Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பொயற் ஐயாவும் இடையில் கூட்டத்தை தன் கையில் எடுக்கப்பார்த்தார் (24 ஆவது நிமிடத்தில் இருந்து). ஆனால் ஷோபாசக்தி ஒரு மாதிரி தனது கலந்துரையாடலுக்குள் கொண்டுசேர்த்துவிட்டார்.

  2. புதியதொரு தேசம் செய்வோம்

  3. மார்க்சியப் பார்வையில் அத்வைதம் விமர்சனம்.! இடதுசாரிகளிடையே தத்துவ விவாதங்கள் மிகமிகக் குறைவாக நடக்கின்ற இக்காலத்தில் தோழர் பி.இளங்கோ சுப்பிரமணியன் எழுதிய “மார்க்சியப் பார்வையில் அத்வைதம்” என்ற நூல் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கதே. தொடங்கினால் தான் நிறைகுறையை அறிந்து நீக்கிக் கொள்ள முடியும். தோழர் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி. இந்தியத் தத்துவங்களில் ஒன்றான அத்வைதத்தை இந்நூலில் விமர்சித்துள்ளார். அத்வைதம் ஒரு முன்னாள் தத்துவம். அது நவீன உலகின் தத்துவம் அல்ல (பக்கம் -47), என்பதே தோழரின் கருத்தாக இருக்கிறது. அப்படி இருக்க நவீன உலகில் காணப்படும் தத்துவத்தை விடுத்து இந்த அத்வைதத்தை ஏன் எடுத்து விமர்சித்துள்ளார் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. “பிரம்மம் ஒன்ற…

  4. குமிழி நாவல் மீதான உள்ளடக்க உரையாடல்: அசுரா நாதன் ஆயுதப் போராட்ட அனுபவங்களை சுமந்து வரும் இலக்கியப் பிரதிகளின் தொடர்ச்சியாக ‘குமிழி’ எனும் நாவல் வெளிவந்திருக்கிறது. 1985ம் ஆண்டில் வெளிவந்த கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ எனும் நாவலின் உரையாடல் பகுதியாகவும், தனித்துவமாகவும் ரவியின் ‘குமிழி’ நாவலின் சித்தரிப்பு அமைந்திருக்கிறது. கோவிந்தனும், ரவியும் இருப்பினும் ‘புளட்’ இயக்க தோழர்களான இரண்டு படைப்பாளிகளின் காலமும், தேர்வும் வெவ்வேறானவை. கோவிந்தன் இலட்சிய வேட்கையுடன் புரட்சிகரமான ஒரு ‘மாளிகையை’ கட்டியெழுப்பியவர். தாம் மேற்கொள்ளும் விடுதலைப் போராட்டமே சர்வதேசப் புரட்சிக்கும் சாதகமாக அமையப்போகிறது, அதற்காகக் கட்டப்பட்ட ‘மாளிகையே’ புளட் எனும் அமைப்பாக நினைத…

  5. பிரபாகரன் சட்டகம் – நூல் வெளியீடு தமிழர்தரப்பின் பலத்தை மேலோங்கச் செய்ததன் காரணத்தாலும், அறிவியலினூடாகவும் தொலைநோக்கினூடாகவும் தமிழீழ அரசின் பொதுக்கட்டுமானங்களை வேகமாகக் கட்டியெழுப்பியதாலும் உலகத்தமிழர்களுக்கெல்லாம் அச்சாணியாகவும் பாடமாகவும் தமிழீழ விடுதலைப்போர் அடையாளப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக உளக்கிளர்ச்சியுடன் வாழ்ந்துவந்த உலகத்தமிழர்களை, 2009 இல் உலகஅரசுகளின் கூட்டுச்சதியோடு சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்பானது ஆழ்ந்த வேதனையையும் உளச்சோர்வையும் தந்து படுகுழிக்குள் தள்ளியது. “நாம் தோற்றுப்போய்விட்டோம்” என்ற அவல மனநிலையுடன் தமிழர்கள் பதினொரு ஆண்டுகளைக் கடந்துவிட்டார்கள். இன்னமும் அப்படியேதான் பலர் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் ” நாம் தோற்…

