரூபாய்க்கு கழிவு விலையில் கிடைக்கிறது. ஆனாலும், ஒரே ஒருவர் மாத்திரம் உங்கள் புத்தகத்துக்கு ஆர்டர் கொடுத்து விட்டேனென தக…
-
- 6 replies
- 2.1k views
-
-
தொலைவில் எழுதியவர். வாசுதேவன் பாரீஸ் நகரிற்கு ஒரு அலுவலாக நான் போக வேண்டியிருந்தது போய் எனது அலுவல்களை முடித்து கொண்டு அன்று எனது நகரத்திற்கு திரும்ப முன்ன பாரீசில் தமிழர் வர்த்தக நிலையங்கள் அதிகமாக அமைந்திருக்கும் லா சப்பல் என்கிற இடத்திற்கு போனபோது தான் இவ்வனவு தூரம் வந்தனான் சில நிமிடம் வாசனையும் சந்தித்து விட்டு போகலாம் என்று அவனது அலுவலகத்தில் நுளைந்தேன் பலவருடங்களின் பின்னர் மீண்டும் கண்டாலும் உடனே அடையாளம் கண்டு எப்பிடி இருக்கிறாய் எங்கே இரக்கிறாய் என்று வழைமையான விசாரிப்புகள் ஒரு பத்து நிமிட சந்திப்பு அதன் இடையில்தான் பகட்டேன் என்னடா நீ ஏதோ புத்தகம் ஏதோ வெளியிட்தாய் எங்கோ வலைப்பூக்களில் படித்த ஞாபகம் என்ன புத்தகம் என்றேன். ஒரு புத்தகத்தை எடுத்…
-
- 3 replies
- 2.4k views
-