மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
உள்ளார்ந்த உடன்படாத் தன்மை முரண்பாடு ஆகும்.அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட தனிநபர் அல்லது குழுக்களுக்கிடையில் அல்லது அவற்றுக்குள்ளே அவை கொண்டுள்ள ஒன்றுக்கொன்று பொருத்தப்பாடற்ற இலக்கு, தேவை, விருப்பு, நம்பிக்கை, விழுமியம் நடத்தை அல்லது புரிந்து கொள்ளலின் அடிப்படையில் எழும் இறுக்கமான இணங்காத்தன்மை முரண்பாடு என வரையறுக்கப்படும். இந்த முரண்பாடுகளின் வகைகளாக, அகமுரண்பாடு: விரக்தி, பைத்தியம், தற்கொலை முயற்சி தனிநபர் முரண்பாடு: குடும்ப முரண்பாடு – உள்ளேயும், இடையேயும் சமூக முரண்பாடு அரசியல் முரண்பாடு சமய /இன / வர்க்க முரண்பாடு மனித – விலங்கு முரண்பாடு சித்தாந்த முரண்பாடு/ கொள்கை முரண்பாடு நிறுவனம் முரண்பாடு போன்றனவற்றைக் குறிப்…
-
- 0 replies
- 1.6k views
-
-
மாத்தியோசி கலக்கல் கதைகள் -எந்த விடயத்தையும் வித்தியாசமாய் சிந்தியுங்கள் ஒரு அரசு கட்டிடத்தின் படிகளில் கண் பார்வை இழந்த சிறுவன் பிச்சைக்காக அமர்ந்திருந்தான்.அவன் காலடியில் இருந்த தொப்பியில் சில சில்லறை காசுகளே சேர்ந்திருந்தன.கூடவே ஒரு அறிவிப்பு பலகை " நான் பார்வையற்றவன்" தயவுசெய்து எனக்கு உதவுங்கள் என்கிறது. அவ்வழியாக கடந்து போன சான்றோர் ஒருவர்,தொப்பியில் கொஞ்சம் காசு போடுகிறார்.அந்த அட்டையை எடுத்து,திருப்பி அதில் ஏதோ எழுதுகிறார். இப்போது அதை கடந்து போகும் அனைவரும் காசு போடுகின்றனர். தொப்பியும் நிரம்பி வழிகிறது. சிறுவனுக்கோ மிகவும் சந்தோஷம். மதிய உணவு வேளையின் போது அந்த சான்றோர் அங்கு வர இவன் காலடி சத்தத்தை வைத்து அவரை கண்டுபிடிக்கிறான்.…
-
- 1 reply
- 1.1k views
-
-
பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர். இன்னும் சிலர் கடவுளே இல்லை இதில் சொர்க்கம் எங்கே நரகம் எங்கே என்று வாய்ப்பேச்சு பேசுவர். ஆக எவருமே அறியாத எவருக்கும் புரியாத ஒரு மாய உலகமே மரணத்திற்கு பின்னால் நம்மை தொடர வைக்கிறது. எதற்குமே அஞ்சாத மனிதன் கூட தன் மரணத்திற்கு நிச்சயம் அஞ்சுவான். மரணத்திற்கு பின்னர் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற இனம் புரியாத வேளையில் நாம் ஏன் மரணத்திற்கு அஞ்ச வேண்டும்? இந்த பூமியில் நாம் தானம்,தர்மங்களை செய்து ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் மட்டுமே மரணத்திற்கு பின்னால் நமக்காக காத்துக் கொண்டிருக்கும் இன்னொரு உலகத்தை அடைய முடியும் என்று கற்பனைக் கதைகளை நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்று விட்டனர். எவ்வளவோ அற…
-
- 6 replies
- 2.7k views
-
-
-
- 10 replies
- 1.5k views
-
-
வங்கி காவலாளி கொலை வழக்கு: துப்பு துலங்காததால் ஜோதிடரிடம் குறிகேட்ட போலீசார் சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே வங்கி காவலாளி கொலை வழக்கில் ஒரு மாதமாகியும் துப்பு கிடைக்காததால் போலீசார் ஜோதிடரிடம் குறி கேட்டுள்ளனர். சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் காவலாளி ராமராஜ் என்பவர் கடந்த மாதம் 25ம் தேதி நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். திருவேங்கடம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளி யார் என்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் பற்றிய துப்பு கிடைக்காததால் எஸ்பி விஜயேந்தி பிதாரி உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் வங்கி செயலாளர் …
