உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா நாகை மாவட்டத்தில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றில் தனது தோழி சசிகலாவுடன் மாலை மாற்றிக்கொண்டுள்ளார். இன்றுதான் ஜெயலலிதா அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். அதை முன்னிட்டே நேற்றைய வழிபாடுகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தில்தான் அறுபதை வயதை அடையும் தம்பதியர் அத்தகைய ஆராதனைகளை நடத்துவர் என்பதாலும், பெண்கள் இருவர் மாலை மாற்றிக்கொண்டதாலும், இது குறித்து தமிழக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
-
- 46 replies
- 12.5k views
-
-
மாஸ்கோவின் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களுக்கு பொது மன்னிப்பு ரஷ்யாவில் தஜ்கிஸ்தான் குடியேற்றக்காரர்கள் சிலர்ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் தங்கியுள்ள சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களுக்கு ரஷ்ய அதிகாரிகள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளனர். மாஸ்கோவில் சுமார் பத்து லட்சம் குடியேற்றக்காரர்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. மாஸ்கோ மேயர் அலுவலகம் வழங்கியுள்ள இந்தப் பொதுமன்னிப்பு, மத்திய ஆசியாவைச் சேர்ந்த குடியேற்றக்காரர்களுக்கு வழங்கப்படுகிறது. தங்களைப் பதிவு செய்துகொள்ளவும், வேலை தேடிக்கொள்ளவும் அவர்களுக்கு ஒரு மாத காலம் தரப்படுகிறது. வெளிநாட்டவருக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகம் இருப்பதாலும், பொலிசார் மீதான அச்சம் காரணமாகவும் பலர் தங்களைப் பதிவு செய்துகொள்ள மு…
-
- 0 replies
- 706 views
-
-
பீய்ஜிங் விமான நிலையத்தில் 'உலகின் மிகப் பெரிய' புதிய பயணிகள் தளம் பீய்ஜிங்கின் புதிய விமான பயணிகள் தளம் சீனத் தலைநகர் பீய்ஜிங்கின் விமான நிலையத்தில் புதிய டெர்மினல் அதாவது பயணிகள் தளம் ஒன்று இன்று உத்தியோகப்பூர்வமாகத் திறக்கப்பட்டு, முதன்முதலாக பயணிகளை வரவேற்றுள்ளது. இவ்வாண்டில் பின்னர் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின்போது ஏராளமான பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்கள் இத்தளத்தைப் பயன்படுத்துவார்கள். உலகின் மிகப் பெரிய விமான பயணிகள் தளம் இதுதான் என்று சீனா கூறுகிறது. 170 கால்பந்தாட்ட மைதானங்களின் பரப்பளவு கொண்டது அது. பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளர் நோர்மன் ஃபாஸ்டர் இதனை வடிவமைத்துள்ளார். நான்கே ஆண்டுகளில் ஐம்பதாயி…
-
- 0 replies
- 610 views
-
-
ஹிட்லரின் கொலைப்பட்டியலில் சாப்ளின ஹிட்லரின் நாஜிப்படைகளிம் கொலை பட்டியலில் காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் இடம் பெற்றிருந்ததாக, தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1930ம் ஆண்டில் வெளியான ஜூடென் செஹன் டிக் ஆன் (ஜூவீஸ் ஆர் வாச்சிங் யு) என்ற நூல், அடுத்த மாதம் 6ம் தேதி ஏலத்திற்கு வருகிறது. இதில் இத்தகவல் வெளியாகியுள்ளது. யூதர்களுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்ட டாக்டர் ஜோகன்வோன் லியர்ஸ் இதன் ஆசிரியர். நாஜிக்களின் ஆதரவு நூலாக கருதப்பட்ட இதில், யூத இன முக்கிய புள்ளிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இதில், கொல்லப்பட வேண்டிய கலைஞர்களின் பட்டியல் பிரிவில் சார்லி சாப்ளினையும் நாஜி அரசு சேர்த்திருந்ததாக, நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் ஒரு பிர…
-
- 0 replies
- 842 views
-
-
பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை சனிக்கிழமை, மார்ச் 1, 2008 சென்னை: பிரபல தமிழ் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் சென்னையில் இன்று தற்கொலை செய்து கொண்டார். எழுத்தாளர் சுஜாதாவின் மறைவினால் தமிழ் எழுத்துலகம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் இன்னொரு பெரும் அதிர்ச்சியாக பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் 67 வயதில் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி வந்துள்ளது. ராம் மோகன் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்டெல்லா புரூஸ் இளமை ததும்பும் பல சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். சுஜாதாவைப் போலவே இவரது எழுத்துக்களிலும் இயல்பும், இளமையும் நளினமாக நடைபோடும். 67 வயதான ஸ்டெல்லா புரூஸ், சமீப காலமாக வறுமையில் வாடி வந்தார். கோடம்போக்கம் யுனைட்டெட் இந்தியா காலனியில் தனத…
