உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26638 topics in this forum
-
கடந்த 27-ந்தேதி ராவல்பிண்டி நகரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரசார கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்.`மனித வெடிகுண்டு தாக்குதலின்போது பெனாசிர் பயணம் செய்த கார் மேற்கூரையின் இரும்புக் கைப்பிடி தலையைத் தாக்கியதால்தான் அவர் இறந்தார். அவரது இறப்பிற்கு துப்பாக்கி குண்டு காயம் காரணமில்லை' என்று பாகிஸ்தான் அரசு கூறியது. இதை பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்கள் மறுத்தனர். காரின் அருகேயிருந்த ஒரு மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதால்தான் அவர் பலியானார் என்றும் பெனாசிர் படுகொலையை முஷரப் அரசாங்கம் மறைக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்கள்.இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் செய்தி சேனல் ஒன்று, பெனாசிர் பூட…
-
- 0 replies
- 717 views
-
-
லேடனைக் காட்டிக்கொடுத்த மருத்துவரை விடுவிக்க மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி அல்-கைதா தலைவர் ஒஸாமா பின் லேடன் குறித்து அமெரிக்க உளவுத் துறைக்கு தகவல் கொடுத்ததாக நம்பப்படும் பாகிஸ்தானிய மருத்துவரை விடுவிக்கவோ அல்லது அமெரிக்காவிடம் கையளிக்கவோ போவதில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. குறித்த மருத்துவரின் விடுதலை குறித்து அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அடிக்கடி ஊடகங்களில் பேசிவருவது குறித்து பாகிஸ்தான் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. பின் லேடனின் மரணத்தையடுத்து, பாகிஸ்தானின் மருத்துவரான ஷகீல் அஃப்ரிடி என்பவரை அமெரிக்க இராணுவம் பாராட்டியிருந்தது. அவரது உதவியுடனேயே பின் லேடனைக் கொல்ல முடிந்தது என்று…
-
- 0 replies
- 564 views
-
-
லேடி ட்ரியூ - 3ம் நூற்றாண்டில் சீனர்களை விரட்டியடித்த வியட்நாமிய பெண் கிளர்ச்சியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMERICAN MUSEUM OF NATURAL HISTORY படக்குறிப்பு, லேடி ட்ரியூ (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், பதினான்காம் கட்டுரை இது) லேடி ட்ரியூ வியட்நாமின் ச்சியெளசோ (தற்போதைய தன்ஹோ மாகாணம்) துணை மாகாண நகரில் உள்ள ச்சியூஸென் பகுதியில் இருக்கும் யென் பின் மாவட்டத்தில் கிறிஸ்துவுக்…
-
- 0 replies
- 332 views
- 1 follower
-
-
தவளைக்குத் திருமணம்! தவளை ராஜாவுக்கும் தவளை ராணிக்கும் கடந்த வாரம் இந்தியாவின் நாக்பூர் மாநிலத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்து திருமணச் சடங்குமுறையில் இந்தத் திருமணம் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டுள்ளதாக இதனை நடத்தியவர்கள் தெரிவித்துள்ள அதேவேளை, மழை வரவேண்டியே இந்தத் திரும ணத்தை நடத்தி வைத்ததாக தெரிவித்துள்ளனர். தவளையின் கழுத்தில் தொங்குகின்றது தவளை யைவிடப் பெரிய தாலிக்கொடி. இது வைக்கோலில் செய்யப்பட்டது. அட... திருந்திறதுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லைத்தான்! http://www.tamilkathir.com/news/1580/58//d,full_view.aspx
-
- 3 replies
- 2.3k views
-
-
லைகா மொபைல் நிறுவனத்தின் பிரான்ஸ் அலுவலகத்தில் ரெய்டு... மோசடிப் புகாரில் 19 பேர் கைது!! லண்டன்: மொபைல் சர்வீஸ் துறையில் சர்வதேச அளவில் பெரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தியது பிரான்ஸ் போலீஸ். இதில் அந்த நிறுவனம் ஏராளமான பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நிறுவனத்தின் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதானவர்களில் லைகா மொபைலின் இயக்குநர்களுள் ஒருவரான் அலெய்ன் ஜோசிமெக்கும் ஒருவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட 19 பேரில், 9 பேர் வரி ஏய்ப்புக்காவும், மீதி 10 பேர் பண மோசடிக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் போலீஸ் தகவல் வ…
-
- 8 replies
- 1k views
-
-
தொற்றுநோக்கீகளை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமொன்று மனித உடல்களில் அவற்றை பயன்படுத்தவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. லைசோல் டெட்டோல் போன்றவற்றை தயாரிக்கும் ரெக்கிட் பென்கைசர் என்ற நிறுவனம் இந்த வேண்டுகோளை விடு;த்துள்ளது. தனது உற்பத்தி பொருட்களை மனிதர்கள் எந்த சூழ்நிலையிலும்,ஊசி மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ உடலிற்குள் செலுத்தக்கூடாது என ரெக்கிட் பென்கைசர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எங்கள் தொற்றுநீக்கிகள் மற்றும் சுகாதார பொருட்களை நோக்கம் மற்றும் பயன்பாட்டு வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ள படி மாத்திரமே பயன்படுத்தவேண்டும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தொற்று நீக்கிகளை வைரசினை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தலாம் எனஅமெரிக்க ஜனா…
-
- 2 replies
- 537 views
-
-
லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி Charles Taylor, குற்றவாளியென சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சாள்ஸ் ரெய்லர், போர்க் குற்றக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியென சியேரா லியோனுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சியேரா லியோனில் உள்நாட்டுப் போரின்போது புரியப்பட்ட குற்றங்கள் தொடர்பாக, போர்க் குற்றங்களும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களுமாக 11 குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் இடம்பெற்ற நியரென்பேர்க் விசாரணைக்குப் பின்னர், தற்போதுதான் உலக நாடு ஒன்றின் முன்னாள் தலைவர் ஒருவர் போர்க் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். மே மாதம் முப்பதாந்…
-
- 2 replies
- 550 views
-
-
லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்லஸ் டெய்லருக்கு ஐம்பது ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் ஆதரவு சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டு முதல் 2002மாம் ஆண்டு வரையில் சியரோ லியோனில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது கிளர்ச்சியாளர்கள் இனப்படுகொலைகளை மேற்கொள்ள ஜனாதிபதி டெய்லர் உதவியாக கடந்த மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஜனாதிபதி பதவி மற்றும் மக்களுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகம் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நீதவான்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், 64 வயதான டெய்லர் தாம் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும், தாம் …
-
- 2 replies
- 483 views
-
-
லைபீரியாவில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 மாணவர்கள் உயிரிழப்பு! லைபீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவின் தலைநகர் மொன்ரோவியாவில் இன்று (புதன்கிழமை) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உட்பட 30 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். தீ விபத்தையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்ததுடன் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சேர்த்தனர். இந்நிலையில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்த…
-
- 0 replies
- 266 views
-
-
லைபீரியாவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. அந்நாட்டில் இதுவரை 4 ஆயிரத்து 33 பேர் இவ்வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதுள்ளதுடன் 8 ஆயிரத்து 399 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லைபீரியாவில் இந்நோய் காரணமாக உயிரிழந்த உறவுகளை எண்ணி கண்ணீர் சிந்தித் துடிப்போரின் புகைப்படங்களை டெய்லி மெயில் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. http://virakesari.lk/articles/2014/10/12/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%…
-
- 0 replies
- 1.3k views
-
-
லையன் எயார் விமான விபத்தில் முக்கிய திருப்பம்! இந்தோனேசியாவில் விபத்திற்குள்ளான லையன் எயார் விமானத்தின் கறுப்புப் பெட்டி குரல்பதிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்ட குறித்த கறுப்புப் பெட்டி, விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பிரதான தடயமாக காணப்படுகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 189 பயணிகளுடன் பயணித்த லையன் எயார் விமானம், ஜகார்த்தா தீவில் விபத்திற்குள்ளாகியது. தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரியிருந்தார். எனினும், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒரு சில நிமிடங்களில் விமானம் விபத்திற்குள்ளானது. இந்நிலையில், ஜாவா கடல் …
-
- 2 replies
- 958 views
-
-
கொவிட்-19 வைரஸ் பரவாது தடுப்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் நீண்ட நாட்களாக வீட்டில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பொழுதுபோக்குகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை விரக்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தின் தேசிய ஆய்வுகூடம் என்பன இணைந்து புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளன. இதன்படி விண்வெளி ஆய்வில் ஆர்வம் உள்ள சிறார்களுக்கு ஒன்லைன் மூலம் அது தொடர்பான பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது. இப் பயிற்சியினை எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை சிறார்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://news.lankasri.com/science/03/2240…
-
- 3 replies
- 490 views
-
-
லொசான் மாநகரசபைத் தேர்தலில் நமசிவாயம் அமோக வெற்றி! [Tuesday 2016-03-01 07:00] சுவிட்சர்லாந்து லொசான் மாநகரசபைக்குகு நேற்று நடைபெற்ற தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான தம்பிப்பிள்ளை நமசிவாயம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். 9,833 வாக்குகளைப் பெற்று தனது அணி சார்பில் போட்டியிட்ட 100 பேரில் இவர் நான்காவது இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அது கடந்த முறை இவர் பெற்ற வாக்குகளை விட 4,020 அதிகமாகும். இவரது அணியில் முதலாவது இடத்திற்குத் தெரிவானவர் 10,001 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் இன்னமும் 169 வாக்குகளை இவர் மேலதிகமாகப் பெற்றிருந்தால் இவர் கட்சிப் பட்டியலில் முதலாவது இடத்தைப் …