-
- 0 replies
- 725 views
-
-
எப்போதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கவே விரும்புகிறோம். ஆனால் ஏதேனும் தொல்லைகள் வந்து சேரத்தான் செய்கிறது. எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டால் போதும் என்று மனம் தவிக்கும். மனதிலும் உடலிலும் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டு குழப்பம் தோன்றிவிடும். இப்படிப்பட்ட சங்கடங்களை சமாளிக்கும் விதம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அவரவர்களுடைய ஆளுமையை பொருத்து திறனும் இருக்கும். சிலருக்கு மிக எளிதாக இருக்கிறது. இது என்ன பெரிய விஷயம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள். இவர்களுக்கு சில தகுதிகள் அமைந்திருக்கின்றன. அல்லது அவற்றை வளர்த்துக் கொண்டார்கள். அவை ................. எதிலும் நம்பிக்கை கொண்டிருப்பது.(confidence) நம்மால் இதை சமாளிக்க மு…
-
- 0 replies
- 1.3k views
-
-
மக்கள் கர்மவினைப் பலனைப் பற்றி கூறுவார்கள். போன பிறப்பிலே என்ன நடைபெற்றது என்று கூறுவதற்கு பலர் உள்ளார்கள். ஆடுத்த பிறப்பிலே என்ன நடைபெறும் என்று கூறுவதற்கும் பலர் உள்ளார்கள். ஆனால் யாரும் இந்த வாழ்வைப் பற்றி, இந்த பிறப்பை பற்றி பெரிதாக பேசுவதில்லை. நீங்கள் ஓரிடத்திற்கு செல்வதற்கு மூன்று பேரூந்துகளிலே செல்ல வேண்டும் என வைத்துக் கொள்ளுவோம். முதலாவது பேரூந்திலே பிரயாணம் செய்து பேரூந்து நிலையத்திற்கு வந்துவிட்டீர்கள். இன்னமும் இரண்டு பேரூந்துக்கள் எடுக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் அடுத்து எடுக்கவேண்டிய பேரூந்தை பற்றி எண்ணுவீர்களா? அல்லது மூன்றாவதாக எடுக்கவேண்டிய பேரூந்தை பற்றி யோசிப்பீர்களா? ஏனெனில் எது நடந்து முடிந்துவிட்டதோ, அது முடிந்த காரியம். எது நடக்கப் போகி…
-
- 1 reply
- 987 views
-
-
முனி-ரிஷி-சித்தர்-யோகி-குரு http://www.youtube.c...d&v=iln5FhPibbw http://www.youtube.c...d&v=WRwVJ_g4lG0
-
- 1 reply
- 2k views
-
-
தினந்தோறும் ஒரு 'தீபாவளி' நடக்கிறது. அதற்கு 'சூரிய உதயம்' என்று பெயர். மாதம் தோறும் ஒரு தீபாவளி நடக்கிறது. அதை 'பௌர்ணமி' என்கிறோம். வருடத்திற்கு ஒரு தீபாவளி நடக்கிறது. அதை மட்டுமே தீபாவளி என்று நாம் நினைக்கிறோம் ஆவளி என்றால் வரிசை என்று பொருள். ஸ்வரங்களை வரிசை படுத்தினால் ஸ்வராவ்ளி. ஆண்டவனை அர்ச்சிக்கும்போது நாமங்களை வரிசைபடுத்தினால் நாமாவளி. அதுபோல் தீபங்களை வரிசைப்படுத்தினால் தீபாவளி. விளக்கு - தீபம் - பெண்களோடு தொடர்புடைய ஒரு விஷயம். அழகான பெண்பிள்ளைகளை " குத்துவிளக்கு மாதிரி" என்று வர்ணிப்பது வழக்கம். வீட்டுக்கு வரும் மருமகளை " வீட்டில் விளக்கேற்றி வைக்க ஒரு பெண் வந்தாள்" என்பது வழக்கம். அதனால்தான் இருகரத்தாலும் திருவிளக்கேந்திய ந…
-
- 5 replies
- 1.4k views
-
-
