Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'வன்னி: வரலாறும் பண்பாடும்' நூலின் அறிமுக நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறை மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த்துறை விரிவுரையாளர் க. அருந்தாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூல் அறிமுகவுரையை ஓய்வுநிலைப் பேராசிரியர் இரா.சிவச்சந்திரனும், கருத்துரைகளை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், பேராசிரியர் செ.கிருஷ்ணராசா, விரிவுரையாளர் கே.ரி. கணேசலிங்கம், கலாநிதி த.கிருஷ்ணமோகன் ஆகியோரும் வழங்கினர். நூலின் சிறப்புப் பிரதியை நாடக ஆசான் குழந்தை சண்முகலிங்கத்துக்கு யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் வழங்கினர். தொடர்ந்து பிரதிகள் வழங்கப்பட்டன. ஏற்புரையை பதிப்பாசிரியர் நிகழ்த்தினார். புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் க.சுந்தரலிங்கம், 44 கட்ட…

  2. விமானப் பயணங்கள் பற்றிய கனவுகள் எல்லோரையும் போல எனக்கும் சிறு வயதில் இருந்தன. முதல் வேலையில் பூனா (அப்போது அதுதான் பெயர்) சென்று திரும்புகையில், இயந்திரப் பழுது என்று பெங்களூரில் நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தார்கள். எல்லாமே பிடித்திருந்தது அப்போது. முதல் பயணமல்லவா? பிறகு நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள். ஆனால் இன்று திரும்பிப் பார்க்கையில் ரயில் பயணத்தைப் போல ஒரு விமானப் பயணம் என்றுமே இனித்ததில்லை. விமானப் பயணம் என்றாலே விறைப்பான மனிதர்கள், போலி நாகரீகம், அசௌகரிய அமைதி, இறுக்கமான சூழ்நிலை என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனாலும் நேரத்தை சேமிக்கும் விமானத்தை விலக்க முடியவில்லை. என் எண்ணத்தை எதிரொலிக்கும் புத்தகமாக ‘எய்ல் பி டாம்ட்’ எனும் புத்தகத்தைக் கண்டேன். Swaying hips, …

  3. பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் எல்லையை நோக்கி செல்ல வேண்டும் என்று எங்களிற்கு உத்தரவு வந்தது.நாங்கள் சரியாக சிந்திக்கும் சக்தியை இழந்திருந்தோம். ஏசு, புத்தர், முகமது, காந்தி, ஆப்ரகாம் லிங்கன் என எல்லோரிடமும் எங்கள் மக்களை காப்பாற்ற வரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. எங்களை முற்றிலுமாக கைகளுவி விட்டார்கள். விரக்தியில் பல போராளிகள் தற்கொலை செய்துகொள்வதைப் பார்த்தேன். சிலர் மலைகளில் பதுங்கிக்கொண்டு போராடிப்பார்க்க விரும்பினார்கள். வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடன் ஒரு லாரியில் நெருக்கிக்கொண்டு எல்லையை நோக்கி பயணம் செய்தோம். வெளியேற வேறு பாதையே இல்லை. எங்களை சுற்றி படைவீரர்கள் நின்றுகொண்டார்கள். நாங்கள் நீர்மூலமாகிவிட்டோம். இது எங்களிற்கு ஜக்கி…

  4. புலிகளும் படைப்பாளிகளும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா ஆயுதம் தாங்கிய ஈழ விடுதலைப் போராட்டத்தின் முடிவிற்குப்பிறகு ஈழத்துக் கலை இலக்கியச்செயற்பாடுகளின் போக்குகள் தொடர்பாக அண்மைக்காலங்களில் பல கவலைகள் சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஈழத்துப்படைப்பாளிகளின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. 80 களில் ஈழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்த போது ஈழத்து இலக்கியங்கள் அறிவூட்டல் அல்லது பொழுது போக்கு என்ற நோக்கத்தைக் கடந்து சமூக விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்தி, இன ஒடுக்கு முறையைக் கேள்விக்குட்படுத்தி மக்களைப் போராட்டம் ஒன்றுக்கு தயார்படுத்தும், சமூக அசைவியக்கத்தை தூண்டும் நோக்கத்தைக் …

