Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் கல்லூரிக்கு மாணவர்கள் துப்பாக்கி எடுத்து வர அனுமதி - டெக்காஸ் மாகாணத்தில் 21 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு துப்பாக்கி கொண்டு செல்லலாம், என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் மலிந்து விட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகுந்து பலரை சுட்டு வீழ்த்தும் கொடுமை நடந்து வருகிறது. எனவே துப்பாக்கி வைத்துக்கொள்ள கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் ம…

  2. ஜப்பான் வெள்ளம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு ஜப்பானில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 34 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டின் யூஷூ தீவின் குமமோடோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குமா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. கனமழை மற்றும் வெள்ளத்தால் பல்வேறு வீடுகள் நீரிழ் முழ்கின. இதனையடுத்து, 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அரசு …

  3. டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, ஆறு பேரில், இரண்டு பேர், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்ற இரண்டு பேர் சட்ட உதவி வேண்டும் என, கோரியுள்ளனர். டில்லியில், கடந்த மாதம், 16ம் தேதி, ஓடும் பஸ்சில்,23 வயது மருத்துவ மாணவியை, ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக தாக்கி, தூக்கி வீசினர். மாணவியின் ஆண் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த மாணவி, சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கோர்ட்டில் ஆஜர் : இந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், நான்கு பேரின், 14 நாள் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் நேற்று, …

    • 3 replies
    • 1.1k views
  4. அதிகரித்து வரும் முஸ்லிம் மக்கள் தொகையை ஈடு செய்ய இந்து தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது. ஆக்ராவில், புதுமணத் தம்பதிகளுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர் தர்பன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான ஒரு வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது. பின்னர் பேசிய தர்பன், "நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் செழிக்கச் செய்ய நாம் நமது சந்ததிகளை பெருக்க வேண்டும். இதைத் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியிருக்கிறார். உதாரணத்துக்கு பிரான்ஸ் நாட்டை எடுத்துக் கொள்வோம், "பிரான்ஸ் நாட்டில் வசிப்பவர்கள் அந்த நாட்டைச் சேர்…

    • 0 replies
    • 481 views
  5. 2014 லோக்சபா தேர்தலில் ராகுல் நரேந்திர மோடி இடையே போட்டி என்பது மீடியாக்கள் உருவாக்கிய மிகப்பெரிய ஜோக் என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தன் சிவிர் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல், துணைத்தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இதையடுத்து எதிர்வரும் லோக்சபா தேர்தலில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தனியார் டி.வி., ஒன்றிற்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளரின் பெயரை அறிவிக்க வில்லை. ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபா உறுப்பினர்களே பிரதமரை தேர்ந்தெடுக்க…

    • 4 replies
    • 619 views
  6. ஐ எஸ் அமைப்பால் குண்டு தயாரிக்க பயிற்றுவிக்கப்படும் குழந்தைகள் யாசிடி பிரதேசங்களை இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு கைப்பற்றியபின், யாசிடி மக்கள் பலவிதமான கொடூரங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான யாசிடி ஆண்கள் வெட்டிக்கொல்லப்பட்டனர். யாசிடி பெண்கள் கடத்தப்பட்டு பலவந்தமாக அடிமைகளாக்கப்பட்டனர். யாசிடி குழந்தைகள் பிடிக்கப்பட்டு கடும்போக்கு மதப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் பிடியில் இருக்கும் நூற்றுக்கணக்கான யாசிடி குழந்தைகளுக்கு பலவந்தமாக குண்டு தயாரிக்கும் பயிற்சியளிக்கப்படுவதாக அவர்களிடமிருந்து தப்பி வந்த சிறுமி பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவ…

  7. சென்னை,ஜன.25 (டி.என்.எஸ்) இன்று (ஜனவரி 25) வெளியாக இருந்த விஸ்வரூபம் படத்திற்கு, இஸ்லாமியர்களின் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து நாளை (சனிக்கிழமை) உயர்நீதிமன்ற நீதிபதிக்கு விஸ்வரூபம் படம் போட்டு காண்பிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளனவா என்பது பற்றி நீதிபதி ஆய்வு செய்வதற்காக இந்த திரையிடல் நடைபெறுகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையரங்குகளில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்திரிக்கும் ஏராளமான காட்சிகள் உள்ளதாகவும், எனவே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இஸ்லாமி…

  8. அலகாபாத்: இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு போன்று பிரபலமானவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என்று விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார். அலகாபாத் வந்த விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் நாட்டில் பிரபலமாக உள்ளார். இந்து சமுதாயத்தின் நலன் தான் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்றார். பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று சில பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் சிங்கால் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் விஸ்வ இந்து பரிசத் தலைவர்களை விரைவில் சந்திக்கப் போவதாக அறிவித்ததையடுத்து ச…

