உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
முன்னாள் இத்தாலிய பிரதமரும், 76 வயது கோடீஸ்வரருமான Silvio Berlusconi, தன்னை விட 50 வயது குறைவாக உள்ள தனது காதலியை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இரண்டுமுறை இத்தாலி நாட்டின் பிரதமராக பணியாற்றிய Silvio Berlusconi ஒரு கோடீஸ்வர தொழிலதிபரும் ஆவார். மனைவியை இழந்த இவருக்கு தற்போது வயது 76. இவர் தன்னை விட 50 வயது குறைவான, அதாவது 27 வயதுள்ள Francesca Pascale என்ற இளம்பெண்ணை காதல் புரிந்து வருகிறார். இந்த பெண்ணும் இவர் மீது தீவிர காதல் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் Silvio Berlusconi தனது திருமணத்தை திடீரென அறிவித்துள்ளார். 26 வயது Francesca Pascale ஐ தான் மிகவும் நேசிப்பதாகவும், அதுபோலவே அவரும் தன் மீது மிகுந்த காதல் வைத்திருப்பதால், இருவரும் திருமணம் செய்…
-
- 0 replies
- 739 views
-
-
அரச அலுவலகங்களுக்கு ஐ.அ.எமிரேட்ஸ் பிரதமரின் திடீர் விஜயம் ; கடமைக்கு சமுகமளிக்காத 9 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு! 2016-08-31 11:46:41 துபாயின் அமீரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட் அல் மக்தூம் துபாயிலுள்ள அரச அலுவலகங்களுக்கு மேற்கொண்ட திடீர் விஜயத்தின்போது, உயர் அதிகாரிகள் பலர் அலுவலங்களில் இல்லாதிருப்பதைக் கண்டறிந்துள்ளார். இதையடுத்து 9 சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட அதிகாரிகள் பலரை பணியலிருந்து ஓய்வு பெறுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். 65 வயதான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உப ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிப்பதுடன்,…
-
- 0 replies
- 343 views
-
-
யூத சமூகத் தலைவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒஸ்திரிய அதிபர் கண்டனம் தெற்கு நகரமான கிராஸில் ஒரு யூத சமூகத் தலைவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒஸ்திரிய அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் மற்றும் பிற மூத்த அரசாங்க அரசியல்வாதிகள் தெரிவித்தனர். மேலும் ஒஸ்திரியாவைச் சுற்றியுள்ள யூத தலங்கள் கடுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். கடந்த வாரத்தில் காழ்ப்புணர்ச்சியால் இரண்டு முறை குறிவைக்கப்பட்ட கிராஸ் யூத சமூகத்தின் தலைவர் எலி ரோசன் மீது ஜெப ஆலயத்தின் வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது ரோசன் தனது காரில் தஞ்சமடைந்தார் என்றும் பின்னர் தாக்குதல் நடத்தியவர் தப்பி ஓடிவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந…
-
- 0 replies
- 342 views
-
-
"தில்லு முல்லு" அமைப்புகளால் பாதுகாக்கப்படுகிறார் ஹிலரி: ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் போட்டியாளரான ஹிலரி, புதிதாக கண்டறியப்பட்ட மின்னஞ்சல்கள் குறித்து எந்த ஒரு வழக்கையும் எதிர் கொள்ளமாட்டார் என்ற எஃப் பி ஐயின் கூற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். மிஷிகனில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியில், எட்டு நாட்களில் எஃப் பி ஐ, ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் மின்னஞ்சல்களை மறு ஆய்வு செய்திருக்க முடியாது என்று கூறிய ட்ரம்ப், மேலும் ஹிலரி "தில்லு முல்லு" அமைப்பால் பாதுகாக்கப்படுகிறார் என்றும் தெரிவித்தார். வருடத்தின் தொடக்கத்தில், ரகசிய தகவல்களை ஹிலரி கையாண்டது குறித்த தங்களது முடிவை எஃப் பி ஐ மாற்றிக் கொள்ளவில்லை என்று நாடாளுமன்றத…
-
- 0 replies
- 304 views
-
-
பிரித்தானிய அரச குடும்பத்தில் கொரோனா – மறைக்கப்பட்ட தகவல்? பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் வில்லியம் இவ்வருட ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகியிருந்ததாக அதிர்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பி.பி.சி ஊடகத்தினை மேற்கோள் காட்டி சர்வதேச செய்தி நிறுவனங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளன. அதன் அடிப்படையில் இளவரசர் வில்லியம் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகியிருந்ததாகவும், அதன் காரணமாக ஏப்ரல் 09ம் திகதி முதல் 16ம் திகதிவரையான காலப்பகுதியில் அவர் எவ்வித பணிகளிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக எவ்விதமான உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியிடப்படாத போதும், ஏப்ரல் மாதத்தின் ஏழு நாட்களில் இளவரசர் வில்லியம் …
