சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2252 topics in this forum
-
உலக சுகாதார அமைப்பு (WHO), உலக உளநல மருத்துவ அமைப்பு (WFMH) ஆகியவற்றின் அறிவுறுத்தலின் பேரில் உளநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் திகதி உலக உளநல தினமாக அனுசரிக்கப்பட்டுவருகின்றது. “உளநல ஊக்குவிப்பும் தற்கொலைத்தடுப்பும்” எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டிற்கான உளநல தினமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. உடலில் எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவராக கருதலாம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. ‘மனது’ என்பது மூளை சம்பந்தப்பட்டது. மூளையின் செயற்பாடுதான் மனதாக உணரப்படுகிறது. நீண்ட கால…
-
- 0 replies
- 404 views
-
-
பிரித்தானியாவில் அதிகரிக்கும் விவாகரத்துகள்: குழந்தைகளின் மனோநிலை என்ன? – ஆய்வில் அதிர்ச்சி பிரித்தானியாவில் விவாகரத்து செய்வேரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் மாத்திரம் பிரித்தானிய நீதிமன்றங்களுக்கு வரும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை 15 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி, 2018இல் 118,141 விவாகரத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சூழலில் விவாகரத்து பெற்ற பெற்றோரின் குழந்தைகள் சிறுவயதிலேயே மோசமான நடத்தைக்கு ஆளாகியிருப்பதால் அவர்கள் பொய் சொல்லி ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 497 views
-
-
EMOTIONAL: "முதியோர் இல்லம் தான் BEST!" Life Story of Mothers in Old Age Home.
-
- 12 replies
- 1.8k views
-
-
சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்றாகும்.மதுப் பாவனை என்பது சம்பந்தப்பட்ட தனிமனிதனை மட்டும் பாதிப்பதில்லை. அவரது குடும்பம், சமூகம், நாடு என்றெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மதுப் பழக்கம் முதலில் சாதாரண பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். முதலில் பியர் என்று சமாதானம் கூறிக்கொண்டுதான் இந்தப் பழக்கம் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும் போதே யாரும் முழு போத்தல் மதுவையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் அல்கேஹால் சில இரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக் கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் போத்தல் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்…
-
- 0 replies
- 712 views
-
-
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் பல தலைமுறைகளாக மது அருந்தாமல், வரதட்சணை வாங்காமல் வாழ்ந்து வருகின்றனர். சிவகங்கையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது மதகுபட்டி. இங்கிருந்து கல்லல் செல்லும் சாலையில் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆலவிளாம்பட்டி. இக்கிராமத்தில் மூப்பர் சமுதாயத்தை சேர்ந்த 170 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது முன்னோர்கள் இக்கிராமத்திற்கு 13ம் நூற்றாண்டில் குடியேற திருச்சி கொள்ளிடம் பகுதியிலிருந்து (வடநாடு) வந்தவர்கள், அப்போது அங்குள்ள ராமசுவாமி, பொன்னழகி அம்மாள் தெய்வங்களிடம் எப்போதும் மது அருந்துவதில்லை என சத்திய வாக்கு கொடுத்துள்ளனர். அதை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். இக்கிராமத்தில் போதை பொருள்கள் யா…
-
- 2 replies
- 1.1k views
-
-