  9. அலகாபாத்: உத்தரபிரதேசத்தின் அலகாபாத் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேம்பாலம் ஒன்று விழுந்து நொறுங்கியதால், பயணிகளிடையே பீதி உண்டாகி கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பலரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகா கும்பமேளாவுக்காக குவிந்த கோடிக்கணக்கான பக்தர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், அலகாபாத்தில் இன்று இரவு இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. http://news.vikatan.com/?nid=12379

  10. இந்தியாவில் இங்கையைச்சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு விசேட இராணுவப்பயிற்சியினை இந்தியாவின் ஜெயப்பூர் மாநிலத்தில் உள்ள இராணுவப் பயிற்சிப்பட்டறையில் இந்திய இராணுவ அதிகாரிகள் வழங்கிவருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரியொருவர் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்துரைக்கும்போது தெரிவித்துள்ளார். இதில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் பங்குபற்றுவதாகவும், சரத்பொன்சேகாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் இதில் கலந்துகொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டில் இலங்கை விமானப்படை வீரர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த பயிற்சிகள் பொதுமக்களுக்கு தெரியவந்ததை அடுத்து, பொய்யான செய்திஒன்றினை இந்திய அரசு கூறி அதாவது உதவி கேட்கப்பட்ட பட்சத்தில் அவ்வுதவி மறுக்கப்பட்டத…

  11. இந்தியா பெருங்கடலில் உருவாகும் 'குட்டி சீனா' அம்­பாந்­தோட்டை துறை­முகம், சீனாவின் கைக்குச் செல்லப் போகி­றது. இந்த மாத நடுப்­ப­கு­தியில், சீன நிறு­வ­னங்­க­ளுடன் இலங்கை அர­சாங்கம் செய்து கொள்­ள­வுள்ள உடன்­பாட்­டுக்கு அமைய, அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் 80 வீத பங்கு உரிமை சீனா நிறு­வ­னத்­துக்கு விற்­கப்­ப­ட­வுள்­ளது. அம்­பாந்­தோட்டை துறை­முகம் மாத்­தி­ர­மன்றி, மத்­தள விமான நிலை­யமும் கூட அவ்­வாறு தான் சீன நிறு­வ­னத்­துக்கு கைமாற்­றப்­ப­ட­வுள்­ளது. அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்தின் உரி­மையை சீன நிறு­வ­னத்­துக்கு கைமாற்­று­வதன் மூலம், கிடைக்கும் 1 பில்­லியன் டொல­ருக்கும் அதி­க­மான நிதியைக் கொண்டு, ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் சீனா­விட…

  12. புதிய திசையில் திரும்புகிறதா அமெரிக்க - சீன உறவு? தென் சீனக் கடலின் அடிப் பரப்பில் ட்ரோன் (ஆளில்லா நீர்மூழ்கி உளவு சாதனம்) ஒன்றை சீனக் கடற்படை கைப்பற்றியுள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வுசெய்யப்பட்ட பிறகு, சீன - அமெரிக்க உறவுகள் புதிய நிலை நோக்கிச் செல்வதை உணர்த்துவதைப் போல, இதையொட்டிய வார்த்தைப் பரிமாற்றங்கள் இருக்கின்றன. இந்த ட்ரோனை அமெரிக்கக் கடற்படை வீரர்கள் தற்செயலாக ஏவினார்களா அல்லது சீனப் பகுதியை உளவு பார்க்கவோ, சீண்டவோ மேற்கொள்ளப்பட்ட முயற்சியா என்று தெரியவில்லை. ட்ரோனைத் திருப்பித் தந்துவிடுவதாக சீனா தெரிவித்தாலும் தன்னுடைய சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக ட்ரம்ப் இதைப் பயன்படுத்திக்கொண்டார். கடலின் அடியில் விழுந்த எங்களுடை…

  13. லண்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றினால் 30 பேருக்கு ஒருவர் வீதம் பாதிப்பு! லண்டனில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றினால் 30 பேருக்கு ஒருவர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். வைரஸின் பரவல் வெகுவாகக் குறைக்கப்படாவிட்டால், அடுத்த இரண்டு வாரங்களில் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாமல் போய்விடுவோம் என்பதுதான் உண்மை’ என அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘நாங்கள் ஒரு பெரிய சம்பவத்தை அறிவிக்கிறோம், ஏனெனில் இந்த வைரஸ் எங்கள் நகரத்திற்கு அச்சுறுத்தல் நெருக்கடி நிலையில் உள்ளது. இப்போது நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், எங்கள் என்ஹெச்எஸ் (தேசிய சுகாதார சேவை) அதிகமாகிவிடக்கூடும். மே…

