Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. போல்சனாரோவின் ஆதரவாளர்களை தண்டிப்பதாக பிரேஸில் ஜனாதிபதி லுலா சபதம்! தலைநகரை உலுக்கிய வன்முறையைத் தொடர்ந்து, பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வன்முறையில் ஈடுபட்ட நாட்டின் ஜனாதிபதி தலைவர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்களை தண்டிப்பதாக சபதம் செய்துள்ளார். வெளியேற்றப்பட்ட தீவிர வலதுசாரி தலைவரின் ஆதரவாளர்களும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர். ஆனால், பல மணி நேர மோதல்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை தலைநகர் பிரேசிலியாவில் உள்ள கட்டடங்களின் கட்டுப்பாடு பொலிஸாருக்;கு கீழ் வந்தது. இதன்பிறகு உச்ச நீதிமன்ற கட்டட சேதத்தை லூலா நேரில் பார்வையிட்டார். சுமார் 200 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட…

  2. சீனாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணத்தில் 90 சதவீதத்தினருக்கு கொவிட் பாதிப்பு! சீனாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஹெனானில் கிட்டத்தட்ட 90 சதவீதம் மக்கள் இப்போது கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். மாகாண அதிகாரி கான் குவான்செங் ஊடக சந்திப்பில், சுமார் 88.5 மில்லியன் மக்கள் தொகையினர் கொவிட் தொற்றால் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், அனைத்து நோய்த்தொற்றுகளும் எப்போது நிகழ்ந்தன என்பதற்கான காலக்கெடுவை கான் குறிப்பிடவில்லை. டிசம்பரில் பூஜ்ஜிய- கொவிட் கொள்கைகளை கைவிட்ட பிறகு, சீனா முன்னோடியில்லாத வகையில் தொற்று பாதிப்பினால் போராடி வருகிறது. முடக்கநிலை…

  3. இரசாயன தாக்குதலை மேற்கொள்ள முயன்ற சந்தேகத்தில் ஜேர்மனியில் ஈரான் பிரஜை கைது By RAJEEBAN 09 JAN, 2023 | 04:04 PM ஜேர்மனியில் இரசாயன தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானை சேர்ந்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மனியின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்கு ஜேர்மனியில் உள்ள நகரொன்றில் தொடர்மாடியில் வைத்து 32 வயது நபரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள ஜேர்மனி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நபர் சையனைட் ரிச்சின் போன்ற இரசாயன பொருட்களை கொள்வனவு செய்துள்ளார் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என வெளிநாட்டு புலனாய்வு அமைப்பொன்று தெரிவித்ததகவலை தொடர்ந்த…

  4. அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் தேர்தலில் குழப்பம்! சொந்த வேட்பாளருக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் வாக்களிப்பு By SETHU 04 JAN, 2023 | 12:54 PM அமெரிக்கப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட குடியரசுக் கட்சியின் தலைவர் கெவின் மெக்கார்த்தி, சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் 3 சுற்று வாக்கெடுப்புகளின் பின்னரும் வெற்றியீட்டுவதற்குத் தவறினார். மெக்கார்த்தியன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பிகள் அவருக்கு எதிராக வாக்களித்தமை இதற்குக் காரணம். கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க இடைக்கால தேர்தல்களையடுத்து, கீழ்சபையான பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மைப் பலத்தை குடியரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. குடியரசு…

  5. மாற்றுத்திறனாளி இளைஞர் சக்கர நாற்காலியில் பாலே நடனமாடி அசத்தல் காணொளிக் குறிப்பு, சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே பாலே நடனமாடி வெற்றியை குவித்து வரும் இளைஞர் 9 ஜனவரி 2023, 03:16 GMT கார் விபத்தில் சிக்கி கால்களை இழந்த இளைஞர், சக்கர நாற்காலியில் இருந்தவாறே பாலே நடமாடி பரிசுகளைக் குவித்து வருகிறார். ஜோ குழந்தையாக இருக்கும்போதே பிரிட்டனின் ராயல் பாலேவில் நடனம் ஆடியுள்ளார். ஆனால் விபத்தில் கால்கள் செயலிழந்த பிறகு அவரால் தொழில்முறை நடனக்கலைஞராகத் தொடர முடியவில்லை. அவர் தனது நடன துணை இஸ்ஸியுடன் ஆடிய நடனத்தினால், ராயல் பாலேவின் நட்சத்திரமாக விளங்குகிறார். பட மூலாதாரம்,GETTY I…

