Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை நிறுத்தம். - பிரித்தானியா! இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை பிரித்தாணியா நிறுத்தி வைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதால் பிரித்தாணியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட உரிமங்களில் 30 உரிமங்களை இடைநிறுத்த பிரித்தாணியா முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி அறிவித்துள்ளார். அதன்படி போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கான உதிரி பாகங்கள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களில் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது https://athavannews.com/2024/1397905

  2. இஸ்ரேலுக்கு இடம் பெயரும் மிஸோரம் யூதர்கள் அக்டோபர் 10, 2006 அய்ஸ்வால்: மிஸோரம் மாநிலத்தில் வசித்து வரும் 218 யூதர்கள் இஸ்ரேலுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் யூத இனத்தவர் வசித்து வருகின்றனர். அதுபோல இந்தியாவிலும் கணிசமான அளவிலான யூதர்கள் உள்ளனர். மிஸோரம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 7000 பினே மனசே என்ற பிரிவைச் சேர்ந்த யூதர்கள் வசித்து வருகிறார்கள். ஆதி கால இஸ்ரேலிலிருந்து யூத இனத்தைச் சேர்ந்த 10 பழங்குடி பிரிவினர் அங்கிருந்து விரட்டப்பட்டு விட்டனர். அவர்களில் ஒரு பிரிவுதான் மனசே என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிருந்து விரட்டப்பட்ட இவர்கள் முதலில் சீனாவுக்கும் அதன் பின்னர் வட கிழக்கு இந்தியாவிலும் க…

  3. பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. பாலஸ்தீனப் பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில், 700 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி ஆராய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அவசர சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத…

  4. இஸ்ரேலுக்கு கண்டனம்: ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு! SelvamNov 13, 2023 08:11AM இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா தீர்மானத்துக்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஏழு நாடுகள் எதிராக வாக்களித்த நிலையில் இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலின் உச்சமாக கடந்த மாதம் 7ஆம் தேதி, காசா முனையில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலினால் கடும் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை அடியோடு ஒழித்துக் கட்டுவோம் என சூளுரையுடன் காசா மீது தாக்குதல் தொடுத்துள்ளது. காசா ம…

  5. இஸ்ரேலுக்கு படைகளை அனுப்பும் அமெரிக்கா! இந்த மாத தொடக்கத்தில் ஈரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு அதன் வான் பாதுகாப்பை வலுப்படுத்த இஸ்ரேலுக்கு உயர் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மற்றும் அமெரிக்க இராணுவக் குழுவை அனுப்புவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவினை ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கியுள்ளதாகவும் பென்டகன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் விநியோகம், ஒரு முழுமையான போரைத் தவிர்ப்பதற்கான பரவலான இராஜதந்திர முயற்சிகள் இருந்தபோதிலும், மத்திய கிழக்கில் மோதலை மேலும் தூண்டிவிடும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஒக்டோபர் 1 ஆம் திகதி ஈரான் சுமார் 200 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியது. …

  6. இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் உதவி என 118 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை வெளியிட்டது அமெரிக்க செனட் ! எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் போர்க்கால உதவியை வழங்கும் வகையிலும் அமெரிக்கா 118 பில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்றினை எட்ட தீர்மானித்துள்ளது. பல மாதங்களாக குடியேற்ற பிரச்சினை மற்றும் கியிவ் ஆதரவு தொடர்பான சர்ச்சைகளுக்குப் பின்னர் குறித்த சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றுமாறு ஜனாதிபதி ஜோ பய்டன் காங்கிரஸை வலியுறுத்தியுள்ளார். உக்ரைனை போர்க்கால உதவியுடன் மீண்டும் வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் செனட்டில் உள்ள ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதேநேரம் மெக்ச…

      • Haha
    • 3 replies
    • 642 views
  7. 29007ca29b7a9557f365924bc9f4b4db

    • 0 replies
    • 531 views
  8. இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி. இஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக துருக்கி அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 54 தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதியை தடை செய்த துருக்கி அரசு, அடுத்தகட்ட நடவடிக்கையாக, இஸ்ரேலுடனானஅனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக துருக்கி வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், படுகொலை, மனிதாபிமான பேரழிவு, இஸ்ரேலால் ஏற்படும் அழிவுகள் தொடர்கின்றன. மேலும், இஸ்ரேலிய அரசாங்கம் சர்வதேச போர்நிறுத்த முயற்சிகளை புறக்கணித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவியையும் தடுத்தது. இஸ்ரேலிய அரசாங்கம் காசாவ…

