Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்! அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், ஜேர்மனிக்கும் இடையிலான எரிவாயுக் குழாய் பொருத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமும், ஜேர்மனியும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இந்தத் தடை மூலம் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக அவை குற்றம் சுமத்தியுள்ளன. குறித்த தடை குறித்து ரஷ்யாவும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://athavannews.com/அமெரிக்காவின்-தீர்மானத்/ ######…

  2. விமானப்படை, கடற்படை வரிசையில் அமெரிக்கா புதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் ராணுவம், மெரைன் கார்ப்ஸ், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல்படை என 5 படைப்பிரிவுகள் உள்ளன. 6வது படைப் பிரிவாக, விண்வெளிப்படையை அமெரிக்கா புதிதாக உருவாக்கியுள்ளது. இதற்காக, 738 பில்லியன் டாலர்கள் தொகையை ஒதுக்குவதற்கான சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். புதிய படைப் பிரிவை உருவாக்கியுள்ளதன் மூலம் மிகப்பெரிய சாதனை எட்டப்பட்டுள்ளதாக அப்போது அவர் குறிப்பிட்டார். விண்வெளியில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களை பாதுகாப்பது விண்வெளிப் படையின் முக்கிய நோக்கமாகும். விண்வெளியானது போர்க்களங்களில் ஒன்றாக மாறியிருப்பதாகவும், அதில் அமெரிக்காவின் ஆ…

    • 4 replies
    • 1.1k views
  3. மேற்கு கரையிலும் காஸாவிலும் இடம்பெறுகின்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழ்க்கறிஞர் படு பென்சவுடா இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மேற்கு கரை கிழக்கு ஜெரூசலேம் மற்றும் காஸா பள்ளத்தாக்கு ஆகியபகுதிகளில் யுத்த குற்றங்கள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் யுத்த குற்ற விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதுமான தகவல்களை திரட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதிய காரணங்கள் உள்ளன என நான் த…

    • 0 replies
    • 781 views
  4. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேற அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஜனவரி 31ம் தேதிக்குள் பிரக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிரதிநிதிகள்சபையில் பிரெக்ஸிட் மசோதாவை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு வேறு வழிமுறைகள் உள்ளதாகவும் எனவே, இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மசோதா மீது வாக்…

  5. வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்கா இடையே வாஷிங்டனில் நேற்று நடந்த 2வது ‘டூ பிளஸ் டூ’ பேச்சுவார்த்தையில், இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு மற்றும் ராணுவ உறவுகளை வலுப்படுத்தும் 2வது டூ பிளஸ் டூ கூட்டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று நடந்தது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்க பாதுகாப்புத்தறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் சந்தித்து பேசினர். இதில் இருதரப்பு உறவுகளையும், ஒத்துழைப்பையும் மேலும் விரிவுபடுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ‘‘ராணுவத்துறையில் இரு நாடுகளுடம் அத…

    • 0 replies
    • 300 views
  6. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் மத்திய பகுதியில் உள்ள ரஷ்யா FSB பாதுகாப்பு பிரிவு தலைமையகத்தில், மர்ம நபர் ஒருவர், திடீரென துப்பாக்கியால், கண்மூடித்தனமாக சுட்டதில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். திடீரென இவனது நடவடிக்கையை கண்டு, அப்பகுதியில் இருந்துவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். நிகழ்விடத்தில் வந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப்படையினர், துப்பாக்கிச்சூடு நடத்தியவனை, சுட்டுக் கொன்றனர். அப்பகுதியில் நீண்ட நேரம் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் போலீசார் கையில் துப்பாக்கியுடன் பதுங்கிச் செல்லும் காட்சிகள் ஒளிபரப்பாகின. துப்பாக்கியால் சுட்ட நபர் யார் எதற்காக சுட்டான் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது…

    • 0 replies
    • 386 views
  7. குற்றம் எதுவும் செய்யாமலேயே பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளேன் – ட்ரம்ப்! குற்றம் எதுவும் செய்யாமலேயே தான் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். ட்ரம்ப் மீது ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 14 மணித்தியாலங்கள் விவாதம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் டிரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 230 பேரும், எதிராக 194 பேரும் வாக்களித்துள்ளனர். …

  8. US government lists fictional nation Wakanda as trade partner 😜😧 - பெரும் பகிடி... \

  9. அவுஸ்திரேலியாவில் அவசரகால நிலை பிரகடனம்! அவுஸ்திரேலியா - நியூ சவுத் வேல்ஸில் ஒரு வாரத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் வெப்ப சூழல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து இதன் நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று குறித்த பகுதியில் வெப்பநிலை சராசரியாக அதிகபட்சம் 40.9 சி வரை காணப்பட்டது. ஆனால் இதனைவிட இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 7 நாட்களுக்கு குறித்த அவசரகால நிலை அமுலில் இருக்கும். இதனிடையே நிய…

  10. இந்த ஆண்டில் உலகெங்கும் 49 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் நடப்பு ஆண்டில் உலகெங்கும் 49 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையொன்று தெரிவித்துள்ளது. பிரான்ஸின் பரிஸிலிருந்து செயற்படும் எல்லைகள் இல்லாத ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்த ஆண்டில் உலகெங்கும் 49 ஊடகவியலாளர்கள்; கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் யேமன், சிரியா, ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டுப் போர்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது கொல்லப்பட்டனர். கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக ஆண்…

