Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு! ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு வயதான பெண் உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களை ஆம்புலன்ஸ்கள் அணுக முடியவில்லை எனவும் பலஸ்தீன சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேவேளை உள்ளூர் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு இஸ்ரேலிய கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். பலஸ்தீன போராளிக் குழுக்களான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அவர்கள் இஸ்ரேலிய துருப்புக்களுடன் ஃப்ளாஷ் பாயிண்ட் நகரத்தில் போரிட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

  2. 'எதிர்காலத்துக்காக' 12,000 பேரை கூகுளில் இருந்து நீக்கிய சுந்தர் பிச்சையின் கடிதம் பட மூலாதாரம்,GETTY IMAGES 56 நிமிடங்களுக்கு முன்னர் கூகுளின் செலவுகளை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடனும், புதியத் திட்டங்களுக்கான முன்னெடுப்பிற்காகவும் பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தனது பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வரும் நிறுவனங்களின் பட்டியலில், கூகுள் நிறுவனமும் இப்போது இணைந்துள்ளது. 'முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன்' …

  3. இந்தியா, பாகிஸ்தான் அணுவாயுதப் போரை அமெரிக்கா தடுத்தது: மைக் பொம்பியோ By SETHU 25 JAN, 2023 | 04:22 PM 2019 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணுவாயுதப் போர் முளூம் அபாயம் ஏற்பட்டதாகவும், அமெரிக்கா தலையிட்டு அதனை தடுத்தது எனவும் அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். சிஐஏவின் தலைவராகவும் பணியாற்றிய மைக் பொம்பியோ, தான் எழுதிய "Never give an inch : fighting for the America I love" எனும் நூலில் இதனைத் தெரிவித்துள்ளார். 2019 பெப்ரவரியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பாகிஸ்தானியப் பிராந்தியத்துக்குள் இந்தியப் படையினர் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். காஷ்…

  4. 1400 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் பிறக்க காரணமான முகமது நபியின் யாத்திரை கட்டுரை தகவல் எழுதியவர்,எடிசன் வெய்கா பதவி,பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மதங்களுக்கு எப்போதுமே தமது பிறப்பைப் பற்றிய கதைகள் தேவைப்படுகின்றன. இஸ்லாம் மதத்தைப் பொறுத்தவரையில், அதன் துவக்கபுள்ளி முகமது நபியும் (571 - 632) அவரைப் பின்பற்றும் மக்களும் மெக்காவிலிருந்து மெதினாவிற்கு இடம்பெயர்ந்த ஹிஜ்ரா என்று அழைக்கப்படும் இடம்பெயர்தல் காலகட்டம். இந்த இரண்டு நகரங்களுமே இன்றைய சௌதி அரேபியாவில் இருக்கிறது. மெக்காவிலிருந்து மதினா 500கிமீ தொலைவில் இரு…

  5. ஜப்பான், தென் கொரியா இடையில் கப்பல் மூழ்கியதால் 8 பேரை காணவில்லை By SETHU 25 JAN, 2023 | 10:39 AM ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் கப்பலெனான்று மூழ்கியதால் 8 ஊழியர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கையில் ஜப்பானிய, தென் கொரிய கரையோர காவல் படையினர் இன்று (25) ஈடுபட்டுள்ளனர். இக்கப்பலிலிருந்த 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என ஜப்பானிய கரையோர காவல்படை பேச்சாளர் தெரிவித்தள்ளார். ஹொங்கொங்கில் பதிவு செய்யப்பட்ட ஜின் டியான் (Jin Tian) எனும் சரக்குக் கப்பலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இடர் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன. நிர்க்கதியாக இருந்த ஊழியர்களை மீட்பதற்கு, அப்பகுதியிலிருந்த 3 தனியார் கப்பல்கள்…

  6. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜோ பைடன் வீட்டில் 13 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=169992

  7. உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ வழக்கறிஞர் – அமெரிக்க நீதிமன்றத்தில் அடுத்த மாதம் ஆஜராகிறது உலகின் முதல் ரோபோ வழக்கறிஞர், அமெரிக்க நீதிமன்றத்தில் அடுத்த மாதம் ஆஜராகி வாதாட உள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜோஸ்வா பிரவுடர் (26). இவர் டுநாட்பே (DoNotPay) என்ற சட்ட ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் செயல்படும் இந்த நிறுவனம், உலகில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் ரோபோ வழக்கறிஞரை உருவாக்கி உள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் பெப்ரவரி மாதம் நடைபெறும் முக்கிய வழக்கு விசாரணையில் ரோபோ வழக்கறிஞர் ஆஜராகி, மனுதாரருக்காக வாதாட உள்ளது. எந்த நீதிமன்றம், யாருடைய வழக்கு, எந்த திகதியில் விசாரணை நடைப…

