சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
யாரைத்தான் நம்புவதோ? December 17, 2021 —- கருணாகரன் —- “யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்…” என்றொரு பாடலை நெஞ்சை உருக்கும் விதமாக சுசீலா பாடுவார். பறக்கும் பாவை என்ற திரைப்படத்தில் உள்ள பாடல் இது. காதல் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத ஆற்றமையின் வெளிப்பாடாக ஒலிப்பது. ஆனால், இந்தப் பாடலின் முதல் வரி இன்று தருகின்ற – ஏற்படுத்துகின்ற உணர்வலைகள் வேறு. அதன் பொருளும் வேறு. பெரும்பாலும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் வயிற்றில் எரியும் வேதனையின் வரிகள் இவை எனலாம். இன்று பெண் பிள்ளைகளுக்கு முற்றிலும் பாதுகாப்பில்லாத ஒரு சூழல் உருவாகியுள்ளது. வீட்டிலும் அவர்களுடைய பாதுகாப்புக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியில் இன்னும் எச்சரிக்கை அடை…
-
- 0 replies
- 431 views
-
-
மதுசாரம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை மீறுகின்றன? மதுசாரம், புகைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களின் பாவனைகளால் எமது நாடு பல்வேறு வழிகளிலும் பாதிப்படைகின்றது. குறிப்பாக பொருளாதாரம், சுகாதாரம், சமூக சீர்கேடுகள் என பல பிரச்சினைகள் இவற்றினால் ஏற்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. எமது நாட்டில் பெண்களின் மதுசார பாவனை மற்றும் புகைத்தல் பாவனை ஆகியன புறக்கணிக்கத்தக்க சதவீதத்திலேயே காணப்படுகின்றன. ஆகவே பெண்களை பாவனையாளர்களாக மாற்றுவதற்கும் பெண்கள் மத்தியில் மதுசாரத்தையும், புகைப்பொருட்களையும் சாதாரணமாக்க வேண்டும் என்பதற்காகவும் மதுசார நிறுவனங்களும் புகையிலை நிறுவனமும் பல நுணுக்க்களில் முயற்சித்து வருகின்றன. மேலும் பெண்களின் மதுசார பாவனை மிகவும் குறைவான விகிதாசாரத்தில் காணப்பட்டாலும் …
-
- 0 replies
- 428 views
- 1 follower
-
-
ஜொமோட்டோ வாடிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு, `உணவுக்கு எந்த ஒரு மதமும் இல்லை' எனப் பதில் வந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபால்பூர் நகரில் வசித்துவருபவர், அமித்சுக்லா. இவர் ஜொமோட்டோவில் உணவு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், டெலிவரி கொடுக்கும் நபர் பெயரைக்கண்டதும், `ஆளை மாற்ற வேண்டும்' என நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு ஜொமோட்டோ சார்பில், `ஆளை மாற்ற முடியாது' என்று பதில் வந்ததால் அந்த நபர் உணவைக் கேன்சல் செய்துள்ளார். ட்விட்டரில் இது தொடர்பாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், `ஜொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். டெலிவரி எக்ஸிகியூட்டிவின் பெயர் ஃபயாஸ் என்று இருந்ததால், ஆர்டரைக் கேன்சல் செய்தேன். இது `ஷர்வான்’ என்ற புனித மாதம். ஆகவே முஸ்லிம் நப…
-
- 0 replies
- 428 views
-
-