-
- 0 replies
- 358 views
-
-
விக்கிலீக்ஸின் அதிர வைக்கும் அம்பலங்கள்! [ நக்கீரன் ] விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வரும் ரகசிய ஆவணங்கள் இதுவரை அமெரிக்க அரசாங்கத்தின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வந்தது என்றால் இப்போது இந்திய அரசியலிலும் அது பல அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல ஆவணங்கள் இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியல் சம்பந்தப்பட்டவை. அவை குறிப்பிடும் பல செய்திகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களிலும் அரசியலிலும் அமெரிக்கா மிகத் தீவிரமான தொடர்பு வைத்திருந்தது அம்பலமாகிறது. உலகெங்கிலுமுள்ள அமெரிக்க தூதரகங்கள் உண்மையில் அமெரிக்காவின் உளவு அமைப்புகளாகத்தான் செயல்பட்டு வருகின்றன. அந்த நாட்டின் ஒவ்வொரு அரசியல் பிரச்சினைகளைப் பற்றி மிகச் சிறிய தகவல்களை…
-
- 0 replies
- 602 views
-
-
ஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்! ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin Laschet) இன்று (சனிக்கிழமை) தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஜேர்மனி அதிபர் அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர், செப்டம்பர் மாதம் கூட்டாட்சித் தேர்தல்களில் அதிபருக்கான வேட்பாளராக அர்மின் லாசெட் போட்டியிடுவார் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஜேர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மேற்கு மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ற்பாலியாவின் (North Rhine-Westphalia) பிரதமரான லாசெட்டுக்கு ஆதரவாக கட்சியின் ஆயிரத்து ஒரு பிரதிநிதிகளில் 521 பேர் வாக்களித்துள்ளனர். இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரீட்ரிக்…
-
- 9 replies
- 712 views
-
-
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பிரியாணிக்கும் தடை விதிக்கவேண்டும் -கமல்ஹாசன் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா டுடே கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகப்பெரிய ரசிகன் நான். இப்போட்டியை வெறுப்பவர்கள் பிரியாணியையும் வெறுக்கவேண்டும் என்று கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளுடன் தொடர்புபடுத்தி குழம்பக்கூடாது. ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளில் அவைகள் காயப்படுத்தப்படுகிறது, அவை உயிரிழக்கவும் நேரிடுகிறது, ஆனால் தமிழகத்தில் காளைகள் தெய்வமாக கருதப்படுகிறது, குடும்பத்தில் ஒருவராக காளைகள் வளர்க்கப்படுகிறது. ஜல்…
-
- 3 replies
- 750 views
-
-
பிரித்தானியாவில் திருமண பந்தத்தில் இணைந்த முதல் முஸ்லிம் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த ரெஹானா கவுசார் (34) மற்றும் சோபிடா கமார்(29) ஆகிய இருவரும் பதிவாகியுள்ளனர். இம்மாத ஆரம்பத்தில் லீட்சிலுள்ள திருமணப்பதிவாளர் அலுவகத்தில் இவர்கள் திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணத்திற்கு பின்னர் அவர்கள் இருவரும் உடனடியாக அங்கேயே புகலிடம் கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது. தங்களது சொந்த நாட்டு திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கூறியே இருவரும் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தானின் லாஹூர் மற்றும் மிர்பூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இவர்கள் இருவருக்கும் தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல்கள்…
-
- 18 replies
- 1.2k views
-
-