  9. இஸ்ரேலுடனான பேச்சுகள் தோல்வியடைந்தால் பாலஸ்தீனம் ஒருதலைப்பட்சமான சுதந்திர பிரகடனம்? [22 - February - 2008] [Font Size - A - A - A] இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுகள் தொடர்ந்து தோல்வியடைந்தால் பாலஸ்தீனர்கள் தனிநாட்டுக்கான சுதந்திரப் பிரகடனத்தை ஒருதலைப்பட்சமான முறையில் மேற்கொள்வார்களென பாலஸ்தீனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்திலும் முரண்பாட்டிற்கு தீர்வு காண்பதற்குரிய பேச்சுகள் பற்றுறுதியுடன் முன்னெடுக்கப்படாத பட்சத்திலும் நாம் எமது ஒருதலை பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை அறிவிக்க நேரிடுமென பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸின் உயர்மட்ட உதவியாளர்களில் ஒருவரும் இஸ்ரேலிய அதிகாரிகளுட…

  10. இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை இரத்து செய்த ஹமாஸ்! இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் காணப்படும் நிலையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை ஹமாஸ் இரத்து செய்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் காணப்படும் நிலையில் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹமாஸ் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றது. இதற்கு பதிலீடாக இஸ்ரேல் தமது நாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்து வருகின்றது இந்த நிலையில் பணயக்கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடலை ஹமாஸ் ஒப்படைத்திருந்தது. கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் நால்வரின் உடல்கள் காசாவின் முக்கிய நகரில் வைத்து செஞ்சிலுவை சங்கம் ஊடாக இஸ்ரேல…

  11. 27 JUN, 2025 | 01:32 PM bbc இஸ்ரேல் ஈரான் போருக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானிய அதிகாரிகள் பலரை கைதுசெய்துள்ளதுடன் மரணதண்டனையையும் நிறைவேற்றியுள்ளனர். முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு ஈரானிய புலனாய்வு பிரிவிற்குள் இஸ்ரேலிய புலனாய்வாளர்கள் ஊருடுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த கைதுகளும் மரணதண்டனை நிறைவேற்றங்களும் இடம்பெறுகின்றன. மோதலின் போது பல ஈரானிய உயர் அதிகாரிகள் கொல்லப்படுவதற்கு தகவல்களே முக்கிய காரணம் என ஈரானிய அதிகாரிகள் கருதுகின்றனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவத்தின் சிரேஸ்ட தளபதிகளும் அணுவிஞ்ஞானிகளும் இலக்குவைத்து கொல்லப்பட்டனர். ஈரானிற்குள் இஸ்ரேலின் மொசாட்டின் …

  12. இஸ்ரேலுடன் சிரியா சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும் - சிரிய ஜனாதிபதியிடம் டிரம்ப் வேண்டுகோள் 14 May, 2025 | 04:22 PM சிரியாவுடன் இஸ்ரேலுடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரிய ஜனாதிபதி அஹமட் அல் சராவை சந்தித்தவேளை டிரம்ப் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். சவுதி அரேபியாவில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது சிரிய ஜனாதிபதி தனது நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் அனைவரும் வெளியேறவேண்டும் என உத்தரவிடவேண்டும் என டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரியா மீதான தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/214719

  13. நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பிறகு, மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்திய நான்காவது நாடாக பஹ்ரைன் திகழ்கிறது. சமீபத்தில், இஸ்ரேலும் பஹ்ரைனும் தங்கள் உறவுகளை முழுமையாக இயல்பாக்குவதற்கான வரலாற்று உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான சமாதான ஒப்பந்தம், முதல் அதிகாரப்பூர்வ விமான சேவையுடன் முறையாக தொடங்கப்பட்டது. இந்த விமானம் இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ…

