Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இளையோர் ‘ஒன் லைன்’ ஊடகத்துக்கு தன் நேர்காணலை வழங்கிய பிரெஞ்சு அதிபர் மக்ரோன் பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் பிரதான ஊடகங்களை விட சமூக ஊடகங்களே இளைய தலைமுறையை ஈர்க்கிறது. அவர்களுக்குச் சேர வேண்டிய விடயங்களை அவற்றின் ஊடாக அணுகிச் சொல்ல வேண்டிய மாற்றத்துக்குரிய கால கட்டம் இது. முழுக்க முழுக்க சமூகவலைத்தளங்கள் ஊடாக ஒளிபரப்பப்படும் ‘ஒன் லைன்’ வீடியோ மீடியா ஒன்றுக்குத் தனது நீண்ட நேர்காணலை வழங்கியிருக்கிறார் பிரெஞ்சு அதிபர் மக்ரோன். ருவீற்றர், முகநூல், ரிக்ரொக், யூரியூப் என முழுவதும் சமூகவலைத்தளங்களில் ஒளிபரப்பப்படுகின்ற ‘புறு மீடியா’ வில் (https://www.brut.media/fr) மக்ரோனின் செவ்வி நேற்று ஒளிபரப்பாகியது.. …

  2. அகதிகளின் வழக்குளை விசாரிக்க அவுஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம்? 32 Views அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்த நிலையில், அது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் அவுஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்ற விவாதம் மேலெழுந்துள்ளது. இது தொடர்பான அவுஸ்திரேலிய அரசின் முறையீட்டில், புலம்பெயர்வு சட்டத்தின் அடிப்படையில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொடர்பான விவகாரங்களை அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்பட்ட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. இம்முறையீடு தொடர்ந்து அவுஸ்திரேலிய உயர் நீத…

  3. பில் கிளின்டன், புஷ், ஒபாமா மூவரும் பகிரங்கமாகத் தடுப்பூசி ஏற்ற முடிவு கார்த்திகேசு குமாரதாஸன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான புஷ், கிளின்டன், பராக் ஒபாமா ஆகிய மூவரும் நாட்டு மக்கள் பார்க்கும் வண்ணம் கமராக்களின் முன்பாகப் பகிரங்கமாக வைரஸ் தடுப்பூசியைத் தங்களுக்கு ஏற்றிக்கொள்ள முன்வந்துள்ளனர். வைரஸ் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தடுப்பு மருந்து குறித்து மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையீனங்களைக் களைவதற்காகவும் அவர்கள் இந்த முயற்சியில் இறங்கவுள்ளனர். அவர்களது இந்த முடிவு தொடர்பான தகவல்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி உள்ளன. சுமார் 50 வீதமான அமெரிக்கர்கள் மத்தியில் வைரஸ் தடுப்பு மருந்துகள…

  4. 100 நாட்களுக்கு முகக் கவசத்தை அணியுமாறு அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் வேண்டுகோள்! December 5, 2020 100 நாட்களுக்கு முகக் கவசத்தை அணியுமாறு அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் அந் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பதவியேற்றதும் இதனை அமுல்படுத்த இருப்பதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார். கொரோனாத் தொற்றானது மிகப்பெரிய அளவில் அமெரிக்காவில் பரவி வரும் நிலையில் முகக்கவசம் மூலமே மக்களை பாதுகாக்க முடியும் என்று ஜோ பைடன் பிரசாரம் செய்து வருகிறார். குறிப்பாக முகக் கவசம் அணியாதவர்கள் அடுத்தவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் முகக்கவசம் அணிவது தேசியக் கடமை என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/953…

