நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
எழுத்துக்கு முழுக்கு: எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவிப்பு எழுத்தாளர் பெருமாள் முருகன் | கோப்புப் படம் தமிழ் இலக்கியப் பணியில் இருந்து முற்றிலும் விலகுவதாகவும், இனி ஆசிரியர் பணியை மட்டும் தொடரவுள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவித்துள்ளார். திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, சில இந்து அமைப்புகள் 'மாதொருபாகன்' நாவலின் பிரதிகளைச் சமீபத்தில் எரித்துப் போராட்டம் நடத்தின. எழுத்தாளர் பெருமாள் முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதேவேளையில், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அந்த அமைப்புகளின் செயலைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் …
-
- 16 replies
- 3k views
-
-
வன்னி வரலாறும் பண்பாடும் என்ற நூலின் அறிமுக விழா பாரிசில் எதிர்வரும் 18.01.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10. மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரை 5 RUE PIERRE L'ERMITE 75018 PARIS (லா சப்பல் மெத்ரோ நிலையத்திற்கு அருகில் ) என்றமுகவரியில் நடைபெறவுள்ளது. இந்த நூல் அறிமுக விழாவில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள வர்கள் தொர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இல. 0652176260
-
- 2 replies
- 795 views
-
-
700 அரங்குகள் | 5,00,000 தலைப்புகள் | 20,00,000 வாசகர்கள் புத்தகக் காதலர்கள் ஆவலுடன் காத்திருந்த திருவிழா கொண்டாட்டத்துடன் நேற்று தொடங்கியது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் 38-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. 38 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்வமும் அக்கறை யும் மிக்க சில பதிப்பாளர்கள், புத்தக விற்பனை யாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி). வாசகர்களிடம் புத்தக வாசிப்பு தொடர்பான ஆர்வத்தை விதைப்பதற்கும், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலரையும் ஊக்கத்துடன் இயங்…
-
- 11 replies
- 3.5k views
-
-
யாழ்ப்பாண அகராதி (இரண்டு தொகுதிகள்) சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை விலை: ரூ. 620 வெளியீடு: தமிழ்மண் பதிப்பகம் தமிழில் நாம் அறிந்த சொற்களைக் கணக்கிட முடியுமா? உண்மையில் லட்சக் கணக்கான தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான சொற்கள்புழக்கத்திலிருந்து மறைந்துவிட்டாலும் இலக்கியங்களிலும் நிகண்டுகள், அகராதிகள் போன்றவற்றிலும் அந்தச்சொற்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அவை போன்ற 58,500 சொற்களுக்கான பொருளுடன் 1842-ல் வெளியான முக்கியமான அகராதிகளுள் ஒன்றுதான் ‘யாழ்ப்பாண அகராதி’. சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை ஆகிய இரண்டு இலங்கைத் தமிழறிஞர்கள் தொகுத்த இந்தப் புத்தகம், இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டன. அந்த அகராதியைத் தேடிப்பிடித்து இப்போது தமிழ் மண்…
-
- 3 replies
- 1.1k views
-
-
