உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் மீண்டும் வன்முறை: பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல் மைசூரு சாலையில் வன்முறை. | படம்: கே.பாக்யபிரகாஷ். தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்த் விட உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடகாவில் வன்முறைகள் தீவிரமடைந்தது. இதையடுத்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டதாக வந்த செய்திகளை கர்நாடகா போலீஸ் மறுத்தது. ஆனால் மாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்திற்கு செப்டம்பர் 20ம் தேதி வரை காவிரியில் நீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடகா…
-
- 35 replies
- 3.2k views
- 1 follower
-
-
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் காவிரி புரட்சியை கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என்று கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் 2 புனல் மின் திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர், லடாக் வந்ததில் பெருமை அடைவதாகவும், புனல்மின் திட்டம் லே நகரத்தின் சுற்றுச் சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தாது, லே மக்களின் நாட்டுப்பற்றுக்கு நான் தலைவணங்குகிறேன். இமயமலை மாநிலங்களை மேம்படுத்த புதிய அணுகுமுறை தேவை, காஷ்மீரில் காவிரி புரட்சியை கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார். மேலும், சியாச்சின் செல்ல திட்டமிட்டுள்ள மோடி, சியாச்சின் விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=114762&category=I…
-
- 0 replies
- 310 views
-
-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு மறுப்பு காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 'காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும். இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் நிர்பந்தம் செய்ய முடியாது' என உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ. லலித் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த செப்.30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ந…
-
- 4 replies
- 806 views
-
-
காவிரிநீரை பங்கீடு செய்வது தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு இறுதி தீர்ப்பு அளித்தது. இதனை மத்திய அரசிதழில் வெளியிட கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் கெடு விதித்தது. இதை தொடர்ந்து கர்நாடக அரசின் எதிர்ப்பை மீறி கடந்த வாரம் கெடு முடியும் நாளன்று மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். வாரியம் அமைப்பதை தடுத்து நிறுத்த கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர…
-
- 0 replies
- 352 views
-
-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், செப்.27 வரை 6000 கன அடி நீர் திறக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம். காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், செப். 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 6000 கன அடி நீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் இடைக்கால மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று டெல்லியில் விசாரணை நடத்தியது. காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவிட்ட 3,000 கன அடி நீர் போதாது. 50 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. …
-
- 0 replies
- 320 views
-
-
துடெல்லி: காவிரியில் 12 டி.எம்.சி நீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த புதிய மனுவை, உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம், குழுவின் தலைவர் துருவ் விஜய் சிங் தலைமையில் டெல்லியில் கடந்த 10 ஆம் தேதி நடந்தது. அப்போது,டெல்டா பகுதிகளில் கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்றுவதற்கு 18 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், கர்நாடக அணைகளில் 16 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், அது தங்கள் தேவைக்கே போதுமானதல்ல என்றும் கர்நாடகம் வாதிட்டது. இதனை பரிசீலித்த கண்காணி…
-
- 0 replies
- 322 views
-
-
சென்னை: காவிரி, கூடங்குளம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் திமுக தலைவர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"காவிரி நதிநீர்ப்பிரச்னை, கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனை, டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி என அனைத்துப் பிரச்சனைகளிலும் இரட்டை நிலையினை கடைபிடித்து, குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் ஏமாற்று வித்தையில் தான் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதிலும்,காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட கருணாநிதியால் கூட்டச் செய்ய இயலவில்லை. …
