Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்! இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா கடலுக்கடியில் சுமார் 108 மைல் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர் என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இதற்கு முன்னர் நிலநடுக்கத்தின் அளவு 7.0 அளவு ரிச்ட்டரில் பதிவாகியதாகவும் புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என பசிபிக் சுனாமி …

  2. படத்தின் காப்புரிமை Getty Images தங்களின் விவாகரத்து தகவல்களை பெண்கள் அறியமுடியாமல் போவதை தடுக்க, சௌதி அரேபியா புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இன்று (ஞாயிறு) முதல், விவாகரத்து வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது குறித்த தகவலை குறுஞ்செய்தியாக பெண்களுக்கு நீதிமன்றங்கள் அனுப்பி வைக்கும். இத்தகைய நடவடிக்கைகள், மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின், `ரகசிய விவாகரத்துகளை` தடுக்கும் என்று உள்ளூர் பெண் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர் …

  3. Image caption விபத்து நடந்த ஆற்றுப்படுகை ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்துள்ளதில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குழந்தைகளும் அடக்கம். ஆஃப்கனின் வடகிழக்கில் உள்ள பாதக்ஷான் மாகாணத்தின் கோகிஸ்தான் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அந்த மாவட்டத் தலைமை நிர்வாக அதிகாரி மொகமது ரஸ்தம் ராஹி கூறியுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது. தகவல் தெரிந்த உடனேயே அருகில் இருந்த கிராமவாசிகள், உடனடியாக மீட்புப் பணிகளைத் தொ…

  4. பிலிப்பைன்ஸ் வெள்ளப்பெருக்கு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு! பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இதில் அங்குள்ள 300 இற்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. அத்துடன், ஒரு இலட்சத்து 52 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்…

  5. பென்டகனின் மூன்றாவது முக்கிய அதிகாரி இராஜிநாமா! அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் அலுவலக தலைமை நிர்வாகி ரியர் அட்மிரல் கெவின் ஸ்வீனே இராஜிநாமா செய்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் இராஜிநாமா செய்து ஒருமாத காலத்தில் கெவின் தமது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். தமது இராஜிநாமா தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கெவின், அரச துறையிலிருந்து விலகி தனியார் துறைக்குச் செல்வதற்கான சரியான தருணம் வந்துவிட்டதென கூறியுள்ளார். சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்களை மீளப் பெறவேண்டி ஏற்படுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த பின்னர், பென்டகனிலிருந்து விலகிச் செல்லும் மூன்றாவது சிரேஷ்ட அதிகாரி இவரென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ஆம் ஆண்டு பென்…

  6. உலகின் மிக்பெரிய பனித்திருவிழா வாணவேடிக்கையுடன் ஆரம்பம்! உலகின் மிகப்பெரிய பனித் திருவிழா சீனாவின் ஹர்பின் நகரில் வாணவேடிக்கைகளுடன் ஆரம்பமாகியுள்ளது. ஹர்பின் நகரில் நேற்று(சனிக்கிழமை) இரவு வாண வேடிக்கைகளுடன் ஆரம்பமாகியுள்ள உலகின் மிகப்பெரிய பனித் திருவிழாவினை பார்வையிடுவதற்காக அதிகளவான சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். பனி உறைந்து போயிருக்கும் Soungha ஆற்றில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பனி சிற்பங்கள் வரிசையாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் நடத்தப்படும் பனித்திருவிழா சுமார் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள். பல்வேறு பனிச் சிற்பங்கள் பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், உயிரை உருக வைக்கு…

  7. படத்தின் காப்புரிமை SAUL LOEB Image caption டொனால்டு டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே எல்லைச்சுவர் கட்டுவதற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது கனவுத் திட்டமான எல்லைச்சுவர் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் ஜனநாயக கட்சியினருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து டிரம்ப் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். தனது எல்லைச்சு…

  8. படத்தின் காப்புரிமை Getty Images சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 பேர் மீது வழக்கு விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பிரதிவாதிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்குரைஞர் வாதாடியுள்ளார். பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். கடந்த வருடம் அக்டோபர் 2-ம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் நுழைந்தபின்னர் உயிருடன் வெளியே வரவில்லை. …

