Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஸ்பெயினில் பொதுவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: ஜேர்மனி, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கட்டுப்பாடுகள்! ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் வியத்தகு உயர்வுக்கு பதிலளிக்கும் விதமாக, வெளியில் கட்டாய முகக்கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அத்துடன், இராணுவத்தின் அதிக ஈடுபாட்டுடன் தடுப்பூசி பூஸ்டர் திட்டத்தை முடுக்கி விடுவதாகவும் அவர் அறிவித்தார். தற்போது ஸ்பெயினில் கொவிட் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓமிக்ரோன் மாறுபாடு ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இப்பகுதி மீண்டும் தொற்றுநோயின் மையத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஸ்பெயினில், இந்த மாறுபாடு கிட்டத்தட்ட பா…

  2. ஒமிக்ரோன் தொற்றால் ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வில் தகவல்! டெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரோன் மாறுபாடு லேசான நோயை ஏற்படுத்தக்கூடும் என ஆரம்ப ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப ஆய்வுகளை கண்டறிந்த பின்னர், கொவிட் தரவைக் கண்காணித்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது. இந்த கண்டுபிடிப்புகள் நல்ல செய்தி என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆனால் ஒரு பெரிய அலை தொற்றுகள் இன்னும் தேசிய சுகாதார சேவையை மூழ்கடிக்கக்கூடும் என்று எச்சரித்தனர். நேற்று (புதன்கிழமை) முதல் முறையாக 100,000க்கும் மேற்பட்ட புதிய தினசரி நோய்த்தொற்றுகளை பிரித்தானியா தெரிவித்துள்ளது. வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் புதிய விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கிலாந்தில் மேலும் தடைகள் எதுவும…

  3. டென்மார்க்கில் குற்றம் புரிந்தால் இனி கொசோவோ நாட்டில் சிறை December 23, 2021 டென்மார்க் அதன் வெளிநாட்டுச் சிறைக் கைதிகளை கோசோவோ நாட்டில் உள்ள சிறைகளுக்கு மாற்றவுள்ளது. அதற்காக இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருக்கிறது.முதற் கட்டமாக 300 சிறை அறைகளை டென்மார்க் கைதிகளுக்கு வழங்குவதற்கு கொசோவோ முன்வந்துள்ளது. அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் சிறைகளுக்கு வாடகையாக டெனிஷ் அரசு வருடாந்தம் 15 மில்லியன் ஈரோக்களைக் வழங்கும். கொசோவோ தலைநகர் பிரிஸ்டினாவில் இருந்து சுமார் 50 கிலோ மீற்றர்கள் தொலைவில் Gjilan என்ற இடத்தில் அமைந்துள்ள சிறைக்குக் கைதிகளை அனுப்புவது எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் இருந்துஆரம்பிக்கப்படும். கைதிகள் டென்மா…

  4. இளவரசி ஹயா: ரூ.5,500 கோடி ஜீவனாம்சம் தர துபாய் ஷேக்குக்கு உத்தரவு - மலைப்பூட்டும் மண முறிவு வழக்கின் தீர்ப்பு பிராங்க் கார்ட்னர் பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூம் மற்றும் அவரது பிரிந்த மனைவி, இளவரசி ஹயா பின்ட் அல்-ஹுசைன் இது பிரிட்டிஷ் சட்ட வரலாற்றில் மிகப்பெரிய மண முறிவு வழக்கு என்று விவரிக்கப்படுகிறது. துபாயின் பெரும் கோடீஸ்வரர் ஆட்சியாளர் மற்றும் அவரிடம் இருந்து பிரிந்து சென்ற மனைவிக்கு ஜீனவானம்சமாக £550 மில்லியன், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் ஐந்தாயிரத்து ஐநூறு கோடிக…

