Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இளவரசர் வில்லியம் மனைவிக்கு சிவப்பு நிற தலையுடன் குழந்தை பிறக்கும் என மரபியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு எந்த வடிவில், என்ன நிறத்தில் குழந்தை பிறக்கும் என்ற கருத்து தற்போது நிலவி வருகிறது. இந்த நிலையில், கேத் மிடில்டனுக்கு பிறக்கும் குழந்தை அதாவது அரச பதவி ஏற்க இருக்கும் 3-வது தலைமுறை வாரிசு சிவப்பு நிற தலை முடியுடன் பிறக்கும் என மரபியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தந்தை வில்லியம் போன்று கரடுமுரடான தலைமுடி மற்றும் குணாதிசயங்கள் போன்றோ, தாயார் கேத் மிடில்டன் போன்று நீண்ட முன் தலையுடன் இதய வடிவிலான முகம் போன்றோ இருக்காது. வில்லியமின் தம்பி ஹாரியை போன்று சிவப்பு நிற தல…

  2. கொரோனா கோர தாண்டவம் தெருக்கள் முழுவதும் இறந்தவர்களின் உடல்கள் சாண்டாகுரூஸ் கொரோனா தாண்டவமாடி வரும் பொலிவியாவில், கடந்த 5 நாட்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட உடல்கள் வீடுகளிலிருந்தும், தெருக்களிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இதுவரை 62 ஆயிரத்து 357 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.2,273 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். அங்கு குறைவான அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களில், கடந்த 5 நாட்களில் தெருக்கள், வீடுகளில் இருந்து மட்டும் 400க்கும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. …

  3. வாஷிங்டன், ஜன. 22- அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நேற்று 2-வது முறையாக பாராளு மன்றத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டார். அதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற ஒபாமாவின் மனைவி மிச்செலி மிகவும் ஸ்டைல் ஆக உடை அணிந்து இருந்தார். கழுத்தை இறுக்கமாக மூடிய நீல நிற கோட் அணிந்து இருந்தார். புதுவிதமான ஷு அணிந்திருந்தார். புதுவிதமான தலை முடி அலங்காரத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் பதவி ஏற்பு விழாவுக்கு முன் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஒபாமா பேசினார். அப்போது, அவர் தனது மனைவி மிச்செலி பற்றி குறிப்பிடுகையில், நான் என் மனைவி மிச்செலியை மிகவும் நேசிக்கிறேன். அவரது புதிய முடி அலங்காரம் அருமையாக உள்…

  4. புதுடில்லி :""வரும் லோக்சபா தேர்தலில், குஜராத் முதல்வர், நரேந்திர மோடி முக்கிய பங்காற்றுவார்,'' என, பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர், ராஜ்நாத் சிங் கூறினார்.இது குறித்து அவர், நேற்று கூறியதாவது:நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தை, அனைத்து துறைகளிலும், மாதிரி மாநிலமாக மாற்றி காட்டியுள்ளார். மாநில நிர்வாகம் மிக சிறப்பாக உள்ளது; அவரின் புகழ், நாடு முழுதும் பரவியுள் ளது. வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்காக அவர் முக்கிய பங்காற்றுவார்; அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.கட்காரியை மீண்டும் கட்சி தலைவராக ஆக்க வேண்டும் என, எங்கள் தாய் அமைப்பான, ஆர்.எஸ். எஸ்.,சில் இருந்து எந்த நிர்பந்தமும் வரவில்லை. கட்காரி தொடர்புடைய இடங்களில், சோதனை நடத்தப்பட்டதை மீடியாக்கள் பெரிதாக்கி காட்…