  9. சித்தரிக்கப்பட்ட படம் Published : 04 Jan 2019 15:15 IST Updated : 04 Jan 2019 15:16 IST அமெரிக்கா உருவாக்கிய ’அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ குண்டுக்கு போட்டியாக சீனா அணு ஆயுதம் இல்லாத ராட்சத குண்டு ஒன்றை தயாரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெலியிட்டுள்ளன. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”சீனா உலகிலேயே மிகப் பெரிய வெடிகுண்டை உருவாக்கியுள்ளது. சீனாவின் பாதுகாப்புத் துறை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தவறவிடாதீர் சீனா உருவாகி இருக்க…

  10. படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிகள் சபையில் பகுதியளவு அரசுத்துறை முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் வாக்களித்துள்ளனர். எனினும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை நிராகரிப்பார் என்று கருதப்படுகிறது. முன்னதாக, தனது அமெரிக்க - மெக்ஸிகோ எல்லைச்சுவர் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்காத எந்த தீர்மானத்தையும் ரத்து செய்வேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் புதிய சபாநாயகரான நான்ச…

  11. அமெரிக்க காங்கிரசில் வரலாறு காணாத அளவு பெண் செனட்டர்கள்….. January 3, 2019 அமெரிக்க காங்கிரசின் 116வது பதவியேற்பில், வரலாறு காணாத அளவு பெண் செனட்டர்கள் பதவியேற்கவுள்ளனர். இதனையொட்டி இன்றையதினமான ஜனவரி 3ஆம் திகதி அமெரிக்கா வரலாறு படைக்கவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 2016ஆம் ஆண்டு, ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் லட்சக்கணக்கான மகளிர் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இடைக்கால தேர்தலில் ஜனநாயகக்கட்சி வேட்பாளராக களமிறங்கப் பல பெண்கள் முன்வந்திருந்தனர். இது அதற்கு முந்தைய ஆண்டு, அந்தக்கட்சியில் பெண்களின் நிலைப்பாட்டுக்கு எதிர்மாறாக அமைந்திருந்தது. அமெரிக்காவில் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பெண் செனட்டர்களின…

  12. இத்தாலிக்கான வட கொரிய தூதுவரை காணவில்லை – தென்கொரிய புலனாய்வு முகவரகம்! இத்தாலிக்கான வட கொரிய தூதுவர் ஜோ சோங் கில் ரோமில் வைத்து காணாமல் போயுள்ளதாக தென் கொரிய புலனாய்வு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து பியோங்யாங்கின் உயர் இராஜதந்திரி ஒருவர் இனந்தெரியாத மேற்கு நாட்டிற்கு தஞ்சம் கோரி வருவதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வடகொரியாவின் ரோமிற்கான பதில் தூதுவரான ஜோ சோங் கில், வட கொரியாவின் உயர் மட்ட அதிகாரிகளின் மகன் மற்றும் மருமகன் என்று அறியப்படுகிறார். இந்த நிலையில், இறுதியாக லண்டனுக்கான பதில் தூதுவராக இருந்த தாயி யொங்-ஹோ கடந்த 2016 ஆம் ஆண்டு பதவியை துறந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தென்கொரியாவுக்கு தப்பிச் சென்றா…

  13. நான்கு மாதத்துக்குள் சிரியாவலிருந்து வெளியேறுகிறது அமெரிக்க படைகள் எதிர்வரும் நான்கு மாத காலத்தில் சிரியாவில் உள்ள அனைத்து அமெரிக்கப் படைகளும் சிரியாவை விட்டு வெளியேறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி ட்ரம்ப் சிரியாவிலுள்ள அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவது என்ற முடிவை மேற்கொண்ட ட்ரம்ப், யாராலும் முடியாவிட்டால் ட்ரம்பால் முடியும். ஐ.எஸ்.ஐ.எஸ். சிரியாவிலிருந்து வெளியேறிவிட்டார்கள். அதனால் அமெரிக்க படைகளை மெதுவாக திரும்ப பெறுகிறோம். அவர்கள் அவர்களது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந் நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்னும் நான்கு மாத காலத்த…

