Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகப் பார்வை: பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை படத்தின் காப்புரிமைAFP குழந்தை பிறப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள ஒரு பிரேசிலிய தீவில், கடந்த 12 ஆண்டுகளில் தற்போது முத…

  2. ஜேர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட கிரேட்டா துன்பெர்க் கைது! ஜேர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட காலநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கார்ஜ்வெய்லர் சுரங்கத்தின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் கலந்துக் கொண்ட கிரேட்டா துன்பெர்க் மற்றும் போராட்டக்காரர்கள் சுரங்கத்தின் ஆபத்தான இடத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். https://athavannews.com/2023/1320627

  3. பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ரஷ்யர்கள் பங்குபற்றுவதை 40 நாடுகள் எதிர்க்கலாம் என போலந்து எதிர்வுகூறல் By DIGITAL DESK 5 03 FEB, 2023 | 01:32 PM (என்.வீ.ஏ.) பாரிஸ் 2024 ஓலிம்பிக் விளையாட்டு விழாவில் ரஷ்யர்களுக்கு பங்குபற்ற அனுமதி வழங்கப்படுமாயின் அதனை 40 நாடுகள் எதிர்ப்பதுடன் அவை ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பகிஷ்கரிக்கக்கூடும் என போலந்து எதிர்பார்க்கிறது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு வீரர்களை பாரிஸ் 2024 ஓலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றச் செய்தால் பல நாடுகள் அதனை எதிர்க்கும் என எதிர்பார்ப்பதாக போலந்து விளையாட்டுத்துறை அமைச்சர் காமில் போர்ட்னிக்ஸுக் தெரிவித்தார். …

  4. சென்னை: துக்ளக் ஆசிரியர் சோவின் மகனுக்கு சொந்தமான கட்டிடத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகளை 6 மாதங்களுக்குள் இடித்துத் தள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சிபி ராமசாமி சாலையில் இருந்த ஆழ்வார்பேட்டை நிதி நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை சோவின் மகன் ஸ்ரீராம் வாங்கினார். அதில் வர்த்தக மையத்தைக் கட்டினார். ஆனால், விதிகளை மீறி அடித்தளத்திலும் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். இதையடுத்து அந்த கடைகளை இடிக்க சிடிஎம்ஏ உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்ரீராம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், சென்னை சிபி ராமசாமி சாலையில் ஆழ்வார்பேட்டை நிதி நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது. இந்த நிறுவனம் மூடப்பட்டதால் அது விற்கப்பட்டது. அதை நான் ரூ. 10.75 கோடிக…

  5. டிரம்பின் சர்ச்சை கருத்தால் மேலும் ஓர் அமெரிக்க வெளியுறவு அதிகாரி பதவி விலகல் பகிர்க அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளை பற்றி அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்துகளால் விரக்தியடைந்த எஸ்தோனியாவுக்கான அமெரிக்க தூதர் பதவி விலகியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பற்றி அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துகள்தான், பணியில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற முடிவை எடுக்க செய்துள்ளதாக ஜேம்ஸ்.டி.மெல்வில்லி கூறியுள்ளதாக ஃபாரின் பாலிஸி பத்திரிகை தெரிவித்திருக்கிறது. தூதரின் தனிப்பட்ட ஃபேஸ்புக் பதிவை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. நேட்டோ கூட்டணி…

  6. உத்தியோகபூர்வ சாதனங்களில் இருந்து டிக்டொக் செயலி நீக்கம் - கனடா அறிவிப்பு Published By: T. SARANYA 28 FEB, 2023 | 09:49 AM உத்தியோகபூர்வ சாதனங்களில் இருந்து டிக்டொக் செயலி நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இணையப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக்டொக் செயலியை உத்தியோகபூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள சி.என்.என். அறிக்கையின்படி, "டிக்டொக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாகவும், டிக்டொக் செயலிக்கான தடை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருகிறது" என…

  7. மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாடுகளின் முன்னணியில் கனடா இல்லையென சர்வதேச மன்னிப்புச் சபை குறை கூறியது. மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாடுகளின் முன்னணியில் கனடா தற்போது இல்லையென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பிரகடனங்களில் கையெழுத்திட மறுத்தமை, ஆப்கானிஸ்தானில் கைதிகள் நடத்தப்பட்ட முறை தொடர்பாக தவறுகளை ஏற்க மறுத்தமை, வெளிநாடுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனேடியர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தவறியமை உட்பட, அண்மைய ஆண்டுகளில் கனடா எடுத்துள்ள பல நடவடிக்கைகளின் காரணமாக இந்தக் கருத்து ஏற்பட்டுள்ளதென சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சலில் ஷெட்டி (Salil Shetty) கூறினார். இஸ்ரேல் தொடர்பான கனேடிய …