தவறவிடக் கூடாத புத்தகங்கள்: சந்தி பிரிக்கப்பட்ட பாரதி பதிப்பாசிரியர்: பழ.அதியமான் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து… ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு ஆகிவிட்ட பாரதி கவிதையில் அவர் என்ன நவீனமான சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் இன்றைய நவீன வாசகனுக்குப் பொருள் தெரியாத சொற்கள் அதிகமாக இருக்கின்றன. பழந்தமிழ்ச் சொற்கள், தமிழாகிய சம்ஸ்கிருதச் சொற்கள், சித்தாந்த சொற்கள், சென்ற நூற்றாண்டில் மிகுதியும் பயன்படுத்தி, இந்நூற்றாண்டில் வழக்கு குறைந்த சொற்கள் என அவை பலவாறு அமையும். பழந்தமிழ் சொற்களில் சில அல், எல், அளி, முரல், வாலை, நால்வாய், தூத்திரை என்பன சில சான்றுகள். தமிழாகிய சம்ஸ்கிருத சொற்களில் சில கன்னன் (கர்ணன்), வன்னக் களஞ்சியம் (வர்ணக்களஞ்சியம்) போன்றன. தொடக்க காலத்தில் க…
-
- 12 replies
- 3.5k views
-
-
கலாதி எஸ். றஞ்சகுமார் தீ (நாவல்) எஸ். பொன்னுத்துரை வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில். பக்கம்: 136 விலை: ரூ. 120 தீக்குள் விரலை வைத்தால் தீண்டும் இன்பம் தோன்றும்’ என்று ரைக்கப்பட்ட பொதுப்புத்தியில் உழல்வதே சராசரித் தமிழ்மனம். ஒரு தளத்தில் மட்டிட்டு நோக்குகையில் இது மகா வாக்கியம் ஒன்றே. தீண்டும் இன்பத்தை இவ்வாறு அழகுறப் பிரசித்தப்படுத்தியவனும் இலேசுப்பட்டவனல்லன். தீண்டும் இன்பத்தைப் பற்றியதொரு விசாரமாக ‘தீ’ வெளியாகியபோது, கலையும் இலக்கியமும் தீண்டாமை, தீட்டு என்பன பற்றியதாக இருத்தலே சாலச் சிறந்ததும், காலப் பொருத்தமும் என்ற ஆக்ஞைகளுடனும் ஆய்க்கினைகளுடனும் ஈழத்து இலக்கியப் பரப்பு ‘கலாதி’யாக இயங்கிக் கொண்டிருந்தது. (கலாதி என்னும…
-
- 0 replies
- 651 views
-
-
கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகள். என்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான் கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச் சொல்கிறேன். ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன் ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட வேண்டியவை. இருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக, கவிதைகளாக, ஒலிப்பேளைகளாக, ஒளிச்சித்திரங்களாக சிறகடித்து வலம் வருகின்றன. தமிழ…
-
- 0 replies
- 3.9k views
-
-
-
மாதொருபாகன் நாவலின் அட்டைப்படம் நாமக்கல் அரசு கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியரும் பிரபல தமிழ் எழுத்தாளருமான பெருமாள் முருகன் எழுதி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான மாதொருபாகன் என்கிற நாவல் திருச்செங்கோட்டின் பிரபல கோவில் திருவிழாவையும், ஹிந்துமதக்கடவுளரையும், இந்து பக்தர்களையும் இழிவு செய்வதாக ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. எனவே மாதொருபாகன் நாவலை அரசு தடை செய்யவேண்டும் அந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனை கைது செய்து தண்டிக்கவேண்டும் என்றும் கோரி இவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்கள். மாதொருபாகன் நாவல் நாத்திகத்தை பரப்பும் நோக்கிலானது என்கிறார், இந்த நாவலை தடைசெய்யக்கோரும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் உறுப்பினர் …
