உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26597 topics in this forum
-
இத்தாலிக்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அல்பேனியாவில் வைத்து பராமரிப்பு கடந்த சில வருடங்களாக பெருமளவு புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆபிரிக்காவிலிருந்து மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவிற்குள் வருவதால் இத்தாலி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. 2023 ம் ஆண்டில் ஏறக்குறைய 160,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகளில் மட்டும் பயணித்து இத்தாலிக்குள் நுளைந்திருக்கிறார்கள். இவர்களது கடல் பயணம் மிக மிக ஆபத்தானதாக இருந்த போதிலும் பல ஆயிரக் கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் இத்தாலி நோக்கி தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சிக்கலைத் தீர்க்க, பல மாதங்களாக ஒத்தி வைக்கப் பட்டுக் கொண்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான திட்டம் ஒன்றை இத்தாலி இப்பொழுது ந…
-
-
- 4 replies
- 378 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா மற்றும் கனடா இடையே ராஜ்ஜிய ரீதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 14 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த ராஜதந்திரச் சிக்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இம்முறை இன்னும் வலுவாக. கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் மற்ற அதிகாரிகளை திரும்பப் பெற இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன், டெல்லியில் உள்ள கனடா தூதுரகத்திற்கும் இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற இந்தியா முடிவு செய்துள்ளது. அக்டோபர் 19-…
-
-
- 28 replies
- 2.1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, `தாட்’ கவசத்தை, இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மன் பதவி, வெளியுறவுத்துறை செய்தியாளர், வாஷிங்டன் 16 அக்டோபர் 2024, 04:38 GMT அமெரிக்கப் படைகளால் இயக்கப்படும் "அதிஉயர் பகுதி பாதுகாப்பு முனையம்" எனப்படும் `தாட்’ கவசத்தை, இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட இரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து 'தாட்' வான் பாதுகாப்பு கவசம் (THAAD : Terminal High-Altitude Area Defense) இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மேம்ப…
-
- 1 reply
- 274 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய காஸாவில், இஸ்ரேல் தாக்குதலால் நடந்த சேதங்களுக்கிடையே தனது குழந்தையுடன் அமர்ந்திருக்கும் பெண் கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன் பதவி, பிபிசி வெளியுறவு துறை செய்தியாளர், வாஷிங்டனிலிருந்து 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் 30 நாட்களில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை அதிகரிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அமெரிக்க ராணுவத்தின் சில உதவிகளை நிறுத்த நேரிடும் என்றும் தெரிவித்து இஸ்ரேலுக்கு அமெரிக்கா கடிதம் எழுதியுள்ளது. தன் நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) அனுப்பப்பட்ட அக்கடிதம், அமெரிக்காவிடமிருந்து இதுவரை அறியப்பட்ட, வலுவான எழுத்த…
-
- 2 replies
- 346 views
- 1 follower
-
-
01 OCT, 2024 | 07:48 PM இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் சிபிஎஸ் செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கு எதிரான ஈரானின் நேரடி தாக்குதல் ஈரானிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரி இந்த தாக்குதலை எதிர்கொள்வதற்காக இஸ்ரேல் தன்னை தயார்படுத்துவதற்கு அமெரிக்கா உதவுகின்றது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195270
-
-
- 36 replies
- 2.8k views
- 1 follower
-
-
26 SEP, 2024 | 10:33 AM லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகிவருவதாக அந்த நாட்டின் முப்படை பிரதானி மேஜர் ஜெனரல் ஹெர்ஜி ஹலேவி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வான்வெளிதாக்குதல்கள் ஹெஸ்புல்லா அமைப்பின் உட்கட்டமைப்பினை அழிப்பதை நோக்கமாக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் இந்த தாக்குதல்கள் இஸ்ரேல் எல்லையை கடந்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் வடபகுதியில் படையினர் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் நாங்கள் ஒரு இராணுவநடவடிக்கைக்கு தயாராகிவருகின்றோம். இதன் அர்த்தம் என்னவென்றால் உங்களின் இராணுவகாலணிகள் எதிரியின் பகுதிக்குள் நுழையும…
-
-
- 19 replies
- 933 views
- 1 follower
-