    • 23 replies
    • 1.7k views
  5. அழைத்தார் பிரபாகரன் ஏப்ரல் 7. 2002. ஞாயிறு பிற்பகல். மதிய உணவுக்குப் பின்னான சோம்பலான வேளை. லேசான உறக்கத்தில் இருக்கிறார் வாப்பா அப்துல் ஜப்பார். தொலைபேசி ட்ரிங்குகிறது. எடுத்துப் பேசுகிறார். விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அழைக்கப்படுகிறார். தமிழீழத் தேசியத்தலைவர் பல ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். நூலின் முதல் வரியிலேயே துவங்கிவிடும் வேகம் நாற்பத்தி எட்டாவது பக்கத்தில் முடியும் வரை சற்றும் குறையவேயில்லை. பிரபலமான ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ‘ஸ்கூப்’ தகவல்களுக்கே உரிய பரபரப்பான ரிப்போர்ட்டிங் பாணியில் மிக எளிய மொழி கட்டமைப்பில் எழுதப்பட்டிருக்கிறது ‘அழைத்தார் பிரபாகரன்’. வாசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் நிச்சயம் ‘ஜிவ…

  6. ஆல்பெர் காம்யு, 1960ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் உயிரிழந்தபோது அவர் கைப் பையில் வைத்திருந்த முடிக்கப்பெறாத நாவல்தான் ‘முதல் மனிதன்’. தற்போது தமிழில் வெளிவந்திருக்கும் இந்தப் படைப்பு குறித்த அறிமுகம் இது. முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் காம்யுவின் 'முதல் மனிதன்' என்ற நாவலை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வெ. ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். புகழ்பெற்ற பிரெஞ்சு நூல்கள் பலவற்றின் மொழிபெயர்ப்புகளைத் தமிழில் தொடர்ந்து வெளியிட்டுவரும் க்ரியா பதிப்பகம் இதனையும் வழக்கமான நேர்த்தியோடு வெளியிட்டுள்ளது. காம்யுவின் 'முதல் மனிதன்' ஆதிமனிதனல்ல. முதல் மனிதனுக்குத் தந்தை இல்லை. அவனுக்கென்று மரபு எது…

    • 0 replies
    • 549 views
  7. சரித்திர நாவல் அறிமுகம்: பழைய வேதக் கோயில்! எம்.கே.முருகானந்தன் - நூல் அறிமுகம் எமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான். ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம். எமது மூதாதையர்கள் பதித்த தடங்கள். எமது பிரதேச முன்னோடிக் குடிகளின் வாழ்கையை அவர்களது பிரச்சனைகளை பேசுகிறது. இதனால் மிகவும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தது. மிகக் குறைந்தளவு சரித்திரத் தரவுகளை வைத்துக் கொண்டு நம்பத்தன்மை வாய்ந்த புனைவைப் படைத்துத் தந்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர். அவர் அச்ச…

  8. தினக்குரல்' வாரமலரில் வேதநாயகம் தபேந்திரனினால் 'யாழ்ப்பாண நினைவுகள்' என்ற தலைப்பில் தொடராக எழுதப்பட்ட முதல் முப்பது கட்டுரைகளை கைதடி 'சிவகாமி பதிப்பகம்' தொகுத்து நூலாக வெளியிடுகின்றது. இந்நிகழ்வு யாழ்ப்பாணம் நீராவியடி, கல்லூரி வீதியில் உள்ள இலங்கை வேந்தன் கல்லூரியில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் உடுவை எஸ்.தில்லைநடராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் வரவேற்புரையை பண்டாரவளை கல்வி வலய தமிழ் பிரிவு கல்விப் பணிப்பாளர் சி.மதியழகனும் வாழ்த்துரைகளை 'ஞாயிறு தினக்குரலின்' பிரதம ஆசிரியர் பாரதி இராஜநாயகம், வட மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களப் பணிப்பாளர் நா.இராசநாயம், வட மாகாண சமூக சேவைகள் திணைக்களப்…

