Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நூல் அறிமுகம்: 'ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ யதீந்திரா - –ஒரு ஆசுவாசமான காலைப் பொழுதில்தான், கருணாகரனின் கவிதைகள் மீது என் பார்வை பதிந்திருந்தது. ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – தலைப்பைப் போலவே, கவிதைகள் தோறும், போரின் நெடில். கவிதை மற்றும் புனைவுகளை வாசிக்கும் போது, தவிர்க்க முடியாமல் ஒரு சிக்கல் எழுவதுண்டு. பின்-நவீனத்துவவாதிகள் சொல்லுவது போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும், படைப்பாளி இறந்துவிடுவதில்லை. கருணாகரனின் கவிதைகள் மீது பார்வை படர்ந்த போதும், கவிதையுடன் சேர்த்து கூடவே, கருணாகரன் பற்றியும் சிலதையும், மனது அசைபோட்டுக் கொண்டது. எனக்குத் தெரிந்த கருணாகரன், புலிகளின் வன்னி முற்றங்களுக்குள் விமர்சனங்களை பவுத்திரப்படுத்தியவாறு வாழப் பழிகிக்கொண்ட சிலர…

  2. சயந்தனை ஷோபாசக்தியின் குட்டித்தம்பி என்று சொல்லலாம். ஒரே உலகம். ஒரே பார்வை. நாவலின் கதைக்களனும் மையப்பாத்திரமும் கூட கிட்டத்தட்ட ஒன்று தான். ஈழப் போர். ஒரு பக்கம் புலிகளும் இன்னபிற சிறு போராட்ட குழுக்களும். இன்னொரு பக்கம் சிங்கள ராணுவம். இடையில் அரசியலற்ற ஒரு மக்கள் திரள். அவர்கள் இலங்கைப் படை மற்றும் போராட்ட குழுக்கள் மத்தியில் மாட்டிக் கொண்டவர்கள். ஆற்றில் ஒழுக்கில் இழுத்துக் கொண்டு போகப்படும் மரத்துண்டை போன்றவர்கள். கதைசொல்லி இத்திரள் மத்தியில் இருந்து வருகிறவன். அவன் தப்பித்து வெளிநாட்டுக்கு செல்ல முயல்கிறவன். அங்கும் கடும் அரசியல் மற்றும் உளநெருக்கடியை சந்திக்கிறவன். சயந்தனின் நாயகன் வெளிநாட்டு மண்ணை அடைகிற போராட்டத்திலேயே உயிர்விட்டு விடுகிறான். ஷோபாசக்தியின் …

  3. தமிழகத்தில் திருச்சி வேலுச்சாமி அவர்களால் பல இன்னல்களுக்கு மத்தியில் வெளிக்கொண்டுவந்த புத்தகமான ராஜீவ் படுகொலை தூக்கு கயிற்றில் நிஜம்” புத்தகம் 20.01.2013 ஞாயிற்றுக்கிழமை லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள 338 London Road, Mitcham, London CR4 3UD எனும் முகவரியில் வெளியிடப்பட உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க பல புலம்பெயர் முக்கியஸ்தர்கள், ஊடகவியளாலர்கள்,ஆய்வாளர்கள் என பலர் கலந்துகொண்டு இப்புத்தகத்தைப் பற்றி உரையாற்ற உள்ளார்கள். புலம்பெயர் ஊடகவியலாளர்கள் புத்தகத்தை வெளியிட புலம்பெயர் மக்கள் பெற்றுக்கொள்ள இருக்கின்றார்கள். செய்யாத குற்றத்திற்காக தூக்கிலிடப்பட இருந்த அப்பாவி தமிழர்களை தன்னுடைய அசுரத்தனமான துணிச்சலால் பல முறை தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்ற காரணமாக இருந்த…