-
இரண்டு வாரங்களாக மருந்து, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை இஸ்ரேல் ராணுவம் தடை செய்துள்ளது. இதனால் வடக்கு காசாவில் உள்ள 4,00,000 பாலஸ்தீனர்கள் பட்டினியில் தள்ளப் பட்டுள்ளனர். இதனால் அதிக மக்கள் உயிர்ப் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஐரோப்பிய – மத்திய தரைக் கடல் மனித உரிமை கள் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. வடக்கு காசாவில் சுமார் 2, 00,000 பாலஸ்தீனர்கள் பத்து நாட்க ளாக உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ஈரான் நிராகரிப்பு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி ஓமான் அரசின் உதவியுடன் அமெரிக்காவுடன் நடை பெறும் பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக அறிவித்துள் ளார். இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த துவங…
-
- 0 replies
- 579 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE படக்குறிப்பு, பூச்சாவின் விட்செஸ் சுமார் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவு ஆகும். கட்டுரை தகவல் எழுதியவர், சாரா ரெயின்ஸ்ஃபோர்ட் பதவி, கிழக்கு ஐரோப்பா நிருபர், பூச்சா 48 நிமிடங்களுக்கு முன்னர் யுக்ரேனில் உள்ள பூச்சா (Bucha) நகரத்தில் இருள் சாயும் வேளையில் தான் இந்தக் குழு பணியைத் துவங்குகிறார்கள். ஏனெனில் இரவில் தான் ரஷ்யா இந்த நகரத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தத் துவங்கும். இந்தக் குழு கிட்டத்தட்ட முழுதும் பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவு. அவர்கள் தங்களை 'பூச்சாவின் சூனியக்காரிகள்' (The Witches of Bucha) என்று…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலிற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி வழங்கினார் என கனடா அதிகாரிகளை மேற்கோள்காட்டி வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய அதிகாரிகள் மத்தியிலான தொடர்பாடல்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இந்தியாவின் ரோ அமைப்பின் சிரேஸ்ட அதிகாரிகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாக கனடா அதிகாரிகள் இந்திய அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. புலனாய்வு தகவல்களை சேகரித்தலில் ஈடுபடுமாறும் சீக்கிய பிரிவினைவாதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ளுமாறு இந்திய உள்துறை அமைச்சரும் ரோவின் அதிகாரிகளுமே உத்தரவிட்டனர் என்பது வெளியேற்றப்பட்டுள்ள இந்திய அதிகா…
-
-
- 5 replies
- 414 views
- 1 follower
-
-
எரிபொருள் தாங்கி வெடிப்பு – 94 பேர் சம்பவ இடத்திலேயே பலி. நைஜீரியாவின் வட பகுதியில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் சுமார் 94 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 70ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், எரிபொருள் பவுசர் விபத்துக்குள்ளான போது அதிலிருந்து பெட்றோலை எடுக்க சென்ற மக்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்…
-
- 0 replies
- 471 views
-
-
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத் பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத் 16 அக்டோபர் 2024, 09:43 GMT புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில நாட்களாக முக்கிய சாலைகள் மற்றும் கட்டடங்கள் ஜொலித்து வருகின்றன. பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் மரங்களை வெட்டி சீரமைத்தல், சாலை விளக்குகள் அமைத்தல், ஓவியங்கள், மலர்கள் கொண்டு அலங்கரித்தல் போன்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மிகவும் பாதுகாப்பான பகுதியான நாடாளுமன்றத்திற…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
காசா மருத்துவமனையின் வளாகத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலையும், அக்கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்ததையும் நேரில் பார்த்த ஒருவர், அந்த பயங்கர சம்பவத்தையும், மக்கள் கொல்லப்பட்டதை - காயமடைந்ததை பார்த்ததையும், அவ்வேளை ஏதும் செய்ய இயலாமல் தான் தவித்த அனுபவத்தையும் பிபிசியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். நான் பார்த்த மிக மோசமான காட்சி இது என தாய் ஒருவர் தெரிவித்துள்ளார். கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்ததும் அதிலிருந்து தப்புவதற்காக மக்கள் அதனை கிழித்து எறிந்ததையும் அலறியதையும் பார்த்ததாக யுவதியொருவர் தெரிவித்துள்ளார். தீயில் எரிந்து உயிரிழந்தவர்களை காப்பாற்ற முடியாததால் நான் கண்ணீர் விட்டு க…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
