உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
ஜேர்மனி அரசாங்கத்தின் கொவிட்-19 விழிப்புணர்வு விளம்பரம்! மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், அரசாங்கம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு விளம்பரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் வீட்டில் தனித்திருக்க அறிவுறுத்தும் வகையில், ஜேர்மனி அரசாங்கம், 90 வினாடிகள் ஓடும் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றுபரவல் காலத்தில், 22 வயது இளைஞர் ஒருவர், வீட்டில் தனித்து இருந்து, நாட்டிற்கு தான் அளித்த சேவை குறித்து, வயதான பின், அவர் கூறும் வகையில், இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. ஜேர்மனியில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-1…
-
- 0 replies
- 676 views
-
-
-
- 0 replies
- 869 views
-
-
மதுரை புதூரில் கட்சி பிளக்ஸ் போர்டுகள் அகற்றம் தொடர்பாக, காங்., மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்குள், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. புதூரில் நாம் தமிழர் கட்சிக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தலைவர் சீமான் பேசினார். இதற்காக, நேற்று முன் தினம் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்தனர்.அவற்றில், தங்கள் கட்சி தலைவர்களை இழிவுப்படுத்தி இருப்பதாக, காங். கட்சியினர் புதூர் போலீசில் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, காலையில் நாம் தமிழர் கட்சி பிளக்ஸ் போர்டுகளை போலீசார் அப்புறப்படுத்தினர். ஆனால், நாம் தமிழர் கட்சியினர் பிளக்ஸ் போர்டுகளை கொடுக்கும்படி, புதூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள காங்., கட்சி அலுவலகத்தில் இருந்தவர்களிடம் கேட்டன…
-
- 0 replies
- 495 views
-
-
தாவூத்தின் 15 ஆயிரம் கோடி சொத்துக்களை பறிமுதல் செய்தது யு.ஏ.இ., அரசு புதுடில்லி : நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு பறிமுதல் செய்துள்ளது. நிழலுலக தாதா: மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில், 257 பேர் கொல்லப்பட்டனர்; 1,000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், சவுதி அரேபியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் பாகிஸ்தான் அரசிடம் தஞ்சம் அடைந்தான். கராச்சி நக…
-
- 0 replies
- 434 views
-
-
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கிறார். கடந்த டிசம்பர் மாதம் 10ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவார் என்ற மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் ஆச்சரியமான வெற்றி உலகமெங்கிலுமுள்ள ஜனநாயகப் பற்றாளர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அரசியல் அனுபவம் இல்லாத ஆனால், பெரும் செல்வந்தரான டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈராக், போன்ற பல நாடுகளுடன் அமெரிக்காவுக்குள்ள பதற்ற நிலையை தணிக்கும் வகையிலான அரசியல் செய்வாரா அல்லது நிலைமையை இன்னும் மோசமாக்குவாரா என்ற அங்கலாய்ப்பில் அமெரிக்க மக்களும் உலகமும் இருக்கின்ற ஒரு நிலைமைதான் க…
-
- 5 replies
- 680 views
-
-
சென்னை: தமிழகத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா வருவாரா, வரமாட்டாரா? என்ற சந்தேகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சென்னை தீவுத்திடலில் நடக்கும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் சோனியா கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மேலிட பொறுப் பாளர் குலாம் நபி ஆசாத் இன்று வெளியிடுகிறார். ஜனநாயக முற்போக்கு கூட் டணி கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டம், நேற்று முன்தினம் சென்னை தீவுத்திடலில் நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் கருணாநிதியும் அக்கூட் டத்தில் கலந்து கொள்ள இருந்தார். அவரது உடல் நலக் குறைவு காரணமாக, தேர்தல் பிரசாரக் கூட் டத்தில் கலந்து கொள்ள வேண்டாமென டாக்டர் கள் வலியுறுத்தினர். சோ…