  8. இருமல் மருந்து உயிரிழப்புகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தல் By T. SARANYA 25 JAN, 2023 | 10:26 AM கடந்த ஆண்டு இருமல் மருந்துகளை பயன்படுத்தியதனால் நிகழ்ந்த குழந்தைகள் உயிரிழப்புகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைக்கால் அதிகளவு இருந்ததால், அவற்றை கடந்த 4 மாதங்களில் அருந்திய குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர வைத்துள்ளது. இப்படி 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. இந்தியாவில் அரியானாவை சேர்ந்த மெய்டன்…

  9. புடின் தோல்வியடைந்தால் உலகதிற்கு அது நல்ல நேரம் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்ற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமரை உக்ரைன் அதிபர் வோல்மியுர் ஜெலென்ஸ்கி வரவேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனில் ரஷ்யப் படைகள் பின்வாங்கிய பகுதிகளையும் போரினால் சேதமடைந்த பகுதிகளையும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டதாக கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தோல்வியடைந்தால், அது உக்ரைனுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் நல்ல நேரமாக அமையும் என பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த பயணத்தின் போது கூறியது உலகம் முழுவதும் பலத்த விவாதத்தை உருவ…

    • 2 replies
    • 749 views
  10. கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு: 7பேர் உயிரிழப்பு! கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய தாக்குதல்கள் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே சுமார் 30 மைல் (50 கிமீ) தொலைவில் உள்ள கடற்கரை நகரமான ஹாஃப் மூன் பேவில் இரண்டு தனித்தனி இடங்களில் நிகழ்ந்தன. தாக்குதல் நடத்தியவர் உள்ளூர்வாசியான 67 வயதான ஜாவோ சுன்லி என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டார். உயிரிழந்தவர்களின் முதல் நான்கு பேர் உள்ளூர் நேரப்படி 14:22 மணியளவில் காளான் பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டனர், மற்ற மூன்று பேர் பின்னர் அருகிலுள்ள டிரக்கிங் வணிகத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கான காரணத்தை இதுவரை புலனாய்வாளர்கள்…

  11. புதிய பிரதமர் பதவி ஏற்றார்! நியூசிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற உறுப்பினர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே, நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவிப் ஏற்றார். முன்னதாக, ஜனவரி 19 ஆம் திகதி நியூசிலாந்தின் பிரதமர் பதவில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டென் அறிவித்தார். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும்…

  12. 2022 இல் உக்ரைனைவிட இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் அதிகளவு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்- பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு By RAJEEBAN 25 JAN, 2023 | 11:38 AM 2022 இல் உக்ரைனைவிட இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் அதிகளவு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. 2022 இல் சர்வதேச அளவில் 67 பத்திரிகையாளர்களும் ஊடக பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர் 2021ம் ஆண்டை விட இது அதிகம் (45) என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. 2022 இல் அதிகளவான பத்திரிகையாளர்கள் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே கொல்லப்பட்டுள்ளனர்- கார்டிய…

  13. நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து விலக போவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவிப்பு - காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 51 நிமிடங்களுக்கு முன்னர் குறைந்த வயதில் தலைமை பொறுப்பை அடைந்த பெண் தலைவர் என்று அழைக்கப்படும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார். தலைமைப் பொறுப்புக்கான ஆற்றல் இதற்குமேல் தன்னிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பணியில் இருந்த ஆறு சவாலான ஆண்டுகள் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை விவரிக்கும்போது ஜெசிந்தா சற்று தடுமாறினார். தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பிப்ரவரி 7ஆம் தேதிக்க…

  14. ரஷ்யா: புதின் அறிவித்த கட்டாய ராணுவ சேவையில் இருந்து தப்பிக்க காட்டுக்குள் ஒளிந்துகொண்ட ஐ.டி இளைஞர் கட்டுரை தகவல் எழுதியவர்,பென் டொபையாஸ் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ADAM KALININ கடந்த ஆண்டு செப்டம்பரில் அணி திரட்டல் குறித்த அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்ட போது, ஒரு வாரம் சிந்தித்த ஆடம் கலினின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காட்டிற்குள் குடிபெயர்ந்துவிடலாம் என முடிவெடுத்தார். தகவல் தொழில்நுட்ப வல்லுநரான ஆடம் கலினின், தொடக்கத்தில் இருந்தே போருக்கு எதிராக உள்ளார். தன்னுடைய குடியிருப்பு சுவரில் போர் வேண்டாம் என்ற சுவரொட்டியை ஒட்டியத…

