உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
அல்கைடா சி.ஐ.ஏயால் உருவாக்கப்பட்டதாம் அதே வேளை லிபிய போராளிகள் (?) அமெரிக்காவின் வேர்ஜினியாவில் பயிற்சி அளிக்கப்பட்டவர்களாம்.
-
- 2 replies
- 802 views
-
-
அல்கைடா தலைவர் ஐமான் அல் சவாஹிரியைக் கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவிப்பு ஒசாமாவுக்குப் பின்னர் அல் கைடாவினை வழிநடத்திச் சென்ற அதன் தலைவர் கலாநிதி ஐமான் அல் சவாஹிரியை ட்ரோன் தாக்குதல் ஒன்றின்மூலம் கொன்றுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. நேற்று ஆப்கானிஸ்த்தான் தலைநகர்காபூலில் உள்ள மறைவிடம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் அல்கைடா தலைவர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இத்தாக்குதலை கண்டித்திருக்கும் தலிபான்கள், இது சர்வதேச நியமங்களை மீறி நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் என்றும் கூறியிருக்கிறது. https://edition.cnn.com/2022/08/01/politics/joe-biden-counter-terrorism/index.html
-
- 29 replies
- 2.6k views
- 1 follower
-
-
அல்கைடா அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார் பாகிஸ்தானிலுள்ள முக்கிய தீவிரவாதக் குழு உறுப்பினர் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். அமெரிக்க ஆளில்லா விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் இயாஸ் கஷ்மிரி என்ற தீவிரவாதக் குழு உறுப்பினர் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் உட்பட மேலும் ஒன்பது பேரும் நேற்றிரவு தெற்கு வஸிரிஸ்தான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர். மும்பாயில் நடத்தப்பட்டதைப் போன்ற தாக்குதல்களை வடிவமைக்கும் குழுவிற்கு இயாஸ் தலைமை தாங்கியதாகவும், அல்கைடா அமைப்பல் முக்கிய தளபதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் ப…
-
- 0 replies
- 557 views
-
-
அல்கைதாவின் 'இந்திய கிளை உறுப்பினர்கள்' இருவர் கைது அல்கைதா இயக்கத்தின் இந்தியக் கிளையின் இரண்டு முக்கிய உறுப்பினர்களை கைதுசெய்துள்ளதாக டில்லி பொலிஸார் கூறுகின்றனர். இந்தக் கைதுகள் மூலம் அந்தப் பிராந்தியத்தில் அல்கைதாவின் நடவடிக்கைகளுக்கு கணிசமான பின்னடைவுகள் ஏற்படும் என்று டில்லியின் காவல்துறை கூறுகின்றது. கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் முஹம்மட் ஆசிஃப் என்றும் அவர் இந்திய துணைக் கண்டத்தில் அல்கைதாவின் ஸ்தாபக உறுப்பினர் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆப்கானிஸ்தான்- இந்திய எல்லையில் உள்ள ஆயுததாரிகளின் முகாம்களில் பயிற்சிபெற்றவர் என்றும் செய்திகள் கூறுகின்றன. அல்கைதா இயக்கத்தின் உலகளாவிய தலைவர், இந்தியாவில் ஜிஹாதிய போருக்கு அழைப்புவிடுத்த…
-
- 0 replies
- 477 views
-
-
அல்கொய்தாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தும் - ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை வீரகேசரி நாளேடு 2ஃ10ஃ2009 8:13:30 Pஆ - அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளிப்பதை அனுமதிக்கப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல் தடவையாக திங்கட்கிழமை பத்திரிகையாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பராக் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார். ""அல் கொய்தா போராளிகள் செயற்படுவதை எம்மால் அனுமதிக்க முடியாது. ஆப்கானிஸ்தானிய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மலைப்பிராந்தியங்கள் அல்கொய்தாவின் புகலிடமாக மாறுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது'' என ஒபாமா …
-
- 0 replies
- 680 views
-
-
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த இந்தியா முஜாகிதீன் இயக்க தலைவர் யாசின் பட்கல் திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த யாசின் பட்கல் மற்றும் அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகிய இருவரும் இந்திய நேபாள எல்லையில் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட வந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தற்போது அல்கொய்தா இயக்கத்தை வழிநடத்த வரும் ஜவாகிரியுடன் யாசின் பட்கல் தொடர்பில் இருந்தது வந்தது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அமைதியை குலைக்க அல்கொய்தாவின் உதவியை யாசின் பட்கல் நாடியதை…
