நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
சோபா சக்தியின் எம் ஜி ஆர் கொலை வழக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கபட்டு பென்குயின் வெளியீடாக வந்திருக்கின்றது . சோபாவின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை இதுதான் ,இதை அவரிடமே சொன்னேன் . ரொம்ப உயரம் சென்றுவிட்ட சோபாவுக்கு வாழ்த்துக்கள் .
-
- 2 replies
- 985 views
-
-
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியத் துணைக்கண்டத்தில் அசாதாரணமான பல சம்பவங்கள் நடந்தேறின. அதன் வட மேற்குப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்க ஆரம்பித்தது. மண் அரிப்பும் நில நடுக்கங்களும் சேர்ந்து கொள்ளவே அங்கு பாய்ந்த நதிகளின் பாதைகள் தாறுமாறாக ஆகின. அவற்றில் ஒன்று என்றென்றைக்குமாக மறைந்துபோனது. அதுதான் வேதங்களிலும் மகாபாரதத்திலும் வெகுவாகப் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதி. புவியியல் மற்றும் தட்பவெப்பவியல் ஆய்வுகள் சமீப காலங்களில் அந்த நதியின் பரிணாம வளர்ச்சியை வெகு துல்லியமாக முன்வைத்திருக்கின்றன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் நதியின் மறைந்துபோன தடத்தை அடையாளம் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கின்றன. ஐஸோடோப்பு ஆய்வுகள். அந்தத் தார் பாலைவனத்தில் சரஸ்வதி நதியின் புராதன நீர் இன்…
-
- 1 reply
- 1.8k views
-
-
-
- 1 reply
- 607 views
-
-
இணையத்தில் விரியும் தமிழ் நூலகங்கள் நூலகம் சென்று படிக்கும் ஆர்வம் சற்று குறைந்து வரும் இக்காலத்தில் இணையத்தில் பல மின்னியல் நூலகங்கள் உருவாகி வருகின்றன. பெரிய நூல்களையும் அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களையும் ஒளி அச்சு முறையில் எடுத்தும் மின்னியல் நூலகத்தில் சேர்த்துள்ளார்கள். அதிலும் இந்திய மொழிகளில் தமிழ் நூல்களே அதிகமாக மின்பதிப்பாக்கம் பெற்றுள்ளன என்பது நமக்கெல்லாம் பெருமை. உலக மின்னியல் நூலகம் உலக மின்னியல் நூலகம் (http://catalog .crl.edu) என்பது, UNESCO மற்றும் அமெரிக்க காங்கிரஸ் நூலகம் இணைந்து வழிநடத்தும் அனைத்துலக மின்னியல் நூலகமாகும். உலக மின்னியல் நூலகத்திற்கு உலகளாவிய அளவில் 30 - மேற்பட்ட தேசிய நூலகங்களோடும், கல்வி நூலகங்களோடும் ஒப்பந்த இணைப்பும…
-
- 1 reply
- 771 views
-
-
பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் எழுதிய 'வடஇலங்கையில் சுற்றுலாவும் தொல்லியல் மரபுரிமைச் சின்னங்களும்' என்ற ஆங்கில மொழிமூல நூல் வெளியீட்டு விழா நாளைமறுதினம் புதன்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பேராசிரியர் கிருஷ்ணராஜா தலைமையில் நடைபெறவுள்ளது . உலகில் மிகமுக்கிய துறையாக வளர்ச்சிபெற்றுவரும் சுற்றுலாத்துறையின் ஊடாக வடஇலங்கையும் பாரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை அடிப்படை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூலில் சுற்றுலாப் பயணிகள் இன்று பார்க்க வேண்டிய நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றின் வரலாற்றுப் பின்னணிகள் படங்களுடன் விளக்கி எழுதப்பட்டுள்ளன. காலத்தின் தேவை கருதி வெளிவரும் இந்நூலின் வெளியீட்ட…
-
- 0 replies
- 592 views
-
-
