உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
உலகளவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு உலகளவில் காடுகளில் வாழ்ந்துவரும் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன பல தசாப்தங்களாக இந்த எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், இப்போது அவை அதிகரித்துள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். இயற்கை பாதுகாப்புக்கான உலக நிதியம் மற்றும், சர்வதேச புலிகள் அமைப்பு ஆகியவை இப்போது உலகளவில் 3900 புலிகள் வாழ்ந்துவருவதாக கணக்கிட்டு தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளில் இருந்த அளவைவிட இப்போது காடுகளில் வாழும் புலிகளின் எண்ணிக்கை 700 உயர்ந்துள்ளன். இந்தியா, ரஷ்யா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில்…
-
- 2 replies
- 470 views
-
-
கனடாவில் பழங்குடியினர் தொடர் தற்கொலை முயற்சி: அவரச நிலை பிரகடனம் கடனாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரே நாளில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்ததையடுத்து, அப்பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடியுடன் பழங்குடிவாசி ஒருவர் கிரீ என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இராண்டாயிரம் பேர் மட்டுமே இருக்கின்ற நிலையில், அவர்களில் பலர் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கின்றனர் என ஒன்டோரியாவில் உள்ள பர்ஸ்ட் நேஷன் ஆஃப் அட்டவாப்பியின் தலைவர் தெரிவித்துள்ளார். அந்த சமூகத்தைச் சேர்ந்த அனைத்து வயதுடைய நூற்றுக்கும் அதிகமானவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இந்த தற்கொலை…
-
- 0 replies
- 369 views
-
-
பிரிட்டன் அரசியின் 90-ஆவது பிறந்த நாள்: - ரூ.9,500 கோடி செலவு! [Monday 2016-04-11 09:00] பிரிட்டன் அரசியின் 90-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள் செலவிடும் தொகை சுமார் ரூ.9,500 கோடியைத் (100 கோடி பவுண்டு) தாண்டும் என்பது ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.பிரிட்டன் அரசி எலிஸபெத்தின் உண்மையான பிறந்த தினம் ஏப்ரல் 21-ஆம் தேதியும், அதிகாரப்பூர்வ பிறந்த தினம் ஜூன் 11-ஆம் தேதியும் பிரிட்டன் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அரசியின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக, நாடு முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டன் அரசியின் 90-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள் செலவிடும் தொகை சுமார் ரூ.9,500 கோடியைத் (100 கோடி பவுண்ட…
-
- 8 replies
- 834 views
-
-
கேரளா... கோவில் தீ விபத்தில், 100 பேர் பலி - காணொளி. திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே நடைபெற்ற கோயில் வான வேடிக்கை நிகழ்ச்சியின்போது தீ விபத்து ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய அரசு தலா ரூ.2 லட்சமும், மாநில அரசு ரூ.10 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளது. -தற்ஸ் தமிழ்-
-
- 1 reply
- 447 views
-
-
ஜேர்மன் சான்சலருக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் குறி: அதிர்ச்சி தகவல் Ca.Thamil Cathamil April 10, 2016 Canada ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக அந்நாட்டு புலனாய்வு துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து ரகசிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, பிரான்ஸ் தலைநகரான பாரீஸிலும் ஜேர்மனியிலும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில், ஜேர்மன் புலனாய்வு துறை உயர் அதிகாரியான Hans-Georg Maassen இது குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ‘ஜேர்மனி மீதும் சான்சலரான ஏஞ்சலா மெ…
-
- 0 replies
- 400 views
-
-
