Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒரு போர்க்கால சர்வதேச ஊடகவியலாளர் பி. மாணிக்கவாசகத்தின் “வாழத்துடிக்கும் வன்னி” ஒரு பார்வை 36 Views ‘வாழத்துடிக்கும் வன்னி’ என்ற சமூகவியல் கட்டுரைகள் “எமது சமுதாயத்திற்கும் அரசிற்கும் எமது அரசியல் தலைமைகளுக்கும் வன்னி மக்களின் அவலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்ற வீரகேசரி வார வெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகரன் அவர்களின் அணிந்துரையுடன் இந்நூல்வெளிவந்திருக்கிறது. இங்கு எமது சமுதாயத்திற்கும் எமது அரசியல் தலைமைகளுக்கும் உண்மையில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதை இக்கட்டுரைகளை வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. வன்னி மக்கள் போரினால் அனுபவித்த துன்பங்களையும் அதிலிருந்…

  2. சேப்பியன்ஸ் யுவால் நோவா ஹராரி மின்நூல் April 15, 2021 மிக அதிக எண்ணிக்கையில் வேகமாக விற்பனையாகும் நூல்களின் மீது தீவிர இலக்கிய வாசகனுக்கு ஒருவித ஒவ்வாமை இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை தமிழ்ச்சூழலில் மறுப்பதற்கில்லை. தயக்கத்துடன் வாசிப்பிற்கு தேர்வு செய்த இந்நூலை தீவிர இலக்கிய நூல்களுக்கு இடையே ஒருமாத காலஅளவு எடுத்துக்கொண்டு வாசித்து நிறைவு செய்ய முடிந்தது. ‘கடந்த காலங்களைப் பற்றிய தெளிவான, தர்க்கபூர்வமான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் பணி வரலாற்று ஆசிரியர்களுக்கு உண்டு’ என்ற ரொமிலா தாப்பரின் கூற்று சேப்பியன்ஸ் போன்ற நூல்களை நாடிச் செல்ல வைக்கிறது. கால எந்திரமும், மாயக் கம்பளமும் யுவால் நோவா ஹராரிக்கு கிடைத்து விட்டது போலும். பலகோடி ஆண…

  3. ரிச்சர்ட் டாக்கின்ஸ் - கடவுளுக்கெதிரான அறிவியல் போராளி | கனலி அறிவியலும் சமயமும் ஒன்றின் குறைபாட்டை மற்றது இட்டு நிரப்பும்போது, மானுட சிந்தனைத் தொகுப்பு முன்னகர்கிறது. அறிவார்ந்த நாத்திக தர்க்கம் மரபார்ந்த சமயம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. அறிவியலின் தலையீடு இல்லையென்றால் சமயம் இறுகிப்போய் திண்ணப் பேச்சாகி சுருங்கி விடும். சரியாக சமைக்கப்பட்ட சமயத்தின் சேவைகள் மனிதனை அறிவுசார் ஆதிக்கத்தின் பலி பீடத்திலிருந்து மீட்கும் ரிச்சர்ட் டாக்கின்ஸின் புகழ் பெற்ற “சுயநலம் பிடித்த ஜீன்” புத்தகம் வெளிவந்து முப்பது ஆண்டுகள் கழித்து, முழுமையாக நாத்திக வாதத்தை முன்வைக்கும் “கடவுள் என்னும் மயக்கம்” 2006-இல் வெளிவந்தது பின்புலம் பத்தொன்பதாம் நூற்றாண்ட…

  4. திசையறிந்து பயணித்த தூரிகை – அன்பாதவன் 113 Views நானும் எனது நிறமும் – ஓவியர் புகழேந்தியின் தன்வரலாறு நூல் குறித்து. தோழர்! தொடக்கத்திலே உங்கள் கரங்குலுக்கி தோளணைத்து வாழ்த்துகிறேன். வாழ்வின் கறுப்பு பிரதேசங்களையும் ஒளிர்ந்த காலங்களையும் மறைக்காமல் பதிவிட்டதற்காக வாழ்த்துக்கள் புகழேந்தி! ஒரு சாமான்யனின் தன் வரலாறு எவ்விதத்தில் வாசகனுக்கு உதவும்…? சுயசரிதையில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருக்கக்கூடும் என்ற பல கேள்விகளோடு தான் ஓவியர் புகழேந்தியின் “நானும் எனது நிறமும்” நூலை வாசிக்கத்தொடங்கினேன். வாசித்து முடிக்கையில் தெளிந்தேன். இது கதையல்ல வரலாறு; சாதாரணன் ஒருவன் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல் வாழ்வின் ஏற்ற …

