Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடாவில் west of Port Perry என்ற இடத்தில் ஜீப் மோதி மோட்டார்சைக்கிள் மோதி ஒருவர் பலி. கனடாவில் உள்ள west of Port Perry என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒருவர் திடீரென எதிரே வந்த ஜீப் ஒன்றில் மோதியதால் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சையின் பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் southbound on Highway 7-12 என்ற இடத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஜீப் ஒன்றில் மோதி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டும் அவருடைய உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் மீது மோதிய ஜீப்பை ஓட்டி …

  2. கனடவில் மின்னணு பாதுகாப்பு ஏற்பாடுகள் அடங்கிய இ பாஸ்போர்ட்டுகள் அனைத்து கனடிய மக்களுக்கும் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் மாநாடு மாண்ட்ரீல் தலைமையகத்தில் நடந்தது. இதில் பேசிய கனடாவின் தலைமை பாஸ்போர்ட் நிர்வாக அதிகாரி திரு.கிறிஸ்டின் டெஸ்லோகஸ்கூறியபோது, "அடுத்த ஆண்டு இறுதிக்குள் இ பாஸ்போர்ட் முழுமையாக வழங்கப்பட்டுவிடும்" என்று உறுதியளித்தார். ஆனால், கனடாவில் பாதுகாப்பு நிபுணர்கள் இந்த இ பாஸ்போர்ட்டில் அனைத்து விதமான பாதுகாப்புகள் ஏற்பாடுகள் இருக்காது என அச்சுறுத்தியுள்ளனர். இ பாஸ்போர்ட் மாதிரிப் படம் பார்க்க.... http://www.thedipaar.com/news/news.php?id=33789

  3. கனடாவில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய் By T. SARANYA 05 NOV, 2022 | 10:32 AM கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒட்டாவா, கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 9 பேருக்கு மட்டுமே புதிதாக பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தன. இந்த பாதிப்பு அதிகரிப்பும் தொடர்ந்து குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில், திடீரென தொற்று எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இதன்படி, கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சைக்காகi வைத்தியசாலையில் சேர்ந்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 42 ஆக உ…

  4. கனடாவில் அரசியல்வாதி ஒருவர் உட்பட ஐந்து பேருக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறொன்ரோவைச் சேர்ந்த 51 வயதான ரூபன் பாலராம்-சிவராம் என்ற நபரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்தனர். நேற்று கனடாவில் வெளியான செய்தி ஒன்றில், குறித்த சந்தேக நபர் மக்களை தொலைபேசி மூலம் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் மின்அஞ்சல் மூலம் மரண அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களை அனுப்பியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த அச்சுறுத்தல்கள் பல வித்தியாசமான தரப்பட்ட மக்களிற்கு விடப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், பொது நபர்கள், அரசாங்கத்தில் உள்ளவர்கள், பிரபல்யங்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த அச…

  5. கனடாவில் ஆபத்தான இரசாயனங்களுடன் கார் கண்டுபிடிப்பு கனடாவின் வின்னிபெக்கின் தென் பிராந்தியத்தில் ஆபத்தான இரசாயனங்கள் ஏற்றப்பட்ட நிலையில் பயணித்த காரினை இடைமறித்திருக்கும் பொலிசார் அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். செவ்வாயன்று அதிகாலை 12 மணியளவில் பெம்பினா நெடுஞ்சாலையில் இடைமறிக்கப்பட்ட இந்த வாகனத்தில் எத்தகைய இரசாயனங்கள் இருந்தன என்பதை ஆராய்வதற்கு உடனடியாகவே துறைசார் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்னர். அண்மையில் சட்டவிரோத ஆய்வுகூடம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட வகையினைச் சேர்ந்த இராசாயனங்களே இந்தக் காரிலும் கண்டெடுகப்பட்டதாகப் பொலிசார் கூறுவதோடு அது தொடர்பான மேலதிக விபரங்களை வழங்குவதற்கு மறுத்துவிட்டார்கள். சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைதுசெய்யப…

    • 0 replies
    • 566 views
  6. கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752

      • Like
      • Haha
    • 12 replies
    • 1.3k views
  7. கனடாவில் இந்திய மாணவர் மர்ம நபரால் சுட்டுக் கொலை. கனடாவின் சர்ரே நகரில், கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்திய மாணவர், மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது. பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில், அனுஜ் பித்வே, 23, என்ற இந்திய மாணவர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், கனடாவிலும் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள க்வான்ட்லென் பல்கலைக் கழகத்தில், மேலாண்மைத் துறையில் இந்தியாவைச் சேர்ந்த அலோக் குப்தா, 27, என்ற மாணவர் பட்டப்படிப்பு படித்து வந்தார். சர்ரே நகரில் உள்ள ஒரு கடையின் உரிமையாளர்கள…