மஹிந்த அரசின் கொடுமைகளை வெளிப்படுத்தும், 'இலங்கையின் இரகசியங்கள்' நூல்! - அவுஸ்ரேலியாவில் நாளை வெளியீடு. [Friday 2014-10-24 09:00] இலங்கையில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கொடுமைகளை வெளிப்படுத்தும், 'இலங்கையின் இரகசியங்கள்' என்ற தலைப்பிலான நூல் அவுஸ்திரேலியாவில் நாளை வெளியிடப்படவுள்ளது. ஆங்கிலத்தில் 'சிறிலங்காஸ் சீக்கிரட்' என பெயரிடப்பட்டுள்ள இந்த நூலில், சொந்த மக்களுக்கு எதிராக, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலை செய்தியாளரும் அகதிகளுக்கான சட்டத்தரணியுமான ட்ரேவர் க்ரான்ட் எழுதியுள்ளார். இந்த நூல் 49 க்லீபுக்ஸ், க்ளேப் பொயின்ட் ரோட் என்ற இடத்தில் நாளை பிற்பகல் 3.30க்கு வெளியிடப்படவுள்ளது. இந்த நூலினை இணையத்…
-
- 0 replies
- 515 views
-
-
ஸர்மிளா ஸெய்யித்தின் உம்மத் - யமுனா ராஜேந்திரன் முழுமையான நாவல் வாசிப்பென்பது சமநேரத்தில் பல்வேறு அடுக்குகளிலான சிந்தனையுடன் அந்நாவல் சுட்டும் புனைவுலகினுள் பயணம் செய்வதாகும். தொடர்பாடல் எனும் வகையில் வாசகனோடு கொள்ளும் உறவில் நாவலின் சொல்முறை இணக்கமாக இருக்கிறதா எனக் காண்பது ஒரு அணுகுமுறை. வட்டார வழக்கு நாவல்களில் பின்குறிப்பாகச் சொற்பட்டியலில் வட்டார வழக்குகளுக்கு விளக்கம் தராதுவிட்டால் நாவலின் சொல்முறையில் முழுமையாகத் தோய்வது பல சமயங்களில் இயலாதுபோய்விடுகிறது. மாறாக, கதை சொல்லியின் விவரணங்களில் தமிழகம் ஈழம் புகலிடம் என அனைத்துத் தமிழருக்குமான மொழியைக் கண்டடைந்து, பாத்திரங்களுக்கு இடையிலான உரையாடலில் குறிப்பிட்ட மதம் மற்றும் வட்டார மாந்தர்களின் வழக்கு மொழிய…
-
- 1 reply
- 947 views
-
-
[size=6]பின்நவீனத்துவம் – ஓர் அறிமுகம்[/size] புத்தகம் எனும் நான்கு கரை ஆற்றில் வலப்பக்கமும். இடப்பக்கமும் எல்லாமும் பார்த்துக்கொண்டு எதிலும் கலக்காமல் நிற்கும் ஒல்லிப் பனைகள் வரிசையில் - தேவதச்சன் “பின் நவீனத்துவம்” என்ற வார்த்தையை இன்றைய சூழலில் ஒருவர் தன் விருப்பத்திற்கேற்ப எந்த அர்த்தத்திலும் பயன்படுத்தலாம் என்றாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் “பின்” என்ற சொல் இருப்பதனால் அதை மேலும் மேலும் நவீனக் காலத்திலிருந்து பின்னோக்கிக் கொண்டுப்போவதற்கான ஒரு முயற்சி கூட நடக்கிறது. முதலில் அந்த வார்த்தை கடந்த இருபது ஆண்டுக்காலமாக செயல்பட்டு வந்த எழுத்தாளர்கள் அல்லது கலைஞர்களை குறிக்கப் பயன்பட்டது. அதற்கு பிறகு இந்த நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திற்கு அந்த வார்த…
-
- 34 replies
- 20.3k views
-
-
பொ.ஐங்கரநேசனின் ஏழாவது உழி நூல் தொடர்பான அறிமுகம் - மீராபாரதி:- நான் அதிகமான நூல்களை வாசிக்கின்ற ஒருவரல்ல. ஆனால் வாசித்த வாசிக்கின்ற ஒவ்வொரு நூலும் என்னில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்தின... ஏற்படுத்துகின்றன. அது பதின்மங்களில் வாசித்த காந்தியின் சத்திய சோதனையாக இருந்தால் என்ன, இருபதுகளில் வாசித்த மார்க் ஏங்கல்ஸ் லெனின் ஆகியோர்களின் நூல்களாக இருந்தால் என்ன, முப்பதுகளில் வாசித்த ஓசோவின் நூல்களாக இருந்தால் என்ன. இவை எல்லாம் என்னில் பல மாற்றங்களை ஏற்படுத்தின. அந்தவகையில் பொ.ஐங்கநேசன் எழுதிய சுற்றுச் சூழல் கட்டுரைகளைத் தொகுப்பாக கொண்ட ஏழாவது ஊழி நூல் முக்கியமானது. இதுவும் என்னில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. “டெனிம்” நீல நிற நீளக் காற்சட்ட…
-
- 2 replies