-
- 1 reply
- 1.2k views
-
-
முதுகுவலி சிகிச்சைக்குப் போன, மரதன் வீராங்கனைக்கு பிரசவம்... அமெரிக்காவில் அதிசயம். வாஷிங்டன்: அமெரிக்காவில் மராத்தான் ஓட்டப்பந்தைய வீராங்கனை ஒருவர் முதுகுவலி பிரச்சினைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவர் நிறைமாத கர்பிணியாக இருப்பது கண்டறியப்பட்டு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதாகும் ட்ரிஸ் ஸ்டெயின் என்ற அந்த வீராங்கனை மராத்தான் விளையாட்டு போட்டிக்காக கடந்த சில மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதனால் கடுமையான முதுகுவலி ஏற்பட்டு அவதிப்பட்டார். சிகிச்சைசக்காக அவர் மருத்துவமனைக்குச் செல்லவே அங்கு எதிர்பாராத விதமாக அவர் கர்ப்பமடைந்திருப்பது கண்டறியப்பட்டது. பிரசவ வலிதான் அவருக்கு முதுகுவலியாக ஏற்பட்டுள்ளது. இதனை…
-
- 6 replies
- 674 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து ஐநா பாதுகாப்புச் சபை விவாதிக்க தயாராகிறது. அதேவேளை வடகொரியா குறித்த கொள்கை பற்றி அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுகின்றன. மத்திய கிழக்கின் மதக் கொள்கைகளுக்கு சவுதியின் புதிய சவால்.பெட்ரோலில் தங்கியிருப்பதையும் குறைக்க நினைக்கிறது அந்த நாடு. அணு மின் உற்பத்தியை கைவிட நினைக்கிறது தாய்வான். பதிலாக தூய எரிசக்தியை நோக்கி அது பயணிக்கிறது.
-
- 0 replies
- 338 views
-
-
அமெரிக்காவில் நுழைய முஸ்லிம் பயணிகளுக்கு தடை விதிக்கும் புதிய உத்தரவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாளை கையெழுத்திடுகிறார். சிரியா, ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள், பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து கடந்த ஜனவரியில் அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார். இந்த தடையை சியாட்டிலில் உள்ள மாவட்ட நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 நாடுகளின் முஸ்லிம் அகதிகள், பயணிகளுக்கு தடை விதிக்க வகை செய்யும் புதிய உத்தரவை அதிபர் ட்ரம்ப் நாளை பிறப்பிக்க உள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் நிருபர்களிடம் கூறியபோது, புதிய…
-
- 0 replies
- 405 views
-
-
வரி ஏய்ப்பு செய்து வாழ்வை முடித்த பணக்கார முட்டாள். Anti virus மென்பொருள் உலகின் முதல் கால் பதித்தவர், John Macfee. Macfee என்ற பெயரில் இவர் 1980களில் அறிமுகப்படுத்திய மென்பொருள், சந்தையில் சக்கை போடு போட்டது. இறுதியில் அதனை intel நிறுவன,$7.6 பில்லியன் க்கு வாங்கியது. இவரும் பெலிஸ் நாட்டுக்கு சென்று அங்கெ 17 வயது இளம் பெண்ணுடன் தங்கி இருந்தார். நாய் வளர்ப்பில் பிரியமான இவர் வளர்த்த நாய்களில் ஒன்றை பக்கத்து வீட்டு காரர் நஞ்சு வைத்து கொன்றதாக குற்றம் சாட்டி வந்தார். ஒருநாள் அந்த பக்கத்து வீட்டுக்காரர், சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இவரோ கௌதமாலா நாட்டுக்கு ஓடி விட்டார். இவர் இருந்த வீட்டினுள் பல துப்பாக்கிகள் இருந்தன என்று போலீசார் சொன்னார்கள்…
-
- 1 reply
- 699 views
-
-
திராவிடம் V/S தமிழ் தேசியம் சுதந்திரம் கிடைத்த பிறகு தேசிய அரசியலில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இந்திய தேசத்தை காங்கிரஸ்தான் வழிநடத்தி வருகிறது. நாட்டை அது வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்குப்பதில் கடந்த பத்தாண்டுகளில் கடுமையான வீழ்ச்சியை நோக்கி நகர்த்திவிட்டிருக்கிறது. அதிலும் சோனியாவின் வழிநடத்தலில் மன்மோகன், சிதம்பரம் எனும் பெரிய பொருளாதார மேதைகள் சர்க்கஸ் கோமாளிகளாக மாறிவிட்டனர். ஆனால் தமிகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள் ஓரளவுக்கு வளர்ச்சியாகவே இருக்கிறது. இதற்கு காரனம் இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள், இயக்கங்கள் போன்றவைதான். ஒப்பு நோக்கலில் தெலங்கானா தவிர்த்த ராயல சீமா, ஆந்திரா பகுதிகள் செழிப்பானவைகவே இருக்கின்றன. தமிழகத்தை பொருத்தவரை காமராஜருக்கு பின்னால் …