சர்வதேச முதியோர் தினம் இன்று கடந்த காலத்தில் கட்டழகாகத் திகழ்ந்தவர்கள், கம்பீரமாக தோற்றமளித்தவர்கள், வீரமான செயற்பாடுகளுடன் விரைவாக செயற்பட்டவர்களே இன்றைய முதியோர். இன்று கட்டழகு குலைந்து, கம்பீரம் குறைந்து, முதியோர் என்ற முத்திரை பதித்து பிறரின் உதவி வேண்டி அவர்கள் காலம் கழிக்கின்றனர். மனித வாழ்வில் மட்டுமல்ல அனைத்து உயிரினங்கள் வாழ்விலும் தவிர்க்க முடியாத இயற்கை நியதிகளில் ஒன்றுதான் முதுமை. இதனை எந்த விஞ்ஞான விந்தையாலும் தடுக்கவோ, தாமதித்து விடவோ முடியாது. இலங்கையில் 60 வயதைத் தாண்டியவர்களே முதியோர் எனக் கருதப்படுகின்றனர். 'முதியோர்' என்றால் அவர்கள் யாருமில்லை. அவர்களே நம் பெற்றோர்... நம்மை பெற்று வளர்த்து கல்வியூட…
-
- 0 replies
- 594 views
-
-
எட்வினா லாங்லே பிபிசி த்ரீ படத்தின் காப்புரிமை BBC Three/ David Weller கடைசியாக நான் மன வேதனை அடைந்தது சரியாக ஓராண்டுக்கு முன்பு. என் விஷயத்தில், காலம் முழுவதும் இருந்த அன்பு நிறைந்த வாக்குறுதி திடீரென முடிவுக்கு வந்துவிட்டது. நான் காதலித்தவருடன் செல்வதாக இருந்த நேரம். அவர் தன் மனதை மாற்றிக் கொண்டார். அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மறுபடி பழைய நிலைக்கு ஒருபோதும் வர முடியாது என்று நான் நினைத்தேன். முறிவுகள் முறிவுகள் எனக்குப் புதியது அல்ல. அதை நான் வழக்கமாகக் கைய…
-
- 2 replies
- 828 views
-
-
செக்ஸ்: நல்லது, கெட்டதை எவ்வாறு வரையறுப்பது? ஷானன் ஆஷ்லி செக்ஸ் என்றால் என்னவென்று தெரிவதற்கு முன்னரே, மனஎழுச்சியூட்டும் செக்ஸ் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்போம். சூப்பர் மார்க்கெட்டில் சிதறிக் கிடக்கும் பெண்களுக்கான பத்திரிகைகளில் சிறந்த செக்ஸ் அனுபவப் பகிர்வுகளே தலைப்புச் செய்திகளாக இருக்கும். ஏற்கனவே புதிராக இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது, அதைப் பற்றிய சித்திரம் மேலும் மங்கலாகும். அது போலத்தான் இந்தப் பத்திரிகைகள் எல்லாமே படுக்கையில் இணையை வீழ்த்துவது எப்படி என்று டிப்ஸ்களை வாரியிறைத்து வருகின்றன. அப்படி யாரோ ஒருவர் இவை அனைத்தையும் முயற்சி செய்தாகவே வைத்துக்கொண்டாலும், ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக செக்ஸ் டிப்ஸ்களைத் தருவது ஏன் என்ற கேள்வி …
-
- 24 replies
- 7.8k views
- 1 follower
-
-
இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்களிடத்தில் வெளிநாட்டு மதுபானங்களையும் சிகரெட்டுகளையும் அறிமுகப்படுத்தாதீர்கள் மாறாக முடிந்தால் வெளிநாட்டு கல்வியையும், பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்துங்கள். மாதாந்தம் பணம் வழங்கி முதுகெலும்பற்ற தங்கிவாழும் தலைமுறையை உருவாக்காதீர்கள், முடிந்தால் நிலையான வருமானமீட்டலிற்கு -வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுங்கள். இலங்கைவாழ் உங்கள் உறவுகளிற்கு ஆடம்பர வாழ்க்கைக்கு பணம் வழங்குவதைவிட இன்னமும் அடிப்படை வசதிகளிற்காய் ஏங்கும் தமிழ் உறவுகளிற்கு உதவுங்கள். பனியில் வெய்யிலில் பதினொருமாதம் வேலை செய்து ஒரு மாதம் ஒய்வெடுக்க நீங்கள் வருவதை நாமறிவோம் ஆயினும், உங்கள் ஒருமாத கால உல்லாச வாழ்க்கையையே வெளிநாட்டு வாழ்வாக எம்மவர்கள் பிழையாக புரிந்துகொள்க…
-
- 2 replies
- 517 views
-
-