  5. அர்மீனியா உடனான மோதலில் 2,783 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததாக அசர்பைஜான் அறிவிப்பு! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/12/929816-azerbeijan-war-new-720x450.jpg அர்மீனியா உடனான நாகோர்னோ-கராபாக் பகுதி ஆக்கிரமிப்பு தொடர்பான மோதலில், 2,783 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததாக அசர்பைஜான் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், 103 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியவில்லை எனவும், 100-க்கும் மேற்பட்ட வீரகள் காணவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேசத்திற்கான போரில் ஆர்மீனியாவிற்கு எதிராக, தங்களது வீரர்கள் தைரியத்தையும், வீரத்தையும் வெளிக்காட்டியதாக அசர்பைஜன் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, இந்த மோதல…

    • 0 replies
    • 843 views
  6. இங்கிலாந்து- வேல்ஸிற்கு உயிருள்ள விலங்குகளை இறைச்சிக்காக கொல்வதற்கு அனுப்ப தடை புதிய அரசாங்கத் திட்டங்களின் கீழ், இங்கிலாந்து மற்றும் வேல்ஸிற்கு உயிருள்ள விலங்குகளை இறைச்சிக்காக கொல்வதற்கு அனுப்ப தடை விதிக்கப்படும். சுற்றுச்சூழல் செயலாளர் ஜோர்ஜ் யூஸ்டிஸ், 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக விதிகளிலிருந்து பிரெக்சிட் பிந்தைய முறிவில் இந்த தடை அமுலில் இருக்கக்கூடும் என கூறினார். ஆர்எஸ்பிசிஏ இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது. இது விலங்கு நலனுக்கான ஒரு முக்கிய சாதனை என்று கூறியது. ஆனால், பெரிய மாற்றங்கள் இங்கிலாந்தின் உணவு விநியோகச் சங்கிலியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரித்தது. இந்தத் திட்டம் குற…

  7. அதிர்வலைகளை ஏற்படுத்தும் அமெரிக்க அரசியல் :நிதி முறை கேடு அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்பிடம் விசாரணை அதிபர் டிரம்பின் பதவியேற்பு விழாவின் போது திரட்டப்பட்ட நிதி சுமார் ரூ.790 கோடியில் இருந்து குறிப்பிட்ட தொகை தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தொகையானது அதிபர் டிரம்பின் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் இருந்து டிரம்ப் குடும்பம் ஆதாயம் தேடியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள டிரம்ப் ஓட்டலானது, அரசு தொடர்பான கூட்டங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்ததாகவும், பெரும்பாலான கூட்டம் நிர்பந்தம் காரணம் டிரம்ப் ஓட்டலில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை அனைத்தையும்…

  8. புதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் தீர்மானம்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/12/115778679_tv064072243-720x450.jpg ஈரான் தனது அணுசக்தி தளங்களை ஆய்வு செய்வதை நிறுத்தவும், அதன் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்கவும் ஈரான் தீர்மானித்துள்ளது. இந்த சட்டமூலம் யுரேனியத்தை செறிவூட்டுவதை 20 சதவீதமாக மீண்டும் தொடங்க வேண்டும். இது 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட 3.67 சதவீதத்துக்கும் மேலானது. ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே இலக்கு வைக்கப்பட்ட பின்னர் இது வருகிறது. இன்னும் மூன்று மா…

  9. மலேசிய பொலிஸின் தலைமை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – விடுதலைப்புலிகளின் தளபதி என தெரிவிக்கும் நபரை கைதுசெய்ய நடவடிக்கை Rajeevan Arasaratnam December 2, 2020மலேசிய பொலிஸின் தலைமை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – விடுதலைப்புலிகளின் தளபதி என தெரிவிக்கும் நபரை கைதுசெய்ய நடவடிக்கை2020-12-02T09:20:23+05:30 மலேசியாவின் பொலிஸின் தலைமை அதிகாரியை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தல விடுத்துள்ள விடுதலைப்புலிகளின் பிரதான தளபதி தான் என தெரிவிக்கும் நபர் ஒருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மலேசிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் பிரதான தளபதி என தெரிவித்துள்ள நபர் ஒருவர் மலேசியாவின் பொலிஸ்மா அதிபர் அப்த…