-
- 0 replies
- 559 views
-
-
அமெரிக்காவில் சிக்காக்கோ நகரில் வசித்து வரும் இந்தியப் பிரஜையொருவருக்கு அண்மையில் சுரண்டல் சீட்டு மூலம் மில்லியன் டொலர்கள் வெற்றி கிடைத்தது. இந்தப் பரிசின் பிரகாரம் மில்லியன் டொலர்கள் அவரது ஆயுட்காலம் முழுவதும் பிரித்துக் கொடுக்கப்படும் அல்லது ஒரு தடவைப் பரிசுத் தொகையாக 425,000 டொலர்கள் வழங்கப்படும். இந்தப் பரிசை வென்ற சலவை மற்றும் உடுப்பு அழுத்தித் தொழல்நிறுவனங்கள் மூன்றிற்கு உரிமையாளரான 46 வயதுடைய உருஜ்ட கான் பரிசுத்தொகை தபாலில் அனுப்பப்பட்டு அது கிடைக்கு முன்பே மரணமானார். இவரது மரணத்தைப் பரிசோதனை செய்ய வைத்தியர்கள் இயற்கை மரணம் என சான்றிதழும் கொடுத்து விட்டனர். இருந்த போதும் ஒரு நெருங்கிய உறவினருக்கு சந்தேகம் தீரவில்லை. அவர் பொலிசாரை நாடினார். சுடலம் தோண்டியெடுக்கப்ப…
-
- 6 replies
- 737 views
-
-
லொறி ஓட்டுநர்களின் முற்றுகையை கைவிடுமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவு! அமெரிக்காவுடனான முக்கிய வர்த்தகத் தொடர்பை லொறி ஓட்டுநர்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவர கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடை உத்தரவு வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 19:00 மணிக்கு அமுலுக்கு வந்தது. ஒன்ராறியோவின் வின்ட்சரை மிச்சிகனில் உள்ள டெட்ராய்ட் நகருடன் இணைக்கும் அம்பாசிடர் பாலம் ஐந்து நாட்களாக முற்றுகையிடப்பட்டுள்ளது. கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான லொறி ஓட்டுநர்களின் போராட்டங்கள் மற்ற எல்லைக் கடக்கும் இடங்களிலும், ஒட்டாவாவிலும் நடந்து வருகின்றன. வின்ட்சர் நகரம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியா…
-
- 0 replies
- 173 views
-
-
Published By: RAJEEBAN 28 SEP, 2023 | 10:55 AM பிரான்சில் லொறியொன்றில் மறைந்திருந்த ஆறு பெண்கள் பிபிசியின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத குடியேற்றவாசிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். லொறியொன்றின் பின்பகுதியில் இவர்கள் காணப்படுவதை அறிந்த பிபிசி பிரான்ஸ் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்தே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். லொறிக்குள் சிக்குண்டிருந்த அச்சத்துடன் சுவாசிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த நான்கு வியட்நாம் பெண்களும் இரண்டு ஈராக் பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர். லொறிச்சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் ஆள்கடத்தல் கும்பல் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து பிப…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
கரையோரத்தில் உள்ள சாலை ஒன்று கடலுக்குள் விழும் காட்சி [ Wednesday, 23 November 2011, 05:22.44 AM. ] லொஸ் ஏஞ்சல்சில் ஏற்பட்ட அதிகமான மழையினால் சான் பெட்ரோ பகுதியிலுள்ள பாரிய சாலையொன்று சரிந்து பசுபிக் கடலுக்குள் விழுந்துள்ளது. இந்த பாதை இருந்த இடம் தற்போது பாரிய குழியாக உள்ளது. வீழ்ந்த 800 அடிப் பகுதியானது பல மாதங்களாகவே போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியால் பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கைப் பலகைகளும் போடப்பட்டிருந்தன. இந்த சாலையை மீண்டும் சரிசெய்வது சாத்தியமில்லை என்றும் புதிய பாதை வேறு இடத்தில் கட்டப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வின் போது எவரும் காயமடையவில்லை. எனினும் இதனைக் காண்பதற்கு மக்கள் கூ…
-
- 0 replies
- 832 views
-
-
Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 05:24 PM அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸின் போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட பின் அதன் இடதுப்புற இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அவ்விமானம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலேயே அவசரமாகத் தரையிறங்கியது. விமானி அவசரநிலையை அறிவித்ததையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது. தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வா…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி: ஜெயலலிதா அறிவிப்பு 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியின்றி தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட அதிமுக தொண்டர்கள் தயாராக வேண்டும் என்று அக்கட்சி பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு- பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா, லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட தொண்டர்கள் தயாராக வேண்டும். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியின்றி போட்டியிட தயாராவோம். இந்தத் தேர்தலில் ஈடு இணையற்ற வெற்றியைப் பெறுவோம். மத்தியில் அதிகாரத்தின் மூலம் நமது அனைத்து உரிமைகளையும் பெ…