  11. டிரம்பிற்கு எதிராக தீர்மானம் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேறியது பிரதிநிதிகள் சபையில் தீர்மானத்திற்கு 200 மேற்பட்ட எம்.பி.க்கள் வாக்களிப்பு 229 எம்.பி.க்கள் தீர்மானத்திற்கு ஆதரவு- 194 பேர் எதிர்ப்பு https://www.polimernews.com/dnews/93430/அமெரிக்க-அதிபர்டிரம்பிற்கு-எதிரான-கண்டனத்தீர்மானம்-நிறைவேறியது

  12. சீனாவின் 2வது விமானம் தாங்கிக் கப்பலான ஷான்டாங் அந்நாட்டுக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. தனது நாட்டு ராணுவத்தைப் பலப்படுத்தும் வகையில் முழுவதும் உள்நாட்டிலேயே விமானம் தாங்கிக் கப்பலை சீனா தயாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்நாட்டு 2வது விமானம் தாங்கிக் கப்பலான ஷான்டாங்கை, ஹைனான் தீவில் உள்ள சன்யா என்ற இடத்தில் நடந்த விழாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பிரமாண்டக் போர்க் கப்பலை கடற்படைக்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய அவர், சீனாவை உலகத் தரம் வாய்ந்த ராணுவ சக்தியாகவும், அமெரிக்காவுக்கு இணையாகவும் மாற்றி வருவதாகக் கூறினார். 315 மீட்டர் நீளமும், 70 ஆயிரம் டன் எடையும் கொண்ட இந்தக் கப்பலில் 35 போர் விமானங்களை கொண்டு சென்று இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.…

    • 7 replies
    • 1.2k views
  13. அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இன்று அதிபர் டிரம்ப்புக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் சபாநாயகர் நான்சி பெலோசிக்கு டிரம்ப் எழுதிய நீண்ட கடிதத்தில் தம்மை கூட்டுச் சதிக்கு ஆளானவர் என்று விளக்கம் அளித்துள்ளார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ள ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு டிரம்ப் ஆபத்து விளைவித்து விட்டார் என்று ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது. இதை அடுத்து டிரம்ப்பை பதவியை விட்டு நீக்க திட்…

  14. சிம்பாப்வே துணை ஜனாதிபதியை கொல்ல முயன்ற மனைவி: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு சிம்பாப்வே துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்காவைக் அவரது மனைவி கொலை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ஹராரே நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, துணை ஜனாதிபதியின் மனைவியும், தொழிலதிபரும், முன்னாள் மொடல் அழகியுமான மேரி முபைவா, பலத்த பாதுகாப்புக்கு இடையில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது அவர் மீது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்காவை, மருத்துவ சிகிச்சைக்காக தென்னாபிரிக்கா- பிரிட்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, கொல்ல முயன்ற…

  15. பாரீஸ் :இந்தாண்டில் உலகெங்கும் 49 பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கடந்த 16 ஆண்டுகளில் இது மிகவும் குறைவு. ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரீஸில் இருந்து செயல்படும் எல்லைகள் இல்லாத நிருபர்கள் என்ற அமைப்பு 2019ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டில் உலகெங்கும் 49 பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் ஏமன், சிரியா, ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டு போர்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது கொல்லப்பட்டனர். கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 80 பத்திரிகையாளர் உயிரிழந்துள்ளனர். https://www.dinamalar.com/new…

    • 0 replies
    • 611 views
  16. பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷர்ரபுக்கு மரண தண்டனை அறிவிப்பு தேசத்துரோக வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷர்ரபுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று (17) தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலுள்ள விசேட நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இராணுவ தளபதியாக இருந்து, கடந்த 1999ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, பின்னர் 2001-2008 வரை நாட்டின் ஜனாதிபதியாக பர்வேஸ் முஷர்ரப் ஆட்சி செய்தார். இவர் தனது ஆட்சியின்போது 2007 ஆம் ஆண்டு, நாட்டில் அவசரகால நிலையை அறிவித்து, அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன்,…

  17. தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பெர்வேஸ் முஷாரஃப்பிற்கு பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், தற்போது இவர் உடல்நலக் குறைவால் டுபாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/71227

  18. ராணுவ தளத்துக்குள் நுழைய முயன்ற 2 சீன தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், வெர்ஜினியாவின் நோர்போல்க் (near Norfolk, Virginia) அருகே உள்ள ராணுவ தளத்துக்குள் செப்டம்பர் மாதம் சீன தூதரக அதிகாரிகள் 2 பேர் தங்களது மனைவியருடன் நுழைய முயன்றதாகவும், இதையடுத்து 2 பேரும் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 2 பேரும் ராணுவ தள பாதுகாப்பை உளவு பார்க்கும் பொருட்டு வந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dne…

