Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐஸ்லாந்தில்.. 20 நாட்களில், 40 ஆயிரம் நில அதிர்வுகள்! ஐஸ்லாந்தில் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 40 ஆயிரம் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. எரிமலைகளால் சூழப்பட்ட ஐஸ்லாந்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறன. இந்தநிலையில் வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் அதிக அளவில் நில அதிர்வுகள் பதிவாகி இருப்பது அந்நாட்டு மக்களை அச்சமடையச் செய்துள்ளது. நில அதிர்வுகள் காரணமாக எரிமலைகளில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/ஐஸ்லாந்தில்-20-நாட்களில்-40-ஆ/

  2. அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து ஆராய நாளை கூடுகிறது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி விவகாரம் குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு நாளை கூடி ஆலோசனை நடத்தவுள்ளது. உலக அளவில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசிகளில், ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது. இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு இரத்தம் உறைதல் ஏற்பட்டதாக தெரிவித்து, குறித்த தடுப்பூசிக்கு டென்மார்க், நோர்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்து ள்ளன. இதனால் ஏனைய நாடுகளிலும் இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், அஸ்ட்ரா ஜெ…

  3. சீனாவில் 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிப்பு சீனாவில் கொரோனா வைரஸின் தோற்றம் பற்றிய ஆய்வில், 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வௌவால் வைரஸ்கள் குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் ஷான்டோங் மருத்துவ பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஷி வெய்போங் என்பவர் தலைமையில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தென்மேற்கு சீனாவில் இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் 4 வைரஸ்கள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்களுடன் தொடர்புடையவை என தெரி…

  4. இரத்தம் உறைதல் குற்றச்சாட்டு: அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள்! ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தியுள்ளன. இதன்படி, ஸ்பெயின், ஜேர்மனி, இத்தாலி, போர்த்துகல், ஆஸ்திரியா, லாட்வியா, ஸ்லோவேனியா, நெதர்லாந்து, டென்னமார்க் ஆகிய நாடுகள் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்து உள்ளன. அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு இரத்த உறைவு ஏற்பட கூடிய பல சம்பவங்கள் தெரியவந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிறைவடையாத விசாரணை காரணமாக ஒன்பது ஐரோப்பிய நாடுகள் முடிவை எடுத்துள்ளது. எனினும், அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம், சேகரித்து …

  5. நைஜரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 58 பேர் உயிரிழப்பு! மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் சுமார் 58 பேர் உயிரிழந்துள்ளனர். Tillabéri பிராந்தியத்தில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் கிளர்ச்சியாளர்களினால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாலி அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று(புதன்கிழமை) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், துப்பாக்கிதாரிகளினால் பொதுமக்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் எரியூட்டப்பட்டதுடன் மேலும் இரண்டு வாகனங்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன எவ்வாறாயினும் இந்த தாக்குதலுக்கு இதுவ…

  6. எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது – அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை 7 Views “நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது என்று அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சி வரும் நாட்களில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் தென் கொரியாவுக்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது குரலைப் பதிவு செய்துள்ளார். இது…

  7. 70 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட Jpeg புகைப்படம் - அதில் அப்படி என்ன இருக்கிறது? #NFTCrypto ஜெனிஃபர்.ம.ஆ Everydays: The First 5000 Days கிரிப்டோகரன்சி கொடுத்து ஒரு விர்ச்சுவல் சொத்தை வாங்குவது சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. ஆயிரம் இரண்டாயிரம் என்றில்லாமல் மில்லியன்களில் இந்த என்.எஃப்.டி-க்களின் விற்பனை நடக்கிறது. #Everydays: The First 5000 Days நெருப்பு, சக்கரம், மின்சாரம்... இந்த வரிசையில் மனித குலத்தின் வளர்ச்சியில் அசுர பாய்ச்சல் ஏற்படுத்திய விஷயம் இணையம். சில நூறாண்டுகளுக்கு முன்புவரை, மின்சார ஆற்றலை பற்றி யாரேனும் பேசியிருந்தால் பலருக்குப் புரிந்திருக்காது. ஐம்பதாண்டுகளுக்கு முன்வரை வயர்லெஸ் செல்போன் ப…

