Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மேற்பார்வை ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்துவரும் (Audit Coordinator) 34 வயதுடைய அரோரா அகான்ஷா, ஐ.நா. சபையின் செயலாளர் நாயகப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தற்போதய செயலாளர் நாயகமான அன்ரோணியோ குத்தெரெஸின் பதவிக்காலம் இந்த வருட் இறுதியில் முடிவடைகிறது. ஜனவரி 2022 இல் ஆரம்பவிருக்கும் புதிய பதவிக் காலத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் அரோரா அகன்ஷா முதலாவது ஆளாகத் தன் அறிவிப்பைச் செய்திருக்கிறார். தற்போதைய செயலாளர் நாயகமான குத்தேரெஸ் தான் இரண்டாவது தவணையிலும் தொடர்ந்தும் பணியாற்ற விரும்புவதாக சென்ற வாரம் அறிவித்திருந்தார். போட்டியிடும் தனது எண்ணம் குறித்து தனது கருத்துக்களை காணொளி மூலம் அகன்ஷா வெளிய…

  2. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க தயார்: ரஷ்யா! பொருளாதார ரீதியாக வலிமிகுந்த பொருளாதாரத் தடைகளை விதித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க மாஸ்கோ தயாராக உள்ளது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமைச்சின் இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உலகளாவிய வாழ்க்கையிலிருந்து நம்மை தனிமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் அமைதியை விரும்பினால் போருக்குத் தயாராகுங்கள்’ என கூறினார். கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்பாக ரஷ்யாவிற்கும் மேற்கு …

  3. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; குறைந்தது 100 பேர் காயம் டோஹோகு கடற்கரையில் சனிக்கிழமை பிற்பகுதியில் 7.3 ரிச்டெர் அளவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக 'த ஜப்பான் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. 2011 மார்ச் நிலநடுக்கம், சுனாமி மற்றும் அணுசக்தி பேரழிவின் 10 ஆவது ஆண்டு நிறைவுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் ஆறு மாகாணங்களில் பதிவான இந்த நிலநடுக்கம் குறைந்தது 100 பேரை காயப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் தோஹோகு பிராந்தியத்தில் மியாகி மற்றும் புகுஷிமா மாகாணங்களைத் தாக்கியது. சுனாமி எச்சரிக்கை எதுவும் இதனால் விடுக்கப்படவில்லை. மியாகி, புகுஷிமா, இபராகி, டோச்சிகி, சைட்டாமா மற்றும் சிபா மாகாணங்களிலுள்ள மக்கள் காயமடைந்ததாக அறிவிக்கப…

  4. ஜெனீவா கூட்டத் தொடர் இம்முறை இணைய வழியாகவே நடைபெறும் – பல நாடுகள் எதிர்ப்பு 2 Views ஜெனீவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இணைய வழியாகவே நடைபெறும் எனத் தெரியவருகின்றது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் கொழும்பிலிருந்து இணைய வழியாக உரையாற்றுவதற்கே திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் தற்போது பெருமளவுக்கு பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், பெரும்பாலான நிகழ்வுகளை இணைய வழியாக…

  5. ஜேர்மனி- நெதர்லாந்தில் கடுமையான பனிப்பெழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. வடக்கு ஜேர்மனியில் காணப்படும் பனியால் நெதர்லாந்து மற்றும் சில நீண்டதூர இடங்களுக்கு ரயில் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜேர்மனியில், மைனஸ் 7 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை பதிவாகும் என்றும் பனிப்புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெர்லின், ஹனோவர் உள்பட பல்வேறு இடங்களுக்கு மறு உத்தரவு வரும்வரை ரயில்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நெதர்லாந்தில் 9ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான அளவு பனி…

  6. ஆன் சாங் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையை வலியுறுத்திய தீர்மானம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றம் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆன் சாங் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மியன்மாரில் இராணுவ ஆட்சி அமுல்படுத்துள்ளமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நேற்று வெள்ளிக்கிழமை அவசரமாகக் கூடி ஆலோசித்தது. இதன்போதே, மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆன் சாங் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மியன்மாரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது …

  7. பி.பி.சி. உலக செய்திச் சேவைக்கு தடை விதித்தது சீனா பிரிட்டிஷ் தொலைக்காட்சி அலைவரிசையான பிபிசி உலக செய்திச் சேவைக்கு சீனாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை கூறியது. தடை குறித்து சீனாவின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவிக்கையில், "செய்திகள் உண்மையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும்", "சீனாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது" என்று மேற்கோள் காட்டியது. எனவே இந்த அலைவரிசை சீனாவில் ஒளிபரப்பப்படும் வெளிநாட்டு அலைவரிசைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவில்லை, மேலும் ஒரு வருடத்திற்கு ஒளிபரப்ப அதன் விண்ணப்பம் ஏற்கப்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. ஐ…

