சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
[size=4]ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.... போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார்கள் . ஹெல்மெட் அணியாததற்கு 100 ரூபாய் அபராதம் கேட்டார்கள் . நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன். அதற்கு, தேவையில்லை என்றனர்.. நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்? அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்[/size][size=3][size=4]தேன். இன்று....[/size][/size] [size=3][size=4].[/size] [size=4]வண்டியை நான் ஓட்டவில்லை, நண்பன் ஓட்டினான். இந்த முறையும் போலீசாரிடம் மாட்டிக்கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சிப்பார்த்தும் அவர் விடுவதாகயில்லை. அந்த நேரம் எனக்கு மன…
-
- 0 replies
- 572 views
-
-
அகதிகளுக்கு காதல் பாடம்: ஜெர்மனி ஆசிரியரின் ஒருமைப்பாடு முயற்சி 'ஜெர்மனியில் காதல் வயப்படுவது எப்படி?' வகுப்பில் சில அகதிகள் | படம்: ஏபி 24 வயதான ஓமர் முகமது சிரியாவைச் சேர்ந்த ஒரு பொற்கொல்லர். ஜெர்மனியில் தஞ்சம் புகுந்துள்ள லட்சக்கணக்கான அகதிகளில் ஒருவர். ஜெர்மானியப் பெண்கள் தன்னை ஈர்ப்பதாகச் சொல்லும் இவர் அவர்களை எப்படி அணுகவது என்பது மர்மமாகவே உள்ளது என்கிறார். அந்த மர்மத்துக்கான தீர்வு ஜெர்மனியிலேயே கிடைக்கும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. பெண்களை அணுகுவது எப்படி என, பணக்கார மேல்தட்டு ஜெர்மானிய ஆண்களுக்கு பாடம் சொல்லித் தருவது ஹார்ஸ்ட் வென்ஸேயின் வேலை. 27 வயதான இவர் தற்…
-
- 0 replies
- 572 views
-
-
இந்தியாவுக்கு இல்லாத துணிவு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டுக்கு இருக்கிறது. ஆம், சிவப்பழகு கிரீம், பவுடர் வகைகளுக்குத் தடை விதித்திருக்கிறது. கூடவே, கருப்பழகின் முக்கியத்துவத்தை உணர்த்தி, பிரச்சாரத்திலும் இறங்கியிருக்கிறது. நாடு முழுவதும் கருப்பழகு விளம்பரத் தட்டிகளும் பதாகைகளும் மிளிர்கின்றன. சிவப்பழகூட்டிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் சிவப்பு அல்லது வெள்ளைதான் அழகு, கருப்பு அழகிய நிறமல்ல என்ற பரவலான தப்பபிப்பிராயத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. நம் நாட்டைப் போலவே, ஆப்பிரிக்கச் சந்தையிலும் சிவப்பழகூட்டிகளின் ஆக்கிரமிப்பு அதிகம். உலக சுகாதார நிறுவனம் தரும் புள்ளிவிவரத்தின்படி நைஜீரியர்கள்தான் இதி…
-
- 0 replies
- 572 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும் என புகைப்பிடிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். சில நேரங்களில் அவர்களேகூட புகைபிடித்துக் கொண்டே, “இது உடலுக்கு மிகவும் கேடு. சீக்கிரம் நிறுத்த வேண்டும்” என்பார்கள், ஆனாலும் புகைப் பிடிக்கும் பழக்கத்தைத் தொடர்வார்கள் அல்லது அதை நியாயப்படுத்த சில காரணங்களை வைத்திருப்பார்கள். “புகைப்பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் பேர் இறக்கிறார்கள் (உலக சுகாதார அமைப்பின் அறிக்கை), எனவே இதை விடுங்கள்” என அவர்களிடம் கூறினால், “அட, சாலை விபத்தில் எவ்வளவு பேர் இறக்கிறார்கள், அதற்காக சாலையில் பயணம் செய்யாமலா இருக்க முடியும்?” எனக் கேட்பார்கள். மேலும் ஆதாரங்களை நாம் அடுக…
-
- 1 reply
- 571 views
- 1 follower
-
-