கந்தர்வக்கோட்டை அருகே காட்டுநாவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கண்ணகி என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த பிரபுக்கும், கண்ணகிக்கும் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் காட்டுநாவலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கண்ணகியை கரம்பிடித்த பிரபு, திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, முதலில் வீட்டுக்குச் செல்லாமல், தான் படித்த காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மனைவியை கையோடு அழைத்துச் சென்றார். திருமணக் கோலத்தில், புதுமணத் தம்பதி பள்ளிக்கூடத்துக்கு வருவதை ஆசிரியர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஆசிரியர்களிடம் தன்னை அறிமுகப்படுத…
-
- 1 reply
- 990 views
-
-
பால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப் போவதில்லை-நிலவன். September 15, 2019 உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது, தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் , அரசுக்கும் உரிமையில்லை. மனித இனம் என்பதற்கு அப்பால் பால் நிலை பாகுபாடு இனம் தோன்றிய காலத்திலிருந்தே தோற்றம் பெற்றிருக்கிறது . உலகளவில் பரவலாக பேசப்படும் ஆண், பெண் சமவுரிமை என்ற பாகுபாடு இனம் தோன்றிய காலத்திலிருந்தே பார்க்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கென்ற பண்புகள், குணாதிசயங்கள் இருபாலாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகவே நடைமுற…
-
- 0 replies
- 497 views
-
-
வேகமாகச் சுழன்றுகொண்டிருக்கும் இன்டர்நெட் யுகத்தில், உடல்நலத்தைப் பாதுகாக்க தனியே நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது பலருக்கும். அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள, நகரத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஜிம்கள் திறக்கப்பட்டுள்ளன. `ஏ.சி ஜிம்... வருடத்துக்கு 9,999 மட்டுமே; ஆறு மாதங்களுக்கு 3,999 கட்டினால் போதும்' போன்ற விளம்பரங்கள் கண்களைச் சீண்டுகின்றன. இன்னொரு பக்கம், ``நம்ம ஜிம்ல மாசக் கட்டணம் 300 ரூபாய்தான்மா'' என்று சிரிக்கிறார், கொரட்டூரைச் சேர்ந்த ஶ்ரீனிவாசன். மேஸ்திரியான இவர், ஃபிட்னெஸ் மீது கொண்ட ஆர்வத்தால், தன் சுயமுயற்சியில் `மிஸ்டர் வேர்ல்டு' போட்டிவரை சென்றிருப்பவர். பூசப்படாத சுவர், செங்கல் ஜன்னல்கள் என்றிருக்கும் இவருடைய `ஏழை ஃப்ரெண்ட்லி' ஜிம், பல இளைஞர்களை விளைய…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஜெயலக்ஷ்மி ராமலிங்கம் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images உலக அளவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1…
-
- 0 replies
- 613 views
-
-
இன்று உலகத்தில் அதிகரித்து வரும் நோய்களில் ஒன்று மராத்தி நோய் : https://ta.wikipedia.org/wiki/மறதிநோய் https://ta.wikipedia.org/wiki/ஆல்சைமர்_நோய் பலவேறு வழிகளில் இவர்கள் மேல் அன்பு வைத்திருப்பவர்களுக்கு இவர்களை அன்புடன் பாதுகாப்பது ஒரு சவாலாக உள்ளது ஒருவர் தனது எண்பது வயதில் நாளும் வேலைக்கு செல்ல ஆயத்தமாவார். இவரை இவருடன் வாழ்ந்த மனைவி நீங்கள் இளைப்பாறி பத்துவருடங்கள் ஆகி விட்டன என்பார். அவருக்கு கோபம் வந்து விடும். சண்டை... பக்கத்து வீட்டாருக்கு ஆரம்பத்தில் இந்த சிக்கல் விளங்கவில்லை, காரணம் சமூக தாழ்வு மனப்பான்மை. காலப்போக்கில் மனைவி, கணவனின் உலகை புரிய ஆரம்பித்தாள். அவரின் உலகம் சுருங்கி இப்பொழுது அவர் தன்னை ஒரு நாற்பது வயதினராக பார்ப்பது…
-
- 2 replies
- 1.6k views
-
-