  6. நடிகர் பொன்வண்ணன் & பதிப்பர் ஒளிவண்ணன் பேரழைப்பு : தமிழர் வரலாற்று மா.சோ.விக்டர் புத்தகங்களை பெற வரலாற்று பெரும் ஆவணங்களாக ஐயா மாசோ விக்டர் அவர்களின் புத்தகங்களை பெற மிகப்பெரிய வாய்ப்பு இது. அவருடைய 124 புத்தகங்களை வெளிக்கொண்டு வரும் விதமாக முதல் தவணையாக 25 புத்தகங்களை கொண்டுவருவதோடு மட்டுமின்றி அந்த புத்தகங்களை முன்பதிவு திட்டத்தில் மிகக்குறைந்த விலையில் பெறுவதற்கு முன்பதிவு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. சுமார் 14000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் இந்த முன்பதிவு திட்டத்தின் மூலமாக 8000 ரூபாய்க்கு வழங்க இருக்கிறார்கள். இந்த திட்டம் சம்மந்தமான புத்தகங்கள் இந்த காணொளியில் இறுதியில் அந்த புத்தகங்களில் அட்டைப்படங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறத…

  7. இன்றுதான் தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடங்கியது முதல் முடியும்வரை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் கதை நகர்கிறது. நான் வாழ்ந்த மண்ணில், நான் நடந்த வீதியில், நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் தரிசிக்க முடிகின்றது. கதையின் பல இடங்களில் நான் பட்ட அனுபவங்கள் கண் முன்னே படமாக விரிகின்றன. போர் தின்ற பூமியில் வாழ்ந்த எல்லோருடைய அனுபவங்களும் இவையாகவே இருந்தன, இருக்கின்றன. கிளிநொச்சியில் தொடங்கும் கதை விரிந்து பரந்து வன்னியின் பெரும்பாலான இடங்களுக்கு நகர்கிறபோது நானும் என்னை அறியாமல் அந்த இடங்களுக்கே சென்று விடும் உணர்வைத் தந்தது. ஒரு தாயின் பாசப் போராட்டமும் மகனின் தாய் மண் பற்றிய ஏக்கமும் கதையெங்கும் இழையோடி நிற்…

    • 0 replies
    • 520 views
  8. மட்டக்களப்பில் இன்று ஏழு நூல்கள் வெளியீடு… கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட ஏழு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இந்த ஏழு நூல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களின் ஆக்கங்களை வெளியிட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் அவர்களினால் எழுதப்பட்ட நூல்களை அச்சிட்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டு வைக்க முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில் ஏழு எழுத்தாளர்களின் ஏழு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பு,களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல…

  9. காதுகள்- எம்.வி. வெங்கட்ராம் - வாசிப்பு குறிப்பு சுனீல் கிருஷ்ணன் எம். வி. வியின் வாழ்க்கை சித்திரத்தை பற்றி ஜெயமோகனின் 'அறம்' கதை வழியாக முதன்முறையாக பரிச்சயம் செய்து கொண்டேன். நித்ய கன்னி நாவலை சில ஆண்டுகளுக்கு முன் வாசித்திருக்கிறேன். 'காதுகள்' எழுபது வயதிற்கு மேல் அவர் எழுதிய நாவல். அவருக்கு சாகித்திய அகாதமி விருதை பெற்றுக்கொடுத்த நாவலும் இதுவே. பசித்த மானிடம் முடித்த கையுடன் காதுகள் வாசிக்க தொடங்கினேன். இதுவும் கும்பகோணத்தை களமாக கொண்ட நாவல் தான். இப்போது இதை முடித்துவிட்டு மோக முள் தொடங்கியிருக்கிறேன். 'காதுகள்' குறித்து முன்னர் இரண்டொரு வாசிப்பனுபவங்கள் வாசித்தது நினைவில் இருக்கிறது. அது அளித்த அச்சத்தின் காரணமாகவே வாசிப்பதை தவிர்த்தும் தள்ளிப்போட்டும் …

  10. தமிழில் ஒரு சர்வதேச நாவல் சென்ற நூற்றாண்டில் தமிழில் பிரதானப் போக்காக இருந்த நவீன நாவல் வடிவம், நவீன எழுத்துகளோடு சேர்த்துப் பார்க்க முடியாத தனித்துவமான எழுத்து ப.சிங்காரத்துடையது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தொன்மை கொண்ட தமிழர் வரலாறு, மெய்யியல், பண்பாடு, வாழ்க்கைப் பார்வை, மொழி மரபின் குணங்கள் சேர்ந்த வெளிப்பாடு ப.சிங்காரம். உலகப் போரின் பின்னணியில் தென்கிழக்காசிய நாடுகளின் ஒரு காலகட்டத்து அரசியல், வெகுஜனப் பண்பாட்டை விரிவாகவும் நுட்பமாகவும் அவர் தனது இரண்டு நாவல்களிலும் படைத்துள்ளார். அதிலும், ‘புயலில் ஒரு தோணி’ நாவலானது லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ போன்ற பெரும் படைப்பை நோக்கி தமிழ் படைப்பாளி ஒருவர் கண்ட கனவு என்றே சொல்லலாம்! சரித்திரத்தின் கதிய…

