உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26708 topics in this forum
-
லண்டன்: இந்தியத் தொழிலதிபரான லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டலின் மகள் திருமணம் இந்திய மதிப்பில் சுமார் 500கோடி ரூபாய் செலவில் ஸ்பெயினில் நடத்தப் பட்டது. இதன் மூலம் உலகளவில் நடத்தப் பட்ட ஆடம்பர திருமணங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது இத்திருமணம். எஃகு இரும்புத் தொழிலில் முன்னணி வகித்து வரும் இந்தியரான லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். உலகப் பணக்காரர்களில் முண்ணனியில் இருக்கும் இவரது மகள் திருமணம் கடந்த 2004ம் ஆண்டு 46 மில்லியன் யூரோ செலவில் நடந்தது. உலகமே வியந்து பார்த்த அத்திருமணத்தைத் தொடர்ந்து, தற்போது அவரது சகோதரர் பிரமோத் மிட்டல் தனது மகள் ஸ்ருஷ்டி மிட்டல் திருமணத்தை அதைவிட படு விமர்சையாக நடத்தி முடித்துள்ளார். http://tamil.oneind…
-
- 2 replies
- 1.9k views
-
-
காப்பற்றச் சென்ற சீனக்கப்பல் " ஷ்யூ லாங்" , தற்போது பனிக் கட்டிகளால் சூழப்பட்டு நிற்கிறது அண்டார்க்டிக்காவில் பனியில் சிக்கியிருந்த ரஷ்ய ஆய்வுக் கப்பலுக்கு உதவச் சென்ற சீனப் பனிக்கட்டி உடைக்கும் கப்பலும், பயணிக்க முடியாமல் பனிக்கட்டிகளுக்கிடையே சிக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் கடைசி வாரத்தில், அண்டார்க்டிக்காவில் பனிக்கட்டிகளிடையே சிக்கி, பயணிக்க முடியாமல் இருந்த ரஷ்ய ஆய்வுக்கப்பலான, அக்கடெமிக் ஷோக்கால்ஸ்கியில் இருந்த பயணிகளைக் காப்பாற்ற விரைந்த , சீன ஐஸ் உடைக்கும் கப்பலான, ஷ்யூ லாங், இப்போது பனிக்கட்டிகளால் சூழப்பட்டு பயணிக்க முடியாமல் நிற்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது. வியாழனன்றுதான், இந்த சீனக் கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் மூலம், ரஷ்ய ஆய்வுக் கப்ப…
-
- 0 replies
- 380 views
-
-
புதுதில்லியில் இன்று புலம்பெயர்ந்தவர்கள் 12வது மாநாடு நடந்தது.இன்றைய மாநாட்டை துவக்கிவைத்து பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் தனது வளர்ச்சியை இழந்துள்ளது என வெளியில் பேசப்படுகிறது இதை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது எனப்துதான் உண்மை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக உள்ளனர் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். மேலும் . வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். தற்போதைய அல்லது எதிர்காலத்தை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்மபிகையோடு இருங்கள் பொருளாதாரத்தில் நாம் மேலும் வளர்ச்சி அடைவோம் என்று தெரி…
-
- 0 replies
- 352 views
-
-
ரஷ்ய பீரங்கித் தாக்குதலில் 70 உக்ரேன் படையினர் உயிரிழப்பு நேற்று முன்தினம் (27), ஞாயிற்றுக்கிழமை, உக்ரேனின் வட-கிழக்கு நகரம் ஓக்டிர்காவில் ரஷ்யாவின் பீரங்கித் தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட உக்ரேன் படையினர் கொல்லப்பட்டதாக, உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில், உக்ரேன் இராணுவ பிரிவு ஒன்று அழிக்கப்பட்டதாகவும், உயிரிழந்தவகளின் சடலங்களை கண்டெடுக்கும் பணியில் மீட்புக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சுமி நகர அரசு நிர்வாக தலைவர் டிமிட்ரோ லெவிட்ஸ்கி தெரிவித்தார். “பல பேர் இறந்துள்ளனர். தற்போது உயிரிழந்த 70 உக்ரேன் படையினரை புதைப்பதற்கான இடங்கள் தயாராகிவருகின்றன” என, அவர் டெலிகிராம் பக்கத்தில் தெர…
-
- 0 replies
- 244 views
-
-