  5. கிறிஸ்துமஸுக்கு முன் இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது – பிரதமர் அறிவிப்பு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அமுல்படுத்தப்படாது என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்ந்தும் நிலைமையை கண்காணித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், தேவை ஏற்பட்டால் கிறிஸ்மஸுக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரலாம் என கூறினார். ஒமிக்ரோன் தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் தடுப்பூசிகளின் தாக்கம் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் மக்கள் கலந்துகொண்டாலும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டார். ஸ்க…

  6. நான்காவது தடுப்பூசியை செலுத்த இஸ்ரேல் தீர்மானம் புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக நான்காவது தடுப்பூசியை வழங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தொற்றுநோய் நிபுணர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நான்காவது தடுப்பூசியை பரிந்துரைத்துள்ளனர். இந்த திட்டத்தை வரவேற்றுள்ள இஸ்ரேல் பிரதமர் நஃப்டலி பென்னட், அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். ஒமிக்ரோன் தொற்று உறுதியான முதலாவது மரணம் எங்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இஸ்ரேலில் குறைந்தது 340 ஒமிக்ரோன் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

  7. லிபிய கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்துக்களில் 160 க்கும் மேற்பட்டோர் பலி கடந்த வாரத்தில் லிபியா கடற்பரப்பில் இரண்டு வெவ்வேறு கப்பல் விபத்துகளில் 160 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஐ.நா குடியேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடும் அகதிகள் சம்பந்தப்பட்ட மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகரமான சம்பவம் இதுவாகும். இந்த இறப்புகளினால் மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் இந்த ஆண்டு நீரில் மூழ்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உயர்வடைந்துள்ளது. சமீபத்திய மாதங்களில் திரிபோலியில் அகதிகள் மீதான அடக்குமுறையை அந் நாட்டு அதிகாரிகள் முடுக்கிவிட்டதால், லிபியாவிலிருந்து ஐரோப்பிய நடுகள…

  8. வேல்ஸில் உள்ள அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் பார்வையாளர்களுக்கு தடை! ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த, எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி முதல் வேல்ஸில் உள்ள அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் பார்வையாளர்கள் தடை செய்யப்படுவார்கள் என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. அனைத்து உட்புற, வெளிப்புற, தொழில்முறை மற்றும் சமூக விளையாட்டு நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும். விளையாட்டு கழகங்கள் மற்றும் அரங்குகளை ஆதரிக்க மூன்று மில்லியன் பவுண்டுகள் பார்வையாளர் விளையாட்டு நிதி கிடைக்கும் என பொருளாதார அமைச்சர் வாகன் கெதிங் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸுக்குப் பிந்தைய விருந்தோம்பல் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பின்…

  9. பிலிப்பைன்ஸ் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்வு! பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தடம் புரட்டிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 239பேர் காயமடைந்திருப்பதாகவும், 52பேர் காணவில்லை என உள்ளூர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் பிலிப்பைன்ஸின் தென் கிழக்கு தீவுகளில் வீசிய சுப்பர் ராய் புயலால் சுமார் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறியுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதனால் கூடுதலாக மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. …

  10. ஹொங்கொங் சட்டசபைத் தேர்தல்: பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றி! ஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய சட்ட மேலவை (LegCo) தேர்தலில், பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த வேட்பாளர்களில் சிலர் மத்திய வாக்கு எண்ணும் மையத்தில் மேடையில் ஆரவாரம் செய்து வெற்றி உறுதி என்று கோஷமிட்டனர். மேலும், கிட்டத்தட்ட அனைத்து இடங்களும் பெய்ஜிங் சார்பு மற்றும் ஸ்தாபன சார்பு வேட்பாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹொங்கொங்கின் தேர்தல் முறையில் சீனா மிகப்பெரிய மாற்றங்களைச் செய்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். அதிகாரிகளின் கூற்றுப்படி, 30.2 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனர். 2016ஆம் ஆண்டு சட்டமன்ற வாக்கெடுப்புடன் ஒப்பிடும…