  6. 600க்கும் மேற்பட்ட உக்ரைனியப் படைகள் கொல்லப்பட்ட விவகாரம்: ரஷ்யாவின் கருத்துக்கு உக்ரைன் மறுப்பு! ஒரு தாக்குதலில் நூற்றுக்கணக்கான உக்ரைனியப் படைகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா கூறும் கூற்றை உக்ரைன் மறுத்துள்ளது. ரஷ்யா எந்த ஆதாரமும் இல்லாமல், கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்கில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 600க்கும் மேற்பட்ட உக்ரைனியப் படைகள் கொல்லப்பட்டதாக கூறுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது ரஷ்ய பிரச்சாரத்தின் மற்றொரு பகுதி என உக்ரைனிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் செர்ஹி செரெவதி தெரிவித்தார். உக்ரைனியப் படைகள் தற்காலிகமாக தங்கியிருந்த கட்டடங்கள் மீது நடத்திய தாக்குதலில் 600க்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்…

  7. சீனாவில் கோவிட் பரவல் காரணமாக மருத்துவமனைகளும் தகன இல்லங்களும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், தகன இல்லங்களில் சடலங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சீன சுகாதாரத்துறை கோவிட் இறப்பு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. மக்களின் எதிர்ப்பு காரணமாக கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ள நிலையில், கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் 90 நாட்களில் 800 மில்லியன் பேருக்கு பதிப்பு உறுதி செய்யப்படலாம் என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில், சீனாவில் மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையால் ஸ்தம்பித்துப் போயுள்ளதாகவும்,தகன இல்லங்களில் சடலங்கள் குவிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை,பாதிப்…

  8. ஹிட்லர், நாஜி வரலாறு: மனைவிக்காக 'ஊக்க மருந்து' எடுத்துக் கொண்டாரா ஹிட்லர்? 20 ஜனவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது மனைவி ஈவா பிரானுடன் ஹிட்லர் சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலுக்கு உத்தரவிட்டபோது ஜெர்மனியின் அடாஃப் ஹிட்லர் கொகைன் போதைமருந்துக்கு அடிமையாகி இருந்ததாகவும், அது தவிர 80 விதமான போதைமருந்துகளை பயன்படுத்தி வந்ததாகவும் வரலாற்று ஆசிரியர் கில்ஸ் மில்டன் தனது "When Hitler Took Cocaine" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். காலை உணவுக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே அடால்ஃப் ஹிட…

  9. உலகில் முதன்முறையாக தேனீக்களுக்கு தடுப்பூசி மருந்து 07 JAN, 2023 | 09:48 AM அமெரிக்காவின் பயோடெக் நிறுவனம் தேனீக்களுக்கான தடுப்பூசி மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. தேனீக்கள் தாவரங்களில் நடைபெறும் மகரந்த சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மகரந்த சேர்க்கை நடைபெற்றால் மட்டுமே எந்த ஒரு தாவரமும் இனப்பெருக்கம் செய்து காய், கனிகளை உற்பத்தி செய்ய முடியும். எனவே தேனீக்கள் இல்லாத உலகில் மற்ற எந்த உயிரினங்களும் வாழ முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அமெரிக்காவில் பலர் தங்களது வீடு மற்றும் தோட்டங்களில் தேனீக்கள் வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர். இந்த தேனீக்களை பக்றீரியாக்கள் தாக்குவதால் அவற்றுக்கு ப…

  10. எல் சாப்போவின் மகனை கைது செய்யும் நடவடிக்கையில் 29 பேர் உயிரிழப்பு! மெக்ஸிகன் போதைப்பொருள் மன்னன் எல் சாப்போவின் மகனைக் கைது செய்வதற்கான நடவடிக்கையின் போது குறைந்தது 29பேர் உயிரிழந்ததாக மெக்ஸிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 32 வயதான ஓவிடியோ குஸ்மான்-லோபஸ், குலியாகனில் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் கைது செய்யப்பட்ட போதும் அதற்குப் பின்னரும் 10 படையினரும் 19 சந்தேக நபர்களும் கொல்லப்பட்டனர். ஓவிடியோ குஸ்மான்-லோபஸ் கைது செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த அவர் கும்பல் உறுப்பினர்கள் வீதித் தடுப்புகளை அமைத்து, டசன் கணக்கான வாகனங்களுக்கு தீ வைத்தனர் மற்றும் உள்ளூர் விமான நிலையத்தில் விமானங்களைத் தாக்கினர். மேலும் 35 இராணுவ வீரர்கள் காயமடை…