    • 0 replies
    • 415 views
  19. மெக்ஸிகோவில் கண்டெடுக்கப்பட்ட 50 சடலங்களையும் அடையாளங் காணும் பணிகள் தீவிரம்! வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் ஓரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 50 சடலங்களையும் அடையாளங் காணும் பணிகள், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தற்போதுவரை, இதுவரை 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில் 12 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முன்னர் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் என கூறப்டுகின்றது. தடயவியல் நிபுணர்கள் மீதமுள்ள நபர்களின் பாலினத்தை அல்லது மரணத்திற்கான காரணத்தை இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும், அதற்கான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். …

  20. ஈரானில் கடந்த மாதம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான மூன்று நாட்கள் அடக்குமுறையின்போது குறைந்தது 304 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை இன்று தெரிவித்துள்ளது. முன்னதாக, 15 வயதான, 17 வயதான இரண்டு சிறுவர்கள் உள்ளடங்கலாக 208 பேர் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மன்னிப்புச் சபை மதிப்பிட்டிருந்தது. இந்நிலையில், குறித்த எண்ணிக்கைகளை அப்பட்டமான பொய்கள் என ஈரான் நிராகரித்துள்ளது. தேசியளவிலான ஆர்ப்பாட்டங்கள் கடந்த மாதம் 15ஆம் திகதி பரவியதையடுத்து மோசமான அடக்குமுறையை ஈரான் அதிகாரிகள் மேற்கொண்டதாக அறிக்கையொன்றில் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஈரானின் மோசமான அடக்குமுறை குறித்து பேசுவதைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான ஆர்ப்பா…

    • 0 replies
    • 386 views
  21. மேற்கு ஆப்பிரிக்கா நோக்கி 20 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் கடத்தப்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதி ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் நைஜீரிய கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த எம்.டி. டியூக் ((MT Duke)) என்ற சரக்குக் கப்பல் ஒன்றை கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். அதில் இருந்தவர்களில் 20 மாலுமிகள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கப்பல் கடத்தப்பட்டதை நைஜீரிய அரசு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது கவலையைத் தெரிவித்துள்ளதார். கடத்தப்பட்ட மாலுமிகள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஹாங்காங்கில் இருந்து சென்ற கப்ப…

    • 0 replies
    • 312 views
  22. எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நினைப்பவர்கள், இனி கட்டாயம் மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை ஏற முயன்றவர்களில், இந்தாண்டில் மட்டும் 9 பேர் மலை ஏறும்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். இத்தகைய உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் இனி, கட்டாய காப்பீடு திட்டம், மருத்துவரால் அளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை ஆகியவற்றை சமர்பித்தால் மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்படும் எனவும், அடுத்த மலையேறும் சீசன் முதல் இத்திட்டம் நடமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/93103/எவரெஸ்ட்-சிகரத்தில்-ஏறமருத்துவ-சான்றிதழ்-அவசியம்--நேபாள-அரசு

    • 0 replies
    • 231 views
  23. மெக்ஸிக்கோவின் மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் (Guanajuato) கடந்த ஒரு வார காலப் பகுதியில் 12 பொலிஸ் அதிகாரிகள் பாதாள உலக குழுவினரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான மரியா சோனியா அரேலானோ என்ற 47 வயதுடைய பெண் பொலிஸ் அதிகாரி, அவரது கணவர் மற்றும் மகனுடன் இராபுவாடோ என்ற நகரில் அவரது வீட்டில் வைத்து ஆயுதமேந்தியவர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டார். அவரது 27 வயதுடைய மகன் மற்றும் கணவர் விடுவிக்கப்பட்ட நிலைலயில் அவர் உயிரிழந்த நிலையில் வீதியோரத்தில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/71170

  24. இரண்டு மணித்தியாலங்களில் 123 பதிவுகள் – தன்னிலை விளக்கமளிக்கும் ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு மணித்தியாலங்களில் தனது டுவிட்டர் பக்கத்தில் 123 பதிவுகளை பதிவிட்டுள்ளார். ட்ரம்ப்பினை பதவியை விட்டு நீக்குவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் 123 டிவிட்டர் பதிவுகளை வெளியிட்ட ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்குவது நியாயமல்ல எனவும், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் ட்ரம்ப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டுவிட்டரை தமது டைப் ரைட்டர் என அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி தனக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதில் வழங்கியுள்ளார். அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தான் மேற்கொண்ட நடவடிக்கைகள…

  25. சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரை மோசடியில் குற்றவாளியாக நேற்று இனங்கண்டுள்ள அந்நாட்டு நீதிமன்றமொன்று அவரை இரண்டாண்டுகளுக்கு சீர்திருத்தல் மய்யமொன்றுக்கு அனுப்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீருக்கு 75 வயதென்பதால், அதைக் கருத்திற் கொண்டே சிறைச்சாலையை விடுத்து அவர் சீர்திருத்த மய்யத்துக்கு அனுப்பப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரின் 30 ஆண்டுகள் ஆட்சிக்கெதிரான மாதக்கணக்கான வீதி ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இராணுவத்தால் அவர் பதவி அகற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீர் பதவியிலிருந்து அகற்றப்படும்போது கண்டுபிடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள், சூடானிய பவ…

    • 0 replies
    • 380 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.