உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
சிறைவைக்கப்பட்டிருந்த சாட் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கொரோனாவுக்கு பலி சிறைச்சாலையில் இருந்த சாட் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். சாட் நாடு மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. 1982 முதல் 1990 வரை சாட் நாட்டின் ஜனாதிபதியாக ஹசனி ஹப்ரி (79) செயல்பட்டு வந்தார். இவர் தனது ஆட்சிகாலத்தில் பல்வேறு போர் குற்றங்களில் ஈடுபட்டார். எதிர்க்கட்சியினருக்கு தூக்குத்தண்டனை விதித்தல் என பல்வேறு கொடூர செயல்களில் ஈடுபட்டார். இவரது ஆட்சி காலத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 1990 ஆம் ஆண்டு சாட் நாட்டின் ஆட்சியை இட்ரிஸ் துபே இட்னோ என்பவர் கைப்பற்றினர். இதனால், ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசனி ஹப்ரி …
-
- 0 replies
- 213 views
-
-
அகதிகள் போர்வையில்... தலிபான்கள்: பிரான்ஸ் தீவிர விசாரணை! பிரான்ஸிற்குள் அகதிகள் போர்வையில் சில தலிபான்கள் ஊடுவருவியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி, அபுதாபி விமானநிலையத்தில் இருந்து பரிஸிற்கு விமானம் மூலம் வந்த ஒருவரை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த 15ஆம் திகதி காபூல் நகரம் தலிபான்களிடம் வீழ்வதற்குச் சில நாட்களின் முன், இவர் ஆயுதங்களுடன் தலிபான்களின் பக்கம் நின்றிருந்துள்ளமையை பிரான்ஸின் புலனாய்வுப்பிரிவினர் உடனடியாக அவதானித்துள்ளனர். அகதிகள் போல் பிரான்ஸிற்குள் ஊடுருவிய தலிபான் ஆக இவர் இருக்கலாம் என்ற அடிப்படையில், தனிப்பட்ட நிர்வாகக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையான MICAS நடவடிக்கையின் கீழ் இவரு…
-
- 0 replies
- 259 views
-
-
ஆப்கானிஸ்தானுக்கான... உதவியை, நிறுத்தியது உலக வங்கி ஆப்கானிஸ்தானை தாலிபான் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதை அடுத்து அந்நாட்டுக்கு வழங்கும் உதவியை உலக வங்கி நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் நாட்டின் வளர்ச்சி, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து தாங்கள் மிகவும் கவலையடைவதாக உலக வங்கியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலக வங்கி கடந்த 2002 முதல் 5.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1236092
-
- 0 replies
- 223 views
-
-
தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்கள் நிலை தொடர்பில் மலாலா கவலை நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் செவ்வாய்க்கிழமை ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மீது தனது கவலையை வெளிப்படுத்தினார் மற்றும் தற்போது ஆப்கானிஸ்தானை ஆளும் பயங்கரவாதக் குழுவுடன் தனக்கு ஏற்பட்ட சோதனையை விவரித்தார். ஒரு வலைப்பதிவு இடுகையில் மலாலா போஸ்டனில் இருந்து ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், 2012 ஒக்டோபரில் பாடசாலைக்கு செல்லும் வழியில் பாகிஸ்தானிய தலிபான் பயங்கரவாதியால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பால் முக முடக்குதலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறினார். நாட்டின் தாலிபான் முற்றுகை காரணமாக பல பெண்கள் மோசமான தலைவிதியை சந்திக்க நேரிடும் என்றும் மலாலா கூ…
-
- 1 reply
- 487 views
-
-
தலிபான்கள் மீது... தடை விதிப்பது குறித்து, பரிசீலிக்கலாம்: கனேடிய பிரதமர்! தலிபான்கள் மீது தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். காணொளி மூலம் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டதற்கு பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள் குழு தீவிரவாத குழு என்பதில் ஐயமில்லை. கனடா எப்போதோ தலிபான்களை தீவிரவாதிகளை அறிவித்துவிட்டது. அவர்கள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர். அதனால் அவர்கள் மீது பல்வேறு தடைகளை விதிப்பது குறித்து நிச்சயமாக பரிசீலிக்கலாம்’ என கூறினார…
-
- 0 replies
- 231 views
-
-