    • 0 replies
    • 581 views
  9. எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் வாசிக்க முடியாது. அப்படி வாசிப்பது என்பதும் உண்மையில் அது ஒரு ஆழமான வாசிப்பாகவும் இருக்கமுடியாது. அதுவும் கவிதைகள் என்றால், அதனை உள்ளுணர்ந்து வாசிக்கவும், அதன் அழகுணர்ச்சியில் மூழ்கிப்போகவும் அதனோடு ஒன்றிணைந்து பயணிக்கவும், தனியானதும் நேர்த்தியானதுமான ஒரு வேளை அல்லது சந்தர்ப்பம் அமையவேண்டும் என்பது என் அனுபவமாக இருக்கிறது. சிலருக்கு வேறுவிதமாகவும் இருக்ககூடும். தன்னோடு மட்டும் பேசப்படுகின்ற விடயங்களை, தன்னால் மட்டும் பேசப்படுகின்ற சந்தர்ப்ப விடயங்களை, எதோ ஒரு காலத்தின் வலிகளை, கனவுகளை, நிகழ்ந்துகொண்டிருக்கின்ற வசீகரங்களை,இழப்புக்களை, நாளை மீதான எதிர்மறைகளை இப்படியாக ஒவ்வொன்றையும் காவிச்செல்லாமல் அந்தந்தக்கணங்களில் இறக்கிவைத்த பின் …

  10. உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - நூல் வெளியீட்டு விழா - சாதுர்யன் - ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கவிசிரேஷ்டராக விளங்கிய சிவசம்புப் புலவரின் பிரபந்தங்கள் அடங்கிய “உடுப்பிட்டிச் சிவசம்பு புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும் மானிடபாகமும் எனும் பெருந் தொகுதி வெளியீட்டு விழா. 2014ஆம் ஆண்டு தை மாதம் 5ஆம் திகதி அன்று உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூhயில் அமைந்துள்ள பேராசிரியர் அழகையா துரைராஜா மண்டபத்தில் நகரபிதா வல்வை ந. அனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னதாகப் புலவர் இல்லத்திற்கு முன்னால் உள்ள யோகர் சுவாமிகள் போற்றிய துவாளிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட ப10ஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் அவ…

    • 1 reply
    • 1.9k views
  11. திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின் பார்வையில் வரலாற்றைத் தொலைத்த தமிழர் எங்கிருந்து எது வரை பார்க்கலாம் தலைப்பினைப் பார்க்கையில் வேறு உணர்வு ஏற்பட்டது . உள்ளே நுளைந்து பார்க்கையில் இன்னோர் உணர்வு ஏற்படும். வரலாற்றைத் தொலைத்த தமிழர் வாணாள் பூராவும் அலைந்து உலைந்து அவர்களுக்கென்றிருந்த ஆற்றலையும் அதோடு தொலைத்தார்களா ?என்பதை நூலினுள் நுழைந்து பாருங்கள் .ஆழமாக சுவைத்துப் பாருங்கள். வரலாறு என்றால் என்ன ?அதற்கான விளக்கம் தருகிறார் ஆக்கதாரர்.. இதுவொரு துணிகரத் தேடல் பாராட்ட வேண்டியது ..பல பெரும் முனைப்பின் தேடல் கள் ..இதன் தகவல் சேமிப்பும் சிரமங்களும் ..தொடர்புகள் மூலம் பெறத்துடித்த ஆவணங்களும் படைப்பாளியின் பாரிய முயற்சிகள் . இக்காலப் பாட நூல்களி -சிற்சில பாகமாக மெல…

