உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26712 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில்.. * சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் உலகின் நீளமான, ஆழமான ரயில் சுரங்கம் திறக்கப்பட்டுள்ளது; பன்னிரண்டு பில்லியன் டாலர் செலவில் பதினேழு ஆண்டுகளில் இது நிர்மாணிக்கப்பட்டது. * கணவர்கள் தம் மனைவிகளை லேசாக அடிக்கலாம் என்று பரிந்துரைத்த பாகிஸ்தானின் இஸ்லாமிய கொள்கைகளுக்கான கவுன்ஸில் சமூக ஊடகங்களில் கடும் தாக்குதலை எதிர்கொள்கிறது. *இந்தோனேசியாவின் புகையிலை உற்பத்தித்துறையில் சிறார் தொழிலாளர்கள் பணிப்புரிவதற்கான ஆதாரங்கள்; பிபிசியின் சிறப்பு புலனாய்வு கண்டுபிடித்தது. ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 615 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, துபையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் கண்காட்சி நிகழ்வின்போது தேஜஸ் விமானம் (நவம்பர் 20ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்) 24 நிமிடங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) துபையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் இன்று (நவம்பர் 21) பிற்பகல் விபத்திற்குள்ளானது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:10 மணியளவில் பார்வையாளர்கள் முன்னிலையில் வான் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இந்திய விமானப் படை, இந்த விபத…
-
-
- 16 replies
- 890 views
- 2 followers
-
-
வெனிசுவேலாவை டிரம்ப் குறிவைப்பது ஏன்? - மதுரோ மீதான குற்றச்சாட்டுகள் பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,வெனிசுலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ கட்டுரை தகவல் வனேசா புஷ்லூட்டர் லத்தீன் அமெரிக்கா ஆசிரியர், பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ மீதான அழுத்தத்தை அதிகரித்து வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தீவிரமடைந்ததன் ஒரு பகுதியாக, டிசம்பர் 10 அன்று, தடை செய்யப்பட்ட எண்ணெயைக் கொண்டு சென்றதாகக் குற்றம் சாட்டி, வெனிசுவேலா கடற்கரையில் இருந்து ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது. அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவை தாக்கும் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், போதைப் பொ…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
அமெரிக்கா முந்தாவிட்டால் கிரீன்லாந்து ரஷ்யாவுடன் இணையும்: டிமிட்ரி மெத்வதேவ் அதிரடி எச்சரிக்கை! Published By: Digital Desk 3 13 Jan, 2026 | 09:15 AM ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள கிரீன்லாந்து தீவைக் கைப்பற்றுவதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாமதம் காட்டினால், அந்தத் தீவு மக்கள் ரஷ்யாவுடன் இணைய வாக்களிக்கும் சூழல் உருவாகும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (12) இன்டர்ஃபாக்ஸ் (Interfax) செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மெத்வதேவ் தெரிவித்துள்ளதாவது, "ட்ரம்ப் விரைந்து செயல்பட வேண்டும். எங்களுக்குக் கிடைத்துள்ள உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, இன்னும் சில நாட்களில் அங்கு திடீர் பொதுவாக்கெடுப்பு நடத்…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
புதுடெல்லி: கூடங்குளம் அணு உலையில், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் சிபாரிசு செய்த எல்லா பாதுகாப்பு வசதிகளையும் அமல்படுத்துவது எப்போது என்பது பற்றி பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு கூடங்குளம் அணு உலையை செயல்படுத்துவதற்கு தடை விதிக்கக்கோரி, ‘பூ உலகின் நண்பர்கள்’ என்ற அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அணுசக்தி ஓழுங்குமுறை வாரியம், கூடங்குளம் அணு உலையில் 17 பாதுகாப்பு வசதிகளை சிபாரிசு செய்ததாகவும், ஆனால் அவற்றில் 6 வசதிகளை மட்டுமே மத்திய அரசு அமல்படுத்தி இருப்பதாகவும் கூறி இருந்தது. எனவே, அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் அமல்படுத்தாதநிலையில், கூடங்குளம் அணு உலையை செயல்படுத்த தடை வி…