டெல்லியைச் சேர்ந்த 22 லட்சம் பாடசாலை மாணவர்கள் பெண்களை மரியாதையுடன் நடத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர். டெல்லியில் நேற்று திங்கட்கிழமை முதல்வர் கேஜ்ரிவால் தலைமையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் இந்த உறுதிமொழியை மேற்கொண்டனர். சில நாட்களுக்கு முன்பாக டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவால், ''பெண்களிடம் தவறாக நடக்கக் கூடாது என்று பாடசாலைகளில் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். இதற்காக பாடசபாலைகளில் மாணவர்களிடம் உறுதிமொழி பெற உள்ளோம். எந்தவொரு பெண்ணிடமும் என்றும் தவறாக நடக்க மாட்டோம் என்ற உறுதி பெறப்படும். இந்த உறுதிமொழி ஒருமுறை மட்டுமே பெறப்படாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். அதேபோல வீடுகளில் …
-
- 0 replies
- 426 views
-
-
“வாட் கேன் ஐ டு ஃபார் யூ?” - அசத்தும் தள்ளுவண்டி வேம்புலியம்மாள் “வாட் கேன் ஐ டூ ஃபார் யூ அண்ணே?'' என்று ஒரு பெண் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் கேட்டால் ஆச்சர்யப்பட மாட்டோம். அதுவே, ஒரு ரோட்டோரக் கடையில் கேட்டால், ஆச்சர்யப்படத்தானே செய்வோம். அப்படித்தான் அந்தப் பெண்ணைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். சென்னை, மாதவரம் பால்பண்ணை சாலை, ஆர்.சி அபார்ட்மென்ட் அருகில், தன்னுடைய தள்ளுவண்டி கடையில் பேன்ட் மற்றும் டாப்ஸ் உடையில் புன்னகைக்கிறார் வேம்புலியம்மாள். ''சாம்பார், ரசம், ஃபிஷ் கறி, முட்டை எல்லாம் இருக்கு? வாட் டு யூ வான்ட்?'' என்று அசத்தலாக ஆங்கிலம் கலந்து கேட்டார். பசி நேரம் என்பதால் சாப்பிட்டுக்கொண்டே அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் சொன்ன விஷயம் கி…
-
- 1 reply
- 426 views
-
-
ஃபேஸ்புக் எப்படி நம்மை வெறுப்பில் அமிழ்த்துகிறது? அரவிந்தன் கண்ணையன் பிரான்சிஸ் ஹாகென் (Frances Haugen) ஓர் அமெரிக்க தொலைக்காட்சியின் நேரலையில் தோன்றினார். ஃபேஸ்புக்கின் செயல்பாடுகள் குறித்து ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையில் சமீபத்தில் வெளிந்த கட்டுரைகளுக்குத் தரவுகள் தந்துதவியது ஃபேஸ்புக் நிறுவனத்திலேயேவேலை பார்க்கும் தான்தான் என்று அவர் சொன்னார். அடுத்த 24 மணி நேரத்தில் பேஸ்புக்கின் பங்குச்சந்தை மதிப்பு 6 பில்லியன் டாலர் சரிந்தது. மேலும் சோதனையாக ஃபேஸ்புக் செயலி பல மணி நேரங்கள் செயலிழந்ததும், அந்நிறுவனத்தின் செயல் திறன் மீது கேள்விகள் எழுப்பியது. இச்சூழலில் அமெரிக்காவின் மூன்று முக்கிய பத்திரிக்கைகள் - ‘நியூ யார்க் டைம்ஸ்’ (NYT), ‘வாஷிங்டன் போஸ்ட்’ (W…
-
- 0 replies
- 425 views
-
-
வேல்ஸில்... பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அடிப்பது... சட்ட விரோதமானது! வேல்ஸில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிப்பது இன்று (திங்கட்கிழமை) முதல் சட்டவிரோதமானது. ‘குழந்தைகளுக்கு இது ஒரு வரலாற்று நாள்’ என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வேல்ஸ் உடல் தண்டனையை தடை செய்யும் இரண்டாவது பிரித்தானிய நாடாகிறது. தங்கள் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை யாரேனும் அடித்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்காக வழக்குத் தொடரப்படலாம். 2020ஆம் ஆண்டு நவம்பரில் ஸ்கொட்லாந்து சட்டவிரோதமான முதல் பிரித்தானிய நாடாக மாறுவதற்கு முன்பு, ஏப்ரல் 2020ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தீவுகளின் முதல் பகுதியாக ஜெர்சி இருந்தது. 1979ஆம் ஆண்டில் …
-
- 0 replies