    • 15 replies
    • 652 views
  11. அட்லாண்டிக் தீவில் இருந்து எலிகளை ஒழிக்கும் திட்டம் தோல்வி ஜோனா ஃபிஷர் சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RSPB படக்குறிப்பு, கௌக் தீவு தெற்கு அட்லாண்டிக்கில் இருக்கும் கௌக் என்ற தீவில் இருந்து எலிகளை ஒழிக்கும் லட்சியத் திட்டத்தின் தலைவர், இந்தத் திட்டம் தோல்வியடைந்ததால் மனமுடைந்து இருப்பதாகக் கூறியுள்ளார். கௌக் தீவில் பொருத்தப்பட்ட ஒரு தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட காட்சிகள், எலிகளை முழுவதுமாக அகற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சியிலிருந்து குறைந்தபட்சம் ஒரு எலியாவது உயிர் பிழைத்திருப்பதைச் சுட்டிகாட்டியுள்ளது. …

  12. பிலிப்பைன்ஸ் சூறாவளி – உயிரிழப்பு எண்ணிக்கை 75 பிலிப்பைன்ஸைத் தாக்கிய புயல் காரணமாக குறைந்தது 75 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 195 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காரணமாக 300,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் இழப்பு குறித்து முழுமையாக அறிவிக்கப்படவில்லை. போஹோலின் தற்போதைய இறப்பு எண்ணிக்கை 49 ஆக உள்ளது, மேலும் குறைந்தது 10 பேரைக் காணவில்லை என்று ஆளுநர் யாப் கூறினார். சனிக்கிழமையன்று, பிலிப்பைன்ஸின் பேரிடர் நிறுவனம், போஹோல் உட்பட இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்ததாகக் கூறியது. இதேவேளை நாட்டின் மிக மோசமாக பாதிக்க…

  13. கதிரியக்க நெக்லஸ் 5ஜி தாக்கத்தில் இருந்து காக்கும் என கூறி விற்பனை: தடை செய்த அதிகாரிகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RIVM படக்குறிப்பு, கதிரியக்கத்திலிருந்து காக்கும் என விற்பனை செய்யப்படும் பதக்கம் 5ஜி இணைய சேவையால் ஏற்படும் கதிரியக்கத்திலிருந்து காக்கும் எனக்கூறி, விற்பனை செய்யப்படும் கழுத்தில் அணியக்கூடிய நெக்லஸ் உள்ளிட்ட பிரத்யேக பொருட்கள் கதிரியக்கத்தன்மை கொண்டவையாக உள்ளன என கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, டச்சு அணு மற்றும் கதிரியக்க பாதுகாப்பு ஆணையம் (ஏஎன்விஎஸ்), தீங்கு விளைவிக்கும் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் 10 பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இ…

  14. ஒமிக்ரோன் மின்னல் வேகத்தில் பரவுகிறது – பிரெஞ்சு பிரதமர் ஐரோப்பாவில் மின்னல் வேகத்தில் ஒமிக்ரோன் மாறுபாடு பரவுகின்ற நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதன் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் எச்சரித்துள்ளார். பிரித்தானியாவில் இருந்து வருபவர்களுக்கு பிரான்ஸ் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் பிரெஞ்சு பிரதமர் இதனை அறிவித்துள்ளார். இந்த பயணக் கட்டுப்பாடுகள் தொற்றுநோய்களின் அலைகளைத் தடுக்க கொண்டுவரப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என பிரெஞ்சு பிரதமர் கூறியுள்ளார். ஒமிக்ரோன் மாறுபாட்டு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன…

  15. பிரேசின் காட்டுத் தீ சம்பவங்கள்: 1.7 கோடி உயிரினங்கள் பலி - மனித குலத்துக்கான எச்சரிக்கை விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CENAP-ICMBIO 2020ஆம் ஆண்டின் இருளுக்கு மத்தியில் பிரேசிலில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு முக்கிய ஆய்வின் கவலை தரும் முடிவை அறிவித்துள்ளனர். பன்டானல் நீர்நிலை பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவத்தால் எத்தனை உயிரினங்கள் அழிந்தன என்பதுதான் அந்த ஆய்வு. இந்த ஆய்வில் ஊர்வன, பறவைகள் மற்றும் ப்ரைமேட் வகை விலங்களுகள் என மொத்தம் 1.7 கோடி உயிரினங்கள் உயிரிழந்துள்ளன என கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும்…