-
- 0 replies
- 323 views
-
-
புதுடில்லி :""வரும் லோக்சபா தேர்தலில், குஜராத் முதல்வர், நரேந்திர மோடி முக்கிய பங்காற்றுவார்,'' என, பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர், ராஜ்நாத் சிங் கூறினார்.இது குறித்து அவர், நேற்று கூறியதாவது:நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தை, அனைத்து துறைகளிலும், மாதிரி மாநிலமாக மாற்றி காட்டியுள்ளார். மாநில நிர்வாகம் மிக சிறப்பாக உள்ளது; அவரின் புகழ், நாடு முழுதும் பரவியுள் ளது. வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்காக அவர் முக்கிய பங்காற்றுவார்; அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.கட்காரியை மீண்டும் கட்சி தலைவராக ஆக்க வேண்டும் என, எங்கள் தாய் அமைப்பான, ஆர்.எஸ். எஸ்.,சில் இருந்து எந்த நிர்பந்தமும் வரவில்லை. கட்காரி தொடர்புடைய இடங்களில், சோதனை நடத்தப்பட்டதை மீடியாக்கள் பெரிதாக்கி காட்…
-
- 0 replies
- 329 views
-
-
லோக்சபா தேர்தல்: அதிமுக விரித்த "ஈழம்' வலை- சிக்கிய கட்சிகள்! உருவாகும் புதிய கூட்டணி! Posted by: Mathi Published: Monday, April 1, 2013, 11:32 [iST] சென்னை: தமிழக சட்டசபையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உலகத் தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதிமுகவுக்கு மட்டுமே தெரியும் அது லோக்சபா தேர்தலுக்கு விரிக்கப்பட்ட 'கூட்டணி' வலை என்பது! லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களத்தில் அணி சேர்க்கையும் ஒரு ஒழுங்குக்கு வந்து கொண்டிருக்கிறது. இலங்கை விவகாரத்தில் இனியும் காங்கிரஸ் கட்சியுடன் கரம் கோர்த்துக் கொண்டிருந்தால் லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்தே ஒருவழியாக ஐக்கிய முற…
-
- 2 replies
- 1k views
-
-
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பிரதான கட்சிகளை கலங்கடித்த ஆம் ஆத்மி கட்சி லோக்சபா தேர்தலுக்கும் தயாராகி வருகிறது. டெல்லியில் இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று கூடி விவாதித்தது. டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக இன்று தேசிய செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியது. 23 பேர் கொண்ட அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அடுத்த 10 முதல் 15 நாட்களில் ஆம் ஆத்மி கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர …
-
- 0 replies
- 333 views
-
-
டெல்லி: லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 122 இடங்களை இழக்க நேரிடும் என்றும் பாஜக அல்லாத இதர கட்சிகள் கடந்த முறையை விட கூடுதலாக 126 இடங்களை பெறக் கூடும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.தற்போதைய ஆகஸ்ட் மாதமே லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தின. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 137 தொகுதிகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 155 தொகுதிகள் கிடைக்குமாம். இந்த இரு கூட்டணிகள் அல்லாத இதர கட்சிகளுக்கு கிடைக்கும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 251 ஆக இருக…
-
- 0 replies
- 275 views
-
-
டெல்லி: தேசிய கடல்சார் பல்கலைக்கழகத்தை கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாற்றுவது தொடர்பான மத்திய அரசின் முடிவைக் கண்டித்து லோக்சபாவில் இடது சாரி எம்.பிக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதுதொடர்பான மசோதாவை மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தாக்கல் செய்ய முயன்றபோது அதைப் பறித்து, பாலுவை தாக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்.பிக்களும், திமுக மத்திய அமைச்சர்களும் கம்யூனிஸ்ட் எம்.பிக்களுடன் கடும் மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய கப்பல்துறை சார்பில், தேசிய கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது. இது முதலில் கொல்கத்தாவில் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இது சென்னைக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட…
-
- 1 reply
- 630 views
-
-
. லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் சேர்க்க வேண்டும்-திமுக அதிரடி டெல்லி: லோக்பால் சட்டத்தின் கீழ் பிரதமர் பதவியையும் கொண்டு வர வேண்டும் என்று திமுக அதிரடியாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடி கொடுக்கவும் அது தயாராகி விட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதி குடும்பத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் கருணாநிதி குடும்பத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது. அது லோக்ப…
-
- 0 replies
- 599 views
-