  11. "கள்ளத்தோணி" : வரலாற்றை கற்க முனைபவர்களுக்கு ஓர் சிறந்த உசாத்துணைகளில் ஒன்று - பிரகாஷ் சின்னராஜா ஓர் எழுத்தாளர் ஓர் விடயத்தை தகுந்த மூல ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும்பொழுதே அது வலிமையான ஆவணமாக உருமாற்றம் பெறும். சமூக, அரசியல், வரலாற்று விடயங்களை எழுதுபவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான விடயமாக இது உள்ளது. அவ்வகையில் இலங்கையின் சமூக, அரசியல், வரலாற்றுத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு பேசாப் பொருளை பேசுபொருளாக்கிப் பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன் அவ்வாறான வலுவான நூல்களை எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றார் என்றால் மிகையல்ல. இவரது படைப்புகளில் "கண்டிக் கலவரம் 1915", "தலித்தின் குறிப்புகள்" வரிசையில் இ…

  12. வாசன் நான் என் வாசிப்பு அனுபவங்களை பல்வேறு வடிவங்களிலும் பகிர்ந்து வருவதுண்டு. அவைகள் யாவும் எத்தனை பேரால் கவனங்கொள்ளப்படுகின்றது என்பது குறித்தெல்லாம் எனக்குப் பெரிதாக கவலை ஏதும் இல்லை. ஆயினும் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதில் மட்டும் நான் எப்போதுமே அவதானமாக இருந்து வருகின்றேன். ஏற்கனவே ஈழவிடுதலைப் போரினாலும், அதன் உள்ளக முரண்பாடுகளினாலும், அதன் பகை முரண்பாடுகளினாலும் ஏற்படுகின்ற சர்ச்சைகளினாலும் அதன் குத்து வெட்டுக்களினாலும் ஏற்கனவே பல நட்புக்களினதும் உறவுகளினதும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையில்லாத பிரச்சினைகள் எதுவும் எனக்குத் தேவையில்லை என்பதே எனது மனநிலை. இந்த என்னுடைய அவதானத்தையும் மீறி ஒரு தடவை மட்டும் ஒரு சிக்கலில் மாட்டிக…

  13. பள்ளிக்கூடம் பற்றி தீபச்செல்வன் எழுதப் போகும் புதிய நாவல். பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி புதிய நாவல் ஒன்றை எழுதப் போவதாக அறிவித்துள்ளார் கவிஞர் தீபச்செல்வன். நடுகல் நாவல் வாயிலாக தமிழர்களின் பரவலான கவனத்தை பெற்றவர் தீபச்செல்வன். மூவாயிரம் பிரதிகளை கடந்து மூன்றாவது பதிப்பை நடுகல் கடந்திருப்பதாக அண்மையில் கூறினார் தீபச்செல்வன். அத்துடன் பயங்கரவாதி என்ற புதிய நாவலை எழுதி வருவதாகவும் அறிவித்திருந்த நிலையில் தற்போது பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி புதிய நாவல் ஒன்றை எழுதப் போவதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு எழுத்தாளன் ஆசிரியராக பணியாற்றுவது சிறந்த வாய்ப்புத்தான். எதிர்காலத்தில் பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி, கிளிநொச்சி மண்ணின் கல்வியை மையப்படுத்தி ஒரு நாவலை எழுதப் …

  14. சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் – நூல் விமர்சனம் August 28, 2020 சு.கஜமுகன் லண்டன்காரர் என்னும் குறுநாவலிற்கு பிறகு சேனன் எழுதி இருக்கும் இரண்டாவது நாவலே சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் ஆகும். இதுவும் ஒரு வகையான யுத்த நாவல்தான் என்றபோதும் யுத்தத்தையும் அதன் துயரத்தையும் மட்டும் பேசாமல் அதன் அரசியல், வரலாற்றுப் பின்னணியை நிகழ்கால சம்பவங்களுடன் சேர்த்துப் பேசுகின்றது. இக்கதையில் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வீரதீர செயல்களோ அல்லது தனிநபர் சாகாசங்களோ பேசப்படவில்லை மாறாக யுத்தம் நிகழ்ந்த இந்த வரலாற்றுத் தருணத்தில் வாழ்ந்த எளிய மக்களின் அன்றாட வாழ்வு, யுத்தத்தில் எதிரொலித்த அவர்களின் அவலக்குரல் மற்றும் யுத்தத்தின் பின்னர் நிர்கதியாக்கப்பட்ட அவர்களின் …