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜெருசலேம் : உலகத்தின் வரலாறு’ என்னும் இந்தப் புத்தகத்தின் நவீன ஜெருசலேம் நகரத்தின் வரலாற்றைச் சொல்லும் புத்தகம். இது கிறித்துவத்தையோ யூதத்தையோ இஸ்லாத்தையோ சித்திரிப்பது அல்ல. மாறாக நவீனக் காலகட்டத்தின் ஜெருசலேத்தின் வரலாற்றை மட்டும் சொல்கிறது. பிரிட்டிஷ் பத்திரிகையாளர் சைமன் சிபாக் மாண்டிஃபையர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். 2011-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் புத்தகம் இப்போது சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டித் தமிழில் சந்தியா வெளியீடாக வரவுள்ளது. அதன் முன்னுரையில் இருந்து ஒரு பகுதி... தேவாலயம் கட்டுவதற்குத் தோண்டும் இடத்தில் குளங்குளமாக எலும்புகள். தளபதிகளும் பணியாட்களும் தம் ராஜ விசுவாசத்தை அரசருக்கு நிரூபிக்க விரல்களை வெட்டிப் பரிசளிக்க வேண்டும். அவருக்குக் கோபம் வந்தா…
-
- 0 replies
- 1.3k views
-
-
Date: 09/02/14 In: Books, News திருமறைக்கலாமன்றம் கலைத்தூது அழகியற்கல்லூரி மண்டபத்தில் இன்று மாலை மூன்று மணியளவில் கவிஞர் நெற்கொழுதாசனின் “ரகசியத்தின் நாக்குகள்” நூல்வெளியீட்டு விழா , கவிஞர் மற்றும் அரசியில் ஆய்வாளர் நிலாந்தனின் தலைமையில் நடைபெற்றது. இலக்குவிய குவிய கீதம் அறிமுகத்தோடு, புத்தக வெளியீடு நடைபெற்றது. முதல் பிரதியினை நிலாந்தன் வழங்க மீராபாரதி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வரவேற்புரையை ஜே.வினோத் அவர்கள் வழங்கினார்கள். தலமையுரையினை வழங்கிய நிலாந்தன் அவர்கள், நெற்கொழுதாசனின் கவி ஆளுமைகள் பற்றியும், இலகுவான எழுத்துநடை பற்றியும் சிறப்பான பாராட்டினை வழங்கியிருந்தார். தொடர்ந்து வெளியீட்டுரையினை கவிஞர் சோ.பத்மநாதன் வழங்கினார். “இளம் கவிஞர்கள் அதிகம் வாசிக்கவேண்ட…
-
- 31 replies
- 2.7k views
-
-
ஓ.வி. விஜயனின் ‘கசாக்கிண்ட இதிகாசம்’ மலையாளத்தின் செவ்வியல் நாவல். 1969-ம் ஆண்டு வெளிவந்த இது இதுவரை 50க்கும் மேற்பட்ட பதிப்புகள் கண்டுள்ளது. தெற்காசியாவில் அதிகம் விற்பனையான நவீன நாவல் என்ற சிறப்பும் இதற்குண்டு. ஓ.வி.விஜயன் எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற பன்முக அடையாளம் கொண்டவர். ‘தி இந்து’ வில் கார்டூனிஸ்டாகப் பணியாற்றியவர். பல உலக மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பகம், சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி இந்நாவலைத் தமிழில் கொண்டுவரவிருக்கிறது. எழுத்தாளர் யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ள இந்நாவலில் இருந்து ஒரு பகுதி… அழுதுகொண்டு வீட்டுக்குச் செல்லக் கூடாது. ஆபிதா முகங்கழுவி ஆசுவாசமடைய ஓடைப் பக்கம் நடந்தாள். ஓடையோரத்தில் அப்புக்கிளி தும்பி பிடித…
-
- 0 replies
- 691 views
-
-
கடந்த ஆண்டில் கவனம் பெற்ற சுற்றுச்சூழல், இயற்கை, காட்டுயிர் நூல்கள் பற்றி ஒரு பார்வை: மௌன வசந்தம் உலகின் முக்கிய 100 புத்தகங்களில் தவறாமல் இடம்பிடிக்கும் சுற்றுச்சூழல் புத்தகம் மௌன வசந்தம். வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியும் பிரபலம் குன்றாத நூல். கடந்த ஆண்டுதான் தமிழில் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டது. ரசாயன விவசாயத்தின் பாதிப்புகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய இந்த நூலே, அந்த விவசாயம் மனித உடல்நலனுக்கும் பூமியின் ஆரோக்கியத்துக்கும் ஏற்படுத்தும் கேடுகளையும் ஆதாரப்பூர்வமாக முதன்முதலில் எடுத்துச் சொன்னது. உலகில் சுற்றுச்சூழல் அக்கறையைத் தீவிரமடையக் காரணமாக இருந்த இந்த நூல், வாசிப்பிலும் தனி அனுபவத்தைத் தரக்கூடியது. மௌன வசந்தம், ரேச்சல் கார்சன், தமிழில்: பேராசிர…
-
- 0 replies
- 2.2k views
-
-
மிக பிரபலமானவர்களை கொண்டு வெளியீடு செய்கின்றீர்கள் .வாழ்த்துக்கள் சாத்திரி .