பறக்க ஆசைப்படும் மனமும் சாத்தியப்படுத்தாத சுமைகளும் எனக்குள் ஒரு கனவு இருக்கிறது, அதை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறேன், அது ஒரு நாள் என் கைவசப்படும் சர்வ நிச்சயமாய்’ இப்படி ஒரு பெண் தன் மனதிற்குள் பதின்ம வயதில் உருவேற்றிக் கொண்டாள். ஆனால் அதற்கு ஏற்பட்ட தடைகளையெல்லாம் களைந்தெறியவே அவளின் முழு நேரமும் பொழுதும் சரியாக இருந்தது. திருமணம், குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள், சமையல் அதுவும் சேர்த்து அலுவலக வேலைகள என அவளைச் சுற்றி எப்போதும் வேலைகளின் சுமைகள். ஓவியராகவோ கவிஞராகவோ திரை இயக்குனராகவோ அவள் உருவாக ஆசைப்படும் போது அவள் விட்டுத்தர வேண்டியது திருமண வாழ்க்கையை. பெண்கள் இதற்கு மட்டும்தான் என்று வரையறுப்பத…
-
- 1 reply
- 571 views
-
-
திருமதி கொப்பலின் குற்றச்சாட்டு by noelnadesan திருமதி கொப்பலானின் ஆறடி உயரமும் ஆண்கள் போன்ற இடைவெளிவிடாத இடையமைப்பும் கடுகடுப்பான முகமும் எனது கவனத்தை ஈர்த்தது. அவருக்கு பின்னால் பதினாலு வயது இளம்பெண் தாயின் மறுபதிப்பாக சிறிய ரெரியர் நாய்க்குட்டியை மார்புடன் இறுக்கமாக அணைத்தபடிவந்தாள். இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துசென்றேன். தங்களது மிருகவைத்தியரிடம் அப்பொயின்மன்ட் கிடைக்காததால் வந்தோம் என தாயார் கூறினார். அவர்கள் வார்த்தையில் உள்ள தொனியை ரசிக்கமுடியவில்லை. ஆனாலும் அந்த இளம் பெண்ணிடம் நாய்க்குட்டியை எனது மேசையில் வைத்துவிட சொன்னேன். எனது வேண்டுகோளை அலட்சியம் செய்தாளோ அல்லது புரியவில்லையோ? அந்த நாய்க்குட்டியை மேலும் இறுக்கமாக அணைத்துக்கொண்டார். ஏதாவது மனநல குறை…
-
- 0 replies
- 571 views
-
-
சமூக தளங்களில் நன்னடத்தை வழிகள் [size=1] [size=4]இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் தங்களைப் பதிந்து வைத்து, நண்பர்களைத் தேடித் தங்கள் உறவினை வலுப்படுத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் அனைவரும் பயன்பெறுகின்றனர்.[/size] [size=4]உலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக்களையும், தனி நபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்படுகின்றனர்.[/size] [size=4]இவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நாம் இயங்க வேண்டியுள்ளது. இதற்கென நாம் சில அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடித்தால் அ…
-
- 0 replies
- 569 views
-
-
நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக மணி நேரங்களுக்கு முன்னர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சின்னபரூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் கண்ணதாசன்(வயது 52). குடும்ப வறுமையின் காரணமாக கண்ணதாசனின் 11 வயதில், தாயார் பூங்காவனம் அம்மாள் தனது உறவினர்களுடன் அவரை வேலைக்காக மும்பை அனுப்பி வைத்துள்ளார். மும்பை தாராவி அருகே வசித்து வந்த இவர், அங்குள்ள உணவகம் ஒன்றில் தொடர்ந்து 6 வருடங்கள் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் இணைத்து கவரிங் நகைகள் மற்றும் பொருட்கள் விற்றுவந்தார், நாளடைவில் அதே தொழிலைச் சொந்தமாகச் செய்யத் தொடங்கினர். அந்த நேரத்தில் அப்பகுதியில் ரௌ…
-
- 0 replies
- 569 views
-
-
எங்கிட்ட அன்பு இருக்கு கொடுக்கிறேன் உங்களிட்ட இருந்தா திருப்பி கொடுங்க....உங்களை சிந்திக்க வைக்கும் இவரின் பேச்சை கேளுங்கள் .