-
- 2 replies
- 1.4k views
-
-
வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் மரத்தினாலான கார் கண்டுபிடிப்பு [29 - February - 2008] வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் முழுக்க முழுக்க மரத்தினால் கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர். ஜோ ஹோர்மோன் என்பவரின் தலைமையில் வடிவமைக்கப்பட்ட இப்புதிய வகை விளையாட்டுக் கார் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. மணிக்கு 240 மைல் வேகத்தில் செல்லும் இந்தக் காருக்கு `ஸ்பிளின்டர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேப்பிள்பிளைவுட், எம்.டி.எப். மரங்களின் மூலம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மரத்தால் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் இதன் எடையும் போர்ஷே காரின் எடையை விட 240 கிலோ குறைவாக 1,134 கிலோ கொண்டுள்ளது. `அலுமினியம்…
-
- 1 reply
- 949 views
-
-
ஆப்கானில் இளவரசர் ஹாரி . Friday, 29 February, 2008 02:30 PM . லண்டன், பிப்.29: ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்து வரும் சண்டையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி பங்கெடுத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகிவுள்ளது. . கடந்த கிருஸ்துமஸ் பண்டிகை முதலே இளவரசர் ஹாரி "புல்லட் மேக்னட்' என்ற புனை பெயரில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ஒரு சாதாரண வீரனாக செயல்பட்டு வருகிறார் என்று "தி டிரட்ஜ் ரிப்போர்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஈராக்கிற்கு சென்று இளவரசர் ஹாரி போர் பயிற்சி பெற திட்டமிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த திட்டம் கைவிடப்பட்டு, ஆப்கானிஸ் தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் போர…
-
- 0 replies
- 744 views
-
-
மும்பை தாஜ்மகால் ஓட்டலில் காபி குடிக்க வேண்டும் என்ற 82 வயது மூதாட்டியின் ஆசை நிறைவேறவில்லை. சாதாரண ரப்பர் செருப்புகள் அணிந்து சென்றதால், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து நிர்வாகம் வெளியேற்றி விட்டது.... மேலும் http://isoorya.blogspot.com/ http://tickala.blogspot.com/
-
- 3 replies
- 1.2k views
-
-
உலகில் 35 சதவீதம் பேரை மலேரியா தாக்கும் அபாயம் உலகின் 35 சதவீதம் பேர் மலேரியா நோய் தாக்கும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட வரைபட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. உலகின் மலேரியா நோயின் அபாயம் குறித்து ஆராய்வதற்காக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் பாப் ஸ்னோ தலைமயில் "மேப்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கென்ய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் இந்த அமைப்புக்கு "வெல்கம்' என்ற தன்னார்வ நிறுவனம் நிதியுதவி செய்து வருகிறது. உலகின் எந்தெந்தப் பகுதிகளிலெல்லாம் மலேரியா இருக்கிறது என்பது குறித்து இந்த அமைப்பு வரைபட அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் சுமார் 237 கோடி பேர் மலேரியா தாக்க…
-
- 0 replies
- 725 views
-
-
இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமியை சூரியன் விழுங்கும் அபாயம் [26 - February - 2008] இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமியை சூரியன் விழுங்கிவிடுமென வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; சூரியன் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வருவதால் ஏற்படும் அதிக வெப்பத்தின் காரணமாக பூமியிலுள்ள புல், பூண்டுகள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடுவதுடன், கடல்கள் முற்றாக வற்றிப் போய்விடும். எனினும், அடுத்த நூற்றாண்டுகளில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒரு, சிறு கிரகத்தை புவி ஈர்ப்பு எல்லைக்குள் கொண்டுவந்து மோதவைத்து பூமியின் சுற்றுவட்டப் பாதையை மாற்றுவதன் மூலம் அழிவிலிருந்து பூமியையும் மனித இனத்தையும் காப்பாற…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஈராக்கிய ஆயுதக்குழுவினால் 12 