உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26707 topics in this forum
-
ரொறன்ரோ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வெடிபொருள் போன்ற சந்தேகத்திற்கு உரிய பொருள் ஒன்று நேற்று (திங்கட்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்டது.Leslie Street and Eastern Avenue வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டில் மீள் திருத்த பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து ராணுவத்தினருடன் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வெடிபொருளை பாதுகாப்பாக அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தின் போது பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும்,அதைத் தொடர்ந்து அங்கு அழைக்கப்பட்ட கனேடிய இராணுவத்தினர், குண்டை அகற்றி, கனேடியப் படைத்தளம் ஒன்றுக்கு எடுத்துச் சென்றார்கள் எனவும் சந்தேகத்திற்குரிய வெடி பொருள் தொடர்பில் சோத…
-
- 0 replies
- 215 views
-
-
உண்ணாவிரத்தைத் தொடங்கினார் கருணாநிதி-உடன் ராமதாஸ், டி.ஆர். பாலுவும் உண்ணாவிரதம் திங்கள்கிழமை, அக்டோபர் 1, 2007 சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி சென்னையில் முதல்வர் கருணாநிதி இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி திமுக கூட்டணி அறிவித்திருந்த பந்த்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டதால் அதற்குப் பதிலாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி அறிவித்தார். அதன்படி இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. வாலாஜா சாலையில் உள்ள, சேப்பாக்கம் அரசினர் விருந…
-
- 3 replies
- 1.2k views
-
-
Published By: DIGITAL DESK 3 29 MAY, 2024 | 04:10 PM அமெரிக்காவின் ஒகாயோ பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரரான லேரி கானர் (Larry Connor), கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கி ஒன்றை வடிவமைத்து வருகிறார். இதன்படி, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு கடலுக்கு அடியில் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார். 74 வயதான சாகச பிரியர் லேரி டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக ட்ரைடன் சப்மரைன்ஸ் என்ற நிறுவனத்தை அவர் அணுகியுள்ளார். அவருக்காக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியில் இரண்டு பேர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் சுமார் 12,500 அடி ஆழத்தில் செல்லும் இந்த நீர்மூழ்கி பயணத்தில் அறிவியல் பூர்வமான…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
பிரிட்டனில் வரும் ஜூலை 4 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தன. பிரிட்டனில் 40 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் முந்தைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவு விலகிய நிலையில் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்த்த வலதுசாரியான ரிஷி சுனக் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி …
-
- 1 reply
- 458 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸ் பின்லி, டான் ஜான்சன் பதவி, பிபிசி செய்தி நிருபர் 4 ஆகஸ்ட் 2024 பிரிட்டன் முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜூலை 29-ஆம் தேதியன்று பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற ‘டெய்லர் சுவிஃப்ட் யோகா மற்றும் நடனப் பயிலரங்கில்’ கலந்து கொண்ட மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 3) பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறியதையடுத்து 90-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஹல், லிவர்பூல், பிரிஸ்டல், மான்செஸ்டர், ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட், பிளாக்பூல், மற்றும் பெல்ஃபாஸ்ட் …
-
- 3 replies
- 768 views
- 1 follower
-
-
கச்சதீவை நிச்சயம் மீட்டு தீருவேன் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கச்சதீவை நிச்சயம் மீட்டு தீருவேன் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நேற்று சட்டபேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது அவர் தெரிவிக்கையில் ‘தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கான ஒரே தீர்வாக உள்ள கச்சதீவை நிச்சயம் மீட்டு தருவேன். கச்சாத்தீவை மீளப் பெற்றுக்கொள்வதன் மூலமே இந்திய மீனவர்களைஇலங்கைக் கடற்படையினரிடமிருந்து காப்பாற்ற முடியும்’ என்றார். இந்நிலையில் திமுகவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தனது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கச்சதீவுக்கு தமிழக மீனவர்கள் தடையின்றி செல்லவும், அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்கவும், கச…