  8. பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகளை மீறும் பயணிகளுக்கு10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை! பிரித்தானியாவிற்கு வருகைதரும் பயணிகள் புதிதாக விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி, பொய் கூறினால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், 10 ஆயிரம் பவுண்ட்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியப் பொதுமக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகவும் வலுவான செயற்பாட்டை எதிர்பார்க்கிறார்கள் எனவும் குற்றத்தின் அளவுக்கு ஏற்ப அதிகபட்ச தண்டனை தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துச் செயலாளர் கிரான்ட் ஷப்ஸ் (Grant Shapps) தெரிவித்துள்ளார். பிரித்தானிய அரசாங்கம் COVID-19 தொற்று மற்றும் உருமாறி…

  9. அமெரிக்க மற்றும் சீன ஜனாதிபதிகள் தொலைபேசி வாயிலாக பேச்சு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் தொலைபேசி வாயிலாக பேசியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சீன ஜனாதிபதியுடன் பேசிய ஜோ பைடன் இருநாட்டு வர்த்தகம் தொடருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா-சீன வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீட்பதற்கான முயற்சியாக இருதலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர். சீனாவின் முறையற்ற பொருளாதார நடவடிக்கைகள், ஹொங்கொங் மீதான அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற பிரச்சினைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தமது கண்டனத்தை சீனாவுக்குத் தெரிவித்திருப்பதாக வெள்ளை மாளிகை விட…

  10. செவ்வாய்க் கிரகத்தில் தடம்பதித்தது ‘நம்பிக்கை’ விண்கலம்- ஐக்கிய அரபு இராச்சியம் வரலாற்று சாதனை! வளைகுடா நாடுகளில் முதன்முறையாக ஐக்கிய அரபு இராச்சியம் அனுப்பிய ‘நம்பிக்கை’ என்ற விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்தைச் சென்றடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 19ஆம் திகதி ஜப்பானின் தானேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஹெச்-2ஏ ரொக்கெற் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ‘அல் அமால்’ என அரபு மொழியில் பெயரிடப்பட்ட (தமிழில் நம்பிக்கை என பொருள்படும்) இந்த விண்கலம், 1.3 தொன் எடை கொண்டதாகும். இந்நிலையில், குறித்த விண்கலம் 201 நாட்களில் 49 கோடியே 50 இலட்சம் கிலோமீற்றர் தூரம் விண்வெளியில் பயணித்து 2021, பெப்ரவரி ஒன்பதாம் திகதி செவ்வாய்க் கிரகத்தைச் சென்றடைந்தது. …

  11. சவுதி அரேபியாவின் முக்கிய சமூக செயற்பாட்டாளர் 3 ஆண்டுகளின் பின் விடுதலை 24 Views சவுதி (Saudi Arabia)அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், பல்வேறு விழிப்புணர்வுகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் சமூக செற்பாட்டாளரான லூஜின் அல் ஹத்லால். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் லூஜின் கைது செய்யப்பட்டார். லூஜினின் சிறைத் தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில், 3 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பின் லூஜின் அல் ஹத்லால் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். ஆனால் அவரது விடுதலை குறித்து சவுதி அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும்…

  12. சதித்திட்டத்தின் பின்னாலுள்ள மியான்மர் இராணுவத் தலைவர்கள் மீது பைடன் பொருளாதாரத் தடைகள் விதிப்பு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மியன்மாரில் நடந்த இராணுவ சதித் தலைவர்களுக்கு பொருளாதாரத் தடை விதிக்கும் நிறைவேற்று ஆணையில் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார். இது ஆட்சி கவிழ்ப்பை வழிநடத்திய இராணுவத் தலைவர்கள், அவர்களின் வணிக நலன்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீது நேரடியாக தாக்கம் செலத்துகிறது. இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் உரையாற்றிய பைடன், இன்று, சதித்திட்டத்தின் தலைவர்கள் மீது விளைவுகளை சுமத்தத் தொடங்குவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை நான் அறிவிக்கிறேன். பர்மிய (மியான்மர்) அரசாங்கத்தில் ஒரு பில்லியன் டொலர்களை ஜெனரல்கள் முறையற்ற முறையில…

  13. மியான்மார் மீதான கண்டனத் தீர்மானம் தோல்வி – சீனா முறியடித்தது February 3, 2021 Myanmar's soldiers walk near the congress compound in Naypyitaw, Myanmar, February 2, 2021. REUTERS/Stringer NO RESALES NO ARCHIVES மியான்மாரில் ஏற்பட்ட இராணுவப் புரட்சிக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை கொண்டுவருவதற்கு பிரித்தானியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் முற்பட்டபோதும் அதனை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்துள்ளது. நேற்று (2) இணையத்தள வழியாக மூடிய அறைக்குள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை நாடுகள் மியான்மார் இராணுவப்புரட்சிக்கு எதிராக கூடியிருந்தன. இதன் போது பிரித்தானியா கண்டனத் தீர்மானத்தை முன்வைத்திருந்தது. …