  14. இஸ்ரேலும், இரானும் ஏன் சிரியாவில் சண்டையிடுகின்றன? - 300 வார்த்தைகளில் பகிர்க படத்தின் காப்புரிமைAFP சிரியாவிலுள்ள இரானின் ராணுவ நிலைகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து சக்தி வாய்ந்த இருநாடுகளுக்கிடையேயான மோதல் நிலைப்பாடு மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கான பின்னணியை காண்போம். இஸ்ரேலும், இரானும் எப்படி பகை நாடுகளாயின? 1979ல் ஏற்பட்ட இரானிய புரட்சியின் பின்னர், அந்நாட்டின் மத கடும்போக்காளர்கள் அதிகாரத்திற்கு வந்ததது முதலே இஸ்ரேலை ஒதுக்குவதற்கு வலியுறுத்தி வருகின்றனர். இஸ்ரேல் முஸ்லீம்களின் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லெபனான் மற்றும் பிற அரபு நாடுகளில் பிரபலமான ஹசன் நஸ்ரல்லா, ஹெஸ்புலாவின் மையப்புள்ளியாகக் கருதப்படுகிறார் கட்டுரை தகவல் எழுதியவர், கிவான் ஹுசைனி பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஹசன் நஸ்ரல்லா ஒரு ஷியா ஆலிம் (மத அறிஞர்). லெபனானில் உள்ள ஹெஸ்புலா குழுவிற்கு தலைமை தாங்குகிறார். இந்த குழு தற்போது லெபனானில் உள்ள மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தக் குழுவுக்கு தனியாக ஒரு ஆயுதப் பிரிவும் இருக்கிறது. லெபனான் மற்றும் பிற அரபு நாடுகளில் பிரபலமான ஹசன் நஸ்ரல்லா, ஹெஸ்புலாவின் மையப்புள்ளியாகக் கருதப்படுகிறார். இந்த குழுவின்…

  16. 28 MAY, 2024 | 10:37 AM உலகின் வலுவான ஜனநாயக நாடுகள் இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலையில் காணப்படுகின்றன என கொலம்பியா ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ தெரிவித்துள்ளார். வலுவான ஜனநாயக நாடுகளில் உள்ள வங்கிகள் நிதி அமைப்புகளின் உரிமையாளர்கள் காசாவில் இடம்பெறும் படுகொலைகளை ஆதரிப்பவர்களாக காணப்படுவதால் இந்த ஜனநாயக நாடுகளால் இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். இந்த ஜனநாயக நாடுகளின் செயற்பாடுகள் பாலஸ்தீன மக்களின் இருப்பிற்கு மாத்திரம் ஆபத்தை ஏற்படுத்தவில்லை ஜனநாயகம் மனித குலத்தின் இருப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இன்று புவிசார் அரசியலின் அதிகாரம…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா மீது இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான குண்டுவெடிப்பால் சர்வதேச ஆதரவை இழக்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று நிதி திரட்டும் நிகழ்வில் அவரது பேச்சு, இஸ்ரேல் தலைமை மீதான அவரது வலுவான விமர்சனத்தை வெளிப்படுத்தியது. அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து இஸ்ரேலுக்கு அசைக்க முடியாத ஆதரவை ஜோ பைடன் வழங்கியுள்ளார். அமெரிக்க ஆதரவை இஸ்ரேல் நம்பலாம் என்று அவர் மீண்டும் வலியுறுத்திய அதே வேளையில், அவர் அதன் அரசாங்கத்திற்கு நேரடி எச்சரிக்கையை விடுத்தார். "இஸ்ரேலின் பாதுகாப்பு அமெரிக்காவிடம் இருந்திருக்கலாம். ஆனால்…

  18. இஸ்ரேலை கைவிட்டது அமெரிக்கா.. ஐ.நா.சபையில் பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது பாலஸ்தீன நிலப்பகுதியில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேறியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகளிடையே நீண்ட வருடங்களாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறான குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் நடவடிக்கைகளை சட்டப்படி செல்லாது என்றும், இனிமேலும் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க கூடாது என்றும், இஸ்ரேல் நடவடிக்கை, சர்வதேச கொள்கைகளுக்கு எதிரானது என்றும் வலியுறுத்தி, எகிப்து ஒரு தீர்மானத்தை…

  19. டெக்ரான்: சர்வதேச திரைப்பட விருதான ஆஸ்கர் விருது சர்வதேச அரசியல் விவகாரங்களையும் எதிரொலித்திருப்பது ஆச்சரியப்பட வைக்கக் கூடிய ஒன்று! இன்று அறிவிக்கப்பட்ட சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது ஈரான் திரைப்படமான "தி செபரேஷன்". ஆஸ்கர் விருதைவிட ஈரானியர்களுக்கு இதில் அளவில்லா மகிழ்ச்சி புதைந்திருக்கிறது.. ஆம், ஈரானின் தி செப்பரேசன் படம் போட்டியிட்டது இஸ்ரேலின் திரைப்படமான "புட்நோட்"டுடன்! ஏற்கெனவே அரசியல் அரங்கத்தில் இருநாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் நிலையில் சொல்லவா வேண்டும்! ஈரானின் ஆஸ்கர் விருதை குறிப்பிடும் அந்நாட்டு ஊடகங்கள் அனைத்துமே "இஸ்ரேலை வென்றது ஈரான்" என்கின்றன. ஈரான் நாட்டு அரசு …