    • 0 replies
    • 330 views
  5. இன்று இவர்கள் இதனை தலைப்புச்செய்தியாக போட்டிருக்கிறார்கள். இதன் தலையங்கம் விரைவில் சிறீலங்காவில் அமைதி? என்று உள்ளது. இராணுவத்தினர் புலிகளின் இறுதி இருப்பிடமான முல்லைத்தீவை பிடித்தது பற்றி உள்ளது. இதில் குறிப்பிடதக்கது என்வென்றால் எனக்கு தெரிந்து முதல் முறையாக இலங்கை பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச்செய்தியாக போட்டிருக்கிறார்கள். அதையும் விட முக்கியாமனது எமது தலைவரின் படத்தையும் புலிக்கொடியையும் போட்டுள்ளனர். கெட்டதிலும் எமக்கு ஒரு நல்லது. http://www.blick.ch/news/ausland/steht-fri...rz-bevor-110545

  6. ஆஸ்திரேலியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், விக்டோரியா மாகாணத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே போட்டியிடுகிறார். இது குறித்து விக்கிலீக்ஸ் ஆஸ்திரேலிய குடிமக்கள் கூட்டணி (டபிள்யூ.ஏ.சி.ஏ) கட்சி செய்தித் தொடர்பாளர் சாம் கேஸ்ட்ரோ கூறியது: விக்டோரியா மாகாண செனட் உறுப்பினர் பதவிக்கு ஜூலியன் அசாஞ்சே போட்டியிடுகிறார். 10 உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழு, இன்னும் ஒருவாரத்தில் அமைக்கப்படும். அசாஞ்சே தேர்தலில் வெற்றி பெற்று, அவர் அவைக்கு வர இயலாத நிலையில், அவருக்குப் பதில் வேறு நபரை கட்சி பரிந்துரை செய்யும் என்றார். அசாஞ்சேவின் தந்தை, ஜான் ஷிப்டன், புதிதாகத் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என அறிவிக்கப்பட்டு…

    • 0 replies
    • 413 views
  7. காணாமல் போன, ரஷ்ய படை வீரர், 33 ஆண்டுகளுக்கு பின், ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார்.கடந்த, 1979ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் நவீன சோஷலிச அரசை உருவாக்கும் நோக்கத்தில், அங்குள்ள முஜாகிதீன் அமைப்பினருடன் போரிட, ரஷ்யா தனது செஞ்சேனை படைகளை, அந்நாட்டுக்கு அனுப்பியது.தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடந்த போரில், ஆப்கனை சேர்ந்த, 10 லட்சம் பேரும், 15 ஆயிரம் ரஷ்ய வீரர்களும், கொல்லப்பட்டனர். மேலும், 200 ரஷ்ய வீரர்கள் காணாமல் போயினர். இவர்களில், 20 பேர், தாமதமாக நாடு திரும்பினர்.காணாமல் போனவர்களில், சிலர் இறந்து விட்டனர். எனினும், ஒரு சிலர் பற்றி, எந்த தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில், பாக்ரடின் காகிமோவ் என்ற ரஷ்ய வீரர், ஆப்கானிஸ்தானின், ஹெராத் மாகாணத்தில், வசித்து வருவதாக …

  8. 2020 தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் இந்திய பெண்: அமெரிக்க ஊடகங்கள் கணிப்பு கமலா ஹாரிஸ் கடந்த 8-ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலோடு 34 செனட்டர் பதவிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் கலிபோர்னியா செனட்டர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் (51)'அமோக வெற்றி பெற்றார். இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். புதிய அதிபர் ட்ரம்புக்கு எதிராக கமலா ஹாரிஸ் இப்போதே தீவிர பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அமெரிக்கா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ட்ரம்பின் இனவாத கொள்கைகள், தெளிவில்லாத உலகப் பார்வை, தவறான பொருளாதார கொள்கைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து வருக…

  9. சூடான் அதிபருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்ததால், சர்வதேச உதவிக் குழுக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சூடான் அரசு உத்தரவிட்டுள்ளது. சூடான் அதிபராக இருப்பவர் ஒமர் ஹாசன் அல்-பஷீர். சூடானின் மேற்கு பகுதியில் உள்ள தர்பர் பகுதியில், கடந்த 5 ஆண்டுகளாக அடக்குமுறையை கையாண்டார். ராணுவத்தின் மூலம் தாக்குதல் நடத்தியதில் 3 லட்சம் அப்பாவி மக்கள் பலியாயினர். 25 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். இதனால் சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் (ஐ.சி.சி) சூடான் அதிபர் மீது போர் குற்றம், மனிதநேயத்துக்கு எதிரான. குற்றங்கள் சுமத்தப்பட்டது. இதை விசாரித்த ஐசிசி, அதிபர் அல்-பஷீருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள நாடுகளிட…