இஸ்ரேலுக்கு படைகளை அனுப்பும் அமெரிக்கா! இந்த மாத தொடக்கத்தில் ஈரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு அதன் வான் பாதுகாப்பை வலுப்படுத்த இஸ்ரேலுக்கு உயர் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மற்றும் அமெரிக்க இராணுவக் குழுவை அனுப்புவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவினை ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கியுள்ளதாகவும் பென்டகன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் விநியோகம், ஒரு முழுமையான போரைத் தவிர்ப்பதற்கான பரவலான இராஜதந்திர முயற்சிகள் இருந்தபோதிலும், மத்திய கிழக்கில் மோதலை மேலும் தூண்டிவிடும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஒக்டோபர் 1 ஆம் திகதி ஈரான் சுமார் 200 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியது. …
-
- 1 reply
- 394 views
-
-
2024-ஆம் ஆண்டு நோபல் பரிசு: மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்பிற்காக வழங்கப்பட்டது பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர் பதவி, உடல்நலம் மற்றும் அறிவியல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஆம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மைக்ரோ RNA (ஆர்என்ஏ) கண்டுபிடிப்பிற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் கண்டுபிடிப்புகள் பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பதையும், மனித உடல் எவ்வாறு பல்வேறு வகையா…
-
-
- 17 replies
- 1k views
- 2 followers
-
-
படக்குறிப்பு, கோப்புப் படம் 14 அக்டோபர் 2024, 03:32 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சீனா திடீரென தைவானை சுற்றி வளைத்து போர் ஒத்திகையை நடத்தி வருவது அந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. தைவானைச் சுற்றிலும் 9 இடங்களில் போர் ஒத்திகையை சீனா நடத்துகிறது. சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தைவான், ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் உறுதி செய்ய தேவையான படைகளை அனுப்பியிருப்பதாக கூறியுள்ளது. சீனா - தைவான் இடையே என்ன நடக்கிறது? தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் ஜாயின்ட் ஸ்வார்ட் 2024பி என்ற பெயரில் போர் ஒத்திகையை சீனா தொடங்கியுள்ளது. தைவா…
-
- 3 replies
- 396 views
- 1 follower
-
-
சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான உலகளாவிய மனிதாபிமான உதவித் திட்டங்களில் ஒரு கட்டமாக, லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவி வருகின்ற யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) ஊடாக நிவாரணங்களை வழங்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் உத்தரவுக்கு இணங்க, KSrelief பெய்ரூத் நகருக்கு இது வரை இரண்டு விமானங்களுக்கு நிவாரணங்களை அனுப்பியுள்ளது. கடந்த 13ம் திகதி ரியாத் நகரில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உணவு, மருத்துவப் பொருட்கள் மற…
-
- 0 replies
- 495 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சனிக்கிழமையன்று, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கோச்செல்லாவில் டொனால்ட் டிரம்பின் பேரணி நடைபெற்றது கட்டுரை தகவல் எழுதியவர், பீட்டர் போவ்ஸ் மற்றும் ஹாரிசன் ஜோன்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 23 நிமிடங்களுக்கு முன்னர் சனிக்கிழமையன்று (அக்டோபர் 12), அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கோச்செல்லா நகரில் டொனால்ட் டிரம்பின் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி நடந்த இடத்திற்கு அருகிலுள்ள சந்திப்பில், ஒரு வேட்டைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நிறைந்த கைத்துப்பாக்கியைச் சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு நபரைக் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வெம் மில்லர் எனப்படும…
-
- 1 reply
- 249 views
- 1 follower
-
-
ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதார தடை! ஈரானுடன் தொடர்புடைய ஏழு தனிநபர்கள் மற்றும் ஏழு நிறுவனங்களுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் உக்ரேன் மீதான போருக்காக ரஷ்யாவிற்கு ஏவுகணைகளை ஈரான் வழங்கியமைக்காக இந்த தடை உத்தரவை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் நாட்டின் முதன்மையான விமான நிறுவனமான ஈரான் ஏர், அத்துடன் விமான நிறுவனங்களான சாஹா ஏர்லைன்ஸ் மற்றும் மஹான் ஏர் ஆகியவை அடங்கும். அதேநேரம், தடைகளை எதிர்கொண்ட நபர்களில் ஈரானின் துணை பாதுகாப்பு அமைச்சர் செயத் ஹம்சே கலந்தாரியும் அடங்குவர். அமெரிக்கா, பிரிட்டன், பிர…
-
- 0 replies
- 1k views
-
-