    • 1 reply
    • 608 views
  8. எம்.ஜி.ஆரை கொல்ல தி.மு.க செய்த சூழ்ச்சிகள்!! எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார் என்பதற்காக கலைஞர் தி.மு.க வை விட்டு நீக்கினார் என்பது மட்டும் காரணம் அல்ல..தான் தி.மு.க கட்சியை குறுக்குவழியில் கைப்பற்றியது போல நாளடைவில் எம்.ஜி.ஆரும் இதை கைப்பற்றிவிடுவார் என கலைஞர் பயந்தார்..எம்.ஜி.ஆருக்கு சினிமாத்துறை இருக்கிறது..அதனால் கட்சியை அர்சியலை அவர் எப்போதும் பெரிய விஷயமாக நினைத்தது இல்லை..தி.மு.க வின் பொருளாளராக எம்.ஜி.ஆர் இருக்கிறார்..முதல்வராக கருணாநிதி இருக்கிறார்..கட்சிப்பணத்தையும் ,அர்சின் கஜானா பணத்தையும் தன் குடும்பத்திற்காக,கணக்கு வழக்கில்லாமல் ஒதுக்குகிறார்..என நன்கு தெரிந்தபின்பே எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார்...உடனே எம்.ஜி.ஆரை கலைஞர் விலக்க தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி.…

  9. இணைய அடிமைகள் என்று யாரைச்சொல்லலாம்? விழித்திருக்கும் நேரத்தில், ஒவ்வொரு மணி நேரத்திலும் இணைய தொடர்பு கொண்டிருப்பவர்கள் என எடுத்துக்கொண்டால் இத்தகைய இணைய அபிமானிகள் (அடிமைகள்) இந்தியாவில் அதிகம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 53 சதவீத இந்தியர்கள் விழித்திருக்கும் நேரங்களில் அநேகமாக இணையத்துடன் தொடர்பு கொண்டு இருக்கின்றனர் என சர்வதேச அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது. இப்படி இணைய தொடர்பு கொண்டவர்களின் சர்வதேச சராசரி 51 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இணைய பயன்பாட்டில் இந்திய முன்னேறிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம் தான். குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் வருகைக்கும் பிறகு இணைய பயன்பாடு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த 'ஏடி கியார்ன…

  10. 10,000 மனித மூளைகளை பக்கெட்டில் சேமித்து வைத்த பல்கலைக்கழகம் - வியக்க வைக்கும் காரணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பக்கெட்டில் சேமித்து வைத்துள்ள மனித மூளைகளில் ஒன்று 1 ஏப்ரல் 2023, 06:37 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் டென்மார்க்கில் உள்ள தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அடுக்குகளில் ஆயிரக்கணக்கான வெள்ளை நிற பக்கெட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பக்கெட்களில் மொத்தமாக 9,479 மனித மூளைகள் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. உலகிலுள்ள மிகப் பெரிய மனித மூளைகள் சேமிப்பகமாக இந்தப் பல்கலைக்கழகம் திகழ்கிறது. மனித மூள…

  11. அல்-ஹைடாவுடன் நெருங்கிய தொடர்புடைய ஈராக்கிய குழுவொன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட இணைய ஒளிநாடா அமெரிக்க ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்படுவதை காண்பிக்கின்றது. அமெரிக்க இராணுவம் உடனடியாக தனது சி.எச்.46 Sea Night ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்படவில்லை என தெரிவித்தாலும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் அந்த ஒளிநாடாவின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகின்றனர். சீ நைட் ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அவர்கள் மறைமுகமாக ஏற்றுக் கொள்கின்றனர். பெப்ரவரி ஏழாம் திகதி அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டதை காண்பிக்கும் இரண்டு நிமிட வீடியோவில் சீ நைட் ஹெலிகொப்டர் பறப்பதும் பின்னர் அதற்கருகில் புகை போன்ற ஒன்று தென்படுவதும் பின்னர் உலங்கு வானூர்தி வெடித்து…

