Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஸ்பெயினைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் பீட்ரிஸ் ஃப்ளாமினி. கொரோனா தொற்று காரணமாக உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது, இவர் தனியாக ஒரு குகைக்குள் வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார். இவரது எண்ணத்தை அறிந்த ஆராய்ச்சியாளர்கள், வெளியுலகத் தொடர்பின்றி ஒரு மனிதரால் வாழ முடிமா, அப்படி வாழும்போது மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை எல்லாம் அறிந்துகொள்ள முடிவெடுத்தனர். 48 வயது ஃப்ளாமினி ஸ்பெயினில் கிரானடா பகுதியில் உள்ள குகைக்குச் சென்றார். 70 மீற்றர் (230 அடி) ஆழமுள்ள குகைக்குள் 2021 நவம்பர் மாதம் நுழைந்தார். குகையின் வாயிலுக்கு வேலி போடப்பட்டது. 500 நாள்களுக்குப் பிறகு 2023 ஏப்ரலில் ஃப்ளாமினி வெளியே வந்தபோது, பெருந்தொற்று காலம் முடிந்து உலகம் இயல்பு நிலைக்குத் தி…

  2. ஸ்டார்ஷிப் பிரமாண்ட ரொக்கெட் முதல் சோதனைப் பயணத்தில் வெடித்துச் சிதறியது Published By: Sethu 21 Apr, 2023 | 10:28 AM அமெரிக்க கோடீஸ்வரர் இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்த, ஸ்டார்ஷிப் எனும் பிரமாண்ட ரொக்கெட் முதல் சோதனைப் பயணத்தில் வெடித்துச் சிதறியது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில கரையோரத்திலிருந்து உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை இந்த ரொக்கெட் ஏவப்பட்டது. விண் ஓடமும் அதன் முதறகட்ட ரொக்கெட் பூஸ்டரும் பிரிய வேண்டிய தருணத்தில் அது நடைபெறவில்லை. ஏவப்பட்டு 4 நிமிடங்களின் பின் இந்த ரொக்கெட் வெடித்துச் சிதறியது. இந்த ரொக்கெட்டில் எவரு…

  3. Published By: SETHU 16 APR, 2023 | 08:23 PM அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த தின வைபவம் ஒன்றின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 20 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் ஒன்றின்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாக்குவாதம் ஒன்றையடுத்து துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்து;ளனர். https://www.virakesari.lk/article/152958

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பிபிசி முண்டோ பதவி,பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் கிழக்கு ஆப்ரிக்காவில் பரந்து விரிந்து கிடக்கும் நாடான சூடான், கடந்த வார இறுதியில் கடுமையான சூழலை எதிர்கொண்டது. அங்கு வன்முறை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த வார இறுதியில் நிகழ்ந்த மோதலில் 180க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், 1800க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சூடான் ராணுவத்துக்கு துணை ராணுவத்துக்கும் (RSF) இடையேயான மோதலே இந்த இறப்புகளுக்கு காரணம் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2019 ஏப்ரலில் உமர் அல் பஷீரின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் தொடங்கிய அரசியல் போராட்டங்கள், பதற…

  5. Published By: SETHU 20 APR, 2023 | 12:48 PM உக்ரேனின் தலைநகர் கியேவ்வின் வான்பரப்பில் காணப்பட்ட பிரகாசமான வெளிச்சம் என்ன என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது. கியேவ் நகரின் வான்பரப்பில் நேற்று புதன்கிழமை இரவு 10.00 மணியளவில் பிரகாசமான பிரகாசமான வெளிச்சமொன்று காணப்பட்டதாக அந்நகர இராணுவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது பூமியை நோக்கி வரும், நாசா நிறுவனத்தின் செய்மதி ஒன்றாக இருக்கலாம் முதலில் கருதப்பட்டது. எனினும், அதை நாசா நிராகரித்துள்ளது. ஓய்வு பெற்ற 300 கிலோகிராம் எடையுடைய தனது செய்மதி ஒன்று பூமிக்குத் திரும்பவிருப்பதாகவும் ஆனால், குறித்த நேரத்தில் அது விண்வெளியில் பூமியை சுற்றிவருவதாகவும் நாசா தெரிவித்துள்…