-
- 0 replies
- 671 views
-
-
சீனா-அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம் கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் உள்ள அனைத்து பொருளாதாதார வல்லுனர்களாலும் கேட்கப்படும் கேள்வி- சீனா மேலை நாடுகளை மீறி பொருளாதார வல்லரசாக மாறுமா என்பதாக தான் இருக்கும். இன்றைய உலக பொருளாதாரத்தில் நடப்பது தான் என்ன?. சீனாவின் இன்றைய உண்மையான நிலை தான் என்ன?. அது பற்றி இப்போது பார்ப்போம். 1970 வரை சீன கம்யூனிச தலைவர்களுக்கும் மேலை நாடுகளுக்கும் சரியான உறவில்லை. ஆனால் மாசேதுங்கிற்கு பிறகு சீனாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட தொடங்கியது. அந்த கால கட்டத்தில் தான் அமெரிக்காவும் (ஓரளவுக்கு?) தங்கம் கையிருப்பு அடிப்படையில் டாலரை அச்சடிப்பதை நிறுத்தி விட்டு சந்தையின் தேவைகேற்ப டாலரை அச்சடிக்க தொடங்கியது. டாலரின் மதிப்பை நிலை நிறுத்த அ…
-
- 1 reply
- 1k views
-
-
பள்ளிகளில் பயிலும் மாணவிகள், மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர் என பெண்களைக் குறிவைத்து மிகக் கொடூரமான தாக்குதல் நடத்தும் இயக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே. இப்போது காபூல் விமான நிலையத்தில் நடைபெற்றிருக்கும் இரட்டைக் குண்டுவெடிப்புகளுக்குப் பொறுப்பேற்றிருக்கும் இந்த இயக்கம் மத்திய கிழக்கில் செல்வாக்குப் பெற்றிருக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் ஆப்கானிய கிளை. இதன் மிகச் சரியான பெயர் கோரேசன் மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் (Islamic State Khorasan Province) என்பதாகும். ஆப்கானிஸ்தானில் இருநது இயங்கும் மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கம் இது என அறியப்படுகிறது. பள்ளிகளில் பயிலும் மாணவிகள், மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர் என பெண்களைக் குறிவைத்து மிகக் கொட…
-
- 0 replies
- 300 views
-
-
தென்னிந்தியர்களே இந்தியாவின் பூர்வீக குடிகள்- வட இந்தியர்கள் பின்னால் வந்தவர்கள் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25, 2009, 14:52 [iST] ஹைதராபாத்: இந்தியாவின் பூர்வீக குடிகள் தென்னிந்தியர்களே. தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூ்லக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும், அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்.ஐ.டி) ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன. இந்த ஆய்…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தினால்... ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ்- அமெரிக்கா விருப்பம்! ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதுதொடர்பாக, அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிகள் இப்போது கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஜோ பைடன் மற்றும் இம்மானுவேல் மக்ரோன் நேற்று (புதன்கிழமை) இதுகுறித்து அரை மணி நேரம் தொலைபேசியில் பேசினார்கள். அவர்கள் அடுத்த மாத இறுதியில் ஐரோப்பாவில் சந்திப்பார்கள். இதன்போது, இதுகுறித்து விரிவாக பேசி சுமூகமான தீர்வு எட்டப்படுமென நம்பப்படுகின்றது. முன்னதாக அவுஸ்ரேலியாவுக்கான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உள்ளடக்கிய முத்தர…
-
- 0 replies
- 422 views
-
-