  12. அமெரிக்கத் தூதர் ராஜிநாமா ஏன்? அமெரிக்கத் தூதர் திமோதி ரோமர் ராஜிநாமா செய்திருப்பதற்கான காரணம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திமோதி ரோமர் ராஜிநாமா செய்யப் போவதாக வியாழக்கிழமை அறிவித்தார். தனது ராஜிநாமா கடிதத்தையும் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்தார். சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் கூறியிருக்கும் நிலையில், இதற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான படை விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்ய முன்வந்த போயிங், லாக்ஹீட் -மார்ட்டின் ஆகிய இரு அமெரிக்க நிறுவனங்களின் விண்ணப்பங்கள் அண்மையில் நிராகரிக்கப்பட்டன. ஐரோப்பிய நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தத்தை வ…

    • 0 replies
    • 604 views
  13. இளைஞர். மும்பையைச் சேர்ந்த வினோத்குமார் சிங்கேஸ்வர் சிங்குக்கு இளம்பெண் சங்கீதா மீது பைத்தியமான காதல். `எனக்கு 24 உனக்கு 19' என்று காதல் வானில் சிறகடித்துத் திரிந்த இந்த ஜோடி, ஒரு கட்டத்தில் திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்தனர். அதற்கு பெற்றோர்களின் சம்மதம் வேண்டுமே? வினோத்குமார் வீட்டுத் தரப்பில் பிரச்சினையில்லை. பெண்ணின் அம்மா சம்மதத்தைப் பெற்றால் போதும். வினோத்குமாரும் தைரியமாகச் சென்று சங்கீதாவின் அம்மா மீனா லாலு பஞ்சாபியிடம் பெண் கேட்டார். `நான் சொல்கிற `நிபந்தனைக்கு' சரி என்றால் எனக்குச் சம்மதம்' என்றார் மீனா. சந்தோஷத்துடன் தலையசைத்தார் வினோத்குமார். ஆனால் அடுத்து மீனா விதித்த நிபந்தனை திடுக்கிட வைத்தது அவரை. அதாவது, ``நான் சொல்லும் ஆளை நீ காலி செய்தால் ப…

  14. பாகிஸ்தான் கடற்படை முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் முகாமில் தரித்து நின்ற இரண்டு பாரிய யுத்த விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் கடற்படை முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 11 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. கராச்சியில் அமைந்துள்ள மஹரான் கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் சில இராணுவ வீரர்களை பணயமாக பிடித்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் சீன இராணுவப் படைவீரர் ஒருவரும் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை எனினும் அல் கய…

    • 0 replies
    • 665 views
  15. பாலத்தீனியர்களுக்கான உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலகப்பார்வை : கடந்த சில மணிநேரங்களில் உலகில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் குறித்த செய்திகளின் தொகுப்பு படத்தின் காப்புரிமைANADOLU AGENCY பாலத்தீனியர்களுக்கான 200 மில்லியன் டாலர் உதவி - அமெரிக்கா ரத்து மேற்கு கரை மற்றும் காஸா பகுதியில் உள்ள பாலத்தீனியர்களுக்கான 20…

  16. லிபியவின் கிழக்கு நகரான டெர்ணாவிலுள்ள துறைமுகத்திலிருந்த கிரேக்க எண்ணெய்க் கப்பலின் மீது, தமது வான்படைகள் தாக்குதலை நடத்தியுள்ளதாக லிபியா தெரிவித்துள்ளது. கப்பல் தீவிரவாதிகளை ஏற்றி வந்தது என லிபியா கூறுவதை கிரேக்கம் மறுக்கிறதுஞாயிறன்று நடைபெற்ற இந்தத் தாக்குதலில், அந்தக் கப்பலின் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் கிரேக்கக் கடலோரக் காவல்படை கூறியுள்ளது. அந்தத் துறைமுகத்தில் தங்களது அனுமதி இல்லாமல், அக்கப்பலை நிறுத்த வேண்டாம் என அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என லிபிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அந்தக் கப்பல் இஸ்லாமியத் தீவிரவாதிகளை லிபியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது எனவும் அந்த இராணுவப் பேச்சா…