  5. சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் ) சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . பாஷ்யம் என்பது இவரது இயற்பெயர். மயிலாடுதுறைச் சார்ந்த கிந்தளூர் எனும் ஊரில் பிறந்தவர். கதைக்கும், கதை எழுதுபவரின் உருவத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற நியதி என்றும் கிடையாது. என்றாலும் இவரது கதைகளைப் படித்து விட்டு, ஏதே கற்பனையில் இருந்த சிலர் இவரைப் பார்க்கச் சென்று, பார்த்து வியந்திருக்கிறார்கள் எனும் குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் நிரூபராகவும், பின்பு செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சிறிது கால…

    • 10 replies
    • 134.8k views
  6. `` ‘திராவிட மாடல்’ என்பது என்ன? இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படை பற்றி விளக்க முடியுமா?’’ “சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான ஓர் அரசியல் இயக்கம், ஓரளவு எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை வழங்குவது சாத்தியம் என்பதைத் தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. இதுவே ‘திராவிட மாடல்’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படை. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களிலும் சாதியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் திரட்சி நடந்தது. ஆனால், அது பொருளாதார வளர்ச்சியைத் தரவில்லை. தமிழ்நாட்டில் இந்தத் திரட்சி எப்படிப்பட்டது, எதை முன்னிறுத்தியது என்ற புள்ளியில் திராவிட மாடலை ஆராய்ந்திருக்கிறோம். சாதிய அடிப்படையிலேயே தொழில்கள் நிர்ணயிக்கப்படுகின்றன எனும்போது, இந்த நிலையை ஒழிக்க நவீனக் கல்வி,…

    • 1 reply
    • 848 views
  7. “எழுவர் விடுதலையா?ஓருவர் விடுதலையா? May 12, 2021 - இரா.முரளி · புத்தக மதிப்புரை law “எழுவர் விடுதலையா?ஓருவர் விடுதலையா? -உண்மையும், உருட்டலும்” -நூல் அறிமுகம் இரா.முரளி வெகு காலமாக தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டும், எதிர்பார்க்கப்பட்டும் வருவது ஏழு தமிழர் விடுதலை. ஆனால் சமீபகாலமாக எழுவர் விடுதலை என்ற முழக்கம், ஒருவர் விடுதலை என்று மாறி வருவதை நாம் காணமுடிகிறது. பேரறிவாளனுக்கு மட்டுமே விடுதலை எளிதில் சாத்தியம், அவர் வெளியே வந்தால்தான் மற்றவர்களுக்கு வாய்ப்பு எனக் கூறி பேரறிவாளனுக்கு மட்டும் குரல் எழுப்புபவர்கள் உண்டு. இந்நிலையில் “எழுவர் விடுதலையா?ஒருவர் விடுதலையா? உண்மையும் உருட்டலும்” எனும் தலைப்பில் ஏழு தமிழரி…

  8. ஜெயமோகன் : இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் -தொகைநூல் January 17, 2021 யமுனா ராஜேந்திரன் இவ்வாறு அறிவித்திருக்கிறார் ‘ஜெயமோகன் : இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்’ நூலுக்குக் கட்டுரைகள் அனுப்பிய நண்பர்களுக்கும், நூலை எதிர்பார்த்து ஆவலுடன் விசாரித்த நண்பர்களுக்கும் நற்செய்தி. நூலைத் தொகுத்து முடித்துவிட்டேன். தோழர். டிராட்ஸ்க்கி மருதுவின் அட்டை வடிவமைப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. நூல் விரைவில் உங்கள் கைகளில் இருக்கும். 650 பக்கங்கள். இடதுசாரி இலக்கிய விமர்சன மரபில் இந்த நூல் ஒரு மைல்கல்லாக இருக்கும். அப்படித்தான் நான் நினைக்கிறேன். என்னைப்பற்றி இணையவெளியில், சிற்றிதழ்ச்சூழலில் எழுதப்பட்டவற்றில் ஒருபகுதி இப்படி தொகு…