  8. Published By: RAJEEBAN 08 JUN, 2023 | 10:46 AM இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் படுகொலையை பொதுவில் புகழும்விதத்தில் கனடாவில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடும் கண்டனம்வெளியிட்டுள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இந்திராகாந்தியின் படுகொலையை புகழும் விதத்தில் பொதுவெளியில் நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்துள்ள அலிசப்ரி; கருத்துசுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையை போற்றுதல் என்ற போர்வையில் எந்த நாடும் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகளிற்கு புகலிடம் வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். பயங்கர…

  9. கனடாவின் எட்மன்டன் நகரில் அமைந்துள்ள இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கோயில் மீது கருப்பு மையினால் சில எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அதிகரித்து வரும் பிரிவினைவாத போக்கை தடுக்கும் வகையில். இந்தச் செயலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அரசு கோரியுள்ளது. இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. “எட்மன்டன் நகரில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோயிலில் இந்த செயல் நடந்துள்ளது. இதில் முரணான வாசகங்கள் சிலவும் கோயிலின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. இந்த நாசவேலையை விஎச்பி கனடா கடுமையாகக் கண்டிக்கிறது. நாட்டில் அமைதியை விரும்பும் இந்து சமூகத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையிலான இந்த…

  10. கனடாவில் இந்துக்களுக்கு ஆதரவாக ஒன்று கூடிய ஏனைய மதத்தவர்கள்! பங்களாதேசில் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி கனடாவில் நடைபெற்ற போராட்டத்தில் இந்து, யூதர்,கிறிஸ்தவர், புத்த மதத்தினர் இணைந்து பங்கேற்றுள்ளனர். கடந்த வாரத்தில் பங்களாதேசில் மாணவர்கள் போராட்டத்தால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் குறித்த மாணவர்கள் போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. இந்துக்களின் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றன. பங்களாதேசில் சிறுபான்மை மக்களாக வாழும் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலகில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று க…

  11. கனடாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மீது வெறுப்புகொண்ட சிலர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே லட்சுமி நாராயணர் இந்து கோவிலின் ஜன்னல்களை கடந்த 23-ம் நாள் அடித்து உடைத்து சென்றனர். இது கனடாவில் வாழும் இந்துக்களை வெறுப்பூட்ட செய்தது. இந்நிலையில் அங்குள்ள இரகசிய கமராவில் இருவர் பேஸ்பால் பேட்டை வைத்துக் கொண்டு கோவிலின் ஜன்னல்களை உடைத்து விட்டு பேட்டை தூக்கி எறிந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது இன ரீதியிலான வெறுப்புணர்விலேயே நடந்து இருக்கலாம் என்று அங்குள்ள இந்துக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், சர்ரே காவல்துறையினர் இன ரீதியிலான வெறுப்பு உணர்வாக தோன்றவில்லை, இது தனிப்பட்ட முறையிலான ஒரு தாக்குதலாக தெரிவதாக அவர்கள் கூறியுள்ளன…

  12. கிறிஸ்துமஸ் தினத்தின் மறுநாள் பாக்ஸிங் நாள் எனப்படும் நாள் இன்று கனடா முழுவதும் வெகுவிமரிசையாக அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் எந்தெந்த இடங்கள் இயங்கும் மற்றும் எவையெல்லாம் விடுமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தபால் நிலையங்கள், வங்கிகள் மற்றும் நூலகங்கள் போன்ற அரசுத்துறை அலுவலகங்களுக்கு இன்று விடுமுறையாகும். ஆனால் பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு நிறுவங்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது வழக்கம்போல் இயங்கும் நிறுவனங்கள்: Restaurants Movie theatres Shopping centres (reduced hours) Grocery stores Public ice rinks ROM, 10 a.m. - 5:30 p.m. The AGO 10 a.m. - 4 p.m. Activities at the CN Tower are open…

  13. கனடாவில் இருந்து ISIS இயக்கத்தில் இணைய சிரியா செல்ல முயன்ற 10 வாலிபர்கள் கைது! [Wednesday 2015-05-20 22:00] ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். இயக்கத்தினர் தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இயக்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து வருகிறார்கள். இவர்களை தடுக்கும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இந்தநிலையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்காக கனடாவில் உள்ள மான்டிரையல்ஸ் டுருடியு சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஈராக் மற்றும் சிரியாவிற்கு செல்ல முயன்ற 10 வாலிபர்களை கனடா போலீசார் அதிரடியாக பிடித்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து ராயல் கனடா மவுண்டேட் போ…