மனவியல்வு சிக்கல் இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரு பொதுப் பிரச்சினையாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு அதிகப்படுத்தப்பட்ட அளவில் சுய மதிப்பீடு இருப்பின், அவர் பிறரை விட தன்னை உயர்வாக நினைக்கத் தொடங்குகிறார். மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இந்த சுய மதிப்புதான். இந்த அதிகப்படுத்தப்பட்ட சுய மதிப்பு சுபாவமானது, ஒரு மனிதனை Superiority complex என்ற நிலைக்குத் தள்ளுகிறது. இந்த மனப் பாங்கானது, அறிவுப்பூர்வ நிலையிலிருந்து ஒரு மனிதனை திருப்பி, அவனை தவறான கருத்தியலுக்குள் செலுத்தி, அவனது ஆளுமையில்(Personality) பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒருவர் தன்னுடைய சுய நன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், வேறு யார் அவரின் நலனில் அக்கறை செலுத்துவர் …
-
- 0 replies
- 625 views
-
-
உன்னால் ஒன்றை திருத்த முடிய தெரியாதிருந்தால்..... தயவு செய்து... அதை உடைப்பதை நிறுத்து!
-
- 2 replies
- 1.3k views
-
-
இராமாயணம்: பல்கலை பாடத்திட்டத்தில் சர்ச்சை டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் இளங்கலை பட்டம் படிப்பு பாடத்திட்டத்தின் பகுதியாக இருந்த ராமாயணம் குறித்த ஆய்வுக் கட்டுரை வலதுசாரி சார்புடையவர்களின் எதிர்ப்பு காரணமாக நீக்கப்பட்டுள்ளதை நாட்டின் முன்னணி வரலாற்று அறிஞர்கள் கண்டித்துள்ளனர். மறைந்த ஏ கே ராமானுஜன் அவர்களால் எழுதப்பட்ட "300 இராமாயணங்கள் - ஐந்து உதாரணங்கள் - மொழிபெயர்ப்பு குறித்த மூன்று சிந்தனைகள்" என்ற புத்தகத்தில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் இராமாயண கதைகளில் உள்ள மாறுபாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதில் வரும் கருத்துக்கள் இந்துக்களை புண்படுத்துவதாக இருப்பதாகக் கூறி ஒருவர் வழக்கு தொடுத்ததை அடுத்து இந்த விடயம் குறித்து ப…
-
- 1 reply
- 662 views
-
-
பலாயிரக்கனக்கான பக்தர்களுடன் சேர்ந்து வல்லிபுர மாயவன் இன்று கடலில் நீராடி மகிழ்ந்தான் http://youtu.be/sRPeMScqIMY
-
- 4 replies
- 1.2k views
-
-
நன்றி ராஜவன்னியன் பகிர்வுக்கு, "தமிழ் பேசி, மற்ற நேரம் வேற்று மொழி பேசும் தமிழரிடம் மறக்காமல் சொல்... உன் மொழி, தமிழ் மொழியென்று"
-
- 3 replies
- 1.3k views
-
-
மகிழ்ச்சியின் ரகசியம் வாழ்க்கையின் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் வந்த ஒரு இளைஞரிடம் அந்த ஞானி, "நீ முதலில் எனது மாளிகையைச் சுற்றி பார்த்துவிட்டு வா, பிறகு பதில் சொல்கிறேன்" என்றார். “இதோ கிளம்பிவிட்டேன்” என்று எழுந்தவரிடம் ஞானி சொன்னார், “ஒரு நிமிடம்.. இதோ இந்த ஸ்பூனை உங்கள் வாயால் பிடித்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கிற எண்ணெய் கீழே சிந்திவிடாமல் சுற்றிப் பாருங்கள்” என்றார். மாளிகையை சுற்றிப்பார்த்துவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ஞானியிடம் வந்தார் அந்த மனிதர். இப்போது ஞானி அவரிடம் “என் படுக்கை அறையில் ரவிவர்மாவின் ஒவியம் இருந்ததே, அது எப்படி இருந்தது?” என்று கேட்டார். “மன்னியுங்கள் சுவாமி, நான் அதைக் கவனிக்கவில்லை” என்றார் அந்த மனிதர். …