  4. அறம் சார்ந்து வாழ விரும்புகிற மனிதர்கள் பெரும்பாலும் குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அறம் குறித்த சிந்தனையே இல்லாத இடத்தில் எனக்கான வாழ்க்கை எது? அறத்துக்கும் அன்புக்கும் சமூக வாழ்விலும் தனிமனித வாழ்விலும் உள்ள இடம் எது? இந்தக் கேள்விகள் உருவாக்கும் வெளி அவற்றின் பதிலைவிட மேலானது. ஜோ டி குருஸின் 'அஸ்தினாபுரம்' நாவல் இப்படியான வெளியில் வாசகர்களைப் பயணிக்க வைக்கிறது. 'அஸ்தினாபுரம்' நவீன வாழ்க்கையின் யுத்த பூமி. இந்த யுத்தம் மறைமுகமானது. ஆகவே சிக்கலானது. எதிரியைத் தனித்து அறிய முடியாத இடத்தில் நடக்கிற வேறு யுத்தம். வெற்றியும் தோல்வியும் யுத்தத்தில் தவிர்க்க முடியாதவை. அதுபோல அழிவும் ஆக்கமும் உண்டு. யாருக்கு வெற்றி, யாருக்கு வாழ்வு? என்ப…

    • 0 replies
    • 781 views
  5. டாக்டர் நோயல் நடேசன் ஆஸ்திரேலியாவில் கால்நடைமருத்துவராகப் பணியாற்றுகிறார். வண்ணாதிகுளம், அசோகனின் வைத்தியசாலை போன்ற சிறப்பான நாவல்களையும் வாழும் சுவடுகள் என்ற விலங்குகளுக்கான சிகிட்சை அனுபவத் தொகுப்பு நூலையும் எழுதியிருக்கிறார். ஆஸ்ரேலியாவில் 12 ஆண்டுகளாக ‘உதயம்’ என்ற பத்திரிகையை தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட்டுள்ளார். அவரது சமீபத்திய புத்தகமான நைல் நதிக்கரையோரம் என்ற பயணநூலை வாசித்தேன். சுவாரஸ்யமாக, வரலாற்றுத் துல்லியத்துடன் எழுதப்பட்ட சிறந்த பயணநூலது. ஒரு மருத்துவரின் பார்வையில் வரலாறு அணுகப்படுகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. பொதுவாக நான் தமிழில் வெளியாகும் பயணநூல்களைப் படிப்பதில்லை. பெரும்பான்மை பயணநூற்கள் எங்கே என்ன சாப்பிட்டோம். புகைப்படம…

  6. தொட்டாற்சிணுங்கிகள் அபிலாஷ் சந்திரன் உங்கள் படைப்பை யாராவது கிண்டலடித்தால் தாங்கிக் கொள்வீர்களா? ஜென்ம விரோதியாக பாவிப்பீர்களா அல்லது புறக்கணித்து கூலாக கடந்து விடுவீர்களா? சமீபத்தில் நவீன கவிதை பற்றின நீயா நானாவில் இ.எம்.எஸ் கலைவாணனிடம் கோபிநாத் கேட்டார்: “உங்கள் புத்தகத்தை எடுத்துப் பார்க்கும் நான் இவை வெறும் காகிதங்கள் தானே, வேறு என்ன இருக்கிறது என கேட்டால் என்ன சொல்வீர்கள்?”. அதாவது கோபிநாத் அப்படி கருதி கேட்கவில்லை. ஒரு சாத்தியத்தை பரிசீலிக்கும் நோக்கில் கேட்டார். அதற்கு கலைவாணன் “எனக்கு வலிக்கும்” என தன் கரகர தழுதழுத்த குரலில் சொன்னார். இது ஒரு அணுகுமுறை. இன்னொரு அணுகுமுறை இருக்கிறது. ஒரு படைப்பு வாசகன் வசம் போனபின் அது அவனது பார்வை, புரிதல், கவனம், அக்கற…