-
- 7 replies
- 917 views
-
-
சயந்தனை ஷோபாசக்தியின் குட்டித்தம்பி என்று சொல்லலாம். ஒரே உலகம். ஒரே பார்வை. நாவலின் கதைக்களனும் மையப்பாத்திரமும் கூட கிட்டத்தட்ட ஒன்று தான். ஈழப் போர். ஒரு பக்கம் புலிகளும் இன்னபிற சிறு போராட்ட குழுக்களும். இன்னொரு பக்கம் சிங்கள ராணுவம். இடையில் அரசியலற்ற ஒரு மக்கள் திரள். அவர்கள் இலங்கைப் படை மற்றும் போராட்ட குழுக்கள் மத்தியில் மாட்டிக் கொண்டவர்கள். ஆற்றில் ஒழுக்கில் இழுத்துக் கொண்டு போகப்படும் மரத்துண்டை போன்றவர்கள். கதைசொல்லி இத்திரள் மத்தியில் இருந்து வருகிறவன். அவன் தப்பித்து வெளிநாட்டுக்கு செல்ல முயல்கிறவன். அங்கும் கடும் அரசியல் மற்றும் உளநெருக்கடியை சந்திக்கிறவன். சயந்தனின் நாயகன் வெளிநாட்டு மண்ணை அடைகிற போராட்டத்திலேயே உயிர்விட்டு விடுகிறான். ஷோபாசக்தியின் …
-
- 0 replies
- 772 views
-
-
ஒரு புத்தகத்தை வாங்கத் தூண்டுவது எது? புத்தகங்களின் தலைப்புகள், எழுத்தாளரின் பெயர் இப்படிப் பல காரணங்களைச் சொல்லலாம். ரசனையான படங்களுடன் வித்தியாசமான அட்டை வடிவமைப்பு இருந்தால், மேற்சொன்ன காரணிகளின் அவசியம் இல்லாமலேயே புத்தகத்தை எடுக்கக் கை நீளும். அப்படியான அட்டைப் படங்களை உருவாக்கும் வடிவமைப்பாளர்களுள் ஒருவர்தான் விஜயன். இந்தப் புத்தகக் கண்காட்சிக்காக எதிர் வெளியீடு, கருப்புப் பிரதிகள் போன்ற பதிப்பகங்கள் வெளியிடும் 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விஜயனின் கணினிவண்ணத்தில் மிளிர்கின்றன. நதிநீரில் விழும் கட்டிடங்களின் பிம்பங்கள், தலைகீழாகத் தொங்கும் நகரம் போன்ற தோற்றப் பிழையைக் கொடுக்கின்றன. நதியின் மறுகரைக்கு நடுவே பாய்கிறது ஒரு அம்பு. இப்படி ஒரு அட்டைப் படம். புத்தர் …
-
- 0 replies
- 704 views
-
-
நக்கீரன், கவிஞர். தமிழ்ப் பசுமை இலக்கியச் சூழலில் இயங்கிவருபவர். ‘காடோடி’ இவரது முதல் நாவல். இந்தாண்டு ஜனவரி சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி அடையாளம் பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. அந்நாவலில் இருந்து ஒரு பகுதி... மறுநாள் காலையில் அலுவலக அறையில் வேலை. ஆயாக்... யாக்… யாக்… யாக்... இருவாசிகளின் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இவை சிறு கூட்டமாக இங்கு தென்பட்டுக் கொண்டேயிருக்கிறது. சாலையின் விளிம்பிலும், பட்டை உரிக்கப்படும் திடல் ஓரங்களிலும் பூச்சிகளைப் பிடித்துத் தின்றுகொண்டிருக்கிறது. துவான்... துவான்... யாருடைய குரல்? வெளியே எட்டிப் பார்க்கிறேன். மரம் வெட்டுபவரின் உதவியாள். இவர் இந்நேரம் மரம் வெட்டும் இடத்திலல்லவா இருக்க வேண்டும்? ஆனாலும் சங்கிலி வாளின் ஒலியைத் தொடர…
-
- 0 replies
- 675 views
-
-