  8. மியன்மாரின் பல பகுதிகளில் இராணுவ சட்டம் அறிவிப்பு ; இதுவரை 126 பேர் பலி இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டங்களின் போது மியான்மர் பாதுகாப்புப் படையினர் குறைந்தது 38 பேரைக் கொலை செய்ததாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கோனில் உள்ள பல நகரங்களில் இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் தினமும் தொடரும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் முயன்று வருவதால் 126 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை தன்னிச்சை மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளினால் உயிரிழந்துள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் உறுதிபடுத்தியுள்ளது. நேற்யை தினம் ஆர்ப்பாட்டக்காரர்க…

  9. ரத்தம் உறைதலுக்கும்.. தடுப்பூசிக்கும், எந்தத் தொடர்பும் இல்லை – அஸ்ட்ராசெனகா நிறுவனம் ஒஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ரத்தம் உறைதலுக்கும் தங்களின் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அஸ்ட்ராசெனகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஒஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட டென்மார்க்கைச் சேர்ந்த ஒருவர் வெய்ன் த்ராம்போசிஸ் எனப்படும் நரம்பில் ரத்தம் உறைந்து உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, நோர்வே, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, ஜேர்மன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ராசெனகா ஊசி போடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன. …

  10. டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளில் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிப் பயன்பாடு நிறுத்தம்! டென்மார்க்கில் இரண்டு வாரங்களுக்கு அஸ்ட்ரா செனேகாவின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவது இடைநிறுத்தப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு கடுமையான இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்பதன் அடிப்படையில் இது இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்படக்கூடிய கடுமையான பக்கவிளைவுகள் குறித்த அறிக்கைகளுக்கு டென்மார்க் மருந்துகள் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என டென்மார்க் சுகாதார ஆணையத்தின் இயக்குநர் சோரன் ப்ரோஸ்ட்ரோம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விளைவுகள் கு…

  11. சீனாவில் 24 வகையான வவ்வால் கொரோனா வைரசுகள்; சர்வதேச விஞ்ஞானிகள் குழு அதிர்ச்சி சீனாவில் கொரோனா வைரசின் தோற்றம் பற்றிய ஆய்வில், 24 வகையான வவ்வால் கொரோனா வைரசுகள் கண்டறியப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பதிவு: மார்ச் 15, 2021 14:16 PM பீஜிங், சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. விலங்கு சந்தை ஒன்றில் இருந்து இந்த வைரசானது தோன்றியிருக்க கூடும் என முதலில் கூறப்பட்டது. எனினும், அதற்கு போதிய சான்றுகள் வழங்கப்படவில்லை. இதன்பின்னர் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கிளை பரப்ப தொடங்கின. இவற்றில் வல்லரசு நாட…

  12. ஜெருசலேமில் தூதரகத்தை முறையாக திறந்து விட்டதாக கொசோவோ அறிவிப்பு! இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதலின் மையத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய நகரத்தில் தூதரகத்தை நிறுவிய முதல் ஐரோப்பிய நாடாக தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசோவோ மாறியுள்ளது. ஜெருசலேமில் உள்ள தனது தூதரகத்தை முறையாக திறந்து விட்டதாக கொசோவோ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதும், செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கொசோவோ-செர்பியா உச்சிமாநாட்டின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. கொசோவோ ஜெருசலேமில் தனது தூதரகத்தை நிறுவுவதில் அமெரிக்கா மற்றும் குவ…

    • 0 replies
    • 351 views
  13. அமெரிக்கா தலைமையில் கூடிய சீன எதிர்ப்பு கூட்டணி 12 Views ஆசியாவின் நேட்டோ என அழைக்கப்படும் நான்கு நாடுகளின் கூட்டணித் தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (12) முதல் தடவையாக ஒன்றாக கூடி கலந்துரையாடியுள்ளனர். காணொளி ஊடாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹரிஸ், யப்பான் பிரதமர் ஜோசிகைட் சூகா, அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிஸன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். கோவிட்-19 நெருக்கடி தொடர்பான விடயங்கள் ஆரயப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் படைத்துறை வளர்ச்சிளை தடுக்கும் நடவடிக்கைகளும் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தெரிவிக…