- 2.3k views
-
-
அன்னாவும், ஸோபியாவும், நம் வாசிப்புக்களும்... இளங்கோ-டிசே 1. தஸ்தயேவ்ஸ்கியின் அன்னாவையும், டால்ஸ்டாயின் ஸோபியாவையும் புரிந்துகொள்வது என்பது மிகவும் சிக்கலானது. அதேபோன்று தஸதயேவ்ஸ்கியும், டால்ஸ்டாயும் மதிப்பிடும்போது அவர்கள் வாழ்ந்த காலத்தையும், அதன் பின்னணிகளையும் விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும். படைப்பாளிகளைப் போல, அவர்களின் துணைகளினூடாக வரும் 'கதைகளும்' வாசகர்களைச் சலனமடையச் செய்கின்றன. இவற்றில் பல படைப்பாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் 'திருவுரு'க்களை மேலும் செதுக்குகின்றன. சில அவர்கள் மேல் ஏற்றப்பட்ட விம்பங்களைச் சிதைக்கவும் செய்கின்றன. படைப்பாளிகள் நமது அகவுலகத்தில் தத்தம் படைப்புக்களினூடாக நெருக்கம் கொள்கின்றனர். அதேவேளை இந்த நெருக்கமானது, படைப்பின் உச்ச…
-
- 0 replies
- 526 views
-
-
ஷேக் அப்துல்லா புகழின் உச்சியில் இருந்ததிலிருந்து ஆரம்பித்து இந்திய எதிர்ப்பு அலை ஓங்கி ஒலித்தது வரையிலான காலகட்டத்தை சோஃபி குலாம் முகமது கடந்துவந்துள்ளார். தன் இளமைக்கால அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார். இந்தியாவுடன் காஷ்மீர் இணையவேண்டும் என்ற ஷேக் அப்துல்லாவின் விருப்பத்துக்குப் பெரும்பாலான காஷ்மீரிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், அரை நூற்றாண்டுக்குப் பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தால் ஏரிக்கு அருகில் இருக்கும் தன் அருமையான வீட்டின் தோட்டத்தில் அமர்ந்துகொண்டு பேசும்போது அவர் சொன்னார்: பெரும்பாலான காஷ்மீரிகள் இப்போது சுதந்தரமான ஒரு நாட்டில் வாழவே விரும்புகிறார்கள். காஷ்மீர் மீது கண் பதித்திருக்கும் பிராந்தியச் சக்திகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கா…
-
- 0 replies
- 673 views
-
-
-
தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை என்.செல்வராஜ் நான் 1999 ல் நாவல் படிக்க வேண்டும் என்று எண்ணிய போது எதைப் படிப்பது என்றே தெரியவில்லை.2000 குமுதம் தீபாவளி மலரில் டாப் டென் நாவல் தலைப்பில் சிறந்த எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டுவெளியிட்டு இருந்தார்கள். அனைத்து எழுத்தாளர்களின் பார்வை வேறு வேறாக இருந்தன. எனவே நல்ல நாவல் எது என தேடினேன். ஆனந்த விகடன்படித்ததில் டாப் டென் என்ற தலைப்பில் 2006ல் பல எழுத்தாளர்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. குமுதம் டாப் 10 ல் சி. மோகன், வெங்கட் சாமினாதன், ராஜமார்த்தாண்டன், சா.கந்தசாமி, கந்தர்வன் ஆகியோர் தங்களின் கருத்தை வெளியிட்டனர். சி மோகன் டாப் 10 நாவல்கள் 1.இடைவெளி 2. புயலிலே ஒரு தோணி 3. விஷ்ணுபுரம் 4. நினைவுப் பாதை 5. நாளை மற்றுமொ…
-
- 5 replies
- 15.3k views
-
-
இந்த மாத ஆட்காட்டியில் வெளியாகியிருந்த என் நூல் பற்றிய விமர்சனம் நிவேதாவின் நிறம் மாறும் உறவோடு கோசல்யாவின் சிற்றுராய்வு மரபாக வாழ்ந்த இடத்திலிருந்து புலத்தில் வாழ்வை ஆரம்பித்த காலங்கள் பலரைப் படைப்பாளிகளாக . ஆக்கதாரர்களாக தோற்றம் பெற்றவர்கள் எம்மத்தியில் பல படைப்பாளிகள் . இவர்கள் வாழ்வியல் பட்டறிவு வாயிலாக வாய்ப்புப் பெற்றது மெய்யானதே எனலாம் அந்த வகையில் இங்கே நிவேதா உதயராயன் +நிறம் மாறம் உறவு + படைப்பிலக்கியம் சிறப்புப் பெறுகின்றது ..சீரிய உரை நடை வீரிய வார்த்தைகள் ..வட்டார வழக்கான வசனயார்ப்பு. இங்கு கூறப்படும் பதினனைந்து படைப்பாக்கமும் பறைசாற்றி நிற்பது -மெய்யானது. . கதையல்ல மெய்யான மெருகான சம்பவங்களே --- இவைதான். அந்த வகையில் இவரும் மெய்ப்பாடான படைப்பிலக்கிய க…