  12. மாயன் இன மக்களுக்கும் தமிழர்களுக்கும் கூட சம்பந்தம் இருக்குமோ என்று இந்நூல் ஒப்பு நோக்குகிறது. எப்போது அழியும் இந்த உலகம் என்ற இந்த புத்தகம் தென்னமெரிக்காவில் வாழ்ந்த மாயன் இன மக்கள் கணித்த “மாயன் காலண்டரில் கூறியுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உலக அழிவை ஆய்வு செய்கிறது. மாயன் இன மக்களின் அறிவுக் கூர்மையையும், அவர்கள் கணித, வானவியல் சிந்தனைகளையும் அலசுகிறது. http://sengodimedia.com/Product-view.aspx?id=45#.U7UhRvl_v0c

    • 2 replies
    • 3k views
  13. ஈழத்தமிழ் மக்களிடம் திணிக்கப்பட்டபோரின் அவலங்களைப் பேசும் கருணாகரனின் வேட்டைத்தோப்பு - முருகபூபதி படித்தோம் சொல்கிறோம் அரசியல் அறமே கூற்றுவனாகி மக்களின் வாழ்வைகுலைத்துப்போட்டதை சித்திரிக்கும் தொகுப்பு இலங்கையில் மட்டுமன்றி தமிழகம்மற்றும் தமிழர் புகலிட நாடுகளிலும் இலக்கிய வாசகர்களின் கவனிப்பிற்குள்ளான கருணாகரன் - கவிஞராகவே முன்னர் அறியப்பட்டவர். வெளிச்சம் இதழின் ஆசிரியராகவுமிருந்தவர். பத்தி எழுத்தாளர் -ஊடகவியலாளர் - சில நூல்களின் பதிப்பாளர் - இலக்கிய இயக்கசெயற்பாட்டாளர். எனக்கு கருணாகரன் இலக்கியத்தின் ஊடாகஅறிமுகமானது 2008 இல்தான். லண்டனில் வதியும் முல்லை அமுதன்தொகுத்து வெளியிட இலக்கியப்பூக்கள் தொகுப்பில் மறைந்த செம்பியன்செல்வனைப்பற்றி கருணாகரன்…

  14. அச்சுப்பணி, தகவல் தொழில்நுட்பம் என்னும் இரண்டுக்கும் உதவும் கணினி, அலைபேசி, இணையம் எனப் பல ஊடகங்களிலும் செயல்படும் முக்கியக் கருவியான தமிழ் மென்பொருள்கள் குறித்த பல கருத்துகளை விளக்கு வதாக இந்நூல் உருவாக்கப் பட்டுள்ளது. இந்நூல் மூன்று இயல் களைக் கொண்டுள்ளது. தமிழ் மென்பொருள்களுக்கு அடிப்படையான எழுத்துரு (Font), குறியீட்டாக்கம் (Enco ding), விசைப் பலகை (Keyboard) குறித்தும் இம்மூன்று அடிப் படைக் கூறுகளுக்கான ஒருங் குறி (Unicode) பங்களிப்பு குறித் தும் விரிவான பல கருத்துகள் ஆராயப்பட்டுள்ளன. கணினியைத் தமிழில் இயங்கவைக்கும் தமிழ் மென் பொருள்களின் அவசியம், உரு வாக்கம், பயன்பாடு குறித்து விரிவான செய்திகள் தரப்பட் டுள்ளன. இந்நூல் தமிழ் மொழி வளர்ச்சியில் தமிழ் மென் பொருள்களின் …