  6. Published By: SETHU 18 APR, 2023 | 03:40 PM உக்ரேனிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்த நாடுகளின் பட்டியலில் போலந்து, ஹங்கேரியுடன் ஸ்லோவாக்கியாவும் இணைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக போலந்தும் ஹங்கேரியும் கடந்த சனிக்கிழமை அறிவித்தன. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால், உக்ரேனிய ஏற்றுமதிக்கான பாரம்பரிய கருங்கடல் வழிகள் தடைப்பட்டன. அதையடுத்து, உக்ரேனிய உணவுப் பொருட்கள் அதன் அயலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஊடாக ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், விநியோக சிக்கல்கள் …

  7. நலத்திட்ட உதவிகளை வாங்க வந்த கூட்டத்தில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு! ஏமனில் நலத்திட்ட உதவிகளை வாங்க வந்த கூட்டத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்துள்ளனர். ரமலான் மாதத்தை முன்னிட்டு அந்நாட்டு தலைநகர் சனாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனுடன் பணம், உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். சிறிது நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஒருவர் மீது ஒருவர் தடுக்கி விழுந்தனர். இந்த நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழந்ததாக ஹவுதி தலைமையிலான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் எனவும் கூறப…

  8. Published By: SETHU 19 APR, 2023 | 05:54 PM அமெரிக்காவின் பேட்ரியட் வான் பாதுகாப்புப் பொறிமுறையின் முதல் தொகுதி தனக்கு கிடைத்துள்ளதாக உக்ரேன் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. 'உக்ரேனின் அழகிய வானம் இன்று மேலும் பாதுகாப்பானதாக உள்ளது. ஏனெனில் பேட்ரியட் வான் பாதுகாப்புப் பொறிமுறைகள் உக்ரேனை வந்தடைந்துள்ளன' என உக்ரேனிய பாதுகுhப்பு அமைச்சர் ஒலேக்சி ரெஸ்னிஸ்கோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகியன தமது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். உக்ரேனின் வலுசக்தி கட்டமைப்புகள் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்துவதால், உக்ரேனுக்கு பேட்ரியட் வான் பாதுகாப்பு பொறி…

  9. Published By: RAJEEBAN 15 APR, 2023 | 10:12 AM ஜப்பான் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில் குண்டுவீசப்பட்டதாகவும் எனினும் பிரதமர் பாதுகாப்பாக அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டார் எனவும் ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு ஜப்பானில் பிரதமர் பியுமோ கிசிடா கலந்துகொண்ட கூட்டத்தில் சந்தேகநபர் ஒருவர் அவரை இலக்குவைத்து புகைக்குண்டொன்றை வீசியுள்ளார் எனினும் பிரதமர் காயங்களின்றி தப்பியுள்ளார். பாரியசத்தமொன்று கேட்டது பிரதமர் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் உடனடியாக செயற்பட்டார் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் ஜூன் மாதம் முன்னாள் பிரதமர் சின்சோ அபே சுட…

  10. 18 மார்ச் 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மனைவியிடம் மோசமாக நடந்து கொண்டாரா? பட மூலாதாரம்,AFP உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் பெயர்களை பட்டியலிடும்போது அதில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற பெயர் கட்டாயம் இடம்பெறும். 1879, மார்ச் 14ஆம் தேதி பிறந்த ஐன்ஸ்டைன் 1955 ஏப்ரல் 18 இல் உலகில் இருந்து விடைபெற்றார். ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் போலவே, 76 வயதில் மறைந்தார் ஐன்ஸ்டைன். இயற்பியலின் மிகச் சிறந்த விஞ்ஞானியாகக் கருதப்பட்ட ஐன்ஸ்டைனின் தனிப்பட்ட வாழ்க்கை மாறுபட்டது. 2012 ஆம் ஆண்டில் வால்டர் இசாக்ச…