-
- 3 replies
- 826 views
-
-
1973இல் மூலஸ்தானம் என்ற சிறுகதையோடு எழுத்துத்துறைக்குள் கால்பதிக்கும் ஸ்ரீதரனின் எழுத்துலகப் பயணம் நின்றும் தொடர்ந்தும் ஒரு 40 ஆண்டுகாலப் பயணத்தைக் குறித்துநிற்கிறது.பேராதனைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்த தரிசனங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ஸ்ரீதரனின் முதல் கதையான மூலஸ்தானம், பிறந்த மென்சூட்டுடன் பேராசிரியர் க. கைலாசபதியின் சிலாக்கியம் பெற்ற கதையாகும். இவரின் சொர்க்கம் என்ற நீண்டகதை திசையில் வெளிவந்தபோதே க. சட்டநாதன், அநு. வை. நாகராஜன் ஆகிய எழுத்தாளர்களின் சிறந்த பாராட்டினைப் பெற்றிருக்கிறது. லண்டனிலிருந்து இ. பத்மநாப ஐயர் வெளியிட்ட இலக்கியத் தொகுப்புகளில் இவரின் பின்னைய ஆக்கங்கள் இடம்பெற்று, புகலிட இலக்கியத்திற்குப் புதிய பரிமாணங்களைச் சேர்த்திருக்கின்றன. ஆனால் …
-
- 0 replies
- 959 views
-
-
அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். என்னுடைய அகவை 29. நான் கடந்த 12 ஆண்டுகளாக இலக்கியம் வாசித்து வருகிறேன். தமிழ் இலக்கியம் மாத்திரம் அல்லாமல் தாஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய், மாப்பசான், போர்ஹெஸ், கொர்த்தஸார், காம்யூ, மார்க்கேஸ், ஓரான் பாமுக், சார்த்தர் போன்றோரின் இலக்கிய ஆக்கங்கள் மீதும் தீராத தாகமுண்டு. ஆனால் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற வேட்கை ஓராண்டுக்கு முன்புதான் என்னுள் எழுந்தது. எனினும் அதை என்னால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கு ஃபேஸ்புக் ஒரு காரணமாக இருக்குமோ என்ற ஐயம் சில நாட்களாக என்னை அரித்துக்கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக்கில் எழுதுவதும், லைக் வாங்குவதும், பலர் நம்மை கவனிக்கிறார்கள் என்ற எண்ணமும் தீவிர எழுத்துக்கு என்னை வரவிடாமல் தடுக்கிறது என்றே கருதுகிறேன். மேலும் ஃபேஸ்ப…
-
- 3 replies
- 1.6k views
-
-
நூல்களின் வெளியீடு நிவேதா உதயராயனின் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற இருக்கின்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இளையதம்பி தயானந்தா விமர்சகர்கள்: திரு. கந்தையா ராஜமனோகரன் திரு. பசில் அலி திரு.யமுனா ராஜேந்திரன் திருமதி. மாதவி சிவசீலன் திரு. தினேஷ் திரு. சாம் பிரதீபன் மரியநாயகம் திரு. முல்லை அமுதன் வெளியிட்டு வைப்பவர் : திரு பத்மநாப ஐயர் காலம் : 12 .07. 2014 – மாலை 5 மணி இடம் : 76 A238,Kingston Road, London, SW19 1LA South Wimbildon tube ஸ்டேஷன் அருகாமையில் அனைவரையும் அன்புடன் அழை…
-
- 59 replies
- 5.9k views
-
-
