Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. (நா.தனுஜா) நடைபெறுவது வேறுபட்ட அரசியல் அல்லது மக்கள் மயப்படுத்தப்பட்ட குழுக்களுக்கு இடையிலான பூகோளப்போர் அல்ல. மாறாக இது மனிதர்களுக்கும் வைரஸிற்கும் இடையிலான போராகும் என்று சீனா சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும் இதனைப் புரிந்துகொள்ள முடியாவிடின் அவரவர் சொந்த நாட்டிலேயே மேலும் பலர் மரணிப்பதைக் காணவேண்டியிருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறது. லண்டனை தளமாகக் கொண்டியங்கும் 'த எகொடொமிஸ்ட்' என்ற ஊடகம் கடந்த 16 ஆம் திகதிக்குரிய நாளிதழில் 'சீனா வெல்கிறதா? - கொவிட் - 19 இன் பூகோள அரசியல் காரணிகள்' என்பதை அதன் முதற்பக்கத்தலைப்பாகப் பிரசுரித்திருக்கிறது. இந்நிலையில் இன்றைய தினம் இது குறித்து அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கைக…

    • 0 replies
    • 333 views
  2. சீனாவின் வுகான் நகரத்தில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை விட ஐம்பது வீதம் அதிகம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வுகானில் கொரோனா வைரஸ் காரணமாக 2579 பேரே உயிரிழந்தனர் என தெரிவித்திருந்த அதிகாரிகள் இன்று மேலும் 1290பேரை உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதன் காரணமாக வுகானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3869 ஆக அதிகரித்துள்ளது கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய ஆரம்பநாட்களில்வைத்தியசாலைகளில் நிலவிய பற்றாக்குறைகள் மருத்துவ பணியாளர்களின்பற்றாக்குறைகள் காரணமாக சில மருத்துவமனைகள் சீனாவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்துடன் உரிய தொடர்புகளை ஏற்படுத்தவில்லை என சீனாவின் அரச ஒலிபரப்புஸ்தாபனமான சிஜிடின் தெரிவித்துள்…

    • 4 replies
    • 643 views
  3. புவி கோளவடிவானது என நாம் கூறிக்கொண்டாலும் பூமியின் வடிவம் ஒரு சீரான கோளமல்ல நீர்ப்பரப்பை அகற்றிவிட்டு அவதானித்தோமேயானால் புவி கோணல்மாணலான ஒரு கல்போன்றுதான் காட்சியளிக்கும் வடதென் துருவங்களைவிட புவியின் மத்தியபகுதியே சற்று உப்பியதுபோல் காணப்படுகின்றது புவிதன்னைத்தானே சுற்றுவதற்கு 24 மணித்தியாலங்கள் எடுத்துக்கொள்கின்றது ஆனால் உண்மையில் தன்னைத்தானே சுற்ற எடுக்கும் நேரம் 23 மணித்தியாலங்கள் 56 நிமிடங்கள் 4 வினாடிகள் எடுத்துக்கொள்ளும் பூமியின் ஒரு நாளின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கின்றதாம் புவி தன்னைத்தானே ஒரு தடவை முழுமையாக சுற்றுவதைத்தான் ஒரு நாள் எனக்கூறுகின்றோம் இவ்வாறு புவி தன்னைத்தானே சுற்றுவதில் சந்திரனின் ஈர்ப்புவிசை தாக்கத்தை செலுத்துகின்றது இதனால்…

  4. அமெரிக்காவில் வேலையிழப்பின் இரண்டாம் அலை வருகிறது; யாருக்கும் பாதுகாப்பில்லை: வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி விமானத்துறை, சேவைத்துறை மட்டுமல்லாது, பல்வேறு துறைகளில் உயர் பதவியில் இருக்கும் அனைவரின் வேலையும் ஆபத்தில் இருப்பதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் ஊரடங்கு நிலவுவதால், மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். சமூக விலகல் காரணமாக பல்வேறு துறைகள் செயல்படாத நிலையில் உள்ளன. இது நீடித்தால் 2007-09இல் உருவான வேலையில்லாப் பிரச்சினை மீண்டும் வரும் அபாயம் உள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது. வேலை கொடுப்பவர்கள் இல்லை, விற்பனைகள் சரிவு,…