- 425 views
-
-
"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" / பகுதி 01 இனப்படுகொலை [Genocide] பொதுவாக ஒரு போர் சூழலில் அல்லது இரண்டு இனங்கள் / குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட ,முரண்பட்ட அரசியல், பண்பாட்டு சூழலில் அல்லது ஒரு இனம் அதிகாரம் , படை , ஆள் பலம் அதிகரித்த நிலையில் தன்னிச்சையாக மற்ற சிறுபான்மை இனத்தை நசுக்க, ஒடுக்க முயலும் சூழலில் அல்லது எதோ சில பல காரணங்களால் ஒரு இனம் மற்ற இனத்தை வெறுக்கும் சூழலில் அல்லது இவைகள் எல்லாம் கலந்த ஒரு சூழலில் , பொதுவாக நடை பெறுகிறது. ஆகவே இனப்படு கொலையைப் பற்றி சிந்திக்கும் போது ,அவைகளுடன் போர் குற்றங்கள் [War Crimes] ,' மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ['crimes against humanity'] போன்றவையும் பொதுவாய் வந்து விடுகின்றன. இப்ப இனப்…
-
- 0 replies
- 425 views
-
-
வடக்கு ஆப்ரிக்க நாடான துனிசியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து, ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். துனிஷ் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களை தண்டிக்கும் சட்டங்களை மேலும் வலிமையாக்க வேண்டும் , குடும்ப சொத்தில் சம உரிமை அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக்காரர்கள் துடப்பம் மற்றும் சமையல் பாத்திரங்களை கையில் ஏந்தியவாறும், கோமாளிகள் போன்று வண்ணபொடிகளை பூசிகொண்டு முழக்கங்களை எழுப்பியவாறும் சாலையில் பேரணியாக சென்றனர். https://www.polimernews.com/dnews/91068/பெண்களுக்கு-எதிரானவன்முறைகளை-கண்டித்துதுடப்பம்,-சமையல்பாத்திரங்களை-கையில்ஏந்தியவாறு-பேரணி
-
- 0 replies
- 422 views
-
-
சிந்தனைதான் உன்னைத் தூண்டி வேலை செய்ய வைக்கிற உந்து சக்தி.எனவே மனதை மிக உயர்ந்த சிந்தனைகளால் நிரப்பிவிடு. ஆயிரம் தடவைகள் வீழ்ந்தாலும் இலட்சியத்தைப் பிடித்துக்கொள்.ஆயிரம் தடவைகள் தோற்றுப் போனாலும் மீண்டும் முயற்சி பண்ணிப்பார். வலிவுடன் இரு.எல்லா மூட நம்பிக்கைகளையும் கைவிட்டு அப்பால் செல்.விடுதலை பெறு. எந்த வேலையும் அற்பமானதல்ல.தனது மனதுக்குப் பிடித்த காரியத்தை ஒரு முட்டாள் கூட செய்து முடிக்க முடியும்.ஆனால் எந்த வேலையையும் தனக்குப் பிடித்தமானதாக ஆக்கிக் கொள்பவனே புத்திசாலி. உன் தவறுக்கு அடுத்தவனைக் குற்றம் சொல்லாதே.உன் கால்களிலேயே நில்.முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள். நீ இன்றிருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு.நீ எப்படி ஆக வேண்டும் என்று விரும்புகிறாயோ,அப்படியே ஆவதற்கான ஆற…
-
- 0 replies
- 422 views
-
-
தலைப்பு: போரிற்கு பின்னரான இலங்கைத் தமிழ் சமூகத்துக்கு பெரிதும் தேவைப்படுவது - அறப் பயிற்சியே ! அறிவுப் பயிற்சியே ! அணி விபரம்: அறப்பயிற்சியே: கௌரவ பா. உ. திரு. சிறிதரன், யாழ் நகர பிதா திரு.மணிவண்ணன் அறிவுப்பயிற்சியே: கௌரவ பா. உ. திரு.சுமந்திரன், கௌரவ: பா. உ. திரு. அங்கஜன்
-
- 0 replies
- 421 views
-
-
புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் அகராதியில், `பெண்’ மற்றும் `ஆண்’ என்பதற்கான விளக்கங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒருவரை அவரது உடலியல் ரீதியான பால் அடையாளமாக (Biological Sex) அல்லாது, பாலினத்தின் (Gender) அடிப்படையில் ஆண், பெண் என்று வகைப்படுத்துகிறது இது. புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் அகராதியில், `பெண்’ மற்றும் `ஆண்’ என்பதற்கான விளக்கங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இருந்த வரையறைகள் போல் இல்லாமல், இந்த வரையறைகளின் மூலம் ஒருவரை அவரது உடலியல் ரீதியான பால் அடையாளமாக (Biological Sex) அல்லாது, பாலினத்தின் (Gender) அடிப்படையில் ஆண், பெண் என்று வகைப்படுத்துகிறது. கேம்பிரிட்ஜ் அகராதிய…
-
- 0 replies
- 421 views
-
-
தெளிவான பார்வையுள்ள சட்டங்களால் தான் பெண்கள் மீதான வன்முறைகளைக் குறைக்க முடியும் 25 Views நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி இந்தியா, தமிழகத்தில் உள்ள புதிய குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவியா அவர்கள் ‘இலக்கு’இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் வடிவம். கேள்வி- பெண்களுக்கெதிரான வன்முறைகளை எத்தனை விதமாக வகைப்படுத்தலாம்? பதில் – பொதுவாக அமைப்பு ரீதியான வன்முறைகள். இந்த சமூகம் ஒரு ஆணாதிக்க அமைப்பாக பெண்ணின் மீது நிகழ்த்தகூடிய வன்முறைகள். மதம் போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி நடத்தக்கூடிய அல்லது மத ரீதியாக நடத்தக்கூடிய வன்…
-
- 0 replies
- 421 views
-
-
'தனியறையில் உடைந்து அழுதிருக்கிறேன்' - குழந்தை வளர்ப்பில் இளம் தாய்மார்களை வாட்டும் குற்ற உணர்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது குழந்தையைச் சரிவர கவனித்துக் கொள்ள முடியவில்லை என்ற குற்ற உணர்வு தன்னை வாட்டுவதாகக் கூறுகிறார் கனிமொழி. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் “பலமுறை தனியறையில் உடைந்து அழுதிருக்கிறேன்.” “நிதானமின்றி மற்றவர்கள் முன்பு கத்தியிருக்கிறேன்.” இது சென்னையைச் சேர்ந்த, 33 வயதான கனிமொழியின் குரல். தனது நான்கு மாத ஆண் குழந்தைக்கு ஏதாவது உடல்நலப் பிரச்னை ஏற்ப…
-
- 0 replies
- 420 views
- 1 follower
-
-
சல்லாப Apps, பண மோசடி - Online Sex Business | Shocking Report
-
- 0 replies
- 420 views
-
-
"திருமணம் வேண்டாம், குழந்தை மட்டும் போதும்" - ஒற்றை தாயாக மாறிய பெண் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பல பெண்களைப் போலவே, குஜராத்தின் பரூச் நகரைச் சேர்ந்த டிம்பி பர்மர், தனது தாய்மையை முழுமையாக அனுபவித்து மகிழும் பெருமைக்குரிய தாய். ஆனால், அவரது தனிச் சிறப்பு, அவர் திருமணம் செய்துகொள்ளாத ஒற்றைத் தாய். 35 வயதான டிம்பி தனது குழந்தையைப் பெற்றெடுக்க சோதனைக் குழாய் குழந்தை முறையை தேர்ந்தெடுத்தார். டிம்பி திருமணம் வேண்டாமென முடிவுக்கு வருவதற்கு குடும்ப பிரச்னையே காரணம். அதேநேரம், தாய்மையை அனுபவிக்க விரும்பிய அவர், ஒற்றைத் தாயாக முடிவெடுத்தார். சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் வழிமுறை முழுதும் மருத்துவரின் வழிகாட்டுதல் படிதான் நடக்கும். சமூகத்திடமிருந…