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி (28), இவர் இங்கிலாந்து ராணுவத்தின் விமான படையில் பணிபுரிகிறார். இவரை கொலை செய்து விடுவேன் என ஒரு வாலிபர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அவரது பெயர் அஷ்ரப் இஸ்லாம் (30). மிகவும் பரபரப்பான லண்டனில் உள்ள போலீஸ் நிலையம் சென்ற இவர் தனக்கு குடியிருக்க வீடு இல்லை என புகார் செய்தார். அதற்காக இளவரசர் ஹாரியை கொலை செய்வேன் என்றும் மிரட்டினார். உடனே, அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது அஸ்பிரிட்ஷ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை தொடர்ந்து தண்டனைக்காக இவர் காத்திருக்கிறார். குற்றவாளி அஷ்ரப் இஸ்லாம் மார்க் டவுன்லி பகுதியை சேர்ந்தவர். கொலை மிரட்டல் விடுத்த இவருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்…
-
- 0 replies
- 395 views
-
-
இன்று காங்கிரஸ் வென்றிருக்கின்றது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. மீண்டும் பலமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது என்றால் அது சோனியாவின் பங்கோ, மன்மோகன் சிங்கின் பங்கோ, அதைக்காட்டிலும் தயாநிதி மாறனின் பங்களிப்பே முக்கியத்துவம் பெறுகின்றது என்றால் மிகையல்ல. தகவற் தொழிநுட்ப துறையில் தனக்கிருக்கும் செல்வாக்கினைப் பாவித்து ஓர் வாக்களிப்பு மோசடி வேலைமூலம் வெற்றி அடைந்த அரசு என்றால் இன்றைய தேர்தல் வெற்றி பெற்ற அரசாகத்தான் கருதப்படவேண்டும். இன்றைய தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தாலும் தேர்தல் வன்முறையில் இறந்த தங்கவேல் மற்றும் காயமடைந்த அந்த ஆத்மாக்களின் மனச்சாட்சியானது தொட்டுச்சொல்லும். பாவிக்கப்பட்ட இலத்திரனியல் வாக்குப்பதிவுக் கருவிகள் பெரும்பாலும் மாற்றி அ…
-
- 13 replies
- 4.3k views
-
-
கோவிட் தொற்று புரளிக்குப் பிறகு இறந்த தான்சானியா அதிபர் ஜான் மகுஃபூலி பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, 2015ம் ஆண்டு முதல் முதலில் அதிபர் ஆன மகுஃபூலி. தான்சானியா அதிபர் ஜான் மகுஃபூலி (வயது 61) இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார் நாட்டின் துணை அதிப சமியா சுலுஹு ஹாசன். முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக புரளி பரவியது. இவர் கொரோனா வைரஸ் குறித்தே சந்தேகங்களை எழுப்பிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு வாரங்களாக பொது வெளியில் காணப்படாமல் இருந்த நிலையில் டார் எஸ் சலாம் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் இதயக் கோளாறு காரணமாக அவர் இறந்துவிட்டதாக அரசுத் தொலைக்காட்சி…
-
- 0 replies
- 472 views
-
-
தெலுங்கானா கோரிக்கைக்கு முன்பே கூர்க்காலாந்து கோரிக்கை இருந்தது: ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குருங் மேற்கு வங்காள மாநிலத்தை பிரித்து கூர்க்காலாந்து என்ற தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று அங்கு போராட்டங்கள் தொடங்கியுள்ளன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடி வரும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா சார்பில் நேற்று முன்தினம் முதல் 3 நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் பிமல் குருங் கூறுகையில், ‘தெலுங்கானா கோரிக்கைக்கு முன்பே கூர்க்காலாந்து கோரிக்கை இருந்து வருகிறது. எனவே மத்திய அரசு தெலுங்கானா தனி மாநிலத்துக்கு அனுமதி அளித்தால், கூர்க்காலாந்து தனி மாநிலத்துக்கும் அனுமதி அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் கோரிக்கை நிறைவேற…
-
- 6 replies
- 892 views
-
-
பதவியை இழக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றுள்ளது. 4 முறையும் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகுவின் லிக்குட் கட்சி வெற்றிபெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை. அதேபோல் வேறு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைனையடுத்து அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு காபந்து பிரதமராக இருந்து வருகிறார். இந்தநிலையில் திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைக்க முடிவு செய்துள்ளன. இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் வலதுசாரி கட்சி, தீவிர வலதுசாரி கட்சி, மய்ய கட்சி, அரபு ஆதரவு கொண்ட…
-
- 0 replies
- 354 views
-
-
மைக்கல் ஜக்ஸன் ஆவியை பார்த்தார்களாம்..?