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அக்பர் உசேன் பதவி, பிபிசி செய்தி பங்களா 9 ஏப்ரல் 2024, 11:55 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இரான் ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையைச் (IRGC) சேர்ந்த ஏழு பேர் மற்றும் ஆறு சிரிய குடிமக்கள் கொல்லப்பட்டதாக சிரியாவுக்கான இரான் தூதர் தெரிவித்துள்ளார். ஒருபுறம், இந்த தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுக்க விரும்புகிறது. அதேவேளை, மத்த…

  21. இஸ்ரேலை நோக்கி 2,000 ரொக்கெட் தாக்குதல்கள் ; பாலஸ்தீன் சார்பில் 103 பேர் பலி! சமீபத்திய ஆண்டுகளில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் மிகப்பெரிய விரிவாக்கம் ஐந்தாவது நாளில் நுழைந்ததால் இஸ்ரேல்-காசா எல்லையில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மொத்தத்தில் சுமார் 2,000 ரொக்கெட்டுகள் இஸ்ரேலுக்குள் வீசப்பட்டதில் இருந்து குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் காசா மீது நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் மொத்தம் 103 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 27 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள் உள்ளனர், மொத்தம் 580 பேர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சின் அறிக்கையில் சு…

  22. 25 NOV, 2024 | 11:07 AM லெபனானிலிருந்து ஹெஸ்புல்லா அமைப்பினர் 250க்கும் மேற்பட்ட ரொக்கட்களை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். செப்டம்பரில் இஸ்ரேல் ஹெல்புல்லா அமைப்பினருக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்த பின்னர் ஹெஸ்புல்லா அமைப்பினர் மேற்கொண்ட கடும் ரொக்கட் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஹெஸ்புல்லா அமைப்பின் ரொக்கட்கள் இஸ்ரேலிய தலைநகரையும்,வடக்கு மத்திய இஸ்ரேலையும் தாக்கியுள்ளன இதன் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர். மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர் உயிரிழந்த நிலையிலேயே ஹெஸ்புல்லா அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலிற்கும் ஹெஸ்புல்…

  23. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் டாம் பேட்மேன் வெள்ளை மாளிகை வெளியுறவுத்துறை செய்தியாளர் 30 செப்டெம்பர் 2025, 08:44 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஸா போரை முடிவுக்கு கொண்டுவரும் தனது திட்டம் "மனிதகுல வரலாற்றின் சிறந்த நாட்களில் ஒன்றாகவும், மத்திய கிழக்கில் நிலையான அமைதியைத் தரக்கூடியதாகவும்" இருக்கும் என்று கூறினார். இப்படி மிகைப்படுத்திப் பேசுவது டிரம்பின் வழக்கமான பாணிதான். ஆனால், திங்கள்கிழமை வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தபோது அவர் வெளியிட்ட 20 அம்சங்களைக் கொண்ட இந்தத் திட்டம், அவரது சொற்களுக்கு இணையாக இல்லாவிட்டாலும், ராஜ்ஜீய ரீதியாக ஒரு முக்கியத் தருணமாகவே உள்ளது. இந்த…

  24. இஸ்ரேல் (israel) வேரோடு பிடுங்கப்படும், அமெரிக்கா இஸ்ரேலை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதாக உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Sayyid Ali Hosseini Khamenei) எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கில் இப்போது இஸ்ரேல் - ஈரான் (iran) இடையே நேரடியாகப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டை எச்சரிக்கும் அயதுல்லா கடந்த 5 ஆண்டுகளில் கமேனி பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். இதில் அவர் நேரடியாக இஸ்ரேல் நாட்டை எச்சரிக்கும் வகையில் பேசினார். பாலஸ்தீன மற்றும…

  25. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானிய ஏவுகணைகள் அக்டோபர் 1 அன்று இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ மூலம் இடைமறிக்கப்பட்டன கட்டுரை தகவல் எழுதியவர்,ஜெரெமி பொவன் பதவி,சர்வதேச விவகாரங்கள் ஆசிரியர், பிபிசி 28 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் இரான் இஸ்ரேலைத் தாக்கியபோது, அந்தத் தாக்குதல் இரானின் நிலைப்பட்டை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று அந்தத் தாக்குதல் குறித்தும், அது நடத்தப்பட்ட முறை குறித்தும் இரான் வெளிப்படையாக அறிவித்தது. இரானின் ஏவுகணைகள் அனைத்தும் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளால் வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன. இம்முறை கதையே வேறு. இரான் இஸ்ரேலில் சில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.