நேபாளிகள் கொலை செய்யப்பட்ட காட்சி இணையத்தில் [28 - February - 2008] *21 பொது மக்கள் ஆயுதக் குழுவினால் கடத்தல் பாக்தாத்: ஈராக்கின் ஆயுதக் குழுவொன்று நேபாளத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்களை கொலை செய்த காட்சியை உள்ளடக்கிய ஒளிநாடாவொன்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத் தொழிலாளர்கள் அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ள நேபாளக் கம்பனியொன்றில் பணிபுரிந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது. அன்ஸார்- அல்- சுன்னா என தன்னை அழைத்துக் கொள்ளும் இவ்வாயுதக் குழுவினால் வெளியிடப்பட்ட ஒளி நாடாவில் போராளியொருவர் சிரச் சேதம் செய்யப்பட்ட தொழிலாளியொருவருக்கு அருகில் கத்தியுடன் நிற்கும் காட்சி காண்பிக்கப்பட்டுள்ளது. 2004 இலும் சமையல…
-
- 0 replies
- 974 views
-
-
தமிழகத்தில் விடுதலைப் ‘புலிகள்’ நடமாட்டம் பெருகி விட்டது. தி.மு.க. அரசு அவர்களுக்கு ஆதரவாக உள்ளது’ என்று மீண்டும் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளார் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி. தி.மு.க. அரசுக்கு எதிராகக் காய் நகர்த்துகிறார் என்ற பேச்சுக்கு நடுவே, கடந்த சனிக்கிழமை மதியம் தமிழக கவர்னரை, சந்தித்தார் சுவாமி. அன்று மாலையே ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசினார். கொஞ்ச காலமாகவே ஜெ.வும் சு.சுவாமியும் அடிக்கடி டெலிபோனில் ஆலோசிப்பதாகக் கூறுகிறார்கள். என்னதான் நடக்கிறது? என்று அறிய, ஜனதா கட்சித் தலைவரான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியை நேரில் சந்தித்தோம். வழக்கம் போலவே தனது அதிரடிகளைத் தொடர்ந்தார் அவர்... தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டாலே நீங்கள் ‘விடுதலைப் புலிகள் நடமாட்டம்... த…
-
- 1 reply
- 987 views
-
-
யூரியூப்(youtube) இணையத்தளத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிப்பு [27 - February - 2008] பாகிஸ்தானில் இணையத்தள சேவையை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் `யூ ரியூப்' இணையத்தளத்திற்கான சேவையை நிறுத்துமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இறைமைக்கு மாறான தகவல்கள் இந்த இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டரசு தெரிவித்துள்ளது. முகமது நபிகள் தொடர்பாக கேலிச் சித்திரங்கள் இந்த இணையத்தளத்தில் வெளியாகியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்த தொழில்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த கேலிச் சித்திரங்கள் முதன் முறையாக வெளியான போது முஸ்லிம்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்த…
-
- 1 reply
- 813 views
-
-
பராக் ஒபாமாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய நிறுவனங்கள் பதிலடி [27 - February - 2008] அமெரிக்க நிறுவனங்கள் தாராளமயக்கொள்கை என்ற பெயரில் வேலைவாய்ப்புகளை இந்தியா மற்றும் சீனாவுக்கு தாரைவார்ப்பதாகவும் இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுக்கு போட்டியிடும் செனட்டர் பராக் ஒபாமாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய நிறுவனங்கள் பதிலடி கொடுத்துள்ளன. இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் மத்திய நிதி அமைச்சகம் என்பன அமெரிக்காவின் சிகாகோ நகரில் வெளியாகும் `சிகாகோ டிரிபியூன்' நாளிதழில் முழுப் பக்க விளம்பரம் கொடுத்துள்ளன. அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு; அமெரிக்காவில் செயற்பட்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
ரஷ்யா-செர்பியா இடையில் எரிபொருள் குழாய்பாதை ஒப்பந்தம் 26.02.2008 / நிருபர் குளக்கோட்டன் ரஷ்யாவிலிருந்து மேற்கு ஐரோப்பாவுக்குச் செல்லும் எரிபொருள் குழாய்ப்பாதை அமைப்பது தொடர்பில் ரஷ்யாவும் செர்பியாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அடுத்த ரஷ்ய அதிபர் என்று கருதப்படும் திமித்ரி மெத்வதெவ் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஒரு உயர்மட்ட ரஷ்ய பிரதிநிதிகள் குழ பெல்கிரேட் வந்த நேரத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ரஷ்யாவின் எரிசக்தித்துறை பெருநிறுவனம் காஸ்ப்ரோமின் தலைவராக இருக்கும் மெத்வதெவ், கொசோவோ செர்பியாவிலிருந்து பிரிந்து சுதந்திரப் பிரகடனம் செய்திருப்பதை ரஷ்யா வலுவாக எதிர்க்கிறது என்றும் கூறியிருக்கிறார். sankathi.com