இந்திய கேரளாவின் கொல்லம் பராவூர் கோவிலில் தீ - 90 பேர் பலி 200 க்கும் மேற்பட்டோர் காயம்: 10 ஏப்ரல் 2016 இந்தியாவின் கேரள மாநிலம் கோயில் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பராவுர் புட்டிங்கால் கோயிலில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உள்ளுர் ஹிந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஆலயத்தில் வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்ததாகவும், கொண்டாட்டங்களுக்காக கொண்டு வரப்பட்டிருந்த பட்டாசுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இடத்தில் தீ பற்றிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். கடுமையான காயங்களுக்…
-
- 2 replies
- 777 views
-
-
பனாமாவில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து கசிந்த மில்லியன் கணக்கான ஆவணங்கள், உலக அளவில் இன்னும் பெரும் சர்ச்சைகளை கிளப்பிவருகின்றன.கடந்த ஒரு வாரகாலமாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தந்தை இயன் கேமரூன் வெளிநாட்டு நிறுவனம் பிரிட்டனில் வரி கட்டாமல் தவிர்த்ததா? அதன் லாபம் டேவிட் கேமரூனுக்கு கிடைத்ததா என்கிற புகார்கள் நீடித்து வந்தன.1980 களில் பஹாமாஸ் தீவில் பிளேர்மோர் வெளிநாட்டு நிதியத்தை டேவிட் கேமரூனின் தந்தை உருவாக்கினார் என்றும், அந்நிறுவனம் பிரிட்டனில் வரி செலுத்தவில்லை என்றும் பனாமா ஆவணங்கள் தெரிவித்திருந்தன. வரி தொடர்பாக வெளிப்படைத்தன்மை தேவை என்று சர்வதேச மாநாடுகளில் வலியுறுத்திய பிரிட்டன் பிரதமர், வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பலனடைந்த…
-
- 0 replies
- 433 views
-
-
அடால்ஃப் ஹிட்லர் பிறந்த இல்லத்தை தனது கட்டுப்பாட்டில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரிய அரசு கூறியுள்ளது. நாஜி ஆட்சிக்காலப் புகைப்படம் நாஜி ஆதரவாளர்கள் கூடுமிடமாக அந்த இல்லம் அமைந்துவிடாமல் தடுக்கவே இந்த முன்னெடுப்பு என ஆஸ்திரிய அரசு தெரிவித்துள்ளது. நியோ-நாஜிகளை எப்படித் தடுப்பது என்பது குறித்து பல ஆண்டுகளாக ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட முடிவின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என ஆஸ்திரிய உள்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். நாஜி ஜெர்மனியின் தலைவராக இருந்த ஹிட்லர் கடந்த 1889ஆம் ஆண்டு ப்ரானௌ அம் இன் நகரிலுள்ள அந்த வீட்டில் பிறந்தார். அந்த வீட்டை 1972ஆம் ஆண்டுமுதல் குத்தகைக்கு எடுத்துள்ள ஆஸ்திரிய உள்துறை அமைச்சகம் அதை சிறப்புத் தேவைகளைக் கொண்டவ…
-
- 0 replies
- 464 views
-
-
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் தனது காலஞ்சென்ற தந்தையின் வெளிநாட்டிலான முதலீட்டு நிதியிலிருந்து வருமானங்களைப் பெற்றதாக ஒப்புக் கொண்டதையடுத்து பதவி விலகுவதற்கான கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய பிரதமர் 'ஐ.ரி.வி' தொலைக்காட்சி சேவைக்கு வியாழக்கிழமை இரவு அளித்த பேட்டியின் போது, தான் 2010 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்பதற்கு முன்னர் பஹமாஸை அடிப்படையாகக் கொண்ட பிளயர்மோர் நம்பிக்கை நிதியத்தில் தனது மறைந்த தந்தை அயன் கமெரோனிற்கு உடைமையாக இருந்த பங்குகளிலிருந்து வருமானத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். பனாமாவை அடிப்படை…
-
- 0 replies
- 461 views
-
-
நைஜீரியாவின் போகோஹாரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு தப்பி வந்த ரஹிலா ஆமோஸ் என்ற 47 வயது பெண்மணி. | படம்: நியூயார்க் டைம்ஸ். நைஜீரியாவின் போகோஹாரம் பயங்கரவாத அமைப்பு பெண்களை கடத்திச் சென்று நூதனமான உத்திகளை பயிற்சி அளித்து தற்கொலைப் படையாக அவர்களை மாற்றுகின்றனர் என்று நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இது குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: போகோஹாரம் பயங்கரவாத அமைப்பின் பல்வேறு கொடுஞ்செயல்களில் நம் கவனத்துக்கு வருவது மசூதிகள், சர்ச்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவது ஆகியவையே. ஆனால் இவர்கள் ஒரு தாக்குதலை ஒரு கிராமத்தில் மேற்கொண்டால் அந்த கிராமம…
-
- 0 replies
- 707 views
-
-
ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு.. : தி இந்து ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு.. பிடல் காஸ்ட்ரோவுக்கு முடிவுரை எழுத முயன்ற சக்தி, இப்போது நட்பு மூலமாக புதிய முன்னுரையை எழுத ஆரம்பிக்கும்விதமாக மாறியிருப்பதை அமெரிக்க அதிபரின் கியூபா பயணம் தெரிவிக்கிறது. எண்ணங்களின் பிரதிபலிப்புகள் என்று ஒரு கட்டுரையை 2009-ல் பிடல் வெளியிட்டார். “கம்யூனிஸ்ட் கட்சியோ அரசோ எடுக்கும் முடிவுகளில் நான் தலையிடப்போவதில்லை” என்று அதில் குறிப்பிட்டார். அதில் ஒபாமாவுக்குப் பெரும் புகழாரத்தையும் பிடல் காஸ்ட்ரோ சூட்டியிருந்தார். கியூப - அமெரிக்க உறவில் இது ஒரு தொடக்கப்புள்ளி என்றாலும், பிடல் காஸ்ட்ரோவ…
-
- 0 replies
- 945 views
-
-
தனது ஆட்சி முடிவதற்குள் ஐ.எஸ். தீவிரவாதிகளது ஆயுளை முடிப்பேன் என ஓபாமா சபதம் எடுத்துள்ளார் - சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக தங்களை உளவு பார்த்தவர்களை ஐ.எஸ். அமைப்பினர் கொன்று சிலுவையில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ். அமைப்பினர் சமீப காலமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து தங்கள் அமைப்பு தொடர்பாக உளவு பார்ப்பவர்களை கொடூரமாக கொன்று வருகின்றனர். இந்நிலையில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாக தங்களது அமைப்பை உளவு பார்த்த 4 பேரை ஐ.எஸ். அமைப்பினர் சுட்டுக்கொன்றனர்.பின்னர் அவரது உடல்களை சிலுவையில் அறைந்து பொதுமக்கள் பார்வைக்காக தலைநகர் ரக்காவில் தொங்கவிட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1…
-
- 1 reply
- 652 views
-
-
பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்சில் கடந்த மாதம் இடம்பெற்ற விமான நிலையத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர் என்ற செய்தி வெளியாகி உள்ளது. தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட நஜீம் (Najim Laachraoui) என்ற நபர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றியவர் என்ற தகவலை பாராளுமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2009 இல் ஒரு மாதமும் 2010 இல் ஒரு மாதமும் பணியாற்றினார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நஜீமை பாராளுமன்றத்தில் பணிக்கமர்த்திய தொழில் நிறுவனம் குறித்த காலப்பகுதியில் எவ்வித குற்றப் பதிவுகளையும் அவர் கொண்டிருக்கவில்லை என உறுதி செய்திருந்தது. பாராளுமன்றத்தில் கோடை காலப் பணிகளில் ஈடு…
-
- 0 replies
- 687 views
-
-
பிரான்ஸின் புதிய சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்துக்கு எதிரே போராட்டம் நடத்தப்பட்டதுஉடலுறவுக்காக பணம் கொடுப்பதை குற்றமாக அறிவிக்கும் புதிய சட்டம் ஒன்றை பிரெஞ்சு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.இந்த புதிய சட்டத்தின் கீழ் பாலியல் தொழிலாளியின் சேவைகளுக்குப் பணம் கொடுப்பதாக கைது செய்யப்படும் நபர் முதல்முறை பிடிபடும்போது அவருக்கு 1700 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும். பிரான்ஸில் இருக்கும் சுமார் முப்பதாயிரம் பாலியல் தொழிலாளிகளை இந்த புதிய சட்டம் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. இவர்களில் பெரும்பான்மையினர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.இன்னொருவரின் உடம்பை பணம் கொடுத்து வாங்குவதில் தவறில்லை என்கிற எண்ணப்போக்கை மாற்றவேண்டியது அவசியம் என்றும் அதற்காகவே இ…
-
- 0 replies
- 428 views
-
-
இந்தியாவின் 'டாப் 10' மோசமான சாலைகளை தெரிந்துகொள்ளுங்கள்! இந்தியாவின் டாப் -10 மோசமான சாலைகளை உங்களுக்கு தெரியுமா.... 1. ஜோஜிலா பாஸ்: இமாலயத்தின் ஒரு பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,538 மீட்டர் உயரத்தில் உள்ளது. மிகவும் குறுகிய சாலையான இந்த பாதையில் ஒரே ஒரு வாகனம் மட்டுமே நேராக செல்ல முடியும். பனிக்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும். நாட்டின் கடினமான சாலைகளில் இதுவே மிகவும் மோசமான சாலையாக கருதப்படுகிறது. ஸ்ரீநகரில் இருந்து லே வழியாக பயணம் செய்யும் போது நீங்கள் இந்த பாதையை தாண்டி வரவேண்டும். ஜோஜிலா பாஸ், லடாக் மற்றும் காஷ்மீர் இடையே ஒரு முக்கியமான இணைப்புப் பாதையாக கருதப்படுகிறது. 2. நேரல்-…