  7. இணையத்தில் விரியும் தமிழ் நூலகங்கள் நூலகம் சென்று படிக்கும் ஆர்வம் சற்று குறைந்து வரும் இக்காலத்தில் இணையத்தில் பல மின்னியல் நூலகங்கள் உருவாகி வருகின்றன. பெரிய நூல்களையும் அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களையும் ஒளி அச்சு முறையில் எடுத்தும் மின்னியல் நூலகத்தில் சேர்த்துள்ளார்கள். அதிலும் இந்திய மொழிகளில் தமிழ் நூல்களே அதிகமாக மின்பதிப்பாக்கம் பெற்றுள்ளன என்பது நமக்கெல்லாம் பெருமை. உலக மின்னியல் நூலகம் உலக மின்னியல் நூலகம் (http://catalog .crl.edu) என்பது, UNESCO மற்றும் அமெரிக்க காங்கிரஸ் நூலகம் இணைந்து வழிநடத்தும் அனைத்துலக மின்னியல் நூலகமாகும். உலக மின்னியல் நூலகத்திற்கு உலகளாவிய அளவில் 30 - மேற்பட்ட தேசிய நூலகங்களோடும், கல்வி நூலகங்களோடும் ஒப்பந்த இணைப்பும…

  8. "வெந்து தணியாத பூமி" இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை (26.03.2022) அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் திரு. வரதன் கிருஸ்ணா அவர்கள் எழுதிய "வெந்து தணியாத பூமி" புத்தகம் வெளியிடப்படவுள்ளது. இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த வரதன் கிருஸ்ணா அவர்கள் ஈழப் புரட்சி அமைப்பில் (Eelam revolutionary organisation - EROS) இணைந்து செயல்பட்டவர். தற்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார். மலையக மக்கள் வாழ்வு, அரசியல் மற்றும் தமது ஈழப் போராட்ட அனுபவங்கள் குறித்து மிக ஆழமான பார்வையையும், திறனாய்வுகளையும் வரதன் கிருஸ்ணா இந்நூலில் வெளிக்கொண்டு வந்துள்ளார். சமாதானத்திற்கான கனேடியர்கள் ஸ்ரீலங்கா சார்வு வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. இலண்டன…

  9. லண்டன்காரரும் BMM புரட்சியும். சேனன் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் குறித்த ஒரு பார்வை. எஸ்.வாசன் - நூல் அறிமுகம் நவீன தமிழ் இலக்கிய மரபானது புலம்பெயர் இலக்கியப் படைப்புக்களினால் இன்னொரு பரிமாணத்திற்கு நகர்த்திச் செல்லப் பட்ட போதிலும் இதுவரை வெளிவந்த அநேகமான புலம்பெயர் இலக்கியப் படைப்புக்கள் யாவும் தாயகம் நோக்கிய எண்ணங்களையும் ஏக்கங்களையும் பிரதிபலிப்பவையாக அல்லது புலப்பெயர்ந்த ஒரு நிலத்தில் அவர்கள் எதிர்நோக்கிய புதிய நெருக்கடிகளின் வெளிபாடுகளாகவும் மட்டுமே அமைந்திருந்தன. இவற்றிட்கு மாறாக இப்புலம்பெயர் மண்ணில் தாம் எதிர் நோக்குகின்ற நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர் கொள்கின்ற மற்றைய சமூகங்களையும் கதை மாந்தர்களாக கொண்டு அம்மண்ணின் மைய அரசியல…

  10. ஈழத்தில் பிரபல எழுத்தாளர் சர்மிலா வினோதினியின் மொட்டப்பனையும் முகமாலைக் காத்தும் என்கின்ற சிறுகதைத் தொகுப்பு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் இன்றைய தினம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த நூலை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்போது, வவுனியா தேசிய கல்வியற் கல்லாரியின் நிதி நிர்வாக உப பீடாதிபதி பொ.சத்தியநாதன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் ஒய்வு நிலை கல்வியலாளர் க.தர்மராசா மற்றும் ஓய்வு நிலை அதிபர் மணலாறு விஜயன் உற்பட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குற…