    • 0 replies
    • 419 views
  17. நொவா கக்கோவா அணை ரஸ்ய படையினரால் தகர்ப்பு - பெரும் வெள்ள அபாயம்-உக்ரைன் Published By: RAJEEBAN 06 JUN, 2023 | 11:46 AM ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான கேர்சனில் நிப்பர் ஆற்றின் மீதுஉள்ள நொவா கக்கோவா அணைக்கட்டை ரஸ்ய படையினர் தகர்த்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ள உக்ரைன் பாரிய வெள்ள ஆபத்துள்ளதால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அணையின் சுவர்கள் நீரில் வீழ்ந்து கிடப்பதையும் பெருமள நீர் வெளியேறிக்கொண்டிருப்பதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ரஸ்ய ஆக்கிரமிப்பு படையினர் நீர்மின் அணைக்க…

  18. ஒரு பீப்பாய் 20 டாலராகக் குறையுமா? ச.ஸ்ரீராம் முன்பெல்லாம் ஒரு நாட்டை அழிக்க ஆயுதங்களையும், குண்டுகளையும் வீசித் தாக்கினர். அதற்குப் பதிலாக தற்போது புதிதாகக் கண்டுபிடித்திருக்கும் வழிதான், பொருளாதாரப் போர். ஒரு நாட்டுக்கு வருமானத்தைத் தரக்கூடிய பொருளை அதிகமாக உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் எதிரிநாட்டை கத்தியின்றி, ரத்தமின்றி ஒழித்துக்கட்டுவதுதான் இந்தப் பொருளாதாரப் போரின் நோக்கம். அப்படியொரு பொருளாதாரப் போர்தான் தற்போது சர்வதேச அளவில் நடந்து வருகிறது. இந்தப் போரின் முக்கிய ஆயுதமாக மாறியிருக்கிறது கச்சா எண்ணெய். இதனை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்வதன் மூலம் வல்லரசாக விளங்கும் ரஷ்யாவையும், ஈரானையும் ஆட்டுவிக்க, அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் திட்டமிட்டு…

  19. 2018 சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு (VIDEO) 2018ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், சமாதானம், இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றது. அவ்வகையில், 2018ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்று அறிவிக்கப்பட்டது. கொங்கோ நாட்டை சேர்ந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் ஈராக் நாட்டை சேர்ந்த நாதியா முராத் ஆகியோருக்கு சமாதான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கொங்கோவை சேர்ந்த மருத்துவரான டென்னிஸ் முக்வேஜா, போரின…

    • 0 replies
    • 816 views
  20. இப்போது சீமான் நிறம் பச்சை! கறுப்புச் சட்டை தாங்கி பெரியார் தொண்டராக வலம் வந்த சீமான், இப்போது பச்சை உடை தாங்கி முருக பக்தராக மாறிவிட்டார்! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்​பாளர் பதவியில் இருந்து சீமான் நீக்கம் என சில வாரங்களுக்கு முன்பு எழுந்த பரபரப்பு அடங்குவதற்குள், கடந்த 7-ம் தேதி பழநியில், 'வீரத்தமிழர் முன்னணி’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார் சீமான். இந்த அமைப்பு, நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப் பிரிவாகச் செயல்படும் எனச் சீமான் அறிவித்திருந்தாலும் அந்த நாளில் சீமான் தாங்கிய உடைதான் அவரது அரசியலை வெளிப்படுத்தியது. பழநி பொதுக்கூட்ட மேடை இருந்த பேனரில் பழநி முருகனும், ராவணனும் இருக்க, ஒரு பக்கம் பிரபாகரனும், மறுபக்கம் சீமானும் சிரித்தார்கள். இதில் மைக் பிடித்…

  21. கருக்கலைப்புக்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கியது மெக்ஸிக்கோ உலகில் இரண்டாவதாக அதிகளவு ரோமன் கத்தோலிக்கர்களை கொண்ட நாடான மெக்சிக்கோவின் சட்டவாக்க சபை கருக்கலைப்பை சட்டரீதியாக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. 46 ஆதரவு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இச் சட்டம் கருவுற்ற 12 வாரங்களில் கருவைக் கலைப்பதற்கு அனுமதி வழங்குகிறது. முன்னர் மெக்ஸிக்கோவின் சட்டவாக்க சபை வல்லுறவுக்குள்ளாக்கப்படல் தாயின் உயிருக்கு ஆபத்தெனக் கருதப்படல் மற்றும் கருவளர்ச்சியில் குறைபாட்டுக்கான அறிகுறிதென்படல் போன்ற காரணங்களுக்கு மட்டுமே கருவினை கலைப்பதற்கு அனுமதியளித்திருந்தது. மெக்ஸிக்கோவின் சனத்தொகையில் 90% மானோர் கத்தோலிக்கராவர். மெக்ஸிக்கோ பேராயர் இச் சட்டமூலத்தை எதிர்க்க வேண்…