-
- 1 reply
- 1.3k views
-
-
மக்கள் நலனை விட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவது மிகவும் முக்கியமானதா? என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மகாராஷ்டிரத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தற்கொலை செய்வதும் அதிகரித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஹோலி பண்டிகையின்போது கூட தண்ணீரை வீணாக்க வேண்டாம் என்று மாநில முதல்வர் பட்னவீஸ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.இந்நிலையில், ஐபிஎல் கி…
-
- 0 replies
- 445 views
-
-
பிரிட்டனில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அரச குடும்பத்தினருக்குச் சொந்தமான நகைகள் லண்டனின் பான்ஹம்ஸ் ஏல மையத்தில் ஏலத்துக்கு வருகின்றன.இதுகுறித்து, அந்த ஏல மையத்தின் இந்திய மற்றும் இஸ்லாமியக் கலைப் பொருள் நிபுணர் ருக்மிணி குமாரி ரத்தோர் கூறியதாவது: தங்கள் அடையாளத்தை வெளியிட விரும்பாத, பிரிட்டனில் வசிக்கும் இந்திய அரச குடும்பத்தினர், தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்த ஆபரணங்களை ஏலத்தில் விற்பனை செய்ய முன்வந்துள்ளனர். 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய பொக்கிஷங்களான அவை, இந்த மாதம் 19-ஆம் தேதி ஏலத்தில் விடப்படும் என்றார் அவர்.தமிழகத்தின் புகழ் பெற்ற திருமண நகையான "மாங்காய்' மாலை, ஏலத்துக்கு வரவிருக்கும் நகைகளில் மிக முக்கியமானதாகக் கூறப்படுகிறது.வை…
-
- 2 replies
- 836 views
-
-
ஐ.எஸ் குழுவினர் வெளியிட்டுள்ள புது வீடியோவில் லண்டன் உள்ளிட்ட 3 நகரங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள புது வீடியோ பதிவில் லண்டன், பெர்லின் மற்றும் ரோம் நகரங்களில் அடுத்த தாக்குதல் இருக்கும் என எச்சரித்துள்ளனர். பாரிஸ் மற்றும் பிரசெல்ஸ் தாக்குதல் குறித்து பேசும் அந்த வீடியோவில், ஐ.எஸ் குழுவினருக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு இதுவே தீர்வு எனவும் எச்சரிக்கின்றனர். பாரிஸ், பிரசெல்ஸ் நாகரங்களை அடுத்து தாக்குதலை தொடுக்கும் நகரம் குறித்து அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தெரிவு செய்யப்பட்டுள்ள 3 நகரங்களில் ஒன்றில் முதலில் தாக்குதல் தொடுக்கப்படும் எனவும் அந்த ஐ.எஸ்.ஆதரவாளர் தெரிவிக்கின்றார். …
-
- 0 replies
- 422 views
-
-
உலகம் முழுவதும் வாழும் அரசியல் தலைவர்கள் , திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்கள் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் இன்று கசித்துள்ளதால் உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது. 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரால் அறியப்படும் இத்தாள்,விக்கிலீக்ஸ் போன்ற ஒரு தகவல் கசிவு விவகாரமாகும் . மொஸாக் ஃபொன்செகா என்ற சட்ட நிறுவனமானது பனாமா நாட்டில் இயங்கி வந்துள்ள நிலையில் அந்நிறுவனத்திலிருந்தே இத்தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பல தசாப்தங்களாக இந்நிறுவனமே இம் மோசடி நடவடிக்கைகளை மிகவும் துல்லியமாகவும் ராஜ தந்திரத்துடனும் ரகசியமாக தமது வாடிக…
-
- 11 replies
- 2k views
-
-
பனாமா சிட்டி. | படம்: ஏ.பி. பனாமா பேப்பர்ஸ் கசிவு விவகாரம் உலகம் முழுதும் பெரும் பிரச்சினைகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ள சூழ்நிலையில் தங்கள் நாட்டை பலிகடாவாக்குவதை அனுமதிக்க மாட்டோம் என்று பனாமா அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பனாம அரசு தரப்பில் கூறப்படுவதாவது: மற்ற நாடுகளின் பலிகடாவாக பனாமா ஆவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. ஒவ்வொரு நாடும் பொறுப்புடையதே. இது குறித்து எங்கள் நாட்டின் பெயரையும் புகழையும் கெடுக்க விரும்புவர்களை நாங்கள் ஒதுக்கி வைக்க விரும்புகிறோம். இவர்கள் மற்ற நாடுகளிலும் இது போன்ற சட்ட விரோத கணக்குகள் இருப்பதை சவுகரியமாக மறந்து விடுகின்றனர். ஊடகங்கள் நிலைமைகளை ஆழமாக அறிய கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும், மீண்ட…