  14. பச்சிளம் பாலகனை கொடூர கொலையாளியாக்கிய ஐ.எஸ் அமைப்பு : அதிர்ச்சி காணொளி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் சிறைவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை, பாலர் பாடசாலை செல்லும் சிறுவன் ஒருவன் சுட்டுக் கொலை செய்யும் அதிர்ச்சி காணொளி ஒன்றை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் இறுதியில் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள காணொளி தொகுப்புகளில், அவ்வமைப்பை சேர்ந்த சிறுவர் படைகளின் பயிற்சிகள் மற்றும் அவர்களின் பழிவாங்கல் செயற்பாடுகளை படமாக்கி வெளியிட்டுள்ளனர். பாலர் பாடசாலை செல்லும் வயதை ஒத்த பாலகன் தன்னிலை அறியாமல் விளையாட்டு பூங்காவில் கட்டப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதும் 7 இலிருந்து 10 வயது மதிக்கத்தக்க சிறுவ…

  15. 6 ஜூன், 2013 வடக்கு மற்றும் தெற்கு கொரியாக்கள் தம்மிடையே பேச்சுவார்த்தையை நடத்த உடன்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் பல மாதங்களாகத் தொடர்ந்த பதற்றத்தை அடுத்து இந்த நகர்வு வந்திருக்கிறது. இந்த சமரச பேச்சுவாத்தையை பிரேரித்துள்ள வடகொரியா, இருநாடுகளுக்கும் இடையிலான இணைந்த தொழில் வளாகத்தை மீண்டும் திறத்தல், எல்லைக்கு குறுக்கேயான சுற்றுலா நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் ஆகியவை குறித்து பேச்சு நடத்த விரும்புகிறது. வடகொரியா ஒரு செய்மதியை ஏவியமை மற்றும் ஒரு அணுச் சோதனையைச் செய்தமை ஆகியவற்றால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதற்றமடைந்தன. http://www.bbc.co.uk/tamil/global/2013/06/130606_koreatalks.shtml

  16. உலகின் மிகப்பெரிய ஐந்து வெடிகுண்டுகள் படத்தின் காப்புரிமைPUBLIC DOMAIN "வெடிகுண்டுகளின் தாய்" என்று கருதப்படும் வெடிகுண்டை அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் பயன்படுத்தி, உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை பயன்படுத்தப்படாத, தன்னிடமுள்ள அணு ஆயுதமில்லாத மிகப்பெரிய வெடிகுண்டை பயன்படுத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்திருக்கிறது. விமானத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் ஜிபியு-43/பி என்ற மிகப்பெரிய வெடிகுண்டுதான் "அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என்று அறியப்படுகிறது. 2003ல் முதன்முறையாக பரிசோதிக்கப்பட்ட இந்த வெடிகுண்டு, இதுவரை எந்தப் போரிலும் பயன்படுத்தப்படவில்லை. மேலும், எம்.ஒ.ஏ.பி…

  17. ஜெட்டா: சமீபத்தில், சவுதி அரேபியாவில் 46 பேரை பலி வாங்கிய வினோத நோயான ‘மெர்ஸ்' நோய் ஒட்டகங்கள் மூலம் பரவியிருக்கலாம் என முதல்கட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதமாக, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் மர்ம நோய் ஒன்று வேகமாக வரவி வருகின்றது. இந்நோய்க்கு இதுவரை சவுதி அரேபியா, ஜோர்டன், கர்த்தார், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, துனிசியா ஆகியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் 46 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதேபோன்று, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் என்ற கிருமி மூலம் பரவிய மர்ம நோயால் ஆசியாவில் பலர் பலியாயினர். தற்போதும் அதே போன்று பரவி வரும் இந்த விநோத நோய்க்கிருமிக்கு ‘மெர்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நோய்க்கான தடுப்பு மருந்து மற்றும் …

  18. ஜெட் ஏர்வேஸ் விமானி மீது ஹர்பஜன் சிங் பகீர் குற்றச்சாட்டு! சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானி பெர்ன்ட் ஹோஸ்லின் (Bernd Hoesslin) என்பவர் மீது இனவெறி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தற்போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார் ஹர்பஜன் சிங். சமீபத்தில்தான் அவர் 20 ஓவர்கள் போட்டியில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பைலட் என்று சொல்லிக் கொள்ளும் பெர்ன்ட் ஹோஸ்லின் என்பவர், என் சக இந்திய நண்பரை 'இந்தியனே, என் விமானத்தை விட்டு வெளியேறு' என்றார். அவர் இனவெறி ரீதியில் மட…

  19. ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர். இது தாலிபன்களுக்கு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பெரும் வீழ்ச்சியாக கருதப்படுகிறது. ஏற்கனவே ஹேரட், காசினி போன்ற நகரங்களை தாலிபன் கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது கந்தஹார் நகரையும் கைப்பற்றியுள்ளது. இது அனைத்துமே ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள். தாலிபன்கள் இதே வேகத்தில் நாட்டின் தலைநகர் காபூலையும் கைப்பற்றக் கூடும் என்ற அச்சமும் இதனால் எழுந்துள்ளது. பொதுமக்கள் பலரும் வன்முறைக்கு பயந்து காபூல் நகரில் தஞ்சமடைந்துள்ளதால் அங்கு தாக்குதல் நடந்தால் அது பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். …