'வன்னி: வரலாறும் பண்பாடும்' நூலின் அறிமுக நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறை மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த்துறை விரிவுரையாளர் க. அருந்தாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூல் அறிமுகவுரையை ஓய்வுநிலைப் பேராசிரியர் இரா.சிவச்சந்திரனும், கருத்துரைகளை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், பேராசிரியர் செ.கிருஷ்ணராசா, விரிவுரையாளர் கே.ரி. கணேசலிங்கம், கலாநிதி த.கிருஷ்ணமோகன் ஆகியோரும் வழங்கினர். நூலின் சிறப்புப் பிரதியை நாடக ஆசான் குழந்தை சண்முகலிங்கத்துக்கு யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் வழங்கினர். தொடர்ந்து பிரதிகள் வழங்கப்பட்டன. ஏற்புரையை பதிப்பாசிரியர் நிகழ்த்தினார். புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் க.சுந்தரலிங்கம், 44 கட்ட…
-
- 0 replies
- 669 views
-
-
விமானப் பயணங்கள் பற்றிய கனவுகள் எல்லோரையும் போல எனக்கும் சிறு வயதில் இருந்தன. முதல் வேலையில் பூனா (அப்போது அதுதான் பெயர்) சென்று திரும்புகையில், இயந்திரப் பழுது என்று பெங்களூரில் நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தார்கள். எல்லாமே பிடித்திருந்தது அப்போது. முதல் பயணமல்லவா? பிறகு நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள். ஆனால் இன்று திரும்பிப் பார்க்கையில் ரயில் பயணத்தைப் போல ஒரு விமானப் பயணம் என்றுமே இனித்ததில்லை. விமானப் பயணம் என்றாலே விறைப்பான மனிதர்கள், போலி நாகரீகம், அசௌகரிய அமைதி, இறுக்கமான சூழ்நிலை என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனாலும் நேரத்தை சேமிக்கும் விமானத்தை விலக்க முடியவில்லை. என் எண்ணத்தை எதிரொலிக்கும் புத்தகமாக ‘எய்ல் பி டாம்ட்’ எனும் புத்தகத்தைக் கண்டேன். Swaying hips, …
-
- 0 replies
- 552 views
-
-
பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் எல்லையை நோக்கி செல்ல வேண்டும் என்று எங்களிற்கு உத்தரவு வந்தது.நாங்கள் சரியாக சிந்திக்கும் சக்தியை இழந்திருந்தோம். ஏசு, புத்தர், முகமது, காந்தி, ஆப்ரகாம் லிங்கன் என எல்லோரிடமும் எங்கள் மக்களை காப்பாற்ற வரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. எங்களை முற்றிலுமாக கைகளுவி விட்டார்கள். விரக்தியில் பல போராளிகள் தற்கொலை செய்துகொள்வதைப் பார்த்தேன். சிலர் மலைகளில் பதுங்கிக்கொண்டு போராடிப்பார்க்க விரும்பினார்கள். வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடன் ஒரு லாரியில் நெருக்கிக்கொண்டு எல்லையை நோக்கி பயணம் செய்தோம். வெளியேற வேறு பாதையே இல்லை. எங்களை சுற்றி படைவீரர்கள் நின்றுகொண்டார்கள். நாங்கள் நீர்மூலமாகிவிட்டோம். இது எங்களிற்கு ஜக்கி…
-
- 0 replies
- 859 views
-
-
புலிகளும் படைப்பாளிகளும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா ஆயுதம் தாங்கிய ஈழ விடுதலைப் போராட்டத்தின் முடிவிற்குப்பிறகு ஈழத்துக் கலை இலக்கியச்செயற்பாடுகளின் போக்குகள் தொடர்பாக அண்மைக்காலங்களில் பல கவலைகள் சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஈழத்துப்படைப்பாளிகளின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. 80 களில் ஈழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்த போது ஈழத்து இலக்கியங்கள் அறிவூட்டல் அல்லது பொழுது போக்கு என்ற நோக்கத்தைக் கடந்து சமூக விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்தி, இன ஒடுக்கு முறையைக் கேள்விக்குட்படுத்தி மக்களைப் போராட்டம் ஒன்றுக்கு தயார்படுத்தும், சமூக அசைவியக்கத்தை தூண்டும் நோக்கத்தைக் …
-
- 23 replies
- 1.7k views
-
-
