Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிறிதாக்கப்பட்ட அணு சாதனங்களை உருவாக்குகிறதா வடகொரியா? ஐ.நா சந்தேகம்! வட கொரியா தனது அணு ஆயுதத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதாகவும், பாலிஸ்டிக் ஏவுகணைகளின் போர்க்கப்பல்களுக்கு பொருந்தும் வகையில் சிறிதாக்கப்பட்ட (miniaturised) அணு சாதனங்களை உருவாக்கியிருக்கலாம் எனவும் ஐ.நா சந்தேகம் வெளியிட்டுள்ளது. ஐ.நா. பொருளாதாரத் தடைகளை கண்காணிக்கும் சுயாதீன வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இந்த தகவலை தெரிவிக்கின்றது. வட கொரியாவின் கடைசி ஆறு அணுசக்தி சோதனைகள், சிறிதாக்கப்பட்ட அணு சாதனங்களை உருவாக்க உதவியிருக்கலாம் எனவும் சில நாடுகள் நம்புகின்றன. இந்த அறிக்கையினை, 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.பாதுகாப்புக் குழு, வட கொரியா பொருளாதாரத்…

    • 0 replies
    • 590 views
  2. சிரியாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்! சிரியாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து, இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள இராணுவ சாவடிகளில் சேதாரம் ஏற்பட்டதாக கூறிய சிரியாவின் அரசு ஊடகம், எந்தவிதமான சேதம் என்று குறிப்பிடவில்லை. இந்த தாக்குதல், குண்டு வைக்கும் முயற்சிக்கான பதிலடி இது என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன. முன்னதாக, கோலன் ஹைட்ஸ் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில் குண்டு வைக்க முயன்ற நால்வரை கொன்றதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல…

    • 0 replies
    • 703 views
  3. அரசுப் பணிகளுக்கு அமெரிக்கர்களை மட்டுமே தேர்வு செய்ய டிரம்ப் உத்தரவு.. இந்தியர்களுக்கு சிக்கல்.. வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசு ஒப்பந்தப் பணிகளில் அமெரிக்கர்களை மட்டுமே எடுக்க வேண்டும், எச்1பி விசா வைத்துள்ளோரை எடுக்கக் கூடாது என அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இது இந்தியர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுதொடர்பான உத்தரவில் நேற்று கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்து அதில் கையெழுத்திட்டுள்ளேன். மிக எளிய விதியின் கீழ் செயல்படும் வகையில் போடப்பட்ட இந்த உத்தரவின்படி, ஒப்பந்த பணிகளுக்கு அமெரிக்கர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அமெரிக்கர்களுக்கு மட்டுமே …

  4. அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்காவிடின் டிக் டொக் செயலி தடை செய்யப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை டிக் டொக் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்பர் 15ஆம் திகதிக்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “டிக் டொக் செயலியை வாங்குவது தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைவர் சந்திய நாதல்லாவுடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். இந்த செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ஆபத்தான ஒன்று. ஆகையால் டிக் டொக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் அமெரிக்க பெருநிறுவனமோ…

  5. ஆப்கானில் தீவிரவாதிகள் மேற்கொண்ட சிறை உடைப்பு தாக்குதலில் 24பேர் உயிரிழப்பு! கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் உள்ள சிறைச்சாலையில் இஸ்லாமிய அரசு என கூறிக்கொள்ளும் போராளிகளுக்கும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 21 பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்த. 43பேர் காயமடைந்தனர் என்று ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அட்டாவுல்லா குகியானி தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சிறைச்சாலை நுழைவாயிலில் கார் குண்டு வெடித்ததன் மூலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கிய தாக்குதல், திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது. ஒரே இரவி…

  6. உலகின் இளம் பிரதமர் சன்னா மரினுக்கு திடீர் திருமணம்! உலகின் இளம் பிரதமரான பின்லாந்து பிரதமர் சன்னா மரின், அவரது நெருங்கிய நண்பரும், கால்பந்து வீரருமான மார்கஸ் ரெய்கோனனை திருமணம் செய்துள்ளார். 34வயதான சன்னா மரின், மார்கஸ் ரெய்கோனனை உத்தியோகபூர்வ பிரதமரின் இல்லமான கெசராண்டாவில் மணந்ததாக பின்லாந்து அரசாங்கம் ட்வீட் செய்துள்ளது. 16 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த இவர்களுக்கு, இரண்டரை வயது மகள் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வலைத்தளத்தின்படி, தம்பதியரின் குடும்ப நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. மகிழ்ச்சியான தம்பதியரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மரின், தான் விரும்ப…