  10. காங். வேட்பாளர்களை எதிர்த்து தே.மு.தி.க. போட்டி இல்லை விஜயகாந்த் முடிவு விஜயகாந்தின் தே.மு.தி.க. வுக்கு தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் கணிசமான செல்வாக்கு உள்ளது. தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டால் அது தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விஜயகாந்த் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பாரதீய ஜனதா விடுத்த அழைப்பையும் விஜயகாந்த் ஏற்கவில்லை. இந்த நிலையில் தே.மு. தி.க.வை தங்கள் அணிக்கு கொண்டு வர காங்கிரஸ் தலைவர்க…

  11. ஒரு விநாடி தாமதமாக பிறக்கிறது புத்தாண்டு - சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு புது தகவல் இம்முறை புதுவருடம் ஒரு விநாடி தாமதமாக பிறக்க உள்ளதாக சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு தெரிவித்துள்ளது. பூமியின் நாள் ஒன்றிற்கான சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நேரம் கணக்கிடப்படுகிறது. இது வானியல் நேரம் என்று அழைக்கப்படுகிறது. இதேபோல உலகம் முழுவதும் 400 இடங்களில் உள்ள அணு கடிகாரம் மூலம் நேரம் கணக்கிடப்படுகிறது. அது மிகவும் துல்லியமானதாகும். தற்போது அணு கடிகாரத்தை பின்பற்றியே உலகின் நேர வகையீடு நிர்ணயிக்கப்படுகிறது. பூமியானது ஒரே வேகத்தில் சுழல்வது இல்லை. நிலவின் ஈர்ப்புவிசை, புவிநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்கள…

  12. பழங்குடி மக்கள் மீதான சல்வா ஜூதுமின் வன்முறைகளுக்குப் பழிவாங்கவே மே 25-ந் தேதி தாக்குதல் நடத்தப்பட்டதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மே 25-ந் தேதியன்று சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர். இதில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், முன்னாள் மாநில அமைச்சர் மகேந்திர கர்மா, முன்னாள் எம்.எல்.ஏ. உதய் முதியார் உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உள்ளிட்ட 36 பேர் படுகாயமடைந்தனர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதான மாவோயிஸ்டுகளின் இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்நிலையில் மாவோயிஸ்டுகளின் தண்டகாருண்யா செய்தி…

  13. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற நாடாளுமன்றம் ஒப்புதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற (பிரெக்ஸிட்) அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் உட்பட 28 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் இருந்த வெளியேறுவது தொடர்பாக பிரிட்டனில் கடந்த ஜூனில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 52 சதவீத பிரிட்டிஷ் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். இந்த விவகாரத்தால் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகி புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றார். இந்நிலையில் பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி ஜினா மில்லர் என்ற பெண் தொழிலதிபர் பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசார…

  14. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீது ஏவுகணை தாக்குதல் ஜெட்டா வுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் ம் ஈது ஏமனின் ஹவுத்தி படைகள் ஏவுகணையை வீசியதாக ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார், ஆனால் சவுதி அதிகாரிகளிடமிருந்து உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை.இத்தாக்குதலில் அரம்கோவில் உள்ள ஒரு நிலையம் வெடித்து சிதறியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரியா டுவிட்டர் பதிவில், ஏவுகணையைப் பயன்படுத்தி விடியற்காலையில் இந்த தாக்குதல் நடந்தது என்றும், அதன் இலக்கை விரிவாக விவரிக்காமல் தாக்கி…