-
- 0 replies
- 568 views
-
-
காதல் - ஆர்- அபிலாஷ் என்னுடைய ஒரு நண்பர் ஊனமுற்றவர். அவர் தன்னை எந்த பெண்ணும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை; அதனால் தான் தனிமையாகவே வாழ்வெல்லாம் இருக்க போவதாயும்; அதுவே சிறந்த தீர்மானம் என்றும் என்னிடம் திரும்ப திரும்ப கூறுவார். அவருடைய தன்னிரக்கம் இதை கூறச் செய்யவில்லை என அறிவேன். ஏனெனில் அவர் துணிச்சலாய் உழைத்து வாழ்வில் முன்னேறியவர். என்னை விட நேர்மறையான சிந்தனை கொண்டவர். ஆனால் காதல் பற்றின அவர் பார்வையில் தான் சிக்கல். நான் அவரிடம் கூறினேன்: “பெண்கள் ஒருவரின் உடம்பை பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரு ஆணின் ஆளுமை தான் முக்கியம். ஆளுமையற்ற ஆண்களுக்கு அதிகாரம் உண்டென்றால் அவர்களை நோக்கியும் பெண்கள் கவரப்படுவார்கள்.” நான் அவரிடம் என் தனிப்பட்ட அனுபவத்தை ஆத…
-
- 0 replies
- 568 views
-
-
சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 1-9-2013 அன்று நடைபெற்ற நாத்திகர் விழா பேரணி. http://www.youtube.com/watch?v=FyXavk3tdTA&feature=share&list=UUGJTRElIv1hmK2z2dv_GJdQ
-
- 0 replies
- 567 views
-
-
சவால்களை சந்திக்காமல் உன்னால் வாழ்க்கையில் சாதிக்க முடியாது
-
- 1 reply
- 567 views
-
-
எல்லா தினங்களும் நமக்கு உவப்பானதாக இருப்பதில்லை. எல்லாச் சூழல்களும் பிடித்தமானதாக இல்லை. ஆனால், கசப்பான தினங்களையும் விரும்பாத சூழல்களையும், அவற்றில் பங்கேற்கும் மனிதர்களையும் சந்திப்பதைத் தள்ளிப்போடலாமே தவிர, அவற்றிலிருந்து தப்பிக்கவே முடியாது. கேள்வி- பதில் அப்படியான தருணங்கள் பெரும்பாலும், நாம் நமது தரப்பு பதில்களை,விளக்கங்களைச் சொல்கிற தருணங்களாகவே இருக்கின்றன. உதாரணமாக வேலை செய்பவர், வேலை கொடுப்பவர்,வியாபாரம் செய்பவர் ... என யாராக நீங்கள் இருந்தாலும் ---உங்கள் பாஸ் / முதலாளி / மேலாளர் /வாடிக்கையாளர் /அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டே தீரும். ஆனால், இந்தப் பதில்கள்,பெரும்பாலும், நீங்கள் வெளிப்படுத்தும் அதே உணர்வுகளுடன் புரிந்து…
-
- 0 replies
- 566 views
-
-
“ஒருவனோடு ஒருத்தி ஒன்று என்று உரைத்திடும் உலகமெல்லாம்....” என்ற சிவஞானசித்தியாரில் உள்ளவாக்குக்கு இணங்க அன்றையகால சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்றே மக்களது இல்லற வாழ்வு அமைந்தது. மேலும் பெண்களின் ஒழுக்கமே சமூகத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்தது. அந்த ஒருவனும் ஒருத்தியும் பிறன்மனை நேக்கா பெருவாழ்வு வாழவேண்டும் என்பதை வள்ளுவர் திருக்குறளில் அழுத்திக் கூறியுள்ளார். ஆணோ பெண்ணோ இதை நெறியில் இருந்து வழுவினால் சமூகத்திற்கே பெரும் கேடு விளையும் என்பதை சிலப்பதிகாரமும் வலியுறுத்துகின்றது. இன்று அந்நிலை மாற ஆண், பெண் என்ற இருபாலர் இடத்திலும் நெறி பிறழ்வு சர்வசாதாரணமாகி விட்டது. இன்றைய சமுதாயத்தில் நலிந்து வரும் சமூக, கலாசார சீர்கேடுகளில் விபசாரமு…