  14. கனடாவில் இந்த வருடத்தில் மிகவும் அதிகமான எண்ணிக்கையானனோரை தாம் புதிதாக கனேடியர்களாக வரவேற்றுள்ளதாக கனேடிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து அறுபது ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக கனேடிய குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக மத்திய குடிவரவு மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சான்டர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் கனேடிய குடியுரிமையை பெற்றுக்கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருட எண்ணிக்கை இரண்டு மடங்கினை விடவும் அதிகம் எனவும், கனேடிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வருடத்திலேயே இவ்வளவு அதிகளவானோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடியுரிமைக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறைகளில்…

  15. கனடாவில் உயரத்தில் பறந்த அடையாளம் தெரியாத பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது கனடாவில் உயரே பறந்த அடையாளம் தெரியாத பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்திற்கு உயரே பறந்த அடையாளம் தெரியாத பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய மறுநாள், கனடா அந்தச் சம்பவம் பற்றி தகவல் அளித்தது. கனடாவில் தென்பட்ட அடையாளம் தெரியாத பொருளைச் சுட்டு வீழ்த்த, கனடாவையும் அமெரிக்காவைவும் சேர்ந்த போர் விமானங்கள் விரைந்தன. அமெரிக்கப் போர் விமானம் அடையாளம் தெரியாத பொருளை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியதாகக் கனடா தெரிவித்தது. https://akkinikkunchu.com/?p=238087

  16. கனடாவில் உயர் விருது பெற்றவருக்கு நேபாளத்தில் 16 வருட சிறைத் தண்டனை! கனடா அரசாங்கத்தால் உயரிய விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்ட பிரபல சமூக ஆர்வலர் ஒருவருக்கு நேபாளத்தில் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 5,000 அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நேபாள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனடாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘Order of Canada’ விருது பெற்ற பிரபல சமூக செயற்பாட்டாளரான பீற்றர் டால்க்லிஷ் என்பவருக்கே இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில், டால்க்லிஷ் குற்றமற்றவர் எனவும், அவருக்கு எதிராக இந்த வழக…

  17. கனடா நாட்டில் நள்ளிரவு வேளையில் நபர் ஒருவரை குற்றவாளி என தவறுதலாக கருதி 3 பொலிசார் கொடூரமாக சித்ரவதை செய்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவில் உள்ள தெற்கு Surrey நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் அந்நகரில் உள்ள RCMP என்ற பொலிசாரின் கட்டிடத்திற்கு வெளியே இருந்து ஒரு நபர் கூச்சலிடுவதுபோல் சத்தம் வரவும், உள்ளிருந்த பொலிசார் வெளியே ஓடி வந்துள்ளனர். அப்போது அங்குள்ள Semiahmoo என்ற நூலகத்திற்கு அருகே 3 பொலிசார் நபர் ஒருவரை சுற்றி நின்றிருந்ததை கண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேசிய Mike Bhatti என்ற பொலிசார், அருகே சென்று பார்ப்பதற்குள் அந்த நபர் குண்டடிப்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தார். பின்னர், இறந்து க…

    • 0 replies
    • 896 views
  18. கனடாவில் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மெயின் நகருக்கு சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் தீப்பிடித்தில் 80 பேர் வரை மரணமாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மொன்ட்றியல் நகரிலிருந்து 155 மைல் கிழக்கே கியுபெக் மாகாணத்தில் உள்ள லக் மெகன்டிக் நகரின் அருகே செல்லும்போது ரயிலில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் பெட்டிகள் தடம் புரண்டு, அருகில் உள்ள கட்டங்களுக்குள் புகுந்தன. இதனால் ஏற்பட்ட தீச்சுவாலையிலும், கரும்புகையிலும் அருகில் இருந்த ஏராளமான கட்டிடங்களும், வீடுகளும் சேதமடைந்தன. பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தீயணைப்புத்துறையினரும் இவர்களுடன் இணைந்து தீயை கட…

  19. கனடாவில் ஐஎஸ் பயங்கரவாதி தாக்குதல்: 5 பேர் படுகாயம் கனடாவின் எட்மாண்டன் நகரில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன் அங்கு திடீர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டான். அந்நகரில் அமைந்துள்ள காமன்வெல்த் விளையாட்டு அரங்கத்தின் அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள சதுக்கத்தில் பாதுகாப்பு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் கார் வந்தது. இதனால் அங்கிருந்த போக்குவரத்து போலீஸார் அதை தடுக்க முயன்றார். இந்நிலையில், அதே வேகத்தில் வந்த அந்த கார் போலீஸார் மீது மோதியதில் அவர் 15 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். இதன…