கிறிஸ்தவப் பெரும்பான்மையினருடன் முஸ்லிம் மக்களையும் கொண்டுள்ள மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் செலேகா எனப்படும் போராளிக் குழுக்கள் பலம் பொருந்தியவர்களாக விளங்கினர். இவர்கள் ஆதரவுடன் கடந்த 2013 ஆம் ஆண்டில் அதிபர் பதவியைக் கைப்பற்றிய மிகைல் ஜோடோடிடா, பின்னர் அந்த இயக்கத்தை அதிகாரபூர்வமாக கலைப்பதாக அறிவித்தார். ஆனால் இதனை மறுத்த போராளிக் குழுக்கள் தொடர்ந்து இன வன்முறைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். கடந்த மாதம் தொடங்கிய இந்த வன்முறைகளில் 1,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. ஐ.நா.வின் 4,000 அமைதிப்படை வீரர்களும், பிரான்ஸ் நாட்டிலிருந்து 1,600 வீரர்களும் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அண்டை நாடான சாடிலிருந்து வந்த செலேகா போராளிகளுக்கு உ…
-
- 0 replies
- 483 views
-
-
அதிக ஊழல் வாதிகள் கொண்டது இந்தியா தான் என்றும், இதில் 169 பேர் ஊழல்வாதிகள் நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் ஆம்ஆத்மி கட்சி நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்ற டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார். நாடு முழுவதும் ஊழலில் சிக்கிய அரசியல்வாதிகள் பட்டியலை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டார். இதன் அடிப்படையில் ஊழல்வாதிகள் மாநிலத்திற்கு ஒருவர் வீதம் இருந்தாலும், தமிழகத்தில் தான் 5 பேர் இடம் பிடித்திருக்கிறார்கள். இன்று முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: நாட்டில் ஊழல் இல்லாத அரசியலை உருவாக்க வேண்டும். வரவிருக்கும் தேர்தலுக்கு பின்னர் ஒரு ஊழல்வாதிகூட பார்லி.,க்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும், வரும் தேர்தல், அரசியலில…
-
- 3 replies
- 643 views
-
-
மிஸ்டர் ராகுல்காந்தி.. ஆந்திராவுக்கு ஒரு நீதி..? தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா..? 23-02-2014 அன்பிற்கும், பண்பிற்கும் உரிய திரு.ராகுல்காந்தி அவர்களுக்கு.. இந்திய துணைக் கண்டத்தில் ஒடுக்கப்பட்ட இனமான தமிழினத்தில் பிறந்திருக்கும் ஒரு சாதாரணமான குடியானவன் எழுதிக் கொள்வது.. முதலில் உங்களது தந்தையின் இறப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.. அவர் மரணமடையும்போது இது போன்ற அரசியல் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு எனக்கு இல்லாததால், அப்போது சொல்ல முடியாத இரங்கலை இப்போது உங்களது குடும்பத்தினருக்குச் சமர்ப்பிக்கிறேன்..! உங்களது தந்தை கொல்லப்பட்ட சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு…
-
- 1 reply
- 899 views
-
-
19 வயது மாணவன் பிரித்தானியாவின் இளம் கோடீஸ்வரரானார்.. ரியல் எஸ்டேட் வியாபாரம் மூலம் அதிக லாபம் ஈட்டியதால் 19 வயது இளைஞர், இங்கிலாந்தின் இளம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். லண்டனை சேர்ந்தவர் 19 வயதான இந்திய வம்சாவளியான அக்ஷய் ரூபரேலியா பாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற நிலையில் தற்போது இவர் இங்கிலாந்தில் உள்ள இளம் வயது கோடீசுவரர்களில் ஒருவர் ஆகியுள்ளார். பாடசாலையில் கல்வி கற்றுக் கோண்டே இணையம் மூலம் இவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகின்றார். இதன்மூலம் அவர் ஒரு வருடத்தில் 100 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான வியாபாரம் செய்து 1.3 மில்லியன் பவுண்ட்ஸ் லாபம் ஈட்டியுள்ளார். கடந்த 16 மாதங்களுக்கு முன்பு உறவினர்களிடம் 7 ஆ…
-
- 2 replies
- 816 views
-
-
சென்னை: முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை, செந்தமிழின் செம்மொழித் தகுதியை நிலைநிறுத்திய நன்னாளாக கொண்டாட வேண்டும் என்று நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்.??? இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வாழ்வில் ஓர் திருநாள் வரும் ஜுன் 3-ம் நாள் தமிழர்தம் வாழ்வில் ஓர் திருநாள்; வாழ்வினில் நலம் பெறாதார்க்கெல்லாம் நலஞ்செய் திட்டத்தால் வாழ்வினில் ஒளிபெறச் செய்த நாள் கலைஞரின் பிறந்தநாள். திராவிட இன எழுச்சிக்கும், தன்மான நல்லுணர்வுக்கும், பகுத்தறிவு வழிச் சிந்தனைக்கும், சமுதாய மறுமலர்ச்சிக்கும் வழிவகுத்து, புதியதோர் தமிழகம் [^] படைக்கவும், அல்லும் பகலும், நாளும் கிழமையும், அயராது சி…