  22. 2 கேபினட் பதவிகளை தி.மு.க., கேட்காதது ஏன்? மத்திய அமைச்சரவையில், இழந்த இரண்டு கேபினட் அமைச்சர் பதவிகளைப் பெறுவதில், தி.மு.க., ஆர்வம் காட்டாமலிருப்பதால், பதவி தர முடியாது என, காங்கிரஸ் கைவிரித்துவிட்டதா அல்லது கட்சியில் யாருக்குமே தகுதி இல்லை என, தி.மு.க., தலைமை நினைக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2009, மே, 22ம் தேதி அமைந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (சீசன் - 2) அமைச்சரவையில், தி.மு.க.,வுக்கு மூன்று கேபினட் அமைச்சர்கள், நான்கு இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. இதில், அழகிரி, தயாநிதி என, இரண்டு கேபினட் பதவிகள், கட்சித் தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கே வழங்கப்பட்டன. மற்றொரு கேபினட் பதவியும், அவரது குடும்பத்துக்கு நெருக்கமான ராஜாவுக்கு கொடுக்கப்பட்டத…

  23. கனடா- ஒரு பெண் அணிந்திருந்த பர்தாவை அகற்றாவிட்டால் அவரது வழக்கை கேட்கப்போவதில்லை என கியுபெக் நீதிபதி ஒருவர் மறுத்ததன் எதிர்விளைவாக சிவில் உரிமைக் குழுக்கள், அரசியல் வாதிகள் மற்றும் ஏனையவர்களிடமிருந்தும் பரந்த சீற்றமும் கண்டனங்களும் வெளிப்பட்டுள்ளன. கியுபெக் முதல்வர் பிலிப்பே கொயிலாட் இந்த முடிவு அமைதியை குலைக்கின்றதென தெரிவித்துள்ள வேளையில் கனடிய சிவில் உரிமைகள் சங்கம் இது தொந்தரவு, பாரபட்சமானது என்று தெரிவித்ததோடு சமய சுதந்திரத்தின் கனடிய சாசன உரிமையை மீறுதல் எனவும் தெரிவித்துள்ளது. ஜஸ்ரின் ட்றூடோ “இது வெறும் தவறு” என அறிவித்துள்ளார். செவ்வாய்கிழமை றானியா எல்-அலோல் என்ற தாய் ஒருவர் பறிக்கப்பட்ட தனது காரை மீள பெறுவதற்காக நிதிமன்றம் போனார். கார் பறிக்கப் பட்ட போது இவர…

  24. "ட்ரம்பின் விருப்பத்திற்கிணங்கவே இராஜினாமா செய்தேன்" - ஜெஃப் செஸ்ஸன்ஸ் அமெரிக்காவின் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஜெஃப் செஸ்ஸன்ஸ் டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கிணங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸின் சேவைக்கு நாங்கள் அவருக்கு நான்றி கூறுகின்றோம். அவரது எதிர்காலத்துக்கு எங்களின் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது இராஜினாமா கடிதத்தில் செஷன்ஸ், பதவி விலகல் முடிவு எனது சொந்த முடிவு அல்ல. உங்களின் (ட்ரம்ப்பின்) வேண்டுகோளினை ஏற்றே நான் எனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கின்றேன். மேலும் நாட்டின் அட்டார்னி ஜெனரலாக நான் பணியாற்றிய காலத்தில் சட்…

  25. சிகாகோ வைத்தியசாலையில் துப்பாக்கிச்சூடு: பெண் வைத்தியர் உட்பட நால்வர் உயிரிழப்பு அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தின் மாநகரான சிகாகோவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில் இரு பெண்களும், ஒரு பொலிஸ் அதிகாரியும், கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த குறித்த இரு பெண்களில் ஒருவர் வைத்தியரெனவும், மற்றையவர் மருத்துவ உதவியாளர் எனவும் சிகாகோ மேயர் ராஹ்ம் இமானுவெல் உறுதிபடுத்தியுள்ளார். இதன்போது, துப்பாக்கிதாரியொருவரும் கொல்லப்பட்ட நிலையில், அவர் பொலிஸாரின் பதில் தாக்குதலில் கொல்லப்பட்டாரா அல்லது தன்னைத்தானே சுட்டுக் தற்கொலை செய்துக் கொண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.