    • 1 reply
    • 767 views
  11. தெற்கிலிருந்து ஒரு சூரியன்! கருணாநிதி மூன்றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ராஜமாணிக்கம் மூலமாகத் தனது மனதுக்கு நெருக்கமான சிற்பி கணபதி ஸ்தபதியைத் தொடர்புகொள்கிறார். ‘‘ஸ்தபதியாரே, கன்னியாகுமரி கடல்ல வள்ளுவருக்கு ஒரு சிலை வைக்கணும். நாடு இங்கே முடியுதுங்கிறாங்கள்ல! இல்லை; இங்கே நம்ம தமிழ்நாட்டுலேர்ந்துதான் தொடங்குதுங்கிறதைச் சொல்ற மாதிரி அமையணும்! குமரியிலேர்ந்து வள்ளுவர் நேரா இமயத்தைப் பார்க்கிறார்!’’ கன்னியாகுமரி வள்ளுவர் சிலையைப் பார்க்கையில் அந்த உணர்வைப் பெற்றிருக்கிறேன். அங்கு கடலில் விவேகானந்தர் அமர்ந்து தியானித்த பாறை உ…

  12. மிலான் குந்தேராவின் 'அறியாமை' Ignorance by Milan Kundera மிலான் குந்தேராவின் 'அறியாமை' (Ignorance) இடம்பெயர்ந்தவர்கள் மீளவும் தாய்நிலம் செல்லும் சாத்தியம்/சாத்தியமின்மைகளைப் பேசுகிறது. செக் நிலப்பரப்பு ரஷ்யா படைகளால் 1969ல் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இருபது வருடங்களின் பின் உலக நிலைமைகள் மாற, செக் மீண்டும் சுதந்திரம் பெறுகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்பால் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்த பெண் மீள தாய்நிலம் மீள்வது இந்நாவலின் பல்வேறு இழைகளில் ஒரு முக்கிய நிகழ்வாக‌ இருக்கிறது. இரினா இரண்டு குழந்தைகளுடன் கணவனுடன் பிரான்ஸிற்குப் புலம்பெயர்ந்தவள். கணவன் இறந்துபோய், பிள்ளைகளும் வளர்ந்துவிட,அவளுக்கு இப்போது சுவீடனைச் சேர்ந்த கஸ்தோவ் என்கின்ற காதலனும் இ…

  13. அல்பேர் காமு: தமிழுலகில் புரிந்தும் புரியாமலும் இருக்கும் பிரான்ஸிய இலக்கிய ஆளுமை -தேவகாந்தன்- அண்மையில், மூன்றாவதாக இப்போது அமைந்துவரும் என் நூலக அடுக்கிலிருந்த அல்பேர் காமுவின் மரணத்தையொட்டி ழீன் போல் சார்த்தரும், செர்ஜி துப்ரோவ்ஸ்கியும் வெளியிட்ட பிரெஞ்சு மொழியிலான இரங்கல் செய்திகளின் ஆங்கிலம் வழியிலாக நண்பர் தேனுகா தமிழில் மொழிபெயர்த்து ‘அகரம்’ வெளியிட்டிருந்த ஒரு கையடக்கமான சிறுநூல் மறுபடியுமான எனது வாசிப்புக்குத் தட்டுப்பட்டது. வாசிப்பின் பின்னூட்டமாய் தொடர்ந்து விளைந்த யோசிப்புக்களின் காரணமாக, தமிழ்ப் பரப்பில் அல்பேர் காமு என்கிற பேராளுமைபற்றிய அறிகை பெரிதாக ஏற்படவில்லையோ என்று தோன்றத் தொடங்கியது. ஓரளவு ஏற்பட்டிருந்தாலும், விமர்சகர்கள் படைப்பாளிகள் வாசகர்க…

  14. நடிகர் பொன்வண்ணன் & பதிப்பர் ஒளிவண்ணன் பேரழைப்பு : தமிழர் வரலாற்று மா.சோ.விக்டர் புத்தகங்களை பெற வரலாற்று பெரும் ஆவணங்களாக ஐயா மாசோ விக்டர் அவர்களின் புத்தகங்களை பெற மிகப்பெரிய வாய்ப்பு இது. அவருடைய 124 புத்தகங்களை வெளிக்கொண்டு வரும் விதமாக முதல் தவணையாக 25 புத்தகங்களை கொண்டுவருவதோடு மட்டுமின்றி அந்த புத்தகங்களை முன்பதிவு திட்டத்தில் மிகக்குறைந்த விலையில் பெறுவதற்கு முன்பதிவு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. சுமார் 14000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் இந்த முன்பதிவு திட்டத்தின் மூலமாக 8000 ரூபாய்க்கு வழங்க இருக்கிறார்கள். இந்த திட்டம் சம்மந்தமான புத்தகங்கள் இந்த காணொளியில் இறுதியில் அந்த புத்தகங்களில் அட்டைப்படங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறத…