  11. Published By: SETHU 18 APR, 2023 | 11:14 AM உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கேர்சன் பிராந்தியத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விஜயம் செய்துள்ளார். கேர்சன் பிராந்தியத்தில் நடைபெற்ற ரஷ்ய இராணுவத் தளபதிகளுடனான கூட்டத்தில் ஜனாதிபதி புட்டின் பங்குபற்றினார் என ரஷ்ய அரசாங்கம் இன்று (18) தெரிவித்துள்ளது. எனினும் எப்போது இச்சந்திப்பு நடைபெற்றது என்பது தெரிவிக்கப்படவில்லை. கேர்சன் பிராந்தியத்தின் தலைநகரான கேர்சன் உட்பட அப்பிராந்தியத்தின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருந்தன. 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர் ரஷ்யா கைப்பற்றிய முதலாவது உக்ரேனிய மாநகரம் கேர்…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஜ்னீஷ் குமார் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் உமர் சுல்தான் ஒலாமா, கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை பாராட்டினார். யுக்ரேன் நெருக்கடியின் போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அவர் வழிநடத்திய விதத்தால் தாம் ஈர்க்கப்பட்டதாக அவர் கூறினார். “வரலாற்று ரீதியாக உலகம் ஒருமுனை, இருமுனை அல்லது மும்முனையாக இருந்துள்ளது. எனவே நீங்கள் எந்த தரப்பை தேர்ந்தெடுப்பீர்கள்? இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின்பால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவருடைய பல உரை…

  13. உக்ரைனுக்கு எதிரான போர்... நீடிக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம்; சந்தேகம் கிளப்பிய நிபுணர்கள் உக்ரைனுக்கு எதிராக ரஷியா போரிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம் என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது தினத்தந்தி பீஜிங், உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷியா நீண்டகால எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எனினும், உக்ரைன் தனது முயற்சியை நிறுத்தவில்லை. இது ரஷியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற சூழலில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தது. போரின் விளைவால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, விலைவாசி அதிகரிப்பு, உணவு பொருட்கள் பற்றாக்குறை ஆகியவை சர்வதேச அளவில் எதிரொலித்தது. இதனால், வளர…

    • 5 replies
    • 712 views
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,டேலியா வென்ச்சுரா பதவி,பிபிசி உலக சேவை 12 ஏப்ரல் 2023 1432 ஆம் ஆண்டில், மகத்தான கலைப் பாய்ச்சலின் அற்புதமான சான்றுகளை விட்டுச் சென்ற ஒரு படைப்பு வெளியிடப்பட்டது. அது அந்த கலாசார இயக்கம் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நடந்தது. ஃப்ளெமிஷ் சகோதரர்களான ஹூபர்ட், ஜான் வான் ஐக் ஆகியோரால் ஃபிளென்டர்ஸ் கென்ட்டில் (இன்றைய பெல்ஜியம்) உள்ள தேவாலயத்தில் வரையப்பட்ட ஓவியம் தான் அது. இது தோராயமாக 4.4 x 3.5 மீட்டர் அளவு கொண்ட ஒரு பெரிய படைப்பு. 12 ஆயில் பேனல்களுடன் இருந்த இந்த ஓவியம் "தி அடோரேஷன் ஆஃப் தி மிஸ்டிக் லாம்ப் அல்…