-
- 0 replies
- 445 views
-
-
சென்னை: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து தமிழக அரசு நடத்தவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல் உள்ளிட்டவை குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வருகிற 19ம் தேதி காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புதொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், 200708ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை, சட்டம் ஒழுங்கு, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல் உள்ளிட்டவை குறித்தும…
-
- 0 replies
- 681 views
-
-
கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள். தமிழ்நாட்டின் காவிரி டெல்டாப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக் கப்பட்ட சிந்து சமவெளி நாகரிக குறியீடுகளைப்போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இந்த முதுமக்கள் தாழிகளின் தொல்லியல் முக்கியத்துவம் குறித்தும், இதற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகள் குறித்தும், இந்த ஆய்வை மேற்கொண்ட தொல்லியல் துறையின் நிபுணர் குழுவில் ஒருவரான அகழாய…
-
- 0 replies
- 721 views
-
-
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாடு ஆதிபத்ய உரிமையாகவும் சட்டபூர்வமாகவும் அனுபவித்து வரும் காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்கு வரவிடாமல் கர்நாடக அரசு அக்கிரமமாகத் தடுக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது. தமிழகத்திற்கு உரிமையான காவிரித் தண்ணீரை, கர்நாடகம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. தமிழக அரசு கோரிக்கை விடுத்த அளவுக்குத் தண்ணீரை வழங்கிட காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவு பிறப்பிக்காமல், ஆணையத்தின் தலைவரான இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், ஒப்புக்காக, விநாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்று அறிவித்தார். அதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வ…
-
- 1 reply
- 442 views
-
-
திருச்சி: கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது சரியான நடவடிக்கையே என பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார் ரஜினியின் மூத்த சகோதரர் சத்யநாராயணா. காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது கர்நாடகா. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும், டெல்டா மாவட்ட விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் விவசாயிகள் பந்த் நடத்தியுள்ளனர். தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவ்வாறு கர்நாடகா அணை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காது, விவசாயம் பாதிக்கப்படும் என அவர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி வந்த நடிகர் ரஜினிகாந…
-
- 1 reply
- 665 views
-
-
[size=4]காவிரியில், தமிழகத்துக்கு தினமும், 9,000 கன அடி தண்ணீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் என, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், பிரதமர் தலைமையில் செயல்படும், காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுக்கும், கர்நாடக அரசின் நடவடிக்கையை, கடுமையாகக் கண்டித்தது. காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழக - கர்நாடக மாநிலங்கள் இடையே, பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின், 19ம் தேதி, டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடந்தது.இதில், தமிழகத்துக்கு அடுத்த மாதம் 15ம் தேதி வரை, தினமும், வினாடிக்கு 9,000 கன அடி வீதம், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட…
-
- 4 replies
- 805 views
-
-
புதுடில்லி: காவிரியில் தண்ணீர் திறந்து விட, கர்நாடகாவுக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டது. கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற 12 டி.எம்.சி., நீரை காவிரியில் திறந்து விட உத்தரவிடக்கோரி, தமிழகத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கர்நாடகா சார்பில் கடந்த 20 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இன்று கர்நாடகா அந்த அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து பேசிய நீதிபதிகள், காவிரியில் தமிழகம் கோரியபடி 12 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட உத்தரவிட முடியாது என தெரிவித்து விட்டனர். மேலும் நீரைப் பெற காவிரி நதிநீர் ஆணையத்திடம் முறைய…
-
- 0 replies
- 454 views
-
-