  15. தொல்.திருமா, தமிழ்நாட்டில் நடத்திய "இலங்கை தமிழ் மக்களுக்கான அமைதி பேரணி" மாபெரும் வெற்றியாக அமைந்தது போலும், திருமா அவர்கள் தான் இன்னும் குரல் குடுப்பவர் போலும், சித்தரித்துள்ளது "தினகரன்" நாளேடு!!! வெக்கம், வேதனை... அநீதி இழைத்த கருணாநிதி கூட்டில் இருக்கும் இவர், அவரை போல தான் இருப்பார்!! தன்னிடம் நிறைய கோமாலிகள் உண்டு (vote bank) என்று சொல்லி இருக்கிறார். இங்க வெறும் ஜாதி அரசியல் செய்யும், இவரெல்லாம் தலைவனாம்!!! எந்தன் பாசமிகு தமிழ் மக்களே, இந்த கேவலமான அரசியல் செயல்களை கண்டு கொள்ளாமல், நம் விடுதலைக்கு நாமே போராடுவோம் என்று சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிரேன்...

  16. ரொறொன்ரோ பெரும்பாக (Greater Toronto) பிரதேசத்திலும், ரொறொன்ரோ நகரத்தின் பல பாகங்களிலும் நேற்றையதினம் மாலை 5 மணிமுதல் பொழிந்த கனமழையினால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளத்தினால், சுரங்க வழி ரயில் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்க ப்பட்டுள்ளது. மிசிசாகாவின் 80சதவீத பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ரொறொன்ரோ முழுவதும் மூன்று இலட்சம் பேர் மின்சார வசதிகளை இழந்துள்ளனர். மக்களை வீடுகளில் இருக்கும்படியும் சுரங்கப் பாதைகள் தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் ரொறொன்ரோ பொலிசார் கேட்டுள்ளனர். ரோறொன்ரோ நகரம் கடுமையான இடிழுழக்கம், வெள்ளம் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.வாகனம் நகராமல் நின்றுவிட்டால் உதவி கிடைக்கும் வரை வாகனத்திற…

  17. நாட்டின் பிரதமர் பதவிக்கு மோடி வருவதை எப்படியும் தடுப்பேன் என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். நாட்டின் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியும் நரேந்திர மோடியும் தகுதியானவர்கள் அல்ல என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விமர்சித்திருந்தார். இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய லாலு பிரசாத் யாதவ், ராகுல் காந்திக்கு பிரதமர் வாய்ப்பை இந்திய மக்கள் கொடுக்க வேண்டும். ராகுல் காந்திக்கு எதிராக எந்த கருத்தும் இல்லை. ராகுலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவர் சிறந்த பிரதமர் என்பதை நிருபித்து காட்டுவார். பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி மிகவும் பொருத…

  18. ஹைதராபாத்: தெலுங்கானா தவிர்த்த எஞ்சிய ஆந்திராவுக்கு 'ராயல ஆந்திரா' என்ற பெயர் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ராயலசீமா தனி மாநிலம் கோரி போராடுவோம் என்று அப்பகுதி காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 60 ஆண்டுகால தெலுங்கானா தனி மாநிலப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ராயலசீமா பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் இன்று ஹைதராபாத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர சிறுபாசனத் துறை அமைச்சர் டி.ஜி. வெங்கடேஷ், தெலுங்கானா தனி மாநில மசோதாவை பார்லிமென்ட்டில் தோற்கடிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எப்படியும் அந்த மசோதாவை …

  19. சுவீடனில்... பிரதமருக்கு, எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி- பதவியை துறக்கும் ஸ்டீபன் லோஃப்வென்! சுவீடனில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதையடுத்து பிரதமர் ஒரு வாரத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 63 வயதான சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் ஸ்டீபன் லோஃப்வென்;, புதிய அரசாங்கம் அமைக்கும் பணியை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது முன்கூட்டியே தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் கூற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சுவீடனில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசாங்கம் திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசாங்கத்துக்கான …