  15. ஜோர்ச் ஓவலின் '84', டாஸ்ற்றாஎவ்ஸ்க்கியின் 'த இடியற்' மற்றும் 'கிறைம் அன்ட் பணிஷ;மன்ற்' ஆகிய மூன்று நாவல்களையும் வாசித்து முடித்த கையோடு, நான்காவதை ஆரம்பிக்கை நினைக்கையில் வேதாளம் தோளில் ஏறி அமர்ந்துகொண்டது. இருபது வருடங்கள் பழக்கமான வேதாளம் தான். 'இங்கிலீசு புத்தகம் தான் படிக்கிறீங்கள் போல...ம் படியுங்கோ படியுங்கோ...அண்ணை தமிழோ...' என்ற தோரணையிலேயே வேதாளம் பேசும். வேதாளத்தோடு விவாதம் சரிப்படாது. விதண்டாவாதத்தில் நேரத்தைச் செலவழிப்பதிலும் ஒரு சில தமிழ் நூல்களைப் படித்து விட்டு நகர்ந்தால் வேதாளம் மறைந்து தொலையும். சோபாசக்த்தி புதிதாய் எதையும் எழுதியதாய்த் தெரியவில்லை. ஜெயமோகனின் எழுத்தில் இப்போது அலுப்புத் தட்டத் தொடங்குகிறது—'டார்த்தனியம'; எழுதிய ஜெயமோகன் இறந்து விட்…

  16. http://inioru.com/?p=26837 ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – லண்டன் விமர்சனக் கூட்டத்தில் சஷீவன் நிகழ்விற்குத் தலைமை தாங்கியதனால், நூல் தொடர்பான எனது கருத்துக்களை முழுமையாகப் பதிவு செய்ய முடியவில்லை. ஆயினும், பேச்சாளர்களின் கருத்துக்களிடையே அவர்களை மறுத்தும் ஏற்றுக்கொண்டும் சில விடயங்களைப் பதிவு செய்திருந்தேன். கட்டுரை என்ற வடிவத்தில் வைத்துப் பார்க்க முடியாது. அதற்கான தொடர்ச்சித்தன்மையையும் இப்பதிவில் எதிர்பார்க்க முடியாது. - சசீவன் - மனிதர்கள் தமது வரலாற்றைத் தாமே உருவாக்குகிறார்கள். ஆனால் தமது விருப்பத்திற்கேற்ப அதை அப்படியே உருவாக்குவதில்லை; அவர்களே தேரிந்தெடுத்துக் கொண்ட ஒரு சூழலில் அவர்கள் அதை உருவாக்குவதில்லை. ஆனால் கடந்த காலத்திலிருந்…

  17. குலாத்தியாச்சே போர்( ஒரு குலாத்திக் குழந்தை) இந்த புத்தகம் மிகவும் வினேதமான சமூகத்தை அறிமுகப்படுத்தியதால் அதை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன். குலாத்தியாச்சே போர்: மராத்திய மொழியில் உருவான ஒரு தலித் காவியம். ஆசிரியர்: மறைந்த டாக்டர் கிஷோர் சந்தாபாய் காலே. ஆங்கில மொழிபெயர்ப்பு: சந்தியா பாண்டே தமிழில்: குலாத்தி ( தந்தையற்றவன்). ஆங்கிலம் வழி தமிழில்: வெ. கோவிந்தசாமி. “ வித்தியாசமான முரசொலியை கேட்பதால்தான் ஒரு மனிதனால் தன் சக நண்பர்களுடன்சமநடை போடமுடியவில்லை போலும்” என்று தோரோ எழுதியுள்ளார். வித்தியாசமான முரசொலியை கேட்கும் திறன் பெற்ற, அதன் இசைக்கு எதிர்வினை செய்கின்ற, மனிதர்களால் மட்டுமே தாங்கள் …