    • 9 replies
    • 1.4k views
  10. பிரான்சின் முன்னாள் அதிபர் வலெரி ஜெஸ்கா வைரஸ் தொற்றினால் சாவடைந்தார்! December 3, 2020 பிரான்ஸின் முன்னாள் அதிபர் வலெரி ஜெஸ்கா (Valéry Giscard d’Estaing) தனது 94 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். அண்மையில் மாறி மாறி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக அவரது இல்லத்தில் உயிரிழந்தார் என்று குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். பெப்ரவரி 2,1926 இல் ஜேர்மனியில் பிறந்தவர் வலெரி ஜெஸ்கா. பின்னர் பிரான்ஸின் Auvergne பிராந்திய அரசியல் ஊடாக நாட்டின் தேசிய அரசியலுக்குள் அடியெடுத்துவைத்தார். மைய வலதுசாரி அரசியல்வாதியான அவர் முன்னாள் அதிபர் சார்ள் து ஹோலின் ஆட்சியிலும் அதன் பின்னரும் பல முக்கிய அமைச்சுப் ப…

  11. பாதசாரிகள் மீது காரை மோதி தாக்குதல்: ஜேர்மனியில் கைக்குழந்தை உட்பட நால்வர் பலி! 30 பேர் காயம்!! ஜேர்மனியில் காரை பாதசாரிகள் மீது வேகமாகச் செலுத்தி நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.30 பேர் வரை காயமடைந்திருக்கின்றனர். உயிரிழந்தவர்களில் ஒன்பது மாத கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாகப் பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை உயரக் கூடும் என்று முதலில் வெளியாகிய செய்திகள் தெரிவித்தன. ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் ட்ரையர் (Trier) என்னும் நகரில் இந்தத் தாக்குதலை நடத்திய 51 வயதான சாரதி ஒருவரைப் பொலீஸார் கைதுசெய் திருக்கின்றனர். காரும் கைப்பற்றப்பட்டுள்ளது. நகரில் பாதசாரிகள் நடமாடும் …

  12. அவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின் நிலைப்பாடும் – முடிவு அதிர்ச்சியானதாக அமையலாம்? நியூசிலாந்து சிற்சபேசன் அண்மையிலே அவுஸ்திரேலியா இராணுவத்தின் சிறப்புப்படை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகியது. அஃது ஆப்கானிஸ்தானில் சிறப்புப்படையினர் மீதான படுகொலைக் குற்றச்சாட்டு தொடர்பானதாகும். விசாரணை முடிவு அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம் என்பதை அவுஸ்திரேலியப் பிரதமர் முன்னரே கோடி காட்டியிருந்தார். இருந்தபோதிலும், சிறப்புப்படையினர் சட்டவிரோதக் கொலைகளுடன் சம்பந்தப்பட்டதை அறிந்தபோது கங்காருதேசம் அதிர்ச்சியடைந்தது. 2001 செப்டம்பரில் நியூயோர்க் இரட்டைக்கோபுரம் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன்போது மூவாயிரம் வரையானவர்கள் கொல்லப்பட்…

  13. பைடனுக்கு எதிராக இஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப் ஈழத்தமிழர், ரோகின்யா முஸ்லிம்கள் உள்ளிட்ட உலகில் விடுதலை வேண்டிப் போராடும் தேசிய இனங்களின் அரசியல் விடுதலை குறித்த செயற்பாடுகளில், மேற்குலக நாடுகள் கையாண்ட தவறான அணுகுமுறைகளே, உலகில் இன்று எழுந்துள்ள அரசியல், பொருளாதார இராஜதந்திர நெருக்கடிகளுக்கான பிரதான காரணமென்ற அவதானிப்புகளும் உண்டு 0 அ.நிக்ஸன் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பயங்கரமான பதிலடி கொடுப்போம் என்று ஈரான் சென்ற 11ஆம் திகதி புதன்கிழமை கூறியுள்ள நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களச் செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோர் சவுதி இளவரசர் முகமது பின்…