-
- 4 replies
- 765 views
-
-
பெனாஸிரின் பிள்ளைகள் துபாய் பயணம் 1/2/2008 7:45:37 PM வீரகேசரி நாளேடு - படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவின் பிள்ளைகள் மூவரும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை துபாயிற்கு புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை பெனாஸிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது மகனான பிலாவல் பூட்டோ சர்தாரி (19 வயது), பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரும் அவரது இரு சகோதரிகளான பாக்தாவார் (17 வயது), அஸீபா (14 வயது) ஆகியோரும் துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் சிந்து மாகாணத்தில் லர்கானா மாவட்டத்திலுள்ள பூட்டோவின் இல்லத்திற்கு சமீபமாகவுள்ள சுக்குரில…
-
- 2 replies
- 1.4k views
-
-
மனைவியின் உடலை இருபதாண்டுகளாக கொள்கலனில் வைத்திருந்தவர் கைது [02 - February - 2008] மனைவியைக் கொலை செய்து உடலை இருபது ஆண்டுகளாக கொள்கலன் ஒன்றில் அடைத்து வைத்திருந்த நபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரைச் சேர்ந்த பிரடிரிக் வில்லியம் என்பவரின் மனைவி இருபது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனபோது, மனைவி லொறிச் சாரதி ஒருவருடன் சென்றுவிட்டாரென வில்லியம் தெரிவித்துள்ளார். வீட்டின் பின்புறத்தில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த கொள்கலனை வில்லியமின் மருமகன் திறந்து பார்த்தார். அதில் ஒரு மண்டை ஓடும், கால் எலும்புகளும் கிடந்தன. இதுபற்றி பொலிஸார் விசாரணை செய்தபோது, 20 ஆண்டுகளுக்கு முன்பு எட்வினாவை அவரது கணவனே …
-
- 5 replies
- 2.4k views
-
-
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் பின்னடவைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி நிலையான வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக "சாதி" ஆயுதத்தை கையிலெடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தலித்துகளின் நண்பனாக, இஸ்லாமியர்களின் நண்பனாக வேஷம் போட்டு காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்து பார்த்தது. கட்சியின் "நம்பிக்கை நட்சத்திரம்" என அழைக்கப்படும் ராகுல்காந்தி தலித்துகளின் குடிசைகளுக்குள் ஓடி, உட்கார்ந்து சாப்பிட்டு போட்டுக் காண்பித்த அத்தனை காட்சிகளுமே அட்டர் பிளாப்பில்தான் முடிந்தது! பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாமியர்களும் சமாஜ்வாதி கட்சியை நம்புகின்றனர். தலித்துகள் மாயாவதி பக்கம் சாய்கின்றனர். இதனால் உத்தரப்பிரதேசத்தில் …
-
- 5 replies
- 1.2k views
-
-
கருணாநிதியின் கண் முன்னே அவரது கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்று மதுரை மகபூப்பாளையத்தில் நடைபெற்ற ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசியமாநில கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பல தடவை பல கட்சிகளை உடைத்து இருக்கிறார். கட்சியை உடைப்பதில் கருணாநிதிக்கு நிகர் வேறு எவரும் இல்லை.சில ஆண்டுகளுக்கு முன்பு முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்காக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இருந்து கூடலூருக்கு நடைபயணம் மேற்கொண்டபோது ம.தி.மு.க.வை உடைக்கப் பார்த்தார் கருணாநிதி. உலகத்திலேயே ஒரு கட்சியின் அவைத் தலைவரை அடுத்த கட்சிக்கு இழுத்த ஒரே தலைவர் கருணாநி…
-
- 3 replies
- 1k views
-
-
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் குர்திஸ் போராளிகளிற்கு எதிராக துருக்கி தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஒப்பரேசன் பீஸ் ஸ்பிரிங் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக துருக்கியின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துருக்கி விமானதாக்குதல்களுடன் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது எனினும் பின்னர் ஆட்டிலறி தாக்குதல்களும் இடம்பெறுகின்றன. சிரியாவின் எல்லை நகரான டெல்அப்யாட்டில் பாரிய வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இப்பகுதியிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேறி வருகின்றனர். ரஸ் அலி அய்ன் என்ற நகரத்திலும் பாரிய சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. விமானங்களின் சத்தங்களை கேட்க முடிகின்றது ரஸ் அலி அய்ன் நகரிலிருந்து கரும…
-
- 11 replies
- 1.6k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் அறிக்கையை டென்மார்க் பிரதமர் மெட் ஃபெட்ரிக்சன் நிராகரித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், லோரா கோஸி (கோபன்ஹேகன்), ராபர்ட் கிரீனால் (லண்டன்) பதவி, பிபிசி செய்திகள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சமீபத்திய நாட்களாக ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியும், உலகின் மிகப் பெரிய தீவுமான கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டிவருகிறார். 2019-ஆம் ஆண்டு தனது முதல் பதவிக் காலத்தின் போது டிரம்ப், கிரீன்லாந்தை வாங்கும் எண்ணத்தை முதல்முறையாக வெளிப்படுத்தினார். இந்த வா…