-
- 4 replies
- 1.7k views
-
-
வல்லிபுர மாயவ னின் கொடியேற்றம். http://youtu.be/W5KO5AoEpXQ
-
- 0 replies
- 937 views
-
-
மதம் பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பொதுவுடைமைவாதம்’ என்றும், தந்தை பெரியார் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பெரியாரியம்’ என்றும் கொள்ளப்பட்டு, அவைகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மதம் மதம் பற்றி மார்க்ஸோ, எங்கெல்ஸோ தனித்துப் புத்தகங்கள் எதுவும் வெளியிடவில்லை. ஆனால் அவர்களின் படைப்புக்களில் ஆங்காங்கே மதம் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். லெனின் மதம் பற்றி அதிகமாகப் பேசியும், எழுதியும் இருப்பதால் ‘மதத்தைப் பற்றி’ எனும் தலைப்பில் தமிழில் நூலாக வெளிவந்துள்ளது. ஆனால், தந்தை பெரியார் மதம் குறித்து பல கட்டுரைகள் எழுதியும், பல மேடைகளில் பேசியும் உள்ளதால், அவைகளெல்லாம் தொகுக்கப்பட்டு பல தொகுதிகளாக வெ…
-
- 1 reply
- 809 views
-
-
தன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்குஇ ஆபிரகாம் லிங்கம் எழுதிய கடிதம் இது: மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்குஇ என் மகன்இ அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும்இ மனிதர்களில் கயவன் இருப்பது போலஇ பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும்இ ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்றுஇ அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும்இ ஒவ்வொரு பகைவனைப் போலஇ ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள். அடுத்து நான் சொல்ல வருவதைஇ அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும்இ உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர்இ உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது…
-
- 2 replies
- 2.2k views
-
-
கர்நாடக சங்கீதம் நான் சிறுவனாக இருந்தபோது பார்த்து, கேட்டு வளர்ந்தது தப்பாட்டம், கரகாட்டம், அரிச்சந்திரா, ராமர், வள்ளித்திருமணம் போன்ற தெருக்கூத்து நாடகங்கள். எனவே 23 வயது வரை கர்நாடக சங்கீதம் என்றால் விலை என்ன என்றுதான் கேட்பேன். அப்படி ஒரு ஞானம்! ஆனால்... இன்று கர்நாடக சங்கீத இசை கேட்பது என்பது என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் Relaxation! இதற்கு காரணம்... என் நண்பன் ராஜாராம்! நானும் ராஜாராமும் 10-ம் வகுப்பு முதல் B.E வரை ஏழு வருடங்கள் ஒரே வகுப்பு... ஒரே பெஞ்ச். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் C-DOT-ல் வேலை கிடைத்து பெங்களூர் சென்றேன். அப்போது ராஜாராம் I.I.Sc-ல் M.E முடித்துவிட்டு Ph.D பண்ணிக்கொண்டிருந்தான். எனது கல்லூரி நண்பர்கள் பலர் I.I.Sc பக்கத்தில் யஷ்வ…
-
- 720 replies
- 73.5k views
- 2 followers
-
-
-