உகண்டாவில் தெருவை சுத்தம் செய்யும் ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவனை பிரித்தானியாவின் வேல்ஸ் நாட்டை சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் இணைந்த பண உதவி செய்து படிக்க வைத்துள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த கிறிஸ்டினா ராம்சே என்கிற சிறுமி தன்னுடைய 18 வயதில் உகாண்டா நாட்டிற்கு பள்ளியிருந்து சுற்றுலாச் சென்றுள்ளார். அங்கு தெருவின் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த ஜூலியஸ் முயோம்பியா என்கிற 18 வயது சிறுவனை சந்தித்துள்ளார். ஒரு அறை மட்டுமே கொண்ட அவனுடைய வீட்டில் 6 பேர் ஒன்றாக உறங்கி வந்துள்ளனர். மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் அவர்களுடைய வீட்டில் இருந்திருக்கவில்லை. அந்த சிறுவனுக்கு சிறிதளவு மட்டுமே ஆங்கிலம் பேச முடியும். அவனை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என ந…
-
- 1 reply
- 495 views
-
-
அனாதையாக இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்யும் சமூக சேவகர்: இதுவரை 957 பேருக்கு இறுதிச்சடங்கு வேலூர்: இன்றைய காலமாற்றத்தால் பெற்றோர்களை பிள்ளைகளே கவனிப்பதில்லை. வயது முதிர்ந்து விட்டால் அவர்களை வீட்டை விட்டு விரட்டி அடிப்பதும், முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவதும், நோய்வாய் பட்டிருந்தால் அரசு மருத்துவமனைகளில் போலி முகவரி கொடுத்து சேர்த்து விட்டு ஓடிவிடுவதும், அவர்களை இறந்தால் போலீசாரே ஏதோ ஒரு மயானத்தில் அடக்கம் செய்வதும், சிலர் தற்கொலை செய்வதும், இதுபோன்ற நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம். ஆனால் இங்கே ஒருவர் அனாதை உடல்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்வதோடு அவர்களுக்கு என்னென்ன இறுதிச்சடங்குகள் செய்வார்களே அதை முறைப்படி செய்கிறார். இந்த மனிந…
-
- 1 reply
- 524 views
-
-
சென்னை: பெண்களுக்கு எதிரான கொடுமைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சமூகத்தில் உள்ள அனைவரும் முன்வர வேண்டும் என எர்ணாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை திரிஷா கூறினார். ஐக்கிய நாடுகளின் சிறுவர், சிறுமியர் நிதியத்தின் தூதுவரான நடிகை திரிஷா குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதன்படி எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை திரிஷா கலந்து கொண்டு பெண்கள் மற்றும் சிறுவர்களின் தற்போதைய வாழ்க்கை சூழ்நிலை மற்றும் கடந்த கால சோக நிகழ்வுகளை கேட்டறிந்தார். பின்னர் நடிகை திரிஷா பேசியதாவது: குழந்தைகள் திருமணத்தை குழந்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் ஆந்திர மாநில கவர்னருக்கு தாய் ஒருவர் ‘மனநலம் குன்றிய தனது மகளை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும்’ என, கடிதம் எழுதியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குறித்து மேலும் தெரியவருகையில், இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஸ்வர்னலதா. என்பருக்கு, ஜான்வி எனும் ஒரு மகள் உள்ளார். ஜான்விக்கு 4 வயது முதல் உளவியல் பிரச்சினையும், 8 வயது முதல் ஜினிக் கோளாறும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜான்வியின் தந்தை உதவியாளராக பணிபுரிந்து வரும் வைத்தியசாலையில் ஜான்விக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த வைத்தியசாலையின் உளவியல் துறை புதிய தலைமை வைத்தியராக ராஜ்ய லட்…
-
- 1 reply
- 480 views
-
-