இஸ்லாமாபாத்: காஷ்மீரை மையமாக வைத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையே எந்த நேரத்திலும் போர் வரலாம் எனக் கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது வாழ்நாளுக்குள் காஷ்மீரை சுதந்திர நாடாக பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஆசாத் ஜம்மு காஷ்மீர் கவுன்சிலின் பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றிய நவாஸ் ஷெரீப், இந்தியா - பாகிஸ்தான் இடையே எந்த நேரத்திலும் போர் மூளுவதற்கான தீப்பொறியாக காஷ்மீர் உள்ளதாகவும், எனவே இந்த பிரச்னைக்கு அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார். இந்தியா ஆயுத போட்டியை ஏற்படுத்தி உள்ளதால், பாகிஸ்தானும் அந்த ஓட்டத்தில் பங்கு கொள்ள வேண்டி உள்ளது என்றும், வாய்ப்பு ஏற்பட்ட…
-
- 4 replies
- 825 views
-
-
கல்வீச்சுக்கு எதிராக ராணுவம் 'மனிதக் கேடயம்' பயன்படுத்திய சம்பவம்: பத்திரிகையாளர்களுக்கு பதிலளிக்க ராஜ்நாத் மறுப்பு காஷ்மீரிகளின் கைகள் கல் எறிவதற்கானது அல்ல. காஷ்மீர் இளைஞர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம் என உள்துறை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆனால், காஷ்மீரில் புட்காம் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் முன் ஒருவரைக் கட்டி மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி கலவரப் பகுதிக்குள் ராணுவத்தினர் சென்ற சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூன்று ஆண்டு கால நிறைவை ஒட்டி நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராஜ்நாத் சிங், "காஷ்மீரில் நடைபெற்றுவரும் மோசமான போரை நிறுத்த ப…
-
- 0 replies
- 343 views
-
-
காஷ்மீர் பகுதி மக்களுக்கு தனி விசா வழங்குவதை சீனா நிறுத்தியுள்ளது. இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து சீனாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீன பிரதமர் வென் ஜியாபோ, இந்தியாவுக்கு புதன்கிழமை வரவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இருநாடுகளின் ராஜாங்க உறவுகளைப் பாதிக்கும் விவகாரங்களை ஆராய்ந்து அவற்றைத் தீர்ப்போம் என்று சீன அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இதில் முக்கியமாக சீனா செல்லும் காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்குவதை நிறுத்துவதை பரிசீலிப்பதாக அந்த அதிகாரிகள் கூறியிருந்தனர். அதன்படி இப்போது காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்குவதை சீனா நிறுத்திக் கொண்டுள்ளது என்று இந்திய வெளிறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தில்லியில்…
-
- 0 replies
- 562 views
-
-
பிலாவல் பூட்டோ| படம்: ராய்டர்ஸ். காஷ்மீரின் ஓர் அங்குலம் அளவுகூட இந்தியாவிடம் விட்டுவைக்க மாட்டோம், இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை முழுவதுமாக எடுத்துக்கொள்வோம் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். பெனாசிர் அலி பூட்டோவின், மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் பகுதியில் அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது இதனை தெரிவித்தார். பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு வயது 20. அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இளம் தலைவராவார். இந்நிலையில், தங்களது பாகிஸ்தான் மக்கள் கட்சியானது, இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை முழுவதுமாக எடுத்துக்கொள்ளும். காஷ்மீரின், ஓர் அங்குலம் அளவுகூட இந்தியாவிடம் விட்டுவைக்காது என பேசியுள்ளது பரபரப்பை…
-
- 0 replies
- 437 views
-
-
காஷ்மீரின் முடிவில்லாத துயரம் இந்தியர்களில் யார் பெரிய தேசியவாதிகள், காஷ்மீரிகளில் யார் பெரிய துரோகிகள் என்ற விவாதத்திலேயே நாம் இப்போது காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். பல அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியபடி, காஷ்மீர் பிரிவினையை வலியுறுத்தும் அதிருப்தியாளர்களை அழைத்து நாம் பேசினால்தான் பாகிஸ்தானுக்கு இதில் மூக்கை நுழைக்க வழியிருக்காது. காஷ்மீரின் நகர் மக்களவை இடைத்தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறையும், மிகக் குறைந்த வாக்குகளே பதிவானதும் புதுடெல்லி அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டன. இந்த விவாதங்கள் பயனுள்ளதாக இருப்பதற்குப் பதில் வசைமாரிக்கே வழிவகுத்தன. உண்மையான பிரச்சினைகளைத் திரையிட்ட…
-
- 1 reply
- 568 views
-
-
எகிப்தில் மக்கள் புரட்சி வெடித்து ஆட்சிமாற்றம் நிகழ்ந்ததைப் போல காஷ்மீரிலும் நடக்கும் என்று கூறியுள்ளார் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா. ஸ்ரீநகரில் இன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எகிப்தில் மக்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் சாதித்து இருப்பதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு போராடிய மக்களுக்கு ராணுவம் பாதுகாப்பாக இருந்ததற்காக அவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எகிப்து மக்கள் தங்கள் ஜனநாயகத்துக்காக போராடி வெற்றி பெற்று உள்ளனர். ஆனால் காஷ்மீரில் ஜனநாயகத்துக்காக 60 ஆண்டுகளாக போராடியும் வெற்றி பெற முடியவில்லை. எகிப்தில் மக்கள் தெருவில் இறங்கி போராடிய போது யாரும் அதை குற்றம் சொல்லவில்லை. ஆனால் காஷ்மீரில் மக்கள…