-
- 0 replies
- 255 views
-
-
Published By: RAJEEBAN 08 JAN, 2024 | 11:26 AM இஸ்ரேலின்தாக்குதலில் ஏற்கனவே தனது குடும்பத்தவர்கள் பலரையும்இழந்த அல்ஜசீரா ஊடகவியலாளர் வயல்டாவ்டோ இஸ்ரேலின் தாக்குதலில் பத்திரிகையாளரான தனது மகனை இழந்துள்ளார். காசாவின் கான்யூனிசில் இடம்பெற்ற இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் வயல்டாவ்டோவின் மகன் ஹம்சாவும் ( 27) முஸ்தபா டுரையா என்ற ஊடகவியலாளரும் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காசாவின் தென்மேற்கில் உள்ள பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள அல் மவசிக்கு அருகில்உள்ள பகுதியை நோக்கிவாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். குண்டுவீச்சினால் இடம்ப…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின் உயர்மட்ட ஆளுமையை பிரெஞ்சு அரசு கொலை செய்தது 35 Views பிரெஞ்சு அதிபரின் ஒப்புதல் அல்ஜீரியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி வகித்த முக்கிய ஆளுமை ஒருவரைப் பிரெஞ்சு இராணுவ வீரர்கள் கொலைசெய்து பின்னர் அதனை மூடிமறைத்ததாக பிரெஞ்சு அதிபர் மக்ரோன் (Macron) முதல் தடவையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். தமது காலனீய காலத்துக் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பிரெஞ்சு அரசின் கொள்கையில் இது மிக அண்மைக்கால முயற்சியாகும். அலி பூமென்ஜெல்லின் (Ali Boumendjel) நான்கு பேரப்பிள்ளைகளைச் சந்தித்த மக்ரோன், குறிப்பிட்ட சட்டத்தரணி தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதைசெய்யப்பட்டு 1957ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி அல…
-
- 1 reply
- 667 views
-
-
அல்ஜீரிய படையினரின் அதிரடித் தாக்குதிலில் 600 பணயக் கைதிகள் மீட்பு-34 பேர் பலி Published on January 17, 2013-8:51 pm · No Comments அல்ஜீரியாவில் அல்கைதாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதக் குழு ஒன்றினால் வெளிநாட்டவர் உட்பட பலர் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்படடிருந்த பிரிட்டிஸ் பெற்றோலியம் நிறுவனத்தின் மீது அல்ஜீரிய படைகள் இன்று காலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளன. ஏற்கனவே அந்த வாளாகத்தினுள் 650 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளான பிடித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் 600 பேர் இந்த இராணுவ நடடிவடிக்கையில் மீட்கப்பட்டிருப்பதாகவும் அல்ஜீரியாவின் தேசிய ஊடக நிறுவனத்தை மேற்கோள் காட்டி பிரெஞ்சு ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. …
-
- 2 replies
- 935 views
-
-
அல்ஜீரியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் அல்ஜெரி, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா ஃபாஸோவிலிருந்து கிளம்பிய தன் விமானம் ஒன்றுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஓவுவாககடகோவிருந்து கிளம்பிய 50 நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமான நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல்ஜீரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் அல்ஜியர்சிற்குச் சென்று கொண்டிருந்தது. ஏஎச்5017 என்ற இந்த விமானத்தில் 110 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140724_algeria.shtml
-
- 5 replies
- 717 views
-
-