  20. கனடாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களிலிருந்து தற்போது வெந்நீர் ஊற்று பெருகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கிவாய் ஹானஸ் என்ற தேசிய பூங்கா உட்பட நான்கு இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் தோன்றியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள், ஊற்றுக்கு மருத்துவ பண்புகள் இருப்பதாக நம்புகின்றனர். மேலும் சிலர் இந்த ஊற்றில் கடல் உணவை வேக வைத்தும் சாப்பிடுகின்றனர். http://www.canadamirror.com/canada/5054.html

  21. கனடாவில் கடத்தப்பட்ட சிறிய விமானம்: முடங்கிய விமான சேவை. சிறிய ரக விமானமொன்று கடத்தப்பட்டதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து கனடாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான வென்கூவர் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. வென்கூவர் தீவிலுள்ள விக்டோரியா பகுதியில் செயல்படும் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய செஸ்னா வகை விமானமொன்று, கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கனடாவின் ராயல் மவுண்டட் பொலிஸாருக்கு நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் தகவல் வழங்கப்பட்டது. விமானம் வென்கூவர் அனைத்துலக விமான நிலையம் நோக்கி பறந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. விமானத்தில் சந்தேக நபர்…

  22. கனடாவில் கடந்த மாதத்தில் இரண்டு மில்லியன் பேர் வேலையை இழந்துள்ளனர்! கனடாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டு மில்லியன் பேர் வேலையை இழந்துள்ளதாக புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள முடக்கநிலையே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையின் படி, மார்ச் மாதத்தில் இழந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலை இழப்புகளுக்கும் மேலாக, ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை 1,993,800 என உயர்வடைந்துள்ளது. இதனால் வேலையின்மை வீதம் 13.0 சதவீதமாக உயர்ந்ததுள்ளது. இது மார்ச் மாதத்தில் 7.8 சதவீதமாக இருந்தது. நிதிச் சந்தை தரவு நிறுவனமான ரெஃபினிடிவின் கூற்றுப்படி, சரா…

  23. கனடாவில் கடனட்டை மோசடியில் உல்லாச ஊர்தி மற்றும் வாடகைக்கார் சாரதிகள் ஈடுபடுவதாக போலிசார் எச்சரிக்கை! [Monday 2014-07-28 20:00] கனடா ரொறொன்ரோ. பியர்சன் சர்வதேச விமானநிலைத்தின் வெளியே செயல்படும் உல்லாச ஊர்தி மற்றும் வாடகைக் கார் சாரதிகள் ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு வருபவர்களின் கடனட்டைகளை மோசடி செய்து அவர்களை சுரண்டிவருகின்றனரென தெரியவந்துள்ளது. பீல் பிராந்திய பொலிசார் ரொறொன்ரோ பெரும்பாக விமானநிலைய அதிகார சபையினரினருடனான கூட்டு முயற்சி மூலம் - உல்லாச ஊர்தி மற்றும் வாடகை கார்களை உபயோகப்படுத்தும் விமானநிலையத்தில் வந்திறங்கும் பயணிகளை குறிவைத்து இந்த சூழ்ச்சியை செயல்படுத்துகின்றனரென அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். பயணிகள் சாரதிகளிற்கு தங்களது கடனட்ட…

  24. கனடாவில் ஒரு கருத்தெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அதில் கடன் அட்டை பயன்படுத்துபவர்களில் இருபதில் ஒருவர் தன்னால் கடனை அடைக்க இயலாது என்று புலம்புகிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்துக் கணிப்பை ஹாரிஸ்ஃடெசிமா நிறுவனத்தினர் நடத்தியிருகிறார்கள். கடன் அட்டை பயன்படுத்துபவர்களில் பலர் தங்கள் முழு கடனை அடைப்பதில்லை. கடன் பாக்கி வைத்திருக்கிறார்கள். அதற்காக அவரகள் கட்டும் வட்டித் தொகையைப் பற்றி அவர்கள் அதிகம் கவலைப்படவில்லை. கடன் அட்டை கடன் பாக்கிக்கு வட்டி இருபது சதவீதம் போல் இருக்கிறது. ‘ஒருவன் கடணாளியாவதற்கும், பண-சொத்து முடக்கம் அடைவதற்கும் கடன் அட்டைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால்தான் அது குறித்து கருத்துக் கணீப்பு நடத்தினோம் ‘ என்கிறார் டாவ…

  25. கனடாவில் கடும் வெப்பம் காரணமாக 6 பேர் உயிரிழப்பு கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகின்ற நிலையில் அந்நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய கனடாவில் அமைந்துள்ள மொண்ட்ரியல் நகரில் கடும் வெயில் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுமையான வெப்பம் நிலவுவதனால் தேவையில்லாமல் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/86317/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.