  15. காடு நாவல்: ஒரு வாசிப்பு. - சுயாந்தன் நவீன இலக்கியம் பலரது படைப்பின் தொடக்கத்துடன் நம்மிடையே அறிமுகமாகிறது. அந்தப் படைப்புக்களில் ஒரு சிலவே நம்மை அதற்குள் செல்ல அனுமதிக்கிறது, நம்மை அப்படைப்பின் சூழலுடன் ஒன்றிணைய வைக்கிறது, நமக்கான இலக்கியம் இதுதான் என்று உணரவும் தலைப்படுகிறது. ஜெயமோகனின் மகத்தான படைப்புக்களில் ஒன்றாகக் காடு நாவலைக் கூறுவேன். அதனை அவரது படைப்பாக மட்டுமன்றி தமிழின் சிறந்த செவ்வியல் கூறுகள் கொண்ட ஒரு நாவலாகவும் குறிப்பிடலாம். கிரிதரன் மலைக் காட்டுக்குள் சென்று மாமனாரின் கொன்ராக்ட் வேலைகளுக்கு உதவி செய்வதும் அங்கு வேலையாட்களாக உள்ள குட்டப்பன், ரெசாலம், குரிசு மற்றும் எஞ்சினியர் நாகராஜ அய்யர் போன்ற கதாபாத்திரங்களும் கிரிதரன் …

  16. சொற்களில் சுழலும் உலகம்

  17. I AM CHANGE - புத்தக விமர்சனம் நேற்று மகளுடன் கதைக்கும் போது இந்த புத்த கத்தைப் பற்றி கூறினார், நல்ல புத்தகம் எல்லா பெண்களும் வாசிக்க வேண்டிய புத்தகம் என்றார், அப்ப விமர்சனத்தை எழுதி தருமென்றேன். அவரின் விமர்சனம் This novel is a beautiful story that takes on the perspective of a 15 year old Ugandan girl and powerfully describes the hardships many young girls around the world face. Living in first world countries its easy to forget that not everyone is as privileged and lucky as we are. I think its extremely important to never be ignorant of others suffering or be ungrateful for our own luxuries. We should be grateful to worry about p…

  18. மீனா’ தெலுங்குப் படத்துக்கும் தமிழ் நாவல் உலகில் எண்டமூரி விரேந்திரநாத் பெயரில் நடந்த மோசடிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எண்டமூரி விரேந்திரநாத்? ஆம். 70 - 80 - 90ஸ் கிட்ஸின் ஹாட் கேக். 1980களில் தமிழ் வெகுஜன தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். ‘துளசி தளம்’, ‘மீண்டும் துளசி’ ஆகிய எண்டமூரி விரேந்திரநாத்தின் நாவல்கள் சுசீலா கனகதுர்க்காவின் மொழிபெயர்ப்பில் தமிழகத்தில் வெளியாகி பெரும் அதிர்வை ஏற்படுத்தின. இவ்விரு நாவல்களின் வெற்றியை தொடர்ந்து எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய பல நாவல்கள் தமிழ் வார இதழ்களில் தொடர்கதைகளாகவும் நேரடி நாவல்களாகவும் வெளிவந்தன. லெண்டிங் லைப்ரரியில் தவறாமல் இடம்பெற்று வாசகர்களின் ஆதரவை பெற்றன. அப்படி வெள…