-
- 0 replies
- 566 views
-
-
இளமைக்காலத்தில் கனவுகளுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், சில சமயங்களில் இக்காலப்பகுதியில் எழும் அற்ப ஆசைகளுக்கும். உணர்வுகளுக்கும் அடிபணிந்து எடுக்கும் முடிவுகள் பலரின் கனவுகளைச் சிதைத்து, எப்படியெல்லாமோ வாழவைத்து விடுகின்றன. ஒரு வேளை அந்த நேரத்தில் அவர்கள் நன்கு ஆராய்ந்து, சிந்தித்து சரியானதொரு முடிவினை எடுத்திருந்தால் வாழ்வின் கனவுகளையும், உறவுகளையும் தொலைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்காது. அந்த வகையில் சிறைச்சாலைச் கதவுகளுக்கு முன்னால் தான் கருவில் சுமந்து பெற்றெடுத்த மகனைக் காண வேண்டும், அவனைக் கட்டித்தழுவி சுக, துக்கங்களை அறிய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன் கால் கடுக்கக் காத்திருந்தாள் சுது நோனா. நாம் அவருடன் கதைக்க முற்பட்ட போது விரக்தி கலந்…
-
- 0 replies
- 565 views
-
-
"திருமணத்திற்கு பத்துப் பொருத்தங்கள்" திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற் கொண்டு பேசுவார்கள். இல்லை யென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள். சோதிடம் சொல்லும் பத்துப் பொருத்தம் இவை - தினப் பொருத்தம் , கணப் பொருத்தம், மகேந் திரப் பொருத்தம், ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகும். இவற்றை எங்கோ இருந்து ஈர்ப்பு விசையால் சுற்றிக் …
-
-
- 2 replies
- 564 views
-
-
இணைய ஷாப்பிங்கும் போர்ன் போதையும் ஆர். அபிலாஷ் இணையத்தில் பொருள் வாங்குவதும் மால்களிலும் தி.நகர் தெருக்களிலும் அலைந்து பேரம் பேசாமலும் பேசியும் வாங்குவதும் வேறுவேறா? ஏன் கேட்கிறேன் என்றால் இணைய ஷாப்பிங் ஒரு தொற்று வியாதி என்றும், வாடிக்கையாளர்களை மாட்ட வைத்து நிரந்தர கடனாளிகளாக்கும் கார்ப்பரேட் சதி என்றும் சமீபமாய் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. நான் கல்லூரியில் படிப்பதற்காய் சென்னைக்கு கிளம்பும் வேளையில் ஒரு மூத்த எழுத்தாளர் என்னை இது போலத் தான் எச்சரித்தார். அது தொண்ணூறுகளின் பிற்பகுதி. இணையம் ஒரு நிர்வாணக் கடற்கரை போல் திறந்து விரிந்திருந்தது. இணையத்தில் சிக்கி இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று முந்தின தலைமுறையினரிடத்து பீதி உண்டானது. மூத்த இலக்கியவாதி என்னிடம…
-
- 0 replies
- 564 views
-
-
தை மாதம் முழுவதும் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு தமிழர்களின்தாய் மொழியாம் தமிழ், பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் ஆகியவற்றை பூண்டோடு அழித்திட உதயமாகியுள்ள நாசகார கும்பல்!!!