  14. விமான விபத்துக்களினால் 2018-இல் உயிரிழப்பு அதிகரிப்பு உலகளாவிய ரீதியில் விமான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு வெறும் 44 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு 556 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விமான விபத்துகள், விமான கடத்தல்கள் போன்ற தரவுகளை பேணிவரும் விமான பாதுகாப்பு வலையமைப்பின் அறிக்கையொன்றிலேயே இவ்விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் இந்தோனோசியாவில் விபத்திற்குள்ளான லயன் எயர் விமான விபத்தே மிக மோசமான பயணிகள் விமான விபத்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். அந்தவகையில், மிகவும் பாதுகாப்பா…

  15. பதவியேற்ற சில மணிநேரங்களில், மேயர் சுட்டுக்கொலை! மெக்ஸிகோவின் தென் மாநிலமான ஒக்ஸாகாவில், பதவியேற்று சில மணிநேரங்களில் அதன் மேயர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றதாக மெக்ஸிகோ உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. லக்ஸியாகோ நகரில் பதவியேற்றுவிட்டு பிறிதொரு சந்திப்பிற்காக நகர மண்டபத்திற்கு சென்றுகொண்டிருந்த மேயர் அலேஜான்ரோ அபாரிகோ இனந்தெரியாத நபர் ஒருவரினால் சுடப்பட்டார். இந்த சம்பவத்தில் பிறிதொரு நபரும் பலத்த காயமடைந்த நிலையில் பின்னர் மருத்துவமனையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் மேயர் அபாரிகோவின் …

  16. டென்மார்க்கில் புகையிரத விபத்தில் அறுவர் பலி January 2, 2019 டென்மார்க்கில் இன்று சரக்கு புகையிரதத்துடன் பயணிகள் புகையிரதம் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . டென்மார்க்கின் ஜிலாந்து மற்றும் புனேன் தீவுகளை இணைக்கும் வழியில் இன்று காலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விபத்தில் காயமடைந்த 16 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால் விபத்துக்குள்ளான புகையிரதங்களை அங்கிருந்து அகற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் விபத்துக்கான காரணம் தொடர…

  17. அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஸ்யா தயார்… January 1, 2019 அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஸ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடிதம் எழுதி உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றினால் இருநாடுகளுக்குமிடையயே அண்மைக்காலமாக மோதல் போக்கு நீடித்து வருகின்ற நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிரம்புக்கு புட்டின் எழுதியுள்ள கடித்திலேயே இவ்வாறு பேச்சு நடத்த தயாராக இருப்பதா எழுதியுள்ளார். ரஸ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான நல்லுறவு சர்வதேச பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிபடுத்துவதற்கான முக்கிய காரணி எனவும் புட்டின் அக்கடிதத்தில் வலியுறுத்தி உள…

  18. ஊடகவியலாளர் கஷோக்கியின் சடலத்தை கொண்டுசெல்லும் காணொளி வெளியானது! துருக்கியிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடற்பாகங்களுடன் சிலர் செல்லும் காணொளி வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஊடகவியலாளரை கொலைசெய்த பின்னர் சவுதி அரேபியாவை சேர்ந்த சிலர் கஷோக்கியின் உடல் பாகங்களை கொண்டு செல்வதை காண்பிக்கும் காணொளியினை துருக்கி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. துருக்கியின் புலனாய்வு பிரிவினருக்கு நெருக்கமான ஊடகமொன்றே இந்த காணொளியினை வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர் கொல்லப்பட்ட தினத்தன்று கொலையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த துருக்கிக்கான சவுதி அரேபிய தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்வதையே காணொளி காண்பித்துள்ளது. …

  19. கிரேக்கத்தில் கடும் குளிர்: வீடற்றவர்களுக்கு தற்காலிக முகாம் வசதி கிரேக்கத்தில் நிலவும் பனி மற்றும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நகரின் வீடற்றவர்களை பாதுகாக்கும் வகையில் பொது முகாம்களை திறப்பதற்கு எதென்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். திடீர் காலநிலை மாற்றம் காரணமாக எதென்ஸ் மலைகளின் வீதிகள் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல பனியால் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான காலநிலையின்போது இரவுபொழுதை கழிப்பதானது வீடற்றவர்களுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அதற்கமைய, இந்த திடீர் காலநிலை மாற்றத்திலிருந்து வீடற்றவர்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான தற்காலிக முகாம் வசிதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதென்ஸ் நகராட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதென்ஸ் நகராட்சி அரச…