  15. துருக்கி தனது நேட்டோ உறுப்பினர் முயற்சியை ஆதரிக்கும் என்று சுவீடன் எதிர்பார்க்கக்கூடாது: எர்டோகன் துருக்கி தனது நேட்டோ உறுப்பினர் முயற்சியை ஆதரிக்கும் என்று சுவீடன் எதிர்பார்க்கக்கூடாது என்று துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். ஸ்டாக்ஹோம் போராட்டத்தில் குர்ஆன் நகல் எரிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவரது இந்த கருத்து வெளிவந்துள்ளது. நமது நாட்டுத் தூதரகத்தின் முன் இத்தகைய அவப்பெயரை ஏற்படுத்தியவர்கள், தங்கள் விண்ணப்பம் தொடர்பாக இனி எங்களிடம் எந்த நன்மையையும் எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகிறது என அவர் கூறினார். டேனிஷ் கட்சியைச் சேர்ந்த தீவிர வலதுசாரி அரசியல்வாதியால் நடத்தப்பட்ட சமீபத்திய எதிர்ப்பு, பேச்சு சுதந்திரத்தால் பாதுகா…

  16. ஜோஷிமட் போல மண்ணுக்குள் புதைந்து கொண்டிருந்த ஊரை ஒன்றுகூடி காப்பாற்றிய மக்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,நிதின் ஸ்ரீவஸ்தவா பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, சின்ஹா(நடுவில்) மற்றும் இதர மக்கள் ஒன்றிணைைந்து தண்ணீர் பிரச்னை குறித்துத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர் இந்தியாவின் இமயமலை நகரமான ஜோஷிமட், கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், கண்முடித்தனமாக நிலத்தடி நீரை உறிஞ்சியது போன்ற காரணங்களால் புதைந்துகொண்டிருப்பதாகத் தொடர்ந்து செய்திகளில் பார்க்கிறோம். நாட்டின் பல நகரங்கள் இந்தக் கதியை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக வல்லுநர்கள…

  17. வீட்டில் கொடூரமாக இறந்து கிடந்த சிறுமி, பெற்றோர் கைது - என்ன நடந்தது ? படக்குறிப்பு, கெய்லியா லூயிஸ் டிட்ஃபோர்ட் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ’வேல்ஸின் போவிஸ் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் தனது அறையின் படுக்கையிலேயே இறந்து கிடந்தார். அரிய வகை நோயினாலும், உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடலை தூக்கும்போது அங்கே பூச்சிகள் மொய்த்தன, அவரது படுக்கையில் புழுக்கள் ஊறிக் கொண்டிருந்தன. அங்கே தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. உணவு பொட்டலங்கள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தன. பிளாஸ்டிக் பால் பாட்டில்களில் சிறுநீர் இருந்தது. சுவர்களில் மலம் படிந்து கிடந்தது’. தனது மகளின் மரணித…

  18. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு - 9 பேர் உயிரிழப்பு துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை ஆம்புலன்சில் ஏற்றும் காட்சி லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்தபோது அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 10.22 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. நடன அரங்கில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தத…

  19. “உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள்” – ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், இருநாட்டுப் படைகளும் சளைக்காமல் போரிட்டு வருகின்றன. அதே சமயம் இந்த போரில் இருதரப்பிலும் பெரிய அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, ரஷிய அதிபர் புதின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர், உக்ரைன் மீதான போர் நடவடிக்கை கடினமானது ஆனால் தேவையான முடிவு என்று குறிப்பிட்டார். மேலும் அமைதியை ஏற்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் ப…

    • 139 replies
    • 8.6k views
  20. போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின் Jan 19, 2023 07:00AM IST உக்ரைனில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட 16பேர் பலியாகியுள்ள நிலையில், ‘உக்ரைனில் நுழைந்துள்ள ரஷ்யப் படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை’ என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நெருங்கவுள்ளது. இந்தப் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து போயின. அதேவேளையில் இந்தப் போரில் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் போரில் இருந்து பின்வாங்காத ரஷ்…