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பெற்றோர் தங்களது குழந்தைகளைக் கண்டிப்பதும், சில நேரங்களில் அடிப்பதும் குழந்தைகளின் மனதில் வாழ்நாள் வடுவாகப் பதிந்து, ஒரு தனி மனிதராகத் திறம்பட அவர்கள் வளர்வதையே பாதிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். இதுகுறித்த புரிதல் தற்போது இந்திய சமூகத்தில் ஓரளவுக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் அதேவேளையில், இன்றைய சூழலில் மற்றொரு பிரச்னையும் குழந்தை வளர்ப்பில் உருவெடுத்து வருவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது குழந்தைகளுக்கு அதீத செல்லம் கொடுத்து, மிகவும் பாதுகாத்து வளர்ப்பதால் அவர்கள் மிகவும் பலவீனமான …
-
- 0 replies
- 418 views
- 1 follower
-
-
விலங்கினங்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை: க.நாகராசு வாழ்க்கை வாழ்வதற்கே என்பதனை நம்மில் எத்தனைபேர் தெளிவான புரிதல் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவை மிக மிக அரிதாகவே உள்ளது. இந்த மானுடம் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற ஆழ்ந்த எண்ணமும் அறிவும் கொண்டிருக்க வேண்டும். இவ்வாழ்வு எனக்கானது; நமக்கானது என்ற உண்மை இருக்கையில், வெகு சிலர் குறுகிய எண்ணத்தின் காரணமாகத் தடம் மாறிப் புதைகுழியில் விழுந்து, தன்னை இடையில் மாய்த்த்துக்கொள்ளும் அவலத்தினையும் பார்க்கிறோம். இதனை நினைக்கும்போது அவை மனித இனத்திற்கே அவமானமாகவே உள்ளது. ஏனெனில், மனித இனம் மட்டுமே தனக்காவும் பிறருக்காவும் வாழும் …
-
- 0 replies
- 416 views
- 1 follower
-
-
வழக்கமாகக் குற்றவாளிகள் யார், என்னென்ன குற்றம்செய்தார்கள் என்பது ஒரு வழக்கில் தெளிவாகத் தெரிந்துவிடும். தண்டனை என்ன என்பதற்குத்தான் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த வழக்கில் குற்றவாளிகள் யார் யார், கூட்டாளிகள் யார் யார் என்பதே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி அளித்த அந்தப் புகார் தமிழகத்தையே அதிரவைக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். "பிப்ரவரி 12-ம் தேதி, ஃபேஸ்புக் மூலம் என் நண்பரான ரிஷ்வந்த் என்ற சபரிராஜன், `அவுட்டிங் போகலாம்’ என்று சொல்லி என்னைக் காரில் அழைத்துச் சென்றான். திருநாவுக்கரசு என்பவன் காரை ஓட்டினான். பின் சீட்டில் நானும், சபரிராஜனும் அமர்ந்த…
-
- 0 replies
- 415 views
-
-
கண்ணீர் சிந்துவதை ஆண்கள் அவமானமாக நினைக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். சர்வதேச ஆண்கள் வாரம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சச்சின் டெண்டுல்கர் சக ஆண்களுக்காக உருக்கமான ஒரு மடலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ''விரைவில் நீங்கள் தந்தையாக, கணவனாகக் கூடும். அண்ணனாக, தோழனாக, வழிகாட்டியாக, ஆசிரியராக இருப்பீர்கள். முன்மாதிரியாக வாழ்ந்து காட்டப் போகும் நீங்கள் தைரியமிக்கவராக, உறுதி உடையவராக, வீரமும், வலிகளைத் தாங்கும் வல்லமை உள்ளவராக உருவெடுக்க உள்ளீர்கள். நீங்கள் அச்சம், சந்தேகங்களை எதிர்கொள்ள நேரிடும். பெரும் துயரங்களை அனுபவிப்பீர்கள். நீங்கள் நிச்சய…
-
- 0 replies
- 414 views
-
-