அழைத்தார் பிரபாகரன் ஏப்ரல் 7. 2002. ஞாயிறு பிற்பகல். மதிய உணவுக்குப் பின்னான சோம்பலான வேளை. லேசான உறக்கத்தில் இருக்கிறார் வாப்பா அப்துல் ஜப்பார். தொலைபேசி ட்ரிங்குகிறது. எடுத்துப் பேசுகிறார். விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அழைக்கப்படுகிறார். தமிழீழத் தேசியத்தலைவர் பல ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். நூலின் முதல் வரியிலேயே துவங்கிவிடும் வேகம் நாற்பத்தி எட்டாவது பக்கத்தில் முடியும் வரை சற்றும் குறையவேயில்லை. பிரபலமான ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ‘ஸ்கூப்’ தகவல்களுக்கே உரிய பரபரப்பான ரிப்போர்ட்டிங் பாணியில் மிக எளிய மொழி கட்டமைப்பில் எழுதப்பட்டிருக்கிறது ‘அழைத்தார் பிரபாகரன்’. வாசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் நிச்சயம் ‘ஜிவ…
-
- 2 replies
- 2.6k views
-
-
ஆல்பெர் காம்யு, 1960ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் உயிரிழந்தபோது அவர் கைப் பையில் வைத்திருந்த முடிக்கப்பெறாத நாவல்தான் ‘முதல் மனிதன்’. தற்போது தமிழில் வெளிவந்திருக்கும் இந்தப் படைப்பு குறித்த அறிமுகம் இது. முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் காம்யுவின் 'முதல் மனிதன்' என்ற நாவலை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வெ. ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். புகழ்பெற்ற பிரெஞ்சு நூல்கள் பலவற்றின் மொழிபெயர்ப்புகளைத் தமிழில் தொடர்ந்து வெளியிட்டுவரும் க்ரியா பதிப்பகம் இதனையும் வழக்கமான நேர்த்தியோடு வெளியிட்டுள்ளது. காம்யுவின் 'முதல் மனிதன்' ஆதிமனிதனல்ல. முதல் மனிதனுக்குத் தந்தை இல்லை. அவனுக்கென்று மரபு எது…
-
- 0 replies
- 539 views
-
-
சரித்திர நாவல் அறிமுகம்: பழைய வேதக் கோயில்! எம்.கே.முருகானந்தன் - நூல் அறிமுகம் எமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான். ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம். எமது மூதாதையர்கள் பதித்த தடங்கள். எமது பிரதேச முன்னோடிக் குடிகளின் வாழ்கையை அவர்களது பிரச்சனைகளை பேசுகிறது. இதனால் மிகவும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தது. மிகக் குறைந்தளவு சரித்திரத் தரவுகளை வைத்துக் கொண்டு நம்பத்தன்மை வாய்ந்த புனைவைப் படைத்துத் தந்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர். அவர் அச்ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
தினக்குரல்' வாரமலரில் வேதநாயகம் தபேந்திரனினால் 'யாழ்ப்பாண நினைவுகள்' என்ற தலைப்பில் தொடராக எழுதப்பட்ட முதல் முப்பது கட்டுரைகளை கைதடி 'சிவகாமி பதிப்பகம்' தொகுத்து நூலாக வெளியிடுகின்றது. இந்நிகழ்வு யாழ்ப்பாணம் நீராவியடி, கல்லூரி வீதியில் உள்ள இலங்கை வேந்தன் கல்லூரியில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் உடுவை எஸ்.தில்லைநடராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் வரவேற்புரையை பண்டாரவளை கல்வி வலய தமிழ் பிரிவு கல்விப் பணிப்பாளர் சி.மதியழகனும் வாழ்த்துரைகளை 'ஞாயிறு தினக்குரலின்' பிரதம ஆசிரியர் பாரதி இராஜநாயகம், வட மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களப் பணிப்பாளர் நா.இராசநாயம், வட மாகாண சமூக சேவைகள் திணைக்களப்…
-
- 0 replies
- 574 views
-