-
- 6 replies
- 564 views
-
-
`பெண் மனது ஆழமானது’ என்று ஆணுக்கு சொல்லியிருக்கிற இந்த சமூகம், ஆண் மனது எப்படிப்பட்டது என்று பெண்ணுக்குச் சொன்னதாகவே தெரியவில்லை. தான் நேசிக்கிற ஒரு காரணத்துக்காகவே, `அவர் ரொம்ப நல்லவர்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுப்பதற்கும், பொள்ளாச்சி சம்பவம் போல ஆபத்தில் மாட்டிக் கொள்வதற்கும், ஆண்களைப்பற்றிய சரியான புரிந்துணர்வு பெண்களுக்கு இல்லாததுதான் காரணம். அந்த வகையில் ஆண்களைப் பற்றி பெண்களுக்கு முழுமையாகப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதற்காக அவள் விகடனில் `ஆண்களைப் புரிந்துகொள்வோம்' என்கிற தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறோம். இந்தத் தொடர் ஆண்களின் தவறுகளை மட்டுமல்ல; அவர்கள் உலகத்து அவஸ்தைகளையும் பேசும். சென்ற இரு இதழ்களில், பிளேபாய் மற்றும் சாக்லெட் பாய் இயல்புகளையும், பெண்…
-
- 1 reply
- 564 views
-
-
``ஒரு 'அறை'விட்டதுக்கு விவாகரத்து ஓவர்ல...?" இப்படி நினைத்தால் இந்த #Thappad படம் உங்களுக்குத்தான்! எல்லாம் சுபம். இறுதியில் அல்ல, தொடக்கத்தில்! அம்ரிதா - விக்ரம், இந்த அன்பான கணவன் மனைவியின் வாழ்க்கை அப்படித்தான் தொடங்குகிறது. அம்மாவைப் போல பார்த்துக்கொள்ளும் மாமியார், அன்பான பக்கத்து வீட்டுப் பெண்மணி, அவளின் டீன்ஏஜ் மகள், குடும்ப உறுப்பினர் போன்ற வேலையாள், பாசம் குறையாத அம்மா, அப்பா, தம்பி... என எல்லாமே சரியாக இருக்கும் வாழ்க்கையில் ஒரேயொரு பிரச்னை. ஒரு பார்ட்டியில் அத்தனை பேர் முன்னிலையிலும் அலுவலக டென்ஷன் காரணமாக அம்ரிதாவை விக்ரம் அறைந்துவிடுகிறான். எல்லாம் சரியாக இருக்கும் திருமண வாழ்க்கையை விவாகரத்தில் முடித்துக்கொள்ள, ஒரு மனைவி தன் கணவனை விட்டுப் பிரிந்துசெல்ல…
-
- 5 replies
- 564 views
-
-
"சிந்து சம வெளியில் ஏறு தழுவல்" / "Bull fighting in Indus valley" மொஹெஞ்ச தாரோவில் கண்டெடுக்கப்பட்ட, ஏறு தழுவல் கல் முத்திரை, நீலகிரி மாவட்டத்தில் கரிக்கியூர் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட 3500-4000 ஆண்டுகளுக்கு முந்தைய காளை துரத்தும் பாறை ஓவியம், சேலம் மாவட்ட அருங்காட்சியகத்தில் உள்ள ஏறு தழுவல் கல்வெட்டு என்பன ஜல்லிக்கட்டு என இன்று அழைக்கப்படும் எருதுவேட்டை என்ற மாடு பிடிக்கும் அல்லது ஏறு தழுவும் விளையாட்டுக்கு பண்டைய சாட்சியாக உள்ளன. ஏறு தழுவல் என்பது காளையை அடக்கி அமைதி ஆக்குபவருக்கு மாட்டின் கொம்புகளில் முன்னமே துணியில் கட்டி வைத்துள்ள 'சல்லி காசை' அல்லது 'நகைகளை' பரிசாக கொடுக்கும் ஒரு வீர விளையாட்டு ஆகும்.இது இன்றைய வடிவில், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்…
-
- 0 replies
- 563 views
-
-