ஓகஸ்ட் 31க்குப் பின்னர்... அமெரிக்கா, தனது குடிமக்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது- தலிபான்கள் ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது என தலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து இரவு பகலாக அமெரிக்கா ஆயிரக்கணக்கானோரை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றி வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட விமானங்களில் சுமார் 16 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டதாக பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்க விமானங்களில் 10 ஆயிரத்து 400 பேரும் அதன் 61 நட்பு நாட்டு விமானங்கள் மூலம் 5 ஆயிரத்து 900 பேரும் காபூலை விட்டு வெளியேறினர். மேலும் பல ஆயிரம் பேர்களை வெள…
-
- 0 replies
- 325 views
-
-
ஆப்கானிஸ்தானுக்கு... வந்த உக்ரேனிய, விமானம் கடத்தல்! உக்ரேனியர்களை வெளியேற்ற ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனியர்களை வெளியேற்றுவதற்காக இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்ததாக கூறப்படுகிறது. குறித்த விமானம் உக்ரேனியர்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு பதிலாக அடையாளம் தெரியாத பயணிகளுடன் ஈரானுக்கு சென்றதாக உக்ரேனிய பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறித்த விமானம் கடத்தப்பட்டமையினால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தமது நாட்டு பிரஜைகளை வெளியேற்றும் முயற்சியில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆப்கானிஸ்தானிலிருந்து 31 உக்ரேனியர்…
-
- 0 replies
- 425 views
-
-
உக்ரேனுக்கு எதிராக... ரஷ்யா, சர்ச்சைக்குரிய எரிவாயு குழாயைப் பயன்படுத்தினால் தடை: ஜேர்மனி எச்சரிக்கை! உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா சர்ச்சைக்குரிய எரிவாயு குழாயைப் பயன்படுத்தினால் மேலும் தடைகள் விதிக்கப்படலாம் என ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் கியேவுக்கான வருகையின் போது உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் நோர்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்தின் மீதான தனது கவலையை புரிந்து கொண்டதாக அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறினார். உக்ரேனின் பாதுகாப்பை அச்சுறுத்துவதாகக் கூறி ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த திட்டத்தை எதிர்க்கிறார். இது பால்டிக் கடலின் கீழ் இயங்கும் மற்றும் ஜேர்மனிக்கு இரட்டை ரஷ்ய எரிவாயு ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும். ரஷ்ய தலைமையிலான …
-
- 0 replies
- 390 views
-
-
ஜூலை மாதத்திலிருந்து... 18,000 ஆப்கானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்: அமெரிக்க ஜனாதிபதி பைடன்! கடந்த ஜூலை மாதத்திலிருந்து 18,000 ஆப்கானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து ஆட்களை வெளியேற்ற தினமும் 20 முதல் 30 முறை விமானங்களை இயக்கவும், அதன்மூலம் தினசரி சுமார் ஐந்தாயிரம் பேரை வெளியேற்றவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘இராணுவ விமானம் மட்டுமல்ல, பிறநாட்டு விமானங்கள், த…
-
- 0 replies
- 340 views
-
-
அலெக்ஸி நவால்னிக்கு... விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம்: ஏழு ரஷ்ய குடிமக்களுக்கு பிரித்தானியா தடை! கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஏழு ரஷ்ய குடிமக்களுக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது. இலக்கு வைக்கப்பட்ட ஏழு நபர்களும் ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவையின் உறுப்பினர்கள் ஆவர். இவர்களுக்கு சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது. அமெரிக்காவுடன் எடுக்கப்பட்ட தடைகள், தாக்குதலைத் திட்டமிடுவதற்கு அல்லது நடத்துவதற்கு நேரடியாகப் பொறுப்பானவர்களை இலக்காகக் கொண்டது என்று பிரித்தானியா வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், ‘ரஷ்ய அரசாங்கத்தின் இரச…
-
- 0 replies
- 331 views
-
-