சென்னை: இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது தமிழ் எழுத்தாளார் பூமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரின் 'அஞ்ஞாடி' என்ற நாவல் இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். இவர் 1947 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். பூமணி பல்வேறு இலக்கியப் பங்களிப்பை தமிழில் தொடர்ந்து செய்து வருகிறார். இவரின் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவை. அஞ்ஞாடி நாவல் 19 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர் கழுவேற்றம், பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி, நாயக்க மன்னர்களின் வருகை, பாளையக்காரர்களிடை…
-
- 0 replies
- 1.8k views
-
-
குணா கவியழகன் எழுதிய நஞ்சுண்டகாடு நூல் வாங்க விரும்புவோர். போரிலக்கிய நூல்களாக மலரவனின் போர் உலா, தூயவனின் யுத்தகாண்டம் போலான இன்னொரு படைப்பு ' நஞ்சுண்டகாடு' ஒரு போராளியாக கடைசி வரை வாழ்ந்து தனது காலொன்றையும் தேச விடுதலைக்காக இழந்த குணாவின் நூலை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். ஒவ்வொரு போராளியின் தியாகங்களின் பின்னால் உறைந்து கிடக்கும் உள்மனத்துரங்களிலிருந்து சாதாரண மனிதவுணர்கள் அவற்றின் நுண்ணிய உணர்வுகள் பேசப்படும் அருமையான நாவல் நஞ்சுண்டகாடு. குணாவின் "நஞ்சுண்டகாடு" நூலை பெற்றுக் கொள்ள விரும்புவோர் தனிமடலில் அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். "நஞ்சுண்டகாடு"நூல்பற்றிய கருத்துக்கள் விமர்சனங்களை கீழ் வரும் இணைப்பில் சென்று வாசிக்கலாம் :- http://www.yarl.com…
-
- 13 replies
- 2.2k views
- 1 follower
-
-
கனடாவில் பேராசிரியர் ராமு மணிவண்ணன் எழுதிய “SriLanka Hiding The Elephant” நூல் அறிமுகவிழா சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன், ஈழத் தமிழர் படுகொலைக்கான ஆதாரங்களை ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார். குறித்த நூலின் அறிமுகவிழா 13.12.2014 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் கனடாவின் ரொறன்ரோவில் 7600 Kennedy Road, Markham, ON L3R 9S5 என்கிற முகவரியில் உள்ள Milliken Mills Community Centre இல் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு சென்னையில் இருந்து வருகை தந்த நூலாசிரியர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் நேரடியாகப் பங்கேற்கிறார். ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், ஊடகவ…
-
- 4 replies
- 1.9k views
-
-
அறிய மனமுள்ள அனைவரிற்கும் ஏணைப்பிறையை அறிமுகம் செய்கின்றோம். இதில் பெரும் மனநிறைவும் அடைகின்றோம். புவி ஏதோவொரு அச்சில் சுழல்வதாகச் சொல்கின்றார்கள். இந்த மனிதகுலம் எந்த அச்சில் சுழல்கின்றது. ஏணைப்பிறையில் விடையுள்ளது. ஏணைப்பிறையை யாரும் வாசிக்க முடியாது. அதற்குள் வாழத்தான் முடியும். வாழத்துடிக்கின்ற, ஆனால் வாழமுடியாத, ஆனாலும் வாழ முயல்கின்ற மக்கள் கதைதான் இது. ஒவ்வொரு காலகட்டத்தின் முடிவும் இன்னொன்றின் தொடக்கமும் ஏதோ ஒரு விடுதலையை நோக்கிய போராட்டத்தின் விளைவே. ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் உலகிற்களித்த கொடை, என்றும் உயிர் வாழும் இலக்கியங்கள்தான். இவ்விலக்கியங்களுள் என்றும் உயிர்வாழும் மனிதர்களைத்தான். அவ்விலக்கியங்களுள் முற்றிலும் இருள் சூழ்ந்து பாதைகள் யாவும் மூடுண்ட …