  14. நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக ஐநா சபை கூறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொலை செய்தனர். இந்தப் படுகொலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் போக்கா ஹராம் அல்லது ஐஎஸ் அமைப்பின் மேற்கு ஆப்பிரிக்கப் பிரிவு இதனைச் செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. http://athavannews.com/நைஜீரியாவில்-100க்கும்-மேற/

  15. எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு: டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது பட மூலாதாரம், GETTY IMAGES எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அறிவித்துள்ளார் பிரதமர் அபிய் அகமது. பிராந்தியத்தின் ஆளும் கட்சியான டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு (டீ.ம.வி.மு.) எதிரான தாக்குதலை தீவிரப்படுத்திய மத்திய அரசுப் படைகள், முன்னதாக மிகாய்லி நகரத்தில் நுழைந்திருந்தன. ராய்டர் செய்தி முகமையிடம் பேசிய டீ.ம.வி.மு. தலைவர், தெப்ரஸ்தீயான் கெப்ரமீக்கேல் சுயநிர்ணய…

  16. புதை குழிகளிலிருந்து எழும் விலங்குகள் டெனிஸ் அரசுக்கு தொடர்ந்து தலைவலி – கண் கலங்கிய பிரதமர் கார்த்திகேசு குமாரதாஸன் மிங் (Mink) விலங்குகள் இன அழிப்பு விவகாரம் டென்மார்க் அரசுக்குத் தொடர்ந்தும் பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது. படம்: விலங்குகள் அழிக்கப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படும் மிங் பண்ணை ஒன்றுக்கு விஜயம் செய்த பின்னர் TV2 தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த டெனிஸ் பிரதமர் Mette Frederiksen இடையில் பல தடவைகள் கண்கலங்கிய காட்சி பாரிய கிடங்குகளில் லட்சக் கணக்கில் புதைக்கப்பட்ட விலங்குகள் அமுக்கம் காரணமாக ஊதிப் பெருத்து புதை குழிகளில் இருந்து மேலெழுகின்றன. இதனால் புதிதாகப் பெரும் சுகாதார நெருக்கடிகள் ஏற்பட்…

  17. ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற தீர்மானம் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி என தேர்தல் கல்லூரியினால் முறையாக அறிவிப்பப்பட்டுள்ளதால் தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நவம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்க மறுத்திவிட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் உரையாற்றிய ட்ரம்ப், தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்வது கடினம் என்று கூறினார். அத்துடன் தேர்தல் மோசடி குறித்த ஆதராமற்ற குற்றச்சாட்டுகளையும் இதன்போது மீண்டும் முன்வைத்தார். அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் தேர்தல் கல்லூரி முறையின் கீழ் பைடனுக்கு 306 வாக்குகளும்…

  18. 27 நவம்பர் 2020, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, காவல்துறை தலைமையகத்தில் புகார் கொடுத்து விட்டு வெளியே வரும் இசை கலைஞர் மிஷெல் ஸெக்லர் (இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கருப்பின இசை கலைஞரை மூன்று காவல்துறையினர் கடுமையாக தாக்கிய சம்பவம பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பிரான்ஸின் பிரபல இசை கலைஞர்கள், கால்பந்தாட்ட அணியினர் உள்ளிட்ட பலரும் சமூக ஊடகங்கள் வாயிலாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். கடந்த சனிக்கிழ…

  19. டிக்ரே மோதலில் சர்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது- எத்தியோப்பியா திட்டவட்டம்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/11/201125-tigray-ethiopia-mc-10455_df26fe974738625d819b462af20407a6.fit-760w-720x450.jpg எத்தியோப்பியாவில் மத்திய அரசாங்கத்துக்கும் அந்த நாட்டின் டிக்ரே மாகாணத்துக்கும் இடையிலான மோதல் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று பிரதமர் அபை அகமது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (புதன்கிழமை) கூறுகையில், ‘எத்தியோப்பியா குறித்து நட்பு நாடுகள் அக்கறை காட்டுவதைப் பாராட்டுகிறோம். ஆனால், எங்களது உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேச…