Thousands of anti-lockdown protesters swarm the streets of Melbourne, Victoria, on August 21. (CNN)Thousands of protesters defied coronavirus lockdowns to hit the streets of Australia's largest cities on Saturday, as the country recorded its highest single-day caseload since the pandemic began. The states of New South Wales (NSW) -- home to Australia's most populous city, Sydney -- and Victoria reported a total of 886 infections Saturday, amid a raging outbreak of the Delta variant. Hundreds of unmasked protesters were seen marching through Melbourne's Central Business District before confronting police hours…
-
- 3 replies
- 421 views
- 1 follower
-
-
ஜேர்மனி ஊடகத்தில் பணியாற்றும்... ஊடகவியலாளரின், உறவினரைக் கொன்ற தலிபான்கள்! ஆப்கானிஸ்தானை தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள், கடந்த காலங்களில் வெளிநாட்டு துருப்புகளுக்கு உதவி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த ‘டாயிஷ் வில்லே’ என்ற ஊடகத்தில் பணியாற்றி வந்த ஒரு ஊடகவியலாளரின் உறவினரை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த ஊடகவியலாளரைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட சோதனையில் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதோடு மற்றொரு உறவினர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவரைப் போலவே இன்னும் மூன்று டாயிஷ் வில்லே ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை தலிபான்கள் வீடுவீடாக தேடி வருகின…
-
- 2 replies
- 461 views
-
-
இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – தமிழில்: ஜெயந்திரன் நியூசிலாந்து நாட்டில் வீடுகளில் குடிவரவு அதிகாரிகளால் திடீர் அதிகாலைச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 50 ஆண்டுகள் தற்போது நிறைவடைகின்றன. பசிபிக் (Pacific) மக்களின் தந்தையாகவும் அமைச்சராகவும் திகழ்கின்ற ஓப்பிற்றோ வில்லியம் சியோவினால் (Aupito William Sio) இன்றும் இவ்விடயம் பற்றிப் பேசுவது சிரமமாகவே உள்ளது. Aupito William Sio “உங்களைப் பராமரிக்க வேண்டியவர்கள், நீங்கள் சேவை செய்யும் உங்கள் அதிகாரிகள், இவர்களே உங்களை, உங்கள் சொந்த வீட்டில் வைத்து உங்களால் எதுவுமே செய்ய முடியாத ஒரு நிலைக்கு உங்களை இட்டுச் செல்லும் போது, இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை எப்படி ஒ…
-
- 1 reply
- 270 views
-
-
ஜேர்மனி ஊடகத்தில் பணியாற்றும் ஊடகவியலாளரின் உறவினரைக் கொன்ற தலிபான்கள்! ஆப்கானிஸ்தானை தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள், கடந்த காலங்களில் வெளிநாட்டு துருப்புகளுக்கு உதவி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த ‘டாயிஷ் வில்லே’ என்ற ஊடகத்தில் பணியாற்றி வந்த ஒரு ஊடகவியலாளரின் உறவினரை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த ஊடகவியலாளரைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட சோதனையில் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதோடு மற்றொரு உறவினர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவரை…
-
- 0 replies
- 310 views
-
-
தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக... காபூலில், பெண்கள் போராட்டம்! தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்தனர். ‘நாங்கள் எல்லாம் ஆப்கானிஸ்தானிய பெண்கள்’ என்று எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியிருப்பதால், பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர். இதேவேளை, தலிபான்களிடம் சரணடையப் போவதில்லை என ஆப்கானிஸ்தானின் துணை ஜனாதிபதியாக இருந்த அம்ருல்லா சலேஹ் ருவிட்டரில் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1235073
-
- 25 replies
- 1.7k views
-
-