  20. ஆப்கானில் பெண்களின் கல்விக்கான தலிபான்களின் புதிய கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கான புதிய கட்டுப்பாடுகளை தலிபானின் கல்வி அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். தலிபான்களின் எழுச்சி, 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் நிலவிய கொடூரமான ஆட்சி நிலைக்கு நாடு மீண்டும் திரும்புமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெண்கள் மற்றும் பெண்களுக்கான கல்வி மறுப்பு, பொது வாழ்வில் இருந்து விலக்குதல் ஆகியவையும் அடங்கும். இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தலிபானின் கல்வி அமைச்சர், பெண்கள் முதுகலை பட்டப்படிப்பு உட்பட பல்கலைக்கழகங்களில…

  21. பசுபிக் பெருங்கடல் தீவான சமாவோவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பல கிராமங்கள் முற்றிலும் நாசமாகின. மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். பசுபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு கிழக்கே இருக்கும் இந்த குட்டித் தீவின் தென் கிழக்கே 120 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 8.3 புள்ளிகள் அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மாபெரும் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதில் கடலோரத்தில் உள்ள பகுதிகளில் ராட்சத அலைகள் புகுந்து வீடுகளைத் தரைமட்டமாக்கின. இதில் 100க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை எனத…

  22. கொரோனா வைரஸ்: டெல்டா பிளஸ் புதிய கொரோனா திரிபு அதிவேகமாக பரவக் கூடியதாக இருக்கலாம் மிஷெல் ராபர்ட்ஸ் சுகாதார ஆசிரியர், பிபிசி இணைய செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொரோனா வைரஸ் - மாதிரிப் படம் கொரோனா வைரசின் புதிய திரிபை சிலர் 'டெல்டா பிளஸ்' என்று அழைக்கிறார்கள். அத்திரிபு வழக்கமான டெல்டா திரிபை விட எளிதாக பரவக்கூடியதாக இருக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் தற்போது கூறுகின்றனர். யூகே ஹெல்த் செக்யுரிட்டி ஏஜென்சி எனப்படும் சுகாதார பாதுகாப்பு அமைப்பு, இத்திரிபை 'ஆய்வில் உள்ள திரிபு' என வகைப்படுத…

  23. ஈழத்தில் மறைந்த தமிழர்களுக்காக தியாக தீபங்களை எதிர்வரும் 27ம் நாள் ஏற்றுவீர் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழ.நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இலங்கையில் நடைபெற்றபோரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் வருகிற நவம்பர் 27ஆம் தேதியன்று தமிழகமெங்கும் அமைதி ஊர்வலங்களையும், அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்துமாறு அனைத்துத் தமிழர்களையும் வேண்டிக் கொள்கிறேன். அன்றி…

  24. பாகிஸ்தானிய தெஹ்ரீக்-ஈ-தலிபான் இயக்கத்தின் அடுத்த தலைவராக மௌலான பஸ்ளுள்ளா நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவ் இயக்கத்தின் பேச்சாளர் உறுதிசெய்துள்ளார். மௌலான பஸ்ளுள்ளா 2007 முதல் 2009 ஆம் வரை பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள சுவட் பள்ளத்தாக்கினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். கொடூரமான முறையில் அவர் அப்பகுதியில் ஆட்சி நடத்தி வந்ததுடன் இராணுவம் பின்னர் அப்பகுதியை கைப்பற்றியிருந்தது. தெஹ்ரீக்-ஈ-தலிபான் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஹகிமுல்லா மெசுட் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கொல்லப்பட்டார். இதனையடுத்தே தெஹ்ரீக்-ஈ-தலிபான் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை மௌலான பஸ்ளுள்ளா ஏற்றுக்கொண்டுள்ளார். இதேவேளை மௌலான பஸ்ளுள்ளா த…

  25. ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கலுக்கு, இந்திரா காந்தி அமைதி விருது. டெல்லி: 2013-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதிக்கான விருது ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கலுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி அறக்கட்டளை ஆண்டுதோறும் அமைதி, முன்னேற்றம், உலக ஒற்றுமைக்காக பாடுபடுவோரை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. நடப்பாண்டிற்கான விருதுக்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கல் (வயது 59) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதமர் மன்மேகன் சிங் தலைமையிலான சர்வதேச குழு இவரைத் தேரந்தெடுத்துள்ளது. ஐரோப்பா மற்றும் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது ஜெர்மனை பொருளாதார வளர்ச்சியடைய செய்தமைக்காக ஏஞ்செலா மெர்க்கலுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இதற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.