  9. இடைவெளிகளை நிரப்பும் எழுத்து: ஆர். காளிப்பிரஸாத் வாசு முருகவேலின் நான்கு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று அவர் ‘ஈழத்தமிழில்’ எழுதிய ‘ஜெப்னா பேக்கரி’ நாவலின் ‘தமிழகத் தமிழ்’ பதிப்பு. இரண்டாம் பதிப்பு இவ்வாறு திருத்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதை மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. அந்த அளவு நமது மொழிப்புலமையின் நிலைமை இன்னும் மோசமாகிவிடவில்லை. அவ்விரண்டினையும் ஒரே நாவல் என்று கொண்டால் மொத்தம் மூன்று நாவல்கள் வெளியாகியுள்ளன. ஜெப்னா பேக்கரி நம் தலைமுறையில் நேராகக் கண்ட, அதில் தனக்கான சார்பு நிலை கொண்ட போரில் ஒன்று தமிழீழ விடுதலைப்போர். இதில் விடுதலைப் புலிகள்ஆதரவு / எதிர்ப்பு என இரு மனநிலைகள் இங்கு உருவாயின. அவற்றில் புலிகளுக்கு ஆதரவான மனநிலையில் இரு…

  10. "வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" நூல் திறனாய்வு! பேரா.நா.மணி 1998 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பர்துவான் பல்கலைக்கழகத்தில் ஒரு மாத கால பணியிடை பயிற்சி. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில பேராசிரியர்களும் அதில் கலந்து கொண்டார்கள். அவர்கள் மத்தியில், தமிழ் நாட்டைச் இருவர் மட்டுமே பிரபலமாக அறியப்பட்டு இருந்தனர். ஒருவர் ஜெயலலிதா மற்றொருவர் வீரப்பன். அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து வரை மட்டுமல்ல, பன்னாட்டு அளவிலும், வீரப்பன் நன்கு அறியப்பட்டே இருந்தார். வீரப்பனால், அச்சமும் பீதியும் நிறைந்த காலம் ஒன்று இருந்தது. அதனால் அவனைப் பற்றிய வீர தீரக் கதைகளும் சேர்ந்தே எழுந்து இருந்தது. எது உண்மை? எது பொய்? யாருக்கும் தெரியாது. வனத்துறை, காவல் …

  11. கோடையில் வாசிப்போம்: கால்நடைகளைப் போல் விற்கப்பட்ட மனிதர்கள் பலரும் படித்த பிறகு எந்த வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்ய ஆசைப்படுகிறார்கள், தெரியுமா? அமெரிக்கா. அமெரிக்கா போவது, அமெரிக்காவில் வாழ்வது பலருடைய கனவாக இருக்கிறது. அமெரிக்கா என்கிற அந்தத் தேசத்தின் நவீன வரலாறு 400 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கியது. ஒரு நவீன நாடாக அது வளர்வதற்கு முக்கியக் காரணம் என்ன தெரியுமா? ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து லட்சக்கணக்கான அடிமைகள் அமெரிக்காவுக்கு வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு, அடிப்படை மனித உரிமைகள் இல்லாமல் கடுமையாக வேலை வாங்கப்பட்டதுதான். ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகளைத்…

  12. ‘வீணையடி நீ எனக்கு’ : கிழக்குப் பல்கலைக்கழகம் சார்ந்தெழுந்த முதல் நாவல் March 26, 2021 — பேராசிரியர். செ.யோகராசா — ‘பல்கலைக்கழகத் தமிழ் நாவல்கள்” என்ற நாவல் வகைப்பாட்டினைச் செய்யுமளவிற்கு ஈழத்துத் தமிழ்ப் பல்கலைக்கழகங்களைக் களமாகக் கொண்டு ஒன்றிற்கு மேற்பட்ட நாவல்கள் வெளிவந்திருப்பதனை தீவிர வாசிப்புள்ள ஆய்வாளர்கள் அறிந்திருப்பர். இவ்விதத்தில் இவ்வேளை, பேராதனைப் பல்கலைக்கழகம் (கங்கைக்கரையோரம் – செங்கை ஆழியான், நிர்ப்பந்தங்கள் – கோகிலா மகேந்திரன், மிட்டாய் மலை இழுத்துச் செலலும் எறும்பு – ராஹில், உனக்காகவே வாழ்கிறேன் – கமலா தம்பிராஜா) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (சந்தனச் சிதறல்கள் – கோகிலா மகேந்திரன்), கொழும்பு பல்கலைக்கழகம் சார்ந்தும் ஒரு நாவல் வெ…