இந்தியாவின் ஒரே விமானந்தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராத்தில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மும்பை கடல் பகுதியில் ஐஎன்எஸ் விராத் போர்க் கப்பல் கடந்த வாரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அதில் உள்ள அதிகாரிகளின் உணவு விடுதியின் அருகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு இருந்த குளிர்சாதன வசதி இயந்திரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும், உடனடியாக தீ அணைக்கப் பட்டது என்றும் கடற்படை தலைமை அலுவகம் தெரிவித்துள்ளது. அண்மையில் மும்பைக் கடற்படைத் தளத்தில் இந்திய நீர்மூழ்கி ஒன்று தீவிபத்தினால் வெடித்துச் சிதறி அதில் இருந்த 18 மாலுமிகளும் மரணமானது குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 323 views
-
-
தென் சீனக் கடலில் மர்ம பொருள் மீது மோதிய அமெரிக்க அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் 8 அக்டோபர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கிக் கப்பல் - கோப்புப் படம். அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தென் சீனக் கடலில் நீரில் மூழ்கியிருந்தபோது மர்மப் பொருள் ஒன்றின் மீது மோதியதாகவும், அதில் பல மாலுமிகள் காயமடைந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று கூறும் அவர்கள், கப்பல் முழுவதும் செயல்படுவதாகவும் கூறுகின்றனர். தென் சீனக் கடலில் சர்வதேச கடற்பரப்பில்…
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
அணு சக்தி குறித்து ஈரானுடன் இஸ்ரேல் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளுடனான அணு சக்தி பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஈரானுடன்,தங்கள் நாட்டு அணு சக்தி தொழில்நுட்ப நிபுணர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்க்ள் என்று இஸ்ரேல் அணு சக்தி ஆணையத்தின் பேச்சாளர் யேல் டோரான் தெரிவித்தார். அதே சமயம் இந்த பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை மேற்கொண்டு தெரிவிக்க டோரான் மறுத்துவிட்டார். இதனிடையே இது குறித்து ஈரான் தரப்பில் கருத்து தெரிவிக்க அந்நாடு மறுத்துவிட்டது. இணைய இணைப்பு http://www.uthayan.com/Welcome/full.php?id=1215&Uthayan1256440030
-
- 1 reply
- 845 views
-
-
சீ.என்.என் ஊடகத்திற்கு எதிரான வகையில் அமெரிக்க ஜனாதிபதி வீடியோ வெளியிட்டுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உலகின் முதனிலை ஊடகங்களில் ஒன்றான சீ.என்.என் ஊடகத்திற்கு எதிரான வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ரம்ப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சீ.என்.என். இலச்சினை பொறிக்கப்பட்ட ஓர் ரெஸ்லின் வீரரை, ட்ராம்ப் தாக்குவது போன்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு ரெஸ்லிங் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற வீடியோ காட்சி, தொகுக்கப்பட்டு இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ட்ராம்பிற்கு ஆதரவான இணைய தரப்புக்களினால் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சீ.என்.என். செய்தி சேவை பொய்யான ஓர் செய்தி சேவை என பல தடவைகள் நேரடியாகவே ட…
-
- 0 replies
- 260 views
-
-
கத்தார் பால் தேவைக்கு ஜெர்மனியில் இருந்து பறந்து வந்த மாடுகள் சௌதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் கத்தாரை தனிமைப்படுத்தியுள்ள நிலையில், கத்தாரில் பால் விநியோகத்தை அதிகரிக்க மாடுகள் விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. படத்தின் காப்புரிமைREUTERS இறக்குமதி செய்யப்பட்ட உள்ள 4000 மாடுகளில், முதல்கட்டமாக 165 ஹால்ஸ்டீன் பால் மாடுகள் ஜெர்மனியில் இருந்து கத்தார் வந்து சேர்ந்துள்ளன. கத்தாரில் வாழும் 2.7 மில்லியன் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நாடு இறக்குமதி பொருட்களை நம்பியிருக்கும் நிலையில், பிற நாடுகள் விதித்திருக்கும் வான், கடல் மற்றும் நில வழி தடையின் காரணமாக கத்தாரில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 485 views