குடும்ப வன்முறைகளுக்கு காரணமாகும் தொழில்நுட்ப சாதனங்கள் - தீர்வு என்ன? ஷிரோமா சில்வா, தாலியா பிராங்கோ 20 அக்டோபர் 2020 இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் போன்ற பல்வேறு உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலானதில் இருந்து, குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, இதுபோன்ற நிகழ்வுகளில் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருகின்றன. ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், இருப்பிடத்தை கண்காணிக்கும் செயலிகள், ஒருவரது கணினி சார்ந்த செயல்பாடுகளை ரகசியமாக கண்காணிக்கும் கீ-லாகிங் மென்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதிக்…
-
- 0 replies
- 560 views
-
-
சமூக ஊடகமான டெலிகிராம் செயலியில், பெண்களின் அந்தரங்க படங்கள் பெருமளவில் பகிரப்பட்டு வருவதை, பிபிசியின் கள விசாரணை கண்டறிந்துள்ளது. இது அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும், மிரட்டவும், அவமானப்படுத்தவும் பகிரப்படுகிறது. எச்சரிக்கை: இந்த கட்டுரை பாலியல் தொடர்பான விஷயங்களை உள்ளடக்கியது. ஒரே விநாடியில், சாரா தனது நிர்வாணப் படம் டெலிகிராம் செயலியில் வெளியாகி, பகிரப்பட்டிருப்பதை அறிந்தார். அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது. அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளும் அதில் இணைக்கப்பட்டிருந்தன; அவரது அலைபேசி எண்களும் இருந்தன. அடையாளம் தெரியாத ஆண்கள் மேலும் புகைப்படங்களை கேட்டு, அவரை தொடர்ந்து தொடர்பு கொண்டனர். "என்னை ஒரு பாலியல் தொழிலாளி போல் அவ…
-
- 0 replies
- 559 views
-
-
ஒரு அழகிய பெண், பேராசையினால் சொன்ன பொய்கள்... பாலியல் குற்றசாட்டு.. எப்படி ஒரு அப்பாவிக் குடும்பத்தினை பாதித்தது என்பது இந்த கதை. பார்க்கும் போதே, போலீசாரின் கவனயீனம்... அல்லது போலீஸ் அதிகாரிக்கும் அந்த பெண்ணுக்கும் வேறு தொடர்போ என்று நினைக்க வைக்கும். இறுதியில், ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் விசாரணையில், உண்மை வெளிவருகிறது.
-
- 0 replies
- 559 views
-
-
"தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்", இது உங்களுக்கும், எனக்கும், அனைவருக்கும் தெரிந்த ஒரு பொன்மொழி. "அட அதான் தெரியுதுல, பிறகு ஏம்மா கண்ணு திரும்ப சொல்ற..?", னு கேக்கறிங்களா? இந்தக் கூற்ற நான் இப்போ மறுத்துப் பேசப் போறேன். நமக்குப் போக தான், எஞ்சியத பகிர்ந்து கொள்ளனுமா? இதோ பார்க்கலாம் அது பற்றி. நீங்கள் அறிவாளியா? தினமும் ஏதேனும் வாசிப்பவரா? மாணவரா? இந்தப் பழமொழி உங்களுக்கு சிறிதும் பொருந்தாது. நான் சொல்வது இப்பொழுதே உங்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பு உண்டு. சரிதானே? இன்று நாம் அனைவரும் படிக்கிறோம். தினமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்கிறோம். ஆனால், இதனால் என்ன பயன்? நமக்கு என்ன பயன்? இதனால் நமக்கு உறுதியாக பயன் உண்டு, ஆனால், பிறருக்கு? அது தான் சொல்ல வரு…
-
- 0 replies
- 559 views
-