-
- 8 replies
- 5.2k views
-
-
போர்னோகிராபியும் இலக்கியமும் யமுனா ராஜேந்திரன பீடபைல்கள் இன்று எல்லாச் சமூகங்களிலும் பிரச்சினைக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். இவர்கள் குழந்தைகளோடு பாலுறவு கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். குழந்தைகளை நைச்சியம் செய்து உறவு கொள்வார்கள். முடியாது போனால் தந்திரமான முறையில் கடத்திச் செல்வார்கள். இங்கிலாந்தில் இந்த மனநிலை கொண்டவர்கள் பல பெண்குழந்தைகளை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திப் பின் கொலை செய்து வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பொதுவாக இவர்கள் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என உளவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கீத்தா ஸெரனி எனும் எழுத்தாளர், இரண்டு சிறுவர்களைக் கொன்ற ஒரு சிறுமி பற்றி நூலை எழுதியிருக்கிறார். மிகவும் சிறுவயதில் சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்பட்டி…
-
- 0 replies
- 2.6k views
-
-
புலம்பெயர் இலக்கியம் முனைவர் க.பூரணச்சந்திரன் பழங்காலத்தில் ஒரு நாடுவிட்டு இன்னொரு நாட்டுக்கு இடம்பெயர்வதைப் புலம் பெயர்தல் என்று குறித்தார்கள். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் மிகுதியாகக் கிடையாது. பழந்தமிழகத்தில் நாடு என்பது மிகக்குறுகிய இடம்தான். இன்றைய பார்வையில் ஒரு முந்நூறு நானூறு கிலோமீட்டர் தொலைவுக்குள் இரண்டு நாடுகள் வந்து விடும். இப்படி நாடுவிட்டு நாடு செல்பவர்களையும் அக்காலத் தமிழர் மதிக்க வில்லை. புலம்பெயர்வது என்ன-ஊரைவிட்டுச் செல்வதுகூட விரும்பப்பட வில்லை என்றே தோன்றுகிறது. பூம்புகார் நகரைப் பற்றிக் குறிப்பிடும்போது “பதி எழு அறியாப் பழங்குடி மக்கள்” அங்கு வாழ்ந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார். அதாவது அந்த நகர…
-
- 0 replies
- 3.7k views
-
-
இன்று லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் தமிழீழமும், இந்தியாவின் பாதுகாப்பும் என்கின்ற நூலின் அறிமுகவிழா சிறப்பாக இடம்பெற்றது. இதில் ஆய்வாளர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பிரதானசுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் 29-11-14 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது. தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும் என்ற நூலின் வெளியீட்டுரையினை ஆய்வாளர் திரு.திபாகரன் அவர்கள் தலைமையேற்று ஆற்றினார். இந்நூலின் சிறப்புரைகளை அரசியல் ஆய்வாளர் திரு.காதர், மூத்த ஊடகவியலாளர் திரு.சிவா சின்னப்பொடி, ஒரு பேப்பரின் ஆசிரியர் திரு.கோபிரட்ணம், நாடுகடந்த தமிழீழ அரசின் முந்நாள் உதவிப்பிரதமர் திரு. தயாபரன் ஆகியோர் நிகழ்த்தினர். இந்நூலின் சிறப்புப்பிர…
-
- 0 replies
- 696 views
-
-
முகடு - ஓலை 2 வாங்கினேன்.... வெளியில் நன்றாக வந்துள்ளது...... உள்ளே வாசித்துவிட்டு எழுதுகின்றேன்...
-
- 7 replies
- 1k views
-