கொரோனா வைரஸ் உங்கள் காதல் வாழ்க்கையை எப்படி மாற்றப் போகிறது? சிங்கி சின்ஹா பிபிசி செய்தியாளர் புனித் பர்னாலா / BBC வைரஸை விட காதல் பெரியது என்பார்கள். காதலின் எதிர்காலமும் அதுதான். காதல், எத்தனை வைரஸ்கள் வந்தாலும் என்றென்றும் நிலைத்து நிற்கும். மற்ற பல துறைகளைபோல அல்லாமல், காதலின் எதிர்காலம் மெய்யியலை சார்ந்து இருக்கிறது. "செல்போன், கணிணி என்று இணையம் வழியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும்தான் இனி காதலிக்க முடியும்" என்கிறார் டெல்லியை சேர்ந்த தொழில் நெறிஞரான பப்பி ராய். சிகிச்சை இல்லாமல் தீர்வு கொடுப்பவர் என்று அவர் தன்னைக் கூறிக் கொள்கிறார். இப்போது காதலும், காமமும் வெவ்வேறாகிவிட்டது என்று அவர் மேலும் கூறுகிறார். மக்களும் அதற்…
-
- 0 replies
- 414 views
-
-
நம்முடைய வாழ்க்கையை மீண்டும் தொடங்க முடியுமா? மின்னம்பலம்2021-09-30 முனைவர் சகுப்பன் கோவிட் 19 எனும் நச்சுயிரின் பாதிப்பானது உலகின் அனைத்து நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்திவிட்டது, குறிப்பாக இந்தியாவிலும் இந்த தொற்றுநோயின் பாதிப்பினால் அடுத்தடுத்து நெருங்கிய நண்பர்கள் / குடும்ப உறவினர்கள் போன்றவர்களின் உயிரிழப்பு பற்றிய அதிர்ச்சிகரமான செய்தியைப் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து கேட்டிருப்பார்கள். அதோடு அவ்வாறு இழந்து தவித்திடுபவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்குக்கூட நேரில் செல்லமுடியாதநிலையில் நம்மில் பெரும்பாலானோர் தொலைபேசியின் வாயிலாக மட்டுமே தொடர்பு கொண்டு ஆறுதல் கூறுகின்ற அவலச் சூழலுக்கு ஆளாகிவிட்டோம். மேலும், இந்த நச்சுயிரானது சூறாவளி போல வந்து, அதன் பாதையில் இர…
-
- 0 replies
- 414 views
-
-
(கோப்புப் படம்) சமூகத் தொடர்புகளில் முழுமையான நேர்மையை எதிர்பார்ப்பவரா நீங்கள்? ஆம் எனில், நீங்கள் சமூகத் தொடர்புகளில் சுமுகமான முறையில் இயங்குவதற்கான வாய்ப்புகள் குறைவே என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகமும், மெக்சிகோ பல்கலைகழகமும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், மிகவும் நேர்மையான சமூகத் தொடர்பு நமது நட்பு வட்டத்தைக் குறைத்துவிடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், நேர்மையற்ற ஒரு சமூக வட்டத்தில் நாம் இருப்பின், அது மிக மோசமான வட்டாரத்தை உருவாக்கும் என்று கூறும் இந்த ஆய்வு, சமூகச் செயல்பாடுகளில் இடைநிலையாக இருப்பதுதான் உகந்தது என்று தெரிவிக்கின்றது. இதுகுறித்து சமூக உளவியலாளர்கள் கூறுகையில் நாம் பயன்படுத்தும் நான்கு விதமான பொய்கள் குறித்த…
-
- 0 replies
- 414 views
-
-
-
- 0 replies
- 411 views
-
-
குறைந்த வருமானம் ஈட்டும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தகவல்! ஹைதராபாத் ஓல்டு சிட்டி பகுதியில் குறைந்த வருமானம் ஈட்டும் வேலைகளில் ஈடுபடும் பெண்களில் 80 சதவீதமானோர் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாக ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களில் பெரும்பாலானோர் அமைப்புசாரா துறையில் பணியாற்றுவதால் முறைப்பாடு அளிக்க அமைப்பு ஏதும் இல்லை என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. ‘பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்’ குறித்து ஹைதராபாத்தில் உள்ள ஓல்டு சிட்டி பகுதியில் உள்ள பெண்களிடையே ஷாஹீன் மகளிர் நலச் சங்கத்தினால் ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் …
-
- 1 reply
- 411 views
-