  18. ஆக்காண்டி-இஸ்லாமபோபியா நாவல். September 28, 2023 சேனன் லண்டனில் திரள் குழுமம் 16-09-2023 அன்று நடத்திய கூட்டத்தில் முன்வத்த கருத்துக்கள் சில. திரள் குழுமம் காணொளியை வெளியிடுவதாக சொல்லி உள்ளார்கள் – வந்ததும் இங்கு பதிவிடப்படும் 1 ஆக்காண்டி ஒரு அரசியல் நாவல் என அறியப்படுவதால் அதுபற்றிப் பேசமுடியுமா என திரள் குழுமம் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நடேசன் கேட்டிருந்தார். நாவலைப் படிக்க முதலே எனக்கு நிறைய தயக்கங்கள் இருந்தது. ஜெப்னா பேக்கரி என்ற தனது நாவல் மூலம் இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர் ஆனவர் வாசு முருகவேல். ஜெப்னா பேக்கரி நாவலின் அரசியல் பின்னணி எனக்கு உடன்பாடற்றது. அந்த நாவலை தொடர்ந்து, வாசு முருகவேல் தன்னை அடையாளப் படுத்திக்…

  19. இந் நிகழ்வு ஜூன் 6 ஆம் திகதி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கனடா கந்தசாமிக் கோவிலில் இடம்பெறும். இங்கு விடமேறிய கனவு நாவலும், நஞ்சுண்ட காடு நாவலும் விற்பனைக்கு வரும் என்பதை அறிய முடிகின்றது.

  20. நேர்காணல்: விருது கிடைக்கும் என்று நினைக்கவில்லை! Last Updated : தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர் டி.செல்வராஜ். அவருடைய "மலரும் சருகும்', "தேநீர்' நாவல்கள் வாசகர் மனதில் என்றும் கமழ்பவை. "தேநீர்' நல்ல திரைப்பட முயற்சி. அண்மையில் அவர் எழுதிய "தோல்' நாவலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. மனித வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைக் கலையழகுடன் சித்திரிக்கும் படைப்பாளியான அவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரும் கூட. தமிழக அரசின் விருது பெறுவதற்காகச் சென்னைக்கு வந்திருந்த அவரிடம் பேசியதிலிருந்து... நான் தமிழில் எழுதுவேன் என்று என் சிறு வயதில் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஏனென்றால் நான் பள்ளியில் படிக்கும்போது முழுக்க முழுக்க ஆங்கில…

    • 0 replies
    • 747 views
  21. அப்போது ஜேவிபி கிளர்ச்சிக்காலம். 1971ம் ஆண்டு. சரத்ஹாமு தென்னிலங்கையிலே ஹக்மண என்ற ஊரில் வாழ்கின்ற தனவந்தர். ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். கௌரவமாக வாழும் குடும்பம். சரத்ஹாமுவின் மனைவி உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். ஒருநாள் அந்தப்பாடசாலையில் இன்னொரு ஆசிரியையும் இணைகிறார். அந்த ஆசிரியை அண்மையில் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சமரநாயக்காவின் மனைவி. நாளடைவில் இரண்டு ஆசிரியைகளும் நண்பிகளாகிவிடுகிறார்கள். தினமும் பாடசாலை முடிந்தபின் மனைவியை ஜீப்பில் அழைத்துப்போகவரும் இன்ஸ்பெக்டர், அந்த தனவந்தரின் மனைவிக்கும் லிப்ட் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஒருநாள் அப்படி இறக்கிவிடும்போது உள்ளேபோய் ஒரு டீயும் குடிக்கிறார். இன்ஸ்பெக்டர் குடும்பமும் த…