-
- 0 replies
- 396 views
-
-
துப்பாக்கி வன்முறைக்கு எதிராக... ஆயிரக்கணக்கானோர், அமெரிக்காவில் போராட்டம். அமெரிக்காவில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குமாறு வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்றைய தினம் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த போராட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவை வழங்கியுள்ள அதேவேளை துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார். டெக்சாஸ், உவால்டேவில் உள்ள ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. டெக்ஸாஸில் கடந்த மாதம் 24ஆம் திகதி நடத…
-
- 0 replies
- 133 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட செனட்டர் பதவி விலகுகிறார் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதனது மனைவியுடன் அல் ஃபிரான்கன் பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அமெரிக்காவின் ஜனநாயக …
-
- 0 replies
- 176 views
-
-
இலங்கையர் உட்பட 23 மாலுமிகளை விடுவிக்க 4 மில்லியன் டொலர்களை கப்பமாக கேட்கும் சோமாலிய கடற் கொள்ளையர்கள்! திகதி:23.08.2010 இலங்கையைச்சேர்ந்தவர்கள் உட்பட 23 மாலுமிகளைக் கொண்ட எகிப்திய வணிகக் கப்பலை பிடித்துவைத்திருக்கும் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் கப்பலை விடுவிப்பதாயின் 4 மில்லியன் டொலரைக் கப்பமாகத் தரவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். எகிப்திய பத்திரிகையான அல் ஆரம் இதனை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது. ஆகஸ்ட் 2 இல் செங்கடலில் வைத்து சீமெந்துப் பொதிகளை ஏற்றிச் சென்ற எம்.வி.சுயஸ் என்ற சரக்குக் கப்பல் கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டது. சோமாலியாவின் வடக்குக் கரையிலுள்ள இடத்திற்குக் கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலைக் கொண்டு சென்றுள்ளனர். 11…
-
- 0 replies
- 454 views
-
-
தனது தாயின் பேச்சை மீறி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 'தாய் சொல்லைத் தட்டிய தனயன்' என்ற அவப்பெயரை சம்பாதித்துவிட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என்று 'தலைமறைவு' சென்னை மாகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். கடந்த பல மாதங்களாகவே தலைமறைவாக இருக்கும் கராத்தே தியாகராஜன் தற்போது இந்தியாவுக்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது டெல்லியில் அவர் பதுங்கியிருப்பதாக தெரிகிறது. இந் நிலையில் டெல்லியிலிருந்து கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நேரத்தில் அரசியல் அணி மாற்றம் என்பது சாதாரண விஷயம்தான். திமுக வாரிசு அரசியலில் ஈடுபடுகிறது, குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுகிறது என்று கூறும் வைகோ, தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையில் ஈடுபட்டி…
-
- 2 replies
- 964 views
-
-