  11. பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வா வெற்றி By T. Saranya 31 Oct, 2022 | 10:29 AM பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவை முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தோற்கடித்துள்ளார். கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், 2 ஆவது சுற்று வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவும், முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவும் இத்தேர்தலில் போட்டியிட்டனர். லூலா டா சில்வா …

  12. கிம்மின் குழந்தைகளில் ஒருவர் நாட்டை ஆழ்வதற்கான வாய்ப்பு: தென்கொரியா கணிப்பு! வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சமீபத்திய பொது நிகழ்வுகளில் தனது இளம் மகளை உலகிற்கு காண்பிப்பது அவரது குழந்தைகளில் ஒருவர் தலைமைப் பதவியைப் பெறுவார் என்பதை மக்களுக்குக் காட்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம் என தென்கொரியா கூறியுள்ளது. கடந்த சில மாதங்களில், பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளம், வட கொரிய ஆயுத விஞ்ஞானிகளுடன் புகைப்பட அமர்வு மற்றும் ஏவுகணை சேமிப்பு வசதிக்கான சுற்றுப்பயணம் ஆகிய மூன்று நிகழ்வுகளுக்கு கிம் தனது மகளை அழைத்துச் செல்லும் புகைப்படம் எடுக்கப்பட்டது. வட கொரியாவின் அரசு செய்தி ஊடகம் கிம்மின் மகளுக்கு மிகப் பிரியமான குழந்தை என குறிப்பிட்டது. அவருக்கு ஒன்…

  13. உக்ரைனுக்கு கவச கேரியர்கள்- பேட்ரியாட் ஏவுகணை பேட்டரிகளை அனுப்பும் ஜேர்மனி! கவசப் பணியாளர்கள் கேரியர்கள் மற்றும் பேட்ரியாட் ஏவுகணை பேட்டரிகளை உக்ரைனுக்கு வழங்கும் என்று ஜேர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் நேற்று (வியாழக்கிழமை) கலந்துரையாடியதற்கு பிறகு வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியானது. ‘டிசம்பர் பிற்பகுதியில், அமெரிக்கா உக்ரைனுக்கு ஒரு பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை பேட்டரியை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தது. உக்ரைனுக்கு கூடுதல் தேசபக்த வான் பாதுகாப்பு பேட்டரியை வழங்குவதில் ஜேர்மனி அமெரிக்காவுடன் இணையும்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அ…

  14. ஆப்கானில் இளவரசர் ஹரி 25 பேரைக் கொன்றதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல்! இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் அப்பாச்சி ஹெலிகொப்டர் விமானியாக இருந்த காலத்தில் 25 பேரைக் கொன்றதை ஒப்புக்கொண்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் வெளியிடப்படவிருக்கும் ‘ஸ்பேர்’ என்ற அவரது சுயசரிதையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2007-2008 வரையிலான வான்வழித் தாக்குதல்களில் முதலில் ஆப்கானிஸ்தானில் முன்னோக்கி விமானக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய அவர், 2012-2013ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாக்குதல் ஹெலிகொப்டரை ஓட்டினார். 38 வயதான அவர் விமானியாக ஆறு பயணங்களை மேற்கொண்டார், அது மனித உயிர்களை எடுக்க வழிவகுத்தது என்று டெய்லி டெல…

  15. யுக்ரைனில் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் செய்க: புட்டினிடம் துருக்கிய ஜனாதிபதி வலியுறுத்தல் By SETHU 05 JAN, 2023 | 03:47 PM யுக்ரைனில் ரஷ்யா ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை பிரகடனம் செய்யுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் துருக்கிய ஜனாதிபதி தையூப் அர்துவான் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தொலைபேசி மூலம் உரையாடியபோது ஜனாதிபதி தையூப் அர்துவான் இதனைத் தெரிவித்தார் என துருக்கிய ஜனாதிபிதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 'அமைதிக்கும் பேச்சுவார்த்தைகளுக்குமான அழைப்பானது ஒரு தலைபட்சமான யுத்த நிறுத்தம் மற்றும் நீதியான தீர்வுக்கான நோக்குகளினால் உதவப்பட வேண்டும்' என அவர் கூறினார் என துருக்க…