-
-
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவால் கைது செய்யப்பட்ட செளதி இளவரசர் செளதியின் ஒரு இளவரசர் செளத் பின் அப்தெலாஜிஸ் பின் முசைத் அல் செளத், பலரை அடிக்கும் காணொளிக் காட்சி, சமூக ஊடகங்களில் பரவலானதை அடுத்து, அவரை கைது செய்ய செளதி அரசர் சல்மான் பின் அப்தெலாஜிஸின் உத்தரவிட்டார். படத்தின் காப்புரிமைAFP Image captionஇளவரசரை கைது செய்ய உத்தரவிட்ட செளதி அரசர் சல்மான் இதுபோன்ற வேறு எந்தவிதமான மீறல்களிலும் இளவரசர் செளத் பின் அப்தெலாஜிஸ் பின் முசைத் அல் செளத் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரியாத் போலீஸால் கைது செய்யப்பட்டதாக செளதி அரேபிய அரசின் அல்-இக்பரியா தொலைகாட்சியின் @alekhbariyatv என்ற டிவிட்ட…
-
- 1 reply
- 428 views
-
-
எண்ணெய் விலை வீழ்ச்சி: சுற்றுலாவை மேம்படுத்த செளதி அரேபியா முயற்சி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைKINGDOM OF SAUDI ARABIA Image captionசெளதி மேற்கு கடற்கரையில் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு, செங்கடல் வளர்ச்சி திட்டம் கட்டமைக்கப்பட உள்ளது ஐம்பது தீவுகள் மற்றும் செங்கடலில் உள்ள பிற பகுதிகளை ஆடம்பர விடுதிகளாக மாற்றும் மாபெரும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்ட…
-
- 0 replies
- 570 views
-
-
டெல்லி முதல்– மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்படுத்தியுள்ள எளிமைக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் மற்ற மாநில முதல்– மந்திரிகளும் கெஜ்ரிவால் பாணியை பின்பற்றத் தொடங்கி உள்ளனர். டெல்லியில் கெஜ்ரிவால் செயல்படுத்தும் அனைத்து விதமான நடவடிக்கை களையும் அப்படியே ராஜஸ்தான் பா.ஜ.க. முதல்– மந்திரி வசுந்தரராஜே சிந்தியா செயல்படுத்தி வருகிறார். கெஜ்ரிவால் போலவே அவரும் அரசு வீட்டில் குடியேற மறுத்துவிட்டார். தற்போது தன் கட்சி மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களும் எளிமையாக இருக்க வேண்டும். மக்களுடன் நெருங்கிப்பழகி, அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று வசுந்தரா விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் வீட்டுக்கு கொடுக்கப்பட்ட 100 ப…
-
- 0 replies
- 286 views
-
-
சொந்தக் கட்சியில் இருந்து டிரம்பை எதிர்க்கிறார் இன்னொரு செனட்டர் பகிர்க படத்தின் காப்புரிமைWIN MCNAMEE/GETTY IMAGES அமெரிக்க அதிபர் டொனாடு டிரம்புக்கு அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜெஃப் ஃப்ளேக் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, தாம் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். விளம்பரம் அரிசோனா மாகாண செனட்டரான ஜெஃப் ஃபிலேக், நாட்டின் தலைமையில், "பொறுப்பற்ற, மூர்க்கத்தனமான, கண்ணியமற்ற நடத்தை," என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றார். இதற்கு முன்பு, அதிபர் டிரம்ப், ஃபிலேக்கை, "நச்சு" எனத் தெரிவித்திருந்தார். டிரம்ப் ஏற்கனவே இன்னொரு குடியரசு கட்…
-
- 0 replies
- 443 views
-
-
கெவின் ரட் அவுஸ்திரெலியாப் பிரதமர் பதவியில் இருந்து திடிரென விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக இவரது கட்சியைச் சேர்ந்த யூலியா ஜிலட் புதிய பிரதமராக வருகிறார். இதன் மூலம் அவுஸ்திரெலியாவின் முதலாவது பெண் பிரதமர் என்ற புகழைப் பெறுகிறார். இவ்வருட இறுதியில் தேர்தல் வரும் வரவுள்ளது. ஆளும் தொழிற்கட்சிக்கு இம்முறை வெற்றி பெறுமா என்பது சந்தேகமான நிலையில் கெவின் ரட் பதவி விலகியுள்ளார்.
-
- 0 replies
- 592 views
-