தலிபான்கள்... தற்போது, விவேகத்துடனும்... தெளிவான பார்வையுடனும், உள்ளனர்: சீனா தெரிவிப்பு! தலிபான்கள் முன்பு செய்த தவறுகளை செய்ய மாட்டார்கள்; அவர்கள் தற்போது விவேகத்துடனும் தெளிவான பார்வையுடனும் உள்ளனர் என சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங் கூறுகையில், ‘ஆப்கான் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அந்த அமைப்பினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தலிபான்களின் செயற்பாடுகளைக் கொண்டே அவர்கள் குறித்து பிற நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் மதிப்பீடு செய்ய வேண்டும்’ என கூறினார். முன்னதாக, சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முல்லா அப்துல் கனி பரதார் தலைமையிலான தலிபான் தூதுக் குழு, வெளியுறவ…
-
- 0 replies
- 435 views
-
-
ஆப்கானில்... வெளிநாட்டு துருப்புகளிடம், பெற்றோர் இன்றி... குழந்தைகள் மட்டும் ஒப்படைக்கப்படுகின்றார்களா? ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் மேற்கத்திய இராணுவ வீரர்களிடம் பெற்றோர் இன்றி குழந்தைகள் மட்டும் ஒப்படைக்கப்படுகின்றார்களா என்ற சந்தேகத்துக்கு பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடந்த சில தினங்களாக வெளிநாட்டு துருப்புகளிடம் பெற்றோர் இன்றி சிறுமிகள் மட்டும் ஒப்படைக்கப்படும் காணொளிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறன. இந்தநிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ், ‘காபூல் விமான நிலையத்தில் சுவருக்கு அப்பால் உள்ள மேற்கத்திய இராணுவ வீரர்களிடம் குழந்தை ஒன்று ஒப்படைக்கப்படுவது ப…
-
- 0 replies
- 369 views
-
-
ஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம் August 20, 2021 அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில்ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதைபந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என்ற தகவல் தற்போது வெளியாகியி ருக்கிறது. காபூல் விமான நிலையத்தில் கடந்த திங்களன்று மீட்பு விமானம் ஒன்றில் தொற்றி ஏறிப் பயணிக்க முற்பட்ட சிலர்உயிரிழந்தமை தெரிந்ததே. விமானத்தின் கீழே சக்கரங்கள் இடையே-தரை யிறக்கும் கியர் பகுதியில்- ஏறி ஒளிந்து பயணிக்க முற்பட்ட மூவர் விமானம் மேலே கிளம்பிப் பறந்தபோது உடல் சிதறுண்டு தரையில் வீழ்ந்தனர் என்றுகூறப்படுகிறது. விமானத்தில் இருந்து உடல்கள் கீழே வீழ்கின்ற வீடியோக் காட்சிகள் சம…
-
- 2 replies
- 361 views
-
-
ஆப்கான் இராணுவமே... போராட தயாராக இல்லாத போது, அமெரிக்கா ஏன் போராட வேண்டும்? ஜோ பைடன்! ஆப்கான் இராணுவமே போராட தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் போரில் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன்கள் கைப்பற்றியது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) வெள்ளை மாளிகையில் அவர் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தலிபான்கள் இவ்வளவு வேகமாக முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டது விவகாரத்தில் உறுதியாக இருக்கின்றேன். பயங்கரவாதத்தை ஒழிக்கவே அமெரிக்க இராணுவம் அங்கு சென்றது. அமெரிக்காவின் நோக்கம் நிறைவே…
-
- 24 replies
- 1.3k views
-
-
சமூகத் தலைவர் சிலை தகர்ப்பு,பெண் ஆளுநர் கடத்தல், தலிபான்கள் வெறியாட்டம்! ஹசாரா சமூகத் தலைவர் மஸாரியின் சிலை தகர்ப்பு பெண் ஆளுநரும் கடத்தல் தலிபான்கள் வெறியாட்டம். ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹசாரா சமூகத்தின் தலைவர் அப்துல் அலி மஸாரியின் சிலையை வெடிவைத்து தலிபான்கள் தகர்த்துள்ளனர். கடந்த முறை ஆப்கானைக் கைப்பற்றியபோது, பாமியானில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த, நூற்றாண்டுகள் பழமையான புத்தர் சிலைகளை வெடிவைத்து தலிபான்கள் தகர்த்து அழித்தனர். இந்த முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஹசாரா இனத்தின் தலைவரின் சிலையை தலிபான்கள் தகர்த்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மலைப்பகுதியில் வாழும் இனத்தவர்கள் ஹசாராக்கள் அல்லது ஹசாராஜத் என்று அழைக்கப்படுகின்றனர். 13ஆம்…
-
- 1 reply
- 587 views
-
-