  16. சுற்றுலா பயணிகளுக்காக காத்திருக்கும் 3000 யானைகள் - காணொளி Play video, "சுற்றுலா பயணிகளுக்காக காத்திருக்கும் 3000 யானைகள்(காணொளி)", கால அளவு 2,33 02:33 காணொளிக் குறிப்பு, தாய்லாந்தில் யானைகள் சுற்றுலா தொழில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது 7 மணி நேரங்களுக்கு முன்னர் கோவிட் தொற்றுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்காத நிலையில், தாய்லாந்தில் யானைகள் சுற்றுலா தொழில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. தாய்லாந்தில் உள்ள 3000 யானைகளும் அதன் உரிமையாளர்களும் இயல்பு நிலைக்கு சுற்றுலாத்துறை திரும்பும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தாய்லாந்தின…

  17. பறவைகள் தினம்: பாறு கழுகுகள் இல்லாமல் போனால் உலகம் என்னவாகும்? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 31 அக்டோபர் 2022 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARULAGAM படக்குறிப்பு, கருங் கழுத்துப் பாறுக் கழுகு இறந்த விலங்குகளை உண்டு வாழும் பாறு கழுகுகளை பாதுகாக்க தமிழக அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இது 16 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு கிடைத்திருக்கும் பரிசு என்கிறார்கள் பறவைகள் நல ஆர்வலர்கள். இந்தக் குழு என்ன செய்யப் போகிறது, இந்தப் பறவையைப் பாதுகாப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும்? பாறு கழுகுகளை…

  18. 18,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்குகிறது அமேஸான் By Sethu 05 Jan, 2023 | 09:28 AM அமேஸான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு ஜனவரி 18 ஆம் திகதி முதல் அறிவிக்கப்படும் என ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பில் அமேஸான் பிரதம நிறைவேற்று அதிகரிர அன்டி ஜேசி தெரிவித்துள்ளார். அமேஸானில் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் சுமார் 6 சதவீதமானோர் நீக்கப்படவுள்ளனர். செலவுகளைக் குறைப்பதற்கான ஒரு வழியாக இத்திட்டத்தை அமேஸான் அமுல்படுத்தவுள்ளத…

  19. பிரித்தானியாவில் 18 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கணித பாடத்தினை கட்டாயப்படுத்தும் திட்டத்தை பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இந்த முயற்சியானது எண்ணற்ற தன்மையை சமாளிக்கவும், இளைஞர்களை பணியிடத்திற்கு சிறப்பாக சித்தப்படுத்தவும் முயற்சிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் முதல் உரையில், சுனக் கணிதத்திற்கான திட்டங்களைக் கோடிட்டு காட்டியுள்ளார். இதற்கமைய, 16 முதல் 18 வயது வரையிலான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் புதிய கல்வி திட்டத்திற்கமைய கணித பாடங்களை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி பள்ளிகளில் கணித பாடங்கள் மற்றும் அதன் திறன்களை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.…

  20. அமெரிக்காவில் கடுங்குளிர்; ஐரோப்பாவில் அசாதாரண வெயில் - என்ன நடக்கிறது பூமியில்? பட மூலாதாரம்,EPA 4 ஜனவரி 2023, 06:59 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகளில் ஜனவரி மாதத்திற்கான வெப்பநிலை உச்சத்தை தொட்டுள்ளது. போலாந்தின் வார்சாவில் கடந்த ஞாயிறன்று 18.9C (66F) என்ற அளவில் வெப்பநிலை பதிவானது இதேபோல், ஸ்பெயினின் பில்பாவ் பகுதியில் 25.1C என்ற அளவில் வெப்பநிலை பதிவானது. இது சராசரி வெப்பநிலையை விட 10C அதிகமாகும். அமெரிக்காவில் 60க்கும் மேற்பட்டோர் இறப்புக்கு காரணமான கடுமையான பனிப்புயலை தொடர்ந்து ஐரோப்பாவில் இந்த வானிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவ…