நன்றி – விகடன் 22-09-2010 (சோவுடன் ஒரு சந்திப்பு…) “தனது ஐந்தாவது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பருவத்தில் இருக்கிறார் கருணாநிதி. இந்த ஆட்சியின் ப்ளஸ், மைனஸ்களைப் பட்டியல் இடுங்களேன்?” “இது தனது குடும்பத்துக்கு என கலைஞரால் டெடிகேட் செய்யப்பட்ட ஐந்தாண்டு காலம். கலைஞரின் குடும்பத்தினர் மென்மேலும் சிறப்பு பெற்றிருக்கிறார்கள். பல பதவிகளை அடைந்திருக்கிறார்கள். செல்வம் பெருகியிருக்கிறது. ஆக, ஐந்தாவது முறை முதலமைச்சர் பதவிக் காலம் என்பது, கலைஞரின் குடும்பத்துக்கு மிகச் சிறப்பான ஒன்றாகவே கடந்திருக்கிறது!” “அப்போ இந்த ஆட்சியில் ப்ளஸ் பாயின்ட் என்று எதுவுமே இல்லையா?” “என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க? நான் சொன்னது ப்ளஸ் பாயின்ட் இல்லையா? ஒரு குடும்பம…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஹிமாச்சலப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த 24 மாணவர்கள் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் வி.என்.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குலுமனாலிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். பீஸ் நதிக்கரையில் மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அபோது லார்ஜி நீர்மின்நிலையத்திட்டம் செயல்படும் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய 6 மாணவிகள், 18 மாணவர்கள் உள்பட மொத்தம் 24 பேரும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்: "…
-
- 0 replies
- 492 views
-
-
நாமெல்லோரும் சுதந்திரமானவர்கள் இல்லை என்பதை அம்பலப்படுத்தியதால், தன் சுதந்திரத்தை அசாஞ்சே இழந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன! நம் யுகத்தின் முக்கியமான தினங்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்: செப்டெம்பர் 11 (2001-ல் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்தது மட்டுமல்ல, சிலேயில் 1973-ல் ராணுவப் புரட்சியால் சல்வதோர் அயெந்தேவின் ஆட்சி கவிழ்க் கப்பட் டதும் இதே தினத்தில்தான்), டி-தினம் (ஜூன் 6, 1944) என்று பல தினங்கள் நம் நினைவுக்கு வரும். இந்தப் பட்டியலில் இன்னுமொரு தினத்தையும் நாம் சேர்க்க வேண்டியிருக்கலாம்: ஜூன் 19. நம்மில் பெரும்பாலானோர் பகல் பொழுதில் காற்று வாங்குவதற்காக நடப்பதை விரும்புவார்கள். சிலரால் அப்படிச் செய்ய முடியாமல் இருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கலாம். அதாவது, அவர்…
-
- 0 replies
- 352 views
-
-
செய்தித்தாளில் இன்று: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் - த இந்து (ஆங்கிலம்) தமிழ்நாடும், மகாராஷ்டிராவும் அவற்றின் ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயத்தை, அரசியல் சாசன பிரிவு 29(1) படி கலாசார உரிமையென பாதுகாத்து கொள்வது பற்றி உச்ச நீதிமன்ற அமர்வு முடிவு செய்யவுள்ளது. வெள்ளிக்கிழமை இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. இந்திய அரசியல் சாசனம் பகுதி III-யில் இருக்கும் பிரிவு 29(1…
-
- 0 replies
- 645 views
-
-
முனைவர் பட்டம் வழங்கியதில் முறைகேடு?: துணைவேந்தர் கைது கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். முனைவர் பட்டம் வழங்கியதில் முறைகேடு? படத்தின் காப்புரிமைAFP ஜிம்பாப்வே முன்னாள் அதிபரின் மனைவி கிரேஸ் முகாபேவுக்கு முனைவர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் ஜிம்பாப்வே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு, பிஎஹ்.டி ஆய்வுக்காக பதிவு செய்த சில மாதங்களில், கிரேஸுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக, முனைவர் பட்டம் பெற, குறைந்தது சில ஆண்டுகளாவது ஆகும் என்பது குறிப்பிடதக்கது. இஸ்ரேல் குண்டுவெடிப்பு: படத்தின் காப்புரிமைREUTERS…
-
- 0 replies
- 324 views
-
-
மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு தடை நீங்கியது! நவ 23, 2010 மாவீரன் முத்துக்குமாருக்கு சிலை அமைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்த ஈகி முத்துக்குமாருக்கு தஞ்சை செங்கிப்பட்டியில் சிலை ஒன்றை நிறுவ, கடந்த சூலை மாதம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி விழா நடத்தியது. மாவீரன் முத்துக்குமாரின் சிலையை இளந்தமிழர் இயக்கம் வடிவமைத்து வழங்கியது. இந்நிகழ்வின் போது, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல்துறை, மாவீரன் முத்துக்குமாருக்கு சிலை வைக்க அனுமதியளிக்கவில்லை. இதையடுத்து சிலையை நிறுவ த.தே.பொ.க. சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், …