இஸ்ரேலின் வடபகுதியில் உள்ள இராணுவதளமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா இராணுவதாக்குதலில் ஐந்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஹைபாவிலிருந்து தென்பகுதியில் உள்ள பினாமியாவில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் தளத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலில் காயமடைந்த படையினரில் ஏழு பேரின் நிலை ஆபத்தானதாக காணப்படுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலிற்கு ஹெஸ்புல்லா அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஹைபாவிலிருந்து தென்பகுதியில் உள்ள பினாமியாவில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் தளத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலில் காயமடைந்த படையினரில் ஏழு பேரின் ந…
-
- 0 replies
- 350 views
- 1 follower
-
-
உலக நாடுகளை எச்சரிக்கும் ஈரான்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு உதவி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது. அத்துடன் தனது வான்பரப்பினை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்த அனுமதியளிக்கும் நாடுகள் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை சந்திக்கும்’’ என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. https://athavannews.com/2024/1403918
-
- 0 replies
- 513 views
-
-
அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! ”அமெரிக்காவில் அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற உள்ளது. குறித்த ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் களமிறங்கியுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொலராடோ மாகாணம் அரோரா நகரில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்…
-
-
- 4 replies
- 546 views
-
-
பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY படக்குறிப்பு, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்தப் பழைய படம், ஓகோட்னிக் டிரோன் Su-57 போர் விமானத்துடன் இணைந்து பறப்பதைக் காட்டுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், அப்துஜலீல் அப்துரசுலோவ் பதவி, பிபிசி செய்திகள், கியவ் 31 நிமிடங்களுக்கு முன்னர் கிழக்கு யுக்ரேனில் போர் நடக்கும் இடத்திற்கு மேல் வானில் இரண்டு புகைத் தடங்கள் தோன்றினால் அதன் பொருள், ரஷ்ய ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தவுள்ளன என்பதே. ஆனால், கிழக்கு யுக்ரேனில் இருக்கும் கோஸ்ட்யான்டினிவ்கா நகருக்கு அருகில் நடந்த சம்பவம் இதற்கு முன் நடந்திராதது. ஒரு புகைத்தடத்தின் கீழ்ப்பாதை இரண்டாகப் பிளந்தது. ஒரு புதிய பொருள…
-
- 0 replies
- 252 views
- 1 follower
-
-
தென்லெபனானில் உள்ள ஐக்கியநாடுக்ள அமைதிப்படையினரை உடனடியாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் விலக்கிக்கொள்ளவேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வேண்டுகோள் விடுத்துள்ளார். செயலாளர் நாயகம் அவர்களே ஆபத்தான சூழ்நிலையிலிருந்து ஐக்கியநாடுகள் அமைதிகாக்கும் படையினரை விலக்கிக்கொள்ளுங்கள் உடனடியாக இதனை செய்யவேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என இஸ்ரேல் கடந்த வாரம் முதல் வேண்டுகோள் விடுத்துவருகின்றது. ஐக்கியநாடுகள் அமைதிப்படையினர் குறிப்பிட்ட எல்லைபகுதியிலிருந்து வெளியேறவேண்டும் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து குழப்பநிலை உருவாகி…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
பெஞ்சமின் நெதன்யாகு காஸாவில் ஹமாஸுடம் மோதல், லெபனானில் ஹெஸ்பொலாவுடன் மோதல், இரானுடான சமீபத்திய பதற்ற சூழல் என மத்திய கிழக்கில் பல்வேறு மோதல்களின் பின்னால் உச்சரிக்கப்படும் பெயர். பெஞ்சமின் நெதன்யாகு நீண்ட காலமாக இஸ்ரேலின் பிரதமராக இருந்துவருவதோடு அந்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர் பதவி, பாதுகாப்பு நிருபர், பிபிசி நியூஸ் 21 நிமிடங்களுக்கு முன்னர் இரான் நடத்திய பல்வேறு ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடி விரைவில் தொடங்கும் எனத் தோன்றுகிறது. முன்பு, இரானின் நெருங்கிய கூட்டாளிகளாகிய ஹெஸ்பொலா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவையும், ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவையும் இஸ்ரேல் கொலை செய்ததற்கான பதிலடியாகவே இரான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறுகிறது. இஸ்ரேலின் பதிலடி "துல்லியமானதாகவும் மரண அடியாகவும்" இருக்கும் என்றும், இரான் எதிர்பார்க்காத தருணத்தில் பதிலடி விழும் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ…
-
- 0 replies
- 358 views
- 1 follower
-