-
- 4 replies
- 2.6k views
-
-
பாகிஸ்தானில் 2960 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் 2,960 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆண்டில் இது வரையிலான காலப்பகுதியில் 2,587 சம்பவங்கள் பொலிஸாரிடத்தில் பதிவாகியுள்ளதாக சாஹில் தனது அறிக்கையில் தெரிவித்தார். அதேநேரம், 1,510 சிறுமிகளும் 1,450 சிறுவர்களும் பாலியல் சுரண்டலுக்கு பலியானார்கள் என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களில் உள்ளதென்று தி நியூஸ் இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத்தரவின் பிரகாரம், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை நாளொன்றுக்கு 8 க்கும…
-
- 0 replies
- 267 views
-
-
அந்தஸ்தை இழக்கிறதா ஆங்கிலம்? பிரெஞ்சுக்கு மாறிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption''ஐரோப்பாவில் ஆங்கில மொழி தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது'' இத்தாலியில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் கிளாட் ஜக்னர், "ஐரோப்பாவில் ஆங்கில மொழி தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது" என்று கூறினார். பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனது உரைகளை பிரெஞ்சு மொழியில் வழங்குவதாக அவர் கூறினார். தனது மொழி தெரிவுக்கான காரணத்தை விளக்கிய அவர், "மெதுவாக ஆனால் நிச்சயமாக ஐரோப்பாவில் ஆங்கிலம் முக்கியத்துவத்தை இழந்து வரு…
-
- 0 replies
- 409 views
-
-
தடை செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களை சிரியா பயன்படுத்தியது சட்டவிரோதமானது என கூறி அந்நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முடிவு செய்தது. அதில் ஜனாதிபதி ஒபாமா உறுதியாக இருக்கிறார். சிரியா மீது குறைந்தபட்ச தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் கூறி வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரான்சு, துருக்கி, ஜெர்மனி நாடுகள் ஆதரவு கொடுத்தன. சிரியா விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை திரட்ட அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜேன் கெர்ரி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஐரோப்பிய யூனியன் மந்திரிகளை சந்தித்து பேசினார். இதற்கிடையில் ஐரோப்பிய யூனியனில் இடமபெற்றுள்ள 28 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதில் சிரியா அரசாங்கம் கடந்த 21ந் தே…
-
- 0 replies
- 543 views
-
-
அகதிகள் குறித்து விழிப்புணர்வு: 8 நாடுகளுக்கு நடந்து செல்லும் அமல் இரவு, பகலும் தங்களது பெற்றோர்களுடன் உலகின் ஏதாவது ஒரு முனையில் அகதியாக செல்லும் இளம் குழந்தைகளின் அடையாளமாக மாறியிருக்கிறாள் அமல். குழந்தை அகதிகள் குறித்து உலக நாடுகளுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமல் என்ற சிறுமி வடிவலான பொம்மையை Handspring Puppet Company வடிவமைத்துள்ளது. சுமார் 3.5 மீட்டர் உயரம் கொண்ட அமல், துருக்கி – சிரியா எல்லையிலிருந்து மான்செஸ்டர்வரை நடந்தே பயணம் செய்ய இருக்கிறாள். அதாவது சுமார் 8,000 ஆயிரம் கிலோ மீட்டர். ஜூலை மாதம் தனது பயணத்தை தொடங்கிய அமல் நவம்பர் மாதம் நிறைவு செய்கிறாள். தான் பயணம் செய்யும் 8 நாடுகளின் கலாச்சார விழாக்களிலும்…
-
- 0 replies
- 281 views
-
-
டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. பின்னர் அதில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் இன்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் ராஜ்நாத்தை சந்தித்துப் பேச இருக்கிறார். இந்த சந்திப்பின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்கிறது பாஜக வட்டாரங்கள். ஆனால் தெலுங்கு தேசம் கட்சியினரோ, தெலுங்கானா விவகாரம் தொடர்பாக மட்டுமே பாஜக தலைவர் ராஜ்நாத்தை சந்திரபாபு சந்திக்க இருக்கிறார் என்று கூறுகின்றனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜக பிரதமர் வேட்பாளரா…
-
- 0 replies
- 365 views
-
-
$ டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் சிபிஐ குற்றவாளிகளை கண்டுபிடிக்குமானால் அதில் பிரதமரே முதல் குற்றவாளியாக இருப்பார் என்று நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பிரகாஷ் சந்திர பரக் தெரிவித்துள்ளார். நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐ 14வது எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. அதில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா, முன்னாள் நிலக்கரி துறை செயலர் பிரகாஷ் சந்திர பரக் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரகாஷ் சந்திர பரக், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு விசாரணை இறுதி கட்டத்தை அடைந்தால் அதில் நிலக்கரி சுரங்கங்களுக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் மன்மோகன்சிங்கே முதல் குற்றவாளியாக இருப்பார் என்றார். http://tamil.oneindia.in/n…
-
- 0 replies
- 585 views
-
-
இந்திய பிரதமர்களில், அதிகம் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர், முந்தைய பிரதமர்கள் காட்டிலும் வெளிநாட்டு பயணத்திற்காக அதிக பணம் செலவு செய்தவர் என்ற பெருமைகளை மன்மோகன்சிங் பெற்று, மற்ற பிரதமர்களை காட்டிலும் விஞ்சி நிற்கிறார். இன்னும் சொல்லப்போனால், நாடாளுமன்றம் நடக்கும் போதுதான் மன்மோகன்சிங் அதிகமான அளவில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து இந்தியா டூ டே வெளியிட்டுள்ள சிறப்பு செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமர்ந்த காலம் ( 2004 ) முதல் பிரதமர் மன்மோகன் மொத்தம் 70 பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதற்கென மொத்தம் ரூ. 650 கோடி செலவாகியிருக்கிறது. அதிக பட்சம் இரவு பயணத்தை தவிர்த்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பயணத்தின்ப…
-
- 0 replies
- 397 views
-
-
காதலி தாக்கியதில் உகன்டாவின் முன்னாள் இராணுவத் தளபதி உயிரிழந்துள்ளார் 10 November 09 04:14 pm (BST) உகன்டாவின் முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜேம்ஸ் கஸினி தனது காதலியினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் முன்னாள் இராணுவத் தளபதி கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன. உகன்டாவின் தலைநகர் கம்பலாவில் அமைந்துள்ள கம்ஸியின் காதலி வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரும்புக் கம்பியொன்றினால் கம்ஸியின் தலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கம்ஸியின் காதலி கைது செய்யப்பட்டுள்ளார். வீ…
-
- 0 replies
- 869 views
-
-
கத்தாருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? படத்தின் காப்புரிமைJULIAN HERBERT/GETTY IMAGES ஒரு மாதம் முன்பு ஒரு செவ்வாய்க்கிழமை காலை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கம்போல் தனது போனை எடுத்து, டிவிட்டரை திறந்தார்…. அன்று அவர் டிவீட் செய்த செய்தி என்ன? போலி செய்தி ஊடகங்கள்? "மோசடி ஹிலாரி" அல்லது ஜனநாயக கட்சி?… இல்லை. மத்திய கிழக்கில் இருக்கும் சிறிய நாடு கத்தார். "செளதி அரேபியப் பயணம் நன்றாக இருந்தது… அதற்கு நன்றி சொல்லலாம்" என டிரம்ப் டிவீட் செய்கிறார், "தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பது குறித்து கடுமையான முடிவு எடுக்கப் போவதாக சொன்னார்கள்.. அவர்கள் சொல்லும் அனைத்தும் கத்தாரை சுட்டிக்காட்டுகிறது". கத…
-
- 0 replies
- 628 views
-
-
ஈராக் பிரதமர் வீட்டின் மீது ஆளில்லா விமானத்த தாக்குதல்: ஆறு பேர் காயம்! ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, பாக்தாத்தின் உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் உள்ள தனது வீட்டின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார். தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஈரான் ஆதரவு போராளிகள் ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் பிரதமர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகம், முக்கிய தலைவர்களின் வீடுகள் உள்ளப் பகுதியில், நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் காயமடைந்தன…
-
- 1 reply
- 320 views
-