  15. Published By: RAJEEBAN 10 APR, 2023 | 10:39 AM அமெரிக்காவின் மிகவும் இரகசியமான புலனாய்வு பாதுகாப்பு தகவல்கள் கசிந்துள்ள நிலையில் இதனை அம்பலப்படுத்தியது யார் என்பது குறித்து அமெரி;க்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உக்ரைனின் வான்பாதுகாப்பு இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பின் செயற்பாடுகள் உட்பட பல முக்கிய பாதுகாப்பு புலனாய்வு தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் இதனை வெளியிட்டது யார் என்பதை கண்டறிவதற்கான தீவிர முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்தவர்களே இந்த விபரங்களை அம்பலப்படுத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உக்ரைன்…

  16. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – மைக் பொம்பியோ அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட இது சந்தர்ப்பம் அல்ல என முன்னாள் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அடுத்த தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும், ட்ரம்ப் பதவியில் இருந்தபோது 2018 முதல் 2021 வரை அமெரிக்க இராஜாங்க செயலாளராக பாம்பியோ பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. …

  17. Published By: RAJEEBAN 15 APR, 2023 | 12:51 PM அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தகவல்களை வெளிநாடுகளிற்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிட்னியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் தேசிய புலானய்வு அமைப்பும் பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் என்ற இந்த நபர் பொன்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சேர்கோ வெளிநாடொன்றிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை புத்திஜீவிகளின் அமைப்பை சேர்ந்தவர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்புகொண்டு சேர்கோ தனது இரண்டு பிரதிநிதிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ற…

  18. அமெரிக்காவின் மிகவும் இரகசியமான போர் ஆவணங்கள் இணையத்தில் வெளியான விவகாரம் - 21 வயது இளைஞன் கைது Published By: Rajeeban 14 Apr, 2023 | 09:40 AM அமெரிக்காவின் மிகவும் இரகசியமான போர் மற்றும் புலனாய்வு ஆவணங்கள் இணையத்தில் கசிந்தமை தொடர்பில் அமெரிக்க விமானப்படையின் தேசிய காவலர் உறுப்பினரான 21 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜக்டெய்செரியா என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் ஆவணங்கள் கசியவிடப்படும் இணைய சட் குழுவின் தலைவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு எதிராக உளவு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோதனாத்தன் ஹெட் & நிகோலஸ் யாங் பதவி,. இருந்துபாங்காக் & சிங்கப்பூரில் இருந்து 12 ஏப்ரல் 2023, 06:03 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சியை எதிர்த்து வரும் மக்கள் மீது அந்த ராணுவ ஆட்சியாளர்கள் நடத்திய விமானத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தாங்கள் 80க்கும் மேற்பட்ட உடல்களை கண்டெடுத்துள்ளதாக கூறும் உயிர் பிழைத்த மக்கள், ஆனால் உயிர்ப் பலி எண்ணிக்கை இதைவிட அதிக…

  20. கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையை சோதனை செய்தது ரஷ்யா Published By: Sethu 12 Apr, 2023 | 11:00 AM கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையொன்றை தான் வெற்றிகரமாக சோதனையிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் கபுஸ்டின் யார் சோதனைத் தளத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. கஸகஸ்தானிலுள்ள சாறி-ஷாகன் பயிற்சி நிலையத்திலுள்ள போலி இலக்கு ஒன்றை ஏவுகணை தாக்கியதகாவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யா அச்சுறுத்தப்பட்டால் தான் அணுவாயுதத்தை பயன்படுத்த முடியும் என உக்ரேன் மீதான ரஷ்யாவின் …