-
- 2 replies
- 1k views
-
-
ஈரான் அணுவாயுத நடவடிக்கைகளை இரகசியமான முறையில் முன்னெடுக்கிறது [27 - February - 2008] * ஐ.நா.வின் அணு கண்காணிப்பு பிரிவு ஈரான் அணுவாயுத நடவடிக்கைகளை இரகசியமான முறையில் முன்னெடுப்பதாக ஐ.நா.வின் அணு விவகார கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கின்றது. ஈரான் தனது அணு நிகழ்ச்சித் திட்டத்தை 2003 இலேயே நிறுத்தி விட்டதாக கடந்த டிசெம்பரில் வெளியான அமெரிக்க புலனாய்வு அமைப்பொன்றின் அறிக்கை தெரிவித்திருந்த நிலையிலேயே ஐ.நா.வின் அணுக் கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச அணுச்சக்தி முகவர் அமைப்பிற்கு (ஐ.ஏ.ஈ.ஏ) வழங்கப்பட்ட அறிக்கையிலேயே ஈரான் தனது அணு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையை நிராகரித்துள்ள ஐ.ஏ.ஈ.ஏ.க்கான ஈரானியத் தூதுவர…
-
- 0 replies
- 628 views
-
-
தயாநிதி மாறானால் மக்களவையில் பரபரப்பு 2/26/2008 6:38:11 PM வீரகேசரி இணையம் - முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மக்களவையில் மத்திய அமைச்சர்கள் பகுதியில் அமர்ந்திருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விளம்பரங்களை தினகரன் மற்றும் தமிழ்முரசு வெளியிடப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் தயாநிதி மாறன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அவரது மகன் ராகுல் காந்தியையும் சந்தித்…
-
- 1 reply
- 1.1k views
-
-
துருக்கி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது [26 - February - 2008] * குர்திஸ் போராளிகள் ஈராக்கின் வடபகுதியில் இடம்பெறும் மோதல்களின் போது துருக்கியின் தாக்குதல் ஹெலிகொப்டர் ஒன்றை தாங்கள் சுட்டு வீழ்த்தியிருப்பதாக குர்திஸ் போராளிகள் தெரிவிக்கின்றனர். ஈராக்கின் வடபகுதியிலுள்ள குர்திஸ் போராளிகளை இலக்கு வைத்து கடந்த வியாழக்கிழமை துருக்கிப் படையினர் படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். பி.கே.கே. என அழைக்கப்படும் குர்திஸ் போராளிகளின் வெளியுறவு விவகாரங்களுக்கான தலைமையதிகாரியே தங்கள் போராளிகள் ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், இத் தகவல் சுயாதீன அமைப்புகளால் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென
-
- 0 replies
- 746 views
-
-
ஈரான் மீது மூன்றாவது சுற்று பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா.பாதுகாப்புச் சபையிடம் வலியுறுத்தல் [25 - February - 2008] ஈரானுக்கெதிராக மூன்றாவது சுற்று பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிடம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், சர்ச்சைக்குரிய வகையில் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டுவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதன் சமீபத்திய அறிக்கையில் யுரேனியம் செறிவூட்டல் திறனை ஈரான் வலுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையே தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு ஈரானின் மீது சர்வதேச தடையை விதிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வரும்படி அமெரிக்கா உள்…
-
- 0 replies
- 623 views
-
-
சுமத்ராவில் கடும் பூகம்பம் Monday, 25 February, 2008 09:45 AM . ஜகார்த்தா, பிப். 25: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நேற்றிரவு கடும் பூகம்பம் தாக்கியது. இதனால் மக்கள் பீதியடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் ஓட்டம் பிடித்தனர். . இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் பெங்க்குலு மாகாணத்தில் நேற்றிரவு தாக்கிய இந்த பூகம்பம் ரிக்டர் அளவு கோலில் 6.6 என்ற அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் உயிருக்கு பயந்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகளில் ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த பூகம்பம் காரணமாக உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்ட…
-
- 0 replies
- 582 views
-
-