தலிபான்களை உள்ளடக்கிய... அரசாங்கத்தை, உருவாக்குவது குறித்து ஆலோசிக்க இருந்தேன் – அஷ்ரப் கனி தலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்தாலோசிக்க எண்ணினேன் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ள அஷ்ரப் கனி தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோவில், “எனது காலணிகளைகூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன். உள்ளூர் மொழி பேசத்தெரியாவதவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து என்னை தேடினர். நான் வெளியேற்றப்பட்டேன். இந்த நிகழ்வுகள் மிகவும் வேகமாக நடைபெற்றுவிட்டன. தலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசிக்க நான் எண்ணினேன்…
-
- 0 replies
- 257 views
-
-
சிங்கப்பூர் நீதிமன்றம் புதன்கிழமை ஒரு பிரிட்டிஷ் மனிதனுக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை விதித்தது, பொது முகத்தில் முகக்கவசம் அணிய மறுத்ததன் மூலம் அவர் பலமுறை கொரோனா வைரஸ் நெறிமுறைகளை மீறியதால் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. புதன்கிழமை அவர் "சட்டவிரோத குற்றச்சாட்டுகள்" என்று அழைத்ததை கைவிடுமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார் மற்றும் அவரது பாஸ்போர்ட்டை திருப்பித் தருமாறு கேட்டார், இதனால் அவர் தனது குடும்பத்துடன் பிரிட்டனுக்கு திரும்பிச் செல்ல முடியும் என்று சிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முகமூடிகளை அணிவதில் சிங்கப்பூரின் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்ற நம்பிக்கையில் தான் "முற்றிலும் தவறாக வழிநடத்தப்பட்டேன்" என்று கிளின்னிடம் நீதிபதி கூறியத…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
நாட்டை விட்டு தப்பியோடியபோது... பெருமளவான பணத்துடன், புறப்பட்டுச் சென்ற ஆப்கான் ஜனாதிபதி! நாட்டை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி அஷ்ரப் கானி, பெருமளவான பணத்துடன் புறப்பட்டுச் சென்றதாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ.வை மேற்கோள் காட்டி, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஞாயிற்றுக்கிழமை தலைநகர் காபூலில் இருந்து நான்கு கார்களில் பணத்துடன் வெளியேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஒரு அளவுக்கு மேல் ஹெலிகொப்டருக்குள் பணத்தை வைக்க முடியாததால், அவர் ஒரு தொகை பணத்தை வீதியில் வீசிச் சென்றதாக காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான காரணத்தை, அஷ்ரப் …
-
- 2 replies
- 635 views
-
-
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆயுதங்கள் என்னென்ன? எங்கிருந்து கிடைக்கின்றன? ராணுவம் அஞ்சியது ஏன்? 18 ஆகஸ்ட் 2021, 02:16 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆப்கானிஸ்தானிலேயே அதிக வலிமை கொண்ட தரப்பு எது என்று கேட்டால் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை, அதன் பிறகு ஆப்கானிஸ்தானிய ராணுவம், கடைசியில் தாலிபன்கள் என்றுதான் வரிசைப்படுத்த முடியும். எண்ணிக்கையிலும் அளவிலும் ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகள்தான் மிகப் பெரியவை. தாலிபன்கள் என்ற ஓர் ஆயுதக் குழுவிடம் அவர்கள் இவ்வளவு எளிதாக வீழ்ந்திருக்கக்கூடாது என்பதுதான் ஒரு சராசரியான கணிப்பாக இருக்கும். ஆனால் மிக எளிதாக…
-
- 9 replies
- 995 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் இருந்து... இறுதி அமெரிக்கர் வெளியேறும் வரை, தனது படைகளை ஆப்கானில் வைத்திருக்க அமெரிக்கா முடிவு ஆப்கானிஸ்தானில் இருந்து இறுதி அமெரிக்கர் வெளியேறும் வரை தனது படைகளை அங்கு வைத்திருக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனைத் தெரிவித்தார். அத்தோடு, தனது முடிவு சரியானதுதான் என்றும் குழப்பம் இல்லாமல் படைகளை திரும்பப் பெறும் சூழல் இல்லை என்றும் விளக்கமளித்தார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி விமானத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதால்தான் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் யுத்தத்தை கைவிட்டதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார். https://athavannews.com/2021/1235135
-
- 0 replies
- 208 views
-