    • 39 replies
    • 2.5k views
  21. உணவுப் பாதுகாப்பு பிரச்சினைக்கு ரஷ்யாவும் சீனாவுமே காரணம் – அமெரிக்கா குற்றச்சாட்டு! உணவுப் பாதுகாப்பு பிரச்சினை அதிகரிக்க ரஷ்யாவும் சீனாவும் தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. ஆபிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் இவ்விரு நாடுகளே காரணம் எனவும் அமெரிக்க கருவூல அமைச்சர் ஜேனட் யெல்லன் குற்றம் சுமத்தியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாடுகளை நெருக்கும் சீனாவின் கடன் கொள்கை குறித்தும் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார். https://athavannews.com/2023/1321253

    • 2 replies
    • 495 views
  22. தலைநகர் கிளர்ச்சி எதிரொலி – பிரேசில் ராணுவத் தலைவர் பதவி நீக்கம் பிரேசிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட்ட அதிபர் ஜெயீர் போல்சனாரோ தோல்வி அடைந்தார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்காமல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டி வந்தார். இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் இனாசியோ லுடா சில்வா கடந்த 1-ம் தேதி பதவியேற்றார். இதற்கிடையில் லுடா அதிகாரத்தைக் கைப்பற்றுவதை தடுக்க ராணுவ தலையீட்டுக்கு அழைப்பு விடுத்து போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 8-ம் தேதி தலைநகர் பிரேசிலியாவில் திரண்ட போல்சனாரோவின் ஆதரவாளர்கள் பாராளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு மற…

  23. பெரு நாட்டில் தீவிரமடைந்த மக்கள் போராட்டம்; மூடப்பட்ட உலக அதிசயம் தென் அமெரிக்க நாடான பெருவில் மக்கள் போராட்டம் உச்ச அடைந்துள்ளது. அந்நாட்டில் சில மாதங்களாகவே அரசியல் குழப்பம் ஓயாது நிலவி வருகிறது. அதன் விளைவாக 2022 டிசம்பரில் அங்கு ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. ஜனாதிபதியாக இருந்த பெட்ரோ காஸ்டில்லோ, பாராளுமன்றத்தை கலைத்து அவசர நிலையை அறிவிக்க திட்டமிட்டார். அதற்குள்ளாகவே அவரை பாராளுமன்றம் பதவியை விட்டு நீக்கியது. துணை ஜனாதிபதியாக இருந்த டினா பொலுவார்டேஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். பெரு நாட்டின் முதல் பெண் அதிபர்ஜனாதிபதி ஆவார். பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதிய பெட்ரோ மெக்சிகோ நாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவரை பெரு அரசு கைது செய்து சிறையி…

  24. ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அறிவிக்க அமெரிக்கா தீர்மானம்! உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டுவரும் ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அமெரிக்கா அறிவிக்கவுள்ளது. அடுத்த வாரம் இந்த குழு மற்றும் ஆதரவு வலையமைப்பு மீது புதிய தடைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, விதிக்கும். இது, சிரியா, லிபியா மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் மற்ற இடங்களில் செயற்பட்டு வந்த துணை இராணுவக் குழுவிற்கு எதிராக பரந்த பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசாங்கத்தை அனுமதிக்கும். இந்தக்குழு, உக்ரைன் மற்றும் பிற இடங்களில் அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை செய்கிறது என தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி …

    • 39 replies
    • 2.2k views
  25. ரிசி சுனக்கிற்கு காரின் பின் இருக்கையில் இருக்கை பட்டி இன்றி பயணித்த குற்றத்துக்காக தண்டம் விதித்தது பிரித்தானியாவின் லாங்கஷேர் காவல்துறை. பிரித்தானியாவில் தனது அரசாங்கத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு பற்றி ஒரு சிறு வீடியோவை ஓடும் காரில் இருந்து வெளியிட்டே இப்படி சிக்கலில் மாட்டி உள்ளார் ரிசி. ஒரு தண்ட அறிவிப்பு 42 வயதான இலண்டன் ஆணுக்கு வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது லாங்கஷேர் காவல்துறை. ரிசி தவறை முழுமையாக ஏற்று மன்னிப்பு கோருவதுடன், தண்டதையும் செலுத்துவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்பு கொவிட் விதிகளை மீறி விருந்தில் கலந்தமைக்காக பொரிசுடன் சேர்த்து ரிசிக்கும் தண்டம் விதிக்கப்பட்டது நினைவுகூறதக்கது. பிரதமர் சட்டங்களை ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.