  5. 36000 மக்களை இழந்த நிலையில், அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம் - திறவுங்கள் 50 மாநிலங்களை கொண்ட அமெரிக்காவில் 8 மாநிலங்கள் வீட்டில் இருக்க சொல்லி கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. அதேவேளை, பொருளாதார சங்கடங்களால் அமெரிக்கர்கள் 'லொக் டவுனை' முடிவிற்கு கொண்டுவர கேட்டு வீதிகளில் போராடிவருகிறார்கள். சிலர் ஆயுதங்களுடன் வீதிகளில் காணப்பட்டனர்

  6. ஜெர்மனியில் உணவு கிடைக்காமல் பரிதவிக்கும் உயிரியல் பூங்கா விலங்குகள் ஜெர்மனியில் உணவு கிடைக்காமல் உயிரியல் பூங்கா விலங்குகள் பரிதவித்து வருகின்றன. ஜெர்மனியில் 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இந்த கொடிய வைரசுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவற்றை தவிர்த்து, மக்கள் கூட்டம் அதிகம் வரும் தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் உயிரியல் பூங்காக்களும் அடங்கும். அதன்படி அந்த நாட்டின்…

  7. கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா வைரசினால் 3.3 மில்லியன் பேர் உயிரிழப்பார்கள் என ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1.2 பில்லியன் மக்கள் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. தீவிர சமூகவிலக்கல் காணப்பட்டால் கூட 122 மில்லியன் பேர் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என ஐநா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p&…

    • 1 reply
    • 603 views
  8. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம் - ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் ஜெர்மனியில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்தே அவர் அவ்வாறு தெரிவித்தார். அதேபோல இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதிக்கப்படுபவர்களைவிட, இதிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஊரடங்கு வெற்றிகரமாக இருந்ததை காண்பிப்பதாகவும் ஜென்ஸ் தெரிவித்தார். எனினும், இத்தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஜெர்மனியில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்…

    • 0 replies
    • 341 views
  9. உலகின் மிகப்பெரியா பொருளாதார, இராணுவ, அரசியல், தொழில்நுட்ப என அடுக்கிக்கொண்டே போகலாம் அமெரிக்காவை பற்றி. ஆனால், என்னதான் பெரிய வல்லரசு என்றாலும், அதன் பலமான கட்டமைப்புக்குள் உள்ள ஓட்டைகளை இந்த கோவிட் 19 தொற்று படம் போட்டு காட்டியுள்ளது. அதில், முக்கியமானது - உணவு. நகர் வாழ்க்கையை கொண்டுள்ள மக்களில் போதிய சேமிப்பு இல்லாத மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

  10. ரெம்டிசிவிர் என்கிற மருந்தை உட்கொண்ட கொரோனா நோயாளிகள் விரைந்து குணமடைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் கிலீட் சயின்சஸ் என்கிற நிறுவனம் தயாரித்த ரெம்டிசிவிர் என்கிற மருந்தைத் தீவிர சுவாசக் கோளாறு இருந்த கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து சோதனை நடத்தியுள்ளனர். இந்த மருந்தை உட்கொண்ட நோயாளிகளில் இருவரைத் தவிர அனைவரும் ஒருவாரத்துக்குள் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் மட்டும் நோயின் தீவிரத்தால் உயிரிழந்ததாக மருத்துவர் கேத்லீன் முல்லன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். தேசிய நலவாழ்வு மையம் ரெம்டிசிவிர் உட்படப் பல்வேறு மருந்துகளை நோயாளிகளுக்குக் கொடுத்துப் பரிசோதித்து வருவதாகவும…

    • 1 reply
    • 385 views
  11. ரஸ்யா புதன்கிழமை செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையொன்றை பரிசோதனை செய்துள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி கட்டளைப்பீடத்தின் தளபதி ஜெனரல் ஜோன் ரேய்மன்ட் இதனை அறிவித்துள்ளார். இது விண்வெளிக்கட்டுப்பாட்டு திட்டங்கள் குறித்த ரஸ்யாவின் ஏமாற்று நடவடிக்கைகளை புலப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் ரஸ்யாவிற்கு போட்டி விண்வெளி ஆயுத திட்டங்களை கைவிடும் நோக்கமில்லை எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஆக்கிரமிப்பை எதிர்ப்பது குறித்தும்&nbsp; தேசத்தையும் தனது நேசநாடுகளையும் அமெரிக்காவின் நலன்களையும் விண்வெளியில் இடம்பெறும் விரோத நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பது குறித்தும் உறுதியாகவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ரஸ்யாவி…