இஸ்லாமிய தீவிரவாதிகள் வெளிநாட்டு பணயக் கைதிகளை பிடித்து வைத்திருக்கும் சஹாரா பாலைவனத்தில் உள்ள எரிவாயு தொழிற்சாலை மீது அல்ஜீரிய இராணுவத்தின் சிறப்புப் படையினர் இறுதித் தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இராணுவம் 11 தீவிரவாதிகளைக் கொன்றதாகவும், ஆனால் அதற்கு முன்னதாக தீவிரவாதிகள் 7 பணயக் கைதிகளைக் கொன்றுவிட்டதாகவும் அல்ஜீரிய அதிகாரிகளை ஆதாரம் காட்டி சில செய்திகள் கூறுகின்றன. ஆனால், இந்தச் தகவல்களை சுதந்திரமாக உறுதி செய்ய முடியவில்லை. இதேவேளை, தீவிரவாதிகளோ அல்லது பணயக் கைதிகளோ எவராவது உயிருடன் இருக்கிறார்களா என்பது போன்ற தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால் முன்னதாக, தான் பிடித்து வைத்திருக்கும் 7 கைதிகளை விடுவிக்க முயற்சிகள் ஏதும் மே…
-
- 1 reply
- 453 views
-
-
அல்ஜீரியா: ராணுவ விமானம் மோதி 257 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அல்ஜீரியாவில் ரணுவ விமானம் மோதியதில் குறைந்தது 257 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 14 அவசர மருத்துவ ஊர்திகள் உள்ளதாகவும், காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் உள்ளூர் தொலைக்காட்சி செய்தி…
-
- 0 replies
- 354 views
-
-
துனீசியா, எகிப்து நாடுகளின் மக்கள் எழுச்சியின் வெற்றியில் அல்ஜீரியா மக்களும் ஆர்பாட்டங்களில் இன்று ஈடுபட்டனர். மே 1 சதுக்கத்தில் கூடிய மக்கள் சனாதிபதி பூர்ரிபிக்கா வெளியேறு என கோஷமிட்டனர். அதிபர் பூர்ரிபிக்கா,President Abdelaziz Bouteflika, 1999 ஆம் ஆண்டிலிருந்து பதவியில் இருப்பவர்.எவ்வளவு மக்கள் பங்குபற்றினர் என்பது பற்றி சரியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், 400 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இருபது வடங்களுக்கு மேலாக அவசரகாலச்சட்டம் அமுலில் உள்ளது. பல ஆர்ப்பாட்டங்கள் தை மாதத்திலும் நடந்தன. http://www.nytimes.com/2011/02/13/world/africa/13algeria.html ==================================================================================== அல்…
-
- 1 reply
- 1k views
-
-
அல்ஜீரியாவில் விமான விபத்து: இராணுவ வீரர்கள் உட்பட 100 பேர் பலி! [Wednesday, 2014-02-12 12:30:45] அல்ஜீரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆம் எல்போவாகி மாகாணத்தில் ராணுவ விமானம் ஒன்று மலையில் மோதி வெடித்து சிதறியது. இதில், விமானத்தில் இருந்த அனைவரும், அதாவது சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விமானத்தில் ராணுவ வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கான்ஸ்டன்டைன்-எல் போவாகி இடையே சென்றபோது தரையில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்துடன் இந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவும், ஆம்புலன்சு…
-
- 1 reply
- 1k views
-
-
அல்ஜீரியாவில்... வரலாறு காணாத காட்டுத்தீக்கு இதுவரை 65பேர் தீக்கிரை! வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் தீவிரமாக பரவிவரும் காட்டுத்தீயில், இதுவரை 65பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு அல்ஜீரியாவின் வனப்பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக எரிந்துவரும் காட்டுத்தீயானது நாட்டின் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான காட்டுத்தீயாகும். இதில் உயிரிழந்தவர்களில் 28 இராணுவ வீரர்களும் அடக்கம். கைபல் பிராந்தியத்தில் பற்றி ஏரியும் காட்டுத்தீயில் மேலும் 12 இராணுவ வீரர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீப்பிடித்த பகுதிகளில் 48 டிகிரி செல்சியஸ் (118 பாரன்ஹீட்டை விட) கடுமையான வெப்ப அலை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில்…
-
- 6 replies
- 725 views
-
-
அல்ஜீரியாவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 20 சிறார்கள் உட்பட 34 அகதிகளின் சடலங்கள் நைஜீரிய பாலைவனத்தில் கண்டுபிடிப்பு அல்ஜீரியா நாட்டுக்கு கடத்தி செல்லப்பட்ட 20 சிறார்கள் உட்பட 34 அகதிகள் நைஜீரிய பாலைவனத்தில் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நைஜீரிய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 20 சிறார்கள் என 34 பேர் கடந்த வாரம் பாலைவனத்தினை கடக்க முயன்று பின்னர் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளது. அதேவேளையில் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவர்கள் மரணம் அடைந்திருக்கல…