#NoMoreStress "கல்யாணத்துக்குப் பிறகு மனைவியை சிவன், பார்வதி மாதிரி நம்மோட பாதியா நெனைச்சி மதிப்புக்கொடுக்கணும்னு ஒவ்வொரு ஆம்பளையும் நினைக்க ஆரம்பிச்சா குடும்பத்துக்குள்ள சண்டை, சச்சரவு இல்லாமப் போயிரும்!" தம்பதியருக்குள் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டால்கூட விவாகரத்து பத்திரம் வாசிப்பது மிகச் சாதாரணமாகிவிட்டது. ஏன், திருமணம் முடிந்த ஒரு வாரத்துக்குள்ளேயே தம்பதிக்குள் ஒத்துப்போகாவிட்டால் பிரிந்துவிடுவது என்று பரஸ்பரம் பேசி முடிவு செய்வதும் அதிகரித்து வருகிறது. தம்பதிக்குள் பெருக்கெடுக்க வேண்டிய காதல், அன்பு, பாசம், நேசம், புரிந்து கொள்ளும் பக்குவம், வெளிப்படுத்தவேண்டிய அந்நியோன்யம், விட்டுக்கொடுக்கும் பண்பு குறித்த அக்கறை இல்லாததால் இனிக்க வேண்டிய இல்ல…
-
- 1 reply
- 743 views
-
-
``பள்ளிக்கூடங்களில் பெறும் கல்வியைத் தாண்டி பொது அறிவை வளர்ப்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் என நினைப்பவர். நூலகத்தைப் பயன்படுத்தி ஆண்களும் பெண்களும் படிச்சு முன்னேறணும்.'' அறிவுலகின் ஆலயம் நூலகம். அந்த நூலகத்தை நோக்கி வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கினால் அந்தச் சமூகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்கிறது என அர்த்தம். எனவே, நூலகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்துக்குக் கூடுதலாக புதிய கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்காக பழனியப்பன் என்ற தனிநபர் ஒருவர் தனது சொந்தப் பணத்திலிருந்து 25 லட்ச ரூபாயை வழங்க முன்வந்திருக்கிறார். அவருடைய இந்த நல்ல காரியம் பொதுமக்கள் மத்தியில் பலத்த பாராட்டுகளைப் பெற…
-
- 1 reply
- 395 views
-
-
கட்டெறும்பு கடித்த இடத்தில் வெட்டிரும்பு விழுந்த கதை!!
-
- 0 replies
- 464 views
-
-
நசிருதீன் பிபிசி படத்தின் காப்புரிமை SAM PANTHAKY/Getty Images ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண வயதில் வித்தியாசம் ஏன்? பெண்களுக்கு திருமண வயது குறைவாக இருக்க வ…
-
- 0 replies
- 654 views
-
-
#மொழி_vs_அறிவியல் அறிவியலில் எல்லா கேள்விகளுக்கும் பதில் இல்லையே ஏன்..? உண்மையில் அந்த அளவுக்கு அவர்கள் அறிவியலை தேடி படித்து இருப்பார்களா என்றால் இல்லை... அடிப்படையாக சில கேள்விகளை ஆன்மீக கதைகளின் கண்ணோட்டத்தில் கேட்பார்கள்.... முக்கிய கேள்விகள் இதோ 1. மனிதனின் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன..? 2. தவறு செய்பவன் தப்பித்து கொண்டால் அவனை கண்டுபிடித்து தண்டிப்பது யார்? 3. ஏன் மனிதன் வாழ பூமி அமைய வேண்டும்..?? 4. மரணத்தின் பின் என்ன நடக்கும் ? 5. ஏன் மனிதனுக்கு மட்டுமே 6 அறிவு? இந்த 5 கேள்விகளுக்கும் அறிவியலில் பதிலில்லை என்று ஏதோ அறிவியலை விட தங்களின் மத கட்டுக்கதைகள் சிறந்தது என மார்தட்டி கொள்வர்...காரணம் இந்த 5 கேள்விகளுக்கும் ஆன்மீக …
-
- 0 replies
- 1.3k views
-
-
அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை DEA/V.GIANNELLA/ Getty Images Image caption ஊர்ப்பருந்து மலேசியாவில் லினாஸ் என்ற நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று குற்ற…
-
- 0 replies
- 620 views
-
-
பள்ளி மாணவர்கள் மனித உடலைமைப்பு பற்றித் தெரிந்து கொள்வதே அவசியம். அது ஏற்கனவே அறிவியல் பாடம் மூலம் புகட்டப்படுகிறது. இந்நிலையில் தனயாக பாலியல் கல்வி என்று ஒன்று தனியாகத் தேவையில்லை பள்ளிகளில் பாலியல் கல்வி தேவையில்லை என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அங்கமான சிக்ஷா சன்ஸ்க்ரிதி உத்தன் நியாஸ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாலியல் அத்துமீறல் என்றால் என்ன?, பெண்களை மதிப்பது எப்படி? பெண்கள் தற்காப்பு, குடும்பக் கட்டுப்பாடு, பால்வினை நோய்களைத் தடுப்பது எப்படி ? போன்றவற்றின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அங…
-
- 0 replies
- 503 views
-