  7. பிரித்தானிய உணவகங்களில் 50 சதவீதம் தள்ளுபடி! அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கொவிட்-19 முடக்கநிலைக்கு பிறகு உணவகங்களில், 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. 72,000க்கும் மேற்பட்ட இடங்களில் திங்கள் முதல் புதன்கிழமை வரை சாப்பிடக்கூடிய உணவு மற்றும் பானங்களுக்கு இந்த அரைவிலை தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. இதில் ஒருவருக்கு தள்ளுபடியாக 10 பவுண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆல்கஹால் பொருந்தாது. ஆனால், விமர்சகர்கள் ஆரோக்கியமற்ற உணவு, உடல் பருமனைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தில் இதனை விமர்சித்துள்ளனர். முடக்கநிலையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் பப்களுக்கான வருகைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ள…

  8. மகாத்மா காந்தியின் நினைவாக நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா திட்டம் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட றோயல் மின்ட் அட்வைஸரி குழு ஆலோசித்து வருகிறது என பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும் காந்தி கருப்பு மற்றும் ஆசிய ,பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதற்காக அரும்பாடுபட்டார் என்பதை ஆலோசனை குழுவிடம் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் மின் அஞ்சல் ஒன்றினை வெளியிட்டுள்ள திறைசேரி, “காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயத்தை ஆர்.எம்.ஏ.ச…

  9. அமெரிக்காவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - ஈரான் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் தமது நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கும் நோக்கம் கொண்டவை என்று ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்காவின் மிருகத்தனமான பொருளாதாரத் தடைகள் நமது பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவற்றின் நோக்கம் பிராந்தியத்தில் நமது செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதும் நமது ஏவுகணை மற்றும் அணுசக்தி திறன்களை நிறுத்துவதும் ஆகும் எனினும் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஈரான் மீதான அதிகபட்ச அழுத்தம் மூலம் தனது இலக்குகளை அடைய வேண்டும் என்ற அமெரிக்க கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஈரான் தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையோ அல்லது அணுசக்தி திட்டங்…

  10. கொரோனாவிலிருந்து விடுபட்டாலும் ; தொடரும் வேதனை விஞ்ஞானிகள் எச்சரிக்கை கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் பத்தில் ஒருவர் வாசனை அல்லது சுவை அறியும் திறனை நிரந்தரமாக இழப்பதாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்தது. தற்போது, மான்செஸ்டர் அறிவியலாளர்கள் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கு கேட்கும் திறனிலும் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றிலிருந்து கண்டறிந்துள்ளார்கள்.அந்த ஆய்வில், வைதன்ஷாவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயது வந்த 121 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட எட்டு வாரங்களுக்குப் பிறகு அவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அவர்களிடம், அவர்களது காது…

  11. சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்துக்கு இழப்பீடு வழங்கத் தயார் - ஈரான் ஜனவரி மாதம் உக்ரேனிய விமானத்தை சுட்டு வீழ்த்தியமைக்கு இழப்பீடு வழங்க தெஹ்ரான் ஒப்புக் கொண்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மொசவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தத்திற்கு தெஹ்ரான் பொறுப்புணர்வை ஏற்றுக்கொண்டுள்ளதை மீண்டும் நினைவுபடுத்திய அவர், விமானத்தில் பயணித்த பல பயணிகள் ஈரானியர்கள் என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன் இதற்கு இழப்பீடு வழங்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. எனினும் இதற்கு சில கால அவகாசம் தேவையென்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் 03 ஆம் திகதி அதிகாலை பாக்தாத் அருகே அமெரிக்க வான்வழித் தாக்குதலில் சக்திவாய்ந்த இஸ்லாமிய புர…