    • 3 replies
    • 467 views
  12. உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பு! by : Litharsan கொரோனா வைரஸ் காரணமாக உலகமே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 30 ஆயிரம் பேர் புதிதாக தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறரை இலட்சமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா நோயால் நேற்று 84 ஆயிரத்து 515 பேர் நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை மொத்தமாக 20 இலட்சத்து 83 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்…

  13. இங்கிலாந்தில் மேலும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும்-வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் இங்கிலாந்தில் ஊரடங்கை தளர்த்த பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளை நாட்டின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் வெளியிட்டுள்ளார். பதிவு: ஏப்ரல் 17, 2020 12:54 PM லண்டன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்று வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்திருந்தார். இதனிடையே மருத்துவமனையில் மேலும் 861 கொரோனா வைரஸ் இறப்புகளை இங்கிலாந்து பதிவு செய்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மொத்தமாக 13,729 ஆக உயர்ந்துள்ளது. வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறியதாவது:- நடைமுறையில் இ…

  14. அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார மேம்பாட்டுக்கு மூன்று கட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக அறிவித்தார் அதிபர் டிரம்ப். 7 மாகாண ஆளுநர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடிய அவர், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மிகவும் அதிகமாக கொரோனா பாதிப்புடைய பகுதிகளில் மக்களை கட்டுக்குள் வைப்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். குறைந்த அளவு பாதிப்புடைய பகுதிகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். வர்த்தகம், கல்வி நிலையங்கள் போன்றவற்றை மூன்று கட்டங்களாக மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வைரஸ் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கையாக ஒவ்வொரு கட்டமும் 14 நாட்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நோய் பரிசோதனைக் கருவிகளும் நோயை…

    • 0 replies
    • 439 views
  15. சீன ஆய்வுக்கூடங்களில் இருந்து கொரோனா பரவியதா? – விசாரிக்கும் அமெரிக்கா கொரோனா வைரஸ் மரண எண்ணிக்கையினை ஏனைய நாடுகள் மறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அதிக எண்ணிக்கையிலான மரணங்களை எதிர்கொண்ட நாடுகளில் அமெரிக்கா முன்னிலை வகிக்கின்றது. ஆரம்பத்தில் குறித்த வைரஸ் பரவல் இத்தாலியில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், பின்னாட்களில் அமெரிக்காவில் மரண எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது. இந்நிலையில் குறித்த நிலைவரம் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஏனைய நாடுகள் தமது நாடுகளில் ஏற்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கைகளை மறைப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை …

  16. ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு! by : Litharsan அமெரிக்காவுக்கு ஹைட்ரொக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹைட்ரொக்ஸிகுளோராகுயி…

  17. கொரோனா வைரஸால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு அனுப்பப்படவுள்ள காசோலையில், அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மைய அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தில் அமெரிக்க அதிபர் ஒருவரின் பெயர் பொறிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த புதிய செயல்பாட்டின் காரணமாக மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்ற குற்றச்சாட்டுக்கு கருவூல அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இரண்டு ட்ரில்லியன் டாலர்கள் நிவாரண தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதியுதவி வ…

    • 3 replies
    • 485 views
  18. கொரோனாவை சமாளிக்க கடன் வழங்க IMF திட்டம் by : Benitlas கொரோனாவால் எப்போதும் இல்லாத வகையில் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக சர்வதேச நிதியத்தால் கடனாக கொடுக்கக்கூடிய முழுத் தொகையான 76 லட்சம் கோடி ரூபாய் நிதியினை உலக நாடுகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார். சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டம் அமெரிக்க தலைநகர் வொசிங்டனில் நடைபெற்றது. அதில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், மொத்தமாகவுள்ள 189 உறுப்பு நாடுகளில் 102 நாடுகள் கொரோனா பாதிப்புகளை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் கடனுதவி கோரியுள்ளதாக குறிப்…