-
- 1 reply
- 225 views
-
-
அல்பேட்டா பூர்விகக் குடிமக்களின் தலைவர்மீது குற்றச்சாட்டு மாகாணத்தின் மிகப்பெரிய தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் கையகப்படுத்தப்பட்டதுடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களுள் அல்பேட்டா பூர்விகக் குடிமக்களின் தலைவரும் ஒருவர். ஆனால் இந்த கையகப்படுத்தலானது அல்பேட்டா, ஒன்ராறியோ மற்றும் கியுபெக் பூர்விகக் குடிமக்களின் நலன்களுக்கும் அல்பேட்டாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபைக்குமிடையே பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது. அல்ராவின் கொபிமாவிலுள்ள மொன்ரானா, கான்வேக்கிலுள்ள பூர்விகக் குடிமக்களின் புகையிலைத் தொழிற்சாலை, மொண்றியலுக்கு வெளியேயுள்ள மொவாக் சமூகம் ஆகியன புகையிலை வரிச் சட்டத்தின்கீழ் இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர். அல்பேட்டாவின் போதைப்பொர…
-
- 0 replies
- 658 views
-
-
அல்லாவின் இராணுவமும் சனி துரத்தும் சார்கோசியும். ஒரு பேப்பரிற்காக சாத்திரி பிரான்சில் தேர்தல் இந்த மாதம் நடக்கவுள்ள நிலையில் தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது. இரண்டு தடைவை வலது சாரிக்கட்சி ஆட்சியில் இருந்து விட்டது இரண்டாவது தடைவை வலது சாரிக்கட்சியில் நிக்ககோலா சார்க்கோசி பிரான்சின் அதிபராகியிருந்தார். எனவே இந்தத் தடைவை சோசலிசக்கட்சியிடம் பிரான்ஸ் மக்கள் ஆட்சியை ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே கருத்துக்கணிப்புக்களும் ஊடகசெய்திகளும் வெளியாகிக்கொண்டிருந்தது. சோசலிசக் கட்சியின் வேட்பாளர் françois hollande கருத்துக்கணிப்புக்களில் முதலிடத்தில் இருந்தார். சார்க்கோசி இந்தத் தடைவை போட்டியிடமாட்டார் என்பது போல போக்கு காட்டிக்கொண…
-
- 12 replies
- 1.6k views
-
-
அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை! ‘பக்கத்து வீட்டில் இருக்கும் 2 வயது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை’ என்று என் அம்மா சொன்னதும் முதலில் சிறிது பதட்டமாக இருந்தாலும், லேசான ஜுரம்தான் என்றதும் அமைதியடைந்தேன். ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்கள் குடுமபத்துடன் 4 நாட்களாக திருப்பதிக்கு சென்றிருந்தது நினைவுக்கு வந்தது. ‘ஒரு வேளை தண்ணீர் மாற்றம், பயணம் இவற்றால் குழந்தைக்கு ஜுரம் வந்திருக்கலாம்’ என்று நினைத்தேன். ஆனால் இந்த ஜுரத்திற்கு ஏசுவும் பெருமாளும் தான் காரணம் என்று தெரிய வந்த போது உறைந்து போனேன். பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கூட்டுக் குடும்பமாக சேர்ந்து வாழா விட்டாலும் அனைவரும் ஒரே ஊரில்…
-
- 0 replies
- 1k views
-
-
அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை! – பாகம் 2 இந்த முறை ஊருக்குச் சென்றவுடன் சற்றே ஆர்வம் மேலிட அல்லேலுயா Vs கோவிந்தா சண்டை எந்த நிலையில் இருகிறது என்று விசாரித்தேன். குழந்தைக்கு திருப்பதியில் மொட்டை போடும் பிரச்சனை அல்லேலூயா கோஷ்டியின் ஜபக் கூட்டம், கோவிந்தா கோஷ்டியின் திருட்டு மொட்டை இவற்றில் முடிவடைந்திருந்தது. அப்போது ஆட்டம் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிரா ஆகி விட்டிருந்தது. அந்த முறை இந்த சண்டையில் ஒரு திருப்பம் ஏற்பட்டு, ஒரு அணி வெற்றி பெற்றிருக்கிறது. ‘ஜபக் கூட்டம் நடத்தி சாத்தானை விரட்டினால்தான் வீடு உருப்படும்’ இது அல்லேலுயா கோஷ்டியின் (மனைவி) நிலை. ‘அவர்கள் எக்கேடாவது கெட்டு போகட்டும் ஹிந்து வேண்டுதல்களில் தலையிடக் கூடாது’ என்பது கோ…
-
- 0 replies
- 1.1k views
-
-