  21. ரஷ்ய தூதரக அதிகாரிகளை அதிரடியாக வெளியேற்றியது நோர்வே அரசாங்கம் உளவு தகவல்களை சேகரித்த குற்றச்சாட்டுக்காக 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நோர்வே அரசாங்கம் அதிரடியாக வெளியேற்றியுள்ளது. உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையேயான போர், கடந்தாண்டு பெப்ரவரி மாதம் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் பல நாடுகள் தங்களது நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கின. மேலும் சில நாடுகள் அவர்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்கவும் மறுத்திருந்தன. இந்த நிலையில், ரஷ்யாவின் அயல் நாடான நோர்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தில் பணிபுரியும் தூதரக அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES 48 நிமிடங்களுக்கு முன்னர் கண்டம் விட்டும் கண்டம் பாயும் வகையிலான புதிய திட எரிபொருள் ஏவுகணையை பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை பரிசோதனை செய்ததிலேயே இதுதான் சக்தி வாய்ந்த ஏவுகணை என்றும் அந்நாடு கூறியுள்ளது. இந்த பரிசோதனையை வெகுவாக பாராட்டியுள்ள வட கொரியாவின் அரசு ஊடக நிறுவனமான கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி (KCNA), சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பொதுவாக, திட எரிபொருள் ஏவுகணைகளை திரவ எரிபொருள் ஏவுகணைகளை விட வேகமாக செலுத்த முடியும். மேலும், அவற்றைக் கண்டறிவதும், இடைமறிப்பதும் கடினமானது. தங்களின் இந்த பரிசோதனை எதிரிகளுக்கு அதீத பயத்தையும் பதற்றத்தைய…

  23. Published By: RAJEEBAN 13 APR, 2023 | 12:54 PM மேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது இல்சா சூறாவளி இன்றிரவு அல்லது நாளை காலை மேற்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லாண்ட் வலல் டவுன்ஸ் பகுதிகளிற்கு இடையில் கரையை கடக்கும் மிகவும் ஆபத்தானதாக மாறலாம் category 5 என எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன. தற்போது தென்பகுதியை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளcategory 4 இல்சா தென்கிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து மேலும் வேகமானதாக மாறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 14 வருடங்களில் மேற்கு அவுஸ்திரேலியாவை தாக்கிய மிகவும் ஆபத்தான சூறாவளியாக இது காணப்படும். மரங்கள் விவசாயம் இயற்கைக்கு பெரும்…

  24. Published By: RAJEEBAN 10 APR, 2023 | 05:07 PM தாய்வானிற்கு அருகில் மூன்றுநாள் போர் ஒத்திகையை மேற்கொண்ட பின்னர் தான் மோதலொன்றிற்கு தயாராக உள்ளதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது. தாய்வான் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் பின்னர் தாய்வானை சுற்றிவளைக்கும் போர் ஒத்திகையில் ஈடுபட்ட சீன இராணுவம் போர் செய்வதற்கு தயார் என தெரிவித்துள்ளது. படையினர் எந்நேரிடமும் போரிட தயாராக உள்ளனர் மேலும் எந்தவகையான தாய்வானின் சுதந்திர முயற்சியையும் வெளிநாட்டு தலையீடுகளையும் முறியடிப்பதற்காக எவ்வேளையிலும் அவர்களால் போரிட முடியும் என சீன இராணுவம் தெரிவித்துள்ளது. கூட்டு வாள் என்ற பெயரில் சீன இராணுவம் இந்த ஒத்திகையை முன்னெடுத்திருந்தது. …

  25. உக்ரைனிற்குள் மேற்குலகின் விசேட படையணிகள் - கசிந்துள்ள அமெரிக்காவின் இராணுவ தகவல்களில் தெரிவிப்பு Published By: Rajeeban 12 Apr, 2023 | 09:23 AM உக்ரைனிற்குள் மேற்குலகின் விசேட படையணிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன சில நாட்களிற்கு முன்னர் இணையத்தில் கசிந்துள்ள அமெரிக்காவின் மிகவும் இரகசியமான பாதுகாப்பு புலனாய்வு தகவல்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பிரிட்டனின் விசேட படைப்பிரிவினர் உட்பட பலநாடுகளின் விசேட படைப்பிரிவினர் உக்ரைனிற்குள் செயற்படுகின்றனர் என இந்த இரகசிய ஆவணங்கள் தெரிவித்துள்ளன. மேற்குலகின் வி…

    • 3 replies
    • 466 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.