  20. மாய் கத்ராவில் குறைந்தது 600 பேர் படுகொலை: எத்தியோப்பியன் உரிமைகள் அமைப்பு எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தின் மாய் கத்ரா நகரில் இம் மாத தொடக்கம் முதல் அரங்கேறிய இனரீதியான படுகொலைகளில் குறைந்தது 600 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந் நாட்டு மனித உரிமை அமைப்பு விசாரணைகளில் தெரிவித்துள்ளது. வடக்கு பிராந்தியத்தில் மத்திய அரசின் இராணுவ பதவிகளுக்கு எதிராக டைக்ரேயன் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து, எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது பிராந்திய அரசாங்கத்திற்கு எதிராக தாக்குதலைத் தொடங்கிய நவம்பர் 4 முதல் டைக்ரே பிராந்தியம் கடும் மோதல்களுக்கு முகங்கெடுத்தது. அப்போதிருந்து, தகவல்தொடர்புகள் குறைக்கப்பட்டமையினால் டைக்ரேக்கான அணுகல் இ…

  21. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு விதிகளை தளர்த்த ஜேர்மன் மாநிலங்கள் திட்டம் ஜேர்மனியின் 16 மாநிலங்கள், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் 10 பேர் வரை கூடியிருப்பதற்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளன. குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாக கொண்டாட அனுமதிக்கும் வகையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் தொற்று பரவலை தடுக்க கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை டிசம்பர் 20 வரை நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது பாடசாலைகள் மற்றும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கும் அதேவேளை மதுபான நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை மூடி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்டை நா…

  22. சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன்: பிடன்! சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க தான் விரும்புகிறேன் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். தனது சொந்த ஊரான டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் நகரில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன். இதன் நோக்கம் சீனாவை தண்டிக்க வேண்டும் என்பது அல்ல. சர்வதேச சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை சீனா புரிந்து கொள்வதை உறுதி செய்வது ஆகும். இது ஒரு எளிய முன்மொழிவு ஆகும். …

  23. பல போர்களை ஜோ பிடன் தொடங்குவார்: சீன அரசாங்க ஆலோசகர் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், பல போர்களைத் தொடங்குவார் என சீன அரசாங்க ஆலோசகர் ஜெங் யோங்னியான் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தில் மோசமடைந்த உறவு, பிடனின் ஆட்சிக் காலத்தின் போது சரிசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆலோசகர் ஜெங் யோங்னியான் கூறுகையில், ‘அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவுடனான அதன் உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும். அத்துடன், அமெரிக்கா மேற்கொள்ளும் கடுமையான நிலைப்பாட்டை எதிர்கொள்ள சீனா தயாராக இருக்க வேண்டும். நல்ல பழைய நாட்கள் முட…

    • 2 replies
    • 904 views
  24. ஜோ பிடனுக்கு முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்ய தயாராகும் ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடனுக்கு முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்யத் தொடங்க, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் தனது தோல்வியை ஏற்க தயங்கிவந்த ட்ரம்ப், பிடன் பதவியேற்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை முறையாகச் செய்ய, ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (GSA) எனும் முக்கியமான அரசாங்க அமைப்பிடம் பரிந்துரைத்துள்ளார். எனினும், டொனால்ட் ட்ரம்ப், தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதாக இதுவரை முறைப்படி ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளில் ட்ரம்ப் அணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட அதிகா…

  25. கொவிட்- 19: 200 கோடி தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்! – யுனிசெப் அறிவிப்பு November 24, 2020 கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இந் நிலையில் 2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெப் (unicef) அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் புருண்டி உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் என்றும், மருந்தை எடுத்துச் செல்ல 350 விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது https://thinakkural.lk/article/92106

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.