  13. “பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று நூல்வெளியீடு 22 Views வரலாற்றாய்வாளர் அருணா செல்லத்துரையின் “பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டுவிழா நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழ்த்துரையை தேசிய கல்வியற்கல்லூரியின் ஓய்வுநிலை பீடாதிபதி க. சுவர்ணரயா நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூ…

  14. `க்ரியா’ தமிழ் அகராதியில் திருநர் சொற்கள்... மாற்றுப்பாலினத்தவர் பெருமிதம்! சு. அருண் பிரசாத் ‘க்ரியா’-வின் தற்காலத் தமிழ் அகராதி | Cre-A Tamil Dictionary திருநங்கை/திருநர் சமூகத்தினர் பயன்படுத்தும் சொற்கள் அமைந்திருப்பதுதான் இந்தப் பதிப்பின் சிறப்பாகவும், முக்கியச் சேர்க்கையாகவும் இருக்கிறது! சமூக மாற்றங்கள் அனைத்தும் மொழியிலிருந்தே தொடங்குகின்றன. எந்த ஒன்றின் சமூக அடையாளமும் அது என்ன பெயரில் வழங்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் சமூக இயக்கத்தின் அடிப்படை மொழி! ஒரு சமூகம் எத்தனை தான் மொழி, பண்பாட்டு ரீதியில் மேம்பட்டிருந்தாலும், அது போதாமைகளைக் கொண்டிருப்பது இயல்பு. ஆனால், அது காலப் போக்கில் களை…

  15. அவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு.! சங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக வாழ்க்கை வரலாற்றை “ ஆடற்தடங்கள்” என்னும் பெருநூலினை தயாரிக்க உள்ளதை தங்களுக்கு அறியத்தருவதில் மகிழ்சி அடைகின்றோம். உலகெலாம் வாழும் ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடன ஆற்றுகைக் கலைஞர்களை ஒருமித்த தளத்தில் சேர்க்கவும், அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரே நூலில் இடம்பெறச்செய்து உலகெலாம் பரம்பலடையச் செய்யும் நோக்குடனும். 40 வயதிற்கு மேற்பட்ட நடன ஆற்றுகைக் கலைஞர்கள் மற்றும் நடனக்கலைஞர்களின் வரலாற்று விபரங்களைக் கொண்ட “ ஆடற்தடங்கள்” என்னும் பெருநூல் வெளிவர ஏற்பாடாகியுள்ளது. ஈழத்தினை மையமாக…

  16. நாம் 26 பேர் இணைந்து 2014 -2015 வரை எழுதிய தொடர் "விழுதல் என்பது எழுகையே" ஆறு மாதகாலக் கடும் முயற்சியில் நாவலாக நூலாக்கம் பெற்றுள்ளது. இதற்காக முயற்சி எடுத்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி. இந்த அட்டைப்படத்தை எமக்காக இலவசமாக வடிவமைத்துத் தந்த மூனா அண்ணாவுக்கும் நன்றி.