  16. தந்தை நினைவு தினம் “நாட்டு மக்கள் 11 நாட்கள் சிரிக்க தடை” வடகொரியா அவலம் வடகொரியா நாட்டை கடந்த 1948-ம் ஆண்டு கிம் இல் சங் என்பவர் நிறுவினார். 1994 ஆம் ஆண்டு இறந்த இவர் தன்னுடைய கடைசி காலம் வரை வடகொரிய நாட்டை ஆண்டார்.1994-ம் ஆண்டு இவர் இறந்த பிறகு, அவருடைய மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபரானார். இவர் வடகொரியாவை 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.இவர் கடந்த 2011-ம் ஆண்டு இயற்கை எய்தினார். அதைத் தொடர்ந்து, இவருடைய கடைசி மகனான கிம் ஜோங் உன் அதிபராகி, தற்போது வரையில் 3-வது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார். இவரது தலைமையில் வடகொரியா பல அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. அது மட்டுமின்றி உலகில் பல நாடுகளுக்கு வடகொரியாவுடன் பனிப்போர் நிகழ்கிறது. இந…

  17. சூப்பர் புயல் ராய்: பிலிப்பின்ஸை தாக்கியதில் 1.3 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பிலிப்பின்ஸின் டி ஓரோ நகரில் தவிக்கும் மக்களை மீட்கும் கடலோரக் காவல்படையினர். தெற்கு பிலிப்பைன்ஸில் சூப்பர் புயல் ராய் தாக்கிதால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பரவலான வெள்ளம் மற்றும் பாதிப்புகள் பற்றிய எச்சரிக்கைகள் ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்தன. சியார்கோவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தீவில் கரையைக் கடந்தது ராய் புயல் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 175 கிமீ (110 மைல்) வேகத்தில் காற்று வ…

  18. கூகுள் நிறுவனம்: கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நிறுவனத்தின் தடுப்பூசிக் கொள்கைகளுக்கு இணங்கத் தவறுவோர் இறுதியில் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் தெரிவித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. CNBC செய்தி நிறுவனத்துக்கு கிடைத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சுற்றறிக்கையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு வழங்காதவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் வைக்கப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அத…

  19. சிவப்பு பட்டியலில் இருந்து அனைத்து நாடுகளையும் நீக்கியது பிரித்தானியா ! கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மறுபாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே ஆகிய 11 நாடுகள் கடந்த நவம்பர் மாதத்தில் சிவப்பு பட்டியல் இணைக்கப்பட்டன. உலகம் முழுவதும் பரவிவரும் ஒமிக்ரோன் மறுபாடு தற்போது பிரித்தானியாவில் சமூகப் பரவலடைந்து வருவதாக பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் நாடாளுமன்றில் தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளில் இருந்து ஒமிக்ரோன் மறுபாட்டின் ஊடுருவலை கட்டுப்படுத்த பயணத் தடை குறைவான செயற்திறனையே கொ…

  20. ஹெய்டியில் எரிபொருள் தாங்கி வெடித்து சிதறியதால் 60 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு வடக்கு ஹைட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்து சிதறியதால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கெப் ஹெய்டியனில் எரிபொருள் தாங்கி விபத்துக்குள்ளானபோது பொதுமக்கள் அதில் இருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்க முயன்ற போது வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் மூன்று நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என பிரதமர் ஏரியல் ஹென்றி அறிவித்துள்ளார். மேலும் இந்த வெடி…