  14. பிரேசிலின் கொரோனா நெருக்கடி : உலகின் பிற பகுதிகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருவது ஏன்? பிரேசிலைத் தாக்கிய கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த நாடு இப்போது 70,000-க்கும் அதிகமான பாதிக்கப்பட்டவர்களை, தினசரி 2,000 இறப்புகளையும் பதிவு செய்கிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழக தரவுகளின்படி, பிரேசில் கடந்த வாரம் 4,75,503 புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களையும் 11,009 இறப்புகளையும் பதிவு செய்தது. இவை இரண்டும் மிக உயர்ந்தவை. மார்ச் 10 அன்று, இந்த நாட்டில் 2,286 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன. இது ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான எண்ணிக்கை என்று Reuters தெரிவித்துள்ளது. மேலும் இது, 80,000 புதிய பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் …

  15. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானியா பொருட்களின் ஏற்றுமதி வீழ்ச்சி! ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானியா பொருட்களின் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 40.7 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இறக்குமதி 28.8 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் புதிய வர்த்தக விதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இந்த புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது. கூர்மையான வீழ்ச்சி இருந்தபோதிலும், இது தற்காலிக காரணிகளின் விளைவாக இருக்கலாம் என்று தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் கூறியுள்ளது. இதற்கிடையில், மூன்றாவது முடக்கநிலை நடைமுறைக்கு வந்ததால், ஜனவரி மாத…

  16. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பிரஜையொருவக்கு குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 44 வயதான சம்பத் சமரநாயக்க என்பவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2018) பிரிஸ்பேனின் இரவு விடுதியொன்றில் தன்னை, டெக்ஸி வாகன சாரதியாக போலியாக அடையாளம் காட்டி, ஐந்து பெண்களை அழைத்துச் சென்றுள்ளதுடன், அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர் மீது பிரிஸ்பேன் மாவட்ட நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமைகள், சுதந்திரத்தை பறித்தல், அநாகரீகமான செயல்கள் மற்றும் பொதுவான தாக்குதல் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது. இந் நிலையில் வியாழக்கிழமை 18 குற…

    • 2 replies
    • 587 views
  17. உலகளவில் ஒரு தலைமுறையே பாதிக்கப்படும் அபாயம்- யுனிசெஃப் எச்சரிக்கை! குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் வளர்ச்சியை அளவிடும் குறிகாட்டிகள் அனைத்தும் கடந்த ஒரு வருட கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெஃப் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டமை, வறுமை, கட்டாயத் திருமணங்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை சிறார்களின் வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், ஒரு தலைமுறையே இதனால் பாதிக்கப்படும் என்றும் யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில், பசி, தனிமை, துஷ்பிரயோகம், பதற்றம், வறுமையில் வாடும் மற்றும் திருமணத்திற்குத் தள்ளப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ய…

  18. சீனாவின் சைபர் தாக்குதல்கள்... சைபர் போருக்கான அறிகுறியா? பிரசன்னா ஆதித்யா Cyber Warfare சீனா தங்கள் நாட்டு இணையத்தைச் சுற்றி Great Firewall of China-வை உருவாக்கியிருக்கிறது. ஆனால், இந்தியாவிடமோ எந்த தற்காப்புத் திட்டமோ அல்லது தாக்குதல் திட்டமோ இல்லை. இந்தியா விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இரண்டாம் உலகப் போரை அடுத்து, உலகில் பெரும் சேதத்தை விளைவிக்கும் வகையில் எந்தப் போரும் நிகழவில்லை. போர் என்று வந்துவிட்டால் அது அதைத் தொடர்புடைய அனைத்து நாடுகளையும் பாதிக்கும். இரண்டாம் உலகப் போர் மாதிரியான இன்னொரு போர் உலகில் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு குறைவுதான். ஏனெனில் அதனால் ஏற்படக்கூடிய சேதங்களையும், பாதிப்புகளையும் அனைத்து நா…

    • 1 reply
    • 914 views
  19. அபூர்வ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு! சுவிஸ் எல்லையிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இத்தாலிய கிராமம் ஒன்றில், அபூர்வ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் எல்லைக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அபூர்வ வகை கொரோனா வைரஸ், இதற்கு முன்னர் தாய்லாந்தில் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபூர்வ வகை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் அண்மையில் எகிப்திலிருந்து வருகை தந்துள்ளதாக கருதப்படுகிறது. http://athavannews.com/அபூர்வ-வகை-கொரோனா-வைரஸ்-க/