-
- 0 replies
- 402 views
-
-
மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனா தலைநகர் பீஜிங்கில் மீண்டும் ஊரடங்கு பீஜிங் சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தலைநகர் பீஜிங்கில் 2 பேர் உள்பட அந்த நாட்டில் புதிதாக 10 பேருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. முடிவுக்கு வந்து விட்டது கொரோனா என்று கருதப்பட்டு வந்த நிலையில், புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 56 நாட்களுக்கு பிறகு, தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பீஜிங்கில் நேற்று மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த பீஜிங்கில் அத…
-
- 11 replies
- 978 views
-
-
எதிர்காலம் நாம் ஆவோம்! உலகம் முழுவதும் நாவல் கரோனா வைரஸ் பரவலால் மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் 150 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக யுனெஸ்கோ மதிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதும் கல்வி கற்க முடியாமல், மனத்தளவில் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களும் அவநம்பிக்கை மனநிலையில் வாழும் மாணவர்களும் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் கைக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ‘பீ த ஃபியூச்சர்’ என்னும் பாடல் இணையம் வழியாக வெளியிடப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் ஓர் அங்கமான குளோபல் எஜுகேஷன் கொலிஷன் மூலம் தென்கொரியாவின் கே-பாப் கலைஞர்கள் இந்த இசைக் காணொலியை, மில்லேனேசியா புராஜெக்ட் வழியே யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்கள். தென்கொரியாவின் கே-பா…
-
- 0 replies
- 403 views
-
-
ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளுக்கு அபராதம் ரத்து- ஐரோப்பிய ஒன்றியம் அதிகப்படியான வரவு செலவு திட்ட பற்றாக்குறைகள் தொடர்பாக ஸ்பெயினுக்கும், போர்ச்சுகல்லுக்கும் அபராதங்களை ரத்து செய்ய ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு மேலாக வரவு செலவு திட்டப் பற்றாக்குறை இருக்கக் கூடாது என்ற ஐரோப்பிய ஒன்றிய விதிமுறையை இந்த இரு நாடுகளும் மீறி இருக்கின்றன. இந்த வரையறைக்கு கீழே அதனுடைய பற்றாக்குறைய கொண்டுவர இரண்டு ஆண்டுகள் ஸ்பெயினுக்கு வழங்கியிருக்கும் அதேவேளையில், மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் இரண்டரை சதவீதத்திற்குள் பற்றாக்குறையை கொண்டுவர போர்ச்சுக்கல்லுக்கு ஓராண்டு வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன…
-
- 0 replies
- 252 views
-
-
பிரிட்டனில் இரட்டையராக பிறந்த இரு பெண்கள், தங்களைப் போலவே இரட்டையராக பிறந்த இரு ஆண்களை திருமணம் செய்து, அவர்களில் ஒரு தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தையாக பிறந்த அதிசயம் ஒன்று நடந்துள்ளது. பிரிட்டனில் Darlene and Diane Nettemeier என்ற இரண்டு இளம்பெண்கள் இரட்டையர்கள். இவர்கள் 1998ல் Twinsburg, Ohio, என்ற இடத்தில் இரட்டையர்களுக்காக நடந்த ஒரு விழாவில் Mark and Craig என்ற இரட்டையர்களாக பிறந்த வாலிபர்களை சந்தித்து, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு பின்பு பிரியாமல் அருகருகே இரண்டு வீடுகள் கட்டி அதில் இணைபிரியாமல் சந்தோஷ வாழ்க்கை நடத்தினர். இவர்களில் Diane and Craig என்ற தம்பதிகளுக்க் இரட்டை குழந்தைகள் பிறந்ததால் இரட்டை சந்தோஷம் அடைந்தனர். மேலும…
-
- 0 replies
- 477 views
-
-
கனடாவின் சுற்றுச்சூழல் துறை இன்று விடுத்துள்ள அறிக்கையில், Mississauga, Brampton, Milton and Halton Hills, மற்றும் Toronto நகரின் சில பகுதிகள் முதலிய இடங்களில் பனிப்புயல் தாக்கக்கூடும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. மேற்கண்ட நகரங்களின் சாலைகள் முழு அளவில் பனியால் மூடப்பட்டும், எதிரே வரும் வாகனங்களை சரியாக பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் அதிகமாக காணப்படுவதாகவும், முக்கியமாக தேசிய நெடுஞ்சாலை 401 மற்றும் 427 ஆகிய சாலைகளில் பனிமூட்டம் மிக அதிகமாக காணப்படுவதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட நகரங்களில் சாலைகளில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகங்களில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடனும், மெதுவாகவும் செல்லும்படி காவல்துறையினர் அறிவு…