  12. ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும்? – ட்ரம்ப் கேள்வி ஜேர்மனியிலிருந்து 11,000 அமெரிக்கப் படையினரை மீளப் பெறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ஆண்டொன்றுக்கு எரிசக்தி தொடர்பாக ரஷ்யாவுக்கு பில்லியன் டொலர்கள் கணக்கில் அள்ளிக்கொடுக்கிறது ஜேர்மனி. ஆனால் நாம் ஜேர்மனியை ரஷ்யாவிடமிருந்து காக்க வேண்டும் இல்லையா! இதெல்லாம் என்ன? நேட்டோவுக்கு 2% கட்டணம் செலுத்துவதில்கூட ஜேர்மனி ஒரு குற்றவாளியாக நடந்துகொள்கிறது. எனவேதான் ஜேர்மனியிலிருந்து படைகளை மீளப் பெறுகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார். …

  13. அமெரிக்க அதிபர் தேர்தலைத் தள்ளி வைக்கலாம்: ட்ரம்ப் திடீர் யோசனை வாஷிங்டன் கரோனா சூழலில் அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க முடியும் வரை அதிபர் தேர்தலைத் தள்ளி வைக்கலாம் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் 2-வது முறையாக அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக்கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இருவரும் தங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் கரோனா வைரஸ் பரவும் காலத்தையும் பொருட்படுத்தாமல் காணொலி வாயிலாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். …

  14. ஆப்பிள், அமேசான், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்ற குழு சரமாரி கேள்வி போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் அமெரிக்க நாடாளுமன்ற குழு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. பதிவு: ஜூலை 30, 2020 11:54 AM வாஷிங்டன் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது அப்போது சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. காணொலி வாயிலாக நடைபெற்ற விசாரணையில், 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத…

  15. பிரேஸிலில் நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை பதிவானது! அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பிரேஸிலில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களின் படி, பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் 70ஆயிரத்து 869பேர் பாதிக்கப்பட்டதோடு, ஆயிரத்து 554பேர் உயிரிழந்துள்ளனர். பிரேஸிலில் கொவிட்-19 தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக விளங்கும் பிரேஸிலில், இதுவரை 25இலட்சத்து 55ஆயிரத்து 518பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 90ஆயிரத்து 188…

    • 0 replies
    • 509 views
  16. நான் பரிந்துரைத்ததாலேயே ஹைட்ராக்சி குளோரோகுயின் நிராகரிக்கப்பட்டது: ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை! ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தின் பயன்பாட்டை தாம் பரிந்துரைத்தால்தான் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்துவதில் இருந்து இது நிராகரிக்கப்பட்டது என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், ‘எதையாவது பயன்படுத்த வேண்டும் என்று நான் கூறினால், அது வேண்டாம் என்று சொல்லவே அவர்கள் விரும்புகிறார்கள்’ எனவும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு உலகநாடுகள் தீவிரமாக முயற்சி செய்துவரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின் சிறந்த மருந்து என ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால், இந்த மருந்தை பயன்படுத்…

  17. ஆஸ்திரேலியா: கரோனா பரவலின் மையமாக சிட்னி அறிவிப்பு கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கரோனா பரவலின் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் தரப்பில், “சிட்னி நகரில் புதன்கிழமை மட்டும் 19 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிட்னியில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்னி நகர் கரோனா பரவலின் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்” என்று செய்தி வெளியாகியுள்ளது ஆஸ்திரேலியாவில் இதுவரை 15,304 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 167 பேர் பலியாகி…

  18. சமூக ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சட்டவரைபை நிறைவேற்றியது துருக்கி துருக்கிய நாடாளுமன்றம் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் சட்ட வரைபொன்றை நிறைவேற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்களிடையே கருத்துச் சுதந்திரம் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டம் இன்று (புதன்கிழமை) அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இந்த சட்டத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் ட்விற்றர் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் துருக்கியில் உள்ளூர் பிரதிநிதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இந்த சட்ட வரைபை ஆளும் AKP மற்றும் அதன் தேசிய பங்காளியான MHP ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை…