  17. போர்க்கால வாழ்வியலின் ஆவணமாக மிளிரும் ‘பங்கர்’ நூல் – பி.மாணிக்கவாசகம் 54 Views போர்க்காலத்தில் உயிர்ப் பாதுகாப்பு என்பதே பொதுமக்களின் ஒரே இலக்கு. மோதல்களில் ஈடுபட்டிருந்த தரப்பினர் எப்படியேனும் வெற்றியடைந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தனர். ஆனால் இடையில் அகப்பட்டிருந்த பொதுமக்களை உயிரச்சமே ஆட்கொண்டிருந்தது. மரணம் எந்தவேளையிலும் எந்த வடிவத்திலும் வரலாம் என்பதே அன்றைய நாளின் நிரந்தர விதியாக இருந்தது. இதனை அவர்கள் நிதர்சனமாக உணர்ந்திருந்தார்கள். உயிர்களைக் கொல்வது பாவம் என்பது மனுக்குலப் பொது நியதி. ஆனால் போர்க்களங்களில் எதிரியாகக் களத்தில் இருப்பவர்களைத் தாக்கிக் கொல்கின்ற உயிர்க்கொலை அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருந…

  18. பட்டமோடி (The Kite Runner) "மீண்டும் நல்வழிக்குத் திரும்ப ஒரு வழி இருக்கிறது!" "There's a way to be good again!" (இது பல ஆண்டுகளுக்கு முன்பு நாவலாக வெளிவந்து பின்னர் ஒரு திரைப்படமாகவும் வெளிவந்து விட்ட ஒரு படைப்பு. இதைப் பற்றி ஏற்கனவே யாழில் பகிரப் பட்டிருக்கக் கூடும், ஆனால் கொரனாவுக்கு முடங்கிய நாட்களில் வாசிக்கத் தகுந்த நல்ல புத்தகமாக இருப்பதால் இங்கே பகிர்கிறேன்) "யுத்தம் என்பது குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் மட்டும் நடக்கும் ஒன்றல்ல. இந்த உபகரணங்களுக்கு அப்பால் மக்களின் துன்பத்தினாலும் வாழ்க்கை மாற்றங்களாலும் கூட யுத்தம் பிரதிநிதித்துவம் செய்யப் படுகிறது". இப்படிச் சொன்னவர் வன்னியில் இறுதி யுத்த நாட்கள் வரை வாழ்ந்து மீண்ட தமிழ்க்கவி. …

  19. வியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா என்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகுவான விடயமல்ல. அவ்வாறு சிங்கள பண்பாட்டில் பல பாரம்பரிய அம்சங்கள் இன்றும் அதேமுறையில் பின்பற்றபட்டு வருகின்றது. இலங்கை பன்மைத்துவ சமூகத்தைக் கொண்ட நாடு. இன்று இன நல்லிணக்கம் குறைவாக இருப்பதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாக ஒரு இனத்தின் புராதன பண்பாட்டு, கலை, கலாசார அம்சங்கள் பற்றிய புரிந்துணர்வு இன்னொரு இனத்திற்கு இன்மையே ஆகும். இக்குறையை நிவர்த்தி செய்யும்பொருட்டும், இதுவரை தமிழில் அதிகம் பேசப்படாத சிங்கள புராதன கலாசாரத்தையும், பண்பாட்டு அம்ச…

  20. மனப்பிறழ்வின் நாட்குறிப்பேடு அஷேரா – தி.லலிதகோபன் அறிமுகம் சயந்தன் கதிர் என்று அழைக்கப்படும் சயந்தன் அவர்களின் மூன்றாவது நாவல் பிரதி அல்லது ஆதிரைக்கு பின்னரான பிரசவம் என்றோ இந்த அறிமுகத்தினை சுருக்கமாக நான் கடந்து விடலாம். ஆனால் அதற்கு அப்பாலும் சில செய்திகளை சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. முதன்முதலாக “ஆதிரை” என்ற பெயரினை முகநூலின் மூலமாக கேள்வியுற்றதன் பின்னர் நான் அந்த நூலினை வாசிப்புக்காக தேட முற்பட்டதன் காரணம் “ஆதிரை” என்ற பெயர் என்னுள் ஏற்படுத்தியிருந்த மயக்கமே. இதை பிரமிள் அவர்களின் மொழிதலில் குறிப்பிடுவதானால் “இடையறாத உன்பெயர் நிலவிலிருந்திறங்கி என்மீது சொரியும் ஓர் ரத்தப் பெருக்கு.” எனலாம். ஆனாலும் ஆதிரைக்கான எனது காத்திருப்பின் நாட்கள் சுமார் ஐ…