-
- 0 replies
- 621 views
-
-
பிரபல நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, டிஎல்எஃப் உரிமையாளர் கே.பி.சிங் உள்பட 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்து பனாமா நாட்டில் கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக ‘பனாமா பேப்பர்ஸ்’ வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது. தவிர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உறவினர்கள், உதவியாளர்கள், சவுதி அரேபிய மன்னர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட உலக தலைவர்களும் தங்களது கணக்கில் வராத சொத்துகளை பதுக்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. ஜெர்மனை சேர்ந்த நாளிதழ் ஒன்று இந்த தகவல்களை பெற்று புலனாய்வு இதழியலாளர்கள் சர்வ தேச கூட்டியக்கம் மூலம் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் உலகம் முழுவதும் கசியவ…
-
- 2 replies
- 512 views
-
-
இரட்டை கோபுர தாக்குதலில் பலியானவர்களை விட அதிகமானவர்களை கொல்லுவோம் என அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. மேலும் அண்டை நாடான தென் கொரியாவுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் எப்போது வேண்டுமானால் போர் ஏற்படலாம் என உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. இதற்கிடையே தென் கொரியாவுக்கு ஆதரவாகவும் தமக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா எச்சரித்திருந்தது. தற்போது அமெரிக்காவுக்கு எதிராக மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் அரசாங்க ஊடகமா…
-
- 0 replies
- 497 views
-
-
பனாமா ஆவணங்கள்: ஐஸ்லாந்துப் பிரதமர் ராஜினாமா பல மில்லியன் டாலர் பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகக் கூறும் ஆவணங்கள் வெளியானதையடுத்து ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸன் முன்னதாக நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரைத்தார். பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்ஸெகவிலிருந்து கோடிக்கணக்கான ஆவணங்கள் சமீபத்தில் வெளியாகின. இந்த ஆவணங்களின்படி, வின்ட்ரின் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களாக ஐஸ்லாந்து நாட்டின் பிரதமரும் அவரது மனைவியும் இருப்பது தெரியவந்தது. பல கோடி டாலர் பணத்தை அவர் பதுக்கியிருந்ததாக அவர் மீது குற…
-
- 0 replies
- 437 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி பிரதமர் விடுத்த கோரிக்கையை அந்நாட்டின் அதிபர் நிராகரித்தார். * 'வரிவிலக்கு புகலிடங்கள்' என்று அறியப்படும் இடங்களில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் சீன ஆட்சியாளர்களின் உறவினர்களுக்கு தொடர்பு- சீனாவின் இணையதளங்களில் பனாமா ஆவணங்கள் முடக்கம். * இந்தோனேஷியாவில் அகதிக் குழந்தைகளின் பெரிய கனவுகளுக்காக அகதிகளே நடத்தும் பள்ளிக்கூடம் * உணவுகளின் எதிர்காலம்- 1000 கோடி மக்களுக்கும் உணவுக்கு எங்கே போவது?- அடுக்குமாடி விவசாயம் தீர்வாகுமா?
-
- 0 replies
- 403 views
-
-
ஈரானிலிருந்து ஆயுதங்கள் ஏற்றி வந்த படகை நடுக்கடலில் அமெரிக்க கடற்படை மடக்கிப் பிடித்தது.அந்தப் படகில் இருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.அமெரிக்க கடற்படை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவித்திருப்பது:அரபிக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ். ஸிரோக்கோ ஈடுபட்டிருந்தது.கடந்த மார்ச் 28-ஆம் தேதி அரபிக் கடலில் சந்தேகத்துக்கு இடம் தரும் வகையில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு படகை கடற்படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்தப் படகில் 1,500 ஏ.கே.47 ரக தானியங்கித் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை ராக்கெட் மூலம் ஏவும் கருவிகள் 200, கன ரக இயந்திரத் துப்பாக்கிகள்…
-
- 0 replies
- 520 views
-