  20. அரச குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஹரி- மேகன் மார்க்கல்! பிரித்தானிய இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கல் ஆகிய இருவரும் அரச குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், தங்களது தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள் குறித்தும் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ் ப்ரைம்டைம் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய இரண்டு மணி நேர நேர்காணலில் வெளியிட்ட விபரங்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன. அரச குடும்ப வாழ்க்கை குறித்த மேகனின் கருத்துக்களை ஓப்ரா கேட்டபோது, ‘நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை. இதை நான் ஹரியிடம் கூறுவ…

  21. புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு துனிசிய கடற்பரப்பில் கவிழ்ந்ததில் 39 பேர் பலி சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் தெற்கு துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸ் கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை மூழ்கி விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலோர காவல்படை 165 பேரை மீட்டது, மேலும் தப்பிப்பிழைத்தவர்களுக்கான தேடல்கள் ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்று துனிசிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் ஜெக்ரி தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்த அனைத்து குடியேற்றவாசிகளும் சகாரா-கீழமை ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். துனிசிய துறைமுக நகரமான ஸ்பாக்ஸுக்கு அருகிலுள்ள கட…

  22. உய்குர் இன முஸ்லீம்களைச் சீனா இனப்படுகொலை செய்துள்ளதாக அறிக்கை வெளியானது! உய்குர் இன முஸ்லீம்களை சீனா இனப்படுகொலை செய்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜின்ஜியாங் பகுதி தடுப்பு முகாம்களின் தாயகமாக இருப்பதாகவும் அங்கு வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் பெண்கள் பாலியல் வன்கொடுமை, பொது அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும் அந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளத…

  23. எக்குவடோரிய கினியா வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 98 ஆக உயர்வு மத்திய ஆபிரிக்க நாடான எக்குவடோரிய கினியின் முக்கிய நகரமான பட்டாவில் அமைந்துள்ள இராணுவ தளமொன்றில் ஏற்பட்ட தொடர்ச்சியான வெடி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்வடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். அதேநேரம் கடலோர நகரமான பட்டாவில் உள்ள 'Nkoantoma' என்ற இராணுவத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் சுமார் 615 பேர் காயமடைந்தனர். 1979 முதல் நாட்டின் ஜனாதிபதியாகவுள்ள தியோடோரோ ஒபியாங் நுயெமா, டைனமைட்டைக் கையாள்வது தொடர்பான “அலட்சியம்” தான் பேரழிவிற்கு காரணம் என்றும், வெடிப்புகள் பட்டாவில் உள்ள அனைத்து வீடுகளையும் கட்டிடங்களையும் சேதப்படுத்தியதாகவும் …

  24. சுவிற்சர்லாந்தில் மூன்று முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான சட்டமூலங்களுக்கான பொதுசன வாக்கெடுப்பு இன்று நடைபெற்றாலும் அதில் முக்கியமாக மக்கள் பேசுபொருளாக இருப்பது பர்தா எனப்படும் முகத்தை மூடும் ஆடைகளை அணிவதை தடை செய்வதற்கான சட்டமூலம் ஆகும். இச்சட்டத்தின் பிரகாரம் பொது இடங்களில் முகத்தை மூடும் ஆடைகளை எவரும் அணிய முடியாது. இருந்தாலும் சுகாதாரகாரணங்கள்,காலநிலை, வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். சுவிற்சர்லாந்தில் பல ஆண்டுகளாக இத்தடை சட்டமூலம் பற்றிய பல வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டமூலத்திற்கு ஆதரவான தரப்பினர் மூன்று வாதங்களை முன்வைக்கின்றார்கள். அதன் கருத்தில், முகத்தை மறைப்பது ஒரு சுதந்திர சமுதாயத்தில் ஒன்றாக வாழ…

    • 7 replies
    • 1.1k views
  25. சிங்கப்பூர் வளர்ச்சிக்கு இதான் காரணம்!! Law Minister-ஆக கலக்கும் தமிழர் பேட்டி

    • 0 replies
    • 509 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.