  21. யுக்ரைனின் ஒற்றைத் தாக்குதலில் 89 ரஷ்ய படையினர் பலி: ரஷ்யா அறிவிப்பு! படையினர் தொலைபேசிகளைப் பயன்படுத்தியதாலேயே இழப்பு எனவும் தெரிவிப்பு By SETHU 04 JAN, 2023 | 10:58 AM புத்தாண்டுத் தினத்தில் யுக்ரைன் நடத்திய தாக்குதலொன்றில் தனது படையினர் 89 பேர் உயிரிழந்தனர் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இத்தாக்குதலின்போது, ரஷ்ய படையினர் தமது கைத்தொலைபேசிகளை பயன்படுத்திக் கொண்டிருந்தமையே இந்த இழப்புக்கு காரணம் எனவும் ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யா கைப்பற்றிய யுக்ரைனிய பிராந்தியமான டோனெட்ஸ்கிலுள்ள மெகைவ்கா எனும் சிறிய நகரில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இப்பிராந்…

  22. யூரோ, ஷெங்கன் வலயங்களில் குரோஷியா இன்று இணைந்தது By Sethu 01 Jan, 2023 | 12:51 PM இன்று ஜனவரி 1 ஆம் திகதி முதல் யூரோ வலயத்தில் குரோஷியா இணைந்துள்ளது. இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான நாணயமான யூரோவை தனது நாணய அலகாக இன்று முதல் குரோஷியாவும் பயன்படுத்துவதுடன், கடவுச்சீட்டுகள் அவசியமற்ற ஐரோப்பிய வலயத்திலும் குரோஷியா நுழைந்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இத்திட்டங்கள் அமுலாகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து சுமார் ஒரு தசாப்தத்தின் பின் இவ்வலயங்களில் குரோஷியா இணைந்துள்ளது 'குனா' எனும் தனது முந்தைய நாணயத்துக்கு குரோஷியா விடைகொடுத்துள்ளது. …

  23. ஒடிசாவில் மேலும் ஒரு ரஷ்யர் சடலமாக மீட்பு: 2 வாரங்களில் 3-வது மரணம் By RAJEEBAN 03 JAN, 2023 | 02:44 PM ஒடிசாவில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மற்றொருவரின் உடல், கப்பல் ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவைச் சேர்ந்த மூன்றாவது நபர் இறந்துள்ளதாக ஒடிசா போலீசார் தெரிவித்தனர். வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தில் இருந்து மும்பை நோக்கி எம்.பி அல்ட்னா என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பல் வழியில் ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தது. இந்த நிலையில், செவ்வாய்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் அந்தக் கப்பலில் பணியாளர் ஒருவர் இறந்த …

  24. கிம் ஜாங் உன்: அணு ஏவுகணை, அடுத்த வாரிசு - இவரிடம் இந்த ஆண்டு என்ன எதிர்பார்க்கலாம்? கட்டுரை தகவல் எழுதியவர்,ஜீன் மெக்கன்சி பதவி,பிபிசி செய்தியாளர் 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KCNA இதுவரை இல்லாத அளவு கடந்த 2022ஆம் ஆண்டில் அதிக அளவில் ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது. மேலும் கூறவேண்டும் என்றால், வட கொரியா இதுவரை ஏவிய ஏவுகணைகளில் கால் பங்கு 2022ல் ஏவப்பட்டதுதான். வடகொரியா அணு ஆயுத நாடாக மாறிவிட்டதாக கிம் ஜாங்-உன் அறிவித்த ஆண்டும் அதுதான். 2017ல், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவை கடுமையாக எச்சரித்திருந்ததால் பதற்றம்…

  25. 2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்திற்கு கடினமான காலம் : சர்வதேச நாணய நிதியம் கணிப்பு By DIGITAL DESK 2 02 JAN, 2023 | 10:18 AM 2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்திற்கு கடினமான காலம்தான் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அளித்தப் பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். அவருடைய பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு: 2023ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதாரத்துக்கு சற்று கடினமான காலம் தான். அமெரிக்கா, சீனா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் பொருளாதார செயல்பாடுகள் ஒரே நேரத்தில் நலிவடைந்து வருவதே இதற்குக் காரணம். கடந்த வாரம் நா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.