  20. பூஜ்: இந்திய -பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஒன்றான கட்ச் பிராந்தியத்தின் காவ்டாவில் எல்லைப் பாதுகாப்புப் படையினரை சுதந்திர தின நாளில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். குஜராத் மாநிலத்தில் கட்ச் பிராந்தியம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியாகும். கட்ச் பகுதியில் மக்கள் வாழக் கூடிய கடைசி இடமான கவ்டாவில் போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ளது. அங்கு எல்லை பாதுகாப்புப் படையினர் முகாமும் உள்ளது. அதற்கு அப்பால் சதுப்பு நிலமாக, மணற்பாங்கான நிலமாக காட்சி தரும் ராண் ஆப் கட்ச் பிரதேசம். ராண் ஆப் கட்ச்-தான் இந்தியா- பாகிஸ்தாஅன் எல்லையாகும். பல நூறு கிலோ மீட்டர் மனித நடமாட்டமே இல்லாத பகுதியில்தான் ராணுவத்தினர் ரோந்து சுற்றி வருகின்றனர். இந்நிலையில் பூஜ் நகரில் இன்று சுதந்தி…

  21. ஐரோப்பிய அகதிகள் பிரச்னைக்கு முக்கிய காரணமே ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல் தான் என போலந்தின் பழைமைவாத ஆளுங்கட்சியின் தலைவர் காசியின்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.அகதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பகிர்ந்து கொள்வது குறித்த விடயத்திலேயே காசியின்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார்.இதற்கு முன் அகதிகள் போலந்து நாட்டிற்கு நோய்களையும், கிருமிகளையும் கொண்டு வந்து விடுவர் என்ற அவர் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்தது. அகதிகள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும், சிலர் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் வந்துள்ளனர். தற்போது இவர்கள் க்ரீஸ்சிலும், இத்தாலியிலும் தங்கியுள்ளனர்.ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் தலா 160,000 அகதி…

    • 0 replies
    • 296 views
  22. லண்டனில் சனிக்கிழமை ஏழு பேர் கொல்லப்பட்டமை சுதந்திர உலகின் மீதான ஒரு தாக்குதல் என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர்; • மத்திய கிழக்கில் ஒரு இராஜதந்திரப் போர் ஆரம்பம், கட்டார் நாட்டுடனான உறவை ஆறு நாடுகள் துண்டித்தன. • கரு முட்டையக புற்றுநோய்க்கட்டிகளை கரைக்கும் புது மருந்துக்கான ஆரம்பகட்ட பரிசோதனை முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக கூறும் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் ஆகியவை இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.

  23. இலங்கை தமிழர்கள் விடுதலை பெற அமெரிக்கா விரும்புகிறது: கலைஞரை சந்தித்த பின் மெரிக்க தூதர் பேட்டி இலங்கை தமிழர்கள் விடுதலை பெற அமெரிக்கா விரும்புகிறது என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர டிம் ரோமர் கூறியுள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிம் ரோமர் புதன்கிழமை மாலை முதல் அமைச்சர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். சுமார் 50 நிமிடம் நடைபெற்ற சந்திப்புக்கு பின் வெளியே வந்த அமெரிக்க தூதர் டிம் ரோமர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் கலைஞரை சந்தித்துப் பேசியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவுகள் குறித்து பேசினோம். இருநாடுகளுக்கிடையே சிறப்பான உறவு நி…

  24. லண்டன் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் சந்திக்காததால் விமர்சனம் மேற்கு லண்டனில் உள்ள க்ரீன்பெல் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த தீ விபத்தில் இறந்த அனைவரையும் அடையாளம் காணமுடியாமல் போகக்கூடும் என லண்டன் காவல்துறையின தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைAFP/NATALIE OXFORD 17உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன, ஆனால் டஜன் கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். தீ விபத்து நடந்த கட்டத்தைப் பார்வையிட்ட பிரதமர் தெரீசா மே அங்கு குடியிருந்தவர்களை சந்திக்காதது பற்றி அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட லண்டன் நகர மேயர் சாதிக் கான், தீ விபத்து தொடர்பான பொதுவிசாரணையை நடத்த தேர்வுசெய்யப்பட்டுள்ள நீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.