அமெரிக்க உளவு செய்மதி வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டது ! அண்டவெளியில் தொங்கும் செய்மதிகளுக்கு வருகிறது ஆபத்து ! திசை மாறுகிறது உலகப் போர் ! கடந்த 2006ம் ஆண்டு ஏவப்பட்ட பழுதடைந்த உளவு சற்லைற்றை விண்வெளியில் வைத்து சுட்டு வீழ்த்தியதன் மூலம் அமெரிக்கா புதிய போரியல் சரித்திரம் ஒன்றை நேற்றிரவு எழுதி முடித்துள்ளது. தரையில் இருந்து 210 கி.மீ தூரத்தில் அண்ட வெளியில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு செய்மதியை மணிக்கு 25.000 கி.மீ வேகத்தில் பறந்து சென்று குறி தவறாமல் சுட்டு வீழ்த்துவது போரியல் வரலாற்றில் புதிய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது. சுமார் 60 மில்லியன் டாலர்களை பாவித்து இதை சுட்டு வீழ்த்தியுள்ளது அமெரிக்கா. இந்தச் சாகசச் செயல் பலருக்கு அச்சத்தை ஊட்டியுள்ளது. சென்ற…
-
- 1 reply
- 837 views
-
-
நான் மகாத்மா காந்தியால் மிகவும் கவரப்பட்டேன் பாரக் ஒபமா தெரிவிப்பு வீரகேசரி நாளேடு - அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான தெரிவில் ஜனநாயக கட்சியின் முன்னணி போட்டியாளராக விளங்கும் ஒபமா தான் மகாத்மா காந்தியின்பால் மிகவும் கவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சாதாரண மக்களால் அசாத்தியமான காரியங்கள் செய்ய முடியும் என்பதை ஞாபகப்படுத்தும் வகையில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை தனது அலுவலகத்தில் வைத்துள்ளதாக ஒபமா கூறினார். ""நான் எனது வாழ்க்கையில் மகாத்மா காந்தியை ஒரு முன்னுதாரணமாகவே எப்போதும் காண்கிறேன். சாதாரண மக்கள் இணைந்து அசாத்திய காரியங்களைச் செய்யவும் மாற்றத்தைக் கொண்டுவரவும் முடியும் என்பதை அவர் செய்து காட்டியவர்'' என "இன்டியா அப்ரோட்'' பத்திரிகைக்கு எழுதிய கட்…
-
- 9 replies
- 2.2k views
-
-
இஸ்ரேலுடனான பேச்சுகள் தோல்வியடைந்தால் பாலஸ்தீனம் ஒருதலைப்பட்சமான சுதந்திர பிரகடனம்? [22 - February - 2008] [Font Size - A - A - A] இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுகள் தொடர்ந்து தோல்வியடைந்தால் பாலஸ்தீனர்கள் தனிநாட்டுக்கான சுதந்திரப் பிரகடனத்தை ஒருதலைப்பட்சமான முறையில் மேற்கொள்வார்களென பாலஸ்தீனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்திலும் முரண்பாட்டிற்கு தீர்வு காண்பதற்குரிய பேச்சுகள் பற்றுறுதியுடன் முன்னெடுக்கப்படாத பட்சத்திலும் நாம் எமது ஒருதலை பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை அறிவிக்க நேரிடுமென பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸின் உயர்மட்ட உதவியாளர்களில் ஒருவரும் இஸ்ரேலிய அதிகாரிகளுட…
-
- 5 replies
- 1.3k views
-
-
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாஹிம் தெரிவு உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் மார்ச்சில் அரசாங்க முக்கியஸ்த்தர் தெரிவிப்பு 2/24/2008 5:38:40 PM வீரகேசரி நாளேடு - இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள பெனாஸிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியானது அந்நாட்டின் அடுத்த பிரதமரைத் தெரிவு செய்துள்ளதாகவும் அடுத்தமாத ஆரம்பத்தில் புதிய பாõளுமன்றம் பதவியேற்கும் சமயத்தில் இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு செய்யப்படும் எனவும் மேற்படி கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஸ்தாபக அங்கத்தவரும் உப தலைவருமான மக்தூம் அமீன் பாஹிம் (68 வயது) பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தனது பெயரை வெளியிடவிரும்பாத அக்கட்சி…
-
- 1 reply
- 763 views
-
-
ஈராக்கில் துருக்கி தாக்குதல் குகுர்கா, பிப்.24: வடக்கு ஈராக்கின் மலைப் பகுதியில் குர்திஷ் இன தீவிரவாதிகள் பதுங்கி உள்ள இடங்களில் துருக்கி நாட்டின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் கடும் குண்டுமழை பொழிந்தன. . இந்த தாக்குதலில் குர்திஷ் தீவிரவாதிகள் 35 பேரும் துருக்கி படையை சேர்ந்த 2 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஈராக்கின் துருக்கிப்படைகள் தாக்குதல் நடத்த தொடங்கிய பின்னர் தங்களது 7 வீரர்கள் பலியானதாகவும், 79 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் துருக்கி ராணுவம் கூறியுள்ளது. ஆனால் துருக்கியின் 15 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சி தெரிவித்துள்ளது. ஈராக்கில் கடந்த 20…
-
- 0 replies
- 707 views
-