-
- 0 replies
- 404 views
- 1 follower
-
-
ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் ,அவரை கர்நாடகாவில் நுழைய விட மாட்டோம் என்றும் வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார். கன்னட சலுவளி அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ்தான் பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் எப்போதும் வரிந்துக் கட்டிக் கொண்டு முதலில் நிற்பவர்.இந்த அமைப்பை போன்றே கர்நாடக ரக்ஷண வேதிகே உள்ளிட்ட சில கன்னட அமைப்புகளும் தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களில் அணி சேர்ந்துள்ளன.............................. தொடர்ந்து வாசிக்க................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8411.html
-
- 2 replies
- 1.3k views
-
-
சென்னை: சென்னை அருகே ரவுடியை பொதுமக்களே திரண்டு அடித்துக் கொலை செய்தனர். அத்தனை பேரையும் கைது செய்யுங்கள் என்று போலீஸாரை அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி காவனூர் திருத்தவெளியைச் சேர்ந்தவர் சிவா (33). இவர் அப்பகுதியில் ரவுடித்தனம் செய்து வந்தார். கூடுவாஞ்சேரி, மணிமங்கலம் காவல் நிலையங்களில் இவர் மீது ஐந்து கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன இவரை நீண்ட நாட்களாக போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் சிவாவின் ரவுடித்தனத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியுற்று வந்தனர். பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டுவது, அடிப்பது, தகராறு செய்வது என்று சிவா சுதந்திரமாக அட்டகாசம் செய்து வந்தார். இந்த நிலையில் ஞாயிற்…
-
- 0 replies
- 730 views
-
-
தொழிலதிபர் எலான் மஸ்க்கின் (Elon Musk) பரிந்துரையின்படி 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவைப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் ஃபெடரல் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவு. அமெரிக்க அரசாங்கத் துறைகளில் மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். ஜனாதிபதி ட்ரம்ப் இந்நிலையில், அவர்களில் பலர் செயல்திறனற்றவர்கள் என்றும் தனக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்றும் கூறி, ஆட்குறைப்பு செய்யப் போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
மன்னர் சார்லஸ்ஸை சந்தித்த உக்ரேன் ஜனாதிபதி! உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் இருவருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் இங்கிலாந்தின் சாண்ட்ரிங்ஹாமில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு உக்ரைன் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் குறித்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த ஐரோப்பியத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னரே உக்ரைன் ஜனாதிபதி இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்துள்ளார். இதேவேளை, இரு தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் மிகச் சிறந்த மட்டத்தில் இருந்ததாக வ…
-
- 1 reply
- 244 views
-
-
அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு அடிபணியப்போவதில்லை – கனடாவின் புதிய பிரதமர் கனடா மீது 25 சதவீத வரி விதிப்பை அமுல்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அழுத்ததிற்கு ஒருபோதும் கனடா அடிபணியப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்வதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்த நிலையில் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார். லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் கனடாவின் பிரதமராகப் பதவி வகித்தார். அவர் பதவி விலகியதைத் தொடர…
-
- 0 replies
- 427 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஜிம்பாப்வேயில் பல இடங்களில் வறட்சி ஏற்பட்டு, ஏராளமானோர் பட்டினியால் வாட, நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. - சிரியாவின் மோதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தப்பி ஓடிக்கொண்டிருக்க, அண்டை நாடான லெபனானில் தஞ்சமடைந்த அகதிச் சிறார்கள் பகுதி நேர வேலைகளை செய்யும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். - விரும்பிய நேரத்தில் விரும்பிய நிகழ்ச்சியை எங்கிருந்தபடியும் பார்க்க புதிய தொழில்நுட்பம் வழிவிட, சிறு பிள்ளைகளிடையே டிவி பார்க்கும் பழக்கம் குறைந்துவருகிறது.