    • 0 replies
    • 862 views
  15. இலக்கியவாதிகள், கவிஞர்களைப் பார்த்தால் எப்போதுமே பிரமிப்பு உண்டு. உடலை வில் போல வளைத்து ஜிம்னாசியம் செய்யும் வீராங்கனைகளைப் பார்ப்பது போல, நம்மால் இது முடியாது என்ற பிரமிப்பு எப்போதும் உண்டு. நாம் அன்றாடம் சாதாரணமாக பார்க்கும் காட்சிகளை இவர்கள் மட்டும் எப்படி வித்தியாசமாக பார்க்கிறார்கள் என்ற வியப்பு ஏற்படும். நாளடைவில், இந்த இலக்கியவாதிகளின் உட்சண்டைகளும், அவர்களின் நடவடிக்கைகளும் முகம் சுளிக்க வைத்து, கவிதைகளை விட்டே காத தூரம் ஓட வைத்தன. யார்தான் இலக்கியவாதி, எதுதான் நல்ல கவிதை என்ற சந்தேகங்கள் படிப்பவனுக்கு, வாசகனுக்கு வரவேண்டும். ஆனால் எழுதுபவர்களுக்குளேயே அந்த சந்தேகமும் சண்டைகளும் வந்தால் ? வாசகன் எப்போதும் பரிதாபத்துக்கு உரியவன். 12 வயதில் தமிழ்வாணன் கதைகளும…

  16. செந்தியின் ‘தனித்தலையும் செம் போத்து’ தொகுப்பு நகரமய மாதல் என்னும் விஷயத்தைத் தவிர வேறெந்த அரசியலுக்கும் முக்கியத்துவமளிக்காமல் அதைக் கவனமாகத் தவிர்த்து விட்டது. தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றில் மட்டும் இவை வெளிப்படுவதைக் காணமுடிகிறது. உதாரணமாக, செங்குளத்தை இரண்டாகப் பிரித்து/வளர்ந்துகொண்டே போகும் தங்க நாற்கரச்சாலை/குட்டைகள் அரிதான வெளியில்/கான்கிரீட் பாத்திகள் அவைகளுக்குப்/பெரும் களிப்பூட்டியிருக்கலாம் என்ற ‘கான்கிரீட் பாத்தி நீர் குடிக்கவரும் காக்கைகள்’ கவிதையைச் சொல்லலாம். தொகுப்பில் ஆண்களின் வடிகாலற்ற காமம் குறித்த கவிதைகளை நெருக்கமாக உணரமுடிகிறது. அப்படிப்பட்ட உணர்வை இளவயதில் எல்லோரும் அனுபவித்தவர்கள்தான் என்ற முறையில் சரியான வார்த்தைகளால் அவை சொல்லப்பட்டிருக்கின…

    • 0 replies
    • 820 views
  17. ஆகாயம் பதிப்பகத்தின் “மயானகாண்டம்- பிந்திய பதிப்பு” கிரிஷாந், பிரியாந்தி, கிருபா, லிங்கேஸ்- நான்கு கவிஞர்களின் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடை பெற்றது. தலைமையுரையை கவிஞர் கருணாகரனும் வரவேற்புரையை கவிஞர் யாத்ரிகனும் நிகழ்த்தினர். எழுத்தாளர் சத்தியபாலன் வெளியீட்டு உரையை நிகழ்த்தினார். தொடர்ந்து நுால் வெளியீடு இடம் பெற்றது. நுாலினை எழுத்தாளர் சத்தியபாலன் வெளியிட புத்தகக் கூடத்தின் உரிமையாளர் தெ. ரவீந்திரன் பெற்றுக்கொண்டார். கவிஞர்களுக்கான கௌரவப் பிரதிகளையும் அவர் வழங்கிவைத்தார். நுால் பற்றிய ஆய்வினை யாழ் பல்கலைக் கழகத்தின் வருகைதரு விரிவுரையாளர் தி. செல்வமனோகரன் நிகழ்த்தினார். ஏற்புரையினை தொகுப்பாளர்களுள் ஒருவரான சித்தாந்தன் நிகழ்த்தினார். glo…