-
- 1 reply
- 369 views
-
-
இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்போரால் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலேயே குறித்த தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 4 மணிக்கு ஆரம்பமாகிய குறித்த இந்த தாக்குதலில் மூன்று இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளனர். தற்கொலை தாக்குதால்தாரிகளுடன் இந்திய பாதுகாப்பு படையினர் தொடந்தும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே மிகவும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இந்திய இராணுவபட…
-
- 0 replies
- 317 views
-
-
புதுடெல்லி, 1990-ல் இருந்து ஜம்மு காஷ்மீரில் 21,562 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதிலில், ஜனவரி 1990 முதல் டிசம்பர் 2013 ஆம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீரில் 21,562 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், 16,757 பொதுமக்களும் 1425 பாதுகாப்பு படையினரும் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் அரசின் தகவலின் படி தீவிரவாத தொடர்பு சம்பவங்களால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண விதிமுறைகளின் படி கருணைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.அவ்வப்போது விதிமுறைகளில் சட்டதிருத்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். http://www.dailythanthi.com/New…
-
- 0 replies
- 228 views
-
-
ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்முக் காஷ்மீர்ப் பகுதியில் ஆர்ப்பாட்டாக்காரர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஆறுபேரைக் கொன்றுள்ளதோடு இன்னும் பலரைக் காயப்படுத்தியிருக்கிறது. அப்பகுதியில் இருந்த பள்ளிவாசல் ஒன்றினுள் அத்துமீறிப் பிரவேசித்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக முகாமின் முன்னால் கூடிய பொதுமக்கள் மீது எல்லைப் பாதுகாப்புப் படையினரும், பொலிஸாரும் கண்மூடித்தனமாகத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் 6 பேர் கொல்லப்பட பலர் காயமடைந்திருக்கிறார்கள். இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்திய ஆக்கிரமிப்பிற்குற்பட்ட காஷ்மீர் பகுதியெங்கும் பரவலான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற…
-
- 0 replies
- 453 views
-
-
டெல்லியில் காஷ்மீருக்கு சுதந்திரம் தான் ஒரே வழி என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளருமான அருந்ததி ராய் உரையாற்றினார். FILE அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக காஷ்மீரிகளின் மூத்த தலைவரான சையத் அலிஷா கிலானி மீது வெறியர்கள் சிலர் காலணி வீசி ரகளை செய்தனர். அதனை முன்னதாக குறிப்பிட்ட அருந்ததி ராய், என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுதே எறிந்து கொள்ளுங்கள் எனக் கூறியவாறு தனது உரையைத் தொடங்கினார். காஷ்மீரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இடத்தை இந்திய காலனி ஆதிக்கம் பிடித்துக் கொண்டது. காஷ்மீர், இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி அல…
-
- 2 replies
- 355 views
-
-
காஷ்மீரில் அக்கிரமம்- மின்சாரம் கேட்டுப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி! காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் போனியார் என்ற இடத்தில் மின் தட்டுப்பாட்டைக் கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் திடீரென மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், 2 பேர் படுகாயமடைந்தனர். இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும் பதட்டம் நிலவுகிறது. போனியார் பகுதியில் தொடர்ந்து மின் தட்டுப்பாடு இருந்து வருவதால் அதைக் கண்டித்தும், முறையாக மின்விநியோகம் செய்யுமாறும் கோரி மக்கள் கிட்டத்தட்ட 500 பேர் அங்குள்ள மின் நிலையத்திற்கு வெளியே கூடி போர…
-
- 0 replies
- 391 views
-
-
காஷ்மீரில் இந்திய ராணுவம் வியூகத் தாக்குதல்: கட்டுப்பாட்டு எல்லையில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு ஜெனரல் ரன்பீர் சிங் (இடது), இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் (வலது). காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது . இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் தங்களது இரண்டு ராணுவ வீர்ர்கள் பலியானதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. புதன் இரவு நடத்திய இந்தத் தாக்குதல் குறித்து ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஊடகங்களிடம் தெரிவிக்…
-
- 4 replies
- 791 views
-