-
- 3 replies
- 515 views
-
-
வட கொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை! வட கொரியா பியோங்யாங் பகுதியில் இருந்து நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. ஜப்பானின் என்.எச்.கே. தேசிய தொலைக்காட்சி இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்ட செய்தியில், வட கொரியாவிலிருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே இருந்தாலும் ஜப்பான் கடலில் அது தரையிறங்கியதாகவும் கூறியுள்ளது. சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6:47 மணிக்கு வட கொரியாவில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக ஜப்பானிய கடலோரக் காவல்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுமார் 15 நிமிடங்களுக்…
-
- 11 replies
- 805 views
- 1 follower
-
-
கருவிலேயே ஸ்டெம் செல் அறுவை சிகிச்சை – குழந்தை பிறக்கும் முன்பே உடல் முடங்கிப் போகாமல் தடுத்த மருத்துவர்கள் மிஷல் ராபர்ட்ஸ் டிஜிட்டல் சுகாதார பிரிவு ஆசிரியர் 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UC DAVIS HEALTH படக்குறிப்பு, தனது மகள் ராபி கருவில் இருந்தபோது எமிலி அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டார் ஸ்டெம் செல் பேட்ச் என்ற சிறப்பு சிகிச்சை முறையைப் பயன்படுத்தி குழந்தை கருவில் இருக்கும்போதே, அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முதுகெலும்பு குறைபாடுகளை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 1 reply
- 314 views
- 1 follower
-
-
எத்தனை ‘ஸ்பெக்ட்ரம்’ வந்தாலும் சமாளிக்க நம்ம குஷ்பு இருக்கிறார்’ என்று குஷியாக இருந்தது தி.மு.க. வட்டாரம். ஆனால், அ.தி.மு.க.விற் காக தேர்தல் பிரசாரம் செய்ய நடிகர் விஜய்க்காக கேரளாவில் சொகுசு வாகனம் தயாராகிறது என்ற செய்தியால் தி.மு.க. தரப்பு ரொம்பவும் ‘அப்செட்’ ஆகியிருக்கிறதாம். வேட்டைக்காரனுக்குப் பிறகு விஜய்யை ஒரு தரப்பினர் துரத்த... ‘காவலன்’ படத்தைத் திரையிட தியேட்டர்கள் மறுக்க... விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதிக்க... இப்படி ஏகப்பட்ட சிக்கலில் தவித்த விஜய்க்கு போயஸ்கார்டன் ஆதரவுக்கரம் நீட்டியது. தி.மு.க. ஆதரவாளரான இயக்குநர் சந்திரசேகர் தன் மகனுக்கு வந்த சோதனையைத் தடுத்து நிறுத்த ஜெயலலிதாவைச் சந்தித்தார். இது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படு…
-
- 1 reply
- 1.5k views
-
-
இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் 30 பாலத்தீனர்கள் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் 30 பாலத்தீனர்கள் பலி படத்தின் காப்புரிமைAFP/GETTY காசா - இஸ்ரேல் எல்லையில் மீண்டும் வெடித்துள்ள மோதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாக பாலத்தீன அதிக…
-
- 0 replies
- 525 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் - மீண்டும் சர்ச்சையில் திரிபுரா முதல்வர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மீண்டும் சர்ச்சையில் திரிபுரா முதல்வர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES மகாபாரத காலத்…
-
- 0 replies
- 842 views
-
-
உலகப் பார்வை: இராக் தேர்தலில் மற்றொரு சர்ச்சை - தீயில் கருகிய வாக்குப் பெட்டிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இராக்: தீயில் கருகிய வாக்குப் பெட்டிகள் இராக் தலைநகரம் பாக்தாத்தில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிக…
-
- 0 replies
- 292 views
-