    • 0 replies
    • 411 views
  19. போலி அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலை நிலத்தடி பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்குதல் நடத்திய ஈரான் தெஹ்ரான் வளைகுடா கடலில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.நபிகள் நாயகம் 14 என்று பெயரிடப்பட்ட இந்த பயிற்சிகள் ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. அமெரிக்கா வழக்கமாக வளைகுடாவில் பயணிக்கும் விமானம் தாங்கிக் கப்பலை போலவே போலி கப்பலை வடிவமைத்து அதன் இருபுறமும் போலி போர் விமானங்களை வைத்து ஈரான் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளது. போலி கப்பலை சுற்றி பல்வேறு கோணங்களில் இருந்து ஏவுகணைகளை ஏவி பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, அவற்றில் சில கப்பலில் இருந்த போலி விமானங்களை குறிவைத்…

  20. கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது - உலக விஞ்ஞானிகள் லண்டன் கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் குழு, அவர்களின் கண்டுபிடிப்புகள் சார்ஸ் கோவ்-2 க்கு வழிவகுக்கும் வைரஸ் பல ஆண்டுகளாக வவ்வால்களில் கவனிக்கப்படாமல் பரவி வருகிறது என்பதைக் காட்டுவதாக கூறுகின்றன. இந்த ஆய்வில் பல குறிப்பிடத்தக்க தாக்கங்கள் உள்ளன என டுவிட்டரில் விருது பெற்ற அறிவியல் எழுத்தாளர் லாரி காரெட் கூறியுள்ளார். சார்ச், கோவ்-2 எங்கிருந்து தோன்றிய என்பதை கண்டறிய உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் குழு 3 வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொன்றும் ஆசியாவில் பரவலாகக் காணப்படும் குதிரைவாலி வவ்வால்களிலிருந்து வைரஸ் பரவ வழிவக…

  21. சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவை இன்று பதவியேற்பு.. தமிழர்களுக்கு வாய்ப்பு.. சிங்கப்பூர்: பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவை சிங்கப்பூரில் இன்று பதவியேற்கிறது. இதில் நிறைய தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் சர்ச்சைகள் இன்றி நடந்து முடிந்தது. இதில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சியின் ஆட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மொத்தம் 26.5 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தல் மூலம் 93 எம்பிக்களைத் தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் பிரதமர் லீ சியென் லூங் வெள்ளிக்கிழமை தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார், இந்த அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் மட்டுமின்றி புதிதாக…

  22. மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை பல மில்லியன் டொலர் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு எதிராக முதற்கட்டத்தில் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த வழக்கு விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. குறித்த குற்றச்சாட்டுகளுக்கான அனைத்து ஆதாரங்களும் முழுமையாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாகவும் அவையனைத்தும் சந்கேத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி இதன்போது அறிவித்துள்ளார். எனினும் நம்பிக்கை துரோகம், அதிகார துஸ்பிரயோகம் மற்றும் பணச்சலவை ஆகிய குற்றங்கங்களில் அவ…

  23. சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் ஆஸ்திரேலிய கும்பல்; கோடிகணக்கில் பணம் பறிப்பு ஆஸ்திரேலியாவில் படித்து வரும் சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் கும்பல் பிறகு, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டி கோடிகணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதிவு: ஜூலை 28, 2020 11:27 AM சிட்னி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலும் சீன மாணவர்கள் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பணக்காரக சீன மாணவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் ஆஸ்திரேலிய கும்பல் ஒன்று அவர்களை குறி வைத்து கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சீனாவின் போலீஸ் துறை அல்லது வருமான வரித்துறை அ…

  24. அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல் அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது. 2016 தேர்தலுக்கு முன்னர் இரு…

  25. டெக்சாஸில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு டெக்சாஸ் நகரத்தில் நேற்று நடைபெற்ற நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெக்சாஸ் தலைநகரில் சுமார் 100 பேர் கலந்துகொண்ட போராட்டத்தில் தாக்குதல் இடம்பெற்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச் சூட்டின் போது ஒருவர் கொல்லப்பட்டதாக ஒஸ்டின் பொலிஸ் மற்றும் அவசர மருத்துவ சேவை நிலையம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அத்தோடு வேறு எந்த மரணங்களும் இடம்பெறவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர் ஒரு துப்பாக்கியை ஏந்தி அவரது காரில் இருந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.