  22. நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால் Monday, September 16, 2024 மனிதர்களுக்கு எங்கே சுற்றினாலும், எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் மனதை விட்டுப் போகாத ஒன்று. அவர்களின் சிறு வயதில் சுற்றித் திரிந்த இடங்கள், பழகிய மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என அதுவொரு திரும்பிப் போக முடியாத காலம். சொந்த ஊரின் நினைவுகள் இருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு அந்த பொக்கிஷங்கள் கிடைக்கவில்லையே என கழிவிரக்கம் கொண்டாலும், கடைசியில் யாதும் ஊரே யாவரும் கேளிரே என இந்த நாவலில் நாயகன் பழனிக்குமார் உணர்கிறான். விவசாயம் செய்த தனது கிராமத்தில் இருந்து மதுரைக்கு வேலைக்குப் போனவன் பழனிக்குமார். அவனுடைய மனைவி ராதாவின் ஊர் கோ…

  23. மெசப் பெத்தோமிய சுமேரியரின் நூல் வெளியீடும் சில ஆலோசனைகளும் http://www.yarl.com/forum3/index.php?showtopic=139970 வாழ்த்துக்கள், சுமே. புத்தகம் வெளியிடுவதும், அதனை விற்று பணத்தினை கையில் எடுப்பதில் உள்ள வலியினை அறிவேன். இலகுவானதல்ல. பகிடியாக இருந்தாலும், ரதி அக்கா சொன்னது உண்மைதான். யாழ் களம் தந்த மேடையிலே, நான் ஆரம்பத்தில் சில ஆக்கங்களை எழுத, எல்லோரும் ஆகா, ஓகோ என்று சொல்ல, சரி முயல்வோமே என, தமிழிலொரு ஆக்கமும், ஆங்கிலத்தில் ஒரு ஆக்கமும் எழுதி பிரசுரித்தேன். ஆங்கில ஆக்கத்தினை ஆங்கில புனை பெயருடன் பிரசுரித்தேன், கல்வியுடன் தொடர்பானதால் நல்ல வரவேற்பு. இதன் மூன்றாவது பதிப்பு இந்த கோடை காலத்தில்.... இப்போது ஒரு முக்கியமான ஆக்கமொன்றினை ஆங்கிலத்தில் முயல்கின்றேன். …

    • 2 replies
    • 744 views
  24. ஏன் மகாபாரதத்தை எழுதுகிறேன்? ஜெயமோகன் ஓவியம்: ஷண்முகவேல் காவியத்திற்கும் நாவலுக்குமான வேறுபாடு என்ன? காவியம் என்பது ஒரு பண்பாட்டில் புழங்கும் கதைகளையும் அடிப்படைப் படிமங்களையும் தொகுத்து ஒற்றைக் கட்டுமானமாக ஆக்குகிறது. அதன் வழியாக ஒரு மையத்தை நிறுவுகிறது. அது அந்தக் காவியத்தின் தரிசனம் என்கிறோம். கேரளத்திலுள்ள ஆலயங்களில் மையத்தில் குடம் என்ற அமைப்பு உண்டு. எல்லா உத்தரங்களும் ஒன்றுசேரும் இடம். குடம்பூட்டுவது பெருந்தச்சன் செய்யவேண்டிய பணி. காவியம் என்பது ஒரு சமூகத்தின் குடம். ஒருசமூகம் என்பது மக்கள் சேர்ந்து ஒன்றாக வாழும்போது உருவாவது. அவர்கள் சேர்ந்து சிந்திக்கும்போது உருவாவது பண்பாடு. மக்கள் கதைகளினூடாக படிமங்களினூடாகச் சிந்திக்கிறார்கள். அ…

    • 1 reply
    • 742 views
  25. நாம் 26 பேர் இணைந்து 2014 -2015 வரை எழுதிய தொடர் "விழுதல் என்பது எழுகையே" ஆறு மாதகாலக் கடும் முயற்சியில் நாவலாக நூலாக்கம் பெற்றுள்ளது. இதற்காக முயற்சி எடுத்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி. இந்த அட்டைப்படத்தை எமக்காக இலவசமாக வடிவமைத்துத் தந்த மூனா அண்ணாவுக்கும் நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.