    • 0 replies
    • 456 views
  19. கரோனாவால் உயிரிழந்த செவிலியருக்கு அறுவைச் சிகிச்சையில் பெண் குழந்தை; இறப்பும் பிறப்பும் ஒருசேர நிகழ்ந்த துயரம்! பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியரான ஒரு நிறைமாத கர்ப்பிணி, அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுத் தந்துவிட்டு உயிரிழந்தார். இறந்த செவிலியருக்கு வயது 28 தான். பிரிட்டன் நல்வாழ்வுத் துறையில் செவிலியராக சேவையாற்றி வந்த இவர் நிறைமாத கர்ப்பிணியும்கூட. மருத்துவப் பணியாற்றி வந்த இவர், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய உடல்நிலை ஓரளவு நன்றாக இருப்பதைப் போலத் தோன்றியதால் எப்படியும் தேறிவிடுவார் என்று டாக்டர்கள் பெரிதும் நம்பிக்கையுடன் இருந்தனர். …

  20. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல்! by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல் இடம்பெறுகின்றது. கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் காலை 6 மணிக்கு (21:00 ஜி.எம்.ரி.) சுமார் 14 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்புடனும் வாக்காளர்கள் முகக் கவசங்களை அணிதல் மற்றும் வெப்பநிலை சோதனை என்பனவற்றுடனும் வாக்குப்பதிவுகள் இடம்பெறுகின்றன. இதன்படி, வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு 37.5 செல்சியசுக்கும் அதிக…

  21. நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து 382 ரோகிங்யா அகதிகள் மீட்பு- 24பேர் பட்டினியால் மரணம் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து 382 ரோகிங்யா அகதிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள பங்களாதேஸ் கரையோர காவல் படையினர் குறிப்பிட்டபடகிலிருந்த 24 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். 382 ரோகிங்யா இனத்தவர்களை மீன்பிடிப்படகிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளோம் என கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் பட்டினியால் வாடிய நிலையில் காணப்பட்டனர்,கடந்த 58 நாட்களாக அவர்கள் கடலில் காணப்பட்டுள்ளனர், ஏழு நாட்களாக அவர்களது படகு எங்கள் கடற்பகுதியில் காணப்பட்டுள்ளது என பங்களாதேஸ் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். மீன்பிடிப்…

  22. தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இயல்பு நிலை திரும்பாது - ஸ்பெயின் பிரதமர் ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் சுமார் 5,100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும். எனினும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதுவரை ஸ்பெயினில் 1,77,633 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 18,500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இத்தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, வாழக்கை இயல்பு நிலைக்கு திரும்பாது என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்தார். இந்த வாரத் தொடக்கத்தில் அங்கு தொழிற்சாலைகள், கட…

    • 2 replies
    • 555 views
  23. 2 மில்லியன் மக்களில் தொற்றியது கொரோனா வைரஸ்: பல நாடுகளில் மோசமான விளைவு! உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவியுள்ள கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து கடும் பாதிப்புக்களையே ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் பரவல் நேற்று ஒரேநாளில் மட்டும் 2 ஆயிரத்து 407 பேரை மாய்த்து அந்நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2 மில்லியன் மக்களைப் பாதித்துள்ளமை இதுவரை கண்டிறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 981 பேரின் மரணங்கள் பதிவாகியதுடன் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 708 பேர் இதுவரையான காலப்பகுதியில் மரணித்துள்ளனர். மேலும், 4 இலட்சத்து 78 ஆயிரத்து 932 பேர் இதுவரை குணமடைந்துள்…

  24. பீஜிங்: சீனாவின் வூகானிலிருந்து தான் முதன் முதலாக கொரோனா உலகமெங்கும் பரவத் துவங்கியது. இன்றுவரை அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உலக அளவில் 1.3 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சூஃபென்ஹேயில் கொரோனா மீண்டும் பரவத் துவங்கி உள்ளது. சீனாவில் இன்று மட்டும் புதிதாக 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,500 ஆகி உள்ளது. ரஷ்யாவிலிருந்து சீனர்கள் வெளியேற்றப்பட்டு வருவதால் சீனாவில் கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. சீன …

    • 0 replies
    • 331 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.