  14. "கொரோனா சீன வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்க வாய்ப்பில்லை" - உலக சுகாதார நிறுவனம் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின் தலைவர் மருத்துவர் பீட்டர் பென் எம்பரேக் கொரோன வைரஸ் ஓர் ஆய்வகத்தில் இருந்து தான் வந்தது என்பதைக் கிட்டத்தட்ட மறுத்திருக்கிறது கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச நிபுணர்கள் குழு. "கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஓர் ஆய்வகத்தில் இருந்து வெளியாகி இருக்க வாய்ப்பு இல்லை" என உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின் தலைவர் மருத்துவர் பீட்டர் பென் எம்பரேக் கூறியுள்ளார். …

  15. ட்ரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு செனட் சபை அங்கீகாரம் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கான இரண்டாவது குற்றச்சாட்டு வழக்கு அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று அமெரிக்க செனட் சபை செவ்வாய்க்கிழமை வாக்களித்தது. அதன்படி ஏற்கனவே குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று குடியரசுக் கட்சியின் சில கவலைகள் இருந்தபோதிலும், வரலாற்று குற்றச்சாட்டு விசாரணையுடன் முன்னேற செனட் சபை வாக்களித்தது. 56 செனட்டர்கள் ஆம் என்றும் 44 பேர் அதற்கு எதிராகவும் வாக்களித்தனர். 56-44 பிளவு என்பது ஆறு குடியரசுக் கட்சியினர் ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து வாக்களித்தனர். அமெரிக்காவின் ஜனாதிபதியொருவர் இதற்கு முன்னர் இது போன்ற குற்றச்சாட்டுக்கு உ…

  16. ஈரான் அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு இணங்கும்வரை பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது: அமெரிக்கா! 2015ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு ஈரான் இணங்கும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘2015ஆம் ஆண்டின் அணு சக்தி ஒப்பந்தங்களுக்கு ஈரான் இணங்கும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது. சில நாட்களுக்கு முன்னர், அனைத்து விதிமுறைகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணுஆயுத ஒப்பத்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருக்கிறது. ஈரானுடனான தங்களது உறவை மேம்படுத்தும் வாய்ப்பாக இதனைக் கருதுவோம்’ என கூறினார். அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடை…

  17. டிசம்பர் 2019 க்கு முன் சீனாவில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை- உலக சுகாதார அமைப்பு ஆய்வுக்குழு பீஜிங் கொரோனா நோய் தோற்றம் குறித்து தடயங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்கள், இதுவரை அவர்கள் கண்டுபிடித்ததை இன்று வெளியிட்டு உள்ளனர். சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு தொடங்கியது என்பது குறித்த விசாரணை மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பின் சிறப்பு ஆராய்ச்சி குழு, கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் கண்டுபிடித்ததை இன்று வெளியிடவுள்ளதாக அறிவித்து இருந்தனர். விசாரணையில் ஈடுபட்டுள்ள சீனத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் உலக சுகாதார நிபுணர்களுடன் இணைந்து இன்று தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்…

  18. கொரோனா பாதிப்பு: இங்கிலாந்தில் வென்டிலேட்டர் சிகிச்சை பெற்ற 3ல் ஒருவருக்கு மனநல பாதிப்பு; ஆய்வில் அதிர்ச்சி தகவல் இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்று எளிதில் பரவ கூடிய ஒன்றாக மாறி பலரை பாதிப்பிற்கு ஆளாக்கியது. இதுதவிர புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்புகளும் அந்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அறியப்பட்டது. இதனால், அந்நாட்டுடனான பயணிகள் விமான போக்குவரத்து சேவைக்கு பல்வேறு நாடுகள் தற்காலிக தடை விதித்தன. இவற்றில் இந்தியாவும் அடங்கும். இந்நிலையில், லண்டன் இம்பிரீயல் கல்லூரி மற்றும் சவுதாம்ப்டன் பல்கலை கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், ஐ.சி.யூ. சூழலில், வென்டிலேட்டர் தேவையின்றி சிகிச்சை பெற்ற 18 சதவீதத்தினருக்கு மனநல பாதிப்பு இருந்துள்ளது …