காசா மருத்துவமனையின் அடியில் ஹமாசின் கட்டளைப்பீடம் உள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன என அமெரிக்க தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி இதனை தெரிவித்துள்ளார். மருத்துவமனையின் அடியில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த ஹமாஸ் அங்கிருந்தே இஸ்ரேலின் மீது தாக்குதல்களை திட்டமிட்டது என அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் மருத்துவமனையின் கீழ் உள்ள சுரங்கங்களில் இருந்து செயற்படுகின்றது என இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தகவல்களை வெளியிட்டுள்ளமை இதுவே முதல்தடவை. எனினும் ஹமாஸ் இதனை நிராகரித்துள்ளது. அமெரிக்காவிடம் பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட புலனாய்வு தகவல்கள் உள்ளன…
-
- 27 replies
- 2.1k views
- 1 follower
-
-
கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது பல காலத்துக்கு முன்பே கம்பன் சொன்ன உதாரணம். அப்படி ஒரு கலக்கம் தமிழக அரசுக்கு ஏனோ இன்னமும் வரவே இல்லை. 'கடன் அன்பை முறிக்கும்’ என்பதும் பழங்காலத்து மொழி. தமிழ் நாட்டையே இந்தக் கடன், தலைகீழாகக் கவிழ்க்கக் காத்திருக்கிறது. 10 ஆயிரம் கைமாற்றாக வாங்கியவர்கள், திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் பதறிப் போவதும்... வாங்கிய வீட்டுக் கடனை ஒரு மாதம் ஒழுங்காக அடைக்க முடியாமல் போனால், வங்கிக்காரர்களைப் பார்த்துப் பதுங்க ஆரம்பிப்பதும், மத்திய தர வர்க்கத்தின் அன்றாட வழக்கம். கிராமப்புறங்களில், கூட்டுறவுக் கடனை வசூலிப்பதற்காக அதிகாரிகள் வரும்போது, வயல் காடுகளை நோக்கி ஓடிப் போய் விவசாயிகள் பதுங்கிக்கொள்வார்கள். அவர்களைப் பி…
-
- 0 replies
- 872 views
-
-
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் 41 வயதான செவிலியர் ஹீதர் பிரஸ்டீ. இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அங்குள்ள நான்கு மாவட்டங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் இவர் பணியாற்றி வரும் மறுவாழ்வு மையங்களில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து 17க்கும் அதிகமான நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது, அடிக்கடி முதியோர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. இறந்தவர்கள் அனைவரும் 43 முதல் 104 வயதுடைய முதியோர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் சக செவிலியர்கள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் வந்திருக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் செவிலியர் ஹீதர் பிரஸ்டீயி…
-
- 0 replies
- 355 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அரங்கேறியுள்ள அடுத்தடுத்த சம்பவங்களால் அந்நாட்டு பெண்களின் நிலை கேள்விக்குறியாக்கியுள்ளன. "முழு நகரமும் கிட்டத்தட்ட ஒரே இரவில் பெண்களுக்கு எதிராக மாறிவிட்டது போல் தோன்றுகிறது. தெருவில் நடப்பது கூட வித்தியாசமாக உணர வைக்கிறது. வாழ்க்கை இத்தோடு நின்றுவிட்டது போல் நினைக்கிறேன்" - இந்த வார்த்தைகள் 20 ஆண்டுகளுக்கு பின் ஆப்கன் ஆட்சி அரியணையை கைப்பற்றி இருக்கும் தலிபான்கள் குறித்து காபூலைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் உதிர்த்தவை. ஜூலை ஆரம்பத்தில் தொடங்கிய தலிபான்கள் போர் நேற்று காபூலை கைப்பற்றிய பின் முடிவுக்கு வந்தது. தலிபான்களின் இந்த வெற்றி மற்றவர்களை விட குறிப்பாக பெண்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளன. …
-
- 8 replies
- 1.2k views
-
-
தொழிலதிபர்களை மயக்கி ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு-'மிஸஸ் இந்தியா' சிமி குமார் கைது! சென்னை: தொழிலதிபர்களையும், பெரும் பணக்காரர்களையும் மயக்கி அவர்களுடன் ஆபாசமாக இருந்து, படம் பிடித்து அதைக் காட்டி பண் பறித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட மிஸஸ் இந்தியா அழகி சிமி குமார் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கோடீஸ்வரர்களிடம் மோசடியாக திருமணம் செய்து பணம் பறித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தினார் நடிகை பத்மா. வீராசாமி படத்தில் நடித்துள்ள பத்மா, பணக்கார வாலிபர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசாமாக இருந்து, அதை வீடியோவில் படமாக்கி அதைக் காட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்பட்டது. அவரைப் பொறி வைத்து போலீஸார…
-
- 1 reply
- 1.4k views
-