  19. ஐந்து நூல்கள் விமர்சன விழா

  20. ஜெயமோகனின் இந்திய ஞானம் சுயாந்தன் ஜெயமோகனின் இந்திய ஞானம் என்ற இந்நூல் இந்திய ஞானம் பற்றி எனக்கு மேலதிக தேடலையும் புரிதலையும் உண்டாக்கிய ஒன்று என்றே கூறுவேன். அவருடைய "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்" என்ற நூல் வழங்கிய அறிதலையும் புரிதலையும் வேறு எந்தவொரு நூலும் இந்து ஞான மரபு பற்றி தெளிவாக்கியதில்லை. அந்த நூலில் இடம்பெற்ற ஆறுதரிசனங்கள் பற்றிய பிரக்ஞை இன்றும் என் ஞாபகத்தில் அறையப்பட்டுள்ளது. அதிலிருந்துதான் பல படைப்புக்களை என் பார்வையில் அணுகவும் வழி செய்தது. படைப்புக்களை வாசிப்பதற்கும் புனைவல்லாத கட்டுரைகளைப் படித்து அறிவைத் தெளிவு படுத்திக் கொள்வதற்கும் இடையில் உணர்வு மற்றும் அறிவு இரண்டும்தான் எல்லையாக உள்ளது.இந்திய ஞானம் என்ற ஜெமோவின் இந்த நூல் அறிமுக…

  21. கொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம். (நன்றி- விகடன்)

    • 5 replies
    • 958 views
  22. புயலிலே ஒரு தோணி: எக்காலத்துக்குமான படைப்பு. சுயாந்தன் எளிய வாசகனாக இருந்த எனது வாசிப்பின் தொடக்கம் கல்கியில் இருந்து ஆரம்பித்தது. சடுதியாக ஜெயமோகனை வந்தடைந்தேன். பாலையில் இருந்து மருதம் வந்தது போன்ற ஆதூரவுணர்வு என்னுள் ஏற்பட்டது என்றே கூறுவேன். அதன் பின்பு ஒரு காலமும் நான் வணிக எழுத்துக்களின் பக்கம் சென்றதில்லை. அதனை ஒரு பொருட்டாக மதிக்கவும் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் கொண்டுள்ளேன். அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரத்தில் இந்த வணிக எழுத்துக்கான எதிர்ப்பு விதைகள் உள்ளன என்று அதனை வாசிக்கும் நாம் ஒவ்வொருவரும் உணரமுடியும். அண்மையில் ப.சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி நாவல் வாசித்து முடித்தேன். இதனை வாசித்ததும் என்னுள் ஒரு விபரீ…

  23. ஈழ தமிழ் நூல்கள் வெளியீடு .! வவுனியா கனகராயன்குளத்தை சேர்ந்த பேராசிரியர் முருகர் குணசிங்கத்தின் 1. இலங்கையில் தமிழர் ஓர் முழுமையான வரலாறு 2.இலங்கை தமிழ் தேசியவாதம் அதன் ஆரம்ப தோற்றம் பற்றிதொரு ஆய்வு 3.புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஓர் உலகளாவிய ஆய்வு. என்ற புலமைசார் மூன்று ஆய்வு நூல்கள், இன்று வெளியிட்டு வைக்கப்பட்டன. கனகராயன்குளம் புதுக்குளம் தங்கம்மா முதியோர் இல்ல வளாகத்தில் இடம்பெற்ற இவ்வெளியீட்டு நிகழ்வில், யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியலிங்கம் பிரதம அதிதியாகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை தலைவர் ரி. கணேசலிங்கமும் வவுனியா ஆசிரியர் நடுவகத்தின் முகாமையாளர் சு. ஜெயச்சந்திரனும் கலந்துகொண்டிருந்தனர் -க. அகரன் …

  24. நன்றி கலாபூஷணம் .திருமதி கோகிலா மகேந்திரன் நிவேதா உதயராயனின் ,''உணர்வுகள் கொன்றுவிடு '' சிறுகதைத்தொகுதி -ஒரு விமர்சனம் சிறுகதை எழுதுவது ஒரு கலை .ஒரு உணர்வினை அல்லது பெறுமானத்தினை வெளிப்படுத்துவதிலும் ,தொடர்புறுத்துவதிலும் மனிதத்திறன் வெளிப்படும் ஒரு முறை என்று கூறலாம் .சிறு கதை வாழ்வின் ஒரு வெட்டுமுகமாக அமைய வேண்டும் என்பது அன்டன் செக்கோவின் கருத்து . நிவேதா உதயராயன் ''உணர்வுகள் கொன்றுவிடு ''என்ற தனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியை புலம்பெயர் எழுத்தாளர் என்ற வகையில் பிரித்தானியாவில் இருந்து தந்துள்ளார் ''.உணர்வுகள் ''உடன் வந்திருக்க வேண்டிய ,''ஐ ''வேற்றுமை உருபை த் தவிர்த்து வித்தியாசமாய் ஒரு தலைப்புடன் வந்திருக்கும் இந்த நூல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.