    • 0 replies
    • 522 views
  18. 'மன்னன் இல்லை. தளபதிகள் இல்லை. போர் வீரர்களென்று யாரும் இல்லை. நம்பிக்கையின் சிறு துரும்பெதுவும் மிதக்காத கரைகளற்ற கடலின் திசையறியாத பயணிகள். கடலடிக்கும் எல்லை வரையாகவும் இருகரையும் விரிந்திருந்த ராஜ்யம் சுருங்கி ஒரு பொட்டல்வெளியில் எரிந்தழிந்தது. உயிராலும் ரத்தத்தினாலும் சதைகளினாலும் கட்டியெழுப்பப்பட்டு இருந்த கனவு சிதறிக்கிடந்தது. நந்திக்கடலில் கலந்த இன்னோர் ஆறாக ரத்த ஆறுமிருந்தது’ - ஈழத்தின் இன்றைய நிலைகுறித்த யோ.கர்ணனின் காட்சிப்படுத்துதல் இதுதான். இந்த நிலைக்கு முன்னதாக இறுதிகட்டத்தில் நடந்த கலங்கவைக்கும் நிகழ்வுகளை மனக்கண் முன் கொண்டுவருகிறார். படிக்க முடியாத அளவுக்கு நெஞ்சு பதறும் காட்சிகள் இவை. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர். போரில் ஒரு காலை இழந்தவர். 'தேவ…

  19. குழந்தைகளுக்கான போராளி என்று அழைக்கப்படும் ஜேனஸ் கோர்ச்சாக் கின் கருத்துகளின் தொகுப்பே ‘ஒவ் வொரு குழந்தையையும் நேசிப்போம்’ என்னும் நூல். இந்நூலை தி.தனபால் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். குழந்தைகளைப் பற்றிய புத்தகம் என்றாலும் சுவாரசியமான விஷயங் களைத் தாண்டிக் குழந்தைகள் தொடர் பாகப் பெற்றோரின் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களை விரிவாகப் பேசுகிறது இது. இருபத்தியொரு தலைப்புகளின் கீழ், குழந்தைகள் பற்றிய ஒளிமிக்க புதிய பார்வையைத் தரும் விதத்திலான செய்திகளை அடக்கியுள்ளது இந்நூல். குழந்தைகள் போடும் சத்தமே பெற் றோருக்கு வேதனை தரக்கூடியது. இது பற்றிப் பேசும் கோச்சார்க், குழந்தை நடக்கும்போது நடக்கும், கடிக்கும்போது கடிக்கும் என்று சொல்கிறார். ‘எல்லா நரிகளும் தந்திரம் மிக்கதா, நி…

    • 1 reply
    • 850 views
  20. மெசப் பெத்தோமிய சுமேரியரின் நூல் வெளியீடும் சில ஆலோசனைகளும் http://www.yarl.com/forum3/index.php?showtopic=139970 வாழ்த்துக்கள், சுமே. புத்தகம் வெளியிடுவதும், அதனை விற்று பணத்தினை கையில் எடுப்பதில் உள்ள வலியினை அறிவேன். இலகுவானதல்ல. பகிடியாக இருந்தாலும், ரதி அக்கா சொன்னது உண்மைதான். யாழ் களம் தந்த மேடையிலே, நான் ஆரம்பத்தில் சில ஆக்கங்களை எழுத, எல்லோரும் ஆகா, ஓகோ என்று சொல்ல, சரி முயல்வோமே என, தமிழிலொரு ஆக்கமும், ஆங்கிலத்தில் ஒரு ஆக்கமும் எழுதி பிரசுரித்தேன். ஆங்கில ஆக்கத்தினை ஆங்கில புனை பெயருடன் பிரசுரித்தேன், கல்வியுடன் தொடர்பானதால் நல்ல வரவேற்பு. இதன் மூன்றாவது பதிப்பு இந்த கோடை காலத்தில்.... இப்போது ஒரு முக்கியமான ஆக்கமொன்றினை ஆங்கிலத்தில் முயல்கின்றேன். …