-
- 0 replies
- 220 views
-
-
ரஷ்யாவுக்காகப் போரிட வீரர்கள் அனுப்பியதை ஒப்புக் கொண்ட வடகொரியா! உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவுக்காகப் போரிட படைகளை அனுப்பியதை வட கொரியா முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான KCNA-வில் வெளியான ஒரு அறிக்கையில், ஜனாதிபதி கிம் ஜாங் உன் பிறப்பித்த உத்தரவின்படி, குர்ஸ்க் எல்லைப் பகுதியை ரஷ்யப் படைகள் “முழுமையாக விடுவிக்க” தங்கள் வீரர்கள் உதவியதாக பியோங்யாங்கின் இராணுவம் கூறியது. வட கொரிய வீரர்களின் “வீரத்தை” ரஷ்ய தலைமைத் தளபதி வலேரி ஜெராசிமோவ் பாராட்டிய சில நாட்களுக்குப் பின்னர் பியோங்யாங்கின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மொஸ்கோ முதல் முறையாக போரில் வடகொரியாவின் ஈடுபாட்டைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. வட கொரியாவிலிருந்து அனுப்பப்பட்ட 11,000 வீ…
-
- 0 replies
- 210 views
-
-
எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஜி8 நாடுகள் வலியுறுத்தல் [10 - June - 2008] சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வடைந்து செல்வதைக் கருத்தில் கொண்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென இந்தியா, சீனா, தென்கொரியா மற்றும் ஜி8 நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஜி8 மற்றும் இந்தியா, சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஜப்பானின் அவோமோரி நகரில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது எண்ணெய் விலையுயர்வு தொடர்பாக அனைத்து அமைச்சர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பெற்றோலிய உற்பத்திக்காக அதிக முதலீடு செய்வது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பெற்றோலியம் உற்பத்தி செய்யும் மற்ற நாடுகளும் இந்தத்…
-
- 2 replies
- 1.1k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… லாஹூரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 71 பேரின் குடும்பங்கள் இறுதிச் சடங்குகள் செய்து கொண்டிருக்க, பஞ்சாப் மாகணாத்தில் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது பாகிஸ்தான். இஸ்லாமிய அரசு என்னும் அமைப்பிடமிருந்து சிரிய நாட்டு இராணுவம் மீட்டிருக்கும் பழம்பெரும் நகரான பல்மைராவின் இன்றைய நிலவரம் என்ன? சீனாவின் லட்சக்கணக்கான கிறித்தவர்கள் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடினாலும் எந்த தேவாலயத்துக்கு செல்வது என்பதில் சர்ச்சை நீடிக்கிறது. அரசின் தலையீட்டுக்கு எதிராக அதிகரிக்கும் விமர்சனம்
-
- 0 replies
- 328 views
-
-
கொரோனா அச்சுறுத்தல் : ஈரான் எல்லையை மூடியது பாகிஸ்தான்! கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக ஈரானுடனான எல்லையை பாகிஸ்தான் அரசாங்கம் தற்காலிகமாக மூடியுள்ளதுடன், சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் 2 ஆயிரத்து 592 பேர் உயிரிழந்துள்ளனர். 77 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கொரோனா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக ஈரானில் இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் காரணமாக பாகிஸ்தான் தனது எல்லைப் பாதையை தற்காலிகமாக மூடியுள்ளது. ஈரானில் இருந்து வரும் அனைத்து மக்களும் எல்லைப் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுக்களால் பரிச…
-
- 0 replies
- 348 views
-
-
23 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் மக்கள்! ஈரானில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 23 அமைச்சர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஈரானில் தற்போது மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் நோயாளிகளுக்கான சுகாதார சேவைகளுக்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஈரானில் மூன்று இலட்சம் சுகாதார ஊழியர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு நாடு தழுவிய ரீதியில் செயற்படுவதாக ஈரான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஈரானின் கோமிலிருந்து வெளியேற முயற்சிக்கும் மக்கள் சிலருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளமையினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலை…
-
- 0 replies
- 352 views
-
-
காசா மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி 26 Aug, 2025 | 10:57 AM காசாவில் உள்ள சுமார் 40 மாணவர்கள் நிதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எதிர்வரும் வாரங்களில் பிரித்தானியாவுக்கு வரவழைக்கும் திட்டங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. செவனிங் திட்டத்தின் கீழ் (Chevening scheme) புலமைப் பரிசில்கள் ஊடாக ஒன்பது மாணவர்களுக்கு காசாவை விட்டு வெளியேற உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவனிங் திட்டம் என்பது, சர்வதேச மாணவர்கள் ஓராண்டு முதுகலைப் பட்டப்படிப்பைப் படிப்பதற்காக, பெருமளவில் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் கல்வி திட்டம் ஆகும். ஏனைய தனியார் திட்டங்கள் மூலம் முழுமையாக நிதியளிக்கப்பட்ட புலமைப் பரிசில்கள் கிடைத்த சுமார் 30 மாணவர்…
-
- 0 replies
- 213 views
-
-
மத்திய அரசிற்கான ஆதரவு வாபஸ் - மமதா இந்தியாவில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருப்பதாக அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். டீசல் விலை உயர்வு, மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி மூதலிட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த முடிவை எடுத்திருப்பதாக மமதா பானர்ஜி தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை கொல்கத்தாவில் மூன்று மணி நேரம் நடைபெற்ற அக் கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் இந்த முடிவை செய்தியாளர்களிடம்…
-
- 0 replies
- 1.1k views
-