-
- 7 replies
- 677 views
-
-
காவிரி நீரை மீண்டும் 10 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவு காவிரி நதியை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு 3 ஆயிரம் கன அடி திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதி நீர் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 5 ஆம் திகதி விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. இதனால் கர்நாடகாவை போராட்டக் களத்துக்கு இட்டுச் சென்றது. இதனிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த 7-ஆம் திகதி அதிகாலை 12 மணி முதல் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே உச்ச நீதிமன்றம…
-
- 0 replies
- 480 views
-
-
கடந்த சில நாட்களில், "சீன இணையத் தாக்குதல்", "சீனர்கள் கள்ளத்தனமாக பிறரது இணைய இணைப்புகளில் நுழையும் தாக்குதல்" தொடர்பான செய்தி அறிக்கையை வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகிறன. சீனத் தேசிய கணிணி இணையத்துக்கான நெருக்கடி தொழில் நுட்ப கையாளுதல் மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் புள்ளி விபரங்களின் படி, மேலை நாட்டின் சில செய்தி ஊடகங்களின் செய்தி அறிவிப்புக்கு மாறாக, சீனா, இணையத் தாக்குதலுக்குள்ளான நாடாகும். இணையத்தின் விரைவான வளர்ச்சியுடன், சீனப் பெருநிலப்பகுதியில் இணையப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்து வருகிறது. ஆனால், மேலை நாடுகளில் இணையம் பயன்படுத்துவோருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சீனாவில் இணையப் பயன்படுத்தும் சீன மக்களின் பாதுகாப்ப…
-
- 2 replies
- 557 views
-
-
ஜேர்மனியிடமிருந்து... முக்கிய இறக்குமதிக்கு தடை விதித்தது சீனா! ஜேர்மனியில் இருந்து மற்றும் பன்றி தொடர்பான பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. இந்த தடையை சீனாவின் சுங்க நிறுவனம் மற்றும் அதன் விவசாய அமைச்சகம் ஆகியன இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளன. கடந்த வாரம் காட்டுப் பன்றியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதை ஐரோப்பிய நாடான ஜேர்மனி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக சீனா குறிப்பிட்டுள்ளது. கொடிய பன்றி நோய்க்கு எதிராக போராட வேண்டியுள்ள நிலையில், சீனாவுக்கான மூன்றாவது பெரிய பன்றி இறைச்சி வழங்குநரான ஜேர்மனியிமிருந்து பன்றி குறித்த இறக்குமதியை சீனா தடை செய்துள்ளது. இந்தத் தடை யை ஏ…
-
- 0 replies
- 415 views
-
-
'தமிழ்நாட்டில் நாம் நினைத்திருந்தால்...!' -அமித் ஷாவிடம் மனம் திறந்த மோடி தமிழக அரசில் இலாகா இல்லாத முதல்வராக தொடர்கிறார் ஜெயலலிதா. அப்போலோவில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 33 நாட்கள் கடந்துவிட்டன. ' தமிழக அரசியல் சூழல்களுக்கு ஏற்ப மாறுபட்ட முடிவுகளை பா.ஜ.க அரசு எடுத்திருக்க முடியும். அவ்வாறு செய்யாமல் போனதற்கும் பல காரணங்கள் உள்ளன' என்கிறார் தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவர். மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் சேராமல் இழுத்தடித்து வந்த தமிழக அரசு, தற்போது இத்திட்டத்தில் சேர ஒப்புதல் அளித்துவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்துப் பேசினார் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி. அதேபோல் காவிரி விவகாரத்த…
-
- 0 replies
- 620 views
-
-
இந்தியா மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவரும், அல் காய்தா படையணியொன்றின் கொமாண்டருமான அஸமதுல்லா முவாவியா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பைத் தாக்குதலின்போது பிடிபட்டு, தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாபையும், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவையும் அஸமதுல்லா வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது-ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறியதும், எங்களின் கவனத்தை காஷ்மீரின் மீது திருப்புவோம். இந்தியாவில் மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நட…