  19. http://www.thinappuyalnews.com/wp-content/uploads/2021/02/download-13-8.jpg சீனாவுடன் ஆயுத தொடர்புகள் குறித்து.. நூற்றுக்கணக்கான இங்கிலாந்து கல்வியலாளர்கள் மீது விசாரணை! பிரித்தானியாவில் உள்ள 12இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் 200இற்கும் மேற்பட்ட பிரித்தானிய கல்வியலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. சீன அரசாங்கத்திற்குப் பாரிய அழிவு ஆயுதங்களை உருவாக்குவதற்கு, குறித்த கல்வியலாளர்கள் தெரியாமல் உதவி செய்தார்களா என்ற சந்தேகத்தில் இவ்வாறு விசாரணை இடம்பெறுவதாக டைம்ஸ் செய்தித்தாள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிக உணர்திறன் வாய்ந்த பாடங்களில் உள்ள அறிவுசார் சொத்துக்கள், நட்புநிலையற்ற நாடுகளுக்கு ஒப்படைக்கப்படுவது தடை…

  20. அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் சீனாவில் கைது! சீன அரச தொலைக்காட்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றிய அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் செங் லீ, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அரச இரகசியங்களை வழங்கியதற்காக சட்ட ரீதியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். செங் லீ சீனாவில் தடுத்து வைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், விசாரணைக்காக சந்தேகத்தின் பேரில் சீன அரசாங்கம் முறையாகக் கைதுசெய்துள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட்டில் செங் லீ, ஒரு வகையான தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதுடன் இந்தக் காவல், வழக்கறிஞர்களை அணுகுவதற்கான வாய்ப்பை மறுத்து ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைத்து விசாரிக்க சீனக் காவல்துறையை அனுமதிக்கிறது. இதேவேளை, செங் லீயை முறையாகக் கைதுசெய்வது குறித்து கடந்த வார இ…

  21. அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு’ எதிராக போராட ஐ.நாவுடன் மீண்டும் இணையும்: அமெரிக்கா 25 Views உலகெங்கிலும் உள்ள “அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு” எதிராக போராடுவதற்காக, 2018 ல் டொனால்ட் ட்ரம்ப் விட்டுச் சென்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீண்டும் சேரப்போவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிக்க உள்ளார். கடந்த மாதம் பதவியேற்றதிலிருந்து அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மீட்டமைக்க அமெரிக்க அதிபர் பைடன் எடுத்த தொடர் நடவடிக்கைகளில் சமீபத்தில் இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் காலத்தில் பின் இருக்கை பிடித்த கூட்டணிகளையும் சர்வதேச ஒத்துழைப்புகளையும் மீட்டெடுப்பதாக உறுதியளித்த நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந…

  22. அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தியது தென்னாபிரிக்கா! ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா நிறுத்திவைத்துள்ளது. தமது விஞ்ஞானிகள் குழுவின் ஆலோசனைகள் கிடைக்கும்வரை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட 501Y.V2 என்ற உருமாறிய கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்நிலைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஸ்வெலி ம்கைஸின் தெரிவித்துள்ளார். இந்தியாவின், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு மில்லியன் தடுப்பூசியை தென்னாபிரிக்கா பெற்றுக்கொண்டுள்ள நிலையில், சுகாதாரப் பணிய…

  23. உளவுத்துறை தகவல்கள் ட்ரம்புக்கு வழங்கப்படக் கூடாது: ஜோ பைடன்! முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில், உளவுத்துறை தகவல்கள் டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்க அரசாங்க நிர்வாகத்தில் மிக முக்கியமான உளவுத்துறை தகவல்களை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தெரிவிக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் தாறுமாறாக நடந்துகொள்ளும் ட்ரம்புக்கு அது தேவையில்லை. அவருக்கு எந்த மதிப்பீட்டின் உளவுத்தகவல்களை தெரிவிப்பது. ட்ரம்புக்கு தெரிவித்தால், உளவுத் தகவல்களை வெளியே கசியவிட்டு, அதுபற்றி ஏதாவது கமென்ட் அடிப்பதைத் தவிர, வேறு என்…

  24. பிரித்தானியாவில் சிறீலங்கா தேசியக் கொடி தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது! By Seelan - 16 hours ago Share இனவாதசிறீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூகாம் நகரசபையினரால் இந்த கொடி பறக்கவிடப்படிருந்தது. இதனால் மிகவும் வேதனை அடைந்த இலண்டன் வாழ் தமிழர்கள் தமிழ் இளையோர் அமைப்பின் உதவியுடன் மின்னஞ்சல் ஊடாகவும் சமூக வலையத்தளங்கள் ஊடாகவும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். “உங்கள் நடவடிக்கையால் நாம் மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். இந்தச் செயல் நியூகாம் பிரதேசத்தில் …

  25. நவல்னி சிறை விவகாரம்: சுவீடன், ஜேர்மனி- போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவிப்பு கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்ததற்கு எதிராக கடந்த மாதம் சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றம் சாட்டி, சுவீடன், ஜேர்மனி மற்றும் போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாஸ்கோ இராஜதந்திரிகளின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதுவதாகவும், கிரெம்ளினுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் நாடுகளிலிருந்து வரும் இராஜதந்திரிகள் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.