  21. பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் செர்ஜி டிகானோவ்ஸ்கிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை! சர்ச்சைக்குரிய தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக, மக்கள் போராட்டங்களை நடத்திய பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் செர்ஜி டிகானோவ்ஸ்கிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு நகரமான கோமலில் உள்ள நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக பெலாரஷ்ய அரச செய்தி நிறுவனம் பெல்டா தெரிவித்துள்ளது. மற்ற மூன்று எதிர்க்கட்சி பிரமுகர்களான, மைகோலா ஸ்டாட்கேவிச், இகோர் லோசிக், விளாடிமிர் சைகனோவிச் இதே விசாரணையின் ஒரு பகுதியாக குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார் என பெல்டா தெரிவித…

  22. ஆப்கானில் 10 பேரைக் காவுக்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்காது! ஆப்கானிஸ்தானில் கடந்த ஒகஸ்ட் மாதம் 10 பேரைக் காவுக்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குலுக்கு, எந்த அமெரிக்க துருப்புகளும் அல்லது அதிகாரிகளும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று அமெரிக்கா கூறியுள்ளது. தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, காபூலை விட்டு வெளியேறிய இறுதி நாட்களில் இந்த தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலின் போது, ஒரு தன்னார்வ ஊழியர் மற்றும் ஏழு சிறுவர்கள் உட்பட குடும்பத்தின் ஒன்பது உறுப்பினர்கள் உயிரிழந்தனர். காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஒரு தற்கொலை குண்டுதாரி 170 பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க துருப்புக்களை கொன்ற சில நாட்க…

  23. ஆப்கானிஸ்தான்: தாலிபன் ஆட்சியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் - அரசின் நிலைப்பாடு என்ன? சிகந்தர் கெர்மானி பிபிசி நியூஸ், ஆப்கானிஸ்தான் 13 டிசம்பர் 2021, 04:30 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போதைப் பொருள் பயிரிடும் கோப்புப்படம் தென் ஆப்கானிஸ்தானின் ஊரகப்பகுதியில் அமைந்துள்ள ஓர் சிறிய அறையில் குவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில் போதைப் பொருட்கள் மின்னுகின்றன. அவை, ஏற்றுமதி செய்யத்தக்க தரத்திலான மெத்தாம்பெட்டமின் (methamphetamine). அவை ஆஸ்திரேலியா வரையுள்ள நாடுகளுக்குக் கடத்தப்படும். அதன்பின்னர், இந்த அறையில் சேமித்து வைக்கப…

  24. இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி! இந்த வாரம் முதல் இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தனது புதுப்பிப்பை வெளியிட்ட பிரதமர், தொலைக்காட்சி வாயிலாக அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில், ‘யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம், ஓமிக்ரோனின் அலை வருகிறது. மாத இறுதிக்குள் பூஸ்டர்களை விரும்பும் அனைத்து பெரியவர்களுக்கும் வழங்க புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர்களில் கவனம் செலுத்த சில மருத்துவ சந்திப்புகளும் ஒத்திவைக்கப்படும். புதிய மாறுபாட்டான ஒமிக்ரோன் உடனான போரில் நாங்கள் இப்போது அவசரநிலையை எதிர்கொள…

  25. சுவீடன் கடற்பகுதியில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்து: மீட்புப் பணிகள் தீவிரம்! சுவீடனின் கரையோர பால்டிக் கடலில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகி ஒரு கப்பல் கவிழ்ந்ததை அடுத்து, அப்பகுதியில் பெரிய மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறைந்தது இரண்டு பேர் கப்பலில் இருந்ததாக நம்பப்படுகிறது என்று சுவீடிஷ் கடல்சார் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கவிழ்ந்த கரின் ஹோஜ் என்ற கப்பல் டென்மார்க்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றைய கப்பலுக்கு ஸ்காட் கேரியர் என்று பெயரிடப்பட்டது. விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. தெற்கு சுவீடிஷ் கடற்கரை நகரமான யஸ்டாட் மற்றும் டேனிஷ் தீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.