-
- 0 replies
- 347 views
-
-
அனைத்து அமெரிக்கர்களுக்கும் நானே ஜனாதிபதி : ஹிலாரிக்கும் நன்றி தெரிவிப்பு : வெற்றியின் பின்னர் டொனால்ட் அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஜனாதிபதியாக எனது சேவையை வழங்குவேன். இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக போராடிய ஹிலாரி கிளிண்டன் வேற்றுமைகளை மறந்து எம்மோடு கைகோர்க்க வேண்டும். நாட்டுக்காக பல சேவைகளை செய்துள்ள அவருக்கு என வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து, அமெரிக்காவின் 45 ஆவது புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் , தனது ஆதரவாளர்களிடையே ஆற்றிய வெற்றி உரையில் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் தனது ஆதரவாளர்களிடையே…
-
- 1 reply
- 281 views
-
-
உயர்நீதிமன்ற போலீசு தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தந்துள்ள இடைக்கால அறிக்கை, வழக்குரைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. “இதுதாண்டா போலீசு” பார்வயில் எழுதப்பட்டிருக்கும் இந்த அறிக்கையை ஆராய்வதுடன், இனி இப்போராட்டம் செல்லவேண்டிய திசையையும் சுட்டிக்காட்டி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இன்று வழக்குரைஞர்கள் மத்தியில் விநியோகித்துக் கொண்டிருக்கும் துண்டறிக்கையை இங்கே தருகிறோம். மார்ச் 10 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இப்பிரச்சினை தொடர்பாக ம.க.இ.க நடத்தவிருக்கும் பொதுக்கூட்டத்தின் துண்டறிக்கையையும் வெளியிடுகிறோம். இக்கூட்டத்துக்கு போலீசு அனுமதி மறுத்த்தால் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தடியடிபட்ட உயர்நீதிமன்றம கரு…
-
- 0 replies
- 794 views
-
-
முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் அவர்களின் இறுதிச்சடங்கு நேற்று லண்டன் மாநகரில் நடந்தது. தங்களுடைய பிரியமான முன்னாள் பிரதமரை லண்டன் மாநகர மக்கள் மிகுந்த கவலையோடு சுமார் 50000 பேர் சாலையில் வரிசையில் நின்று இறுதிஅஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்தனர். அவருடைய சவப்பெட்டி சாலையில் சென்றபோது வெள்ளை ரோஜாக்களை எறிந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர். பிரிட்டிஷ் பிரதமர் தனது குடும்பத்துடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு பிரிட்டிஷின் இரும்பு பெண்மணிக்கு தன்னுடைய ஆழ்ந்த அஞ்சலியை செலுத்தினார். ராணி எலிசபெத் அவர்களும் தனது குடும்பத்தினர்களுடன் நேரில் இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டார். மார்கரெட் தாட்சரின் ஒரே பேத்தி அமெண்டா அவர்கள் இறுதிச்சடங்கில் பைபிள் வாசித்து, த…
-
- 1 reply
- 1.2k views
-
-
தேர்தல் முறைகேடு விவகாரத்தில் டிரம்பின் பாராட்டைப் பெற்ற புட்டின் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறைக்கேடுகள் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் 35 பேர் அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் செயற்பாடுகளை ரஷ்யா மேற்கொள்ளாது என அந்நாட்டு ஜனாதிபதி விளாமிதிர் புட்டின் கூறிய கருத்தை அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொணால்ட் டிரம்ப் பாரட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரிகின்டனின் பிரச்சாரங்கள் தொடர்பான மின்னஞ்சல்களை இணையவழி மோசடியூடாக களவாடி தரவுகளை விக்கிலீக்ஸ் மையத்திற்கு பறிமாறிய விடயத்தில் ரஷ்ய அதிகாரிகளே முன்னின்று செயற்பட்டனர் என்றும், இதற்கு …
-
- 1 reply
- 364 views
-
-
முதலில் இனப்படுகொலையை நிறுத்தச் சொல்லி சீனத் தூதரகத்திற்கு மனுக்கொடுப்போம்... சரி வராவிட்டால் சீனனுக்கு தமிழர்கள் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம்..... சீன தூதரகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து முட்டையடிப்போம்(மக்களோடு மக்களாக சேர்ந்து)..... அழுகிய முட்டையாக அடித்து எம்மவர் எதிர்ப்பை தெரிவிப்போம்........ ருஷ்யன் தன்னால் அடங்குவான்.... இல்லையேல் அடக்குவோம்.... மேற்குலகில் முட்டையடித்து எதிர்ப்பை தெரிவிக்க தண்டனை பெரிதில்லை(ஆனால் தூதரகத்திற்கு சேதம் விளைவித்து பிடிபட்டால் விளைவு கொஞ்சம் பெரியது)..... சீனனுக்கு எதிர்ப்பை தெரிவிக்கா விட்டால் சிங்களத்தின் ஆட்டம் தொடரும்.....சீனனை இவ்விடயத்தில் தனிமைப் படுத்தாமல் விட்டால், சிங்களவனை எம்மால் தனிமைப் படுத்த முடியா…