    • 2 replies
    • 742 views
  21. எனது கனவு நனவாகி நூல்களாகி வந்துள்ளது. நான் எழுத ஆரம்பித்ததும் என் எழுத்து மெருகேறியதும் யாழ் களத்திநூடாகத்தான். அதனால் முதலில் எனக்குத் தளமாக இருந்த யாழ் இணையத்துக்கும் என் எழுத்துக்கு ஊக்கம் கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

  22. மேற்கத்திய இசையை எளிதாக கற்றுக்கொள்வதற்கும், மேற்கத்திய இசைக்குறிப்புகளைப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வதற்கும் தமிழில் பாடங்களே இல்லை என்ற குறையைப் போக்க வந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் செழியனின் ‘த மியூசிக் ஸ்கூல்’ வெளியீடு. எளிய தமிழில் வந்திருக்கும் இந்தப் புத்தகங்களின் மூலம் வீட்டிலிருந்தே மேற்கத்திய இசையைக் கற்றுக்கொள்ள முடியும். இந்த இசைப்பாடங்கள் பத்து வயதிலிருந்து, பெரியவர்கள் வரை கற்றுக்கொள்வதற்கு உதவுபவை. 15 ஆண்டுகள் உழைப்பில் உருவான நூல் இது. 1,700 பக்கங்கள், 200-க்கும் மேற்பட்ட பாடங்கள், 1,000-க்கும் மேற்பட்ட விளக்கப் படங்கள் போன்றவற்றோடு இந்தப் புத்தகத் தொகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் இடங்களில் ஒலி உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வகுப…

    • 0 replies
    • 2.9k views
  23. தமிழ்ப் பெண்புலி (Tamil Tigress) ஒருவர் ஈழத்தில் இயக்கமொன்றில் இணைந்து போராடியதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். முக்கியமாய் போர் உக்கிரமாய் நடைபெறும் பிரதேசங்களில் -போராடத்தில் இணைந்துகொள்ள- புறக்காரணிகள் இன்னும் அதிக நெருக்கடிகளைக் கொடுக்குமென்பதை நாமனைவரும் அறிவோம். எமது இயக்கங்களில் பலர் பெருந்தொகையாய்ச் சேர 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுச் சம்பவமும், 81 யாழ் நூலக எரிப்பும், 83 ஜூலைக் கலவரமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவையாகும். ஆனால் யாழ் சமூகத்தில் அவ்வளவு ஒட்டமுடியாத மற்றும் உயரதரவர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஏன் இயக்கத்தில் இணைந்து கொள்கிறார் என்பது நம் போராட்ட வரலாற்றைக் கற்றுக் கொள்வோருக்குச் சற்று வியப்பாக இருக்கலாம் தமிழ் பெண் புலி(Tamil…

  24. ரகசியத்தின் நாக்குகள் சொல்லும் கதை ( விமர்சனம்) நெற்கொழு தாசனின் " ரகசியத்தின் நாக்குகள் " கவிதைத்தொகுதி வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன் . என்னுடன் கூடப் பயணித்த கொழுவனை பற்றி மற்றையவர்கள் அக்குவேறு ஆணிவேறாக ஆக்கபூர்வமாக விமர்சித்த பொழுது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. மற்றயவர்கள் நெற்கொழு தாசன் என்று அழைத்தாலும் நான் அவரை "கொழுவன்" என்றே அழைப்பது வழக்கம். அதற்கு காரணமும் இல்லாமலும் இல்லை. அவர் கவிதைகளுக்கான சொற்களை கொழுவுவதில் வல்லவர் . நெற்கொழுதாசனின் கவிதை தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் காத்திரமான கவிதைகள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. அனால் அவரின் பல கவிதைகள் " ஒப்பாரி கவிதைகள் " என்ற வகையிலேயே எனக்குத் தெரிகின்றது. சோகம் அல்லது பிரிவாற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.