தடையுணர்வு(Inhibition) . நாம் விரும்புகிற மாதிரிதான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? - யோசித்து பாருங்கள்! நம் விருப்பப்படி வாழ்க்கையை வாழ விடாமல் செய்வது யார்? நமது எதிரிகளா அல்லது விரோதிகளா? இருவரும் இல்லை! நமது தடையுணர்வு (Inhibition)! நம் விருப்பப்படி நம்மை வாழவிடாமல் தடுப்பது, இதுதான்! ஞாபகத்தில் இருந்து அழித்துவிட்ட ஏதோ சின்ன தகராறுக்காக, பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தையே இல்லாமல் இருக்கும் அண்ணன்-தம்பிகள்... அக்காள்-தங்கைகள்... அப்பா-பிள்ளைகள்... ஒரே ஆபீஸில் வேலை செய்யும் சக ஊழியர்கள்... இப்படி தடையுணர்வு (Inhibition) என்ற சீனப் பெருஞ்சுவரால், இப்படி எத்தனை பேர் தனித்தனியாக பிரிந்து கிடக்கிறார்கள்! நாம் ஒர…
-
- 5 replies
- 1.3k views
-
-
இறைவனை எட்டுதல்! கடும் பசியுடன் இருந்த சிறுவன் ஒருவன் ஒரு வீட்டை தட்டினான். இளம் பெண் ஒருத்தி கதவைத் திறந்தாள். "குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள்" என்று கேட்டான். ஆனால் அவன் பசியுடன் இருப்பதை உணர்ந்து கொண்ட அந்த பெண் ஒரு கோப்பையில் சூடான பால் கொண்டு வந்து கொடுத்தாள். நன்றியுடன் பெற்றுக்கொண்ட அந்த சிறுவன், கட கட வென குடித்து முடித்தான். பிறகு, " இதற்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும்?" என்று கேட்டான். "ஒன்றும் வேண்டாம், அன்புடன் கொடுக்கும் எந்த பொருளுக்கும் பணம் பெறக்கூடாது என்பது என் தாயின் அறிவுரை" என்றால் அந்த பெண். அவன் நன்றியுடன் விடை பெற்றான். காலம் பறந்தது. அந்த பெண் திடீரென்று நோய்வாய் பெற்றாள். அந்த ஊர் மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் அவளது…
-
- 8 replies
- 1.8k views
-
-
இறுதியாக விவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவு! மனதை மட்டுமல்ல; மக்களையும் திருத்த நினைத்த ஆன்மிகவாதி. உள்ள வலிமைக்கு இணையாக உடல் வலிமையையும் தூண்டிய பலசாலி. அரங்கிலும் அந்தரங்கத்திலும் நிறம் மாறாத நிஜ சாமி! நரேந்திரநாதன் வீட்டார் வைத்த பெயர். நரேன் என்றே அதிகமாக அழைக்கப்பட்டார். நண்பர்களுக்கு 'குட்டிப் பிசாசு'. அந்தக் காலத்து சென்னைவாசிகளுக்கு அவர் 'பயில்வான் சாமி'. அமெரிக்காவில் இருந்து எதிரொலித்த பிறகு 'விவேகானந்தர்' என்ற பெயரே உலகம் முழுமைக்கும் ஒலித்தது! கோச் வண்டி ஓட்டுபவனாக வர வேண்டும் என்று நரேன் நினைத்தார். அப்பா விசுவநாத தத்தர், வழக்கறிஞராக்க முயற்சித்தார். தன் மகளைத் திருமணம் செய்துகொண்டால் ஐ.சி.எஸ்., ஆக்குவதாக மாமனார் சொன்னார். 'என்னோடு…
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்பே கடவுள் ....- " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள் 1 வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு நீங்கள் விநாயகரை வனங்கினால் போதும். தனியாக மாமலராளை (லெட்சுமி தேவியை) வணங்க வேண்டாம். விநாயகப் பெருமானே லெட்சுமியின் அருளையும் உங்களுக்குப் பெற்றுத் தருவாள். அதை வலியுறுத்துவதுதான் ‘மாமலாராள் நோக்குண்டாம்’ என்னும் சொற்பதங்கள் 2 ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை இந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே! …
-
- 14 replies
- 2.3k views
-
-
http://www.youtube.com/watch?v=weyRdtfvpI4&feature=player_embedded#!
-
- 1 reply
- 1.7k views
-