  21. இது முற்றிலும் பெண்களால் நிரப்பப்பட்ட நாவல். பெண்ணின் அகவுலகை ஆணின் பார்வையிலிருந்து பார்த்துப் பழகிய நமக்கு இதுவொரு புது அனுபவமாக இருக்கும். நாவலின் மையக்கருத்தை பின்னட்டையிலிருக்கும் குறிப்பிலிருந்து ஓரளவு அறிய முடிகிறது. இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை, வெளிவந்தவையும் ஓர் ஆணின் பார்வையிலிருந்தே அமைந்து வந்துள்ளது. முன்னுரையில் குறிப்பிட்டது போன்று "முதல் ஜாமத்தைக் காட்டிலும், விபரீதமானது - கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்". அது எல்லைகளற்றது, கட்டுப்படுத்த முடியாதது, தணல் போன்றது, ஆழ்ந்த நினைவுகளைக் கிளறிக் கொணர்வது. நாவலில் வரும் பகுதிகளைக் குறிப்பிடாமல், என்னுள் உணர்ந்தவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன். ராபியா என்ற…

    • 8 replies
    • 3k views
  22. கனடாவில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் சிறீறஞ்சனியும் அவரது மகள் சிவகாமியும் எழுதிய நூல். நூலின் பெயர் "சிந்துவின் தைப்பொங்கல்" ஆங்கிலம் தமிழ் பிரெஞ்சு மொழியிலும் வெளியாகிறது. https://www.amazon.ca/dp/B08S7KTBNH புத்தகம் பற்றிய ஒரு கருத்துரை. “சிந்துவின் தைப் பொங்கல் உண்மையிலேயே ஒரு கனடாக் கதையாகும். புலம்பெயர் வாழ்க்கை, குடும்பம், பாரம்பரியம் என்பவற்றின் யதார்த்தத்தை இது தெளிவாகப் படம் பிடித்துக்காட்டுகிறது. எம்மை நிலைநிறுத்தும் இருமுகத்தன்மை, வருடாந்த அறுவடை மற்றும் குடும்பத்தவரிடையே இருக்கும் அன்பு ஆகியவற்றை இந்தக் கதை கொண்டாடுகின்றது. தனிமயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் இத்தகைய பொதுமையான கருப்பொருள்களை நாம் புரிந…

    • 0 replies
    • 628 views
  23. திருகோணமலையில் சோழர் - டாக்டர் ஜீவராஜின் புதிய நூல் இலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில் சோழர்களது ஆட்சி பற்றிய சில கட்டுரைகளை கொண்டு இம்மின்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சோழ இலங்கேஸ்வரன், சோழர்கால தமிழ் பௌத்தம் என்பன அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. வலைப்பதிவில் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகளே இவை. இது திருகோணமலையில் சோழராட்சியின் முழுமையான விபரிப்பாக அமையாது என்றாலும் அது தொடர்பில் ஒரு சிறு அறிமுகத்தை தருகின்ற முயற்சியாகவே இது.. https://vanakkamlondon.com/l…

  24. எனக்குப் பிடித்த சில புத்தகங்கள் - 2020 இளங்கோ-டிசே (1) அற்றவைகளால் நிரம்பியவள் - பிரியா விஜயராகவன் (நாவல்) பிரியா இதை 2008/2009 காலங்களில் எழுதத் தொடங்கியபோது, யார் இவர் இவ்வளவு சுவாரசியமாக எழுதுகின்றாரே என ஒவ்வொரு அத்தியாயங்களையும் 'காட்சி' வலைப்பதிவில் வாசித்திருக்கின்றேன். அங்கே இந்த நாவல் இடைநடுவில் நின்றுபோனாலும், யார் இந்த யமுனா என்று (அப்போது யமுனா ராகவன் என்று புனைபெயரில் எழுதியிருந்தார்; அது அவரின் அம்மாவினதும் அப்பாவினதும் பெயர்களை இணைத்து வந்த புனைபெயர்) தேடியிருக்கின்றேன். அப்படி அவர் யாரெனத்தேடி அக்காலத்தில் அவர் இங்கிலாந்தில் இருக்கின்றார் என்பதையும் நானாகவே தேடிக் கண்டுபிடித்தேன். அது ஒரு வாசகர் தனக்குப் பிடித்த எழுத்தாளரைத் தே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.