-
- 2 replies
- 1.9k views
-
-
தமிழரைப் பாதுகாக்க யுத்தம் என்று யுத்தம் செய்தவர்கள். புலிகளின் ஆயுதங்கள் மௌனித்தபின் வெற்றி விழாவும், விடுமுறையும் கொண்டாடுகின்றார்கள். இவர்களா? தமிழரைப்பாதுகாக்க யுத்தம் செய்தவர்கள். யுத்தமா செய்தவர்கள்? யுத்த விதிமுறை தெரிந்திருந்தார்களா? உண்மையாக தமிழரும் தங்கள் தேசியம் எனறு எண்ணி இருந்தால் இவ்விழாக்கள் எல்லாம் நடைபெற்றிருக்காது. தாங்கள் வேறு. தமிழர் வேறு என்ற கோட்பாட்டை அவர்களே வெளிப்படுத்தியிருக்கின்றார
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. விவாதத்தை ஆரம்பித்த தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெரி, பொறுப்புக்கூறல், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மீளமைப்பு விடயங்களில் அரசாங்கம் உரியவகையில் செயற்படவில்லை எனவும் சிறிய அளவான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும், அவை போதுமானதாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு பதில் வழங்கிய பாரா…
-
- 1 reply
- 326 views
-
-
ஆத்தா ஆத்தோரமா போறியா? தாத்தா நான் பார்த்தா பார்க்காமலே போறியா? அக்கம் பக்கம் யாருமில்லை. இப்பவெல்லாம் இந்தப் பாடலைக் கேட்டாலே நம்ம முதல்வர் கடுப்பாகிவிடுகிறாராம். தேர்தலை அண்டிய காலந்தொட்டு மெல்ல மெல்ல சோனியா அம்மையார் நம்ம முதல்வரை கண்டுக்காமல் விட்டு அமைச்சரவைப் பங்கீட்டிலும் இழுபறி நடந்து ஒருவழியா முடிவானாது. ஆனாலும் முதல்வர் முனகல் தீர்ந்தபாடில்லையாம். இப்பவே இப்படியென்றால் சட்டசபை தேர்தல் நேரத்தில என்ன எல்லாம் நடக்குமோ எனக் கலங்கிப்போய் இருக்கிறாராம். ஆட்சியிலை பங்கோ ஐம்பதுக்கு ஐம்பது சீட்டோ டெல்லி ஆத்தா என்ன கேட்டுத்தொலைப்பாங்களோ? புலம்புகிறாராம். கூட்டணிக்காக ஈழத்தமிழரைக் காவுகொடுத்தும் ஆத்தா அடங்கமாட்டன் என்கிறாளே கூட இருந்த லோக்கல் கூட…
-
- 0 replies
- 1.1k views
-
-
நெதன்யாகுவை பதவியிலிருந்து நீக்கி அரசாங்கத்தை உருவாக்க முடியும் - இஸ்ரேலிய ஜனாதிபதியிடம் லாப்பிட் உறுதி பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டுகால பிரதமர் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்பாட்டை இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் எட்டியுள்ளன. அதற்கு அமைவாக எட்டு பிரிவுகளின் கூட்டணி அமைக்கப்பட்டதாக மய்ய கட்சித் தலைவர் யெய்ர் லாப்பிட் அறிவித்துள்ளார். எனினும் கூட்டணி அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னர் பாராளுமன்றமான கெனெசெட்டின் வாக்கெடுப்பு இடம்பெறும். இந்த உடன்பாட்டை பதவியில் உள்ள தற்போதைய ஜனாதிபதி ருவன் ரிவ்லினுக்கு அறிவித்ததாக லாப்பிட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். "கூட்டணி அரசாங்கம் அனைத்து இஸ்ரேலிய குடிமக்கள், அரசாங்கத்து…
-
- 1 reply
- 320 views
-
-
மாஸ்கோ/டமாஸ்கஸ்: ரஷ்யாவின் வேண்டுகோளை ஏற்று ரசாயன ஆயுதங்களை சர்வதேச நாடுகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து அவற்றை அழிக்க சிரியா ஒப்புதல் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி 1400 பேரை படுகொலை செய்தது சிரியா என்கிறது அமெரிக்கா. இந்த ரசாயன ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்றால் பேரழிவு ஏற்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. இதனாலேயே சிரியா மீது ராணுவ நடவடிக்கை அவசியம் என்று அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது. ரஷ்யாவில் சிரியா அமைச்சர் இந்நிலையில் சிரியா வெளியுறவு அமைச்சர் வாலித் அல்-மோவுலிம் நேற்று மாஸ்கோவுக்கு சென்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேயி லாவ்ரோவை சந்தித்து பேச்சு நடத்தினார். ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்வோம் ச…
-
- 0 replies
- 473 views
-