  20. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  21. எல்லையில் தடுப்பு சுவர் கட்டி முடிப்போம், அல்லது எல்லைகளை மூடுவோம் – ட்ரம்ப் எச்சரிக்கை அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டி முடிப்போம் அல்லது நாம் எல்லைகளை மூடுகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு நம் நாட்டின் பல நிறுவனங்கள் மற்றும் வேலைகளை மெக்ஸிக்கோவிற்கு மிகவும் முட்டாள்தனமாக வழங்குவதற்கு முன்னர், முந்தைய NAFTA க்குச் செல்லுங்கள் என அவர் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றம் அவசரமாக கூடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அங்கு அரசின் நிர்வாக முடக்கம் ஏழாவது நாளாக தொடர்கிறது. மெக்சிகோவின் எல்லையில் அகதிகள் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும் வகையில், சுவர் அமைக்கப்படும்…

    • 4 replies
    • 1.1k views
  22. 14 தொன் வெடிகளை, வானில் ஏவுவதற்கு காத்திருக்கும் அவுஸ்ரேலியர்கள்! புத்தாண்டு தினத்தன்று அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் 14 தொன் வெடிகளை வானில் ஏவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மெல்பேர்ன் நகரிலுள்ள 22 கட்டடங்களிலிருந்து சுமார் 14 தொன் எடையுள்ள பட்டாசுகளையும் வாண வேடிக்கைகளையும் வானில் ஏவி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தப்போவதாகவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மெல்பேர்ன் நகரின் மையத்திலிருந்து ஏழு கிலோமீற்றர் சுற்றளவிலுள்ள ஒட்டுமொத்த வான்பரப்பும் அன்றிரவு ஒளிவெள்ளத்தில் மிதக்கும் என்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். 2019 ஆம் ஆண்டினை வரவேற்கும் முகமாக நள்ளிரவு 12 மணிமுதல் 10 நிமிடங்களுக்கு வானில் ஜாலம் நிகழ்த்தவு…

  23. படத்தின் காப்புரிமை Sergei Bobylev / Getty குடிக்க தண்ணீர் கொடுக்காமல், கடும் வெயிலில் சங்கிலியால் கட்டி வைத்து ஐந்து வயது பெண் குழந்தையை உயிரிழக்க செய்த விவகாரத்தில் ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த பெண் உறுப்பினர் ஜெர்மனியில் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த 27 வயதான ஜெனிஃபரும் அவரது கணவரும், கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் கட்டுப்பாட்டிலிருந்த இராக்கின் மொசூல் நகரத்திலிருந்து அந்த சிறுமியை தங்களது வீட்டின் "கொத்தடிமையாக" கொண்டு வந்தனர். ஒரு கட்டத்தில் உடல்நிலை பாதிப்படைந்த சிறுமியை, ஜெனிஃபரின் கணவர் வீட்டிற்கு வெளியே சங…

  24. பிலிப்பைன்சில் கடுமையான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை December 29, 2018 பிலிப்பைன்சின் மிண்டானோ தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதனையடுத்து சுனாமி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்று காலை ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.2 அலகாக பதிவாகியிருந்ததாக முதலில் தெரிவித்துள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் 6.9 ரிக்டர் என தெரிவித்துள்ளது. ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 59 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் எத…

  25. படத்தின் காப்புரிமை SHEIKHA LATIFA காணாமல் போனதாகக் கூறப்பட்ட துபாய் இளவரசி குறித்து முன்னாள் ஐ.நா மனித உரிமை தலைவர் கூறிய கருத்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. என்ன சொன்னார்? முன்னாள் ஐ.நா மனித உரிமை செயலாளர் மேரி ராபின்சன் துபாய் இளவரசி விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசின் கருத்தை அப்படியே வழிமொழிந்திருக்கிறார். அமீரக ஆட்சியாளர் அரசர் ஷேக் மொஹமத் பின் ராஷித் அல் மக்டூமின் மகள் ஷேய்கா லத்தீஃபா சுதந்திரமான வாழ்க்கை ஒன்றை வாழ்வதற்காக துபாயிலிருந்து தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.